Wednesday, September 30, 2009

அம்மாவும் கடவுள் அனுபவங்களும். ஒரு திகில் சம்பவம். (புனைவு அல்ல)

அப்போது நான் கல்லூரி இரண்டாம் ஆண்டு படித்த வந்த சமயம், எனது இரண்டாம் சகோதரி புதுமனை ஒன்று கட்டிமுடித்து புதுமனை புகுவிழாவிற்கு ஏற்பாடு செய்துருந்தார். நல்ல பொளனர்மி நாளில் விழா நடக்க இருந்தது. அதற்கு முந்திய நாளில் இருந்து எனக்கு வேலைகள் ஆரம்பமாயின. அப்போது எல்லாம் நமக்கு சைக்கிள் தான் போயிங் 707. சைக்கிள எடுத்த சும்மா அசுரவேகத்தில் ஓட்டுவேன். நான் டாவடிச்ச ஃபிகர் கூட எனது சைக்கிளின் வேகம் பார்த்து ஆச்சரியப்படும். அந்த அளவுக்கு சைக்கிள் பிரியன். அன்று காலை முதல் ஒரு இருபது, முப்பது தடவை எங்க அக்கா வீட்டிற்கும், கடைகளுக்கும் ஓட்டியிருப்பேன். அந்த வீடு எங்கள் ஊரில் பைபாஸ் சாலையத் தாண்டி, வீட்டுவசதி வாரியம் அருகில் உள்ளது. அப்போது அங்கு இரவில் நடமாட்டம் அதிகம் இருக்காது(இப்ப அதுதான் ஊரு என்று சொல்லுமளவு பிரபலம் ஆகிவிட்டது).

அன்று மாலை சரியாக எட்டரை மணி இருக்கும் நான் கடைகளுக்கு சென்றுவிட்டு எங்க அக்கா வீட்டிற்கு போய்க்கொண்டு இருந்தேன். அப்போது அங்கு தீயணைப்பு நிலையம் அருகில் ஒரு முச்சந்தி உள்ளது. அது விபத்துக்கள் அதிகம் நடக்கும் பகுதி. அப்போது எல்லாம் கோவை டு மதுரை செல்லும் போருந்து அல்லது லாரிகளில் அடிபடுவது சகஜம். ஒருமுறை ஒரு குடும்பத்துடன் அங்கு விபத்து நடந்தவுடன் அங்கு பல வேகத் தடைகளை நிறுவி தற்போது விபத்துக்களைக் குறைத்துள்ளனர். சரி நாம் விசயத்திற்கு வருவேம். நான் அப்போது அந்த வழியாக சைக்கிளில் வந்த போது அந்த முச்சந்தியை கடந்தபின் சிறிது அடிகளில் என்னால் சைக்கிளை மிதிக்கக் கூட முடியவில்லை,எனது கால்களில் பெரும் பாரம் ஏற்ப்பட்டால் போல் ஒரு உணர்வு. என் கால்கள் இரண்டையும் யாரே பிடித்து இளுப்பது போல் ஒரு அயற்சி. என்னால் சைக்கிள் ஓட்ட முடியமல் கஷ்டப்பட்டு முழு பலத்துடன் சைக்கிளை மிதித்தேன். அப்போதும் என்னால் மிதிக்க முடியவில்லை. வீடு அங்கு இருந்து கொஞ்ச தொலைவுதான் என்பதால் முழுபலத்துடன் மிதிக்க ஆரம்பித்தேன். எனக்கு சைக்கிள் மிகவும் எடை கூடியது போல்வும், என் கால்கள் இரண்டும் பலம் இழந்தது போல் ஒரு உணர்வு. நானும் சரி காலையில் இருந்து ஓட்டியதால் மிகவும் களைப்பாக இருக்கும் போய் ரெஸ்ட் எடுக்கலாம் என இறங்கி தள்ளிக் கொண்டுபோனேன். தள்ளக்கூட முடியாத ஒரு களைப்பு. ஒருவழியாக நான் அக்கா வீட்டிற்குப் போய்ச் சேர்ந்தேன். அங்கு வாசலில் இருந்த எங்க அக்கா,மாமா இனி போதும் போய் சாப்பிட்டுவிட்டு ரெஸ்ட் எடுக்கச் சொன்னார்கள். நானும் கொஞ்ச நேரம் கழித்து சாப்பிடுகிறேன் என்றி கூறிவிட்டு, வீட்டின் கீழ் உறவினர்கள் அனைவரும் இருந்ததால் நான் தனிமை வேண்டி வீட்டின் மெட்டை மாடிக்கு சென்றேன். எனக்கு கூட்டமாக இருந்தால் அதிக நேரம் இருக்கமாட்டேன். கொஞ்ச நேரம் அனைவரிடமும் பேசிவிட்டு அங்க இருந்து விலகிவிடும் தனிமை விரும்பி. கல்யானத்திற்கு போனால் கூட அனைவரிடமும் தலையை காண்பித்து அட்டடேண்ட்ஸ் போட்டுவிட்டு மண்டப வாசலில் யாருடனது கடலை போட்டுக்கொண்டு நின்றுவிடுவேன். ஆதலால் தனிமை வேண்டி நான் மொட்டைமாடிக்கு சென்றேன்.அங்கு நான் கண்ட அதிசயம்.

நான் மொட்டை மாடிக்கு சென்றவுடன் அடுத்த நாள் பொளனர்மி என்பதால் நிலவு அழகாய் குளிர்ந்துகொண்டு இருந்தது. ஜுலை மாதம் என்பதால் கேரளாவின் மழை ஈரத்துடன் பாலக்காட்டு சாரல் காற்று குளீர்ந்து அடித்தது, மனதுக்கு இதமாய் இருக்க, கால்வழி காரணமாக நான் அங்கு வெறும் தரையில் படுத்துவிட்டேன். கொஞ்ச நேரம் இருக்கும் எனது களைப்பு நீங்கி இலேசாக குளிர ஆரம்பித்தது. அப்போது அங்கு ஒரு மூலையில் குப்பையாக போட்டு வைத்து இருந்த உரச் சாக்குகளில் இருந்து ஒரு சாக்கு மட்டும் சர் என்று நகர்ந்து பின் ஒரு சுழல் வட்டம் போட்டு நின்றது, சத்தம் கேட்டு நான் சாக்கை உற்றுப்பார்க்க அது மீண்டும் சுழன்று நின்றது. அதன்பின் அது அசையவில்லை. எனக்கு அது வித்தியாசமாகப் பட்டது. எனது உடல் முழுவது சில்லிட்டது போல் ஒரு உணர்வு, எனக்கு குளிரத் தொடங்கியது.அங்கு இருந்த பத்து சாக்குகளில் அது ஒன்று மட்டும் என் நகரவேண்டும், காத்து அடித்தால் அனைத்து சாக்கும் அல்லது இரண்டு அல்லது மூன்றாவது அசையவேண்டும் ஆனால் மிகவும் மிதமான வாடைக் காற்றில் இப்படி ஒரு சாக்கு மட்டும் எப்படி என்று நினைத்து சாக்கை ஆராந்து உற்றுப் பார்த்தேன். அப்போது எதேச்சையாக மேலே வந்த எனது அக்கா இங்க தனியா என்ன பண்ணற? என்று கேக்க, நான் மிகவும் களைப்பாக இருக்கிறது ரெஸ்ட் எடுக்கிறன் என்றேன். அதுக்கு புதுமாடி சீலிங்கு நிறைய தண்ணிர் விட்டதால் வெறுந்தரையில் படுத்தால் காய்ச்சல் வரும், போய் சாப்பிட்டு விட்டு படுக்கை அறையில் போய்த் தூங்கு என்றார்கள். நான் சாக்கை ஒரு உதை போட்டு மூலையில் தள்ளி விட்டு பின் கீழே வந்தேன். இது நடந்ததை நான் யாரிடமும் சொல்லவில்லை. சாப்பிட பிடிக்காமல் சாப்பிட்டு உறங்கப் போனேன். காலையில் எனக்கு கடுமையான காய்ச்சல் பின் அசதி, ஆனலும் வெளிக்காட்டாமல் விழா வேலைகளில் கவனம் செலுத்தினேன். மாலையில் அதிக சுரம் வரவே எங்க அண்ணன் டாக்டரிடம் அழைத்துச் சென்றான். எனக்கு வைரஸ் காய்ச்சல் என்று கூறி ஊசிபோட்டார். நானும் கப்பம் கட்டித்திரும்பி வந்தேன். நான் எப்போதும் ஏழாம் வகுப்பு வரை எங்க அப்பா மார்பிலும், பின் ஒன்பதாம் வகுப்பு வரை அவர் அருகிலும் படுத்து உறங்குவேன். பின்னர் கல்லூரி நாட்களிலும் எங்க அம்மா பக்கத்தில்தான் படுத்து உறங்குவேன். இப்போது ஊருக்கு போனால் கூட அம்மா பக்கத்தில் பாய் போட்டு உறங்குவேன். கட்டிலில் படுப்பது எனக்கும் எங்க அம்மாவிற்கும் பிடிக்காது. அப்போதும் எனக்கு நல்ல காய்ச்சல் இருந்தது. நடுஇரவுக்கு முன்னர் எங்க அப்பா கட்டிலில் படுத்து இருந்தவர் திடீரென்று மிகுந்த அனத்தலுடன்(ஊளை மாதிரி) தன் இரண்டு கால்களை உதறிக் கொண்டு இருந்தார். நானும்,அம்மா இன்னேரு சகோதரும் அப்பாவை எலுப்பி என்ன என்று கேக்க அவர் எங்களை பார்த்து ஒன்றும் இல்லை கெட்ட கனவு என்று கூறி கடவுளை தொழுது படுத்தார். கொஞ்ச நேரத்தில் எனக்கு அடுத்து படுத்து இருந்த என் அண்ணன் தூக்கத்தில் பினாத்தினான், நான் அவரை எழுப்ப அவரும் அதே பதிலை கூறி விட்டு படுத்தான்.அடுத்த நாள் நான் நல்ல பிள்ளையாக என் வைரஸ் காய்ச்சலை எங்க அக்கா பெண்னுக்கு பரப்பி விட்டேன். எனக்கு காய்ச்சல் இருந்தாலும் அவ்வளவு தீவிரமாக இல்லை.
அன்று மாலை நான் வீட்டில் ரெஸ்டில் இருந்தேன் அப்போது எங்க அம்மா தினமும் மாலை விளக்கு ஏற்றும் சமயம் எங்க அம்மாவிற்கு அருள் வந்ததது, இந்தியில் மிகுந்த சத்தத்துடன் வந்த தெய்வம் நடுங்கி நின்ற என்னை உற்றுப் பார்த்துவிட்டு (எங்க அடிவிழுமே பயம்தான்) வேகமாக என் வீட்டிற்கு அடுத்த வீடு தள்ளி இருக்கும் என் பாட்டி வீட்டில் உள்ள எங்க அக்கா பெண்ணிடம் சென்று இரண்டு மூன்று அறைவிட்டார். நாங்கள் அனைவரும் கடவுள் பெயரை சொல்லி நிற்க, எங்க அக்கா தன் நடுங்கும் பெண்ணை அனைத்துக் கொண்டு நின்றார். பின் கொஞ்ச நேரத்தில் தன் நிலைக்கு திரும்பிய அம்மா எங்கள் அனைவரின் நெற்றியில் பொட்டு வைத்து விட்டார்கள்.

பின்னர் என்னை அருகில் ஆசையாக அழைத்த அம்மா நான் பயத்துடன் அருகில் சென்றபோது பயப்படாத நான் இருக்கன் என்று கூறி என் தலையை தடவிவிட்டு சொன்னார்கள். " நீ தீயனைப்பு நிலைய முச்சந்தி வழியாக செல்லும் போது ஒரு சுழல் உன் கால்களை சுற்றிக் கொண்டது. அதுதான் இப்படி எல்லாரையும் கஷ்டப் படுத்தியது. நீ கவலைப்படாத ஒன்றும் செய்யாது என்றார். நான் ஆச்சாரியத்தின் உச்சியில் இருந்தேன். அப்போதுதான் சாக்கு சுழன்றவிதம் ஞாபகத்திற்கு வந்தது. நான் எப்போதும் என் தாயாரின் அருகில் பேசிக்கொண்டு படுப்பதால் தூங்கும் முன்னர் அம்மா நான் தூங்கறன் என்று சொல்லி கண்களை மூடுவேன்,அதுபோல எங்க அம்மாவும் சரிப்பா சாமி கும்பிட்டு தூங்கு என்று சொல்வார்கள். அன்று முதல் தூங்கும் முன்னர் நான் பட்டாணி பாரக்கார, பாரா போட்டு காப்பாதும்மா என்று என் தலைமாட்டின் சுவற்றை தடவி நெற்றில் இடுவது வழக்கம். (எங்க அம்மா அருள் வந்தால் அடுப்பு அல்லது சாம்பிராணி சாம்பல் அல்லது பொருமாள் அலமாரியின் அடியில் இருக்கும் சுவற்றை தடவித்தான் நெற்றியில் இடுவார்கள்). இது ஒரு சிலிர்ப்பான அனுபவம். இந்த பதிவு இடும்போது கூட எனக்கு மயிர்கூஸ்செறிகிறது.

6 comments:

 1. இரண்டாம் ஆண்டு படித்த வந்த சமயம்,
  படித்த என்பதே பெரிய புனைவு தானே!

  00

  நல்ல பொளனர்மி நாளில்
  பெளர்ணனி என்று ஒன்று இல்லை, நிலா அப்படியே தான் இருக்கு!

  00

  சைக்கிள எடுத்த சும்மா அசுரவேகத்தில் ஓட்டுவேன்.
  மக்களே இது புனைவு இல்ல! இவரு அசுர வேகத்தில் அமெரிக்காவும், ஆபிரிக்காவுக்கும் போயிட்டு போயிட்டு வருவார்!

  00

  இன்னோன்னு இதை யாரும் புனைவுன்னு சொல்லமாட்டாங்க!
  சும்மா பேத்தல்ன்னு சொல்லலாம்!
  சைக்கிளில் வரும் போது டயர்டாவது இயற்கை தானே, அங்கே பிடிச்ச பேய் இன்னும் விடலையாக்கும்!

  ReplyDelete
 2. நல்லா எழுதி இருக்கீங்க பித்தன்.

  ஆனா இன்னைக்கு என் தூக்கம் கோவிந்தா... அப்பனே விநாயகா என்ன காப்பாத்து...

  ReplyDelete
 3. // சைக்கிள எடுத்த சும்மா அசுரவேகத்தில் ஓட்டுவேன்.
  மக்களே இது புனைவு இல்ல! இவரு அசுர வேகத்தில் அமெரிக்காவும், ஆபிரிக்காவுக்கும் போயிட்டு போயிட்டு வருவார்! //
  என்னது இது இங்கன இருக்க அமெரிக்கா,ஆப்ப்ரிக்கா எல்லாம்,என்னால முடிஞ்சா, நான் ஸ்ந்திர மண்டலம்,செவ்வாயிக்கு எல்லாம் போயி வருவன். ஆனா ஒன்னு இது சத்தியமான உன்மை சம்பவம்.
  நன்றி வால்ஸ், நன்றி சுசி அக்கா.

  ReplyDelete
 4. என்ன இவ்வளவு பிழைகள் .. கொஞ்சம் பார்த்து சரி செய்யக்கூடாதா.?? பௌ அடிக்க வரலையா.. ப்+அ+யூ அடிங்க..

  இளுப்பது - இழுப்பது
  கால்வழி -கால் வலி .. இன்னும் நிறைய இருக்குங்க..
  சுட்டிக்காட்டியதற்கு தவறா நினைக்கமாட்டீங்கன்னு நினைக்கிறேன்.

  ReplyDelete
 5. *****************************8888
  அந்த பிழைகளை சுட்டிய க்மெண்ட் ப்ரசுரிக்க அவசியமில்லை உங்களூக்கு சொல்லத்தான்.. இதையும் ப்ரசுரிக்க வேண்டியதில்லை.. தகவலுக்குத்தான்

  ReplyDelete
 6. //என்ன இவ்வளவு பிழைகள் .. கொஞ்சம் பார்த்து சரி செய்யக்கூடாதா.?? பௌ அடிக்க வரலையா.. ப்+அ+யூ அடிங்க..

  இளுப்பது - இழுப்பது
  கால்வழி -கால் வலி .. இன்னும் நிறைய இருக்குங்க..
  சுட்டிக்காட்டியதற்கு தவறா நினைக்கமாட்டீங்கன்னு நினைக்கிறேன். //

  தங்களின் தகவலுக்கு நன்றி, நான் இப்பதான் இரண்டு மாதமாக பதிவு இட பழகிக் கொண்டு இருக்கின்றேன். எனக்கு தமிழ் வழிக்கல்வி படித்தாலும் கொஞ்சம் அறிவு கம்மி. இந்த போனா, பேனா சோ,சே மாதிரி கால் போடுற விசயம் எல்லாம் கொஞ்சம் தகறாறு. இதை சொல்வதற்கு வெக்கமாகவும் உள்ளது. எனது நிறைய தவறு வர காரணம் நான் பதிவை ஒருமுறைக்கு இருமுறை படித்து புரூப் பார்ப்பது இல்லை. இனி அதையும் செய்கின்றேன். நன்றி.

  இதில் தங்களின் தவறு ஒன்றும் இல்லை, எனது தவறுகளை திருத்திக் கொள்ள வாய்ப்புக்கு நன்றி.

  ReplyDelete

என்னை வளர்க்க, கருத்துரையிடுக...

பதிவைப் படித்து கருத்து போடலைனா
உங்க கனவுல பூதம் வரும்,,, ஆமா சொல்லிட்டேன்.