Wednesday, September 30, 2009

எங்க அம்மாவும் கடவுள் அனுபவங்களும்.

எங்க அம்மா கல்யனமான புதிதில்(1945) எங்க அம்மா, அவர்களின் குடும்பம், என் தந்தை அனைவரும் காசி சென்றுவிட்டு வந்து பின் இராமேஸ்வரம் சென்றனர். அங்கு தரிசனம் முடித்துவிட்டு அங்குள்ள சக்கர தீர்த்தத்தில் ஒரு சத்திரத்தில் தங்கியுள்ளனர். அங்கு தற்போது உள்ளது போல தங்குமிடங்களும் மின்சார வசதியும் கிடையாது. அரிக்கன் விளக்குதான் கையில் எடுத்துச் செல்லவேண்டும். அப்போது ஒரு நாள் மாலை எங்க அம்மாவின் தம்பி சாரங்கபணி(சக்கரை) என்னும் எனது தாய்மாமா சாப்பிடுவதற்காக வாதும இலை( பாதம் இலை) பறிக்கத் தோட்டம் சென்றுவந்தார். வந்தவர் உடனேயே மயங்கிவிழுந்தார். அனைவரும் பதறினர்.

எங்க அம்மா தன் தம்பியை மடிமீது வைத்து சக்கரா,சக்கரா என கூப்பிட்டார். பின் தாயார் அவரின் காதில் நாராயனா,நாராயனா என பகவானின் நாமத்தை உச்சரிக்கத் தொடங்கினார்.
அது சமயம் எப்போதும் மெதுவாக பேசும் இயல்புடைய என் தாயார் மிக சத்தமாக " அரே பாய், ருக் ஜாவ், என இந்தியில் பேசி அருள்(சாமி) வந்தவராகக் காணப்பட்டார். அவருக்கு இதுபோல் வந்தவுடன் எனது மாமாவும் தெளிவுடன் எழுந்துவிட்டார்.அவரை ஜடாமுடியுடன் கூடிய ஒரு பைசாசம் பிடித்ததாகவும் சாமி அதை அங்கு ஒரு மரத்தில் கட்டியதாகவும் கூறினார். எங்க அம்மாவிற்கு வந்த தெய்வம் வட நாட்டுப்பக்கத்தில் உள்ள ஒரு காவல் தெய்வம் என்று அறிந்தாலும் அந்த தெய்வம் எங்கு உள்ளது கோவில் எங்க என்று எங்கள் யாருக்கும் இன்றுவரை தெரியாது. அந்த தெய்வத்தின் பெயர் பட்டாணி பாரக்காரா என்றும் தன்னை எங்களின் குடும்பத்தை வழிபடும்மாறு கூறியது. நாங்கள் எங்களுக்கு காய்ச்சல் மற்றும் பயந்த குணங்கள் காரணமாக எதாது என்றால் சாமி வரும் என்று பயப்படுவேம். ஜந்து நாள் மற்றும் ஆறுனாட்கள் குணமாகத காய்ச்சல் கூட எங்க அம்மாவிற்கு சாமி வந்தால் அடுத்த நாள் குணமாகிவிடும். அதுக்காக குறி சொல்வது போல் எல்லாம் சொல்லமாட்டார்கள் யாருக்காவது உடல் சரியில்லை என்றால் அருள் வரும் அல்லது யாராது சரியில்லை என்றால் அருள் வரும்.அப்போது அருள் முடிந்தவுடன் எங்க அம்மா நாங்கள் எங்கு அல்லது எப்போது பயந்தேம் என்றும், எங்களைப் பிடித்தது என்ன என்றும் கூறுவார். அதுவும் சரியாகவும் இருக்கும். எங்கள் வீட்டில் தை மாத மூன்றாம் வெள்ளிக்கிழமையும், ஆடிமாத மூன்றாம் வெள்ளிக்கிழமையும் இந்த அம்மனுக்கு வடக்குப் பார்த்து பத்து அகல் விளக்குகள் இட்டு பூஜை நடைபெறும் அது சமயம் அருள் வந்து அனைவரையும் காப்பாத்துவாதகவும் கூறுவார். நாலாங்கிளாஸ் மட்டும் படித்த என் இந்தி தெரியாத என் தாய் அருள் வரும் நேரம் மட்டும் சரளமாக இந்தியும், தமிழும் பேசுவார். இது பற்றி நான் இரு சம்பவங்களை கூறவிரும்புகிறேன். ஒன்று

எங்க இரண்டாவது அண்ணன் கல்பாக்கத்தில் வேலை பார்த்துவந்தார் அவர் தனது நண்பர்களுடன் அரசு அளித்த விடுதியில் (குவாட்டர்ஸ்) தங்கியிருந்தார். எந்த கெட்ட பழக்கங்களும் இல்லாதவர். நான் எனது பெற்றேருடன் தாராபுரத்தில் கல்லூரி முதலாம் ஆண்டு படித்துவந்த சமயம். அப்போது இப்ப மாதிரி கைபேசி, தொலைபேசி வசதி எல்லாம் கிடையாது. பெரிய பணக்காரர்களின் வீட்டிலும். காவல் நிலைத்தில், தபால் அலுவலகத்தில் மட்டும் அடிச்சா மண்டை உடையற வகையில் பெரிய குண்டு கறுப்பு தொலைபேசி இருக்கும். கடிதம் மற்றும் மணியார்டர்தான் தொடர்புக்கு. அப்போது ஒரு நாள் ஞாயிற்றுக் கிழமை மதியம் அனைவரும் சாப்பிட்டுவிட்டு படுத்து இருந்தேம். எங்க அம்மா தினமும் சாப்பிட்டவுடன் ஒருமணி நேரம் தூங்குவார். அப்படி தூங்கும்போது அவருக்கு அருள் வந்தது. அவர் அப்பாவிடம் உம்பையன் அங்க ரொம்ப ஆபத்தான நிலமையில் இருக்கிறான் எனவும் உடனே போய்ப் பார்க்கும்மாறு கூறினார். நாங்களும் என்ன செய்வது என்று தெரியாமல் அடுத்த நாள் தொலைத்தொடர்பு அலுவலகத்தில் டிரங்கால் போட்டு சென்னையில் இருக்கும் எங்க சித்தப்பாவிடம் விசயத்தை கூறினேம்.அவரும் அன்று மாலை சென்று பார்ப்பதாக கூறினார். அப்பபோது இப்ப இருக்கற மாறி கிழக்குகடற்கரை சாலை வசதி கிடையாது. சென்னையில் இருந்து கல்பாக்கம் போக மூன்று மணி நேரம் ஆகும்(இப்ப பாண்டி வண்டில போனா ஒரு மணி நேரம்).
அவர் மறுனாள் எங்களுக்கு டிரங்கால் பண்ணி சொன்னார். எங்க அண்ணன் மஞ்சள் காமலை நேயால் பாதிக்கப் பட்டு முத்தின நிலையில் இருந்தார் எனவும் நாட்டுவைத்தியம் பார்த்தும், சரியாக உணவு கிடைக்காமல் மிகவும் இளைத்து இருந்தார். அவரை எங்க சித்தப்பா கூட்டிசென்று சென்னையில் மருத்துவமனையில் அட்மிட் செய்தார். எங்க அப்பா அம்மா இருவரும் சென்னை சென்றனர். பின் பத்துனாள் சிகிச்சை முடிந்ததும் எங்க அம்மா அவரை இரு மாத மருத்துவ விடுப்பில் எங்க ஊருக்கு அழைத்துவந்தார். இது மிகவும் ஆச்சரியத்தில் ஆழ்த்திய சம்பவம்.எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு என்றாலும் இதில் எல்லாம் நம்பிக்கை கிடையாது. இது எக்ஸ்சன்ரிக் அபக்சன் அல்லது எக்ஸஸிவ் காரக்டர் என்றுதான் விளக்கம் கூறிவந்தேன். ஆனால் நானும் வியக்கும் வண்ணம் என் வாழ்வில் நடந்த சம்பவம், அம்மாவிற்கு உறுதியாக தெய்வசக்திதான் என நம்பவைத்தது. அந்த சம்பவத்தை பதிவின் நீளம் கருதி இத்துடன் முடித்து அடுத்த பதிவில் இடுகின்றேன். நன்றி.

2 comments:

 1. இதற்கு மருத்துவத்தில் வேறு பெயர்!

  மச்சத்தை அதிர்ஷ்டமாக பார்ப்பவர்கள் நீங்கள், அதை நரம்பு முடிச்சாக பார்ப்பவர்கள் நாங்கள்!

  உங்களுக்கு இருக்கும் கடவுள் நம்பிக்கை கண்மூடித்தனமாக தெரிகிறது!
  சாமியாரா ஆகப்போறிங்கன்னு நினைக்கிறேன்!

  ஆசிரமம் எங்கே வைக்க போறிங்க?

  ReplyDelete
 2. எனது பிரதான சிஷ்யை ஸ்ரீஜலஜாவை கேட்டு அவர் இடம் சொல்லியதும் ஆசிரம் பத்தி தகவல் சொல்கின்றேன்.

  ReplyDelete

என்னை வளர்க்க, கருத்துரையிடுக...

பதிவைப் படித்து கருத்து போடலைனா
உங்க கனவுல பூதம் வரும்,,, ஆமா சொல்லிட்டேன்.