அந்த அதிகாலையில் ஆண்டி சுனையில் இருந்து புறப்பட்டு ஆறு மணியளவில்

மெல்ல மேகக்கூட்டங்களின் இடையில் சூரியன் வரும் காட்சி.

முக்கால் பாகம் உதயம் ஆகிவிட்டார்.

இதோ சூரிய உதயம் ஆகிவிட்டது.
இதுதான் இந்த மலையின் அற்புதம். உதயம் ஆகும் சூரியனின் அந்த முதல் ஒளி நேராக ஈசனின் மீது விழுகும். அந்த அரிய காட்சி. அங்கு அந்த குகையில் உள்ளே உள்ள சிவலிங்கத்தின் மீது அந்த முதல் சூரியக் கதிர்கள் விழும் அற்புதம்.

இப்படிச் சூரியனின் முதல் ஒளி ஈசனின் விழும் போது, தீபாராதனை காட்டப்படுகின்றது.

இது போல சில நிமிடங்கள் மட்டும் தான் சூரிய ஒளி ஈசனின் திருவுருவம் மீது படும். பின்னர் சூரிய ஒளி மெல்ல மேலே சென்று விடும். இந்த அரிய தரிசனம் காணத்தான் இந்த நெடும் பயணம். நான் படம் எடுப்பதை பூஜை செய்பவர் பார்த்து விட்டார். சைகையால் படம் எடுக்காதே என்று தலையாட்டினார்.
நானும் படம் எடுப்பதை நிறுத்தி விட்டேன்.
பின்னர் நாங்கள் கிழே இறங்க ஆரம்பித்தோம். மதியம் பதினோரு மணிக்குள் கீழே சென்று விட்டால் வெய்யில் மலை இறங்கி சிரமப் படவேண்டியதில்லை என்பதால், பூஜைகள் முடித்து, பிரசாதம் உண்டு மலை இறங்க ஆரம்பித்தோம். இறங்கும் பாதை மழை ஈரத்திலும் பனியிலும் சத சதவென இருந்ததால் வேகமாக இறங்க முடியவில்லை. நான் ஒருமுறை கீழே விழுந்து எழுந்தேன்.
பின்னர் அனைவரும் பக்தி பரவசம் பொங்க கடவுளை வழிபட்டு கீழே வந்து அடைந்தோம். வரும் வழியில் இடையில் கோவனம் மட்டும் கட்டிய இளம் வயது சாமியார் ஒருவரைப் பார்த்தோம். இறங்கும் வழியில் ஒரு கடையின் அருகில் மலைப் பாதையில் அமர்ந்து இருந்தார். அவர் நீண்ட நாட்களாக யாரிடமும் எதுவும் பேசமாட்டார். சாப்பிட எதாவது கொடுத்தால், பிரியம் இருந்தால் வாங்கிக் கொள்வார். அல்லது சிரித்து விட்டு அமைதியாக செல்வார் என்று அருகில் இருந்த கடைக்காரர் சொன்னார். எனக்கு இதில் எல்லாம்(சாமியார்கள்) நாட்டம் இல்லை. நான் போகும் போது பார்த்துச் சென்ற முறுக்கு, நெல்லிக்காய்(மிளகாய்ப் பொடியில் ஊறியது), மாங்காய், நிலக்கடலை,பனங்கிழங்கு, லெமன்ஸோடா என சகலத்தையும் ஒரு பிடி பிடித்துக் கொண்டு வந்தேன்.இறங்கும் வழிபூராவும் நெறுக்குத்தீனிதான். எங்கள் குழுவினர் அவரிடம் உலர்ந்த திராட்சை மற்றும் முந்திரிகளைக் கொடுத்தார்கள். அவர் புன்சிரிப்புடன் அதை வாங்கியவர், ஒரு நிமிடம் தன் உள்ளங்கையில் வைத்து கண்மூடித் தியானித்து விட்டுப் பின்னர் அந்தப் பொட்டலங்களைப் பிரித்து எங்களை அழைத்துப்(சைகையில்) பிரசாதமாக கொடுத்தார். பின்னர் மீதம் இருந்ததை அங்கு இருந்த குரங்குகளிடம் கொடுத்தார். அவரைச் சுற்றி ஒரு ஜம்பது குரங்குகளுக்கு மேலே வந்து வாங்கியதை என் கண்களால் பார்த்தேன். இந்த அரிய காட்சி புகைப்படமாகவும் எடுத்தோம். ஆனால் வீட்டிற்கு வந்து பார்த்தால் சுற்றி இருந்த குரங்குகளைக் காணவில்லை. உங்களின் கண்களுக்குத் தெரிகின்றதா என்று பாருங்கள். நன்றி.

இத் தொடரை நீங்கள் அனைவரும் இயற்கை அழகுடன் இரசித்திருப்பீர்கள் என நம்புகின்றேன். இனியும் நல்ல விசயங்களை உங்கள் ஆதரவுடன் மீண்டும் சந்திக்கின்றேன். நன்றிகளுடன் பித்தனின் வாக்கு - தி.சுதாகர்.