Monday, March 29, 2010

கடவுளும் கோவில்களும் ஒரு ஆராய்ச்சி - 11




















சக்திமூலங்களின் சுழற்சிதான் வாழ்க்கை, சக்திமுலங்கள் நம்மிலும், நம்மைச் சுற்றிலும் எங்கும் வியாபித்து இருக்கின்றன. இதையேதான் அங்கும் இங்கும் என எங்கும் நீக்கமற நிறைந்து இருக்கும் பரம்பொருளே என்று பாடியதை அறிவேம். அனைத்து சக்திமூலங்களால் தோன்றியவை என்பதால் தான் குரான் இறைவன் மிகப் பெரியவன், அவன் தன்னில் இருந்து இந்த நிலத்தையும்,நீரையும்,ஆகாயத்தையும், அனைத்தையும் எமக்காக படைத்தான். என்று கூறியுள்ளது. பழைய ஏற்ப்பாடுகள் கூட பரம்பிதாவின் தன்மையை எல்லையற்ற சக்தியாக வடிமைக்கின்றது. நாமும் ஆதிசக்தியாக, பரம்பொருளாக, ஓளியாக பார்க்கின்றேம். இதில் நாம் மட்டும் உருவ வழிபாடுகள் மூலம் கொஞ்சம் வேறுபடுகின்றேம். அதையும் பின்னர் பார்ப்போம். இப்போது சக்திமூலம் தான் இறுதி என்பதும், இது பிராண சக்தி,ஆன்ம சக்தி என்று வகைப் படுத்தியும் பார்த்தோம். பிராண சக்தி பற்றி முந்தைய கட்டுரைகளில் குறிப்பிட்டேன். இனி ஆன்ம சக்தி பற்றிப் பார்ப்போம்.

இந்த ஆன்ம சக்தி உடலில் எந்த பாகத்தில் இருக்கின்றது, என்ன உருவத்தில் இருக்கின்றது என்பது உறுதியாக கூற முடியாது. இது நம் உடல் முழுதும் உலா வரக் கூடியது. இது ஒரு அலைவரிசை போல உடல் முழுதும் பயனிக்கும் தன்மை வாய்ந்தது. கண நேரங்களில் பயணம் செய்யும் வல்லமை பெற்றது. இந்த ஆன்ம சக்தியினை நாம் பெரும்பாலும் உணர்வது இல்லை. நாம் மனது மற்றும் எண்ணங்கள் வழி நடக்கும் போது இந்த சக்தி பெரும்பாலும் அமிழ்ந்து இருக்கும் அல்லது மறைந்து இருக்கும். நாம் இதை உணர முடியாது. எப்போது நமது மனம்,எண்ணம் மற்றும் செயல் ஒரே நேர்க்கோட்டில் வருகின்றதே அப்போது மட்டும் ஒரு சில விநாடிகள் இதை நாம் உணரலாம். இந்த உணர்தலின் வெளிப்பாடு, பரவசம் அல்லது உடல் சிலிர்த்தல் போன்றவைகளால் தெரியும். மலைகளில் பயணம் செய்யும் போது,இயற்கையை இரசிக்கும் போது, முழு மனதுடன் கடவுளை வணங்கும் போது, முழு மனதுடன் அல்லது முழு வேட்கையுடன் கலவியில் ஈடுபடும் போது, நம் மனதுக்கு விருப்பமான செயல்களை செய்யும் போது என பல நேரங்களில் வெளிப்படலாம். இது எல்லாம் ஒரு சில விநாடிகள்தான் அனுபவிப்போம். இதை மனிதன் கண்டறிந்து அவன் உருவாக்கியது கோவில்கள் ஆகும். மனிதனின் இந்த ஆன்ம சக்தி எங்கு எங்கு வெளிப்படுகின்றது என்றும் எவ்வாறு வெளிக் கொணர முடிகின்றது என்றும் அவன் தொடர்ந்த ஆராய்ச்சிதான் கோவில்கள். சக்தி மூலங்கள் பெருகும் இடமாக கோவில்களை வடிவமைத்தான். இது போல வடிவமைக்கப் பட்ட கோவில்களுக்குச் சென்றதும் நம் மனம் பரவசமைடையும். அது வேறு ஒன்றும் இல்லை. இது கோவில்தான் என்று இல்லை, எல்லா வழிபாட்டுத்தலங்களுக்கும் பொருந்தும்.















எப்படி என்றால் நம் மனம் ஈடுபாட்டின் காரணமாக, நாம் வழிபடும் போது நமது மனதும்,எண்ணங்களும் ஒன்றுபடத் தொடங்கும். அப்படி ஒரு நேர்க்கோட்டில் இருக்கும் போது ஆன்ம சக்தி உடலில் பரவத் தொடங்கும். இதுவும் பிரபஞ்சத்தில் இருந்து இழுக்கப்பட்டு கோவிலில் குவிக்கும் சக்தி மூலமும் ஒன்று இணையும் போது , நாம் பரவச நிலையை அடைகின்றேம். சராசரி மனிதர்களுக்கு இது ஒரு விநாடியில் ஏற்ப்பட்டு மறையும். இது அவர்கள் அறியாமல் கூட நடக்கும். நடந்தாலும் புற விஷயங்களான பூஜை,புனஸ்காராம், பிரசாதம்,கலை,சிற்பம் போன்றவற்றில் ஈடுபாடு மூலம் இந்த நிகழ்வை நாம் புறக்கணிக்கின்றேம். கோவில் என்பது பூஜைகளுக்கு மட்டும் அன்று நம் மன அமைதிக்காகவும் தான். ஆதலால் நாம் சிறிது நேரம் கருவறை அருகில்(முடிந்தால்) அல்லது பிரகாரத்தில், கொடிமரம் அருகில் அமைதியாய் உக்காந்து வருவது மிகவும் அவசியம். இந்த அமைதியான எண்ணங்களற்ற தன்மை, நம் சக்தி மூலங்களை தூண்டி, பிரபஞ்ச சக்தியுடன் இணைக்கும். இது கோவில்களில் மட்டும் அல்ல உயர்ந்த மலைகளிலும் கிட்டும். எங்கு எல்லாம் எரிமலைகளால்(செம்மண் கரடுகள்) ஆன மலைகள் இருக்கின்றதே அங்கு எல்லாம் சக்தி மூலம் உஷ்ணமாகவும், எங்கு எல்லாம் பாறைகள் உள்ள மலைகள்(மடிப்பு மலை அல்லது படிவுப் பாறைகள்) உள்ளதோ அங்கு எல்லாம் குளுமையான அருமையான, சக்தி மூலங்கள் கிட்டும். சபரி மலை,திருப்பதி, கொல்லி மலை, பர்வதராஜ மலை,சதுரகிரி,வெள்ளியங்கிரி மலை,திருவண்ணாமலை,பழனிமலை, ஸ்ரீசைலம் போன்ற தென்னக மலைகள் எல்லாம் உஷ்ணம் நிறைந்த சக்தி மூலங்களைக் கொடுக்கும் மலைகள். இமயமலை மிகவும் குளுமையான சக்தி மூலங்கள் நிறைந்தது.

மலைகளைப் போலவே, இடங்களுக்கும் சக்தி மூலங்கள் வேறுபடும். இதை வைத்துதான் கோவில்களில் வித்தியாசமும், வழிபாடுகளில் வித்தியாசமும் இருக்கும். சக்தி மூலங்கள் மிகுந்த இடங்களில் கோவில்களை அமைப்பது மூலம் மிகுந்த பயனை அடையலாம். கோவில்கள் அவை கட்டப்பட்ட முறைகள், அங்கு உருவாகும் எண்ண அலைகள், நமது மனதின் செயல்கள் ஆகியவற்றை நாம் கூர்ந்து கவனித்தால் நமக்கு இந்த உண்மை புரியும். இந்த சக்தி மூலங்களை இன்னும் ஒரு விதத்தில் சொல்லலாம். நமது எண்ண அலைகளால்,செயல்களால் சக்தி மூலங்கள் ஏற்றம் அல்லது குறைவு அடைகின்றன என்று கூறியிருந்தேன் அல்லவா?. இது போல நம் சக்தி மூலங்கள் நம் உடலில் பயணிக்கும் போது உஷ்ணமும், ஓளியும் வெளிப்படுகின்றன. நமது உடலில் இருந்து நிறங்கள் அல்லது ஒளிவட்டங்கள் வெளிப்படும். ஓளிவட்டம் என்றதும் கடவுளில் தலைக்கு மேலே இருக்கும் ஓளிவட்டம் மாதிரி இல்லை. நம் உடலை சுற்றிலும் ஒரு வித நிறங்களை வெளிப்படுத்தும். இந்த நிறங்களைப் பற்றியும், அவை தன்மை பற்றியும் நாம் அடுத்த பதிவில் பார்ப்போம். தொடரும். நன்றி.

Friday, March 26, 2010

நானும் ஹீரோதாங்க- மொக்கை


ஒரு வழியாக அந்த நிறுவனத்தில் முதல் வேலை கிடைத்து, அவர்கள் டை கட்டி வரச் சொன்னார்கள் என்று டை வாங்கலாம் என்று இருந்தேன். அதற்குள் என் அண்ணாவின் நண்பன் மகேஷ் என்பவர், என் கல்யாணத்திற்கு வாங்கிய டை சும்மாதான இருக்கு, நான் தருகின்றேன் என்று கூறித் தந்தார். சென்னை வண்ணாரப் பேட்டையில் என் இரு சித்திகள் இருந்தார்கள். மகாராணி தியேட்டர் அருகே வீடு. நான் தினமும், என் வெயிட்டை வீட வெயிட்டான ஒரு சூவை மாட்டிக் கொண்டு, சோளக்கொல்ல பொம்மைக்கு டிரஸ் போட்டாப்புல ரெடிமேடு சர்ட் பேண்டையும் மாட்டி,கழுத்துல நாய்ச்சுருக்கையும் மாட்டிக்கிட்டு, கையில ஒரு புது வி.ஜ.பி ஆல்பா சூட்கேஸை எடுத்துக் கொண்டு போவேன். பத்தாததுக்கு ஜாஸ்மின் அத்தர் வேற. அலுவலகம் கிரீம்ஸ் ரோடு முடிவில் மூர்ஸ் ரோட்டில் இருந்தது. சுருக்கமா சொல்லனும் என்றால் எக்மோர் கோ-ஆப் டெக்ஸ் அருகில். நான் மகராணி தியேட்டர் பஸ் ஸ்டாப்பில் இருந்து காயிதே மில்லத் வந்து இறங்கி, எத்திராஜ் காலேஜ் ரோடு வழியாக நடந்து செல்வேன்.

இப்படிக நான் பாரதி ஆர்ட்ஸ்,காயிதே மில்லத் மற்றும் எத்திராஜ் காலேஜ் கல்லூரிகளைக் கவர் பண்ணினேன்.காலை அலுவலகம் செல்லும் போது, காலைக் கல்லூரி மாணவிகளுக்கும், மாலை திரும்பும் போது மாலைக் கல்லூரி மாணவிகளுக்கும் எஸ்கார்ட் டியூட்டி பார்த்தேன். காலை முழுதும் பீல்டில் சுற்றிவிட்டு, மதியம் 2 மணியளவில் வீட்டுக்கு வந்து சாப்பிட்டு விட்டு,ஒரு தூக்கம் போட்டு, நாலு மணிக்கு கிளம்பி அலுவலகத்திற்குப் போய் ரிப்போட்டிங் முடித்து, 5.30க்கு வீடு திரும்புவது வாடிக்கை. நான் என் பழைய பதிவுகளான பெரிய மனுசன் ஆனது எப்படி பதிவில் நான் சைட் அடிக்க முடியாமல் எவ்வளவு கஷ்டப் பட்டேன் என்று கூறியிருந்தேன். அப்ப சென்னையில் நானும் என் நண்பனும் வசதியாக சுற்றினேம். வேலை ஏரியாக்களில், ஸ்டெல்லா மேரிஸும்,குவின் மேரிஸும் உண்டு. ஆனா நாங்கதான் பார்த்தமே தவிர, எங்களை எந்தப் பொண்ணும் பார்க்கவில்லை. அதைப் பத்தி நமக்கு என்ன கவலை, நாம் நம் கடமையை ஒழுங்கா செய்யனும் இல்லை. இப்படிப் போகும் கட்டத்தில் ஒரு நாள், நான் எஸ்.குமார்ஸ்ஸில் புதிதாக ஒரு ரெடிமேட் பேண்ட் சட்டை வாங்கிப் போட்டுக் கொண்டு,நாய்ச்சுருக்கை மாட்டிக் கொண்டு,ஹீரோ கணக்காய்(நினைப்புத்தான்) காலை அலுவலகம் அவரசரமாகப் புறப்பட்டேன்.

கலைக்கல்லூரி நிறுத்தத்தில் இறங்கி, நான் எத்திராஜ் ரோடு வழியாக நடக்கும் போது,எதிரில் வந்த இரு வட இந்தியப் பெண்கள் மெதுவாகப் புன்னகைத்துப் போனார்கள். அய்யாவுக்கு சந்தேசம் தாங்கவில்லை. நம்மளப் பார்த்துச் சிரிக்கற அளவுக்கு ஹீரோ ஆகிட்டேம்ன்னு மனசில கொண்டாட்டம். இன்னும் நடந்து வரும் போது மற்ற சிலரும் மெல்லியதாகச் சிரித்துப் போனார்கள். "ஆகா,புது பேண்ட்,புது சொக்கா சுதாகரு,கலக்குற சுதாகருன்னு" நினைத்துக் கொண்டேன். இப்படி நடந்து போய் அலுவலகத்தில் ஸ்ரீராம்மின் செகட்டரி வேறு என்னைப் பார்த்து சிரித்தார்கள். நானும் பதிலுக்கு சிரித்து விட்டு, உள்ளே சென்றேன். என்னாடா இது என்னிக்கும் சிரிக்காத ஹெட் வெயிட் பார்ட்டிங்க எல்லாம் சிரிக்குதுன்னு,அவ்வளே டக்கர் ஆயிட்டமான்னு ஒரு பீலிங்கு. பின்னர் என் இருக்கைக்கு சென்று பீல்டு வெர்க் அசைன் செய்து விட்டு, பாஸிடம் ரிப்போட்டிங் முடித்து விட்டு, டீ சாப்பிடுவதற்க்காக, பாண்ட் ரிக்குள் போனேன். அப்போது என் பாஸுக்கும்,எனக்கும் கிளரிக்கல் வெர்க் பண்ணும் பெண் வந்தார். நானும் அவரும் டீ சாப்பிட்டுக் கொண்டு கிளையண்ட்ஸ் பத்திப் பேசிக்கொண்டு இருந்தேம். அவரும் சிரித்துக் கொண்டே கேட்டார். "சுதா நான் ஒன்னு சொன்னா தப்பா எடுத்துக்க மாட்டியே" என்றார். நான் சொல்லுங்க, என்ன விஷயம்? என்றேன்.

இன்னிக்கு நல்லா டீசண்டா, அழகா டிரஸ் பண்ணியிருக்கிங்க என்றார். நான் உச்சிக் குளிர்ந்து "ஆகா, நம்மளும் ஹீரோவாயிட்டமடா அப்புன்னு" என்று நினைத்துக் கொண்டேன். "ஆமாங்க, இன்னிக்கு எல்லா பொண்ணுகளும் என்னைத்தான் பார்த்தார்கள். சிரித்தார்கள்" என்றேன்.சந்தேசமாக, இதற்குள் அவர் டீயைக் குடித்து முடித்து இருந்தார்கள்.அவர்கள் கவனிக்கவில்லை என்று நினைத்து, இன்னேரு தபா சொன்னேன். " இன்னிக்கு பொண்ணுக எல்லாம் அய்யா மேலதான் லுக்கே. எல்லாரும் சிலைட்டா சிரித்துக் கொண்டு வேற போனார்கள். என்றேன். அவரும் ஒரு தரம் சிரித்து விட்டு, பின்னர் அருகில் வந்து, " ஏன் சிரிக்க மாட்டாளுக, முதல்ல ஜிப்பைப் போடுங்க, என்று கூறிவிட்டு அவரசமாகத் திரும்பிப் பார்க்காமல் சென்று விட்டார். நானும் உடனே திரும்பி ஜிப்பைப் போட்டேன். "அட ஆத்தி இதுக்குத்தான் எல்லாம் லுக் விட்டாங்களா லுக்கு, கன்றாவி நம்மளை வைச்சு ஒரு பொருட்காட்சியே நடத்திட்டாங்க போல. என்று நினைத்துக் கொண்டேன். இந்த அனுபவம் இப்போதும் என்னை விட்டுப் போகவில்லை. இப்பக் கூட எதாவது ஒரு பொண்ணு ரோட்டில பார்த்துச் சிரிச்சா, உடனே நைசா ஜிப்பைத் தொட்டுப் பார்த்துக் கொள்வேன். இப்படித்தான் நான் ஹீரோ கணக்கா வேஷம் போட்டு,கட்ச்சியில ஜீரோ கணக்கா ஊரு எல்லாம் நாறிப் போச்சு. மக்கா யாரு என்ன சொன்னாலும் சர்தான், நான் ஹீரோதான் தெரியுதுங்களா. நன்றி.

டிஸ்கி: இது எல்லாம் நடந்து முடிந்தவுடன்,என் நண்பன் வந்தான், என்னடா பீல்டுக்கு போலாம்மா? என்றான். நான் இதே போலாம் என்றேன். குனிந்து பார்த்தவன் என்னடா ஜிப்பை போட்டுட்டியா? என்றான். நான் உனக்குத் தெரியுமா? என்றேன். நான் கலையில் நீ வந்தவுடன் கவனித்து விட்டேன். ஏண்டா சொல்ல வேண்டியதுதானே என்று கேட்டவனிடம் கூலாக,எனக்கு என்ன தெரியும், நீ காத்து வாங்குறேன்னு நினைத்தேன். இருந்த ஆத்திரத்தில் எட்டி அவன் கொரல்வளையைப் பிடித்தேன். அவன் விடுறா, பக்கத்துல உன் பாஸ் இருந்தார்,அதுனால அப்புறம் சொல்லலாம் என்று விட்டு விட்டேன் என்றான். இது சக நண்பர்களிடம் பரவி,பின்னர் ஒருவாரம் என்னை நல்லா ஓட்டினார்கள்.

Wednesday, March 24, 2010

இராமன் எத்தனை இராமனடி













இது ஆன்மீகப் பதிவு மாதிரி இருந்தாலும் மொக்கைதாங்க. அதுனால எல்லாரும் படிக்கலாங்க.(கடவுளைப் பிடிக்காதவர்கள் நேரா ரெண்டாவது பத்திக்கு ஜீட் விடுங்க) எங்கள் ஊர் தாராபுரத்தில் ஸ்ரீகாடு ஹனுமந்தராய சுவாமி கோவில் உள்ளது. சிறு வயதில் இருந்து நான் இந்தக் கோவிலுக்குப் போவது வழக்கம். எட்டாங்கிளாஸில் இருந்து கல்லூரி முடியும் வரை, அதன் பின்னரும் நான் இந்தக் கோவிலுக்கு விடாது தினமும் போவது வழக்கம். இந்தக் கோவில் குறித்து நான் என் முதல் பதிவில்(தப்புத் தப்பான ஸ்பெல்லிங்கில்) இட்டுள்ளேன். இந்தக் கோவிலில் இருக்கும் ஆஞ்சினேயர் ஏறக்குறைய நம்ம பிரண்டு மாதிரி. நான் இப்படிச் சொல்கின்றேனே என்று சாதராணமாக நினைத்து விடாதீர்கள். மிகவும் சக்தி வாய்ந்தவர், வரப் பிரசாதி. இவரை வணங்குவர்களுக்கு நல்லது நடக்கும் என்பது நிச்சயம். நான் மிக நீண்ட நாட்களாய்ப் போனதால் ஒரு இனம் புரியாத அன்னியோன்யம் ஆகிவிட்டது. கடவுள் என்னும் நிலையை வீட அருகில் இருக்கும் உணர்வுதான் ஏற்படுகின்றது. இவருடன் சைட் அடிக்க ஒப்பந்தம் எல்லாம் போட்டுள்ளேன். இந்தக் கோவிலில் இருக்கும் இராமரை நான் அப்பா என்றும், சீதாவை சீதம்மா என்றும் அழைத்து வணங்குவது வழக்கம். இவர்கள் எந்த நேரத்திலும் காத்து, என்னை வழி நடத்துவதாக ஒரு நம்பிக்கை. அந்த நம்பிக்கையில் தான் என் வாழ்க்கை ஓடிக் கொண்டு இருக்கின்றது. நம்பிக்கைதானே வாழ்க்கை. அது முட்டாள்தனம் என்றாலும் மூட நம்பிக்கை என்றாலும், நாம் இறைவனிடம் வைக்கும் நம்பிக்கைதான் வாழ்க்கை. சரியிங்களா நான் சொல்றது?. சரி நான் இப்பக் கோவிலைப் பத்தியும், கடவுளைப் பத்தியும் சொன்னது ஒரு முன்னூரைதாங்க. ஏன்னா அதுதான் இந்த பதிவின் அடிப்படை. பதிவுக்குப் போகலாம்மா?

நான் எனது கல்லூரிக் காலங்களை முடித்து விட்டு, ரிசல்ட்டு வந்தது ஆகஸ்ட் எட்டாம் தேதியன்று. ஆகஸ்ட் 23,1990. என் பிறந்த நாளின் போது, நம்ம தமிழ் சினிமாவில் காட்டுற, ஹீரோ கணக்கா, சாதிப்பதுக்காக ஒரு ரெக்ஸின் பேக்கைத் தூக்கிக் கொண்டு, சென்னைக்குப் புறப்பட்டேன். நல்லவேளையாக சென்னை என்னப் போடா வெண்ணெய் என்று சொல்லவில்லை. நான் ஊருக்கு வந்த என் இரண்டாவது அண்ணாவுடன்(இராமானுஜம்), அப்பா,அம்மா சகிதம் கல்பாக்கம் வந்து அடைந்தேன். கிராமமும் இல்லாமல் நகரமும் இல்லாமல் சிறிய நகராட்சியாக இருந்த ஊரில், இருந்து வந்த நான், மத்திய அரசால் நிர்வகிக்கும் சகல வசதிகளுடன் இருந்த அனுமின் நகரியத்தில் ஈர்க்கப் பட்டேன். கடலும்,பீச்சும் என் நண்பர்களிடம் இருந்து பிரிந்த பிரிவைப் போக்கியது. நான் அப்பா,அம்மா செல்லம், அவர்களுடன் வந்து இருந்ததால் எனக்கு அவ்ளவாக ஹேம் சிக் தெரியவில்லை. நான் ஜாலியாக கல்பாக்கத்தைச் சுற்றுவது,சாப்பிடுவது என்று இருந்தேன். (பின்ன எத்தனை வருட படிப்புக்குப் பின்னர் கிடைத்த ஓய்வு அல்லவா?.) இப்படிப் போகும் போது ஒரு நாள் என் அண்ணா என்னைத் திட்டிவிட்டார். நானும் இரண்டு மாதமாகப் பார்க்கின்றேன். என்ன நீ பாட்டுக்கு இருக்கின்றாய், ஒரு பொறுப்பு கிடையாதா? மேற்க் கொண்டு என்ன செய்யப் போகின்றாய். படிக்க வேண்டும்,வேலைக்குச் சேரவேண்டும் என்ற ஆர்வம் கிடையாதா?, தினமும் செய்தித்தாள் பார்த்து, வேலைக்கு அப்பளை பண்ண வேண்டும் என்று ஒரு பாட்டுப் பாடி விட்டார். இவர் சொன்னது அனைத்தும் வாஸ்த்தவம். அனால் சொல்லும் போது தண்டச் சோறு என்று ஒரு வார்த்தை விட்டு விட்டார். முதல் அண்ணா படிக்கவில்லை என்றார் அடிப்பார்,ஆனால் கடினமான வார்த்தைகளைப் பேசமாட்டார். ஆனால் இவர் மிகவும் மென்மையானவர், அடிப்பது,திட்டுவது போன்றவற்றைச் செய்ய மாட்டார். ஆனால் ஒரு வார்த்தை சொன்னாலும் சுருக்கு என்று தைக்கும் விதமாக செல்வார்.இவரிடம் நான் திட்டு வாங்குவது இதுதான் முதல் தடவை. (அப்புறம் பழகிப் போய்விட்டது). இவர் சொல்லி விட்டு வேலைக்குப் போய் விட்டார். நான் உம் என்று மூஞ்சியத் தூக்கி வைத்துக் கொண்டு இருந்தேன். எங்க அம்மா புரிந்து கொண்டு என்னைச் சமாதானப் படுத்தினார். இருந்தாலும் மன வருத்தத்துடன் நான் மாலை கடற்கரைக்குச் சென்று தனிமையில் அமர்ந்து கொண்டேன்.

அப்போது இந்த இராமரையும், அனுமாரையும் நினைத்து,வருந்தி, என்ன இப்படி மாட்டிவிட்டு விட்டாய். ஒழுங்கா எனக்கு ஒரு வேலை வேண்டும். உடனடியாக ஒரு வேலை கொடுங்கள் இல்லை என்றால் ஊருக்கு வந்து 1008 சுத்து சுத்தி உங்களுக்கு தலை சுற்ற வைத்து விடுவேன் என்று மனமுருகி மனதார வேண்டிக்(மிரட்டிக்) கொண்டேன். மாலை 6.30க்குச் சென்ற நான், இரவு எட்டு மணி வரை இப்படி பல சிந்தனையில் ஆழ்ந்து இருந்தேன். பின்னர் வீடு வந்து விட்டேன். இரவு எட்டரை மணியளவில் என் அண்ணாவின் நெருங்கிய நண்பர்,கோதண்ட இராமன் என்பவர் வந்தார். அவர் ஒரு மார்க்கெட்டிங் வேலை இருக்கின்றது போகின்றாயா என்றார். எங்க இராமு அண்ணா,மார்க்கெட்டிங் வேலை என்றால் அலைச்சல் இருக்கும், மேற்க்கொண்டு படிக்க முடியாது. பின்னும் நான் கிராமப் புறத்தில் இருந்து வருவதால் கம்யூனிக்கேசன் இருக்காது என்றார். ஆனால் எந்த வேலை கிடைத்தாலும் பரவாயில்லை என்ற மன நிலையில் இருந்த நான், அது பரவாயில்லை, நான் போகின்றேன்,படிக்கவும் செய்வேன் என்றேன்(பின்ன நமக்கு ரோசம் ஜாஸ்த்தியில்லை).எங்க அண்ணாவும் உனக்கு மார்க்கெட்டிங் வேலை கிடைக்காது, ஆனால் இண்டர்வியூ ஒரு நல்ல அனுபவமாக இருக்கும், போய் வா என்றார்.


உடனே கோதண்ட இராமன் அண்ணா, என்னை வெங்கட இராமன் என்பவரிடம் அழைத்துப் போனார். அவர் சென்னையில் அவருக்குத் தெரிந்த நிறுவனத்தில் சீனியர் மார்க்கெட்டிங் மேலாளராக பணி புரியும் கல்யாண இராமன் என்பவரிடம் தொலைபேசியில் பேசினார். கல்யாண இராமன் என்னை மறு நாளே இண்டர்வியூக்கு வரச் சொன்னார். இரவேடு இரவாக நான் என் பேண்ட், சர்ட் ரெடி பண்ணி, என் அண்ணாவின் சூவை மாட்டிக் கொண்டு. அந்த நிறுவனத்துக்குச் சென்றேன். அங்கு கல்யாண இராமன் என்னை வரவேற்று, ஸ்ரீராம் என்பவரிடம் அனுப்பி வைத்தார். அவர் முதல் இண்டர்வியூ செய்துப் பின்னர் நிறுவனத்தின் ஜென்ரல் மேனேஜர் பி.கே. நஞ்சப்பா என்பவரிடம் அனுப்பி வைத்தார். அவர் என் கொடுமையான ஆங்கிலமும், புவர் கம்யூனிக்கேசன் அபிலிட்டியும் பார்த்து யோசித்தாலும், நீ ரொம்ப நல்ல பையன். உன்னைப் போன்றேர்( குட் யங் சாப்ஸ்) எங்கள் நிறுவனத்திற்குத் தேவை. நீ தினமும் ஹிண்டு, இண்டியன் எக்பிரஸ் பேப்பர்களைப் படி. நல்ல முன்னேற்றம் வரும் என்று கூறியவர். அனால் சேல்ஸுக்கு நல்ல எபிலிட்டி வேணும்,புது கஸ்டமர்களிடம் உரையாடும் போது மிகவும் சிரமப் படுவாய், ஆதலால் நான் உன்னை சேல்ஸ் அண்டு சர்வீஸ் டிபார்ட்மெண்டில் போடுகின்றேன். சர்வீஸ் என்றால் ஏற்கனவே உள்ள கஸ்டமர்களிடம் ஆர்டர் எடுப்பதுதான்,அதில் அவ்வளவு சிரமம் இருக்காது. ஆர்டர் எடுத்து பேமேண்ட் பாலோ செய்தால் போதும். மெக்கானிக்குகள் சர்வீஸ் செய்வார்கள். கொஞ்ச காலம் அதில் பணிபுரிந்து பழகிக் கொண்டுப், பின்னர் சேல்ஸுக்கு வந்து விடு என்றார். நான் சரி என்று சொல்ல, எதுக்கும் நீ, உன் வீடு மற்றும் உன்னை சிபாரிசு செய்தவர்களிடம் கலந்தாலேசித்து, வந்து ஜாயின் செய் என்றார்.



















(ஒரு கையத் தூக்கிக் கொண்டு அடிக்க வர்ற மாதிரி இருக்காரு பாருங்க, இன்னேரு கை அபய ஹஸ்தம். அதான் மாலையைப் போட்டு மூடி வைத்து விட்டார்கள்,
கீழே தக்குனுண்டா இருக்கறவங்கதான் இராம்,சீதா மற்றும் அனுமான். இந்தக் கோவிலில் இளைய பொருமாளுக்கு நோ எண்டரி. )


நானும் வீட்டுக்கு வந்து அனைவரிடமும் வந்து என் சம்மதத்தைத் தெரிவித்து விட்டு, அக்டோபர் 19,1990 அன்று முதன் முதலாய் வேலையில் இணைந்தேன். இப்படியாக நான் இராமரை வேலைக்காக வேண்ட, கோதண்ட இராமன்,வெங்கட இராமன்,கல்யாண இராமன்.இராமு அண்ணா, ஸ்ரீராம் ஆகிய அத்தனை இராமர்கள் மூலமாக நான் என் முதல் வேலையில் இணைந்தேன். எங்க நான் மறுபடியும் ஊருக்குத் திரும்பி வந்து கழுத்தறுப்பனோ என்ற பயத்தில் எத்தனை இராமன் இருக்காங்களே அத்தனை இராமர்களையும் விட்டு ஹெல்ப் பண்ணி எனக்கு ஒரு வேலை வாங்கிக் கொடுத்து அவரு எங்கிட்ட இருந்து எஸ் ஆகிட்டாரு.(தலைப்பு வந்துருச்சுங்களா). நானும் கையில பை,கழுத்துல டை, வாயில பொய் என்று என் முதல் வேலை ஆரம்பித்தது. கழுத்தில் நாய்ச்சுருக்கு என்னும் டையைக் கட்டிக் கொண்டு ஆரம்பித்த வேலை. முதலில் அண்ணா நகர், கீழ்பாக்கம்,அம்பத்தூர்,ஆவடி என்று போய்ப் பின்னர், பாரிஸ்,மவுண்ட் ரோடு,தீநகர்,சைதை,தேனாம் பேட்டை என்று மாறியது. மூன்று வருட அனுபவத்தில் நான் மொத்த சென்னையும்,புற நகர் பகுதிகளையும் சுற்றி விட்டேன். 1991 வருட மிகச் சிறந்த சேல்ஸ் அண்டு சர்வீஸ் ரெப் ஆக தேர்ந்து எடுக்கப் பட்டேன். 1993 ல் நான் இந்த நிறுவனத்தில் இருந்து விலகி கூட்டுறவு சங்கத்தின் செயலராக இணைந்தேன். பின்னர் அதையும் விட்டு விட்டு மறுபடியும் மார்க்கெட்டிங் வந்து தமிழகம் மற்றும் தென்னிந்தியாவின் முக்கிய பகுதிகள் அனைத்தும் சுத்தினேன். இதுதாங்க நான் முதன் முதலில் வேலைக்குப் போன வரலாறு.

டிஸ்கி : இதை நான் ஏன் இன்று பதிவாகப் போட்டேன் என்றால் இன்று தலைவருக்குப் பிறந்த நாள். ஸ்ரீராம நவமி. காலையில் பூ, பழம் எல்லாம் வைத்து பூஜை போட்டேன். மாலையில் வடபத்ர காளியம்மன் கோவிலில் இருக்கும் ஸ்ரீராமரை தரிசிக்க வேண்டும். அது ஏன் வடபத்திர காளியம்மன் கோவில் என்றால் அங்கதான் நிறைய பிரசாதம் தருவார்கள். இதுவே எங்கள் வீடு என்றால் இன்று. பூஜை அமர்க்களமாக இருக்கும். நீர்மோர்,பானகம், கோசுமறி,வடை,களத்தம் பருப்பு கண்ணமது(பாசிப்பருப்பு பாயசம்), வாழைக்காய்ப் பொறியல்,பருப்பு தாளித்தது,தயிர்ப்பச்சடி என வயிறுப் புடைக்க தின்று விட்டு, அலுவலகத்திற்க்குப் போய்த் தூங்கலாம்.

ஹேப்பி பர்த் டே டூ இராமா.

( எச்சரிக்கை. இது இத்துடன் முடியாது. இதன் தொடர்ச்சி வெள்ளிக் கிழமையன்று, நானும் ஹீரோதான் என்னும் பதிவில் வரும்,இது ஒரு மரண மொக்கை. படிக்கத் தவறாதீர்)

நன்றி.

Tuesday, March 23, 2010

ஆம்லேட் நிறைவு


இப்படியாக எங்களின் மூன்று ஆண்டு படிப்பு முடிந்து, நான் பைனல் இயர் புராக்ஜட் ரிப்போட்டுகளை ரெடி பண்ணிக் கொண்டுருந்தேன். அதை தட்டச்சு செய்ய எங்கள் வீட்டின் அருகில் உள்ள தட்டச்சு நிலையத்திற்கு கொண்டு சென்றேன். அடித்து முடித்துக் கொடுக்கும் அன்று, நான் அதை வாங்கச் சென்ற போது, அங்கு தாஸ் மாஸ்டர் இருந்தார். அவர் என்னிடம் எனது புராஜட் பத்திக் கேட்டார். நான் விளக்கிச் சொன்னேன். அவரும் அதைப் படித்துப் பார்த்து விட்டு, மிகச் சிறப்பாய்ச் செய்து உள்ளாய், வைவாவில் நல்லா பதில் சொல் என்று சொல்லித் திருப்பிக் கொடுத்தார். கல்லூரி நாட்கள் எல்லாம் முடிந்து விட்டது. தேர்வுகள்தான் இனி பாக்கி. எங்கள் ஊரில் எங்களுக்குத் தெரிந்தவர் வீட்டுக்கு,நான் அடிக்கடி போவது வழக்கம். அவர்கள் வீட்டில் எங்க டீச்சர் அக்காவின் ஸ்டண்ட், ஒரு அக்கா இருப்பார். என்னைச் சிறு வயது முதல் அவர்களுக்குத் தெரியும். மிகவும் பாசமாக இருப்பார். அவர்கள் வீட்டில் இருந்த நால்வரில் ஒருவர் தவிர, அனைவரும் என் மீது அன்பாக இருப்பார்கள். நான் கல்லூரி படிக்கும் சமயம், அவர்கள் எம்காம் படித்துக் கொண்டு இருந்தார்கள். இவரிடம் தான் தனி வகுப்புக்குப் போவார்கள். நானும் இவரைப் பற்றியும், நாங்கள் அடிக்கும் கிண்டலைப் பற்றியும் கூறுவேன். அவர்கள் படிக்கும் மாஸ்டரை அவ்விதம்(ஆம்லேட்)கூறக் கூடாது என்று கண்டிப்பார்கள். இருந்தாலும் நான் இவரைப் பற்றிக் கிண்டல் அடிப்பதை நிறுத்தவில்லை. இப்படித்தான் போய்க் கொண்டு இருந்தது.

ஒரு நாள் நான் அவர்கள் வீட்டுக்குச் சென்றேன். அங்கு ஹாலில், அந்த அக்காவின் அப்பா, தாஸ் மாஸ்டருடன் பேசிக் கொண்டு இருந்தார். அப்ப நான் போனவுடன் என்னையும் அமரச் சொன்ன அவர், தாஸ் மாஸ்டரிடம். "இவரும் உங்க கல்லூரியில் தான் படிக்கின்றான். பையன் எப்படி?" எனச் சாதாரனமாகக் கேட்டார். எனக்கு பகீர் என்றது. "போச்சுடா! மொத்தமாக மானம் கப்பல் ஏறப் போகுது என்று நினைத்தேன். அந்த அக்காவும், மாட்டினாயா என்பது போல சிரித்தார்கள். அவர் கேட்ட விநாடியே சிறிதும் இடைவெளி இல்லாமல், தாஸ் மாஸ்டர் என்னைப் பற்றிக் கூறத் தொடங்கினார். அவர் சொன்னது. " இம்ம், பையன் ரொம்ப நல்ல பையன், நல்லாப் படிப்பான். நான் முதல் வருடத்தில் இவனைப் பற்றிப் பேசிய போது கூட, இவன் டிபார்ட்மெண்டில் இவனுக்கு மிகவும் நல்ல பெயர் இருந்தது. பாடங்களைப் புரிந்து கொண்டு சொந்த நடையில் எழுதுவான். யுனிவர்சிட்டி டாப்பர்ஸில் ஒருத்தனா வந்து, கல்லூரிக்கு நல்ல பெயர் எடுத்துக் கொடுப்பான் என்று எதிர்பார்க்கின்றார்கள். இவன் புராஜட்ஸ் கூடப் பார்த்தேன். நல்லா செய்து இருக்கான், என்று சொல்லிய அவர் என்னிடம் "வைவா எப்படிப் பண்ணினாய்?, என்ன ஸ்கோர்?" என்றார். நானும் 49 அவுட் ஆப் 50 என்றேன். " வெரிகுட் நல்லா படித்து நல்ல மார்க் எடுத்து, உங்கள் டிபார்ட்மெண்ட் பெயரைக் காப்பாற்று" என்றார். நானும் "சரி" என்று கூறித் தலையைக் குனிந்து கொண்டேன். அந்த அக்கா, "பார்த்தியா மாஸ்டரை" என்பது போல, நக்கலாக சிரித்தார்கள். நான் கடைவீதிக்குச் செல்வதாக விடை பெற்றுக் கொள்ள, மாஸ்டரும் தானும் அங்குதான் சொல்வதாகக் கூறி, என்னை வண்டியில் ஏற்றிக் கொண்டார். நாங்கள் இருவரும் கடைவீதி சென்று, சக்தி பேக்கரியில் எனக்கு டீயும், உருளைக்கிழங்கு போண்டாவும் வாங்கிக் கொடுத்தார்.


எனக்கு அவமானம் பிடிங்கித் தின்றது. இப்பக் கூட அவரிடம் மன்னிப்புக் கேக்காவிட்டால் நான் மனிதனே இல்லை(அதான் போண்டா வாங்கிக் கொடுத்தாரில்லை), என்று நெகிழ்ந்த நான்.அவரிடம் திக்கித் திணறி, "சார் நான் பலமுறை உங்களிடம் தவறுதலாய் நடந்து கொண்டுள்ளேன். ஆனாலும் நீங்கள் என்னை மிகவும் உயர்வாய்ப் பார்க்கின்றீர்கள். நான் அப்படி உண்மையில் நடந்து கொள்ளவில்லை. என்னை மன்னித்து விடுங்கள்" என்றேன். அதுக்கு அவர் என் தோளைத் தட்டிக் கொடுத்து," இது எல்லாம் சகஜம் தம்பி, உன் வயசு அப்படி, உன் வயதில் நானும் இப்படித்தான் இருந்தேன். என்னதான் பண்ணினாலும் நீ என் கல்லூரி மாணவன், உன்னை பிறர் முன்னிலையில் நான் எப்படி விட்டுக் கொடுக்க முடியும். அப்படி விட்டுக் கொடுத்தால், நம் கல்லூரியின் பெருமை என்ன ஆகும் என்றார். மேலும் "நான் முதல் வருடம் விசாரித்த போதும், கட் அடிக்கின்றான் என்று கூறிய போதும், உன் டிபார்ட்மெண்டில் உன்னைப் பற்றி நல்ல விதமாகக் கூறினார்கள். சரி இந்த வயதில் இது ஆர்வக் கோளாறு என்று விட்டு விட்டேன். நான் அவரிடம் இரண்டு, மூன்று முறை மன்னிப்புக் கேட்டு விட்டு, வீடு வந்து சேர்ந்தேன். என்னால் யுனிவர்சிட்டி டாப்பராக வர இயலவில்லை என்றாலும் முதல் பத்து இடங்களில் ஒருவனாக வர இயன்றது.(எட்டாம் இடம்)

இது என் வாழ்க்கையில் இரண்டாவதாக நடந்த சம்பவம். முதலாவது நான் பன்னிரண்டாவது படிக்கும் போது, எனக்கு அநியாயம் இழைத்ததாக ஒரு ஆசிரியரிடம் நான் கோபமாக கத்த, அதை அவர் சும்மா விட்டாலும், அதைப் பார்த்த இன்னேர் ஆசியர், என்னை மற்றவர்களிடம் போட்டுக் கொடுத்தார். எல்லா ஆசிரியர்களுக்கும், நான் இப்படி நடந்து கொண்டதில் ஆச்சரியம். இந்தக் குடும்பத்தில் ஒருத்தன் இப்படிப் பண்ணி விட்டானே என்று. ஒரு ஆசிரியர் மட்டும், என்னை சும்மா ஒரு ஒரு மணி நேரம் போட்டுக், குனிய வைச்சுக் கும்மி குலைவையிட்டார். அந்த சுவாஸ்யமான சம்பவம் பின்னால் ஒரு பதிவில் கூறுகின்றேன். இந்த இரண்டும்தான் நான் என் கல்வி வாழ்க்கையில் செய்த தவறுகள். நன்றி .

டிஸ்கி : படத்தில் கையில் வைத்து இருப்பது பிரபல பதிவர். அறிவிலி இராஜேஷ் அவர்கள் பதிவர் சந்திப்பில் கொடுத்த பட்டாணி சுண்டலுங்கே. அதுனால அவருக்கும் நன்றி.

Monday, March 22, 2010

ஆம்லேட்


என்னங்க தலைப்பைப் பார்த்ததும் சமையல் பதிவு என்றும் பித்தனின் பதிவில் ஆம்லேட்டா என்று வந்துருப்பீர்கள். ஆனால் இது ஒரு மொக்கைப் பதிவுங்க. இன்று நான் கடவுள், கோவில் ஆராய்ச்சிப் பதிவினைப் போடலாம் என்றுதான் இருந்தேன். ஆனால் போன பதிவில் விடலைப் பசங்க பட்டாபட்டியும், வெளியூரும் நம்ம சொட்ட மண்டையப் போட்டு, அக்கு வேறா, ஆணி வேறா பிரிச்சு மோய்ஞ்சுட்டாங்க. அவர்கள் எனக்கு நல்ல நண்பர்கள். அடுத்தவர் மன உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடியாத இளவட்டங்கள். இந்த வயதில் இது சகஜம். ஆனால் இது என்னைக் கொஞ்சம் யோசிக்க வைத்தது. நானும் என் கல்லூரி வயதில் இப்படித்தான் இருந்தேன். கிண்டலும் கோலியுமாக கழிந்தது. நண்பர்கள் தங்களுக்குள் கிண்டல் செய்வது வாடிக்கை. அப்படி பண்ணும் போது, ஒரு நண்பன் கட்டையாக, குள்ளமாக இருப்பான். அவனை எல்லாரும் குட்டையன் அல்லது கட்டையன் என்று கிண்டல் செய்வது வழக்கம். இது ஆராம்பித்தது முதல் அவன் எங்களை விட்டு ஒதுங்கி இருப்பான், பின்னர் ஒரு நாள் அவன் தற்கொலை செய்வது வரை போனது. இது அவன் வாய் மூலமாக, மற்றவர்கள் அவன் உருவத்தைக் கிண்டல் செய்யும் போது, எதிர்க்கவும் முடியாமல், மனதில் எவ்வளவு வலி ஏற்ப்படுகின்றது என்பதைக் குறிப்பிட்ட போது நான் என்னை நானே நெந்து கொண்டேன். என்னை மற்றவர்கள் விளையாட்டுக்குக் கிண்டல் செய்யும் போது, நான் இதைப் பற்றிக் கவலைப் படுவது இல்லை. நம்மை எதே விசயத்தில் உயர்வாய் நினைப்பவர்கள், மட்டம் தட்ட வேண்டும் அல்லது இது ஒரு வேடிக்கை என்று நினைத்துச் செய்கின்றார்கள் என்று விட்டு விடுவேன். ஆனால் இந்த நண்பனின் மன வேதனைகளும், வலிகளையும் பார்த்துத்தான் நான் இனிமேல் யாரையும் உருவத்தை வைத்து சொட்டை,குள்ளம்,நெட்டை, குண்டு, கறுப்பு,வெளுப்பு, நொண்டி எனக் கிண்டல் செய்வது இல்லை என்ற கொள்கையைக் கொண்டேன். இப்படிக் கிண்டல் செய்வது மூலம் அந்த இடத்தில் வேண்டுமானால் பெரிய ஆள் போல இருக்கலாம். ஆனால் உடன் இருப்பவர்கள் கூட அவன் சென்றவுடன் அவனைப் பற்றி தரக்குறைவான எண்ணங்களை வெளிப்படுத்துவார்கள். இது போல கிண்டல் செய்வபர்களை நாகரீகம் இல்லாதவராக நினைப்பார்கள். நானும் இப்படி நடந்து கொள்கின்றவர்களை நல்ல மனிதர்களாக மதிப்பது கிடையாது. நான் இங்கு தத்துவம் சொல்ல வரவில்லை. இந்த பசங்களின் குறும்புக் கும்மி எனக்கு என் வாழ்வில் நடந்த ஒரு இன்னேரு சம்பவத்தை நினைவூட்டியது, அதை உங்களுடன் பகிர்ந்துக் கொள்ள நினைக்கின்றேன். இனி எனது நடையில் சொல்லப் போகின்றேன்.

நான் கல்லூரியில் காக்கா ஓட்டிய சமயம்.நாம எங்க படிக்கறது, அது எல்லாம் மண்டையில முடியும்,மூளையும் இருக்கறவங்க பண்ற வேலை. நமக்குத்தான் இந்த இரண்டுமே கிடையாதே. அதுனால எப்பப் பார்த்தாலும், மரத்தடி மகாதேவனா இருப்பேன். அதுதான் நான் கல்லூரியில காக்கா ஓட்டுன கதை. இப்படிக் காக்கா ஓட்டும் போது. சீனியர் மாணவர்கள் எல்லாம் பள்ளியில என்னுடன் படித்தவர்கள் என்பதால், முதல் வருடமே, நாங்களும் ரொளடிதாண்ட ரேஞ்சுக்கு எங்க அதிக்கலம் ஆராம்பம் ஆகிடுச்சு.
நான் பி.எ. கூட்டுறவு முதலாம் ஆண்டு படித்துக் கொண்டுருந்தேன். என் டிபார்ட்மெண்டில் நான் நல்லா படிப்பவன், நல்ல பையன் என்று நம்பியதால், நல்ல பெயர் வாங்கி வைத்து இருந்தேன். என் வகுப்பும், பிகாம் முதலாண்டு வகுப்பும் ஒன்றாக எதிர் எதிரில் இருந்தது. பிகாம்மில் என் நண்பன் ஆனந்தகுமார் படித்துக் கொண்டிருந்தான். அவனும் நானும் ஒன்றாம் வகுப்பு முதல் நண்பர்கள். (இது பற்றி நான் இருவர் ஒரு வித்தியாசமான நட்பு என ஒரு பதிவு போட்டுள்ளேன். படிக்கவும்.) ஒரு நாள் அவன் வகுப்பில் உக்கார்ந்து இருந்தான். அப்போது அவன் டிபார்ட்மெண்ட் எச்.ஒ.டி தாஸ் என்பவர் பாடம் நடத்திக் கொண்டு இருந்தார். அப்போது நான் அவ்வழியாக போன போது, ஆனந்தன் தான் எழுதும் பேனா தீர்ந்து விட்டதாகவும், பேனா கொடுக்கச் சொல்லி சைகையில் கேட்டான். நான் உடனே என் பேனாவை ஜன்னல் வழியாக அவனிடம் வீசினேன். அவ்வளே நட்புங்க. பேனா டேபிள் மேலே பட்டு, எகிறி, பக்கத்து பெஞ்சில் படிக்கும் பெண்ணின் மீது விழுந்து விட்டது. அவள் எங்க குடும்ப நண்பி மற்றும் எங்க அக்காவின் ஸ்டண்ட், ஆதலால் திரும்பிப் பார்த்தவளிடம், ஆனந்தனின் இடம் கொடுக்குமாறு கூற, அவளும் கொடுத்து விட்டாள். ஆனால் இதைப் பார்த்த தாஸ் மாஸ்டருக்கு கோபம் வந்து விட்டது. அவர் வகுப்பில் இருந்து கோபமாக கையை ஓங்கிக் கொண்டு அடிக்க வந்து விட்டார். அவர் சாதாரனமாக கடிந்து கொண்டியிருந்தால், நான் சாரி கேட்டுப் போயிருப்பேன். அனால் எனது நண்பர்கள் மத்தியிலும், நண்பிகள் மத்தியிலும் அவர் கையை ஓங்கிக் கொண்டு வந்தது கொஞ்சம் அவமானமாகப் போனதில் கோபம் வந்து விட்டது. அவரிடம் சண்டைக்குப் போயி விட்டேன். தவறு செய்தது நான் என்றாலும், சூழ் நிலை காரணமாக சண்டை போட்டேன்.

அவர் "நீ எப்படி?, நான் வகுப்பில் இருக்கும் போது, பேனாவைப் போடலாம்?", நான் "அவந்தான் கேட்டான். கொடுத்தேன். இதில் என்ன தப்பு". நீங்க வேனா கேட்ட உங்க டிபார்ட்மெண்ட் பையனைக் கேளுங்க.என்னைக் கேக்க வேண்டுமானால் என் டிபார்ட்மெண்டில் புகார் செய்யுங்கள், அதை விட்டு விட்டு கையை ஓங்கறிங்க. அடிப்பீர்களா,எங்க அடிங்க பார்க்கலாம்",என்று வீராய்ப்பாக பேசினேன். அவர் ஒரு நிமிடம் மெலிந்த நேஞ்சான் குச்சியான என்னிடம் இப்படி எதிர்பார்க்காமல் பின் வாங்கிவிட்டார். பின்னர் உன்னை உன் டிபார்ட்மெண்டில் சொல்லி பேசிக்கிறேன் என்று வகுப்பினுள் போய் விட்டார், பின்னர் அந்தப் பெண்ணிடம் தன் மீது பேனாவை எறிந்ததாக புகார் மனு கேட்டுள்ளார். அந்தப் பெண், எங்கள் நட்பு முறையும்,எங்கள் குடும்ப பின்னனியும் கூறி மறுத்து விட்டாள். "ஆனந்தனே அவன் தான் வீசினான் அவனிடம் பேசிக்கொள்" என்று கூறி அவரை முறைத்து விட்டான்.அவர் என்னைப் பற்றி டிபார்ட்மெண்டில் கம்பளைண்ட் செய்து உள்ளார். ஆனால் எங்க டிபார்ட்மெண்டில் என்னிடம் ஒன்றும் கேக்கவில்லை. இவர் நல்லவர்தான், ஆனால் எல்லா விஷயத்திலும் தான் முன்னால் இருக்க வேண்டும். தன்னால் காரியங்கள் நடைபெற வேண்டும் என்று விரும்புவார். அதில் ஒன்றும் தவறு இல்லை. ஆனால் இவருக்குத் திறமை மற்றும் அறிவு இருப்பது போல, மாணவர்களை அடக்கி ஆளும் தன்மை கிடையாது. எல்லா விழாக்களிலும், பிரச்சனைகளிலும் இவர் பிரிசின்பாலுடன் ஒட்டிக் கொள்வார்.இது மற்ற விரிவுரையாளர்களுக்கு கடுப்பைக் கொடுத்தது. ஆதலால் தாஸ் பத்திக் கம்பளைண்ட் வந்தால் கண்டுக்காமல் விட்டு விடுவார்கள். இது நடந்து இரண்டு நாள் கழித்து நான் வழக்கம் போல தமிழ் கிளாசுக்கு கட் அடித்து விட்டு மரத்தடியில் நின்று கொண்டு இருந்தேன். அப்போது இவர் எதிர் கிளாசுக்கு வகுப்பு எடுக்க வந்தவர். என்னைப் பார்த்ததும் ஒரு மாதிரி பார்த்து, "என்ன வெளியில நிக்குற சஸ்பெண்டா" என்றார். இளக்காரமாக. அவர் கண்டிப்பாக என்னை சஸ்பெண்ட் பண்ணிருப்பார்கள் என்று நம்பினார். நானும் அதே இளக்காரமாக "இல்லை, நான் கிளாசைக் கட் பண்ணிட்டு நிற்க்கின்றேன்," என்றேன். அவர் மிகவும் ஆச்சரியப்பட்டு " என்ன டிபார்ட்மெண்டில் ஒன்றும் சொல்லவில்லையா என்றார். நான் ஒன்னும் சொல்லவில்லை என்றேன். தலையைக் கீழ போட்டுட்டுப் போய் விட்டார். பின்னர் அன்று மாலை கடைசி வகுப்புக்கு வந்த என் அண்ணாவைப் போன்ற விரிவுரையாளர் ஸ்டான்லி ஸோவியர் இளங்கோ அவர்கள், என்னிடம் " என்ன சுதா, தாசுடன் என்ன பிரச்சனை: என்றார். நான் நடந்தைச் சொல்ல, அவர் "சரி சரி தேவையில்லாமல் அவருடம் பிரச்சனை பண்ணாதே. நீ அவரிடம் சாரி கேட்டு விட்டு ஒழுங்கா படிப்பதைப் பார்"என்றார். நானும் "சரி அண்ணா" என்று சொல்லிவிட்டேன். அடுத்த நாள் காலையும் நான் தமிழ் கிளாசைக் கட் பண்ணி நிற்கும் போது, மறுபடியும் அவர் என்ன சஸ்பெண்டா என்றார்,. வழக்கம் போல கட்டடிச்சுட்டு நிற்க்கின்றேன் என்றேன். அவர் டிபார்ட்மெண்டில் ஒன்றும் சொல்ல வில்லையா என்றார். நான் உங்களைப் பார்த்தா மன்னிப்பு கேக்கச் சொன்னார்கள் என்றேன். அவர் அப்பவாது பேசாம பேயிருக்கலாம், ஆனால் நல்லவரான அவர் விகல்ப்பம் இல்லாமல் என்னிடம் என்ன மன்னிப்பு கேக்கவில்லையா என்று அப்பாவியாக கேட்டார். நானும் அவரைப் புரிந்து கொள்ளும் அளவுக்கு பக்குவம் இல்லாததால் ஆணவமாக அதுக்கு அவசியம் இல்லை என்றேன். அவர் என்ன சொல்வது என்று தெரியாமல் போய்விட்டார். இதுக்கு அப்புறம் நான் அவரைக் கிண்டல் செய்வது வாடிக்கை ஆயிற்று.

அவர் கொஞ்சம் கறுப்பாக குட்டையாக இருப்பார், தலை முன் பாதி முடியில்லாமல் வழுக்கையாக இருக்கும். ஒரு சமயம் சீனியர்கள் பிரேயர் நடக்கும் போது மொக்க வெயிலில் அவர் தலையில் எண்ணெய் பூசி நின்றுருந்தார். எவனே ஒருவன் தலையில் ஆம்லேட் போட்டுச் சாப்பிடலாம் என்று கிண்டல் செய்ததால், அவர் பட்டப்பெயர் ஆம்லேட் ஆகிற்று. அதுமுதல் அவர் கிரவுண்டில் போகும் சமயம், வகுப்பில் கிளாஸ் எடுக்கும் சமயம் எல்லாம் ஆம்லேட் என்று கத்துவார்கள். பாடம் எடுக்கும் சமயம்,வெள்யில் இருந்து கத்தினால், சில வினாடிகள் ஸ்தம்பித்து பின்னர் கிளாஸ் எடுப்பது வழக்கம். இதுனால நாங்க எல்லாம் அவரைக் கிண்டல் செய்வது வழக்கம். விரிவுரையாளர்களுக்குள் கல்லூரி நிர்வாகம் மற்றும் மாணவர் செல்வாக்கு யாருக்கு என்பதைக் காட்டுவதுதில் போட்டி ஆதலால் மற்ற டிபார்ட்மெண்ட் ஆசியர்களும் இந்த மாணவர்களைக் கண்டு கொள்வது இல்லை. நானும் இந்தக் கேவலமான செயலில், இந்தப் பிரச்சனை காரணமாக ஈடுபட்டு இருந்தேன். மூன்றாம் ஆண்டு வந்தது. கல்லூரி நாளின் போது,கல்லூரித் திடலில் மாணவர்களுக்குள் ஒரு பிரச்சனை வந்தது. பிரச்சனையில் ஈடுபட்ட மாணவர்களில் பலர் குடித்து இருந்ததால்,எந்த விரிவுரையாளரும் வரவில்லை. ஆனால் இது எதுவும் புரியாமல் முந்திரிக் கொட்டை மாதிரி, இவர் கிரண்டில் வந்து சத்தம் போட்டார். தள்ளி நின்று இருந்தால் கூடப் பரவாயில்லை,மாணவகள் மத்தியில் வந்து நின்று கட்டுப்படுத்தத் தொடங்கினார். ஆனால் இளவயது மற்றும் ஆர்வக் கோளாறில் கனகராஜ் என்னும் என் சக மாணவன்(கல்யாணமாம் கல்யாணம் பதிவு) அவரை கூட்டத்தைச் சாக்காக வைத்துக் கொண்டு உதைத்து விட்டான். உதைக்கும் போது அவர் அவன் பேண்டைப் பார்த்து விட்டு, நிர்வாகத்திடம் கூறிவிட்டார். நிர்வாகம் கனகராஜ் மற்றும் சக்திவடிவேலை ஒரு மாத சஸ்பெண்ட் செய்தது. கல்லூரி ஸ்டிரைக்கால் ஒரு வாரம் மூடப்பட்டது. எங்கள் மூன்றாம் அண்டு தேர்வுகள் நெருங்கும் சமயம் இந்தக் வேலை நிறுத்தம் எங்கள் படிப்பைப் பாதித்தது. கல்லூரி விரைவுரையாளரைக் காலால் உதைத்த காரணத்தினால் மிகவும் பிடிவாதமாக இருந்தது. பின்னர் இந்த நிலை கண்ட தாஸ் அவர்கள், என்னால் மற்ற அனைவரும் பாதிக்கக் கூடாது. பசங்களின் படிப்பும் கெட்டு விடும். இவர்கள் இருவரின் மூன்று ஆண்டு படிப்பு, பெற்றேரின் உழைப்பு வீணாகி விடும் என்று கூறித் தன் புகாரை வாபஸ் வாங்கிக் கொண்டார். பின்னர் பிரேயர் ஹாலில், மாணவர்களிடம் அவரின் பெருந்தன்மையைக் கூறிப் பிரின்ஸிப்பால் வாபஸ் வாங்கினார். இது எனக்கு தாஸ் அவர்கள் மீது மிக மரியாததைக் கொடுத்தது. நான் அவரிடம் கேவலமாக நடந்து கொண்டது குறித்து வருந்தினாலும்,நான் அவரிடம் மன்னிப்போ அல்லது வருத்தமே தெரிவிக்க வில்லை.

டிஸ்கி : ஆனால் நான் அவரிடம் மிக வருந்தி மன்னிப்புக் கேட்ட சம்பவம் என் படிப்பு முடிந்தவுடன் நடந்தது. அது குறித்தும், நான் உணர்ந்து கொண்டது குறித்தும் நாளைப் பதிவில் எழுதுகின்றேன். பதிவை விரிவாகக் கூறியதால் வழக்கம் போல தொடரும் போட வேண்டியது ஆகிற்று மன்னிக்கவும்.நன்றி. தொடரும்.

Friday, March 19, 2010

பதிவர்கள் வீட்டு சமையல் அறையில் (ஆண்கள்) -- பாகம் 3


அன்புள்ள பதிவுலக ஆண்களே! நான் பதிவர் வீட்டு சமயலறையில்(பெண்கள்) என்று மகளீருக்கு இடஒதுக்கீட்டில் முக்கியத்துவம் தந்த மாதிரி, முதன் முதலில் பதிவிட்ட போது,அவர்கள் அனைவரும் நல்ல புரிந்துணர்தலோடு நகைத்தார்கள். அதுபோல, இப்ப உங்களையும் வைத்து பதிவைப்(நம்பிப்) போடுகின்றேன். பெருந்தன்மையுடன் இதை நகைச்சுவையாக மட்டும் பார்த்து ஆதரவு தரவேண்டுகின்றேன். நான் முதலில் குடுகுடுப்பையாரின் கல்லூரி அனுபவங்களைப் படித்துதான் பதிவை ஆரம்பித்தேன். ஆதாலால் அவருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அவரில் இருந்து ஆரம்பிக்கின்றேன்.(இதுதான் குரு வணக்கம்முன்னு சொல்வாங்க போல)

குடுகுடுப்பையார் (தோழர் முகிலனிடம்) : மொதல் மொதல்ல என் மனைவி ஊருக்குப் போனப்ப நான் சமைச்சன் பாரு.

துனைவியார் : ஹிக்கும், இந்த சுடுதண்ணி வச்ச கதையவே, எத்தனை நாளுக்கு சொல்வீங்க. வந்த நாள்ல இருந்துபார்க்குறேன், உருப்படியா என்ன சமைச்சீக் கொடுத்தீங்க?


கோவி. கண்ணன் (தன் மகளிடம்) : செல்லம், அம்மாவிற்கு அலுவலகத்தில் மீட்டிங். அதுனால நீ ஒழுங்கா ஹோம் வெர்க் பண்ணுடா.

மகள் : அப்பா, நான் ஒரு, ஒரு மணி நேரம் விளையாடி விட்டுப் பண்ணுகின்றேனே.

கோவியார் : இதப்பாரும்மா, ஒழுங்கா நீ ஹோம் வெர்க் பண்ணு, அப்பா சமைத்துச் சாப்பிடத் தருகின்றேன்.

மகள்: அப்பாஆஆஆ! தயவு செய்து அந்த பனிஸ்மெண்ட் மட்டும் வேண்டாம், நான் ஒழுங்கா ஹோம் வெர்கே பண்றேன்.

(குறிப்பு : கோவியார் நல்லா சமைப்பார்).



வெண்பா புலவர் முகவை இராம்(அடுக்களையில் பால் காய்ச்சிக் கொண்டு) : வெண் பாலுக்கும், வெண்பாவிற்க்கும் என்ன சம்பந்தம் இருக்கும்,

வெண்பாலில் கருமைக் காப்பிக் குழம்பி இட்டு
சீனியக் குறைவாய் இட்டு, நிறைவாய் ஆத்தி

மனைவி : அப்பப்பா ! தலைவலி தாங்கலைன்னு ஒரு கப் காப்பி கேட்டா, உங்க தலைவலி வேறா ? கொஞ்சம் பேசாமக் காப்பி போடுங்க.



நசரேயன் (துனைவியாரிடம்) : நான் இன்னிக்கு உனக்கு ஹைதிராபாத் சிக்கன் பிரியாணி பண்ணித்தரட்டா ?

துனைவியார் : அய்யய்யே, அதுக்குப் பேசாம, அந்த மட்டமான புளிச்சோறு சிக்கன் பிரியாணியவே வாங்கிச் சாப்பிட்டிருக்கலாம்.



அப்பாவி முருகு (கே.எப்.சியில் தனது நண்பர்களிடம்): ஆக்ச்சுவலி இந்த சிக்கன் பிரியாணி எப்படி பண்றாங்கன்னா.

நண்பன் : சரி,சரி. உனக்குக் கல்யாணம் நிச்சயம் ஆகிடுச்சுன்னு நாங்க நம்புறேம்.அதை இப்படி எல்லாம் புரூப் பண்ணாதே.



குலவுசனப்பிரியன்(பால்கனியில் தம் அடிக்கின்றார்)

துனைவியார் : உங்களை ஜலில்லா அக்கா பதிவிட்ட, "தம் கேப்பேஜ்" பண்ணச் சொன்னா, இங்க என்ன பண்றீங்க.

கு.பிரியன் (சிகரட்டை மறைத்தபடி) : ஹி ஹி , அதுதான் முதல்ல "தம்" போட்டுட்டு இருக்கேன்.



பட்டாபட்டி : நான் கொத்தவராங்காயில் கொத்து பரோட்டா பண்ணலாமான்னு யோசிச்சுட்டு இருக்கேன்.

மனைவி : நீங்க கொத்தவரங்காயில் கொத்து பரோட்டா பண்ணுவீங்களே! அல்லது கொத்தவரங்காய் சால்னா பண்ணூவீங்களே! தெரியாது.
சாப்பிட்டு விட்டு நான் உங்களைக் கொத்தி எடுக்காமப் பார்த்துக்குங்க.

பட்டாபட்டி : *************



மங்குனி அமைச்சர் : கண்ணே நான் உனக்கு, என்ன பண்ணித்தரட்டும், கொசுக் கருவாடு, கொசு இரத்தப் பொறியல், நாய்த்தோல் பிரியானி எது வேனும்? சொல் அன்பே.

மனைவி : நீங்க, சாப்பிடறது எல்லாம் எனக்கு எதுக்கு?. முதல்ல மனுசங்க,நான் சாப்பிடறது மாதிரி எதாது பண்ணுங்க.

மங்குனி : $$$$$$$$$$$.



ஜெய்லானி : ஏம்மா ! பிரியானி பண்றதுக்கு முன்னாடி, ஆட்டை நான் ஹலால் பண்ணித் தரட்டா !

மனைவி : செய்யறதே செய்யறீங்க! அப்படியே பிரியானியும் நீங்களே செய்ஞ்சுருங்க.

ஜெய்லானி : ஆகா! இதுதான் வம்பை விலைக்கு வாங்குறதா?



சைவக்கொத்து புரோட்டா(பாடிய படி) : கொத்துபுரோட்டாவில் சைவமின்னு,அசைவமின்னு ரெண்டு வகை உண்டூஊஊஊ, இதில் எந்த வகை வேணும் உனக்கு?

மனைவி : எந்த வகையா இருந்தா என்ன, சாப்பிடும் வகையில் சமைங்க. அதுபோதும். இல்லைனா உங்களுக்கு " இன்னிக்கு சைவம்தான்" . புரிஞ்சுதா?.

சை.கொ பு: ????????????


ஸ்ரீராம் : நான் கத்திரித் தோல் சாம்பார் பண்ணப் போறேன்.

மனைவி : சரி,சரி வயித்துல கத்திரிக் கோல் வைக்காமப் பார்த்துக்கேங்க.

ஸ்ரீராம் : @@@@@@@@@









மனைவி : என்னங்க அடுப்படியில உக்காந்து என்ன் யோசிக்கிறிங்க ?

வால்பையன் : நான் வாழைப்பழத்தோலில் அல்வா பண்ண முடியுமான்னு யோசிக்கின்றேன்.

மனைவி : கஷ்டகாலம், எங்க அப்பா அப்பவே சொன்னார்.

வால்பையன்(ஆர்வத்துடன்) : என்ன சொன்னார்?

மனைவி : " நல்லா யோசிக்சுப் பாரும்மா, இது மாதிரி (வால்பையன்) பெயருல்ல எழுதுறான்னு.

வால்பையன் : !!!!!!!!!!!!!!!!!


சரிங்க, சிரிப்பு கொஞ்சமாது வந்துருக்குமுன்னு நம்புகின்றேன். இனி கடைசியா வழக்கம் போல நான்.

(பித்தனின் வாக்கு சுதாகர், நல்லாக் குடித்து விட்டு இரவு லேட்டா வரேன்)

சுதாகர் : ஹி ஹி இன்னிக்கு ஒரு மீத்திங், அதான். கேவிச்சுக்காதே சாலி(சாரி) டியர்.

மனைவி : இது எல்லாம் ஒரு சாக்கா, என்னைக்கிதான் மீட்டிங் இல்லை,
சரி.சரி கிச்சனில் உப்புமா வச்சுருக்கேன், எடுத்துக் கொட்டிக்கே, எனக்குத் தூக்கம் வருது.

(பித்தன் சாப்பிட, மனைவி எதே சந்தேகம் வந்தவராக எழுந்து வருகின்றார்)

மனைவி : உப்புமா ஹாட்பேக்கில் அப்படியே இருக்கே, என்ன சாப்பிடுறீங்க.

பித்தன் : ஹி ஹி குண்டானில் இருந்த மீதி உப்புமாவையே சாப்பிடுகின்றேன்.
(ஜஸ் வைக்க). சும்மாச் சொல்லக் கூடாது, நீ பண்ற உப்புமா சூழ்ப்பரு.

மனைவி : அய்யே அது பசைங்க. குழந்தைக புஸ்தகத்துக்கு அட்டை போட வைச்சு இருந்தது.

பித்தன் : ??????????.


சரிங்க, சிரிச்சுருபீங்கன்னு நம்புறேன். இந்த ஸாதிகா அக்காவும்,சித்ராவும்தான் ஆண்கள் வீட்டு சமையலறையில் பதிவு எப்ப போடுறீங்கன்னு தொல்லை பண்ணீனாங்கா, அதுனால பின்னூட்டமும், ஓட்டும் எனக்குப் போட்டு. அட்டோ அல்லது லாரி! எதுனாலும் அவங்களுக்கு அனுப்பி வையுங்க. நன்றி.

Thursday, March 18, 2010

பாகற்க்காய் பிட்ல















முஸ்கி : இது என் 150ஆவது பதிவுங்க, நானும் தப்பும் தவறுமாக இத்தனைப் பதிவுகளைப் போட்டுவிட்டேன். நீங்களும் பெரிய மனசேட ஆதரவு கொடுத்து வர்றீங்க. மிக்க நன்றி. நம்ம ஜலில்லா சகோதரி 16.09.2009 ல் நான் பாகற்க்காய்ப் பொரியல் பற்றிப் பதிவு போட்ட போது, பாகற்க்காய் பிட்ல பத்திக் கேட்டாங்க. ஆதலால் இவ்வளவு சீக்கிரமா அந்தப் பதிவைப் போடுகின்றேன். சக்கரை வியாதி மருந்தான பாகற்க்காய், மறைந்த என் தந்தைக்கும்,எனக்கும் மிகவும் பிடிக்கும், பாகற்க்காயும், உருளைக்கிழங்கும் எந்த விதத்தில் கொடுத்தாலும் அப்படியே சாப்பிடுவேன். சரிங்க பதிவுக்குப் போவேமா.

தேவையான பொருட்கள் :-

1.பாகற்க்காய் - 10
2. கடலைப் பருப்பு- ஒரு கைப்பிடி.
3.துவரம் பருப்பு - கால் கைப்பிடி,
4.புளிக்கரைசல் ஒரு டம்ளர்.
5.பச்ச மிளகாய் இரண்டு


அரைக்க :-

6.கடலைப்பருப்பு - 1ஸ்பூன்.
7.வெந்தயம் -1/2 ஸ்பூன்.
8.மிளகு - 1ஸ்பூன்
9.தனியா அல்லது கொத்தமல்லி- 2 ஸ்பூன்
10.தோங்காய்த்துருவல் - 3 ஸ்பூன்.

தாளிக்க -

11. தோங்காய் எண்ணெய் - 3ஸ்பூன்
12.கடுகு.
13.கறிவேப்பிலை

அப்புறம் ஒன்னு மறந்துருச்சே, என்ன அது? ........ ஆ ஞாபகம் வந்துருச்சு,,,,, அது அது

சிலிண்டர்ல கேஸ் இருக்கனும். (யாருப்பா அது கையில விளக்குமாறு எல்லாம் எடுக்குறது.... ஓ கூட்டப் போறிங்களா, பார்த்துப்பா! பயப்படுத்துறிங்களே).இதுவரைக்கும் இந்த மாதிரி யாராது சொல்லியிருக்காங்களா?, கேஸ் இல்லைன்னா சமைக்க கரண்டாவது இருக்கனும்.

அண்ணே! அண்ணே!!! இப்பவாது என்னை அறிவாளின்னு ஒத்துக்கேங்க, அண்ணே!!!

செய்முறை : -

















முதலில் பாகற்காயை படத்தில் காட்டியபடி சிறு சிறு துண்டுகளாக வெட்டி,கொஞ்சூண்டு உப்பு,மஞ்சள் பொடி எல்லாம் போட்டு, அரைடம்ளர் தண்ணீர் விடலாம் அல்லது தண்ணீர் தெளித்த மாதிரி விட்டு,குக்கரில் ஒரு அடுக்கில் வைக்கவும், மறு அடுக்கில் துவரம் பருப்பு மற்றும் கடலைப் பருப்பைத் மூழ்கும் அளவுத் தண்ணீர் இட்டு வேக வைக்கவும்.(பாகற்க்காய் குழையாத அளவுக்கு தண்ணீரும், விசிலும் விடவும்)

ஒரு பெரிய வாணலில் ஒரு டம்ளர் புளிக்கரைசலில் அரை டம்ளர் தண்ணீர் விட்டு, அதில் உப்பு(தேவையான அளவு, காயில் உப்புப் போட்டுருப்பதால் பார்த்துப் போடவும்),மஞ்சள் தூள்,பெருங்காயத்தூள் போட்டு கொதிவிடவும். பச்ச மிளகாயை இரண்டாக கீறிப் போடவும்.

புளித்தண்ணீர் கொதிப்பதுக்குள் வெந்தயம்,சிறிது கடலைப்பருப்பு,தனியா,மிளகு ஆகியவற்றை வறுத்து, தேங்காய்த்துருவலுடன் சேர்த்து, துவையல் போல அரைத்துக் கொள்ளவும்.

புளித்தண்ணீர் பச்சை வாசம் போனவுடன் அதில் பாகற்க்காய் மற்றும் வெந்த பருப்புக்களையும் போட்டு 5 நிமிடங்கள் கொதிக்க விடவும். பின்னர் அரைத்த விழுதினைப் போட்டுக் கொதிக்க விடவும். நுரைக் கட்டி, கெட்டியாகி சாம்பார் வாசம் வரும் போது, இறக்கி வைத்து, அதில் கடுகு,கறிவேப்பிலையைத் தேங்காய் எண்ணெய்யில் தாளித்துக் கொட்டவும். சுவையான பாகற்காய் பிட்ல ரெடி. இதுக்கு மேட்சா உருளை அல்லது கத்திரிக்காய் காரக் கறி பண்ணினால் நல்லா இருக்கும்.

டிஸ்கி: உப்பு இரண்டு முறை போடுவதால் கவனம் தேவை. இதுக்கு இரண்டு முறையும் குறைவாகப் போட்டு,சமைத்து முடித்த பின்னர் டேஸ்ட் பார்த்து சேர்த்துக் கொள்ளவும்.
இது சாம்பார் போல கெட்டியாக இருக்க வேண்டும். ஆதலால் பருப்புக்களை அதிகம் சேர்க்கவும். புளியில் தண்ணீர் பார்த்து விடவும்.

டிஸ்கில டிஸ்கி : கமெண்ட்ஸ பதிவுக்கு பின்னாடிப் போட்டா டிஸ்கி, முன்னாடிப் போட்டா முஸ்கின்னு, நம்ம மங்குனி அமைச்சர் தான் சொன்னாருங்க. அதுனால கடுப்பா இருந்தா ஆட்டோவை அவருக்கு......

நன்றி.

Wednesday, March 17, 2010

குட்டி,சட்டி,பன்னிக்குட்டி

நான் எல்லாம் சின்ன பையனா இருக்கறப்ப சினிமாவுக்குப் போவது என்பது ரொம்ப கஷ்டமான விஷயம். ரொம்பக் கண்டிப்பான வீடு என்பதால், அனுப்ப மாட்டார்கள். எங்க இரண்டாவது அக்கா திருமணம் ஆகாதவரை, நான் எஸ்கார்டு டியூட்டிக்காக சினிமாவிற்குப் போவேன். நான் படத்துல யாராது அழுதா நானும் அழுகும் ஜாதி(ரொம்ப இளகிய மனசு,கொயந்த பையனுங்க). ஆனா அக்கா ரொம்ப செலக்ட்டிவா குடும்பக் கதைகளுக்குத்தான் போவார். குறிப்பா சிவாஜி மற்றும் ஜெமினி படங்களுக்கு, அங்கன போனா,சாவித்திரி, கண்ணாம்பா,வரலட்சுமி,ஊர்வசி சாரதா மாதிரி நடிக்கறவங்க எல்லாம் என்னியக் கொயந்தன்னு கூடப் பார்க்காமல்,நம்மளை அழ வச்சுருவாங்க. பொதுவாக சிரிப்புப் படங்களை விரும்பிப் பார்ப்பேன். அக்கா கல்யாணத்திற்க்கு அப்புறம் படம் பார்ப்பது என்பது ரொம்பக் குறைவு. பின்னர் கொஞ்சம் வயது வந்தவுடன், நான் தலைவர் ரஜினிகாந்தின் படங்களை விரும்பிப் பார்ப்பது உண்டு, எனக்கு நேர் மூத்த அண்ணா கமல் இரசிகர் என்பதால் அவருடன் கமல் படங்களுக்குப் போவேன்.இவங்க படத்தில் கூட ஹீரோவின் தங்கச்சிய கற்ப்பழிக்கும் போது அல்லது அவங்க அப்பா,அம்மாவைக் கொலை செய்யும் போது,அழுகாய்ச்சி சீன் வந்தா, நான் வெளிய அல்லது பாத்ரூமுக்கு ஓடிப் போயிடுவேன். கச்சியில வில்லனை மாத்தி,மாத்திக் குத்தும் போது,அடிடா,குத்துடான்னு படம் பார்த்து, சந்தோசமா வீட்டுக்கு வருவேம்.


நானும் என் நாலாவது அண்ணாவும்தான் படத்திற்குப் போவேம், கமல் படம் வந்தால் அவனும், ரஜினி படம் வந்தால் நானும், வீட்டில் கேட்டு அனுமதி வாங்க வேண்டும். இந்த அனுமதி வாங்குவது இருக்கே இது ஒரு பெரிய வேலை. படம் வந்தவுடன் போஸ்டரைப் பார்த்துவிட்டு, முதலில் அம்மாவை நச்சரிக்க வேண்டும், பின்னர் அம்மா சரி நான் சொல்கின்றேன் என்று சொல்லிவிட்டு, மெதுவாக எங்க பெரிய அண்ணா கிட்ட சொல்வார்கள். அவர் முதலில் ஏன் படம் பார்க்கவில்லை என்றால் இவனுகளுக்குத் தூக்கம் வராதோ? என்று கேப்பார். நாங்க மொசப் பிடிக்கத் தெரியாத மாதிரி மூஞ்சியை அப்பாவியா வைச்சுக்குவேம். பின்னர் என்ன படம்? என்று விசாரிப்பார்.அந்தப் படத்தைப் பத்தி அவருக்கு நல்ல அபிப்பிராயம் இருந்தால் உடனே அனுப்பி விடுவார். தெரியவில்லை என்றால் எல்லாம் இரண்டு நாள் கழிச்சுப் பார்க்கலாம் என்பார். விசாரித்து விட்டு அனுப்புவார். நல்ல படம் இல்லை என்றால் சத்தமில்லாமல் விட்டு விடுவார்.
நாங்களும் இரண்டாவது தடவைக் கேட்க மாட்டேம்.ஆனா அவரே, நாங்க கேக்காமக் கூட, சார்லி சாப்ளின் படம்,லாரல்-ஹார்டி படம், ஜாக்கிசான் படம், காட் மஸ்ட் பி கிரேசி போன்ற படங்களுக்கு அனுப்புவார். நல்ல படம் என்றால் அவரே பணம் கொடுத்து அனுப்புவார். எனக்கு ஒன்னேகால் ரூபாய்,எங்க அண்ணாவிற்க்கு ஒன்னேகால் ரூபாயும், மொத்தம் இரண்டரை ரூபாய் கிடைக்கும்.











நான் மொதல்ல படத்துக்குப் போறப்ப, பெஞ்சி டிக்கெட்- 40 காசு,பேக்பெஞ்சி - 60காசு, சேர்- 1 ரூபாய்(நாற்காலி). எங்களுக்கு சேருக்குப் போக ஒரு ரூபாயும், இடைவேளையில் எதாது வாங்கித் திண்ண 25காசும் கொடுப்பார்கள். அப்ப எல்லாம் பாப்கார்ன் மற்றும் கோன் ஜஸ் 25 காசு, ஜவ்வு மிட்டாய்,மாங்காய்த்துண்டு,கடலை உருண்டை,கம்மர் கட் எல்லாம் 5காசு. நியுட்டரமுல் சாக்லேட் மட்டும் பத்துக் காசு. பாப்பின்ஸ் 20காசு விற்கும். நாங்க பேக் பெஞ்சுக்குப் போயிட்டு, டவுசர் பாக்கெட்டில் ஜவ்வு மிட்டாய்,மாங்காய்,கம்மர் கட் எல்லாம் 40 காசுக்கு வாங்கிக் கொள்வேம், மீதி 25 காசுக்கு இடைவேளையில் பாப்கார்ன் வாங்கிக் கொள்வேம். இது கதை. இனி பதிவுக்குப் போவேம். நான் ஒன்பதாம் வகுப்பில் படிக்கும் போது, எங்க ஊரில் சத்தியா கொட்டாயில ஒரு கமல் படம் போட்டியிருந்தாங்க, எங்க நாலாவது அண்ணா வீட்டில் அனுமதியும், பைசாவும் வாங்கினான்.நாங்க படத்துக்குப் போய்க்கிட்டு இருக்கும் போது அறிஞர்.அண்ணாவின் சிலைக்கிட்ட என் நண்பன் முரளி வந்தான், அவன் சில்க்ஸ்மிதா நடித்த போலிஸ்,போலிஸ்,போலிஸ்ன்னு ஒரு படம் போவதாகவும், எங்களையும் கூப்பிட்டான். அது கொஞ்சம் கிளாமர்,கில்மா படாமாமே. எங்களுக்கு என்ன தெரியும்.நாங்க எந்தக் காலத்தில் படத்தைப் பத்தி எல்லாம் கேள்விப் பட்டேம். நண்பனுடன் போகும் ஆசையில், நான் கேட்க,எனக்கு நேர் மூத்த அண்ணனும் மாடு மாதிரி தலை ஆட்டிவிட்டான். படமும் ஓடுச்சு, நாந்தான் கொயந்தை ஆச்சே, எனக்கு என்ன தெரியும் வழக்கம் போல ஜவ்வு மிட்டாயை வாயில் அதக்கிக் கொண்டு படம் பார்த்தேன்.





















இந்த விஷயம், எங்க உள்ளூரு சி.ஜ.ஏ ஆளுக மூலமா எங்க பெரிய அண்ணன் காதுக்குப் போச்சு. எங்க பெரிய அண்ணா, நாலாவது அண்ணாவிடம் எந்தப் படத்துக்குடா போனிங்க என்றார். கேள்வி கொஞ்சாம் காரமா இருந்ததால, அவன் உண்மையைச் சொன்னா, அடிவிழுகும் என்று கமல் படத்துக்குத்தான்னா என்றான். பளீர் என்று கன்னம் காலியாச்சு. பின்னர் திருப்பி என்னிடம் கேட்டார், நான் தான் ரொம்ப விவரமான ஆள் இல்லியா? அதுனால படுக்குன்னு போலிஸ்,போலிஸ்,போலிஸ்ன்னு சத்தமா சொன்னேன். ஒவ்வெரு போலிசுக்கும், ஒரு அறை விழுந்தது. நான் எதே தப்பா சொல்லிவிட்டேன்னு,கன்னத்தைப் பிடித்துக் கொண்டு நின்று விட்டேன். ஏண்டா ஒரு படத்துக்குப் போறேம்ன்னு பொய் சொல்லி,ஏண்டா மாத்திப் போனிங்க ? டாமர்,டிமீல் என்று பூஜை நடந்தது. நான் அழுது கொண்டே, நண்பன் கூப்பிட்ட விஷயத்தைச் சொல்ல, எங்க பெரிய அண்ணா எங்க அறியாமையைப் புரிந்து கொண்டாலும், ஏண்டா அவன் தான் சின்னப் பையன், உனக்கு எங்கடா புத்தி போச்சுன்னு, என் அண்ணாவிற்கு இன்னமும் நாலு அறை கிடைத்தது. பின்னர் அவர் இனிமே நான் சொல்ற படத்துக்குதான் போகனும் என்று சொல்லிவிட்டு வெளியில் போயிட்டார். இதுபோல சந்தர்பங்களில் எல்லாம் நாங்க சின்சியரா புஸ்த்தகத்தை வைத்துக் கொண்டு படிப்பது போல ஆக்ட் கொடுப்போம். அது மாதிரிப் பண்ணும் போது என் அண்ணன் கேட்டான், " டேய் நாம எதாது தப்பான படத்துக்குப் போயிட்டமோ? என்று. நான் சுறு சுறுப்பாய் பதில் சொன்னேன், " இல்லைடா நாம படம் மாத்திப் போயிட்டேமுன்னு அடிச்சாருன்னேன். அவனும் உன்னாலதாண்டா அடிவாங்கினேன், போடா குட்டி சட்டி பன்னிக்குட்டி என்றான்.எங்க வீட்டில் நான் கடைக்குட்டி என்பதால்,என் அம்மா அழைக்கும் பெயர் சுதாக்குட்டி, இதை இவன் கிண்டல் செய்யும் பெயர்தான் "குட்டி,சட்டி,பன்னிக்குட்டி"(அப்பாடா தலைப்பு வந்துருச்சு). நானும் போடாக், கழுதை (அவன் பெயர்) என்று சொல்லிப் படிக்க ஆரம்பித்தேன். ஒரு மணி நேரத்தில் வழக்கம் போல, எங்களை அடித்த வருத்ததில், வடை போண்டா எல்லாம் பெரிய அண்ணா வாங்கி வந்தார். நாங்களும் மகிழ்வுடன் சாப்பிட்டேம்.


இது நடந்து ஒரு வருடம் ஆகியிருக்கும், நான் பத்தாங்கிளாசு பரிச்சை எழுதிவிட்டு,விடுமுறையில் இருந்தேன். அப்ப என் இரண்டாவது அக்காவின் மச்சினனும்,எனது உயிர் நண்பனான குட்டி எங்கின்ற கோவிந்தராஜன் ஊரில் இருந்து வந்தான். அவனைப் படத்துக்கு அழைத்துப் போகுமாறு அக்கா சொன்னாங்க. மெல்லத் திறந்தது கதவு படத்துக்கு சத்தியா தியேட்டரில் போட்டுருந்தார்கள். நான் என் அம்மா மூலமாக, பெரிய அண்ணாவிடம் கேக்க, அவர் என்னிடம் விசாரித்து விட்டுப் பின்னர்க் குட்டியிடம் கூறினார். "குட்டி அவன் சிலுக்கு இரசிகன், பார்த்து உன்னை தியேட்டர் மாத்திக் கூட்டிப் போயிடப் போறான்" என்றார் சிரித்துக் கொண்டு. அவனும் "இல்லை அண்ணா நான் பார்த்துக் கொள்கின்றேன்" என்றான் விவரம் புரியாமல். அப்ப அதே வசந்தா தியேட்டரில் ஓடிய படம்,சில்க்,சில்க்,சில்க். ஆனா நாங்க இந்த முறை ஒழுங்கா, சத்தியா தியேட்டரில் படம் பார்த்து வந்தோம். பின்னாளில் இந்த நிகழ்வின் மூலமாத்தான் எனக்கு சில்க்கை தெரிந்தது. பின்னர், பில்லா,இரங்கா,பாயும்புலி,சகலகலாவல்லவன் என ஏவிஎம், முத்துராமன்,தேவர் பிலிம்ஸ் மற்றும் பாலாஜிடைரக்சனில் வந்த இரஜினி,கமல் படம் எல்லாம் சிலுக்கின் குத்துப்பாட்டு இருக்கும். பின்னர் நான் சிலுக்கின் கோழி கூவுது மற்றும் ஜீவா படம் பார்த்த போது, தீவீர இரசிகன் ஆயிட்டேன். போஸ்டரில் சிலுக்கின் ஸ்டில் இருந்தா ஓடிவிடுவேன். ஆனாலும் அது கமல்,இரஜினி,கார்த்திக் படமா இருந்தால்தான் வீட்டில் கேட்க முடியும். (அமரன்னில் போட்டாங்க பாரு ஒரு ஆட்டம்)

இதுதாங்க நான் சில்க் இரசிகன் ஆன கதை. பின்னாளில் கல்லூரி வந்த பிறகு, இந்த எண்ணம் குறைந்து விட்டது. பின்னர் படம் பார்ப்பதும் எனக்குப் பிடிக்கவில்லை. தலைவர் படத்தை மட்டும் மிஸ் பண்ணாமல் பார்ப்பேன். நண்பர்கள் கட்டாயப் படுத்தினால் பார்ப்பேன். என்னைப் பொறுத்தவரை தியேட்டருக்குச் செல்வது என்பது இரண்டு மணி நேர அரஸ்ட் மாதிரிதான். சிலுக்கு இறந்த செய்தி கேட்டு மிக வருத்தப் பட்டேன். குழந்தை, குட்டிகளுடன் நல்ல திருமண வாழ்க்கை வாழப் பிரியப் பட்ட, அந்த நல்ல பெண்ணின் வாழ்க்கை ஏமாற்றமாக முடிந்தது. அதன் விளைவாய்த் தூக்கில் தொங்கிவிட்டார். என்ன செய்வது. பிறரை மகிழ்விக்கும் எவரையும் அண்டவன் மகிழ்வாய் வைத்தது இல்லை. ஒரு சிலர் மற்றவர்களுக்காவும்,தன்னைச் சுற்றி இருப்பவர்களுக்காகவும் வாழ்க்கையைத் தியாகம் செய்ய வேண்டியுள்ளது. நன்றி.

Tuesday, March 16, 2010

கடவுளும் கோவில்களும் ஒரு ஆராய்ச்சி - 10

நாம் சென்ற பதிவுகளில் கடவுள் என்பது ஒரு அளப்பதற்கரிய ஆற்றலை உடைய சக்திமூலம் எனவும், இந்த சக்திமூலம் நம் உடலிலும் உள்ளது என்பதையும் பார்த்தோம். இவ்வாறாக நமது உடலும்,பிரபஞ்ச ஆற்றலும் ஒத்த இயல்புடையதும்,ஒரே சக்தி மூலங்களைக் கொண்டது என்பதும் நிருபணம் ஆகின்றது. ஒவ்வெரு சக்திக்கும், ஒரு ஆக்க வினையும், எதிர் வினையும் உண்டு.இதில் ஆக்க வினை சக்தி தனது கட்டமைப்பை மீறும் போது,அல்லது தனது இயல்பில் இருந்து திரியும் போது எதிர் வினையாக மாறுகின்றது. உதரானமாக கோள்களின் ஈர்ப்பு சக்திதான் அவை நிலை பெற உதவுகின்றது, அதே சமயம் இந்த ஈர்ப்பு சக்திதான் கோள்களின் மோதலுக்கும் காரணமாய் அமைகின்றது. இப்படி வெளிச்சமும்,நிழலும் போல எந்தக் காரியங்களிலும், நல்லதும்,கெட்டதும் கலர்ந்து இருக்கின்றன. இதில் நமது பகுப்பாய்வுதான் முக்கிய பங்கு வகிக்கின்றன. சக்தி மூலங்களை நாம் முறையாக கையாளும் போது, அவை மிக்க பயனைத் தருகின்றன. அதே சமயம் தவறான பழக்க வழக்கங்களினால் நாம் நமது சக்தியை விரயம் செய்யும் போது, அது சக்திக் குறைபாட்டை ஏற்ப்படுத்தி உடல் நலனைக் கெடுக்கின்றது அல்லது நோயை உருவாக்குகின்றது. இந்த சக்தி கட்டுப்பாடு அற்றுப் பெருகும் போது கூட நோய்கள் உருவாகின்றது. அபரிதமாக பெருகும் சக்தி கூட திசுக்களின் வளர்ச்சியை அதிகப் படுத்தி கான்சரைக் கொடுக்கும். ஆக ஆற்றல் அல்லது சக்தி குறைந்தாலும், மிகையானலும் நமக்குக் கொடுதலே. ஆக சக்தி மூலங்களைச் சமன் நிலையில் வைத்து இருப்பது மிகவும் முக்கியம் ஆகும்.

இப்படி சம நிலையில் வைத்து இருப்பது எப்படி? கட்டுப்படுத்துவது எப்படி? குறைந்தால் அதிகப்படுத்துவதும், அதிகம் ஆனால் கட்டுப்படுத்துவதும் எப்படி என்று அறிந்தால் மட்டும்தான் நம்மால் முறையான வாழ்வை நடத்த முடியும். அந்தக் கால முனிவர்கள் இடையுறாது தவம் செய்தாலும்,ஆன்மீக வாழ்வை வாழ்ந்தாலும், யோகேப்புகள்,அப்போஸ்தலர்கள், இமாம்கள்,நபிகள்,ஜென் துறவிகள்,சனகாதி முனிவர்கள்,கட்டில் தவம் செய்த முனி ரிசிகள்,சித்தர்கள் என அனைவரும் எப்போதும் இறை நிலையில் இருந்து தங்களது சக்தி மூலங்களை அதிகப்படுத்தினாலும்,இவர்கள் கேன்சர் போன்ற நோயால் பாதிக்கப் படவில்லை, அதே சமயம் இவர்கள்
தங்களது சக்திமூலங்களைக் கொண்டு மக்களை நல் வழிப்படுத்தினார்கள். அனால் நமது சமகாலத்தில் வாழ்ந்த ஞானிகள் பலரும் கான்சர் நோயால் இறந்து போனார்கள். உதாரனமாக இரமணர்,சீரடி சாய்பாபா,விவேகானந்தர்,இராமகிருஷ்ன பரம்மஹம்சர், யோகி,இராம் சுரத்குமார் போன்றேர், இதுபோல சிலரும் நோய்வாய்ப் பட்டுதான் இறந்தார்கள். இதுஏன்? சிந்தியுங்கள்.இது பற்றிய எனது சிந்தனைகளை நான் பின்னால் தெரிவிக்கின்றேன்.இப்போது நாம் சக்தி மூலங்களை எப்படி பெறுவது,எப்படி அதிகரிப்பது மற்றும் அதன் காரணிகளைப் பற்றிப் பார்ப்போம்.

இயற்கையாக சக்தி மூலம் நமது உடலைப் பொறுத்தவரை இரண்டு வகையாக,நமது புரிந்துணர்தலுக்காக பிரிக்கலாம்.1 ஆன்ம சக்தி அல்லது உயிர்ச்சக்தி(பிராண சக்தி).2. உடல் இயக்க சக்தி. இங்கு எல்லா சக்தியும் ஒன்னுதான். ஆனால் ஒரு விளக்கத்துக்காக இரண்டாக பிரிக்கலாம். நமது ஆன்ம சக்தி தாய் தந்தையரிடம் இருந்து வந்தது. அது தாயின் கர்ப்பத்தில் இருந்து உருவாகிப் பின்னர் அவரின் சக்தி மூலத்தை ஆதராமாகக் கொண்டு வளர்ந்து, பின்னர் ஜனனத்தின் மூலம் தனி சக்தி ஆகின்றது. பின்னர் உணவு, நீர் போன்றவற்றால் தனது சக்தியினை அதிகம் செய்து கொள்கின்றது. இது இயக்கச் சக்தி மூலத்தினைக் குறிக்கும். இந்த இயக்கச் சக்தி மூலம் உடலை மேம்படுத்தி, பிராண சக்தியினை, நமது உடலில் நிலை கொள்ளச் செய்கின்றது. இந்த இயக்க சக்தி நமது செயல்கள் என்னும் கர்த்தாவின் மூலம் எரிக்கப் படுகின்றது. இப்படி சக்தி விரயம் ஆகும் போது, சரியான உணவின் மூலம் சக்தி மீண்டும் பெறப்படுகின்றது.இப்படி மீண்டும் மீண்டும் இயக்கம் நடைபெறும் போது உடல் தளர்வடைகின்றது. இதை நாம் வயது அல்லது மூப்பு என்று சொல்கின்றேம். இப்படி தளர்வுறுதல் முடியும் போது ஆன்ம சக்தி உடலை விட்டுப் பிரிகின்றது.இதை நாம் மரணம் என்று சொல்கின்றேம். இப்படி சக்திமூலங்களின் சுழற்ச்சிதான் வாழ்க்கை என்று சொல்லப்படுகின்றது. தொடரும் நன்றி.

டிஸ்கி : நான் இப்படி கடவுள்,ஆன்மீகம் என்பது போன்ற பதிவுகளை எழுதுவதால் என்னை யாரும் உயர்வாக நினைக்க வேண்டாம்.
நான் சராசரி உணர்வுகளுக்கு உட்ப்பட்ட ஒரு சாதாரனமானவன் அல்லது அவனையும் வீட கீழே என்பதை உணர்த்த ஒரு வாய்ப்பாகத்தான் எனது எண்ணங்களை அல்லது ஆசைகளை இத்தொடரை நிறுத்தி பதின்மம்,தொப்பையானந்தா மற்றும் பிடித்தவர்கள் பற்றிய பதிவுகளைப் போட்டேன்.

குரங்கு கிளைக்குக் கிளை தாவுற மாதிரி நானும் பதிவுக்குப் பதிவு மாத்தி மாத்திப் போடுகின்றேன். அதை கையில் ஒரு குச்சி வைச்சுக் கட்டுப்படுத்துவது போல, உங்களின் பின்னூட்டத்தின் மூலம் தெரியப்படுத்துங்கள். தங்களின் மேலான ஆதரவுக்கு நன்றி.

வாத்தியார் பாசையில் சொன்னா " ஜயம் எ காமன்மென் " நன்றி.

Monday, March 15, 2010

எனக்குப் புச்ச பெண்கள்

என்னங்க நம்மளை டிபன் சாப்புடுறதுக்கு ஒபாமா கூப்புட்டாக, புடின் கூப்புட்டாக, சார்க்கோஸி கூப்புட்டாக, ஆனா நான் ரொம்ப பிஸிங்களா,அதுனால நம்மாள போக முடியல்லைங்க. ஆனாலும் இந்த திவ்யா பொண்ணும், மலிக்காவும் நம்மள தொடர் எழுதக் கூப்ட்டாக, தங்கைகள் கேட்டு எழுதாம இருந்தா நல்லா இருக்காது. அதுவும் இல்லாம மலிக்கா வேற ஸ்பெசல் ஆபர்ன்னு(லஞ்சம்) தொடர் எழுதுனா, அரபு பிரியானி தரன்னு சொன்னாங்க. அதுனால எனக்குப் பிடித்த பெண்கள் 10 பேரை சொல்றங்க. பெண்ணுன்னா பேயிக்கும் புடிக்கும்மாம், நமக்குப் புடிக்காம இருக்குமுங்களா?. நிறையப் பெண்ணுகளை நமக்குப் புடிக்குங்க, ஆனா அந்தப் பெண்களுக்குத்தான் நம்மளைப் புடிக்காதுங்க. என்ன பண்ண?நம்ம மூஞ்சி அப்படி.. யாராவது காலை 8.30 ல் இருந்து மாலை 5.30 வரை அலுவலகத்தில் ஒரு ஆணி கூடப் புடுங்காம இருப்பது எப்படின்னு பதிவு போடச் சொன்னா, நான் ஒரு முப்பது பதிவு போடுவேன். ஆனா சொல்ல மாட்டேங்கிறாங்க. என்ன பண்ண, நானும் அபிஸில ஆணி புடுங்கறேன், எதாது ஆணி காட்டுங்கையான்னு கெஞ்சறேன். ஆனா ஆணி புடுங்கினா கையை உடைப்போம். நீ வேடிக்கை பாருப் போதும் என்று சொல்லி, சம்பளம் வேற தராங்கையா. என்னத்தப் பண்ண. திங்க கிழமை காலங்கார்த்தால ஆபிஸில பதிவு போடுற வெட்டி ஆப்பிஸர் நானாத்தான் இருக்கும். ஒருவேளை பதிவு போட சம்பளம் தராங்க போலும். சரி பதிவுக்குப் போவேம்.

இரங்க நாயகி டீச்சர் : என் ஆரம்பப் பள்ளியின் ஒன்னாம் வகுப்பு டீச்சர். எப்போதும் சிரிக்கும் மாகாலட்சுமி படம் இவங்களைப் பார்த்துதான் போட்டுருப்பாங்க போல. சிரித்த முகம். எனக்கு நினைவு தெரிந்த நாள் வரை, கோபப்படும் முகத்தை நான் பார்த்தது இல்லை. தகர சிலேட்டு, மற்றும் கல் சிலேட்டில் மாவுக்குச்சிப் பல்பத்தில் அ.ஆ.இ.ஈ ன்னு கைபிடித்துக் கற்றுக் கொடுத்தவர். அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்ன்னு, முன்னரே அறிவித்த கடவுள் அவர். (படம் இல்லைங்க, இவுங்க எனக்கு தமிழ் நல்லாத்தான் சொல்லிக் கொடுத்தாங்க, நம்ம மண்டையில் தான் ஏறவில்லை.அதுனால நான் பண்ணும் தப்புகளுக்கு இவங்களைத் திட்டாதிங்க)















அன்னை தெரஸா : நான் இவங்களைப் பத்தி உங்களுக்கு புச்சா ஒன்னும் சொல்லவேண்டியதில்லை. உங்களுக்கே தெரியும். நம்ம ஊட்டுப் பல்லி,கரப்பான்பூச்சிக்கெல்லாம், அருவெறுப்பும், பயமும் கொண்டு ஓடும் பெண்களுக்கு மத்தியில் தொழு நோயாளிகள், பிச்சைக்காரர்கள். அனாதைக் குழந்தைகளை அரவனைத்துச் சென்ற கடவுள் இவர்.



















டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி: பொட்டுக் கட்டும் தேவதாசிக்குலத்தில் பிறந்து தன் சுயமுயற்சியால் டாக்டர் பட்டமும் பெற்று, தமிழகத்தின் முதல் பெண் அமைச்சாராக ஆகியவர். தேவதாசி முறை ஒழிப்பு, பெண்கள் பிரசவம், கலப்புத் திருமணம்,விதவைகள் மணம் என்று புரட்சி செய்தவர் இவர்.












வாலேண்டினா தெரஸ்கோவா : இரஷ்யாவில் சாதாரனக் குடும்பத்தில் பிறந்து, முதன் முதலில் விண்வெளிக்கு சென்ற சாதனையாளர்.பூமியின் சுற்றுவட்டப் பாதையில் 1963 ல் ஜீன் 6ஆம் திகதி பறந்தவர். (நான் பொறக்கவேயில்லிங்க).
















டாங்கோ திபு,பச்சோந்திரி பால் : இவர்கள் இருவரும் எவரெஸ்ட் மலைச்சிகரத்தில் முதன் முதலில் ஏறியவர்கள். கடும் குளிர்,உறைபனி எதிலும் பெண்கள் சளைத்தவர்கள் அல்ல என நிருபித்தவர்கள். பச்சோந்திரி பால் ஏறியவர். டாங்கோ கைடுங்க.
(ஹில்லாரி,டென்சிங்க் மாதிரி).

















டாக்டர் கீதாஹரிப்பிரியா: நிறைய பெண்களின் வயிற்றில் பால் மட்டும் அல்ல, குழந்தைகளையும் வார்த்தவர். சிறந்த கைனக்காலிஸ்ட். இவரிடம் மருத்துவம் பார்த்த கனடா,யு.எஸ்.ஏ, பிரான்ஸ் மற்றும் இலங்கைத் தமிழ் பெண்கள் அதிகம். மலடி என்னும் கொடுமையான சொல்லில் (சொல்வறங்க வாயில் ஈயத்தைக் காச்சி ஊத்தனும்)இருந்து எண்ணற்றவர்களைக் காப்பாத்தியவர். எங்க அண்ணா,அண்ணிக்குப் பதினெட்டு வருடங்களாக குழந்தை இல்லாமல் இருந்த குறையப் போக்கியவர். சிரித்த முகமும், கொஞ்சம் கண்டிப்பும் காட்டுவார். இவர் மருத்துவமனையில் பணி புரியும் இன்னோரு டாக்டர் சுதா அவர்கள் எங்கள் மன்னி சுதாவைக் கவனித்துக் கொண்டார். அங்கு அனைவருமே இன்முகத்துடனும், சினேக மனப்பான்மையுடனும் பழகுவார்கள். சென்னை சேத்துப்பட்டில் இருக்கின்றது மருத்துவமனை.



















பி.சுசிலா : எனக்கு தெரிந்து நிறைய நாள் தூக்கத்தில் இருந்து என்னை எழுப்பியவர் இவர்தான். அதிகாலை ஜந்து மணிக்கெல்லாம் எங்க வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் சர்ச்சில், "அரோக்கிய மாதாவைப் பாருங்களேன்னு" பாட ஆரம்பிச்சுருவார். இவர் கிராமப் போன் ரெகார்டுதான் எங்களுக்கு அலாரம் டைபீஸ்ங்க. "ஆலய மணியின் ஓசையை நான் கேட்டேன்னு" பாட ஆரம்பிச்சாருன்னா எங்களுக்குத் தூக்கம் போயிடும். குயிலிசைக்குச் சொந்தக்காரர், "அன்பே வா,அருகே வான்னு" சொல்லி, "நினைக்கத் தெரிந்த மனமேன்னு" அழுக வைச்சாருங்க.
















டாக்டர் ஜெ.ஜெயலலிதா : நம் தமிழகத்தின் சிறந்த பெண் முதல் அமைச்சர். ரொம்ப தைரியமான பெண்மணி. ஆண்கள் நிறைந்த சட்டசபையில் கேடு கெட்டதனமாக, பாவாடை நாடாவை அவித்துப் பார் என்று ஒரு ஜம்பது வயது பெண்ணிடம் சொன்ன கயவானிகள் அவையில் புகுந்து புறப்பட்டவர். இவர் ஜெயித்த நாளில் நான் அடைந்த சந்தோசத்திற்கு அளவே இல்லை. ஆனா ஒரு ஆட்சி நடத்துனாங்க பாருங்க. அதைப் போல கேவலம் எதுவும் இல்லை சொல்லும் அளவுக்கு இருந்துவிட்டது. இனிமே எந்த அரசியல்வாதியையும் நம்பாதேன்னு சொல்லாம சொல்லிக் கொடுத்தவர். நானே பாதிக்கப் பட்டேன்.(ஆனா அதுவும் நல்லதுக்குத்தான், இல்லைன்னா நான் பதிவர் ஆகியிருக்க மாட்டேன்). சர்ச் பார்க் பெண்ணு,நிறைய அறிவாளின்னு,சிறந்த நிர்வாகத் திறமை கொண்டவர்னு ரொம்ப எதிர்பார்த்தேன்,அத்தனையும் கவித்துவிட்டார். என்ன இருந்தாலும் மகத்தில் பிறந்த இந்த பெண் சிங்கத்தை எனக்கு ரொம்ப பிடிக்கும். எதிர்காலத்தில் ஆவது அம்மா ஒரு நல்ல ஆட்சி கொடுப்பாங்கன்னு நம்புகின்றேன்.


















சமந்தா பாக்ஸ் : என்னமே தெரியல்லைங்க, இவங்களை எனக்கு ரொம்பாஆஆஅ புடிக்குமுங்க. நானு காலேஜ் படிக்கும் போது இருந்து இந்த அம்மினியை ரொம்ப புடிக்குமுங்க. நான் படிக்கறப்ப அதிசயமா ஒருத்தன் டொபோனியர் புஸ்த்தகம் கொண்டு வந்தான். அப்பத்தான் பசங்க எல்லாம் மரத்தடியில் கூடி ஆர்வமா பார்த்துட்டு இருந்தாங்க. நானும் எட்டிப் பார்த்தேன். அம்புட்டுத்தானுங்க அய்யா அங்கனயே பிளாட்டுங்க. சே.சே என்ன கண்கள், என்ன உதடு, என்ன அட்ராட்டிவ் பேஸ்ன்னு நான் புகழ, என்னைய சுத்தி இருந்த நண்பர்கள் எல்லாம் என்னை உதைக்காத குறையா பார்த்தானுக. டேய் என்னத்தப் பார்க்கின்றேம், நீ என்னடா பார்க்கின்றாய்ன்னு ஓட்ட ஆரம்பிச்சுட்டாங்க. நாம் என்ன இரசிக்கின்றமே அதைதாங்க சொல்ல முடியும். இங்கன அந்தப் படத்தைப் போட்டா நம்ம தங்கைகள் எல்லாம் உதைக்க வந்து விடுவார்கள் என்பதால் இந்தப் படத்தப் போட்டேங்க., எனக்குப் பிடித்த படங்களில் இதுவும் ஒன்னு. அப்பா எம்மாம் பெரிய........ பாடகின்னு சொல்ல வந்தேங்க.



















சில்க் ஸ்மிதா : நான் ஸ்மிதா இரசிகன். எப்படி இரசிகன் ஆனேன்னு தனியா ஒரு சுவையான தனிப்பதிவு ஒன்னு போடுகின்றேன்.
கவர்ச்சியான முகம், பவர்புல் கண்கள், அழகான பெண். என்ன வாழ்க்கைதான் சரியாக அமையவில்லை. இவங்க சாப்பிட்ட ஆப்பிளை ஏலத்தில் எடுத்தவர்கள் ஏராளம். ஒல்லிக்குச்சி உடம்புக்காரி,ஒய்யார டான்சுக்காரி, நல்ல மனசுக்காரி, ரொம்பத் தங்கமான, இரக்க மனதுடையவர். நல்லவர். என்னமோ தெரியல்லை இவரைப் பார்க்கும் போது எல்லாம் நம்ம மனசு ஜிங்குச்சாம் ஜிங்குச்சாம் போடுவது உண்டு(இப்ப இல்லை).கண்களில் காந்தமும் வசியமும் வைச்சுருப்பாங்களோ. நல்ல கண்கள்.கூடிய சீக்கிரம் ஒருகாலத்தில் நம்ம கனவுக்கன்னி சில்க்ஸ்மிதாவுக்கு ஒரு தனிப்பதிவு போடுவேனுங்க.

மொத்தத்துல கண்கள் அழகாய் இருக்கும் பெண்கள் அனைவரையும் நமக்கு ரொம்பப் பிடிக்கும்.

சரிங்க,ரொம்ப சொல்லிட்டேன்(ஜொள்ளிட்டேன்). என்ன திவ்யா இப்ப திருப்தியா?. மல்லிக்காவுக்கும் சந்தேசமுன்னு நினைக்கின்றேன். போன பதின்மம் தொடருல கோத்து விட்ட ஆளுக கூட ஸ்ரீராம் அப்புறம் தேனம்மையை இத்தொடரை எழுதுமாறு கேட்டுக் கொ(ல்)ள்கின்றேன். அப்புறம் பிரியானி ஆறிப்போயிடும்ன்னு மலிக்கா கோவிச்சுக்குவாங்க. வரட்டுங்களா. நன்றி.

Friday, March 12, 2010

ஆரஞ்சுப் பழத்தோல் வத்தக்குழம்பும், பச்சடியும்

வித்தியாசமான சமையல் பதிவுகளைப் போட்டு நிறைய நாள் ஆகிவிட்டது. ஆதலால் இன்று ஒரு வித்தியாசமான பதிவு போடலாம் என்று முடிவு செய்தேன். ஆனா காலை அலுவலகம் வந்து இறங்கும் போது, கார் கதவில் இடது கை விரல்கள் மாட்டிக் கொண்டு, அட்காட்டி விரலும், நடுவிரலும் வீங்கி விட்டது. இதுக்கு எல்லாம் அசந்தா நம்ம எப்பிடி பதிவர் ஆகின்றதுன்னு சொல்லி, வலியுடன் சுருக்கமாகப் பதிவினைப் போடுகின்றேன். இது ஆராஞ்சுப் பழத்தோலில் வத்தக்குழம்பு செய்வது குறித்த பதிவு. எல்லாம் தோல் இருக்க சுளை முழுங்கின்னு சொல்வாங்க, நாமதான் வித்தியாசமான ஆள் ஆச்சே, தோலையும் சேர்த்து முழுங்குவேம். வாங்க.

ஆரஞ்சுப் பழத்தோல் வத்தக்குழம்பு :-









தேவையான பொருட்கள் :

1.பிரஷ்னான மூன்று ஆரஞ்சுப் பழத்தோல்.
2.புளி ஒரு உருண்டை.
3.கடலைப்பருப்பு - ஒரு கரண்டி.
4.வெள்ளுத்தம் பருப்பு - ஒரு கரண்டி.
5. கொத்தமல்லி (தனியா)- ஒரு பிடி
6.தோங்காய்த் துருவல் - ஒரு பிடி
7.மஞ்சள் பொடி - ஒரு ஸ்பூன்.
8.பெருங்காயத்தூள் - ஒரு ஸ்பூன்.
9.நெய் - மூன்று கரண்டி.
10. வெல்லம் அல்லது சக்கரை.
11. தாளிக்கும் பொருட்கள்.
12.கறிவேப்பிலை கொஞ்சம்.
13.உப்பு தேவையான அளவு.
14. மிளகாய்ப் பொடி - காரம் தேவையான அளவு அல்லது மூன்று ஸ்பூன்.

செய்முறை :

முதலில் கொதிக்கும் வெந்னீரில் புளியைப் போட்டு, அடுப்பை அனைத்து ஆற விடுங்கள். இது ஆறுவதுக்குள். ஆரஞ்சு பழத்தை உரித்து சுளைகளை எடுத்து ஜீஸ் போட்டு, எனக்குக் கொடுத்து விட்டுப்(இது ரொம்ப முக்கியமான கண்டிசன்), பின்னர் தோலைச் சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுங்கள். ஒரு வாணலியில் மூன்று கரண்டி (சிறு) நெய்யை விட்டு, அதில் இந்த பழத்தோல் துண்டுகளைக் கொஞ்சம் வேகும் வண்ணம் வதக்குங்கள். வதக்கிய பின்னர் ஒரு தட்டில் கொட்டி விட்டு. வாணலில் எண்ணெய் விட்டுக் கடலைப் பருப்பு,கொத்தமல்லி(தனியா),வெள்ளுத்தம் பருப்பு ஆகியவற்றை வறுத்து ஆற வைக்கவும், இது ஆறுவதுக்குள் புளியைக் கெட்டியாகக் கரைத்துக் கொள்ளுங்கள். வாணலியில் கொஞ்சம் எண்ணெய் விட்டுக், கடுகு, சிறிது கடலைப் பருப்பு,கறிவேப்பிலை, வெள்ளுத்தம் பருப்பு,ஆகியவற்றைப் போட்டுத் தாளிக்கவும்.இதில் புளித்தண்ணீர்க் கரசலை விட்டு,அதில் உப்பு மஞ்சள் பொடி, மிளகாய்ப் பொடி,பெருங்காயத்தூள் போட்டுக் கொதிக்க விடவும். புளி பச்சை வாசம் போகக் கொதித்தவுடன்,அதில் வதக்கிய ஆரஞ்சுப்பழத் தோல் துண்டுகளைப் போட்டுக் கொதிக்க விடவும். இது கொதிப்பதுக்குள் நாம் வறுத்தவற்றை அரைத்துக் கொள்ளலாம்.

ஆறிய பருப்புக்களுடன் தோங்காய்த்துருவல்களைப் போட்டுக் கெட்டியாகத் துவையல் அரைத்துக் கொள்ளவும். வாணலியில் கொதிக்கும் புளிக்கரசலில் உள்ள ஆரஞ்சுப் பழத்தோல் வெந்து விட்டதா என மசித்துப் பார்க்கவும். தோல் மசிந்தால், இதில் இந்தக் துவையலைப் போட்டு, நுரை கட்டும் வரை கொதிக்க விடவும். நுரை கட்டியவுடன் கொஞ்சம் வெல்லம் பொடித்துப் போட்டுக் கலக்கவும், வெல்லம் இல்லை என்றால் இரண்டு ஸ்பூன் சக்கரை சேர்க்கவும்.(வெல்லம் தான் பெஸ்ட்). நல்லா நுரை கட்டி வாசம் வந்தவுடன் இறக்கி வைக்கவும். தோலில் குழம்பா என யோசிக்க வேண்டாம் செய்து சாப்பிட்டுப் பாருங்கள் அதன் ருசி உங்களுக்குக் கண்டிப்பாக பிடிக்கும்.

ஆரஞ்ச்சுப் பழத்தோல் பச்சடி :-

ஒரு வாணலியில் எண்ணெய் விட்டுக் கடுகு,வெள்ளுத்தம் பருப்பு சிறிது போட்டுத் தாளித்து,அதில் மஞ்சள் தூள், பெருங்காயத்தூள்,இரண்டு பச்சை மிளகாய்த் துண்டுகள் மற்றும் உப்பு சிறிதளவு போட்டு, கறிவேப்பிலை சேர்த்து,அதில் நல்லா நெய்யில் வதக்கிய ஆரஞ்சுப் பழத்தோல் துண்டுகளைப் போட்டுப் பொடித்த வெல்லமும் சேர்த்து மசிய வேக விட வேண்டும். இனிப்பு,கசப்பு,காரம் நிறைந்த பச்சடி ரெடி. இதை சாதத்தில் பிசைந்தும் சாப்பிடலாம் அல்லது தொட்டுக் கொண்டும் சாப்பிடலாம்.தோசைக்கும் தொட்டுக் கொள்ளலாம். நன்றி.

Wednesday, March 10, 2010

ஸ்ரீலஸ்ரீ. தொப்பையானந்தாவின் " டவுசர் பாக்கெட்டைத் திற, சில்லறை வரட்டும்"


கடந்த ஒருவாரமா நித்தியானந்தா சீசன், இப்பத்தான் கொஞ்சம் ஓய்ந்துள்ளது. எல்லாரும் கும்மி எடுத்துட்டாங்க. நானும் நித்தி பதிவு போடுல்லைன்னா யாரும் நம்மளைப் பதிவர்ன்னு ஒத்துக்க மாட்டாங்க. நானும் என் பதிவில் இப்ப நித்தியானந்தான்னு சொல்லிட்டதால, ஒத்துக்கங்கப்பா நானும் பதிவர்தான், பதிவர்தான். என்ன ஒன்னு கொஞ்சம் தப்புத் தப்பா எழுதுற, தப்பான பதிவர். பெரிய மனசு பண்ணி, மன்னிச்சு விட்டுருங்க. என் ஆன்மீகத் தோடல்கள் தொடர்பாக, நான் புரவிபாளையம் கோடி சுவாமிகள்(104 வயது), வேதாத்திரி மகரிஷி, விறிசி சுவாமிகள், ஸ்ரீரங்க இராமானுஜ ஜீயர்(வானமாமலை),புவனேஸ்வரி சுவாமிகள்,எங்க வீட்டுக்கு வந்து வழக்கமா யாசகம் வாங்கும் ஒரு நொண்டிச்சாமியார், தெருவில் பார்த்த பிச்சைச் சாமியார்கள் போன்ற சில சுவாமியார்களைச் சந்தித்து ஆசி வாங்கியுள்ளேன். இரமணர் மகரிஷி, சேலம் கந்தாசிரமம்,சேஸாத்திரி ஸ்வாமிகள் ஆசிரமம்,சத்குரு ஜக்கி வாசுதேவ்,பாம்பாட்டி சித்தர், பன்றிமலை பாம்பன் சுவாமி போன்றேரின் ஆசிரமங்களுக்குச் சென்று உள்ளேன்.திருவண்ணாமலை,சபரி மலை,திருமூர்த்தி மலை,பழனி மலை,மருத மலை, பர்வதராஜ மலை, செஞ்ச்சேரி மலை,கொல்லிமலை,தீர்த்தா மலை,கல்வராயன் மலை போன்ற மலை எல்லாம் போயிருக்கேன். சரி இதை விடுங்க பதிவுக்கு வருவேம். இந்த பிரேமானந்தா, குஜேயேந்திரர், நித்தியானந்தா போன்றேர் எல்லாம் என்னை மாதிரியே சாமியார்கள் என்பதால் நான் அவர்களை சந்திக்க வில்லை. நான் அவர்களை விமர்சனமும் பண்ண முடியாது. ஏன்னா நான் முதலில் யோக்கியன் கிடையாது. என் முதுகின் அழுக்கையும்,அரிப்பையும் நான் சொறிந்து கொள்ள முடியாத போது, எப்படி அடுத்தவர் முதுகை சொறிவது என்ற எண்ணம்தான். ஆதலால் இந்தப் பதிவில் நான் இவர்களைப் பத்தி எழுதவர வில்லை. (சரி, சரி, பில்டப்பு போதும், மேட்டருக்கு வாடா மாப்பு)

நம்ம கவிதாயினி ஹேமு, வேற நம்மளைப் பித்தானந்தா ஸ்வாமிகள்ன்னு சொல்லிட்டாங்க. நானும் "ஹை இது கூட நல்லாயிருக்கேன்னு", அந்தப் பெயரை வைச்சு ஊரை ஏமாத்தலாம்ன்னு இருந்தேன். இந்த ஞானப்பித்தன் என்னடான்னா, ஊடால புகுந்து இந்தப் பெயருக்கு நான் காப்பி ரைட்ஸ், டீ ரைட்ஸ் எல்லாம் வாங்கிருக்கேன்னு, அமெரிக்காகாரன் மாதிரி கலாட்டா பண்ண ஆரம்பிச்சுட்டார். சரி நம்ம ஸ்ரீலஸ்ரீ.பித்தலாட்டானந்தான்னு பெயரு வைக்காலாமுன்னு யோசிச்சா, இந்த அப்பாவிப் பெண்ணுக சுசி,திவ்யாஹரி,சித்ரா,ஜலில்லா எல்லாம் நீங்க ரொம்ப நல்லவருன்னு சொல்லி இந்தப் பெயரை ஒத்துக்க மாட்டாங்க. என்னடா பண்றதுன்னு யோசிச்சப்பத்தான் நம்ம மூத்த பதிவர்,பதிவுல பிதாமகன்(ர்), பதிவுத்தாயின் தவப்புதல்வர், ஆயிரம் பதிவுகள் கண்ட அபூர்வ சிகாமணி, காலத்தில் களம் கண்ட வீரர், திரு. கோவி அண்ணா,அவர்கள் எனக்குத் தெப்பையானந்தான்னு(ஜோதிகா ஞாபகத்தில்) என்று நாமகரணம் சூட்டினார். ஆகா இதுகூட நல்லாயிருக்குன்னு சொல்லி, யாரும் தரல்லைன்னாலும், நமக்கு நாமே(நாமமே)என்ற கழகத் திட்டத்தின் படி, ஸ்ரீலஸ்ரீன்னு கூடச் சேர்த்துக்கிட்டேன். (என்ன பண்ண?, பில்டப்பு போட்டாத்தான் மதிப்பாங்க, நம்ம ஊரு ஞான சூனியங்கள்). ஆக இதுதாங்க ஸ்ரீலஸ்ரீ.தொப்பையானந்தாவின் வாழ்க்கை வரலாறு,பூகோளம் எல்லாம்.

அடுத்த கட்டமா நாலு மஞ்ச மாக்கானுகளை சிஷ்யனுகளா புடிக்கேனும்.அதுக்கு ஒரு செட்டப் பண்ணலாம்ன்னு தலையில் ஒரு சுருள் முடி டோப்பா செட் பண்ணிட்டு, பீச்சாங்கையில கையில் கமண்டலமும், சோத்தாங்கையில் கவட்டையை முட்டுக் கொடுத்து, கை விரல்ல மாலையுமா, நெத்தியில பட்டையும்,கழுத்துல கொட்டையுமா போட்டு உக்காந்தாச்சு. இந்தப் பக்கம், பங்களாதேஷ் பிகரும், அந்தப் பக்கம் இரஷ்யா பிகரையும் உக்கார வைச்சு, கிஞ்சிதா மாதிரி பணிவிடை செய்ய வைச்சாச்சு.

(இந்தா பாரு மங்குனி, நீயும் நம்ம பட்டாபட்டி மாதிரி அவங்க எல்லாம் எதுக்குன்னு சந்தேகம் எல்லாம் கேக்கக்கூடாது.அதுக்கு ரெண்டு காரணம். )
ஒன்னு, பக்கத்துல பொண்ணுக இருந்தால்தான் சாமியாருன்னு மதிக்கிறாங்க, நம்ம மக்கள்.
இரண்டாவது காரணம், இந்த இரண்டு நாட்டு அழகான பெண்களையும், தொப்பையானந்தாவிற்க்கு மிகவும் (ஜொள்ளு விடப்) பிடிக்கும்.

இப்படி நான் டவுசர் பாக்கெட்டைத் திறந்து வச்சுக் கல்லா கட்டலாம்ன்னு பார்த்தா ஒரு பையனையும் காணேம். அப்பத்தான் நம்ம அப்பாவி முருகு மாதிரி வில்லங்கமா ஒரு அளு வந்தாரு. அவரு கூட நடந்த கருத்துக் களஞ்சியம்தாங்க இந்தப் பதிவுங்க.

ஸ்ரீலஸ்ரீ.தொப்பையானந்தா : ஸ்டெபியாக நம, சாமந்தா பாக்ஸாய நம, ஜெனிபர் லோபஸாய நம,மடோன்னாயா நம (நம்ம ஆளுக ரொம்ப விவரமானவங்க,உள்ளூர் ஆளுக பேரு வைச்சுத் தமிழ்ல மந்திரம் சொன்னாக் கண்டு புச்சுருவானுங்க,சில்லறை தேறாது.).

சிஷ்யன் : சுவாமி நமஸ்காரம், எனக்கு ஒரு சந்தேகம்,

தொ.ஆனந்தா: சொல் மகனே, அதை தீர்க்கத்தானே நான் இருக்கேன்.

சிஷ்யன் : சுவாமி, நான் ஞானத்தை அடைவது எப்படி?

தொ. ஆனந்தா (ஆகா மாட்டினாண்டா, இதை வச்சுக் குழப்பிக் காசு பார்த்து விடவேண்டியதுதான் என்ற எண்ணத்தில்): மகனே, அது ஒன்றும் பெரிது அல்ல, அதற்கு முதலில் நீ சுத்தி செய்ய வேண்டும்.

சிஷ்யன் : எதற்கு சுவாமி? ஆணி அடிக்கவா இல்லை பிடுங்கவா?

தொ ஆனந்தா : (கடுப்ப்பாக) அடேய் மடையா, இது அந்த சுத்தி இல்லைடா , அகச்சுத்தி, உன் ஆன்மாவை சுத்தம் செய்ய வேண்டும்.

சிஷ்யன் : அது எப்படி சுவாமி,

தொ.ஆனந்தா : அப்படிக் கேள் மகனே, நீ முதலில் உன் சுவாசத்தைக் கட்டுப் படுத்த வேண்டும். அதுக்கு நீ முதலில் மூச்சை வலப்பக்க மூக்கில் இழுக்க வேண்டும்,இதுக்கு பேரு ரோசகம், பின்னர் இடப்பக்க மூக்கில் வெளிவிட வேண்டும், இதுக்கு பேரு அவரோசகம், இடையில் மூச்சை ஒரு சில நிமிடங்கள் தம் கட்ட வேண்டும். இதுக்கு பேரு கும்பகம்.

சிஷ்யன் : தம் கட்டுவது என்றால் நம்ம ஜலில்லாக்கா பிரியாணிக்குத் தம் கட்டுவார்களே அது மாதிரியா?

தொ.ஆனந்தா (செம கடுப்பில்): அடேய் நீ திங்கறதில்லேயே இரு. இது மூச்சினை இழுத்து தம் கட்டுவது.

சிஷ்யன் : சரி சாமி, அடியேனை மன்னித்து மேலே சொல்லுங்கள்.

தொ ஆனந்தா : இப்படி நீ தொடர்ந்து பல வருடங்கள் செய்தால்,உன் குண்டலினி சக்தி கிளர்ந்து, நீ ஞானத்தை அடைவாய்.

சிஷ்யன் (குழப்பத்துடன் ): சுவாமி குழப்பமாக இருக்கின்றது. ஒரு சின்ன சந்தேகத்திற்க்கு மட்டும் பதில் சொல்லுங்கள்.

தொ ஆனந்தா : (அப்பாடா ஒரு வழியா குழப்பிட்டேன், இனி காசு கறந்து விட வேண்டியதுதான்) சொல் அப்பனே, என்ன சந்தேகம்?

சிஷ்யன் :பக்கத்து வூட்டுல குடியிருக்கற சப்ப பிகர் ஞானத்தை அடைய இவ்வளவு கஷ்டப் பட வேண்டுமா?

தொ ஆனந்தா (டவுசர் டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ருனு கிழிய டர்ருன்னு ஆகிட்டார்): அடேய் நரனே உன்னை கும்மி அடிச்சு குலைவையில் போடும் முன்னர் ஓடிப் போயிடு, வர்றானுக பாரு,கபோதிப் பசங்க.

( பணிப் பொண்கள் இருவரும் கையக்,கால அமுக்கி, நெஞ்சு தடவி சாந்தப் படுத்துகின்றார்கள், கோபம் அடங்காதா தொப்பையானந்தா,கமண்டலத்தில் இருக்கும் சரக்கை அடித்து விட்டு)

தொ ஆனந்தா: சரி அடுத்த பார்ட்டியை வரச் சொல், அதுவாது தேறுதான்னு பார்ப்போம்.

சிஷ்யன் 2 : வணக்கம் சுவாமி,

தொ ஆனந்தா : மங்களம் உண்டாகட்டும், மகனே, மங்களம் உண்டாகட்டும்,

சிஷ்யன் 2 (அதிர்ச்சியாக) : சுவாமி, மங்களம் பக்கத்து வூட்டுக்காரி, என் பொண்ட்டாட்டி பேரு பங்கஜம்.

தொ ஆனந்தா (செமக் கடுப்பைப் பல்லைக் கடித்து அடக்கிக் கொண்டு) : இது மங்களகரமான மங்களம் உண்டாகட்டும்ன்னு என்று சொன்னேன். சரி விஷயத்தைச் சொல்.

சிஷ்யன் 2: சுவாமி, எனக்கு ரொம்ப நாளாக ஒரு சந்தேகம் சுவாமி,

தொ ஆனந்தா : சிஷ்யா, சந்தேகத்தை மனதில் அடக்கி வைத்தால் அது நம்மை எரித்து விடும், ஆதலால் கேளு மகனே கேளு, கேட்டுக்கிட்டே இரு.

சிஷ்யன் : சுவாமி, நான் சித்தியடைவது எப்போது?

தொ ஆனந்தா : (மிகக் கோபமாக கவுண்டமணி ஸ்டைலில்)அடேய் பண்டாரப் பரதேசி, எத்தனை பேரு இப்படி எரிச்சல் பண்ணக் கிளம்பி இருக்கிங்க. கொய்யால,
புண்ணாக்குத் தலையா! போடாப் போய், உங்கப்பன் கிட்ட கேளுடா, சித்திக்கு ஏற்பாடு பண்ணுவாரு. சித்தி வேணுமாம் சித்தி!!!, நான் என்ன இராதிகாவாடா சீரீயல் எல்லாம் எடுத்துக் கொடுக்கிறதுக்கு, வந்துட்டானுக பொடி டப்பாப் பசங்க.,

நான் ஒன்னும் சாமியாரும் இல்லை, ஒரு மண்ணும் இல்லை, இது எல்லாம் ஒரு பொழப்பாடான்னு சொல்லி டோப்பாவை எறிந்து விட்டு ஓடுகின்றார்.

பிகருங்க ரெண்டும் அவரைத் தடுத்து, சுவாமி எங்களின் கதி என்ன எனக் கேக்க.

கண்ணுகளா அப்பால தனியா வாங்க, கண்டுக்கிறேன். இப்ப ஆளை விடுங்கடின்னு எஸ்கேப்புபூஊஊஊ ஆகி ஓடுகின்றார் தவத்திரு. ஸ்ரீலஸ்ரீ.தொப்பையானந்தா.

டிஸ்கி : படத்துல தொப்பை நல்லாத் தெரியுதுங்களா? அதுதான் ரொம்ப முக்கியம், ஏன்னா அதை வைச்சுத்தான் இந்த பதிவே. இதுக்கே கோபப்படாதீங்க அடுத்து ஸ்ரீலஸ்ரீ.சொட்டையானந்தான்னு ஒரு பதிவு வரும்.நன்றி.

Tuesday, March 9, 2010

ஒப்புதல் வாக்குமூலம் பதின்மம் தொடர் - நிறைவு


நான் எட்டாவது படிக்கும் சமயம் எனது நண்பன் பிரபாகரனின் வீட்டில் பொழுதைப் போக்குவேன், கலந்து படித்தல் மற்றும் விளையாடுதல் ஆகியன இருக்கும். அவனின் அம்மா எங்கள் இருவரையும் நல்லாக் கவனித்துக் கொள்வார்கள். நாலு குடும்பங்கள் ஒன்றாக இருக்கும் கூட்டுக் காலனி அது. பிரபாகரன் அம்மா, ஜெயா அக்கா,வசுமதி அம்மா மற்றும் யசோதா அம்மா (ஜெயாக்காவின் அம்மா) ஆகியோர் அமர்ந்து ஒன்றாகக் கதை பேசிக் கொண்டு இருப்பார்கள். தொலைக்காட்சிகள் வராத சமயம் அது. கூடிப் பேசுதல் மட்டும்தான் அவர்களின் பொழுது போக்கு. இப்படிப் பேசும் போது சில சமயம் நான் மாட்டிக் கொள்வேன். அப்போது ஜெயா அக்காவிற்க்கு மாப்பிள்ளை பார்த்துக் கொண்டுருந்தார்கள். அது பற்றியும் பேசுவார்கள்.

பிரபாகரன் அம்மா : சுதா நீ யாரைடா கல்யாணம் பண்ணிக்குவ?

நான் : நான் யாரையும் கல்யாணம் பண்ண மாட்டேன்.

வசுமதி அம்மா: ஏண்டா யாரையும் கல்யாணம் பண்ணிக்கலைன்னா, யார் உனக்கு சோறு ஆக்கிப் போடுவா?

நான் : எங்கம்மா சாப்பாடு போடுவாங்க.

யசோதா அம்மா : அவங்க எத்தனை நாளுக்குத்தான் போடுவாங்க, நாளைக்கு நீ யாரையாது கல்யாணம் பண்ணித்தானா ஆகனும்.

நான்: அது அப்ப பார்ப்போம், நான் எங்க அக்கா பெண்ணைத்தான் கல்யாணம் பண்ணுவேன். ஆனா அவளுக்கு சமைக்கத் தெரியாது.

பிரபாகரன் அம்மா: அது சரி, அய்யா ரெடியாத்தான் இருக்காரு.

ஜெயாக்கா : டேய் நீ என்னைக் கல்யாணம் பண்ணிக்கோடா, நான் நல்லா சமைப்பேன்.

நான்: ஹிகும் மாட்டேன். நான் கல்யாணம் பண்ணவே மாட்டேன்

வ அம்மா : ஏண்டா அக்காவை உனக்கு பிடிக்காதா.

நான் : ரொம்ப பிடிக்கும், ஆனா அவங்க பெரியவங்க.

ஜெயாக்கா : டேய் பரவாயில்லைடா,

பி அம்மா: பாருடா அவளே சொல்லிட்டா, பேசாம கல்யாணம் பண்ணிக்கடா?

ய அம்மா : ஆமாண்டா எனக்கும் மாப்பிள்ளை பார்க்கின்ற வேலை மிச்சம்.

நான் : சரி நான் வேலைக்கு போய்ட்டு, அப்புறமா ஜெயாக்காவைக் கல்யாணம் பண்ணிக்குறேன்.

வ அம்மா: டேய் அதுக்குள்ள அவளுக்கு வயசு ஆகிவிடும்.

நான் : பரவாயில்லை, இப்பக் கல்யாணம் பண்ணினா அப்புறம் மளிகை சாமான் வாங்க முடியாது.

பி அம்மா: டேய் கல்யாணம் பண்ணி என்ன பண்ணப் போற.

நான் : படிச்சு முடிச்சு வேலைக்குப் போயி, கல்யாணம் பண்ணிக்குவேன்.

வ அம்மா: அப்புறம்,

நான் : நான் சம்பாதித்துக் கொடுப்பேன், ஜெயாக்கா எனக்கு சமைத்துப் போடுவார்கள்.

ஜெயாக்கா : டேய், புடவை துணி மணி எல்லாம் வாங்கித் தரமாட்டாயா?

நான் : ஓ நிறைய வாங்கித் தருவேன்,

பி அம்மா: அப்புறம் என்ன ஜெயா, பிரச்சனை இல்லை. (அக்காவின் முகத்தில் வெட்கம்).

ய அம்மா : டேய் என் பொண்ணைக் கட்டனும்னா நிறைய சீர் எல்லாம் செய்யனும்.

நான் : ஓ நான் நிறைய சம்பாதித்து செய்யறன்.

வ அம்மா: ஒன்னும் பிரச்சனை இல்லை, டேய் கல்யாணம் பண்ணினா மத்த வேலை எல்லாம் செய்யனுமே.

நான் : அது ஒன்னும் பிரச்சனை இல்லை, எங்க வீட்டுல மாதிரி, வேலைக்காரி வச்சுக்கலாம்.

பி அம்மா : ஜெயா, பையன் எல்லாத்துக்கும் ரெடியாதான் இருக்கான்.

ஜெயாக்கா : போங்க அக்கா, நீங்க ஒன்னு.

ய அம்மா: டேய் என் பொண்ணை கண்ணு கலங்காம காப்பாத்துவாயா?

நான் : இம்ம் சூப்பரா வச்சுக்குவேன்.

பி அம்மா : ஆகா இப்பவே ரெடியா இருக்கான். ஆமாண்டா கல்யாணம் பண்ணிக்கிட்டா இராத்திரி எல்லாம் இவகூடத்தான் இருக்கனும் தெரியுமில்லை.

ஜெயாக்கா : அக்கா! பிளிஸ், என்னது விவஸ்த்தை இல்லாமல்.

நான் : அது எல்லாம் முடியாது, நான் எங்க அம்மா பக்க்தில் தான் தூங்குவேன்.

வ அம்மா : அது எப்படிடா, கல்யாணம் பண்ணினா இவகூடத்தான் இருக்கனும். இப்ப நாங்க எல்லாரும் அம்மா கூடவா இருக்கின்றேம்.

நான் : அது எல்லாம் தெரியாது, நான் அம்மாவின் பக்கத்தில் தான் இருப்பேன்.

பி அம்மா : போச்சுடா, அப்படி எல்லாம் கூடாது, நீ அக்கா கூடத்தான் இருக்கனும், அப்புறம் மத்த வேலை எல்லாம் யாரு பார்ப்பாங்க.

நான் : அப்புறம் என்ன?. சாப்பிட்டாத் தூங்க வேண்டியதுதான, அவங்க, அவங்க அம்மாகிட்ட தூங்கட்டும், நான் என் அம்மாவிடம் தூங்குவேன்.

வ அம்மா : அது எப்படிடா, கல்யாணம் பண்ணினா இவகூடத்தான் தூங்கனும்.

நான் : சரி அப்படின்னா, நான் எங்க அம்மாகிட்ட சொல்லிட்டு வந்து தூங்கறேன்.

வ அம்மா : அப்புறம் என்ன ஜெயா! நல்ல நாளு பார்க்க வேண்டியதுதான்.

ஜெயா அக்கா : சீய் சும்மா இருங்க அக்கா, சின்னப் பையன் சொல்றான்னு.

நான் : பராவயில்லை அக்கா, நான் எங்க வீட்டுல சொல்லிட்டு வரறன்.

வ அம்மா,பி அம்மா : சிரிப்புடன், அப்புறம் என்ன ஜெயா பையன் ரெடி.

ய அக்கா : சும்மா இருங்கடி, அவன் வீட்டுல போயி எதாது உளறி வைக்கப் போறான்.
லஷ்மியக்கா (எங்க அம்மா பெயர்) பெத்த பசங்க ஒன்னு ஒன்னு தங்கம். நல்ல பசங்க.

பி அம்மா : சரி சுதா, முதல்ல நீ போய்ப் படி, அப்புறமா ஜெயாக்காவைக் கல்யாணம் பண்ணிக்கலாம்.

நான் : சரிங்கம்மா. நான் போயிட்டு வறேன்.

ஜெயாக்கா : டேய், என்னை மட்டும் மறந்துடாதடா .

நான் : இல்லையக்கா, மறக்க மாட்டேன். நான் படிச்சு வேலைக்குப் போயிட்டு வந்து , உங்களைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்.

வ அம்மா : என்னது இது, சும்மா சொன்னா, நிஜமாகவே பண்ணிடுவாங்க போல இருக்கே . ரெடியா இருக்காங்க.

ய அம்மா : சும்மா இருங்கப்பா, சுதாக்குட்டி தங்கமான பையன், விட்டாக் கெடுத்துருவீங்க போல.
(பெண்கள் அனைவரும் சிரிக்க, நான் ஒன்னும் புரியாமல் வெட்கத்துடன் ஓடுகின்றேன். )

வ அம்மா : பாருங்கப்பா பையனுக்கு கல்யாணம்ன்னு சொன்னதும் வெட்கம் வந்துருச்சு. என்று கூறி மீண்டும் சிரிக்கின்றார்கள்.

நான் சுறுப்சுறுப்பாக ஓடி அம்மாவிடம் சொல்கின்றேன். அம்மா என் தலையை வருடி, ஆமா இவங்களுக்குப் பொழுது போகலைன்னா என் பையன் தான் கிடைத்தானா என்று சிரிக்கின்றார். இப்படிக் கூடிக் கும்மி அடித்தது ஏராளாம். இப்படிச் சாம்பிளைக் கூறி தொடரை முடிக்கின்றேன். அதுக்காக கும்மி எழுத மாட்டேன் என்று அர்த்தம் இல்லை. அப்ப அப்ப நகைச் சுவை பதிவுகளில் எழுதுகின்றேன்.

என்னை மட்டும் இப்படி மாட்டி விட்டா எப்பூடீயீயீயீயி ?. ஆதுனால நான் இந்த தொடரைத் தொடருவதுக்கு அழைப்பது

பெண் பதிவர்களில்

சுசி தங்கை, ஜெலில்லா அக்கா, சாருஸ்ரீராஜ், சித்ரா தங்கை மற்றும் கவிதாயினி ஹேமு.

ஆண் பதிவர்களில்

மங்குனி அமைச்சர், பட்டா பட்டி, ஜெய்லானி, எல் கே மற்றும் சைவ கொத்து பரோட்டா அவர்களையும் அழைக்கின்றேன்.

நான் அழைத்த பதிவர்கள் அனைவரும் ஏற்கனவே இத்தொடரைப் போட்டுருந்தால், அதை பின்னூட்டத்தில் சொல்லிவிட்டு, விட்டு விடுங்கள், இதுவரை போடவில்லை என்றால் பதிவு இடுங்கள் நன்றி. இனித் தொடராது.

டிஸ்கி : நாளைக்கி இதை வீட சூப்ப்பாரா ஒரு பதிவு போடப் போறேன். அதை நீங்க எல்லாரும் படிச்சித்தான் ஆகனும். இல்லைன்னா என் சாபம் உங்களுக்குக் கிடைக்கும். அது என்னன்னா

காலையில் ஆறு மணிக்கு உங்களுக்கு வயிறு பிசையும்,
எட்டு மணிக்கு பசி எடுக்கும்,
மதியம் பன்னிரேண்டுக்கு வயிறு கப கபன்னு பசி எடுக்கும்,
இராத்திரி தூங்குனத்துக்கு அப்புறம் கண்ணுத் தெரியாது.
கனவுல திரிஷா, ஸ்ரேயா எல்லாம் வருவாங்க, பெண் பதிவர்களுக்கு விஜய்,அஜித்,சல்மான் சாருக் எல்லாம் வருவாங்க.

அதுனால ஒழுங்கா அடுத்த பதிவைப் படிச்சுருங்க. நன்றி.

Monday, March 8, 2010

ஒப்புதல் வாக்கு மூலம் பதின்ம வயது தொடர் - 2


தியேட்டர் உள்ளார வரைக்கும் ஒரு ஆர்வத்துல போயிட்டு, அப்புறம் கட் அடித்து வந்த ஒரு தர்ம சங்கடமும்,குற்ற உணர்வும் என்னை படம் பார்க்க விடவில்லை. நான் மிகவும் அவஸ்த்தையாக, டேய் வாடா வீட்டுக்குப் போகலாம் என்று முனக ஆரம்பித்தேன். கம்மர்கட்டும், மாங்காயும் வேற தீர்ந்து போச்சு,(வந்த வேலை முடிஞ்சுது), நான் நண்பனிடம் வாடா வீட்டுக்குப் போகலாம்(ஆத்தா வையும், வீட்டுக்குப் போகனும் என்று பதினாறு வயதினிலே சப்பானி ஸ்டைலில் ) என்று தொல்லை தர ஆரம்பித்தேன். படத்துல வேற, மந்திரவாதி,பூதம் எல்லாம் வர ஆரம்பிச்சுது,எனக்கு பயம் ஒன்றுக்குக் இரண்டாக சேர்ந்து கொண்டது. நான் தொடர்ந்து நச்சரிக்க ஆரம்பித்தேன். என் நண்பன் தொல்லை தாங்க முடியாமல், "நீ வேணா வீட்டுக்குப் போடா" என்றான். என்னை தியேட்டரின் வெளியில் கொணர்ந்து விட்டவன்,உன்னை எல்லாம் கூட்டி வந்தேன், பாரு காசு தண்டம் என்று கூறி தலையில் அடித்துக் கொண்டு,திரும்பவும் உள்ளே போய்விட்டான். மீதம் இருந்த ஜவ்வு மிட்டாயை வாயில் அதக்கிய படி வீட்டுக்கு ஓடி வந்துவிட்டேன். வீட்டுக்கு வந்தாலும் ஒரு குற்ற உணர்வுடன்,கம்முன்னு திருடனுக்குத் தேள் கொட்டிய மாதிரி இருந்தேன். எப்பவும் பள்ளி விட்டு வந்தா கலகலப்பாக இருக்கும் நான்,சும்மா இருப்பதைப் பார்த்து உடம்பு சரியில்லையா என,என் இரண்டாம் அக்கா விசாரிக்க,நான் கடகடவென நடந்தைச் சொல்லி முடித்தேன்.அவர்களும் சரி இனிமே பள்ளிக்குப் போன பாடம் படித்து வரணும், இப்படி போகக் கூடாது என்றார்கள்.நான் படுக்கென்று,அக்கா நான் கிளாஸிக்கு மட்டம் போடுல,இலக்கிய மன்றக் கூட்டத்தில் தான் போனேன் என்றேன்.என் அக்கா சிரித்துக் கொண்டு,"சரி இனிமே எங்க போனாலும் வீட்டுல சொல்லிட்டுத்தான் போகனும்,இல்லைன்னா எல்லாரும் தேடுவேம் இல்லையா" என்றார்கள். நானும் "சரி இனிமே எங்க போனாலும் சொல்லிட்டுப் போறேன்" என்று சொல்லி, நிம்மதியாக சாப்பிட்டுத் தூங்கினேன்.

இனி நான் மூன்றாவது முறையாக தர்ம அடி வாங்கிய சம்பவம் சொல்கின்றேன். 1983 அப்ப இந்தியா உலக கோப்பை வென்ற சமயம்,நாங்க எல்லாம், பம்பரம், கில்லி,தடி, கபடி போன்ற விளையாட்டுக்களைக் விட்டு, கையில் முள்ளுக்குச்சி ஸ்டெம்பும், ரீப்பர் கட்டை பேட்டும், இரப்பர் பாலுமா, வேகாத வெய்யிலில்,முகம் கருவழியக், காடும், மேடும் கிரிக்கெட் ஆடுன காலம். ஸ்ரீகாந்த்,கபில், விவ் ரிச்சர்ட்ஸ், கார்டன் கிரினிட்ஜ்(எனக்கு புச்ச ஆளு), டேவிட் பூன், ஆலன் லாம்ப், வாசிம் அக்ரம், மியாண்டட்,வாசிம் பாரி, அஸாருத்தின் போன்ற ஆளுக தான் எங்க கடவுள்கள். எங்க டீமில் எல்லாருக்கும் ஒரு கிரிக்கெட்டர் பெயர் வைத்துக் கொள்வேம். நான் முதலாவதாக இறங்கி, விளையாடுவதால் எனக்கு கார்டன் கிரினிட்ஜ் பெயர் பட்டமாக வந்தது. இப்படி நான் பிளட்சர், கோரி,கீரேக்சாப்பல், ரிச்சி, மல்கம் மார்சல்,ஆண்டி இராபர்ட்ஸ்,வெங்சர்க்கார்,குண்டப்பா விஸ்வனாத், கிர்மானி கூட எல்லாம் கிரிக்கெட் ஆடி இருக்கேன். இப்படி காலம் போயிட்டு இருக்கறப்பதான் பத்தாம் வகுப்பு பரிட்சை வந்ததால், ஸ்டெடி ஹாலிடேஸ் விட்டதுல இருந்து நான் கிரிக்கெட் ஆடவில்லை. பரிட்சைகளும் வந்தது. நான் திங்கள் முதல் வியாழன் வரை தமிழ்,வரலாறு & புவியல் மற்றும் ஆங்கிலப் பரிட்சைகளை எழுதிவிட்டேன். இனி வெள்ளி,சனி முடிந்து திங்களும், செவ்வாயும்தான் பரிட்சை.கணக்கும்,சயின்ஸும் தான் பாக்கி, அப்பத்தான் வியாழன் காலை பரிட்சை எழுதி விட்டு வந்த நான்,நண்பர்கள் ஒரு மேட்ச் இருக்கு,ஓபனிங் விளையாட ஆள் இல்லை என்று வற்ப்புறுத்திக் கூப்பிட்டதால, எனக்கும் டச் விட்டுப் போச்சு என்று ஆடப் போயிட்டேன்.












மாலை ஆறறை மணி இருக்கும், நான் வீட்டுக்குத் திரும்பி வந்த போது, என் பெரிய அண்ணா அலுவலத்தில் இருந்து திரும்பி வந்து இருந்தார். நான் விளையாடப் போனது தெரிந்ததும்,கோபித்தார். நான் பரிட்சை திங்கள்தான்,வெள்ளி மற்றும் சனி,ஞாயிறு படிக்கின்றேன் என்று பதில் சொல்ல,"ஏன் துரை இன்னம் கொஞ்சம் கூடப் படிச்சா குறைஞ்சா போயிடுவிங்கன்னு" உனக்கு கணக்கு வேற வீக்கு,என்று உதைச்சார்.நான்,"இல்லைன்னா ஓபனிங் ஆட ஆள் இல்லைன்னு கூப்பிட்டாங்க அதான் போனேன்னு சொல்ல,ஆமா இவரு துரை போய் விளையாடுல்லைன்னு லார்ட்ஸில் எல்லாரும் கவலைப்பட்டாங்களான்னு கேட்டு உதை விழுந்தது.அப்ப பிலிப்ஸ் ரோடியோ வந்த சமயம், அந்த ரோடியோவின் வயர் பிளக்கை இரண்டையும் கையில் பிடித்துக் கொண்டு, வயரில் அடித்தார். முதுகில் சட்டையும் மீறி வயரின் தடம் பதிந்து விட்டது. அப்போது என் அம்மா ஓடி வந்து அண்ணாவை இப்படியா கண்ணு முன்னு தெரியாம அடிப்பாய் என்று கூறி என்னைத் தடுத்து சமையலறைக்குக் கூட்டிச் சென்றார். (இதுலையும் என்ன கொடுமை என்றால் அப்ப இந்தியா, இங்கிலாந்து மேட்ச் டீ வீ யில ஓடிக்கொண்டு இருந்தது).இப்படி நான் அல்லது என் மூன்றாவது,நாலவது அண்ணா அடி வாங்கினால் வீடு கொஞ்ச நேரம் அமைதியா,இறுக்கமாக இருக்கும். நாங்கள் பாடப் புத்தகத்தை எடுத்துக் கொண்டு படிப்பது போல, பாவலா செய்வேம். கொஞ்ச நேரம் கோவத்துடன் அமைதியாயிருக்கும் அண்ணா, பின்னர் சட்டையை மாட்டிக் கொண்டு வெளியே போய்க், கடையில் வடை, போண்டா எல்லாம் வாங்கி வந்து கொடுப்பார்.சாப்பிடும் போது வருந்திக் கெஞ்சாத குறையா, "ஏண்டா இப்படிப் பண்கின்றீர்கள், உங்களை என்ன வேலைக்குப் போ!, சம்பாரி,லாட்டிரி டிக்கெட் விக்கப் போன்னா சொல்றேம். படிக்கத் தானே சொல்றேம். ஏண்டா புரிஞ்சுக்க மாட்டிங்கிறிங்க" என்று சொல்வார். இதுதான் நான் வாங்கிய இறுதி தர்ம அடி.

இது எல்லாம் நடந்து முடிந்து நான் கல்லூரி இறுதியாண்டு தொடங்கும் சமயம், எங்க அண்ணாவின் திருமணம் நடந்தது. திருமணத்திற்க்கு முன்னால் எங்களை அழைத்த அண்ணா, இதுவரைக்கும் உங்களை எல்லாம் கஷ்டப் பட்டு படிக்க வைத்தேம். நீங்களும் நால்லாப் படிக்கின்றீர்கள். விரைவில் வேலைக்கு வந்து விடுவீர்கள். இனி நான் திருமணம் செய்து கொள்ளப் போகின்றேன். இனியும் இன்னேருத்தி முன்னாள் நான் உங்களை எல்லாம் அடித்துத் திருத்தினால் நல்லா இருக்காது. நீங்களா விரைவில் படித்து, வேலைக்கு வாங்க என்றார். நாங்களும் சரி என்றேம். அதில் இருந்து இன்னை வரைக்கும் எங்க அண்ணா எங்களை திட்டியதே அல்லது அடித்ததே இல்லை. பாசமிக்க எங்க பெரிய அண்ணா சொல்வதை நாங்க நாலு தம்பிகளும் மீறுவது இல்லை. திருமணம் முடிந்த பிறகு எங்க மன்னியிடம் இந்தக் கதைகள் சொல்லப் பட்ட போது, அவர் ஆச்சரியமாக "இப்படி எல்லாமா அடிப்பீங்க" என்றார். அதுக்கு அவர் என்ன பண்றது, பெரிய குடும்பம், அன்றாட வாழ்வும், கல்யாணக் கடனும் இருக்கும் போது கஷ்டப் பட்டு படிக்க வைத்தால் குறும்பு பண்ணுகின்றார்களே என்ற கோபம், ஆத்திரமா வரும். கோபத்தில் அடித்து விடுவேன்,அப்புறம் நானும் வருத்தப் படுவேன் என்றார். ஆனால் என் தம்பிகள் ஒரு நாளும் ஏன் அடிச்சிங்கன்னே அல்லது ஒரு நாளும் எதிர்த்துப் பேசியதே இல்லை என்றார் பெருமையாக. இதுதாங்க எங்க குடும்பம். என் அப்பா,இரண்டாவது அக்கா(டீச்சர்), மற்றும் என் அண்ணாக்கள் இருவரின் உழைப்பும்,ஊக்கமும்தான் நடுத்தர வர்க்கமான எங்களின் குடும்பத்தை எதே ஊரார் பாராட்டிச் சொல்லும் அளவுக்கு உயர்த்தியது. தொடரை முடிக்கலாம்ன்னு பார்த்தா முடியாது போல இருக்கு. பதிவு பெரிதாக இருப்பதால் அடுத்த பதிவில் பெண்கள் என்னை கும்மியடித்த சுவாரஸ்யமான சம்பவத்தைச் சொல்கின்றேன்.