Wednesday, December 8, 2010

சபரி மலை யாத்திரை


சாமியே சரணம் அய்யப்பா !!!
நாளை இரவு (புதன்) மங்களூர் எக்ஸ்பிரஸ்ஸில் தாம்பரத்தில் இருந்து கரூர் சென்று, வியாழன் காலை எனது ஊர் தாராபுரம் சென்று, தென் தாரையில் உள்ள சின்னக் காளியம்மன் கோவிலில் இருமுடி கட்டிக் கொண்டு மலைக்கு யாத்திரை கிளம்புகின்றேன். வியாழன் இரவு எரிமேலியில் பேட்டை துள்ளி, வாவர் பள்ளிவாசலுக்கு சென்று விட்டு,


பின்னர் வெள்ளி அதிகாலை நாலு மணியளவில் பம்பா சென்று சக்தி பூஜை முடித்து ஆறு மணியளவில் சபரி மலை ஏறும் திட்டம் உள்ளது.சென்ற முறை நான் நாலு மணி நேர கியூ இருந்தது, இந்த முறை எப்படி என்று தெரியவில்லை, எத்தனை மணி நேரம் நின்றாலும் பரவாயில்லை, அய்யனின் தரிசனம் நல்ல முறையில் கிடைத்தால் போதும். மலை இறங்கி திருவனந்தபுரம், சுசீந்திரம், கன்யாகுமரி,திருச்செந்தூர் மற்றும் குற்றாலம் சென்று மதுரை வழியாக தாராபுரம் திரும்பும் எண்ணம் உள்ளது. எத்தனை மணி நேர கியூ மற்றும் செல்லும் இடங்களில் மழை, பாதை எப்படி உள்ளது என்று அறிந்த பின்னர் தான் மேற்க்கொண்டு பயணம் செல்ல வேண்டும். குருசாமி, முதலில் அய்யனை தரிசித்துவிட்டு, கீழே இறங்கி பின்னர் செல்லும் இடங்களைப் பற்றி பேசிக்கொள்வேம் என்று சொல்லிவிட்டார்.

நாளை இரவு கிளம்புவதற்க்கான ஏற்ப்பாடுகள் நடந்து கொண்டு உள்ளது, நான், என் இரண்டாவது அண்ணா மற்றும் மூன்றாவது அண்ணா, ஆக என் வீட்டில் மூவர் செல்லுகின்றேம்.வழக்கம் போல என் நண்பனும் அவனது அண்ணாக்கள் நால்வர்,உறவினர்கள் என வருடா வருடம் செல்லும் பதினைந்து பேர் செல்ல இருக்கின்றேம்.
நல்ல படியாக தரிசனம் கிடைத்து, எங்களின் யாத்திரை நல்ல படியாக முடிய அந்த கன்னிமூல கணபதியை வேண்டிக் கொள்கின்றேன்.

யாத்திரை முடிந்து திங்கள் அன்று சென்னை வந்துவிடுவேன். அடுத்த வாரம் யாத்திரை குறித்து பதிவுகள் போடுகின்றேன்.

சாமியே சரணம் அய்யப்பா!!!

Saturday, December 4, 2010

2010தின் சூப்பர் டூப்பர் காமெடி
என்ன பதிவு போடலாம், நில்லுங்க கொஞ்சம் சைட் டிஷ் மரவள்ளிக் கிழங்கு சிப்ஸ் எடுத்து வைச்சுக்கிறேன்.நமக்கு எல்லாம் பதிவுக்குக் கூட சைட் டிஷ் வேணும்.

கொறுக் கொறுக்,

என்ன பதிவு போடலாம், ஆங்க் இந்த மலிக்காவும், ஜலில்லாவும் நாலு கொழுக்கட்டையை யாருக்கும் தெரியாம துபாய் பார்க்குல மறைஞ்சு சாப்பிட்டாங்களே, அதை சொல்லலாமா?

கொறுக் கொறுக்,

நம்ம வெட்டிப் பேச்சு சித்ரா யு எஸ் ல நெல்லை அல்வா கிண்டறதை சி ஜ ஏ மூலமா தெரிஞ்சுக்கிட்டு, அதுக்கு பயந்துதான் ஒபாமா இந்தியா வந்தாருன்னு உண்மையை சொல்லிரலாமா?

கொறுக் கொறுக்,

நம்ம துளசி டீச்சர் போட்ட கோயில் பதிவுகளில், எந்த கோயில் பிராசதம் நல்லா இருக்கும்முன்னு சொல்லாம மறைச்சுட்டாங்களே அதைப் பதிவா போடலாமா?

கொறுக் கொறுக்

போன தீபாவளிக்கு நம்ம மேனகா சக்கரையும், நெய்யும் போட மறந்து ஒரு மைசூர் பாகு பண்ணினாங்களே, அதை போட்டு உடைக்க முடியாமா கஷ்டப்பட்டாங்களே, அதை சொல்லலாமா?

கொறுக் கொறுக்,

ஜிலேப்பி மாதிரி வளைச்சு வளைச்சு எழுதுனா கவிதைன்னு ஹேமுவும், தமிழும், தொழில் இரகசியம் சொல்லிக் கொடுத்தாங்களே, அதைப் பதிவா போடலாமா?

கொறுக் கொறுக்,

வட கொரியா போட்ட குண்டு எல்லாம் எடுத்து, பழைய இரும்புக் கடையில நம்ம சிங்க குட்டி அய்யா போட்டுப், பொட்டுக் கடலை வாங்குனத சொல்லலாமா?

கொறுக் கொறுக்,

வர்ற சக்கரைப் பொங்கலுக்கு சக்கரையே போடாம சக்கரைப் பொங்கல் பண்ணாலாமுன்னு சுசி எடுத்த இரகசிய சபதத்தைப் போட்டு உடைக்கலாமா?

கொறுக் கொறுக்,

என்னடா பித்தன் மாலை போட்டுட்டு ஆன்மீகப் பதிவே போடலைன்னு யோசிக்கறவுங்களுக்கு, நம்ம சாமிகிட்ட டூ விட்ட விசயத்தை சொல்லலாமா?.

கொறுக் கொறுக்,

இல்லைன்னா, நம்ம பட்டாபட்டி முதல்வர் எத்தனை பொறம்போக்கு இடத்தை பட்டா போட்டாருன்னு, ஸ்பெக்ட்ரம் கணக்கா ஒரு பதிவு போடலாமா?

கொறுக் கொறுக்

அதும் இல்லைன்னா, நம்ம மங்குனி அமைச்சர், எந்த நாட்டு அமைச்சர்ன்னு கேட்டு ஒரு பொது அறிவுப் போட்டி வைக்கலாமா?.

கொறுக் கொறுக்

இல்லைன்னா, நம்ம ஜெய்லானி பத்தாங்க் கிளாஸில் பத்து வருசம் படிச்சதை பதிவா போடலாமா?

கொறுக் கொறுக்,

இது எல்லாம் வேண்டாம் நம்ம மண்டையில ஏற்கனவே முடி இல்லை, எல்லாரும் சேர்ந்து க்டுப்புல நம்ம மண்டைய ஆளாளுக்கு புடிச்சாங்கனா, அப்புறம் இருக்குற நாலு முடி கூட மிஞ்சாது, பேசாம, தொப்பையானந்தாவை வைச்சு ஒரு காமெடிப் பதிவு போட்டுருராலாம்.

கொறுக் கொறுக்,

அடச்சே இங்க தமிழ் நாட்டுல ஒருத்தர் சொத்துக் கணக்கு சொல்லி அறிக்கை விட்ட காமெடிதான் 2010 ஆம் ஆண்டின் தலை சிறந்த காமெடி, அதை வீட மிக சிறப்பான காமெடி இனிமேல வர முடியாது,
அய்யே பாவம், நம்ம கவுண்ட மணி, செந்தில்,விவேக், வடிவேலு மற்றும் சந்தானம் கூட இதை வீட எப்படிடா காமெடி போட முடியும் யோசிக்கிறாங்க.அவங்களுக்கு எல்லாம் சான்ஸ் கிடைக்காம வீட்டுக்குள்ள முடங்கிப் போய்ட்டாங்க.

கயிர முத்து அப்படியே ஷாக் ஆகி, இதைப் பாராட்டி என்ன கவிதை எழுதுறதுன்னு யோசிக்க ஆரம்பிச்சுட்டார்.

கொறுக் கொறுக்,

கஜினி வேற, இருக்குற கன்பியூஸ் பத்தாதுன்னு இன்னம் கன்பியூஸ் ஆகிட்டார், இதுக்கு ஒரு பாராட்டு விழா எடுத்தா என்ன சொல்லாம்முன்னு மண்டைய பிச்சுக்கிட்டார், பேசாம இமய மலையில வாங்குன ஊசி,பாசிதான் நம்ம சொத்துன்னு சொல்லற முடிவுல இருக்கார்.

கிமலுக்கு அந்த பிரச்சனையே கிடையாது, எப்படியும் அவரு பேசறது யாருக்கும் புரியாது.(அவரையும் சேர்த்து).

கீரமணி வேற இதைப் பாராட்டி அறிக்கை விட ஜால்ரா கிடைக்காம கஷ்டப்படாறார்.

இப்படி ஒரே அறிக்கையில எல்லாரையும் இவரு தூக்கி சாப்பிட்டதுக்கு அப்புறம் நம்ம காமெடி எல்லாம் எடுபடாது.

கொறுக் கொறுக்,

அப்புறம் என்ன பதிவு போடலாம், பேசமா நமக்கு புடிச்ச " தொடரும்" அப்படின்னு போட்டு இதைத் தொடர் பதிவா போட்டுரலாமா?

பதிவு போடாம விட்டா, சாருஸ்ரீ, ஜனனி பர்த்டேக்கு ஸ்விட் தராம விட்ட மாதிரி நம்மளும் பதிவு போடாம விட்டுர மாதிரி ஆயிடும்

கொறுக் கொறு

அச்சேச்சே சிப்ஸ் தீர்ந்து போச்சுங்க சரி அடுத்த வாரம் வேற சிப்ஸ் வாங்கி வைச்சுப் பதிவு போடலாம்.

டிப்ஸ்: ரொம்ப நாள் ஆச்சுன்னு, சும்மா ஒரு ரவுண்ட் எல்லார் பெயரும் சொல்லிப் பார்த்தேன். அப்புறம் காஞ்சி முரளி அய்யா வேற இன்னமும் நிறையா பேரை சொல்லலைன்னு கோவிச்சுப்பார், அதுனால மீதி இருக்குறவங்க அப்புறமா ஒரு பதிவில,

வணக்கம் இது எல்லாம் சும்மா தமாசா எடுத்துக்குங்க, சிரிக்க மட்டும் சிந்திக்க அல்ல,

என்னது சின்னப்புள்ளத்தனமா? பேச்சு பேச்சா இருக்கனும், இப்படி உருட்டுக் கட்டை எல்லாம் எடுக்கக் கூடாது, வரட்டா!!!!!!.

Tuesday, November 30, 2010

முற்றாக் காமம் என்னும் என் கவிதையின் விளக்கம்கடவுளைக் காதலிப்பது ஒரு வகை ஆன்மிகக் காமம், திருமங்கை ஆழ்வார் கண்ணனைக் காதலியாகக் கொண்டு பல பாசுரங்களைப் பாடியுள்ளார். பாரதியார் கண்ணனை கண்ணம்மாவாக பாடியுள்ளார். கண்ணதாசனும் கண்ணனனை காதலியாக படியுள்ளார். நான் கண்ணனனை காதலனாக, ஒரு குண்டலினி யோக சாதகனின் நிலையில் எழுதியுள்ளேன். முதலில் தலைப்பு முற்றாக் காமம் பற்றிப் பார்ப்போம்.

மானிடக் கலவியில் எல்லாமும் முற்றும் பெறும் காமம் தான். ஒரு முறை கிளர்ச்சி அடைந்தவுடன் அவன் காமம் முற்றும் பெறுகின்றது. பின்னர் மீண்டும் கிளர்ந்து விடும். இதுக்கு குறிப்பிட்ட கால வரையறை இருக்கும். ஆனால் பேரின்பம் என்னும் யோக சமாதி நிலை ஒரு முற்றாத தெவிட்டாத நிலை. இதுதான் முற்றாத அல்லது முடிவுறா காமம் ஆகும். ஆக இதுதான் தலைப்பு.

முன்னிரவில் நிலை கொள்ளா
தவிப்பில் வாயில் சலம் ஒழுக

வண்ணம் ஆடையது குழயக்

இது நித்திய யோகத்தில் அமர்ந்து இருக்கும் சாதகனின் நிலை ஆகும். தஞ்சை மன்னர் அபிராமியின் கோவிலுக்கு வரும் போது சுப்பிரமனியன் என்னும் அபிராம பட்டர் அமர்ந்து இருந்த நிலை. வாயில் சலம் ஒழுக, வேட்டி கலைந்தது கூடத் தெரியாமல் பித்தன் போல, பிரம்மம் என்னும் பிரகாச ஒளியை, அவர் தசிக்கும் போது, மன்ன்ர் திதி கேட்டதால் அந்த ஒளியை நிலவு என்று கொண்டு பொளர்னமி என்று கூறினார், ஆனால் அன்று அம்மாவாசை.

கண்ணாளா !!
அங்கம் கொதிக்க மோன நிலையில்
விழிபிதுங்க நின்னை எதிர்பாத்து
கண்கள் சொருக முழு இரவும்
நிலை கொள்ளாமற்க் காத்துக் கிடந்தேன்.

தொடந்து சாதகம் செய்யும் யோகனின் உடல் நெருப்பு போல உஷ்ணம் கொதிக்கும், ஆதலால் மார்கழி குளிரும் தெரியா வண்ணம் ஆடையற்றுக் கிடப்பான், நடு இரவில் குடம் குடமாய் தண்ணி கொட்டுவான். தன் சூட்டை அடக்க முடியாமல் தவிக்கும் சாதகனின் நிலை இதுதான். தக்க குருவின் வழிகாட்டுதல் இருந்தால் தான், சாதகன் தன் நிலையில் இருந்து வெளி வர முடியும். இல்லை என்றால் சாதகன் பைத்தியம் ஆகிவிடுவான். உடல் உஷ்ணம் பொறுக்க முடியாமல் பலமுறை அபிராம பட்டர் இரவுகளில் பலமுறை காவிரியில் குளித்து உள்ளார். எனது இந்த நிலையில் இருந்து வெளிவர நீ வேண்டும் என்று முழு இரவும் காத்துக் கிடந்தேன்.
கண்ணாளா !!
என் சித்தம் குளிர
கட்டியணைத்து சத்தத்தில்
கலவி புரிந்து உச்சத்தின்
மோன நிலையில் நித்தமும் இட்டு
கிடத்த வாராயோ!.

சித்தம் குளிர -- சித் தம் அதாவது எண்ணம், மனம், உடல் இச்சைகள், சுருக்கமாக சொன்னால் எண்ண அலைகள். சத்தத்தில் கலவி புரிந்து என்பது -- சத் ஆன்மா, ஆன்மாவில் கலவி புரிந்து, அதாவது சத்- சித் கலவி என்பது ஆனந்தம், சத் சித் ஆனந்தம். சத்சித்தானந்தம் என்னும் பரவச நிலையைக் குறிக்கும். பொதுவாக மனிதர்களுக்கு ஆர்கஸம் என்னும் உச்சம் மட்டும் தான் கிட்டும், அதுவும் எல்லாக் கலவியிலும் கிட்டாது. ஆக உச்சத்தில் மோன நிலை என்பது உச்சத்தைக் காட்டிலும் மேன்மையான சாந்த நிலை, அல்லது பரிபூர்ண இறை நிலையைக் குறிப்பது, இந்த நிலை தொடர்ந்து இருக்க கடவுளை வேண்டுவது.

கண்ணாளா !!
கட்டியது கட்டியபடி கிடக்க
பிடித்த பிடி பிடிமாறாமல் இருக்க
என்னை விட்டு அகலா இருந்து
பாம்பாக பின்னியிருந்து
உச்சத்தின் உச்சத்தில்
முற்றாக் காமத்தில் ஆழ்த்தாயோ!.


எந்த நிலையில் சாதகன் இருந்தாலும், அந்த நிலையில் அப்படியே சாதகன் பிரமத்தில் நிலைத்து இருப்பது. சுவாமி விவேகானந்தர், இரமணர் போன்றேர் பல நாட்கள் குகைகளில் இப்படி இருந்துள்ளனர். தன் மீது கொசுக்கள் ஒரு போர்வை போல கடிக்கும் நிலையில் கூட விவேகானந்தர் பல நாட்கள் தியானத்தில் இருந்துள்ளார். எறும்புகள் கடிப்பது கூட தெரியாமல் இரமணர் இருந்துள்ளார். இவர்களின் உச்ச நிலை யோகத்தில் பினைந்து இருக்கும் நிலையை விளக்கியுள்ளேன்.

கண்ணாளா !!
நின் அமுதம் வாயமுதம் உண்டு
மாங்காய் பாலும், தேங்காய் பாலும்
புளித்ததடா! தெவிட்டாத என்
பாலில் என்னை களிப்பாயோ!,


குதம்பை சித்தரின் பாடலில் ஞானப்பால் எனக்கிருக்க மாங்காய் பாலும் தேங்காய்ப் பாலும் எனக்கு எதுக்கடி என்னும் பாடலைத்தான் நான் தெவிட்டாத ஞானப்பால் வேண்டும் என்றும் மாங்காயும் , தேங்காயும் புளித்து(சலித்து) விட்டது என்று குறிப்பிட்டேன். பரமாத்மாவின் லீலைகளில் இருக்கும் ஜீவாத்மாக்களான கோபியர்களின் நிலையில் இருந்து, கண்ணனின் வாயமுதம் என்னும் கீதையை பருகியதால் மற்ற விஷயங்கள் புளித்து விட்டது என்னும் பொருள்.
கண்ணாளா !!
என்னை விட்டு அகலா
நித்திய மோகத்தில் ஆழ்த்தி
முற்றா என் காமத்தை
கரையேற்ற வாராயோ!.

கண்ணா என்னை ஆள்பவனே என்னை கைவிடாது நித்திய சுகமான உன் அனுக்கிரகத்தில் என்னை ஆழ்த்தி என் பிரம்மம் என்னும் யோகத்தை முடித்தி என்னை இறை நிலை கொண்டு செல்ல வரமாட்டாயா.
இதுதாங்க நான் எழுதிய கவிதையின் பொருள். பக்தி யோகமும், சாங்கிய யோகமான குண்டலினியும் ஒரு மிக்ஸிங் போட்டுள்ளேன்.இப்ப மறுபடியும் கவிதையைப் படித்தால் புரியும்.

இந்த பாடலை சரியாக இறைப் பிரேமம் என்று கணித்த கிருஷ்ண மூர்த்தி அவர்களுக்கு நன்றி.

நன்றி.

Saturday, November 27, 2010

முற்றாக் காமம் !!

கண்ணாளா !!
நின்மேல் முற்றாக் காமத்தில்
முன்னிரவில் நிலை கொள்ளா
தவிப்பில் வாயில் சலம் ஒழுக
வாடிக் கிடந்தேன்.

கண்ணாளா !!
அங்கம் கொதிக்க மோன நிலையில்
விழிபிதுங்க நின்னை எதிர்பாத்து
கண்கள் சொருக முழு இரவும்
நிலை கொள்ளாமற்க் காத்துக் கிடந்தேன்.

கண்ணாளா !!
கொதிக்கும் உடம்பில
மார்கழி குளிரும் தெரியா
வண்ணம் ஆடையது குழயக்
உள்ளம் கல்லாக
அதிகாலைக் கிடந்தேன்

கண்ணாளா !!
என் சித்தம் குளிர
கட்டியணைத்து சத்தத்தில்
கலவி புரிந்து உச்சத்தின்
மோன நிலையில் நித்தமும் இட்டு
கிடத்த வாராயோ!.

கண்ணாளா !!
கட்டியது கட்டியபடி கிடக்க
பிடித்த பிடி பிடிமாறாமல் இருக்க
என்னை விட்டு அகலா இருந்து
பாம்பாக பின்னியிருந்து
உச்சத்தின் உச்சத்தில்
முற்றாக் காமத்தில் ஆழ்த்தாயோ!.

கண்ணாளா !!
நின் அமுதம் வாயமுதம் உண்டு
மாங்காய் பாலும், தேங்காய் பாலும்
புளித்ததடா! தெவிட்டாத என்
பாலில் என்னை களிப்பாயோ!,

கண்ணாளா !!
என்னை விட்டு அகலா
நித்திய மோகத்தில் ஆழ்த்தி
முற்றா என் காமத்தை
கரையேற்ற வாராயோ!.

டிஸ்கி : சும்மா எப்ப பார்த்தாலும் இந்த ஹேமுவும், தமிழரசியும் காதலும் சோகமும் கலர்ந்து கவிதை எழுதி டார்ச்சர் தர்ராங்க.
நம்மளும் எத்தனை நாளைக்கித்தான் பொறுத்துக் கொள்வது, வடிவேலு ஸ்டைலில் நாங்களும் கவுஜ எழுதுவேம், எங்களுக்கும் எழுத தெரியும்ன்னு கூவி
எல்லாரும் நல்லா பார்த்துக்குங்கே நானும் ஒரு கவுஜ போட்டிருக்க்கேன்.
எல்லாரும் காதல், நட்பு, சோகம் என்று தொடுவார்கள், ஆனால் காமத்தைத் தொட்டால் இமேஜ் குறித்து பயப்படுவார்கள், ஆனால் நாந்தான் வித்தியாசமான பைத்தியம் ஆயிற்றே, கொஞ்சம் அதிகமாக காமத்தைத் தொட்டுள்ளேன். படித்து விட்டு புரிந்ததால் விளக்கவும், கோபப்பட்டால் திட்டவும், அடிக்கவும், ஏன் காறித்துப்பக் கூட உங்களுக்கு உரிமை உண்டு, ஆனால் உங்களின் கருத்தை மட்டும் சொல்லாமல் போகாதீர்கள்.
சொல்ல விருப்பம் இல்லாவிட்டல் வந்ததுக்கு அடையாளமாக ஸ்மைலி போடவும், கோபம் என்றால் திட்டுவதின் அடையாளமாக -- போடவும்.

இந்தக் கவுஜையின் விரிவு அடுத்த வாரம் அடுத்த பதிவில்.

அய்யா சிங்கக்குட்டி அவர்களே நான் எத்தனை வருடம் மலைக்குப் போனாலும் கன்னிச்சாமிதாங்க. குருசாமி அளவுக்கு பக்குவம் இல்லை.உங்களின் வாழ்த்துக்கு நன்றி.

சென்ற பதிவில் பின்னூட்டம் இட்ட அனைவருக்கும் நன்றி, கோபமோ அல்லது வருத்தமோ இல்லை பாராட்டோ! எனக்கு வேண்டியது உங்களின் பின்னூட்டங்கள் தான்.
பின்னூட்டங்கள் மூலம் உங்கள் கருத்துக்கள்தான் என்னை செதுக்கும் உளி.

நன்றி நன்றி.

Tuesday, November 23, 2010

கார்த்திகை தீபங்களின் திருனாள்

ஸ்வாமியே ஸரணம் அய்யப்பா, இந்த முறையும் மாலை போட்டாகி விட்டது, அந்த அய்யனை தரிசிக்க ம்லை யாத்திரை போகப் போகின்றேன்.

சென்ற முறை அய்யப்பன் தொடரில் கொஞ்சம் கணக்கு தப்பா நான் பதினேரம் வருடம் என்று சொல்லிவிட்டேன், பின்னர் உடன் வரும் நண்பர்கள்தான் திருத்தினார்கள், சென்ற வருடம் சென்றது பதினாலாம் வருடம், இந்த முறை பதினைந்தாம் வருட யாத்திரைக்காக மாலை இட்டாகி விட்டது. பூஜை, கோவில் மற்றும் அலுவலகம் என நல்லா பொழுது போகின்றது. இந்த வருடம் கார்த்திகை தீப பண்டிகைக்கு எங்கள் வீட்டில் இருந்தேன், அவல் பொரி உருண்டை, கடலை உருண்டை, அப்பம், அதிரசம், பொரி உருண்டை என்று பல திண்பண்டங்கள் செய்து இருந்தார்கள். எங்கள் வீட்டு கார்த்திகை தீபங்களை உங்களின் பார்வைக்கு வைத்துள்ளேன்,
எங்கள் வீட்டு ஹாலில் தீபங்களை வைத்து ஏற்றி பின்னர் பூஜை செய்து விளக்குகளை வாசல் மற்றும் பால்கனியில் வைப்போம். அரசாங்க குவாட்டர்ஸ் ஆதலால் பால்கனியில் இடம் கொஞ்சம் சின்னதாக இருக்கும்.விளக்குகளை வைத்த பின்னர் தீபாவளியின் போது கார்த்திகைக்கு என்று எடுத்து வைத்த பட்டாசுகள் மற்றும் புஸ்வாணங்களை விடுவேம். பின்னர் செய்த நொறுக்கு தீனிகளை பக்கத்து வீடுகளில் உள்ள அனைவருக்கும் கொடுத்து, நாங்களும் உண்போம்.

நன்றி.

Friday, November 19, 2010

குழாயடிச்சண்டைஎனக்கு திடிர்ன்னு பல வருடங்களுக்கு முன்னர் பழைய வண்ணாரப் பேட்டையில் கார்ப்பேரசன் குழாயடிச்சண்டை பார்த்தது ஞாபகம் வந்தது. அதை பதிவர்கள் கிட்ட பகிர்ந்துக்காலம் என்ற எண்ணம். டீசண்டான பதிவர்கள் இதைப் படிக்க வேண்டாம். தெருவில் குழாயடியில் நிகழம் இரு பெண்களின் சண்டைக் காட்சிகளை மனதில் கொள்ளவும்.

அடியே, நாங்க நிக்கறது தெரியலை, குடத்தை தூக்கிட்டு முன்னால போற பெரிய துரைசானி இவ.

ஆமா இவ பெரிய மயிறு, இவ நிக்கறான்னு நாங்க ஒதுங்கனுமாக்கும்,

அடியே யாரைப் பார்த்து மயிறுன்ற உன் லட்சணம் தெர்யாதாக்கும், ஊரே நாறுது,

ஆமாண்டி நாதாரி, என் கதை ஊரு நாறுது, நீ மட்டும் என்ன உசத்தியாக்கும், ஒன்னும் தெரியாத என் புருசனை மயக்கி முந்தானையில முடிஞ்சு வைச்சுக் கிட்டியே.

அடியே பல்லை பேத்துப் புடுவேன். அவனை அடக்கத் தெரியல்லை, என் கிட்ட வந்து ரவுசு உடாதே.நீ என்ன யோக்கியமாடி நீயுதான் என் புருசன் கிட்ட பல்லை இளிக்கிற.

ஆமாண்டி நான் இளிச்சா அவனுக்கு புத்தி எங்க போச்சு, ஊராறிஞ்ச நாதாரி என்னைப் பத்திப் பேசாதடி

அடியே நான் ஊராறிஞ்சா? நீ என்ன உலகம் அறிஞ்சவளா.....

பொறம் போக்குக் கழுதை வாயாப் பார்த்தியா என்ன பேச்சுப் பேசறா, அவுசானிக் கழுதை.

ஏய் மரியாதையாப் பேசு, என்ன வுட்டா வாய் நீளுது, அறுத்துப் போடுவேன் அறுத்து நாதாரி நாயே.........

அடியே யாரைப் பார்த்து மரியாதை தெரியாதுன்னு சொல்ற. மரியாதை கொடுப்பதில் நாந்தான் நம்பர் ஒன்னு, நீ மூடிக்கிட்டுப் போடி.......

இப்படியா இந்த் சண்டை பலரின் அந்தரங்கத்தை தெருவில் வைத்து விமர்சனம் செய்யப் பட்டது.இருவரின் கணவன்மாரும் தங்களின் மனைவியரின் சண்டை சாமார்த்தியத்தை மாற்றி மாற்றி புகழந்து கொண்டார்கள். தெரு சணம் பூராவும் வேடிக்கை பார்த்தது இவ சரியா அவ சரியா என விவாதம் பண்ணிக் கொண்டது,
நடுனிலையான என்னை மாதிரி சிலர் கருமமடா சாமின்னு தலையில் அடித்துக் கொண்டது.

ரொம்ப முக்கியமான டிஸ்கியோ டிஸ்கி:---

இது நான் பார்த்த தெரு சண்டைதாங்க, நீங்க பாட்டுக்கு இங்கன ஒருத்தர் அய்யோ ஸ்பெக்ட்ரீம் ஸ்பெக்ட்ரிம்னு அறிக்கை விட, அதுக்கு பதிலுக்கு உன்னைப் பத்தி தெரியாதான்னு, டீன்ஸி,டீன்ஸி கேஸுல மாட்டுன ஆசாமிதான நீ என்று கேக்கறதும், பத்திரிக்கைகள் அதை பெரிதாக, பெருமையாக விளம்பரம் செய்ய, மக்கள் பொழுது போவதற்க்காக பேப்பரை படித்து விவாதம் செய்வதையும்.

பாராளுமண்ற குழுவுக்கு எதிர்க்கட்சிகள் இரகளை பண்ணும் காட்சிகளையும், அதுக்கு எதியுரப்பாவை இராஜினமா பண்ணச்சொல்லி ஆளுங்கட்சி கத்துவதையும் நினைத்துக் கொண்டால் அதுக்கு நான் பொறுப்பு அல்ல.

மூணவது தெரு முச்சந்தியமன் மேல சத்தியமா. மங்குனி சாட்சியா நான் தெரு சண்டையத்தான் எழுதினேன். நீங்களாக எதாவது கற்பனை பண்ணிக் கொண்டால் அதற்க்கு நான் பொறுப்பு அல்ல.

என்னங்க பதிவு கொஞ்சம் கேவலமா இருக்கா, மன்னிச்சுகுங்க, இதுக்கு மேல அழகா விமர்சனம் பண்ண எனக்கு தெரியல்லை.

டிஸ்கி: எனது முந்தைய பதிவுக்கு பலரும் பின்னூட்டம் இட்டமைக்கு நன்றி. நேரம் கிடைக்காததால் பதில் அளிக்க முடியவில்லை. அனைவருக்கும் எனது நன்றிகள்.

Wednesday, November 3, 2010

ஹார்டுவேர் ஆறுமுகம்
ஓல்டு மாமல்லபுரம் சாலையில் உள்ள ஒரு கால் செண்டரில் ஹார்டுவேர் எஞ்சினியருக்கான ஒரு இண்டர்வியு நடக்குது அதுல்ல நம்ம ஆளு பூவை ஆறுமுகத்திடம் கேட்ட கேள்விகளும் பதிலும்தான் இந்த பதிவு. இது சிரிக்க மட்டும்தான், சிந்திக்க அல்ல.

பாஸ்: வெல்கம், பிளிஸ் பி சீட்டட்.

ஆறுமுகம்: இல்லிங்க சார், பரவாயில்லை, என்று தயங்கி நிற்க.

பாஸ்: நோ பிராபளம்,சிட் டவுன்,

ஆறுமுகம் தயங்கிய படி சீட்டின் நுனியில் அமர்கின்றார்.

பாஸ்: உங்களுக்கு கம்புயுட்டர் பத்தி தெரியுமா?

ஆறுமுகம்: ஒரளவுக்கு தெரியும் சார்,

பாஸ்: ஓகே, நோ பிராபளம், இந்த வார்ம் 32 வைரஸ் பத்தி சொல்லுங்க, எனி சொலுன்சன்ஸ் பார் இட்?

ஆறுமுகம்: அது ஒன்னும் பிரச்சனை இல்லைங்க, நம்ம மாட்டாஸ்ப்பத்திரி டாக்டர் கிட்ட போனா பெரிய ஊசிய்யா போடுவாரு,

பாஸ்: வாட்? வாட் டு உ மீன்?

ஆறுமுகம்(பயந்து போய்): சார், இஞ்சக்ஸ்சன், பிக் அண்ட் குட் பார் இட்

பாஸ்: அப்படி ஒரு ஆண்டி வைரஸ் சாப்ட்வேர், ஜ நாட் ஹியர்டு, ஓகே. டு யு நோ அபௌட் புராசஸ் அண்ட் சிப்ஸ்.

ஆறுமுகம்: எனக்கு சிப்ஸ் திங்க தெரியும் ஆனா புராசஸ் எல்லாம் தெரியாது.

பாஸ்: யூ சில்லி, ஓகே, பண்டமெண்டல் நாலேஜ் இருக்கான்னு பார்க்கலாம். வாட் டு யூ டு ஃபார் பிரேக் தி பயர் வால்?

ஆறுமுகம்: பூ இது என்ன பிரமாதம், ஒரு பக்கெட் தண்ணிய ஊத்தினா சுளுவா பிரேக் பண்ணீரலாம்.

பாஸ்: (அதிர்ச்சியாய்) வாட்ட்ட்?

ஆறுமுகம்: கொஞ்சம் பயந்து, அவருக்கு புரியவில்லை என்று நினைத்து, சார் இட் மீன் வாட்டர் புல்லிங்க் ஆன் ப்யர்.
ஆறுமுகம் பயத்துடன் சொன்னது அவருக்கு வார்த்தர் புல்லிங்க என்று கேட்க.

பாஸ்: வார்த்தர் புல்லிங், இட்ஸ் நியூ கான்செப்ட், பட் ஜ யாம் நாட் ஹீயர்டு.ஓகே டு யு நோ அபௌட் ராம், ஹை மெமரிக்கு ஹௌ மெனி சிலாட்ஸ் யூ நீட்? இரண்டா இல்லை மூணா?

ஆறுமுகம்: இந்த இராம் சொன்னாலே, பிரச்சனைதான் சார், ரெண்டா போடு, மூணா போடுன்னு கலாட்டா பண்ணுவாங்க, பேசாம லஷ்மண்னு எதுன்னா புதுசா போடலாம், அதுல்லாதான் பிரச்சனை வராது.

பாஸ்: வாட்? லஷ்மண் சிலாட்டா? ஒகே யு லுக்கிங் இன்னவேட்டிவ், பட் யுவர் நொலொட்ஜ் இஸ் வெரி புவர்.வாட் அபௌட் டிரபுள் சூட்டிங்க.

(கொஞ்சம் பயத்துத்துடன் இருக்கும் ஆறுமுகத்துக்கு அது டபுள் சூட்டிங்க் என்று கேக்கிறது. உடனே சுறுப்பாய் பதில் சொல்றார்.)

ஆறுமுகம்: டபுள் சூட்டிங்க என்னா சார், நம்ம விஜய்ய விட்டா டிரிபிள் சூட்டிங் ஃபைவ் சூட்டிங்க் எல்லா பண்ணுவார், குருவி படத்துல்ல ஆறு குண்டு இருக்க பிஸ்டலை வைச்சு, பதினைந்து பேரை சுடுவார். அதுலையும் நம்ம சூப்பர் ஸடார் இருக்காரே, அவரு ஆள்காட்டி விரல்லையே நூறு பேரை சுட்டுப் போடுவார்.

பாஸ்: வாட் நான்சென்ஸ், கொஞ்சம் கூட அடிப்படை நாலேஜ் கூட இல்லையே, நான் கம்பூட்டர் பத்திக் கேட்டா நீங்க சினிமா பத்திப் பேசறீங்க, ஹௌ யூ கேம் ஃபார் திஸ் இண்டெர்வியு,

ஆறுமுகம் : (பயந்து போய்) என்னது இண்டெர்வியு வா?

பாஸ்: (கோபாமாய்)வாட் யூ ஆஸ்கிங்க, தென் வை சுட் யூ கம் ஹியர்?.இங்க எதுக்கு வந்தாய்?

ஆறுமுகம்: சார் நான் பூக்கார ஆறுமுகம், அதுன்னாலாதான் என்னை எல்லாரும் பூவை ஆறுமுகம்ன்னு கூப்பிடுவாங்க. இங்க இரண்டு மாசமா பூ கொடுத்த காசு வாங்க வந்தேன், முன்னால இருக்கற செவத்த பொம்பளதான் காரிடாரில் இருக்கும் இந்த ரூமுக்குள்ள போகச் சொன்னாங்க.

பாஸ்: ஓ சிட், சாரி ஜெண்டில்மேன் அது பக்கத்துல்ல இருக்க அக்கவுண்ட்ஸ் ரூம். அங்க போங்க.

ஆறுமுகம்: இதை மொதல்லையே சொல்லியிருந்தா எப்பவே காசு வாங்கிட்டு போயிருப்பேன், பொழப்பு கொட்டுப் போச்சு.
(என்றபடி மனதுக்குள்ள சொன்னான், ஜீன்ஸ் போண்ட்டும், டீசர்ட்டும் போட்டுக்கிட்டு சாப்ட்வேர் கம்பெனிக்குள்ள போனா பிகர் படியும் சொன்னதை கேட்டு இத்த மாட்டிக்கிட்டு வந்தது தப்பாப் போச்சு, ஜடிய்யா கொடுத்த சுதாகரு மட்டும் இப்ப கையில்ல மாட்டுன்னான்னு வையி, மகனே துவைச்சு எடுக்க மாட்டேன் என்று புலம்பியபடி வர்றாறு.)

ஆறுமுகம் வெளியில் போனதும், பாஸ் மனதுக்குள் சொல்லிக் கொண்டார், இன்னிக்கு யார் முகத்துல முழிச்சேன்னு தெரியல்லை, காலங்கார்த்தால இப்படியா என்று தலையில் அடித்துக் கொண்டார். ( இந்த பதிவை படித்து விட்டு நீங்கள் அடித்துக் கொள்வதைப் போல)

டிஸ்கி:அனைவருக்கும் எனது தீபாவளி வாழ்த்துக்கள், எல்லாரும் நல்லா கொண்டாடி மகிழ வாழ்த்துகின்றேன். அடுத்த தடவை பதிவு படிக்க வரும் போது கண்டிப்பா ஸ்வீட் கொண்டு வரவேண்டும், இல்லைன்னா இது மாதிரி இன்னேரு பதிவு போட்டுருவேன். ஞாபகம் வைச்சுக்கேங்க.
அனைவருக்கும் எனது உள்ளங் கனிந்த தீபத் திருனாள் வாழ்த்துக்கள்.

முஸ்கி : அல்லாருக்கும் ஒரு முக்கிய ஆறிவிப்பு: தீபாவளித் திருனாள் ஸ்பெசல்லா நம்ம பதிவர்கள் எல்லாரும் அவங்க வூட்டுக்கு கூப்பிட்டு உள்ளார்கள், அட பண்டிக்கைக்கு இல்லிங்க, அவங்க வீட்டில் பலகாரம் பண்ண உதவ சொல்லி இருக்காங்க, நம்ம பதிவர்கள் வீட்டு சமையல் அறை போல ஒரு பதிவர்கள் வீட்டு பலகாரப் பதிவு அடுத்த வாரத்தில் வரும் என்று, தீவாளி போனாஸா சொல்லிக்கிறேன்.

Thursday, October 28, 2010

சகட யோகமும், மக்கு சாம்பிரானியும்


வந்தனம் வந்தனம், வந்த சனம் குந்தனனும். எல்லாருக்கும் இந்த பித்தன் என்ற கோமாளியின் வணக்கங்கள். மிக நீண்ட காலத்திற்கு பிறகு எழுத ஆரம்பித்துள்ளேன்.
தப்பு இருந்தா மன்னிக்கவும், இந்த இடைப்பட்ட காலத்தில் என் நலம் விசாரித்த தங்கைகள்,நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். முதலில் கொஞ்சம் சோகம் சொல்லிவிட்டு பின்னர் பதிவுக்கு போலாம்.

இந்த சகட யோகம் யாருக்கு பொருந்துதோ இல்லையோ, எனக்கு நல்லா பொருந்தும். எங்க அம்மா அடிக்கடி சொல்வார்கள், உனக்கு கால்ல சக்கரம் கட்டி உள்ளது என்று. அதுபோல வாழ்க்கை சக்கரத்தில் மெதுவாக மேலே ஏறிய நான் கண்ணிமைக்கும் நேரத்தில் கீழே இறங்கி விட்டேன். பனை மரத்தில் சிலந்தி கடித்தால் தென்னை மரத்தில் நெறி கட்டுவது போல பொருளாதார பங்கு வீழ்ச்சி என் வேலையை பறித்து விட்டது. சந்தை நிலவரம் காரணமும்,சில சட்ட சிக்கல்கள் காரணமாக என் நிறுவனம் சிங்கையில் வைத்து இருந்த கூட்டு நிறுவனத்தில் இருந்து விலகி விட்டது. ஆதலால் நானும் சிங்கையில் பணி முடித்து இந்தியா வரும்படி ஆகிவிட்டது. எனது இனிய சிங்கை பதிவர்கள் அங்கு ஒரு குழுவாக வந்து நான் திரும்புவது குறித்துக் கருத்துக்களைக் கேட்டனர். குழலி அண்ணா,ஜெகதீஷ்,அருமை ஜோதி, எனது இனிய முகவை இராம், ஞானப்பித்தன் என்னும் வெற்றிக்கதிரவன், என் உடன் பிறவா அண்ணா கோவி.கண்ணன்,இன்னமும் பலர் எனக்கு ஆறுதல் கூறினார்கள். வெட்டிப் பேச்சு சித்ரா, எண்ணங்கள் கீதா அம்மா ஆகியோர் எனக்கு தைரியம் சொன்னார்கள். நானும் பித்தனுக்கு(பரதேசிக்கு) எந்த மடமும் சொந்த மடம் என்ற எண்ணத்தில் மூட்டை கட்டிக் கொண்டு வந்து விட்டேன்.கோவி. அண்ணா என்னை விமான நிலையம் வரை வந்து வழி அனுப்பி வைத்தார்கள்.கார்டுலஸ் மவுஸ் ஒன்றையும் நினைவுப் பரிசாக அளித்தார்கள்.

இங்கு வந்தால் நான் இல்லாத இரண்டு வருடங்களில் எனது நிறுவனம் அதல பாதாளத்தில் போய் விட்டது. நிறுவனத்தை மீண்டும் கொணரும் முயற்ச்சியில் ஈடுபட்டேன். சில சட்ட சிக்கல்களை என்னால் முடிந்த வரை முடித்து வைத்தேன். ஆனாலும் சம்பளம் கொடுக்கும் அளவுக்குக் கூட நிறுவனம் இல்லாத நிலையில், இரண்டு மாதங்கள் சம்பளம் இல்லாமல் வேலை செய்தேன். ஆனாலும் பயன் இல்லை. என் நிறுவன மேலான் இயக்குனரின் தொடர் அறிவுறுத்தல்கள் பேரில்,விலக மனம் இல்லாமல், அந்த நிறுவனத்தில் இருந்து விலகி விட்டேன். என் வேலை போனது என் குடும்பத்தாருக்கு மிகவும் மகிழ்வை கொடுத்தது. அண்ணாக்கள், அக்காள்மார்கள், அண்ணிகள் எல்லாரும் என்னை கூப்பிட்டு அவர்கள் இல்லத்தில் குறைந்தது ஒரு வாரமாவது தங்கும்படி கேட்க ஆரம்பித்து விட்டார்கள். என் பெரிய அண்ணா, மற்றும் இரண்டாவது அக்கா ஆகியோர் என்னை இரண்டு மாதம் அனைவரிடமும் தங்கி விட்டு ரிலாக்ஸ் செய்து பின்னர் அடுத்த வேலை பார்க்குமாறு கூறினார்கள். நானும் வேலையின் காரணமாக யார் வீட்டிலும் ஒரு நாள் அல்லது மூன்று மணி நேரத்துக்கு மேல் இருந்தது இல்லை. பாசமாக அனைவரும் கூப்பிட்டதால், ஒரு மாதம் அவர்கள் அனைவரின் வீட்டிலும் இரண்டு நாட்களாவது தங்கலாம் எனவும், அம்மாவுடன் பத்து நாள் இருக்கலாம் எனவும் முடிவு செய்தேன். அதன்படி என் பெரிய அண்ணா வீட்டுக்கு சென்றேன். மூன்று நாட்கள் தங்கி இருந்த நிலையில் எனக்குக் கணக்குப் பதிவியலில் வேலை கத்துக் கொடுத்த ஆடிட்டர் யார் மூலமாகவே எனக்கு வேலை இல்லாத விசயத்தைத் தெரிந்து போன் செய்து உடனடியாக வரும்படி அழைத்தார்.

நான் போன போது சென்னையில் ஒரு பெரிய நிறுவனத்தில் கணக்கு மேலாளர் வேலை காலியிருக்கின்றது, நான் ஒரு நல்ல ஆளாக உன்னை அனுப்புவதாக கூறிவிட்டேன் என்று கூறி கையேடு காரிலும் ஏத்தி அழைத்துப் போய்விட்டார். எனக்கு மனம் இல்லாவிட்டாலும் அவர் குரு போன்றவர். அவரின் வார்த்தைகளை தட்ட முடியாமலும் மனம் இல்லாமலும் அந்த நிறுவனத்தில் இணைந்து விட்டேன். சரி ரொம்ப அறுத்துவிட்டேன். இனி நம்ம ஸ்டைல் பதிவுக்குப் போகலாம்.

இந்த நிகழ்வுகள் எல்லாம் என்னைப் பாதிக்கவில்லை, ஆனால் இப்போ இந்த நிறுவனம் இருக்கும் இடம்தான் கயலான் கடை ஏரியா. புதுக்பேட்டையில் கார்கள் தட்டுமுட்டு சாமானங்கள் உடைக்கும் இடம். சுத்தியும் குப்பை கூளமான கூவம் ஏரியா, சுத்தமான சிங்கையில் இருந்து குப்பை தொட்டியில் போட்டது போல.
உயரத்தில் இருந்து அதல பாதாளத்தில் விழுந்து போல் இருந்தது. ஆனால் நிறுவனமும் அதன் மேலான் இயக்குனரும் மிகவும் அன்பான, தங்கமானவர்கள். என்னை மிகவும் நன்றாக வைத்துள்ளார்கள். நான் நேர்காணலின் போது அவரிடம் என்ன ஆணி எல்லாம் புடுங்கலாம் என்ற போது, அவர் இங்கு நீங்கள் கண்டிப்பாக ஆணி புடுங்க்க் கூடாது, சும்மா வேடிக்கை பாருங்கள் அதுபோதும் என்றார். முதலில் ஒரு ஆறு மாதத்திற்க்கு ஒரு சிஸ்டமேட்டிக் அக்கவுண்டிங்க் புரசீஜர் எஸ்டாபிளிஷ் செய்யுங்கள், பின்னர் அது சரி வர இயங்குகின்றதா என்று வேடிக்கை பாருங்கள் அது போதும் என்றார். நான் ஒரு வாரம் நிறுவனத்தை ஸ்டடி செய்துவிட்டு பின்னர் சில யோசனைகளை சொன்னேன். அது அனைத்தும் அவருக்குப் பிடித்து இருந்தது. எக்ஸலண்ட் என்று சொன்ன அவர் பின்னர் என்னிடம் இந்தியா முழுதும் இருக்கும் நிறுவனத்தின் ஆறு கிளைகளின் கணக்கு வழக்குகளையும், நானுறுக்கு மேற்ப்பட்ட டிஸ்ட்ரிபூட்டர்கள் பேமண்ட்களையும் ரிகன்சில் செய்து, சரி செய்து விட்டுப் பின்னர் உங்களுடைய சிஸ்டமேட்டிக் அக்கவுண்ட்ஸை ஆர்கனை செய்யுங்கள். உங்களுக்கு முழு சுதந்திரம் அளிக்கின்றேன், தேவைப் பட்டால் கிளைக்கு செல்லவும், அவர்களுடன் தொடர்பு கொள்ளவும் சொன்னார். பின்னர் ஆறு கிளை மேலாளர்களிடம் என்னை ஈ-கான்பிரஸ்ஸில் அறிமுகம் செய்து, எனது வழிகாட்டுதலின்படி நடக்குமாறு சொன்னர். நானும் இப்போ ஆணி புடுங்குவதில் ரொம்ப பிசியாகி விட்டேன். வரும் திபாவளிக்குள் பழைய ஒன்னரை வருடக் கணக்குகளை ரிகன்ஸ்ஸில் செய்து முடிப்பதில் ஆர்வம்கொண்டு உள்ளேன்.இந்த ஹைடு அண்ட் சீக் போல ரிகண்சில் செய்யும் பணி எனக்கு மிகவும் பிடித்த மனதுக்கு சந்தோசமான பணி ஆகும்.

நாங்க எல்லாம் பீனிக்ஸ் பறவையை போல, சாம்பலாக்கி விட்டாலும் உயித்தெழும் சாதி, திரும்பியும் பழைய நிலைக்கு வருவதற்க்கான முயற்ச்சியில் உள்ளேன். இங்க சென்னையில் மடிப்பாக்கத்தில் தங்கி புதுப்பேட்டையில் வேலை செய்கின்றேன். ஒவ்வெரு வார இறுதியிலும் நான் கல்பாக்கம் (இரண்டாவது அண்ணா வீடு) சென்று விடுவேன். அங்க அவரின் இரண்டரை வயது மகள்தான் படத்தில் இருக்கும் குட்டி(மொட்டை)இப்ப நம்ம கேர்ள் பிரண்டு. எங்க அண்ணிதான் பாவம். நாங்க அடிக்கும் லூட்டி தாங்க முடியாம, சமாளிக்க முடியாமல் கஸ்டப்படுகின்றார். வார இறுதியில் விதவிதமாக சமைத்துப் போடுகின்றார். எங்க அம்மாவும் இப்போது இங்கு இருப்பதால் எனக்கு மிகவும் குதுகுலமாய் உள்ளது. நம்ம யுனிகோடு அழகி சரிவர வேலை செய்யாமல் இருந்ததால், மற்றும் பிரவுசிங்க் செண்டரில் பதிவுகளை படித்து வந்ததால் சரிவர கமெண்ட்ஸ் போட முடியவில்லை. ஆனாலும் முடிந்த வரை அனைவரின் பதிவுகளை ரெகுலராக படிக்கின்றேன். இனி அடிக்கடி பதிவுகள் வரும் என்றும் விரைவில் இங்கு மெமரி கார்டு ரீடர் வாங்கி புகைப் படங்களுடன் சமையல் மற்றும் பொழுது போக்குப் பதிவுகளைப் போடுவேன் என்றும் தெரிவித்துக் கொள்கின்றேன். அடுத்த மாதம் ஏறக்குறைய மூன்று வருடங்கள் கழித்துக் குடும்பத்தாருடன் தீபாவளி கொண்டாடப் போகின்றேன். அது முடிந்தவுடன் எனது சபரி மலை யாத்திரை ஆரம்பித்து விடும். இந்த இரண்டும் முடித்துப் பின்னர் இந்த் நிறுவனத்தில் நான் ஏற்றுக் கொண்ட பணிகளையும் முடித்த பின்னர் தான், இங்கே அல்லது சிங்கையில் வேலைக்கு முயச்சிக்க வேண்டும். அது வரைக்கும் இங்க எனது அட்டாகாசம் தொடரும். நன்றி.
எனக்கு சாட்டில் மிகவும் ஆறுதலாக இருந்த கிருஷ்ண மூர்த்தி அவர்களுக்கும்,சித்ராவுக்கும் மிகவும் மனமார்ந்த நன்றிகள். ஜலில்லா, சுசி,ஹேமு, தமிழ் அக்கா,எல்.கே,மேனகா,சாருஸ்ரீராஜ்,மாதேவி,ஆனந்தி மற்றும் நான் பதிவு போடாவிட்டால் கூட மறக்காமல் விருது அளித்த தம்பி ஜெய்லானி, நம்ப சைவ கொத்து சார், பிரகாஷ், இப்பவும் செல்லில் உரை ஆற்றும் மான்புமிகு,பாசமிகு, மதிப்புக்கும் மரியாதைக்கு உறி(ரி)ய மங்குனி அமைச்சர் அவர்களுக்கும் எனது நன்றிகள். பட்டாவுக்கு நன்றி சொல்லாவிட்டால் சோடா பாட்டில் வீசுவார் அவருக்கும் எனது நன்றிகள்.(பட்டா உங்களை விட மாட்டேன் இராசாஆஆஆஅ). மிக முக்கியமாக நான் சென்னை வந்து விட்டேன் என்றதும் தொடர்பு கொண்டு விசாரித்த கேபிள் அண்ணாவுக்கும் எனது நன்றிகள்.

டிஸ்கி: இன்னி கொஞ்ச நாள் சென்னையில் குப்பை கொட்டுவதால் என் தொடர்பு எண்: 9894561034. போனில் திட்டுவபர்கள் கண்டிப்பாக சுவிட்ஸ் ஆப் செய்து இருக்கும் போது போன் செய்யவும்.மிக நீண்ட காலம் ஆகிவிட்டதால் பதிவும் நீளம் ஆகிவிட்டது. மன்னிக்கவும். அடுத்த பதிவு(மொக்கை) (ஹார்டுவேர் ஆறுமுகம்) விரைவில் வெளிவரும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன்.

Wednesday, April 28, 2010

லீவ் விட்டாச்சு ஹையா லீவ் விட்டாச்சு

THERE IS GOOD NEWS FOR READERS, I WILL STOP WRITTING BLOGS DUE TO GOING BACK TO INDIA. SO NO POST HAS BEEN MADE FOR ANOTHER TEN DAYS. IN MY ABSENSE PLEASE CELEBREAT AND MADE JOLY YOURSELF. U ARE FREE FROM MY BLOG POST.

THANKING YOU FRIENDS I WILL BACK SOON.

Friday, April 23, 2010

அய்யாவாவது ஆட்டுகுட்டியாவது

நான் அடி வாங்கின கதையைக் கேட்டீர்கள், நான் வாத்தியாரிடம் அடி வாங்கிய நிகழ்வு இது ஒன்றுதான். நான் ரொம்ப சமர்த்து என்பதால் (அட நம்புங்கப்பா) இதுக்கு அப்புறமும்,சரி முன்னரும் சரி, அடி வாங்கியதில்லை. இன்னேரு சம்பவம் என் பள்ளி நாளில் என் எச்சரிக்கை மீறியதால் ஒருத்தன் தர்ம அடி வாங்கிய சம்பவம் இது. அடுத்தவன் அடி வாங்கியதையும் சொன்னால் தானே நமக்கு ஒரு ஆறுதல்.

எங்கள் பள்ளியில் ஒரு தமிழ் அய்யா இருந்தார். அவர் பெயர் இப்ராஹிம் அய்யா, நல்லா தாட்டியா, கட்ட முட்டையா இருப்பர். அவரு கை மட்டும் சும்மா சப்பாத்தி மாதிரி தடிமனா விரிந்து இருக்கும். ஒரு அறை விட்டா கன்னம் அப்படியே சிங்கார் குங்குமம் தடவுன மாதிரி சிவந்து விடும்.ஆனால் நல்ல குழந்தையைப் போல அனைவரையும் நடத்துவார். இப்ராஹிம் அய்யா கம்பராமாயணம் நடத்தினால் நாள் பூரா கேக்கலாம், அவ்வளவு சுவையாகவும் இனிமையாகவும் இருக்கும். சில சமயம் விளையாட்டாகவும் வேடிக்கையாகவும்,சில சமயம் அடி பின்னிப் பொடலெடுத்து விடுவார். என் வீட்டின் மீது நல்ல மரியாதை வைத்து இருந்ததால் என்னமே இவர் என்னை அடித்தது இல்லை. அப்புறமும் கேக்கும் கேள்விகளுக்கு ஒழுங்கா பதில் சொல்லிவிடுவேன். படிப்பிலும் குறை வைக்க மாட்டேன். ஆதலால் என்னை அடிக்கும் சம்பவம் இல்லை.

ஒரு நாள் நானும், என் நண்பனும் வகுப்புக்கு கொஞ்சம் தாமதமாகப் போனேம். அய்யா வந்துவிடுவார் என்று வகுப்புக்கு ஓடிப் போனேம். முன்னால் சென்ற நண்பன் ஓடிய வேகத்தில் வகுப்புக்குள் ஒரு கால் வைத்து விட்டான். பின்னர் அய்யா இருப்பதைப் பார்த்து நின்று " உள்ளே வரலாமா? அய்யா என்றான். எங்களுக்கு காலதாமதம் அடிப்பாரே என்ற பயம். ஆனால் அய்யா சிரித்தபடி, "அதான் திறந்த வீட்டில் வருவது போல உள்ளே வந்துட்டியே அப்புறம் என்ன உள்ளே வரலாமா? கூடாதான்னு ? உள்ள வா" என்றார். அவன் உள்ளே சென்றான். நானும் சரி கேக்காம போனா நல்லா இருக்காதேன்னு எக்யூஸ்மி சார் என்றேன். அவர் உடனே" " யேவ் அய்யிரே இந்த லொள்ளுதானே ஆகாது, தமிழ் வகுப்பில் என்ன எச்சுவுச்சு மி?, உள்ளாற வந்து தொலை என்றார். அதில் இருந்து நான் எதாவது சொல்ல எழுந்தால் எச்சுவுச்சு மீன்னு கிண்டல் செய்வார். அதில் இருந்து சில நாள் நான் பள்ளியில் எச்சுவுச்சு மி சுதாகர் ஆனேன். சமிபத்தில் ஒரு நாள் என் சொந்த ஊரில், எங்க தெரு வழியாக நடந்து சென்றார். நான் உடனே ஓடிச் சென்று அவரிடம் நலம் விசாரித்தேன். என்னைத் தெரிகின்றதா சார் என்றேன். அவரும் என்னப்பா உன்னைத் தெரியாம எப்படி இருக்கும், நீ எச்சுவுச்சு மி சுதாகர்தானே என்றார். பின்னர் என் தந்தையின் உடல் நலன் குறித்து விசாரித்துப் போனார். என்னைப் பற்றிக் கேட்டதுக்கு நான் சிங்கையில் இருப்பதைச் சொன்னேன். அவரும் எப்படியோ நல்லா இருந்தா சரி ரொம்ப சந்தோசம்பா என்றி சொல்லி மகிழ்வுடன் சென்றார். சரி, வாத்தியார் பற்றிச் சொல்லிவிட்டேன் பதிவுக்குப் போலாமா?

ஒரு நாள் எங்கள் பள்ளியில் எங்களுக்கு பி.டி கிளாஸ் வந்தது, நாங்களும் விளையாடுவதுக்காக சாட்பால் பேட் மற்றும் பந்தை எடுத்துக் கொண்டு போனேம். அப்போது பேட் என் நண்பன் கார்த்திகேய அய்யப்பன் என்பவனிடம் இருந்தது. அவன் கிரவுண்டுக்கும் நடந்து செல்லும் வழியில் பேட்டை தடி சுழற்றுவது போல சுற்றிக் கொண்டு போனான். நான் டேய் வழியில் யாராவது வருவார்கள் என்றேன். உடனே அவன் "எதுக்கு வாரானுங்க"ஓரமாப் போகச் சொல்" என்றபடி சுழற்றினான். நான் பின்னால் திரும்பிப் பார்க்கவும். கழிவறைக்காக எங்களின் பின்னால் இப்ராஹிம் அய்யா வரவும் சரியாக இருந்தது. நான் உடனே டேய் அய்யா வர்றாருடான்னு கத்தினேன். உடனே அவன் குஷியாக, "அய்யாவாது ஆட்டுகுட்டியாவது" என்று சொல்லிக் கொண்டே திரும்பாமல் சுற்றினான். நான் மறுபடியும் டேய் இப்ராஹிம் அய்யாடா என்றேன் சத்தமாக. சடக்கென்று நிறுத்தி விட்டு,சுதா சும்மா வரமாட்டியா, அய்யா அய்யா வர்றாருன்னு" என்று அவன் சொல்லி முடிப்பதுக்குள் ஒரு நாலு அறை சப்பு சப்பென்று விழுந்தது. அவன் அய்யா அய்யான்னு கத்திக் கெண்டே அறை வாங்கினான். அய்யா சொன்னார், " வழியில் சுழற்றுவது தவறு, அதிலும் இவன் அய்யா வர்றாருன்னு சொல்லியும் சுழற்றுகின்றாய்ன்னு" சொல்லி அடித்தார். அவன் அய்யா, "இவன் விளையாட்டுக்குச் சொன்னான்" என்று நினைத்தேன் என்றான். அவரும்,"அய்யாவாது ஆட்டுக் குட்டியாவது என்று வேற சொல்லுகின்றாய்,எவ்வளவு திமிர்டா உனக்கு" என்று சொல்லி,மொத்தமாக ஒரு முப்பது அறை விழுந்து இருக்கும். நானும் என் நண்பர்களும் அமைதியாய் இருந்து விட்டேம்.

அய்யப்பன் நல்ல சிவந்த பையன், வாங்கிய அறைகள் மேலும் அவன் கன்னத்தை நல்லா சிவக்க வைத்து விட்டது. கன்னத்தை தடவியபடி என்னைப் பார்த்தான். உடனே நான், "டேய் நாந்தான் சொன்னேன் இல்லை, அய்யா வர்ராருன்னு, அதுக்கு அப்புறம் ஏண்டா சுத்தினாய்" என்றேன். "எனக்கு என்ன தெரியும் நீ தமாசுக்கு சொன்னாய்" என்று நினைத்தேன். "இப்ராஹிம் அய்யா என்று நீ மொதல்லே சொல்லியிருக்கலாம்" என்றான். சரி சரி விடுடா என்று விளையாட கிரவுண்டுக்குப் போனேம்.

நீங்களும் எல்லாரும் ஒழுங்கா ஒழுங்கா கமெண்ட் போட்டுவிடுங்கள் இல்லை என்றால் அய்யாவிடம் சொல்லி விடுவேன். நன்றி.

Wednesday, April 21, 2010

சொல்லிச் சொல்லி அடிச்சாங்கப்பாமுஸ்கி: நம்ம பட்டாபட்டி, போன பதிவில் சார், சார் ஒரு கதை சொல்லுங்கன்னு சொன்னார். அவருக்கு குஷிப்படுத்தும் வகையில் என் அனுபவத்தைப் பதிவாய்ப் போடுகின்றேன். இது அவருக்கு இன்னமும் குஷியாயிருக்கும்.

சுதாக்குட்டி(நான்) ரொம்ப சமத்துப்பையன், (ஹலோ என்ன பிலாக் விட்டுப் ஓடிப்போறிங்க)அப்படின்னு எங்க அம்மா அடிக்கடி சொல்லிப்பாங்க. அதுபோல படிக்கறப்ப நான் கொஞ்சம் சமத்துதான்(இப்ப இல்லை). ஆனா இப்பவும்,அப்பவும், எப்பவும் எங்கிட்ட ஒரு குறை, என்ன என்றால் யாராது தவறாக பேசினால் அல்லது எதாவது தவறு செய்தால் உடனே ஸ்பாட்டில் சட்டுன்னுகோபம் வரும். மிகவும் தன்மையாக,மென்மையாக பழகும் ஒருவனா இப்படி என்று நினைப்பார்கள். ஆனா அடுத்த பத்தாவது நிமிடத்தில் நானே போய் மன்னிப்பு கேப்பேன் அல்லது என் இப்படி செய்தீர்கள் என்று கேட்டு சரி செய்வேன். அதுக்காக எப்பவும் இப்படி வரும் முன்கோபம் என்று நினைக்க வேண்டாம், இது எப்பாது வரும் அல்லது வெடிக்கும் எரிமலை. ஆனால் சீக்கிரம் புஸ்வாணம் ஆகிவிடும். அதுக்காக நான் எல்லாரிடமும் இப்படி நடந்து கொள்ள மாட்டேன். நான் யாரை அதிகம் நேசிக்கின்றேனே அல்லது பாசம் வைக்கின்றேனே, அவர்களிடம் மட்டும்தான் இந்தக் கோபம் வெளிப்படும். இது உரிமை என்பதா அல்லது அதிக எதிர்பார்ப்பின் வெளிப்பாடா என்பது தெரியாது.நான் இப்போது இந்தக் கோபத்தைக் கட்டுபடுத்த ஆரம்பித்துள்ளேன். இப்ப பரவாயில்லை. நான் பிளஸ் ஒன் படிக்கும் போது வந்த கோபத்தில் கத்த, அது என்னை தர்ம அடி வாங்க வைத்தது. நானும் ஹீரோதான் பதிவில் இந்த பதிவு வரும் என்று சொல்லியிருந்தேன். இப்ப பதிவுக்குப் போலாம்மா?

பிளஸ் ஒன் படிக்கும் போது, காலாண்டு பரிச்சைகள் முடிந்து விடைத்தாள்கள் கொடுத்தார்கள். அது சமயம் கணித ஆசிரியர் திரு. முத்துசாமி என்னும் நல்ல மனிதர், உயர்வானவர். கண்ணியம் மிக்கவர். எங்களின் கணிதத் தாள்களைக் கொடுத்தார். அப்போது சக மாணவர்கள் எல்லாரும் கையில் ஒரு ரெட் இங்க பேனா வச்சுக்கிட்டு, அவனுகளா ஒரு டிக் மார்க் போட்டுக்கிட்டு, ஒன்னு,இரண்டு மார்க் போட்டு, சாரிடம், " சார் டோட்டல் மிஸ்டேக் என்று சொல்லி, அதிக மார்க் எடுத்தார்கள். நான் என் விடைதாளை செக் செய்த போது அதில் நாலு மார்க் கூட்டலில்(உன்மையாக) விடுபட்டு இருந்தது. நான் போய்க் கேக்கலாம் என்ற போது பெல்லும் அடித்து விட்டது. மாணவர்கள் கும்பலாய் வகுப்பில் இருந்து வெளியே போகும் போது கூட மார்க் கேட்டனர். அவரும் ஒரு சிலருக்கு போட்டுக் கொடுத்து, நடந்து கொண்டியிருந்தார். இப்படி போட்டு அவர் வெறுத்துப் போகவும், நான் போகவும் சரியாக இருந்தது. நான் கேக்க ஆரம்பிக்க, அவர் போங்கடா, போங்க, போட்டதுதான் மார்க், இனி யாருக்கும் மார்க்கை கூட்டிப் போட மாட்டேன் என்றார். தப்பாகப் போட்டுப் போனவர்களுக்கு எல்லாம் மார்க் போட்டுவிட்டு, நியாமாகப் போய்க் கேட்ட என்னை உதாசினப்படுத்தியது, திடிரென்று என்னைக் கோபப்படுத்தியது. நான் உடனே " சார் இது டோட்டல் மிஸ்டேக், நான் ஒன்னும் வேணும் என்று போட்டு வரவில்லை" என்றேன். அவரும் எதுவா இருந்தாலும் சரி இனி போட முடியாது, போட்ட வரை அவ்வளவுதான் போ என்று திரும்பி நடக்க ஆரம்பித்தார். நான் உடனே கோபமாக " போடா .......... என்று திட்டி விட்டேன். இன்று வரை யோசித்தாலும், நானா அப்படி நடந்து கொண்டேன், ஏன் அப்படி செய்தேன் என்று புரியவில்லை. என்னை நான் கட்டுப்பாடு இழந்த சமயம். அவர் காதில் விழுந்து கூட அவர் சட்டை செய்யவில்லை. ஆனால் நான் திட்டிய சமயம் என் பின்னால் வந்து கொண்டு இருந்த இராமசாமி என்ற வாத்தியாருக்கு கேட்டு விட்டது.அவர் என் பின்னால் வா என்று சொல்லி என்னை பிஸிக்ஸ் லோப்புக்கு கூட்டிச் சென்றார். அப்போது கூட என் கோபம் குறையவில்லை. (தூய தமிழ்ன்னா கட்டுரை மாதிரி இருக்கு,இனி மொக்கையாகவே, என் பாணியில் சொல்கின்றேன்.)

நானும் அவர் பின்னால் சென்றேன். அங்கு, முத்துகோபல், லோகநாதன், குழந்தைவேலு மற்றும் விஸ்வநாதன் ஆகியோர் இருந்தனர். (என் பழைய பதிவுகளைப் படிக்காதவர்களுக்கும், புதியவர்களுக்கும் இந்த இடத்தில் ஒன்று சொல்கின்றேன். எங்க அப்பா கல்வித்துறையில் மூத்த எழுத்தராக (சீனியர் ஹெட் கிளார்க்) பணி புரிந்து ரிடையர்டு ஆனார். அவர் ஹெட் கிளார்க் என்றாலும் மாவட்ட கல்வி இயக்குனர் கூட எழுந்து நின்று வணங்கும் வகையில் மூத்தவர்,திறமையானவர். அந்த துறையின் சட்ட நுணுக்கள் அனைத்து அறிந்தவர். பய பக்தி ஒழுக்கம் மிக்கவர். இவர் சென்றால் இயக்குனர் கூட எழுந்து நின்று வணக்கம் சொல்லிவிட்டுப் பின்னர் உக்காந்து கேள்வி கேப்பதை நான் பார்த்து இருக்கின்றேன். இது மரியாதை காரணமாக வந்தது. செல்வாக்கால் அல்ல. அப்படி என்றால் எவ்வளவு சிறந்த மனிதராக இருந்து இருப்பர். என் அக்கா அந்த ஊரில் டீச்சராக இருந்தார்கள். நான் பெரிய மனுசன் ஆனது எப்படின்னு மூன்று பதிவுகளைப் படித்தல் உங்களுக்கு என் அக்காவைப் பற்றியும் தெரியும்.) சரி சொந்த புராணம் விட்டு பதிவுக்குப் போவேம்.

இராமசாமி போயி நான் சொன்னதைச் சொல்லியவுடன் எல்லாருக்கும் ஆச்சரியம். வியந்து அல்லது அதிர்ந்து போயி என்னைப் பார்த்தார்கள், விஸ்வனாதன் மட்டும் சீக்கிரம் வந்து நீயாடா நான் எதிர்பார்க்க வில்லை என்று சொல்லி, என்ன தைரியம் இருந்தால் வாத்தியாரைத் திட்டுவாய் என்று சொல்லி அடிக்க ஆரம்பித்தார். அடின்னா, சும்மா மனுசன் ஊடு கட்டி அடிச்சார். இரண்டு கையிலும் மாறி மாறி அறைந்தார். என்னைப் பார்த்துப் பார்த்து நீயா? நீயா? எனக் கேட்டுக் கேட்டு அடித்தார். பின்னர் முட்டி போடச் சொல்லி விட்டார். அவருடன் இருந்த் முத்துகோபல் என்ற ஆசிரியர், எங்கள் குடும்பத்துக்கு மிகவும் வேண்டியவர். அவரின் மனைவி சரஸ்வதி எங்க அக்காவுடன் டீச்சராக பணிபுரிகின்றார். கம்பளியம்பட்டி என்ற ஊரைச் சேர்ந்தவர்கள். இந்த முத்துகோபால் என்னை அடிக்கும் விஸ்வநாதனுக்கு தூபம் போட ஆரம்பித்தார். விஸ்வனாதனும் சொல்லிச் சொல்லி அடிக்க ஆரம்பித்தார்.

முத்துகோபால் : என்னால இன்னமும் நம்ப முடியவில்லை, இவன் பாருங்க இப்படி செய்துள்ளான். இவர் சொல்லி முடித்த உடன் விஸ்வநாதன் எழுந்து என்னை டாமார், டமார், சடார்,சடார்ன்னு ஒரு நாலு சாத்து சாத்துவார். அப்புறம் மறுபடியும் முட்டி போடனும். என் சக மாணவர்கள் எல்லாம் ஜன்னல் வழியாக என்னமோ ஆப்பிரிக்காவில் பிடித்த கருங்குரங்கைக் கூண்டுக்குள்ளாற பாக்குற மாதிரி வேடிக்கை பார்த்தார்கள். எனக்கு அவமானம் பிடிங்கித் தின்றது. இன்னமும் கொஞ்ச நேரம் போயி இருக்கும் முத்துகோபால் ஆரம்பித்தார்.

முத்துகோபால் : இவன் அப்பா எவ்வளவு பெரிய மனிதர், எவ்வளவு நல்லவர். டிபார்ட்மெண்டில் எவ்வளவு செல்வாக்கானவர், ஆனா இவன் பாருங்க. என்று சொல்லி முடிக்கும் முன்னர் விஸ்வநாதன் எழுந்து டாமால் டிமீர்ன்னு எனக்கு பூஜா புனஸ்காரங்களைப் பண்ணினார். திரும்பவும் முட்டி போட்டேன். ஒரு பத்து நிமிசம் போயி இருக்கும். முத்துகோபால் மறுபடியும் ஆரம்பிச்சார்.

இவன் அக்கா எவ்வளவு நல்ல டீச்சர், என்ன டோலண்ட், எவ்வளவு போல்ட். ஆனா இவன் பாருங்க இப்படி.
திரும்பியும் சாத்துமுறை ஆரம்பித்தது. டாமால் டிமீர், சார் சார்ன்னு கத்த கதற ஒரே தர்ம அடிதான். எனக்கு டப்பா டான்ஸ் ஆடியிருச்சு. திரும்பியும் முட்டி, கொஞ்ச நேரம் கழித்து,

இவன் அண்ணனுக எல்லாம் இந்த ஸ்கூலில்தான் படித்தார்கள், நல்ல பசங்க, நல்லா படிப்பர்கள், அதிலும் பெரியவன் இரங்க ராஜ் எவ்வளவு திறமை. ஆனா இவன் பாருங்க, மறுபடியும் டமார், டிமீர்ன்னு விழுந்தது. எனக்கு உள்ளுக்குள்ள உதறல், அடப்பாவிங்களா, எங்க வீட்டில் மொத்தம் எட்டு டிக்கெட்டு, இப்படி ஒவ்வெருத்தரா சொல்லி உதைத்தால், எவ்வளவு உதை வாங்குவது என்று. மறுபடியும் முட்டி.

அதுல பாருங்க, இவன் அண்ணன் இராமு ஊரிலே முதல் மாணவன், இப்ப கூட பாலிடெக்னிக்கில் மாநிலத்தில் முதல் மாணவன், ஆனா இவன். டமால், டிமீர்ன்னு விழுந்தது. என்ன தர்ம சங்கடம் பாருங்க. குடும்ப பெருமை பேசினா எல்லாருக்கும் சந்தேசம், ஆனா அன்னிக்கு எனக்கு மட்டும் அவஸ்த்தை. இன்னமும் நாலு இருக்கே அதை எல்லாம் சொல்லி உதைப்பானுங்கான்னு டவுட் வந்துருச்சு. திரும்பியும் முட்டி. இந்த வடிவேலு சொல்வாரே, அதுபோல மாத்தி மாத்தி அடி விழுந்தது.

இவன் அண்ணன் கண்ணன் கூட நல்லா படிச்சான், எவ்வளவு பிரிலியண்ட், ஆனா இவன் பாருன்னு, மறுபடியும் இடி இடிச்சு சாரல் மழை. டெல்லி கணேசை மணிவண்ணன் தெளிய தெளிய வச்சு அடிப்பாரே அது போல என் நிலைமை மேசம் ஆகிடுச்சு.

இப்படியே இவங்க சொல்லிச் சொல்லி தர்ம அடி அடி அடிப்பதைப் பார்த்த லோகநாதன் என்ற வாத்தியார், விஸ்வநாதன் கொஞ்சம் அசந்து பக்கத்து ரூமுக்குப் போன போது, என்னைப் பார்த்து ஏப்பா இப்படி எல்லாம் பண்ணுகின்றாய், படிக்கிற பையனுக்கு இது எல்லாம் தேவையா, நீ கேட்டது நியாயம் என்றாலும் இப்படி எல்லாம் செய்யக் கூடாதுன்னு சொல்லி, என்னைப் பார்த்துப்" போ போய் முத்துசாமி வாத்தியாரிடம் மன்னிப்புக் கேள்" என்று சொல்லி வெளியே போகுமாறு தலையசைத்து சைகை செய்தார். நானும் தலை தப்பியது தம்பிரான் புன்னியம் என்று ஓடி வந்துவிட்டேன். பின்னர் முத்துசாமி சாரிடம் மன்னிப்புக் கேட்ட போது. இது எல்லாம் பெரிய விஷயமா ஸ்டுடண்ட் லைப்புல இது எல்லாம் சகஜம், ஒழுங்கா படிப்பதைப் பாருன்னு சொல்லிச் சிரிச்சார். எனக்கு சொல்லிச் சொல்லி அடித்தது வருத்தம் முத்துகோபால் மீதும் கோபம் இருந்தது. இது நடந்து ஒருவாரம் ஆகியிருக்கும். மாலை நான் கடை வீதி செல்லும் சமயம் வீட்டு வாயில் நின்ற முத்துகோபால் என்னை அழைத்து, ஏன் இப்படி செய்தாய், வாத்தியாரிடம் அவமரியாதை செய்வது மிகவும் தவறு. உன்னை ஹெட்மாஸ்டரிடம் வைத்து டீ.சீ கொடுத்து இருப்பர்கள். நாந்தான் உன் வீட்டாரைப் பற்றிக் கூறி அடியுடன் காப்பத்தினேன். இனி இம்மாதிரி செய்யாதே என்று சொல்லி, படிப்பதைப் பாரு. உங்க அண்ணன் மாதிரி நல்லா படிச்சு, நாலு மார்க் போடவில்லை என்றால் எட்டாக எடுக்க முயற்ச்சி செய் என்றார்.

இதுக்கு அப்புறம் தான் தாடித்தாத்தா சொன்னது எனக்குப் புரிந்தது.

செல்லிடத்துக் காப்பான் சினம் காப்பான்அல்லிடத்துக்
காக்கின் என் காவாக்கால் என்

இப்ப சரிங்களா, நீங்களும் இவன் பாருங்க இப்படின்னு ஒரு பின்னூட்டம் போட்டுக் கும்மலாம். நன்றி.

Monday, April 19, 2010

பிண்டத்தில் உருவாகி


அண்டம் சதிராட பிண்டமாய் நான்
பிண்டத்தில் குடியிருந்து பிண்டமும்
பிண்டத்தைச் சுமக்க நீரினுள்
குடியிருந்தேன் நான்.

முக்கிலும், வாயிலும் நிணமும்
நீரும் சூழ்ந்துருக்க
நாபியில் சுவாசித்துப் பிண்டமாய் நான்,
தவிக்கின்ற பிண்டமாய் நான்

கையும் காலும் சுருட்டிக் கொள்ள
அசைய முடியா சூழலில்
அசைந்தாடும் பிண்டமாய் நான்
ஓசையின்று அழும் பிண்டமாய் நான்

தவிர்ப்பு ஏறி. இடம் போதாமல்
கை,கால் அசைத்து உதைத்து
எழும்பிப் பிண்டமாய் சுழன்று
உதைத்து உதைத்து பிண்டம் வெளி வர

பனிக்குடம் உடைத்து வெளிவர
பிண்டத்தில் இருந்து உயிர்ப்பு
நிலை எய்திப் பிண்டமாய் நான்,
எடுத்துக் கொஞ்சிய கைகளில்
குழந்தையாய் நான்.

நான் வளர்ந்து,வாழ்ந்து
நரை,திரை எய்தி
மரணிக்கும் நாளது
என் மகன் இட்டான் எனக்குப் பிண்டம்
பிண்டத்தில் இருந்து உருவாகிப் பிண்டமானேன்.

Wednesday, April 14, 2010

காக்கா சுட்ட வடை

முஸ்கி : இன்று அனைவருக்கும் எனது இதயம் கனிந்த சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துக்கள். இந் நன்னாளை நாம் சிரிப்புடன் ஆரம்பிப்போம். இந்தப் பதிவை ஒரு நகைச் சுவையாக மட்டும் படிக்கவும். நம்ம தோழி. அன்புடன் மலிக்கா ஒரு வெள்ளைக் காக்கா படத்தை வைத்து கதை எழுதுனாங்க. அதைப் படித்ததில் இருந்து எனக்கும் கதை விடனுமுன்னு, அடச்சே கதை சொல்ல ஆசை வந்துருச்சு. எனக்காக எவ்வளவே பொறுத்துக்குறீங்க, இதுவும் பொறுத்துக்குங்கே. போன பதிவில் நம்ம மங்குனி முதல் பின்னூட்டத்தில் வடை வேணுமின்னு கேட்டார். ஆதலால் இந்த வடைப் பதிவு மங்குனிக்கு சமர்ப்பணம்.
ரெண்டு ஊருல ரெண்டு லட்சம் காக்கா இருந்ததுங்க(எத்தினி நாளிக்குத்தான் ஒரு ஊருலன்னு சொல்றது), அதுல ஒரு காக்காதான் நம்ம ஹீரோயின் வெள்ளைக்காக்கா. இவரு பார்க் ஷேரட்டான் ஓட்டல் கிட்ட ஒரு புளிய மரத்துல ஒரு ஹூபோ கட்டி வாழ்ந்துக்கிட்டு இருந்துச்சு. அந்த மரத்துக்கு அடியில ஒரு 90 வயது பாட்டி வடை சுட்டு வித்துக்கிட்டு இருந்துச்சு. தினமும் இந்தக் காக்கா அந்தப் பாட்டி கிட்டதான் கிரடிட் கார்டுல அக்கவுண்ட் வைச்சு சாப்பிடும். ஒரு நாள் நம்ம தங்கைகள் வெட்டிப் பேச்சு சித்ராவும், யாவரும் நலம் சுசியும், தங்களின் சம வயது தோழியான பாட்டியை விஜய் நடிச்ச வில்லுப் படத்துக்கு வாங்கன்னு கட்டாயமா இழுத்துக் கிட்டுப் போனாங்க. பக்திப் படமுன்னு நினைச்சு பார்த்த பாட்டி, பார்த்தவுடன் பரலோகம் போயிட்டாங்க. இது தெரியாத காக்கா மங்குனி மாதிரி மூனு நாளு பசியோட வடைக்காக காத்துக் கிட்டு இருந்தது. அப்பத்தான் சேட்டை அனுப்பின கொசு மெயிலில் விஷயத்தை தெரிஞ்சு கிட்டு, சோகத்தோட ஜலிலாக்கா சமையல் பதிவை நோட்டம் விட்டது.

அவங்க சுட்டுக்கிட்டு இருந்த கொழுக்கட்டையை அவங்களுக்கு தெரியாம சுட்டுக்கிட்டுப் போயிருச்சு. அது தன்னேட மரத்துக்குப் போயி கொழுக்கட்டையை உடைக்க முடியாம உக்காந்து இருந்தப்போ, நரியார் வந்தார். என்ன காக்கா? இப்படி முழிச்சுட்டு இருக்கேன்னு கேட்டது. காக்காயும் நான் ஜலிலாக்கா செய்த கொழுக்கட்டை எப்படி உடைப்பது என்று தெரியாமல் முழிக்கின்றேன்னு சொன்னது. உடனே நரியார் இது என்ன பிரமாதம்? அதை மரத்து மேல இருந்து தூக்கிப் போட்டினா, உடைஞ்சு போயிடும்ன்னு சொல்லிச்சு. காக்காயும் தூக்கிப் போட, அப்பக்கூட உடையாத கொழுக்கட்டையை நரி தூக்கிக்கிட்டு போயிருச்சு. காக்காயும் ஏமாந்து போயி நம்ம மேனகா அக்கா பதிவுப் பக்கம் திருடப் போச்சு.

அங்கன போன காக்கா, மேனகா 27.10.2009ல போட்டு போனியாகாத சிக்கன் தந்தூரில ஒரு லெக்பீசை லவட்டிக்கிட்டு வந்துருச்சு. அட நம்ம சமையலைக் காக்காவாது இரசிச்சு துண்ணுதேன்னு சந்தோசத்துல அக்காவும் பேசாம விட்டுட்டாங்க. காக்காயும் மரத்துல உக்காந்து பீசைச் சாப்பிடுவதா வேண்டாமன்னு மோந்து பாத்துக்கிட்டு இருந்தது. அப்ப வில்லன் நரியார் சோகமாக,ஜெய்லானி மாதிரி அப்பாவியா முகத்தை வைத்துக் கொண்டு வந்தது. காக்காயும் இன்னிக்கு எப்படியும் ஏமாறக் கூடாதுன்னு பட்டாபட்டி மாதிரி புத்திசாலியா, லெக்பீசை லெக்குக்கு நடுவில் வைத்துக் கொண்டது. இதைக் கவனித்த நரியார், சேப்டியா பண்ற இருடி கவனிச்சுக்கிறேன்னு சொல்லி, சோகமா லுக் விட்டது. இதைப் பார்த்த காக்காயும், நரியாரே இன்னிக்கு என்ன சோகமா இருக்கேன்னு கேட்டது. நரியார் அதை எப்படி சொல்வது?. பெமினா மிஸ். இந்தியா போட்டி நடக்குது. உன்னோட அழகுக்கு நீ கலந்துக்கிட்டினா, உனக்குத்தான் பட்டம் கிடைக்கும், அப்படியோ உலக அழகி,பிரபஞ்ச அழகி எல்லாம் ஆகிவிடலாமுன்னு சொன்னது. உடனே காக்காயும் மெய்மறந்து அப்படியான்னு? இரங்கமணி சொல்ற பொய்க்கு, வாய் பிளக்கும் தங்க மணி மாதிரி ஆகிடுச்சு. அப்பத்தான் நரியார், ஆனா அதுக்கு கேட் வாக் எல்லாம் போகனும், ஆனா உனக்குத்தான் சுத்தாமாத் தெரியாதேன்னு சொல்லுச்சு. உடனே டென்சன் ஆன காக்காயும், மவனே யாரைப் பார்த்து கேட் வாக் தெரியாதுன்னு சொன்னே? அந்தக் கேட்டுக்கே, கேட் வாக் சொல்லிக் கொடுத்த பரம்பரைடான்னு சொல்லி விஜயகாந்து ஸ்டைலில் லெக்கை எடுத்து வைத்தது. லெக்கை எடுத்ததும் லெக் பீசு ஸ்லிப் ஆக, நரியும் காக்காயே எத்தனை சொன்னாலும் உனக்கு எல்லாம் புத்தி வராதுன்னு சொல்லி லெக் பீசை லவட்டிக் கிட்டு ஓடிப் போச்சு.

ஏமாந்து போன காக்காயும், சற்றும் தளராத விக்கிரமாதித்தன் போல, மறுபடியும் புளிய மரத்தில் இருந்து போயி, ஒரு அகில பிரபஞ்ச புகழ் பதிவர் கிட்ட இருந்து வடையைச் சுட்டு வந்தது. மறுபடியும் மரத்துக்கு வந்த காக்காய் வடையைத் திண்பதா வேண்டாமான்னு யோசித்துக் கொண்டு இருந்தது. அப்ப கிளைமோக்ஸில் வரும் சினிமா போலிஸ் மாதிரி, கரட்டா நரி வந்தது. காக்காயும் ரொம்ப எகத்தாளமாக, நரியாரே இன்னிக்கு நீ என்னத் தந்திரம் பண்ணினாலும் பலிக்காது, வடை உனக்குக் கிடைக்காதுன்னு(தமிழரசி கவிதை மாதிரி) சொல்லிச்சு. ஆனா நரி காக்கா வடையை நீயே திண்ணுக்கே, ஆனா அதுக்கு முன்னாடி உன்னைத் திங்க உனக்குப் பின்னாடி பாம்பு ரெடியா இருக்கு பாருன்னு சொல்லுச்சு, காக்காயும் என்னது பாம்பான்னு கேட்டு ஒரு ஜம்ப் பண்ணுச்சு, வடையும் எகிறி விழ, காக்கா சுட்ட வடையை, நரியார் சுட்டுக்கிட்டு ஓடினார்.

நரி ஓடுவதைப் பார்த்த காக்காயும் கை,கால் சுளுக்குன பிரபுதேவா மாதிரி ஒரு டான்ஸ் ஆடுச்சு. ஹை ஹை ந்னு காக்காய்க்கு ஒரே குஷி. சத்தம் போட்டு சொல்லுச்சு.
"போ நரி, போ. அது அந்தக் கன்றாவி சமையல் பதிவர் பித்தனின் வாக்குல, " ஊசிப் போன வடையை ஊற வைச்சுத் தின்பது எப்படி?" அப்படிங்கிற பதிவில் சுட்டது. மக்கா நீ மட்டும் அந்த வடையைத் தின்னா, மகனே உனக்கு சங்குதாண்டின்னு" சொல்லி ஆட ஆரம்பித்தது. இப்படிக்கா காக்கா, நரிக்கு அல்வா கொடுத்தது.

டிஸ்கி: கதைன்னா ஒரு மெசேஜ் இருக்கனும், அதுனால இந்த மெசேஜை நம்ம தலைவர் சூப்பர் ஸ்டார் ஸ்டைலில் விஷ்ன்னு ஒரு விரலைத் தூக்கிப் படிங்க.

" எல்லாரையும் எல்லா நேரத்திலும் எமாத்த முடியாது, அப்படி எமாத்தினாலும் அந்த அண்டவனை எப்பவும் ஏமாத்த முடியாது" இது எப்படி இருக்கு?.
காக்காய் விட்ட அடச்சே காக்காய் படம் கொடுத்த மலிக்காவிற்க்கு நன்றி.

எல்லாரும் எல்லா வளமும்,நிறைவும் பெற இனிய சித்திரைத் தழிழ் நாள் வாழ்த்துக்கள்.

நன்றி நன்றி நன்றி.

Thursday, April 8, 2010

எங்க போயித் தொலைந்ததுவியாழக் கிழமை, இரவு மணி ஒன்பது, நான் மாலை வெளியில் சுற்றியவன் வீடு வந்து பரபரப்பாகத் தேடிக்கொண்டு இருக்கின்றேன். வீடு பூராவும் தேடுகின்றேன். எல்லா இடத்திலையும் தேடுகின்றேன். பரண், கட்டிலடியில்,புத்தக செல்ப்பில் என்று சகலமும் தேடப்படுகின்றது.

எங்க அண்ணா : என்னப்பா தேடுற,

நான் : ஒன்னும் இல்லை அண்ணா.

அண்ணன் : ஒன்னும் இல்லையா? என்ன என்று சொல்லு நானும் தேடுகின்றேன்.

நான் : இல்லை, அவரசம் இல்லை, நான் தேடிக்கொள்கின்றேன்.மனதுக்குள். (சொல்லிவிட்டு திட்டு வாங்க, நான் என்ன மடையனா?)

அண்ணன் : சரி சரி தேடிக்கே.

அண்ணன் போய் விடுகின்றார். நானும் தேடிக்கொண்டு இருக்கின்றேன். கொஞ்ச நேரம் தேடிக் கொண்டு இருக்கும் போது, மன்னி வர்றாங்க.

மன்னி : என்ன தேடுறிங்க.

நான் : ஒன்னும் இல்லை மன்னி,

மன்னி : ஒன்னும் இல்லாமையா! ஒரு மணி நேரமா தேடுறீங்க. சொல்லுங்க என்ன
தொலைச்சிங்க.

நான் : அது யுனிவர்சிட்டியில(பி.ஜி.டிப்ளமோ இன் மார்க்கெட்டிங் மானேஜ்மெண்ட்) இருந்து புக்ஸ் கட்டு வந்தது இல்லையா? அது அப்புறம் எடுத்துக் கொள்ளலாம் என்று வைத்தேன், அதைக் காணவில்லை.

மன்னி : எப்ப வந்தது? எனக்குத் தெரியாதே.

நான் : அது ஒரு ரெண்டு மாசம் இருக்கும், மொத்தம் இரண்டு பண்டில், பத்து புக் இருக்கும்.

மன்னி : அதானே பார்த்தேன். இரண்டு மாசத்துக்கு முன்னால வைச்சது, அய்யாவுக்கு இப்பத்தான் ஞாபகம் வந்துதாக்கும். நல்லாத் தேடுங்க. அப்பத்தான் புத்தி வரும். இப்ப முதலில் சாப்பிட்டு வந்து தேடுங்க. அதையாது உருப்படியா நேரத்துக்குச் செய்யுங்க.

நான் : இதே ஒரு ஜந்து நிமிசத்தில் வருகின்றேன்.

புக் கட்டுக்கள் இரண்டும் பிரிட்ஜின் பின்னாடி சந்து மூலையில் விழுந்து கிடக்கின்றது. கண்டு பிடித்து எடுப்பதைப் பார்த்து விடுகின்றார்.

மன்னி : என்னது இது? இப்படியா புக்கை மூலையில் போடுவது? இன்னமும் புக் சுத்தி இருக்குற கட்டைக் கூட பிரிக்கவில்லை, வந்து இரண்டு மாசம் ஆயிற்று. நல்லா லட்சணமா படிக்கிறீங்க.

நான் : இல்லை மன்னி, அப்புறம் எடுத்துக் கொள்ளலாம் என்று இருந்தேன். அது பின்னால விழுந்து விட்டது.

மன்னி : ஆம்மா இரண்டு மாசமா விட்டு விட்டு, அய்யருக்கு இப்ப ஏன் திடிர்ன்னு ஞாபகம் வந்தது?

நான் : (மென்னு முழுங்கி), இல்லை இந்த வார சனி,ஞாயிறு எக்ஸாம் ஆரம்பம், இந்த வாரத்தில் இருந்து ஜந்து வாரம் வீக் எண்ட் எக்ஸாம்ஸ் இருக்கு.

மன்னி : (அதிர்ச்சியாய்) "என்னது நாளாளைக்கு எக்ஸாமுக்கு, இன்னிக்கு புக்கை தேடுறீங்களா, அய்யய்யே டீ ஆர், ! (அண்ணாவை அழைப்பது) இங்க பாருங்க,நாளாளைக்கு எக்ஸாமாம் இன்னிக்கு புக் தேடுறார் துரை. (நக்கலாக).நல்லா படிக்கிறீங்க போல. உங்களுக்கு எல்லாம் எக்ஸாம் பீஸ்தான் தண்டம்.

அண்ணா : சரி விடு, அன்னிக்கு காலையில தேடாம இப்பவாது தேடுகின்றானே.

மன்னி : சரி, சரி டிபன் சூடு ஆறிவிடும், சாப்பிட்டு விட்டு படியுங்க. ரொம்ப சின்சியர்தான் நீங்கள்.

நான்: சரி என்று தட்டைப் போட்டு உக்காருகின்றேன். அண்ணா மெதுவா ஆரம்பித்து திட்டு விழுகுது.

அண்ணா : என்ன பசங்க நீங்க? ஒரு பொறுப்பு வேணாம், இப்படியா இருப்பாங்க. மத்த பசங்களைப் பாரு, வேலைக்கும் போயிட்டு என்ன அழகா படிக்கிறாங்க. நாளா நாளையிக்கு எக்ஸாமுன்னா, இன்னிக்கா புக்கைத் தேடுவாங்க. உன்னை சொல்லிக் குத்தம் இல்லைடா, உங்களைக் கவலை தெரியாம வளர்த்துட்டேம். அதுதான்.

மன்னி : சரி வளர்ற பையன், சாப்பிடறப்ப திட்டாதீங்க.

அண்ணா: என்ன வளர்ற பையன், வளராத பையன்னு,பையந்தான் வளர்றான், மூளையும் பொறுப்பும் வளர்ந்தால் தானே.

மன்னி : சரி!! சாப்பிட்டு விட்டுப் பேசுங்க, சாப்பிடும் போது பேசாதீங்க. என்ன சுதாகர், இப்படியா இருப்பது? ஒழுங்கா படிங்க. நான் டீ போட்டு பிளாஸ்க்கில் வைக்கின்றேன். இரவு படியுங்க. இந்த இரண்டு நாளாவது ஒழுங்கா படிச்சு பாஸ் பண்ற வழியைப் பாருங்க.

நான் : சரிங்க மன்னி.

அண்ணா : ஆமா டீ ஒன்னுதான் குறைச்சல், சரி, சரி ஒழுங்கா படிக்கற வழியைப் பாரு. ஆபிஸிக்கு வேணா இரண்டு நாள் லீவு போட்டுக்கே.

நான் : இல்லைன்னா ! நான் மேனேஜ் பண்ணிக்கிறேன்.

சாப்பிட்டு முடிந்ததும், நான் மறுபடியும் தேடுகின்றேன்.

மன்னி:அதான் புக்ஸ் கிடைச்சாச்சு, அட்டையை பிரிச்சுட்டிங்களே, மறுபடியும் என்ன தேடுகின்றீர்கள்.

நான் : ஒன்னும் இல்லை,

மன்னி : ஒன்னும் இல்லை என்றால் எதே இருக்கு. சொல்லுங்க, நானும் ஹெல்ப் பண்ணுகின்றேன்.

நான் : இல்லை, நான் தேடிக்கிறேன்.

மன்னி: சும்மா சொல்லுங்க, தேடித் தருகின்றேன். தெரிந்த கதைதானே.

நான் : இல்லை அண்ணாகிட்ட சொல்லிடுவீங்க, அவர் மறுபடியும் திட்டுவார்.

மன்னி : சரி சொல்லவில்லை, அண்ணா திட்டுவார் மட்டும் தெரியுது, பொறுப்பா படிக்கத் தெரியல்லையா? சொல்ல மாட்டேன் சொல்லுங்க, என்ன தேடுறீங்க.

நான் : இல்லை, போன வாரம் ஹால் டிக்கெட் வந்தது, எங்க வைச்சேன்னு தெரியல்லை. அதான்.

மன்னி: சுத்தம்!. பெருமாளே!!!! எப்படி இப்படி இருக்கிங்க. ஹால் டிக்கட்டைக் கூட ஒழுங்க வைச்சுக்க மாட்டிங்களே. நாங்க எல்லாம் எக்ஸாம் சொன்னா போதும், சாப்பாடு எல்லாம் இறங்காது,தூக்கம் வராது. எப்படி இப்படி நெஞ்சழுத்தமா இருக்கீங்க. ஒரு பயமே கிடையாதா?

நான் : இல்லை மன்னி, இங்கதான் சோ கேஸ் மேலை வைத்தேன். காணேம்.

மன்னி : ஏன் உங்களுக்கு ஒரு செல்ப், சூட்கேஸ் எல்லாம் இருக்கு இல்லை, அதில வைக்க வேண்டியதுதானே.

நான் : இல்லை, அப்புறமா கவரை பிரிக்கலாம்ன்னு வைத்தேன். அது எங்கயே காணேம்,

மன்னி : ஆமா புஸ்தக கட்டையே இன்னமும் பிரிக்கலை. ஹால் டிக்கெட் கவரையா பிரிக்கப் போறிங்க. என்ன அவரசம் எக்ஸாம் அன்னிக்கு காலையில் தேடினால் போதும். எதுக்கும் சோ - கேஸ் அடியில பாருங்க, வேலைக்காரி கூட்டித் தள்ளியிருப்பா.

நான் : (குனிந்து எடுத்துக் கொண்டு) ஆமா மன்னி அடியிலதான் விழுந்து இருக்கு, நாளைக்குப் போயித்தான் எக்ஸாமினர் சைன் வாங்க வேண்டும்.

மன்னி : பேச்சுடா, நல்ல கவனமாத்தான் இருக்கீங்க. கஷ்டகாலம். பிளாஸ்க்கில் டீ போட்டு டேபிள்ல வைச்சுருக்கேன். தூக்கம் வந்தால் குடியுங்க. நாங்க தூங்கப் போறேம். டீ வீ பார்க்காம இந்த இரண்டு நாளாவது ஒழுங்கா படியுங்க.

அண்ணா : ஆமா இரண்டு நாள்ல படிச்சு அய்யா டாக்டர் பட்டம் வாங்கப் போறார்.இதுக்கு கட்டுண பீஸைப் பெருமாள் கோவில் உண்டியலில் போட்டா புண்ணியமாவது கிடைக்கும். சரி இப்பவாது ஒழுங்கா படி.

நான் : (ரொம்ப நல்ல புள்ளை மாதிரி) சரிங்க அண்ணா, குட் நைட் மன்னி.

இரண்டு நாளிலும், அதுக்கு அடுத்த வாரத்திலும் வந்த எக்ஸாமும் இரண்டு நாளில் படித்து. அரியர்ஸ் எதுவும் இல்லாமல் சிங்கிள் அட்டம்ப்டில் பர்ஸ்ட் கிளாஸில் பாஸ் பண்ணி விட்டேன்.

மன்னி : நம்ப முடியல்லை, படிக்காம இப்படிப் பாஸ் பண்ணிருக்கீங்க, அதும் பர்ஸ்ட் கிளாஸல. வாழ்த்துக்கள். பால் பாயசம் பண்ணிரலாம். போயிப் பிள்ளையாருக்கு ஒரு ரூபாய் போட்டு,அர்ச்சனை பண்ணி வாருங்கள்.

நான் : பாஸ் பண்ணது நான், பெருமாளுக்குப் பாயசமா,பிள்ளையாருக்கு ஒரு ரூவாய்யா?

மன்னி : இந்தக் குதர்க்கம் எல்லாம் வீட்டுக்கு வெளியில பேசறதேட நிறுத்திக்குங்க. அண்ணா காதுல கேட்டா தொலைச்சிடுவார். தெரியுமில்லை. ஆமா எப்படிப் பாஸ் பண்ணீங்க? பிட்டா இல்லை காப்பியடிச்சீங்களா நம்ப முடியல்லையே.

நான் : மன்னீயீயீ!! எனக்கு பிட்டு காப்பி அடிப்பது எல்லாம் புடிக்காது. இது மார்க்கெட்டிங் பேப்பர்ஸ்தானே. நான் செய்யும் வேலை அதுதானே. அப்புறமும் எல்லா சப்ஜெட்டும் நான் யூஜில படித்ததுதான். நிறைய கேஸ் ஸ்டடிதான் கொடுப்பாங்க,கவனமா எழுதினா போதும், பால் பாயசத்திற்கு தேங்கஸ் மன்னி.

மன்னி : சரி மொதல்ல கோவிலுக்குப் போயிட்டு வாங்க,உங்க அண்ணா அன்னிக்கே என்ன சொன்னார் தெரியுமா?, அவன் சொந்தமா எழுதி பாஸ் பண்னீருவான், ஆனா முன்னாலேயே படித்து நல்ல மார்க் எடுத்தா குறைஞ்சா போயிடுவான் என்றார். இப்ப அவருக்கும் சந்தேசம்.

டிஸ்கி : சித்ரா செல்பேனைத் தொலைத்து விட்டு, தேடிய பதிவால் வந்த கொசுவத்திப் பதிவு இது. உங்களுக்கும் கொசுவத்தி சுத்துமே,அப்ப பதிவா போட்டு விடுங்கள். இந்தப் பதிவைப் போடுகின்றேன் என்று சொன்னதும் சித்ரா என்ன சொன்னாங்க தெரியுமா?

// சித்ரா, இனி நீ செல் போன் தொலைப்பே? தொலைப்பே? தொலைப்பே? தொலைச்சாலும், பதிவு போட்டு உலகத்துக்கு, குறிப்பாக அன்னாச்சிக்கிட்டே சொல்லுவே? சொல்லுவே? சொல்லுவே?..... அவ்வவ்வ்வ்வ்........ //

கொஞ்சம் பெரிய பதிவாய் போய்விட்டது,பொறுமையாய் படித்த அனைவருக்கும் எனது நன்றி.

Monday, April 5, 2010

போலி அல்ல நிஜம்.


சங்கு,சேகண்டியின் சத்தம் மெல்லியதாக அழுவதைப் போல ஒலித்துக் கொண்டு இருந்தது. ஒரு மூலையில் முத்து வாயில் துண்டை வைத்து சோகத்தின் பிம்பமாக அமர்ந்து இருந்தான். ஆண் என்றாலும் தந்தை என்பதால் அழுது,அழுதுஅவன் கண்கள் வீங்கி இருந்தன. வாசலில் பாடை செய்வதில் மும்முரமாக இருந்தார்கள் உறவினர்கள். சர சரமாய்த் பூக்கள் தொடுத்து பாடை உருவாகிக் கொண்டு இருந்தது. முத்துவின் ஒரே மகன் செல்வம் இறந்து கிடந்தான். அவனின் இறுதி யாத்திரை தான் தயாராகிக் கொண்டு இருந்தது. பக்கத்தில் கிழித்துப் போடப்பட்ட கந்தலாய் கிடந்தாள் குருவம்மா. செல்வத்தின் தாய் அழுது அழுது கண்கள் வற்றிப் போயி மனமும் கன்றிப் போனது. அழுகவும், கத்தவும் திரணியற்றுப் போயிருந்தாள். உற்றாரும் உறவினரும் அழுது ஒப்பாறி வைத்துக் கொண்டு இருந்தார்கள். இது எதுவும் தெரியாமல் சன்னாமாய் ஒளிர்ந்து கொண்டு இருந்தது தலைமாட்டுத் தீபம்.

நல்லா ஆடி ஓடி விளையாடிக் கொண்டு இருந்த மகன், காய்ச்சல் என்று மருத்துவ மனைக்குப் போனாள். டாக்டர் கொடுத்த மருந்து அலர்ஜியாகி விட்டது, உடல் முழுதும் நீலம் பார்த்து வீங்கி இறந்து விட்டான் மகன். டாக்டர் மருந்தைக் குத்தம் சொன்னார். மருந்துக் கடைக்காரன் டாக்டரைக் குத்தம் சொன்னார். யாரைக் குத்தம் சொல்லி என்ன பயன். பெற்ற ஒரே மகனே செத்த பின்னர். அழக்கூடத் தெம்பு இல்லாமல் எல்லாரும் சேர்ந்து எம்புள்ளையைக் கொன்னு போட்டேங்களே என்று புலம்பிக் கொண்டு மட்டும் இருந்தாள். பெரியோர்களும்,மற்றேரும் ஆறுதல் சொன்னார்கள். என்ன சொல்லி என்ன பயன் போனது போனதுதானே.

சரி நடந்தது நடந்துருச்சு, இப்படியே மூலையில் உக்காந்து அழுதா போனது வந்துருமா? அடக்கத்துக்கு ஆக வேண்டியதைப் பார்ப்போம் என்று சொல்லி ஊர் பெரிசுகள். பந்ததிற்க்கான ஏற்ப்பாடுகள் நடந்தது. செல்வத்தின் உடலை அழுது கொண்டே குளிப்பாட்டினார்கள். புது பண்ணாடை போட்டு அலங்காரித்து,மாலைகளுடன் சடலம் பாடையில் கிடத்தி வாய்க்கரிசியும் போடப்பட்டது. எல்லாரும் சுத்தி முடித்து பாடையை எடுத்து சவ வண்டியில் வைத்து ஊர்வலம் புறப்படத் தயாராயிற்று.முத்துவும் கொள்ளிப்பானையை எடுத்துக் கொண்டு ஒரே மகனுக்குக் கொள்ளி வைக்க ஊர்வலம் போகத் தயாராய் முன்னால் வந்தான். சங்கு முழங்கி வாண வேடிக்கையுடன், ஒப்பாரிகள் முழங்க ஆரம்பம் ஆகியது. அது வரை ஒதுங்கி இருந்த குருவம்மா பித்துப் பிடித்தவளைப் போல முன்னால் வந்தவள் எட்டி முத்துவின் தோள் துண்டை முறுக்கிப் பிடித்தாள். ஆவேசம் வந்தவள் போல கத்தத் தொடங்கினாள்.

" அடப்பாவி மனுசா! அநியாயமாய் என் புள்ளையைக் கொன்னு போட்டியே? நீ உருப்படுவியா? இந்த வேலை வேண்டாம், விட்டு விடுன்னு எத்தனை தடவை சொன்னேன், கேட்டியா? என்னை மாதிரி எத்தினி பேரு பெத்த புள்ளைங்க இல்லாமத் தவிக்கிறாங்களே!

நான் போக விடமாட்டேன். இனிமே இந்த நாசம் புடித்த கன்றாவி வேலைக்குப் போக மாட்டேன்னு சத்தியம் பண்ணிக் கொடு, இல்லைனா உன்னைப் போக விடமாட்டேன் என்று அடம்பிடித்தாள். ஆவேசம் வந்தவள் போல வெறித்தாள். உடைந்து அழுத முத்து

"இனி கோடி ரூவாய் கொடுத்தாக் கூட இந்த பாவம் புடிச்ச வேலையைச் செய்ய மாட்டேன் குருவம்மா, பணத்துக்காகப் பாவம் பண்ண மாட்டேன். இது செத்துப் போன என் புள்ளை மேல சத்தியம்" என்றான் அழுது வெடித்த குரலில்.

தீர்மானமாக நடக்க ஆரம்பித்தான் சுடுகாட்டை நோக்கி. என்ன செய்வது அவன் மகனின் மீது வைத்து இருந்த அன்பு போலியானது அல்லவே, அவன் போலிக் கம்பெனியின் சேல்ஸ் ரெப்பாய் விற்ற மருந்துகளைப் போல.

டிஸ்கி : இந்தக் கதைக்கான வித்து நம்ம வெட்டிப் பேச்சு சித்ராவால் அளிக்கப்பட்டது. பதிவு போட மனம் இல்லாமல் உக்காந்து இருந்த போது, அண்ணாச்சி போலி மருந்து தொடர்பா உங்க பாணியில் ஒரு கதை போடலாமே என்று சொல்லிய மறுகணம் உருவாகிய கதை இது. பாராட்டு தங்கை சித்ராவிற்கும், நீங்க திட்டினா அது எனக்கும் சாரும். நன்றி

Thursday, April 1, 2010

விளக்காடும் விநாயகர்


இது ஆன்மீகக் கட்டுரை அல்ல. இதுவும் ஒரு மொக்கைதான். இது உண்மையாக நடந்த சம்பவம். நான் பத்தாம் கிளாஸ் படித்த போது நடந்தது. படித்தபோது என்பதை வீட, நண்பனுடன் படிக்கின்றேன் என்று சொல்லி விளையாடப் போயிருவேன். அவன் வீட்டின் அருகில் அதிகம் வெளியில் தெரியாமல் ஒரு குட்டிப் பிள்ளையார் கோவில் இருக்கும். ஆறடி அகலமும்,எட்டடி நீளமும் கொண்ட ஒரு இருட்டுக் காங்கீரிட் கட்டிடத்தில்,பல வீடுகளுக்கு இடையில் இருக்கும்.ஆரவாரம் இல்லாத,கூட்டம் வராத கோவில் அது. காலையில் மட்டும் ஒரு புண்ணியவான் வந்து கோவிலைத் திறந்து, ஒரு குடம் தண்ணிய புள்ளையாரு மேல ஊத்தி,ரெண்டு வாழைப்பழம் வைச்சு பூசை பண்ணிப் பூட்டிப் போனால், அடுத்த நாள் தான் திறப்பார். கூட்டமும் இல்லாமல் படையல்,பூஜைகள் போன்றவை இல்லாமல்,ஒரு அழுக்கு வேஷ்டி, துண்டுடன்,என்னை மாதிரியே இருக்கும் ஏழைப் பிள்ளையார் அவர். கோவில் முன்னால் ஒரு திண்ணை இருக்கும். அதில் எப்பவும் குடிமகன்கள் கண்கள் சிவந்து, புகைப் பிடித்துக் கொண்டு உக்காந்து இருப்பாங்க. இவங்கதான் புள்ளையாருக்கு கம்பனி கொடுப்பவர்கள். (அட பேச்சுத்துணைக்கு அய்யா)


இப்படி இருக்கும் போது ஒரு நாள் தான் அந்த அதியசத்தைக் கவனித்தார்கள். பிள்ளையாரின் முன்னால் ஒரு சர விளக்கு,இரும்பு சங்கிலியில் கட்டித் தொங்க விட்டுருக்கும்.அது காலையில் மட்டும் ஏற்றப்படும். அந்த விளக்கு மெல்லியதாக தானக ஆடத் தொடங்கியது. ஒரே சீரான அசைவில் ஆடத் தொடங்கியது. முதலில் பார்த்தவர் அடுத்தவரிடம் சொல்ல, பின்னர் ஊர் பூராவும் பரவத் தொடங்கியது. எல்லாரும் அதிசயமாகப் பார்க்கத் தொடங்கினார்கள். பிள்ளையாரும் போமஸ் ஆகிவிட்டார். எல்லாரும் போட்டி போட்டுக் கொண்டு பார்த்தார்கள். விளக்கை நிறுத்திப் பார்த்தார்கள். ஆனாலும் விளக்கு மெதுவாக ஆடிய வண்ணம் இருந்தது. ஊர் பூராவும் பேச்சு பரவியதால் எல்லாரும் கும்பலாக,அந்த அதிசயத்தைப் பார்க்கத் தொடங்கினர்கள்.கூட்டம் வர ஆரம்பித்ததும், பலரும் பல காரணங்களைச் சொல்ல ஆராம்பித்தார்கள். மக்கள் சூடும் சுவையுமாகப் பேச ஆரம்பித்தார்கள். ஆளாளுக்கு ஒரு காரணமும் கதையும் சொன்னார்கள்.

கூட்டத்தில் ஒரு பெண்மணிக்கு அருள் வந்து, பிள்ளையாரை யாரும் கவனிப்பது இல்லை,அதுனால கோபத்தில் இருக்கார்.ஆதலால் தான் விளக்கு ஆடுகின்றது எனக் கூறக் கோவில் களை கட்டியது. கோவிலுக்கு வெள்ளையடித்து,முன்புறம் பந்தல் போடப்பட்டு, வாழைத் தோரணம்,மாவிலை, மைக் செட் எல்லாம் அமர்க்களப்பட்டது. விளக்காடும் விநாயகர் என்று டைட்டில் வேற கொடுத்துட்டாங்க. பிள்ளையாரைத் தரிசிக்க நிறைய பெண்மணிகள் கோவிலுக்கு வர,ஊர் திரண்டு அமராவதி ஆற்றில் இருந்து ஊர்வலமாக தீர்த்தம் எடுத்து வந்து திருமஞ்சனம்,ஆராதனை என்று அமர்க்களப் பட்டது. புது வேஷ்டி,புது துண்டு என கனேஷ் கலக்க ஆரம்பிச்சுட்டார். நிறைய கூட்டமும்,பலூன் கடைகளும்,கோலங்களும், சுண்டல்களும் எனக் கோவில் களை கட்டியது. அன்று மாலைதான் விளக்கு ஆடுவது நின்றது. பிள்ளையாரின் கோபமும் குறைந்ததாக அனைவரும் பேசிக் கொண்டார்கள். பூஜைகள்,கூட்டம் எனத் தொடர்ந்து வந்து கொண்டிருந்தன. ஊர் பூராவும் இதுதான் பேச்சு.

இரண்டு நாள்தான் இந்தக் கூத்து நடந்தது. இரண்டு நாள் கழித்து மீண்டும் விளக்கு ஆட ஆராம்பித்தது. மக்கள் குழம்பிப் போயினர். விளக்கு ஆடும் மர்மம் ஏன் என்று தெரியவில்லை. பூஜைகள் தொடர்ந்தன. பின்னர் சிலர் விளக்கு ஆடும் மர்மத்தை கண்டு பிடிக்க முயற்ச்சி செய்தார்கள். ஒரு குறிப்பிட்ட சமயம் விளக்கு ஆடிப் பின்னர் நின்றதையும் குறித்துக் கொண்டார்கள். அப்புறமாகக் காரணத்தையும் கண்டு பிடித்தார்கள். கோவிலின் பின் புறம் ஓட்டினார் போல நாலு பில்டிங் தள்ளி புதுசா ஒரு மாவு மிஷின் கடை ஒன்று திறந்தார்கள். அங்கு மாவு மிஷின் ஓடும் போது எல்லாம் அந்த கட்டிட அதிர்வில் விளக்கு ஆடுவதையும், மிசின் நின்றால், விளக்கு நிற்பதையும் கண்டறிந்தனர். காரணம் கண்டுபிடிக்கப்பட்டவுடன் எல்லாருக்கும் சப் என்று போனது. அவனவன் பிழைப்பைப் பார்க்கப் போனார்கள். அதுக்கு அப்புறமும் ஒரு வாரம் கூட்டம் வந்து போனது, இறுதியில் சுத்தமாகக் குறைந்து பேனது. பிள்ளையாரும் அதுக்கு அப்புறம் பழையபடி, அழுக்கு வேஷ்டிப் பிள்ளையார் ஆகிவிட்டார். மறுபடியும் அவருக்கு குடிமகன்கள் மற்றும் புகைப் பிடிப்பர்வர்கள் தான் துணை.
இது நடந்து ஒரு வாரம் கழித்து சர்ச் வாசலில் உள்ள மேரி மாதா படத்தில் இரத்தம் வழிகின்றது என்று ஒரு பரபரப்புக் கிளப்பினார்கள்.பின்னர் அதுவும் அடங்கியது. என்ன பண்ணுவது கடவுள் என்றாலும் நம்ம மக்கள் மாய மந்திரம்,அதிசயம் மாதிரி ஜோப்படி வித்தை எதாவது செய்தால் தான் கடவுள் என்று ஒத்துக் கொள்வார்கள் போல.

டிஸ்கி: எனக்கு கடந்த ஒருவார காலமாக வைரல் பீவர் வந்து போனது. இப்ப பரவாயில்லை. ஆனாலும் ஜலதோசமும்,கடுமையான உடல் வலியும் உள்ளது. இப்ப மூனு நாள் வார இறுதி விடுமுறை வருகின்றது. அதுனால நல்லா ரெஸ்ட் எடுக்கப் போறேன். திங்கள் சந்திப்போம். நன்றி.

Monday, March 29, 2010

கடவுளும் கோவில்களும் ஒரு ஆராய்ச்சி - 11
சக்திமூலங்களின் சுழற்சிதான் வாழ்க்கை, சக்திமுலங்கள் நம்மிலும், நம்மைச் சுற்றிலும் எங்கும் வியாபித்து இருக்கின்றன. இதையேதான் அங்கும் இங்கும் என எங்கும் நீக்கமற நிறைந்து இருக்கும் பரம்பொருளே என்று பாடியதை அறிவேம். அனைத்து சக்திமூலங்களால் தோன்றியவை என்பதால் தான் குரான் இறைவன் மிகப் பெரியவன், அவன் தன்னில் இருந்து இந்த நிலத்தையும்,நீரையும்,ஆகாயத்தையும், அனைத்தையும் எமக்காக படைத்தான். என்று கூறியுள்ளது. பழைய ஏற்ப்பாடுகள் கூட பரம்பிதாவின் தன்மையை எல்லையற்ற சக்தியாக வடிமைக்கின்றது. நாமும் ஆதிசக்தியாக, பரம்பொருளாக, ஓளியாக பார்க்கின்றேம். இதில் நாம் மட்டும் உருவ வழிபாடுகள் மூலம் கொஞ்சம் வேறுபடுகின்றேம். அதையும் பின்னர் பார்ப்போம். இப்போது சக்திமூலம் தான் இறுதி என்பதும், இது பிராண சக்தி,ஆன்ம சக்தி என்று வகைப் படுத்தியும் பார்த்தோம். பிராண சக்தி பற்றி முந்தைய கட்டுரைகளில் குறிப்பிட்டேன். இனி ஆன்ம சக்தி பற்றிப் பார்ப்போம்.

இந்த ஆன்ம சக்தி உடலில் எந்த பாகத்தில் இருக்கின்றது, என்ன உருவத்தில் இருக்கின்றது என்பது உறுதியாக கூற முடியாது. இது நம் உடல் முழுதும் உலா வரக் கூடியது. இது ஒரு அலைவரிசை போல உடல் முழுதும் பயனிக்கும் தன்மை வாய்ந்தது. கண நேரங்களில் பயணம் செய்யும் வல்லமை பெற்றது. இந்த ஆன்ம சக்தியினை நாம் பெரும்பாலும் உணர்வது இல்லை. நாம் மனது மற்றும் எண்ணங்கள் வழி நடக்கும் போது இந்த சக்தி பெரும்பாலும் அமிழ்ந்து இருக்கும் அல்லது மறைந்து இருக்கும். நாம் இதை உணர முடியாது. எப்போது நமது மனம்,எண்ணம் மற்றும் செயல் ஒரே நேர்க்கோட்டில் வருகின்றதே அப்போது மட்டும் ஒரு சில விநாடிகள் இதை நாம் உணரலாம். இந்த உணர்தலின் வெளிப்பாடு, பரவசம் அல்லது உடல் சிலிர்த்தல் போன்றவைகளால் தெரியும். மலைகளில் பயணம் செய்யும் போது,இயற்கையை இரசிக்கும் போது, முழு மனதுடன் கடவுளை வணங்கும் போது, முழு மனதுடன் அல்லது முழு வேட்கையுடன் கலவியில் ஈடுபடும் போது, நம் மனதுக்கு விருப்பமான செயல்களை செய்யும் போது என பல நேரங்களில் வெளிப்படலாம். இது எல்லாம் ஒரு சில விநாடிகள்தான் அனுபவிப்போம். இதை மனிதன் கண்டறிந்து அவன் உருவாக்கியது கோவில்கள் ஆகும். மனிதனின் இந்த ஆன்ம சக்தி எங்கு எங்கு வெளிப்படுகின்றது என்றும் எவ்வாறு வெளிக் கொணர முடிகின்றது என்றும் அவன் தொடர்ந்த ஆராய்ச்சிதான் கோவில்கள். சக்தி மூலங்கள் பெருகும் இடமாக கோவில்களை வடிவமைத்தான். இது போல வடிவமைக்கப் பட்ட கோவில்களுக்குச் சென்றதும் நம் மனம் பரவசமைடையும். அது வேறு ஒன்றும் இல்லை. இது கோவில்தான் என்று இல்லை, எல்லா வழிபாட்டுத்தலங்களுக்கும் பொருந்தும்.எப்படி என்றால் நம் மனம் ஈடுபாட்டின் காரணமாக, நாம் வழிபடும் போது நமது மனதும்,எண்ணங்களும் ஒன்றுபடத் தொடங்கும். அப்படி ஒரு நேர்க்கோட்டில் இருக்கும் போது ஆன்ம சக்தி உடலில் பரவத் தொடங்கும். இதுவும் பிரபஞ்சத்தில் இருந்து இழுக்கப்பட்டு கோவிலில் குவிக்கும் சக்தி மூலமும் ஒன்று இணையும் போது , நாம் பரவச நிலையை அடைகின்றேம். சராசரி மனிதர்களுக்கு இது ஒரு விநாடியில் ஏற்ப்பட்டு மறையும். இது அவர்கள் அறியாமல் கூட நடக்கும். நடந்தாலும் புற விஷயங்களான பூஜை,புனஸ்காராம், பிரசாதம்,கலை,சிற்பம் போன்றவற்றில் ஈடுபாடு மூலம் இந்த நிகழ்வை நாம் புறக்கணிக்கின்றேம். கோவில் என்பது பூஜைகளுக்கு மட்டும் அன்று நம் மன அமைதிக்காகவும் தான். ஆதலால் நாம் சிறிது நேரம் கருவறை அருகில்(முடிந்தால்) அல்லது பிரகாரத்தில், கொடிமரம் அருகில் அமைதியாய் உக்காந்து வருவது மிகவும் அவசியம். இந்த அமைதியான எண்ணங்களற்ற தன்மை, நம் சக்தி மூலங்களை தூண்டி, பிரபஞ்ச சக்தியுடன் இணைக்கும். இது கோவில்களில் மட்டும் அல்ல உயர்ந்த மலைகளிலும் கிட்டும். எங்கு எல்லாம் எரிமலைகளால்(செம்மண் கரடுகள்) ஆன மலைகள் இருக்கின்றதே அங்கு எல்லாம் சக்தி மூலம் உஷ்ணமாகவும், எங்கு எல்லாம் பாறைகள் உள்ள மலைகள்(மடிப்பு மலை அல்லது படிவுப் பாறைகள்) உள்ளதோ அங்கு எல்லாம் குளுமையான அருமையான, சக்தி மூலங்கள் கிட்டும். சபரி மலை,திருப்பதி, கொல்லி மலை, பர்வதராஜ மலை,சதுரகிரி,வெள்ளியங்கிரி மலை,திருவண்ணாமலை,பழனிமலை, ஸ்ரீசைலம் போன்ற தென்னக மலைகள் எல்லாம் உஷ்ணம் நிறைந்த சக்தி மூலங்களைக் கொடுக்கும் மலைகள். இமயமலை மிகவும் குளுமையான சக்தி மூலங்கள் நிறைந்தது.

மலைகளைப் போலவே, இடங்களுக்கும் சக்தி மூலங்கள் வேறுபடும். இதை வைத்துதான் கோவில்களில் வித்தியாசமும், வழிபாடுகளில் வித்தியாசமும் இருக்கும். சக்தி மூலங்கள் மிகுந்த இடங்களில் கோவில்களை அமைப்பது மூலம் மிகுந்த பயனை அடையலாம். கோவில்கள் அவை கட்டப்பட்ட முறைகள், அங்கு உருவாகும் எண்ண அலைகள், நமது மனதின் செயல்கள் ஆகியவற்றை நாம் கூர்ந்து கவனித்தால் நமக்கு இந்த உண்மை புரியும். இந்த சக்தி மூலங்களை இன்னும் ஒரு விதத்தில் சொல்லலாம். நமது எண்ண அலைகளால்,செயல்களால் சக்தி மூலங்கள் ஏற்றம் அல்லது குறைவு அடைகின்றன என்று கூறியிருந்தேன் அல்லவா?. இது போல நம் சக்தி மூலங்கள் நம் உடலில் பயணிக்கும் போது உஷ்ணமும், ஓளியும் வெளிப்படுகின்றன. நமது உடலில் இருந்து நிறங்கள் அல்லது ஒளிவட்டங்கள் வெளிப்படும். ஓளிவட்டம் என்றதும் கடவுளில் தலைக்கு மேலே இருக்கும் ஓளிவட்டம் மாதிரி இல்லை. நம் உடலை சுற்றிலும் ஒரு வித நிறங்களை வெளிப்படுத்தும். இந்த நிறங்களைப் பற்றியும், அவை தன்மை பற்றியும் நாம் அடுத்த பதிவில் பார்ப்போம். தொடரும். நன்றி.

Friday, March 26, 2010

நானும் ஹீரோதாங்க- மொக்கை


ஒரு வழியாக அந்த நிறுவனத்தில் முதல் வேலை கிடைத்து, அவர்கள் டை கட்டி வரச் சொன்னார்கள் என்று டை வாங்கலாம் என்று இருந்தேன். அதற்குள் என் அண்ணாவின் நண்பன் மகேஷ் என்பவர், என் கல்யாணத்திற்கு வாங்கிய டை சும்மாதான இருக்கு, நான் தருகின்றேன் என்று கூறித் தந்தார். சென்னை வண்ணாரப் பேட்டையில் என் இரு சித்திகள் இருந்தார்கள். மகாராணி தியேட்டர் அருகே வீடு. நான் தினமும், என் வெயிட்டை வீட வெயிட்டான ஒரு சூவை மாட்டிக் கொண்டு, சோளக்கொல்ல பொம்மைக்கு டிரஸ் போட்டாப்புல ரெடிமேடு சர்ட் பேண்டையும் மாட்டி,கழுத்துல நாய்ச்சுருக்கையும் மாட்டிக்கிட்டு, கையில ஒரு புது வி.ஜ.பி ஆல்பா சூட்கேஸை எடுத்துக் கொண்டு போவேன். பத்தாததுக்கு ஜாஸ்மின் அத்தர் வேற. அலுவலகம் கிரீம்ஸ் ரோடு முடிவில் மூர்ஸ் ரோட்டில் இருந்தது. சுருக்கமா சொல்லனும் என்றால் எக்மோர் கோ-ஆப் டெக்ஸ் அருகில். நான் மகராணி தியேட்டர் பஸ் ஸ்டாப்பில் இருந்து காயிதே மில்லத் வந்து இறங்கி, எத்திராஜ் காலேஜ் ரோடு வழியாக நடந்து செல்வேன்.

இப்படிக நான் பாரதி ஆர்ட்ஸ்,காயிதே மில்லத் மற்றும் எத்திராஜ் காலேஜ் கல்லூரிகளைக் கவர் பண்ணினேன்.காலை அலுவலகம் செல்லும் போது, காலைக் கல்லூரி மாணவிகளுக்கும், மாலை திரும்பும் போது மாலைக் கல்லூரி மாணவிகளுக்கும் எஸ்கார்ட் டியூட்டி பார்த்தேன். காலை முழுதும் பீல்டில் சுற்றிவிட்டு, மதியம் 2 மணியளவில் வீட்டுக்கு வந்து சாப்பிட்டு விட்டு,ஒரு தூக்கம் போட்டு, நாலு மணிக்கு கிளம்பி அலுவலகத்திற்குப் போய் ரிப்போட்டிங் முடித்து, 5.30க்கு வீடு திரும்புவது வாடிக்கை. நான் என் பழைய பதிவுகளான பெரிய மனுசன் ஆனது எப்படி பதிவில் நான் சைட் அடிக்க முடியாமல் எவ்வளவு கஷ்டப் பட்டேன் என்று கூறியிருந்தேன். அப்ப சென்னையில் நானும் என் நண்பனும் வசதியாக சுற்றினேம். வேலை ஏரியாக்களில், ஸ்டெல்லா மேரிஸும்,குவின் மேரிஸும் உண்டு. ஆனா நாங்கதான் பார்த்தமே தவிர, எங்களை எந்தப் பொண்ணும் பார்க்கவில்லை. அதைப் பத்தி நமக்கு என்ன கவலை, நாம் நம் கடமையை ஒழுங்கா செய்யனும் இல்லை. இப்படிப் போகும் கட்டத்தில் ஒரு நாள், நான் எஸ்.குமார்ஸ்ஸில் புதிதாக ஒரு ரெடிமேட் பேண்ட் சட்டை வாங்கிப் போட்டுக் கொண்டு,நாய்ச்சுருக்கை மாட்டிக் கொண்டு,ஹீரோ கணக்காய்(நினைப்புத்தான்) காலை அலுவலகம் அவரசரமாகப் புறப்பட்டேன்.

கலைக்கல்லூரி நிறுத்தத்தில் இறங்கி, நான் எத்திராஜ் ரோடு வழியாக நடக்கும் போது,எதிரில் வந்த இரு வட இந்தியப் பெண்கள் மெதுவாகப் புன்னகைத்துப் போனார்கள். அய்யாவுக்கு சந்தேசம் தாங்கவில்லை. நம்மளப் பார்த்துச் சிரிக்கற அளவுக்கு ஹீரோ ஆகிட்டேம்ன்னு மனசில கொண்டாட்டம். இன்னும் நடந்து வரும் போது மற்ற சிலரும் மெல்லியதாகச் சிரித்துப் போனார்கள். "ஆகா,புது பேண்ட்,புது சொக்கா சுதாகரு,கலக்குற சுதாகருன்னு" நினைத்துக் கொண்டேன். இப்படி நடந்து போய் அலுவலகத்தில் ஸ்ரீராம்மின் செகட்டரி வேறு என்னைப் பார்த்து சிரித்தார்கள். நானும் பதிலுக்கு சிரித்து விட்டு, உள்ளே சென்றேன். என்னாடா இது என்னிக்கும் சிரிக்காத ஹெட் வெயிட் பார்ட்டிங்க எல்லாம் சிரிக்குதுன்னு,அவ்வளே டக்கர் ஆயிட்டமான்னு ஒரு பீலிங்கு. பின்னர் என் இருக்கைக்கு சென்று பீல்டு வெர்க் அசைன் செய்து விட்டு, பாஸிடம் ரிப்போட்டிங் முடித்து விட்டு, டீ சாப்பிடுவதற்க்காக, பாண்ட் ரிக்குள் போனேன். அப்போது என் பாஸுக்கும்,எனக்கும் கிளரிக்கல் வெர்க் பண்ணும் பெண் வந்தார். நானும் அவரும் டீ சாப்பிட்டுக் கொண்டு கிளையண்ட்ஸ் பத்திப் பேசிக்கொண்டு இருந்தேம். அவரும் சிரித்துக் கொண்டே கேட்டார். "சுதா நான் ஒன்னு சொன்னா தப்பா எடுத்துக்க மாட்டியே" என்றார். நான் சொல்லுங்க, என்ன விஷயம்? என்றேன்.

இன்னிக்கு நல்லா டீசண்டா, அழகா டிரஸ் பண்ணியிருக்கிங்க என்றார். நான் உச்சிக் குளிர்ந்து "ஆகா, நம்மளும் ஹீரோவாயிட்டமடா அப்புன்னு" என்று நினைத்துக் கொண்டேன். "ஆமாங்க, இன்னிக்கு எல்லா பொண்ணுகளும் என்னைத்தான் பார்த்தார்கள். சிரித்தார்கள்" என்றேன்.சந்தேசமாக, இதற்குள் அவர் டீயைக் குடித்து முடித்து இருந்தார்கள்.அவர்கள் கவனிக்கவில்லை என்று நினைத்து, இன்னேரு தபா சொன்னேன். " இன்னிக்கு பொண்ணுக எல்லாம் அய்யா மேலதான் லுக்கே. எல்லாரும் சிலைட்டா சிரித்துக் கொண்டு வேற போனார்கள். என்றேன். அவரும் ஒரு தரம் சிரித்து விட்டு, பின்னர் அருகில் வந்து, " ஏன் சிரிக்க மாட்டாளுக, முதல்ல ஜிப்பைப் போடுங்க, என்று கூறிவிட்டு அவரசமாகத் திரும்பிப் பார்க்காமல் சென்று விட்டார். நானும் உடனே திரும்பி ஜிப்பைப் போட்டேன். "அட ஆத்தி இதுக்குத்தான் எல்லாம் லுக் விட்டாங்களா லுக்கு, கன்றாவி நம்மளை வைச்சு ஒரு பொருட்காட்சியே நடத்திட்டாங்க போல. என்று நினைத்துக் கொண்டேன். இந்த அனுபவம் இப்போதும் என்னை விட்டுப் போகவில்லை. இப்பக் கூட எதாவது ஒரு பொண்ணு ரோட்டில பார்த்துச் சிரிச்சா, உடனே நைசா ஜிப்பைத் தொட்டுப் பார்த்துக் கொள்வேன். இப்படித்தான் நான் ஹீரோ கணக்கா வேஷம் போட்டு,கட்ச்சியில ஜீரோ கணக்கா ஊரு எல்லாம் நாறிப் போச்சு. மக்கா யாரு என்ன சொன்னாலும் சர்தான், நான் ஹீரோதான் தெரியுதுங்களா. நன்றி.

டிஸ்கி: இது எல்லாம் நடந்து முடிந்தவுடன்,என் நண்பன் வந்தான், என்னடா பீல்டுக்கு போலாம்மா? என்றான். நான் இதே போலாம் என்றேன். குனிந்து பார்த்தவன் என்னடா ஜிப்பை போட்டுட்டியா? என்றான். நான் உனக்குத் தெரியுமா? என்றேன். நான் கலையில் நீ வந்தவுடன் கவனித்து விட்டேன். ஏண்டா சொல்ல வேண்டியதுதானே என்று கேட்டவனிடம் கூலாக,எனக்கு என்ன தெரியும், நீ காத்து வாங்குறேன்னு நினைத்தேன். இருந்த ஆத்திரத்தில் எட்டி அவன் கொரல்வளையைப் பிடித்தேன். அவன் விடுறா, பக்கத்துல உன் பாஸ் இருந்தார்,அதுனால அப்புறம் சொல்லலாம் என்று விட்டு விட்டேன் என்றான். இது சக நண்பர்களிடம் பரவி,பின்னர் ஒருவாரம் என்னை நல்லா ஓட்டினார்கள்.

Wednesday, March 24, 2010

இராமன் எத்தனை இராமனடி

இது ஆன்மீகப் பதிவு மாதிரி இருந்தாலும் மொக்கைதாங்க. அதுனால எல்லாரும் படிக்கலாங்க.(கடவுளைப் பிடிக்காதவர்கள் நேரா ரெண்டாவது பத்திக்கு ஜீட் விடுங்க) எங்கள் ஊர் தாராபுரத்தில் ஸ்ரீகாடு ஹனுமந்தராய சுவாமி கோவில் உள்ளது. சிறு வயதில் இருந்து நான் இந்தக் கோவிலுக்குப் போவது வழக்கம். எட்டாங்கிளாஸில் இருந்து கல்லூரி முடியும் வரை, அதன் பின்னரும் நான் இந்தக் கோவிலுக்கு விடாது தினமும் போவது வழக்கம். இந்தக் கோவில் குறித்து நான் என் முதல் பதிவில்(தப்புத் தப்பான ஸ்பெல்லிங்கில்) இட்டுள்ளேன். இந்தக் கோவிலில் இருக்கும் ஆஞ்சினேயர் ஏறக்குறைய நம்ம பிரண்டு மாதிரி. நான் இப்படிச் சொல்கின்றேனே என்று சாதராணமாக நினைத்து விடாதீர்கள். மிகவும் சக்தி வாய்ந்தவர், வரப் பிரசாதி. இவரை வணங்குவர்களுக்கு நல்லது நடக்கும் என்பது நிச்சயம். நான் மிக நீண்ட நாட்களாய்ப் போனதால் ஒரு இனம் புரியாத அன்னியோன்யம் ஆகிவிட்டது. கடவுள் என்னும் நிலையை வீட அருகில் இருக்கும் உணர்வுதான் ஏற்படுகின்றது. இவருடன் சைட் அடிக்க ஒப்பந்தம் எல்லாம் போட்டுள்ளேன். இந்தக் கோவிலில் இருக்கும் இராமரை நான் அப்பா என்றும், சீதாவை சீதம்மா என்றும் அழைத்து வணங்குவது வழக்கம். இவர்கள் எந்த நேரத்திலும் காத்து, என்னை வழி நடத்துவதாக ஒரு நம்பிக்கை. அந்த நம்பிக்கையில் தான் என் வாழ்க்கை ஓடிக் கொண்டு இருக்கின்றது. நம்பிக்கைதானே வாழ்க்கை. அது முட்டாள்தனம் என்றாலும் மூட நம்பிக்கை என்றாலும், நாம் இறைவனிடம் வைக்கும் நம்பிக்கைதான் வாழ்க்கை. சரியிங்களா நான் சொல்றது?. சரி நான் இப்பக் கோவிலைப் பத்தியும், கடவுளைப் பத்தியும் சொன்னது ஒரு முன்னூரைதாங்க. ஏன்னா அதுதான் இந்த பதிவின் அடிப்படை. பதிவுக்குப் போகலாம்மா?

நான் எனது கல்லூரிக் காலங்களை முடித்து விட்டு, ரிசல்ட்டு வந்தது ஆகஸ்ட் எட்டாம் தேதியன்று. ஆகஸ்ட் 23,1990. என் பிறந்த நாளின் போது, நம்ம தமிழ் சினிமாவில் காட்டுற, ஹீரோ கணக்கா, சாதிப்பதுக்காக ஒரு ரெக்ஸின் பேக்கைத் தூக்கிக் கொண்டு, சென்னைக்குப் புறப்பட்டேன். நல்லவேளையாக சென்னை என்னப் போடா வெண்ணெய் என்று சொல்லவில்லை. நான் ஊருக்கு வந்த என் இரண்டாவது அண்ணாவுடன்(இராமானுஜம்), அப்பா,அம்மா சகிதம் கல்பாக்கம் வந்து அடைந்தேன். கிராமமும் இல்லாமல் நகரமும் இல்லாமல் சிறிய நகராட்சியாக இருந்த ஊரில், இருந்து வந்த நான், மத்திய அரசால் நிர்வகிக்கும் சகல வசதிகளுடன் இருந்த அனுமின் நகரியத்தில் ஈர்க்கப் பட்டேன். கடலும்,பீச்சும் என் நண்பர்களிடம் இருந்து பிரிந்த பிரிவைப் போக்கியது. நான் அப்பா,அம்மா செல்லம், அவர்களுடன் வந்து இருந்ததால் எனக்கு அவ்ளவாக ஹேம் சிக் தெரியவில்லை. நான் ஜாலியாக கல்பாக்கத்தைச் சுற்றுவது,சாப்பிடுவது என்று இருந்தேன். (பின்ன எத்தனை வருட படிப்புக்குப் பின்னர் கிடைத்த ஓய்வு அல்லவா?.) இப்படிப் போகும் போது ஒரு நாள் என் அண்ணா என்னைத் திட்டிவிட்டார். நானும் இரண்டு மாதமாகப் பார்க்கின்றேன். என்ன நீ பாட்டுக்கு இருக்கின்றாய், ஒரு பொறுப்பு கிடையாதா? மேற்க் கொண்டு என்ன செய்யப் போகின்றாய். படிக்க வேண்டும்,வேலைக்குச் சேரவேண்டும் என்ற ஆர்வம் கிடையாதா?, தினமும் செய்தித்தாள் பார்த்து, வேலைக்கு அப்பளை பண்ண வேண்டும் என்று ஒரு பாட்டுப் பாடி விட்டார். இவர் சொன்னது அனைத்தும் வாஸ்த்தவம். அனால் சொல்லும் போது தண்டச் சோறு என்று ஒரு வார்த்தை விட்டு விட்டார். முதல் அண்ணா படிக்கவில்லை என்றார் அடிப்பார்,ஆனால் கடினமான வார்த்தைகளைப் பேசமாட்டார். ஆனால் இவர் மிகவும் மென்மையானவர், அடிப்பது,திட்டுவது போன்றவற்றைச் செய்ய மாட்டார். ஆனால் ஒரு வார்த்தை சொன்னாலும் சுருக்கு என்று தைக்கும் விதமாக செல்வார்.இவரிடம் நான் திட்டு வாங்குவது இதுதான் முதல் தடவை. (அப்புறம் பழகிப் போய்விட்டது). இவர் சொல்லி விட்டு வேலைக்குப் போய் விட்டார். நான் உம் என்று மூஞ்சியத் தூக்கி வைத்துக் கொண்டு இருந்தேன். எங்க அம்மா புரிந்து கொண்டு என்னைச் சமாதானப் படுத்தினார். இருந்தாலும் மன வருத்தத்துடன் நான் மாலை கடற்கரைக்குச் சென்று தனிமையில் அமர்ந்து கொண்டேன்.

அப்போது இந்த இராமரையும், அனுமாரையும் நினைத்து,வருந்தி, என்ன இப்படி மாட்டிவிட்டு விட்டாய். ஒழுங்கா எனக்கு ஒரு வேலை வேண்டும். உடனடியாக ஒரு வேலை கொடுங்கள் இல்லை என்றால் ஊருக்கு வந்து 1008 சுத்து சுத்தி உங்களுக்கு தலை சுற்ற வைத்து விடுவேன் என்று மனமுருகி மனதார வேண்டிக்(மிரட்டிக்) கொண்டேன். மாலை 6.30க்குச் சென்ற நான், இரவு எட்டு மணி வரை இப்படி பல சிந்தனையில் ஆழ்ந்து இருந்தேன். பின்னர் வீடு வந்து விட்டேன். இரவு எட்டரை மணியளவில் என் அண்ணாவின் நெருங்கிய நண்பர்,கோதண்ட இராமன் என்பவர் வந்தார். அவர் ஒரு மார்க்கெட்டிங் வேலை இருக்கின்றது போகின்றாயா என்றார். எங்க இராமு அண்ணா,மார்க்கெட்டிங் வேலை என்றால் அலைச்சல் இருக்கும், மேற்க்கொண்டு படிக்க முடியாது. பின்னும் நான் கிராமப் புறத்தில் இருந்து வருவதால் கம்யூனிக்கேசன் இருக்காது என்றார். ஆனால் எந்த வேலை கிடைத்தாலும் பரவாயில்லை என்ற மன நிலையில் இருந்த நான், அது பரவாயில்லை, நான் போகின்றேன்,படிக்கவும் செய்வேன் என்றேன்(பின்ன நமக்கு ரோசம் ஜாஸ்த்தியில்லை).எங்க அண்ணாவும் உனக்கு மார்க்கெட்டிங் வேலை கிடைக்காது, ஆனால் இண்டர்வியூ ஒரு நல்ல அனுபவமாக இருக்கும், போய் வா என்றார்.


உடனே கோதண்ட இராமன் அண்ணா, என்னை வெங்கட இராமன் என்பவரிடம் அழைத்துப் போனார். அவர் சென்னையில் அவருக்குத் தெரிந்த நிறுவனத்தில் சீனியர் மார்க்கெட்டிங் மேலாளராக பணி புரியும் கல்யாண இராமன் என்பவரிடம் தொலைபேசியில் பேசினார். கல்யாண இராமன் என்னை மறு நாளே இண்டர்வியூக்கு வரச் சொன்னார். இரவேடு இரவாக நான் என் பேண்ட், சர்ட் ரெடி பண்ணி, என் அண்ணாவின் சூவை மாட்டிக் கொண்டு. அந்த நிறுவனத்துக்குச் சென்றேன். அங்கு கல்யாண இராமன் என்னை வரவேற்று, ஸ்ரீராம் என்பவரிடம் அனுப்பி வைத்தார். அவர் முதல் இண்டர்வியூ செய்துப் பின்னர் நிறுவனத்தின் ஜென்ரல் மேனேஜர் பி.கே. நஞ்சப்பா என்பவரிடம் அனுப்பி வைத்தார். அவர் என் கொடுமையான ஆங்கிலமும், புவர் கம்யூனிக்கேசன் அபிலிட்டியும் பார்த்து யோசித்தாலும், நீ ரொம்ப நல்ல பையன். உன்னைப் போன்றேர்( குட் யங் சாப்ஸ்) எங்கள் நிறுவனத்திற்குத் தேவை. நீ தினமும் ஹிண்டு, இண்டியன் எக்பிரஸ் பேப்பர்களைப் படி. நல்ல முன்னேற்றம் வரும் என்று கூறியவர். அனால் சேல்ஸுக்கு நல்ல எபிலிட்டி வேணும்,புது கஸ்டமர்களிடம் உரையாடும் போது மிகவும் சிரமப் படுவாய், ஆதலால் நான் உன்னை சேல்ஸ் அண்டு சர்வீஸ் டிபார்ட்மெண்டில் போடுகின்றேன். சர்வீஸ் என்றால் ஏற்கனவே உள்ள கஸ்டமர்களிடம் ஆர்டர் எடுப்பதுதான்,அதில் அவ்வளவு சிரமம் இருக்காது. ஆர்டர் எடுத்து பேமேண்ட் பாலோ செய்தால் போதும். மெக்கானிக்குகள் சர்வீஸ் செய்வார்கள். கொஞ்ச காலம் அதில் பணிபுரிந்து பழகிக் கொண்டுப், பின்னர் சேல்ஸுக்கு வந்து விடு என்றார். நான் சரி என்று சொல்ல, எதுக்கும் நீ, உன் வீடு மற்றும் உன்னை சிபாரிசு செய்தவர்களிடம் கலந்தாலேசித்து, வந்து ஜாயின் செய் என்றார்.(ஒரு கையத் தூக்கிக் கொண்டு அடிக்க வர்ற மாதிரி இருக்காரு பாருங்க, இன்னேரு கை அபய ஹஸ்தம். அதான் மாலையைப் போட்டு மூடி வைத்து விட்டார்கள்,
கீழே தக்குனுண்டா இருக்கறவங்கதான் இராம்,சீதா மற்றும் அனுமான். இந்தக் கோவிலில் இளைய பொருமாளுக்கு நோ எண்டரி. )


நானும் வீட்டுக்கு வந்து அனைவரிடமும் வந்து என் சம்மதத்தைத் தெரிவித்து விட்டு, அக்டோபர் 19,1990 அன்று முதன் முதலாய் வேலையில் இணைந்தேன். இப்படியாக நான் இராமரை வேலைக்காக வேண்ட, கோதண்ட இராமன்,வெங்கட இராமன்,கல்யாண இராமன்.இராமு அண்ணா, ஸ்ரீராம் ஆகிய அத்தனை இராமர்கள் மூலமாக நான் என் முதல் வேலையில் இணைந்தேன். எங்க நான் மறுபடியும் ஊருக்குத் திரும்பி வந்து கழுத்தறுப்பனோ என்ற பயத்தில் எத்தனை இராமன் இருக்காங்களே அத்தனை இராமர்களையும் விட்டு ஹெல்ப் பண்ணி எனக்கு ஒரு வேலை வாங்கிக் கொடுத்து அவரு எங்கிட்ட இருந்து எஸ் ஆகிட்டாரு.(தலைப்பு வந்துருச்சுங்களா). நானும் கையில பை,கழுத்துல டை, வாயில பொய் என்று என் முதல் வேலை ஆரம்பித்தது. கழுத்தில் நாய்ச்சுருக்கு என்னும் டையைக் கட்டிக் கொண்டு ஆரம்பித்த வேலை. முதலில் அண்ணா நகர், கீழ்பாக்கம்,அம்பத்தூர்,ஆவடி என்று போய்ப் பின்னர், பாரிஸ்,மவுண்ட் ரோடு,தீநகர்,சைதை,தேனாம் பேட்டை என்று மாறியது. மூன்று வருட அனுபவத்தில் நான் மொத்த சென்னையும்,புற நகர் பகுதிகளையும் சுற்றி விட்டேன். 1991 வருட மிகச் சிறந்த சேல்ஸ் அண்டு சர்வீஸ் ரெப் ஆக தேர்ந்து எடுக்கப் பட்டேன். 1993 ல் நான் இந்த நிறுவனத்தில் இருந்து விலகி கூட்டுறவு சங்கத்தின் செயலராக இணைந்தேன். பின்னர் அதையும் விட்டு விட்டு மறுபடியும் மார்க்கெட்டிங் வந்து தமிழகம் மற்றும் தென்னிந்தியாவின் முக்கிய பகுதிகள் அனைத்தும் சுத்தினேன். இதுதாங்க நான் முதன் முதலில் வேலைக்குப் போன வரலாறு.

டிஸ்கி : இதை நான் ஏன் இன்று பதிவாகப் போட்டேன் என்றால் இன்று தலைவருக்குப் பிறந்த நாள். ஸ்ரீராம நவமி. காலையில் பூ, பழம் எல்லாம் வைத்து பூஜை போட்டேன். மாலையில் வடபத்ர காளியம்மன் கோவிலில் இருக்கும் ஸ்ரீராமரை தரிசிக்க வேண்டும். அது ஏன் வடபத்திர காளியம்மன் கோவில் என்றால் அங்கதான் நிறைய பிரசாதம் தருவார்கள். இதுவே எங்கள் வீடு என்றால் இன்று. பூஜை அமர்க்களமாக இருக்கும். நீர்மோர்,பானகம், கோசுமறி,வடை,களத்தம் பருப்பு கண்ணமது(பாசிப்பருப்பு பாயசம்), வாழைக்காய்ப் பொறியல்,பருப்பு தாளித்தது,தயிர்ப்பச்சடி என வயிறுப் புடைக்க தின்று விட்டு, அலுவலகத்திற்க்குப் போய்த் தூங்கலாம்.

ஹேப்பி பர்த் டே டூ இராமா.

( எச்சரிக்கை. இது இத்துடன் முடியாது. இதன் தொடர்ச்சி வெள்ளிக் கிழமையன்று, நானும் ஹீரோதான் என்னும் பதிவில் வரும்,இது ஒரு மரண மொக்கை. படிக்கத் தவறாதீர்)

நன்றி.

Tuesday, March 23, 2010

ஆம்லேட் நிறைவு


இப்படியாக எங்களின் மூன்று ஆண்டு படிப்பு முடிந்து, நான் பைனல் இயர் புராக்ஜட் ரிப்போட்டுகளை ரெடி பண்ணிக் கொண்டுருந்தேன். அதை தட்டச்சு செய்ய எங்கள் வீட்டின் அருகில் உள்ள தட்டச்சு நிலையத்திற்கு கொண்டு சென்றேன். அடித்து முடித்துக் கொடுக்கும் அன்று, நான் அதை வாங்கச் சென்ற போது, அங்கு தாஸ் மாஸ்டர் இருந்தார். அவர் என்னிடம் எனது புராஜட் பத்திக் கேட்டார். நான் விளக்கிச் சொன்னேன். அவரும் அதைப் படித்துப் பார்த்து விட்டு, மிகச் சிறப்பாய்ச் செய்து உள்ளாய், வைவாவில் நல்லா பதில் சொல் என்று சொல்லித் திருப்பிக் கொடுத்தார். கல்லூரி நாட்கள் எல்லாம் முடிந்து விட்டது. தேர்வுகள்தான் இனி பாக்கி. எங்கள் ஊரில் எங்களுக்குத் தெரிந்தவர் வீட்டுக்கு,நான் அடிக்கடி போவது வழக்கம். அவர்கள் வீட்டில் எங்க டீச்சர் அக்காவின் ஸ்டண்ட், ஒரு அக்கா இருப்பார். என்னைச் சிறு வயது முதல் அவர்களுக்குத் தெரியும். மிகவும் பாசமாக இருப்பார். அவர்கள் வீட்டில் இருந்த நால்வரில் ஒருவர் தவிர, அனைவரும் என் மீது அன்பாக இருப்பார்கள். நான் கல்லூரி படிக்கும் சமயம், அவர்கள் எம்காம் படித்துக் கொண்டு இருந்தார்கள். இவரிடம் தான் தனி வகுப்புக்குப் போவார்கள். நானும் இவரைப் பற்றியும், நாங்கள் அடிக்கும் கிண்டலைப் பற்றியும் கூறுவேன். அவர்கள் படிக்கும் மாஸ்டரை அவ்விதம்(ஆம்லேட்)கூறக் கூடாது என்று கண்டிப்பார்கள். இருந்தாலும் நான் இவரைப் பற்றிக் கிண்டல் அடிப்பதை நிறுத்தவில்லை. இப்படித்தான் போய்க் கொண்டு இருந்தது.

ஒரு நாள் நான் அவர்கள் வீட்டுக்குச் சென்றேன். அங்கு ஹாலில், அந்த அக்காவின் அப்பா, தாஸ் மாஸ்டருடன் பேசிக் கொண்டு இருந்தார். அப்ப நான் போனவுடன் என்னையும் அமரச் சொன்ன அவர், தாஸ் மாஸ்டரிடம். "இவரும் உங்க கல்லூரியில் தான் படிக்கின்றான். பையன் எப்படி?" எனச் சாதாரனமாகக் கேட்டார். எனக்கு பகீர் என்றது. "போச்சுடா! மொத்தமாக மானம் கப்பல் ஏறப் போகுது என்று நினைத்தேன். அந்த அக்காவும், மாட்டினாயா என்பது போல சிரித்தார்கள். அவர் கேட்ட விநாடியே சிறிதும் இடைவெளி இல்லாமல், தாஸ் மாஸ்டர் என்னைப் பற்றிக் கூறத் தொடங்கினார். அவர் சொன்னது. " இம்ம், பையன் ரொம்ப நல்ல பையன், நல்லாப் படிப்பான். நான் முதல் வருடத்தில் இவனைப் பற்றிப் பேசிய போது கூட, இவன் டிபார்ட்மெண்டில் இவனுக்கு மிகவும் நல்ல பெயர் இருந்தது. பாடங்களைப் புரிந்து கொண்டு சொந்த நடையில் எழுதுவான். யுனிவர்சிட்டி டாப்பர்ஸில் ஒருத்தனா வந்து, கல்லூரிக்கு நல்ல பெயர் எடுத்துக் கொடுப்பான் என்று எதிர்பார்க்கின்றார்கள். இவன் புராஜட்ஸ் கூடப் பார்த்தேன். நல்லா செய்து இருக்கான், என்று சொல்லிய அவர் என்னிடம் "வைவா எப்படிப் பண்ணினாய்?, என்ன ஸ்கோர்?" என்றார். நானும் 49 அவுட் ஆப் 50 என்றேன். " வெரிகுட் நல்லா படித்து நல்ல மார்க் எடுத்து, உங்கள் டிபார்ட்மெண்ட் பெயரைக் காப்பாற்று" என்றார். நானும் "சரி" என்று கூறித் தலையைக் குனிந்து கொண்டேன். அந்த அக்கா, "பார்த்தியா மாஸ்டரை" என்பது போல, நக்கலாக சிரித்தார்கள். நான் கடைவீதிக்குச் செல்வதாக விடை பெற்றுக் கொள்ள, மாஸ்டரும் தானும் அங்குதான் சொல்வதாகக் கூறி, என்னை வண்டியில் ஏற்றிக் கொண்டார். நாங்கள் இருவரும் கடைவீதி சென்று, சக்தி பேக்கரியில் எனக்கு டீயும், உருளைக்கிழங்கு போண்டாவும் வாங்கிக் கொடுத்தார்.


எனக்கு அவமானம் பிடிங்கித் தின்றது. இப்பக் கூட அவரிடம் மன்னிப்புக் கேக்காவிட்டால் நான் மனிதனே இல்லை(அதான் போண்டா வாங்கிக் கொடுத்தாரில்லை), என்று நெகிழ்ந்த நான்.அவரிடம் திக்கித் திணறி, "சார் நான் பலமுறை உங்களிடம் தவறுதலாய் நடந்து கொண்டுள்ளேன். ஆனாலும் நீங்கள் என்னை மிகவும் உயர்வாய்ப் பார்க்கின்றீர்கள். நான் அப்படி உண்மையில் நடந்து கொள்ளவில்லை. என்னை மன்னித்து விடுங்கள்" என்றேன். அதுக்கு அவர் என் தோளைத் தட்டிக் கொடுத்து," இது எல்லாம் சகஜம் தம்பி, உன் வயசு அப்படி, உன் வயதில் நானும் இப்படித்தான் இருந்தேன். என்னதான் பண்ணினாலும் நீ என் கல்லூரி மாணவன், உன்னை பிறர் முன்னிலையில் நான் எப்படி விட்டுக் கொடுக்க முடியும். அப்படி விட்டுக் கொடுத்தால், நம் கல்லூரியின் பெருமை என்ன ஆகும் என்றார். மேலும் "நான் முதல் வருடம் விசாரித்த போதும், கட் அடிக்கின்றான் என்று கூறிய போதும், உன் டிபார்ட்மெண்டில் உன்னைப் பற்றி நல்ல விதமாகக் கூறினார்கள். சரி இந்த வயதில் இது ஆர்வக் கோளாறு என்று விட்டு விட்டேன். நான் அவரிடம் இரண்டு, மூன்று முறை மன்னிப்புக் கேட்டு விட்டு, வீடு வந்து சேர்ந்தேன். என்னால் யுனிவர்சிட்டி டாப்பராக வர இயலவில்லை என்றாலும் முதல் பத்து இடங்களில் ஒருவனாக வர இயன்றது.(எட்டாம் இடம்)

இது என் வாழ்க்கையில் இரண்டாவதாக நடந்த சம்பவம். முதலாவது நான் பன்னிரண்டாவது படிக்கும் போது, எனக்கு அநியாயம் இழைத்ததாக ஒரு ஆசிரியரிடம் நான் கோபமாக கத்த, அதை அவர் சும்மா விட்டாலும், அதைப் பார்த்த இன்னேர் ஆசியர், என்னை மற்றவர்களிடம் போட்டுக் கொடுத்தார். எல்லா ஆசிரியர்களுக்கும், நான் இப்படி நடந்து கொண்டதில் ஆச்சரியம். இந்தக் குடும்பத்தில் ஒருத்தன் இப்படிப் பண்ணி விட்டானே என்று. ஒரு ஆசிரியர் மட்டும், என்னை சும்மா ஒரு ஒரு மணி நேரம் போட்டுக், குனிய வைச்சுக் கும்மி குலைவையிட்டார். அந்த சுவாஸ்யமான சம்பவம் பின்னால் ஒரு பதிவில் கூறுகின்றேன். இந்த இரண்டும்தான் நான் என் கல்வி வாழ்க்கையில் செய்த தவறுகள். நன்றி .

டிஸ்கி : படத்தில் கையில் வைத்து இருப்பது பிரபல பதிவர். அறிவிலி இராஜேஷ் அவர்கள் பதிவர் சந்திப்பில் கொடுத்த பட்டாணி சுண்டலுங்கே. அதுனால அவருக்கும் நன்றி.