Wednesday, September 9, 2009

எனது கருத்து

(( திராவிடர்கள் ஆப்ரிக்காவைச் சேர்ந்தவர்கள் என்றும் ஆரியர்கள் வந்தேறிகள் அல்ல என்றும் சொல்லவருவதன் முலம்
திராவிடர்களே வந்தேறிகள் என்று கருத்து திணிப்பை வலிந்து செய்வதன் மூலம் உங்கள் கட்டுரையின் நம்பகத்தன்மை பற்றிய கேள்வியிலேயே அதற்கான விடையுமாக இருக்கிறது.))

எனது கட்டுரையில் நான் திராவிடர்கள் இந்தோ ஆப்பிரிக்க மொழிக்குடும்பம் என்றுதான் குறிப்பிட்டேன், வந்தெறிகள் என்ற வார்த்தையை பயன்படுத்தவில்லை, நான் அந்த அளவுக்கு பக்குவப்படவில்லை. எனக்கு என் தாய்,தந்தை,நான் பார்க்கும்,பழகும் மனிதர்கள், சகமொழி,இந்தியர்கள் அனைவரும் என் சகோதரர்கள்தான், எங்கு அவர்கள் இருந்தாளும் எனது இரத்தம்தான்,இதில் பிரித்து ஒரு சாராரை வந்தெறிகள் என கூறும் அளவுக்கு நான் ஒரு பண்பாளன் அல்ல. இந்த உலகில் எல்லாரும் ஒரு வந்தெறிகள்தாம், ஒரு இடத்தில் பிறந்து,ஒரு இடத்தில் படித்து,ஒரு இடத்தில் வேலை பார்ப்பவனும் வந்தெறிதான். ஒரு மாவட்டத்தில் பிறந்து சென்னையில் வேலை பார்ப்பன்,சென்னைக்கு வந்தெறிதான்.
லெமூரியா கண்டம் ஒன்றாக இருந்தபோது வாழ்ந்த மக்கள் காண்டினெண்டல் ட்ரிப்டெசன் காரணமாக ஆஸ்த்திரெலியா, நியுசிலாந்து பிரிந்த போது அங்கு இருக்கும்,இப்பவும் இருக்கும் அபரிஜின் பழ்ங்குடி இன மக்களின் மொழியும் தமிழும் ஒன்றாக இருக்கும், அம்மா, அப்பா அகியன வைத்து தமிழர்கள் ஆஸ்திரெலிய வந்தெறிகள் என்றால் அது எனது அறியாமை ஆகும். இப்ப இருக்கும் அமெரிக்க ஆங்கிலத்தில் வரும் மா, டாட் போன்ற்வை அம்மா, தந்தை போன்ற வார்த்தைகளை ஒப்பிட்டு உவமை கூறினால் எப்பிடி இருக்குமோ அப்பிடிதான் இருக்கின்றது உங்கள் வாதம், திராவிடம் மற்றும் சிந்தி நாகரீகம் எப்படி தங்களுக்கு அருகாமையில் உள்ள நாகரீக சொல்லுடன் கலந்து வருகிறதோ அது போல் ஆரிய நாகரீக சொல்லும் அதன் அருகாமையில் உள்ள லத்தின் நாகரீக சொல்லுடன் கலந்து வந்து இருக்காலாம். எனது கருத்து என்ன என்றால் அப்போது உள்ள பரத கண்டத்தில் அந்த பகுதியிம் நமது இடந்தான்,அதுவும் பாரத்தின் ஒரு பகுதிதான் அங்கு இருந்தவர்கள் வந்தெறிகள் அல்ல என்பதுதான். மனிதன் இருண்ட கண்டத்தில் தொன்றியவுடன் அவன் கூட்டம் பொருக பொருக நதிக்கரைகளை ஒட்டி இடம் பொயர முற்ப்பட்டான். வடக்காக இடம் பொயர்ந்தவகள் காலம்,தட்பவெப்பம் காரணமாக வேறுபாடு அடைய, தெற்க்கா பொயர்ந்தவர்கள் அதற்கு ஏற்றார்போல் மாறுபட்டனர். அப்படித்தான் கறுப்பு,வெள்ளை இனங்கள் வந்துஇருக்கலாம்.
டார்வினின் தத்துவத்தை ஏற்றுக்கொள்ளும் மாக்ஸ்முல்லர் போன்றொர் வெள்ளையர்களுக்கும் கறுப்பு இனம்தான் மூதாதையர்கள் என ஒத்துக்கொள்ள மறுப்பது ஏன். என்னை பொறுத்தவரை நாம் மனிதர்கள் நம்மில் எந்த போதமும் இல்லை, அனால் சமுதாயம் கூறும் ஒலுக்கத்தை (புலால் உன்னாமை,மது அருந்தாமை,பொய் கூறாமை,வஞ்சகம் செய்யாமை, கயமை கொள்ளாமை, மாற்றான் உடமை திருடாமை)கடைப்பிடிப்பவர்கள் உயர்ந்தவர்கள், முறை தவறுவர்கள் தாழ்ந்தவர்கள். இந்த கோட்பாட்டின்படி நானும் தாழ்ந்தவந்தான்.
பின்னுட்டங்களுக்கு பதில் எளுத ஆரம்பித்தால் நான் என் கட்டுரையில் இருந்து விலகி எளுதும்படி ஆகும். ஆகவே எனது கட்டுரை முலுதும் எலுதிவிட்டு முடிவில் பின்னுட்டங்கள் பதில் எளுதுகின்றென்.நன்றி,வணக்கம்.

1 comment:

 1. உயிரின பரிணாம வளர்ச்சியில் ஹோமோ எரக்டர்ஸ் தோன்றியது ஆப்பிரிக்க கண்டத்தில் தான்!
  அதற்குண்டான பாசில்கள் கிடைத்துள்ளன, கார்பன் டேட்டிங் கருவி மூலம் அவை லட்சம் வருடங்களுக்கு முந்தயது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது!

  அவன் ஹோமோ சேபின்ஸாக மாறும் போது இடம் பெயர ஆரம்பித்தான்! வாழும் தகவமைப்புகேற்ப அவனது நிறமும் தோற்றமும் மாறியது! எனக்கு இனத்தில் நம்பிக்கை இல்லை!
  ஆனால் அவர்களது நம்பிக்கை தான் உண்மை என்று ஆணித்தரமாக சொல்வதில் மாற்று கருத்து உண்டு!

  நானும் இது பற்றி விரிவான பதிவொன்றை எழுதுகிறேன்!

  ReplyDelete

என்னை வளர்க்க, கருத்துரையிடுக...

பதிவைப் படித்து கருத்து போடலைனா
உங்க கனவுல பூதம் வரும்,,, ஆமா சொல்லிட்டேன்.