Thursday, September 24, 2009

பகவான் திருமலைசாமி அவர்களின் வரலாறு

பகவான் திருமலைசாமி என்று அழைக்கப்படும் மகான் ஏறக்குறைய நூறு அல்லது நூற்றுஅம்பது ஆண்டுகளுக்கு முன் எங்கள் முன்னேர்கள் வழியில் வந்தவர். எனக்கு ஒரு முறையில் கொள்ளு மாமா ஆவார் (கொள்ளு தாத்தா இருக்கலாம், மாமா இருக்ககூடாதா). இவர் தாராபுரத்தில் இருந்து பொள்ளாச்சி செல்லும் சாலையில் உள்ள சின்னபுத்தூர் என்னும் கிராமத்தில் கிராம கணக்குபிள்ளை என்னும் கர்ணம் ஆக இருந்தார். (முப்பது வருடங்களுக்கு முன் கோவை,ஈரொடு,திருப்பூர் மாவட்டங்களில் உள்ள கிராம கர்ணமாக உள்ளவர்கள் பொரும்பாலும் எனது உறவினர்கள் ஆவார்கள்). இவர் ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் பணிபுரிந்து வந்தார்.

இவர் ஒரு சித்த புருஸர், மகான் என்றும் அழைக்கப்படுகிறார். பகவான் கோயில் என்று ஈரொடு மாவட்டத்தில் உள்ளது இவரின் கோவில் ஆகும். இவர் வாழ்ந்த சமயம் அந்த ஊரிலும் அதை சுற்றி உள்ள கிராமங்களுக்கும் இவர்தான் அறிவிக்கப்படாத டாக்டர். இவர் பெரியம்மை மற்றும் காலரா நேய்கள் அங்கு பரவாமல் காத்துவந்தார்.இவர் எப்பொழுதும் பூஜை,பக்தி ஆகியன செய்துவந்தார். இவரிடம் வரும் பக்தர்கள் மற்றும் உடல்,மனம் சரியில்லாதவர்களுக்கு இவர் விபூதியும் சுக்கு கலந்த கரும்புச்சக்கரை என்னும் நாட்டுச்சக்கரை தான் தருவார். இப்பவும் இவர் கோவிலில் இதுதான் பிரசாதம். அந்த மக்களின் நல்ல நிகழ்வுகளுக்கு இவர்தான் நாள் குறித்து தருவார்.அனைத்தும் இவரைக் கேட்டுத்தான் செய்வார்கள். இவர் செய்த பல சித்து விளையாட்டுக்கள் அற்புதம். இவர் தன் வீட்டின் உள்ள கிணற்றில் மூழ்கி சற்று தொலைவில் உள்ள தோட்டத்தின் கிணற்றில் வெளிவருவார். அறையில் வைத்து பூட்டி பின் அறைக்கு வெளியில் வருவார். அறையை திறந்தால் அதற்குள் இருப்பார். ஒரு சமயம் எங்கள் ஊரின் எல்லையில் உள்ள தில்லாபுரி அம்மன் கோவிலில் சிலர் ஒரு கண்றுக்குட்டியை பலியிடுவதற்க்காக கொணர்ந்தனர். அந்த சமயம் அந்த கன்றுக்குட்டி அவர்களிடம் இருந்து ஓடி ஒரு நாணல் புதரில் சென்று மறைந்தது. அவர்கள் புதரை விளக்கி உள் சென்று பார்த்தபோது அங்கு இவரும், இவரின் நண்பர் ஒருவரும் அழ்ந்த தியானத்தில் அமர்ந்து இருந்தனர். இவர்கள் சென்றவுடன் கண் விழித்த அவர் அடே,அடே, வா லஸ்மி, வந்துட்டியா, பயப்படாத என கூறி கன்றுக்குட்டியை தடவிக்கொடுத்து அவர்களிம் அந்த குட்டியை விட்டுவிடுமாறு கூறினார்.

ஒருமுறை கிராம கணக்கர்களுக்கான ஜமாபந்தி என்னும் கணக்கு பார்க்கும் நாளும் வந்தது, இவர் தியானம், பக்தி மற்றும் யோகம் என்று இருந்ததால் கணக்குகளை சரியாக எழுதவில்லை. ஆங்கிலோய தாசில்தார் இவருடைய கணக்குகளை பார்த்து எழுதப்படாமல் வெறுமையாக வைத்து இருப்பதை பார்த்து அளவற்ற ஆத்திரம் கொண்டார். பின் அவர் இவரிடம் ஏன் கணக்குகளை எழுதவில்லை எனக்கேக்க, இவர் உடனே கைகளை இரண்டையும் மேலே தூக்கி சத்தம் போட்டார். டேய் தொங்காத, நான் இருக்கன் உன்னை காப்பாத்த, உன்ன சாகவிடமாட்டேன் என சத்தம் போட்டார். அதுக்கு அந்த அதிகாரி என்னவென்று கேக்க இவர் நமது ஊர் எல்லையில் உள்ள ஆலமரத்தில் ஒருவன் தூக்குபோட்டு சாகமுயற்ச்சிக்கின்றான், நான் அவனை பிடித்துஇருக்கேன். நீங்கள் போய் சீக்கிரம் அவனை காப்பாத்துங்கள் என்றார். அந்த அதிகாரி அவர் பேச்சை மாத்துவதாக கூறவும், இவர் திரும்பவும் அதையே கூறினார். அப்போது அங்குள்ள துணைத்தாசில்தார் இவரை பற்றி அறிந்தவர் ஆதலால் துரையிடம் இவரைப் பற்றி கூறி போய்ப் பாக்கலாம் என்றார். துரையும் சரி போய்ப் பார்க்கலாம் அப்படி யாரும் இல்லை என்றால் இவரை சிறைக்கு அனுப்புவேன் என்று கூறி ஜீப்பில் சென்றார். அங்கு ஆலமரத்தில் ஒருவன் தூக்குப் போட்டு துடிப்பதைப் பார்த்து அவனைக் காப்பாற்றிவிட்டு வந்தனர். துரை இவரை ஆச்சரியமாக பார்த்துவிட்டு கணக்கு புத்தகத்தைப் பார்த்தால் அது அன்றைய தேதி வரை சரியாக எழுதப்பட்டு இருந்தது. துரை இவரின் சிறப்பை பார்த்துவிட்டு இவரிடம் கடுமையாக நடந்தமைக்காக வருத்தம் தெரிவித்துப்போனார்.

இவர் மற்றும் கௌசல்யா என்னும் இவரின் மனைவியும் சின்னப்புத்தூரில் வசித்தும் அங்குள்ள மக்களுக்கு சேவை செய்துவந்தனர். அந்நிலையில் ஒரு நாள் இவர் தமது நெருங்கிய உறவினர்களை அழைத்து தாமும் தன் மனைவியும் ஓய்வெடுப்பதாக கூறி தங்களின் படுக்கை அறைக் கதவை மூடிக்கொள்ளும்படியும், யாரும் திறக்கவேண்டாம். இரண்டு நபர்கள் வந்து தங்களின் விவரம் சொல்லிக் கேட்ப்பார்கள். அப்பொழுது கதவைத் திறந்தால் போதும் என்று கூறி தங்களின் படுக்கை அறைக்குள் சென்றுவிட்டனர். உறவினரும் அறையை மூடிபூட்டிவிட்டனர்.
ஏறக்குறைய ஒருமாதம் யாரும் வராததால் கலக்கம் அடைந்த உறவினர்கள் ஒன்றுகூடி பின் கதவை திறந்து பார்க்க முடிவுசெய்தனர். அவர்கள் கதவை திறந்தபோது அங்கு கட்டிலும் இரண்டு நாகப்பாம்புகளின் சட்டையும் தான் இருந்தது. அவரோ, அவரின் மனவியோ அவர்களின் உடலே அங்கு இல்லை. உறவினர்கள் ஆச்சரியம் மற்றும் பயம் அடைந்து மறுபடியும் பூட்டிவிட்டனர்.

சிலகாலம் கழித்து அங்கு வந்த இருவர், இவர் பற்றிக்கேக்க இவர்கள் அறையை காமித்தனர். அவர்கள் அறையத் திறந்து பார்த்தவுடன் கோவமாக நீங்கள் திறந்து பார்த்தீர்களா என கேக்க உறவினர்களும் உன்மையை ஒப்புக் கொண்டனர். அதற்கு அவர்கள்" ஒரு மகான் உங்கள் குலத்தில் பிறந்து உள்ளார், அவரை புரிந்துகொள்ளாமல் விட்டுவிட்டிர்கள், ஆதாலால் உங்கள் வம்சம் அழிந்துபோகட்டும்" என சாபம் கொடுத்துசென்றனர். அவர்கள் சென்றபின் உறவினர்கள் அனைவரும் வருத்ததுடன் அந்த அறையின் முன் இருக்க அந்த அறைக்குள் இருந்து அவரின் குரல் மட்டும் கேட்டது. வருந்த வேண்டாம் எனது இந்த கட்டில் அறையை வைத்து பூஜை செய்யவும், நான் உங்கள் அனைவரையும் காப்போன் எனவும், அந்த சக்கரை வைக்கும் பானையைத் துனியால் மூடி வையுங்கள், அந்த பானை என்று பொங்கி வழிகின்றதே அப்போது நான் மீண்டும் பிறப்பேன் என்று கூறினார். அது முதல் அந்த கட்டில் அறையும், கட்டிலும் அவர் மற்றும் அவர் மனைவி கௌசலாம்பிகை தாயார் நினைவாக பூஜிக்கப்பட்டு வருகிறது. வெள்ளகோயில் அருகே உள்ள பகவான் திருமலைசாமி சமேதர கௌசலாம்பிகைத் தாயார் கோயிலும் உள்ளது. தாராபுரத்தில் இருந்து பொள்ளாச்சி செல்லும் வழியில் சத்திரம் அல்லது சின்னப்புத்தூர் சத்திரம் அல்லது கோவிந்தாபுரம் சென்றால் அந்த சத்திரம், கட்டில், அவர் குளித்த கிணறு, மற்றும் தோட்டக்கிணறு ஆகியவற்றைக் காணலாம். அந்த சத்திரத்திற்கு இரண்டு கிலோமீட்டர் முன் உள்ள சின்னக்காம்பாளைய கிராமத்தில் அவரின் உறவினர் வீட்டில் அந்த சக்கரைப் பானை பூஜை அறையில் வைக்கப்பட்டுள்ளது. இது ஒரு புனைவு அல்ல உன்மை சம்பவங்கள்.

10 comments:

 1. //இவர் ஒரு சித்த புருஸர், மகான் என்றும் அழைக்கப்படுகிறார். //

  சித்தி புருஸரை சித்தப்பான்னு கூப்பிடுவாங்க!
  சித்த புருஸரை மகான்னா கூப்பிடுவாங்க!?
  புதுசா இருக்கே!?

  ReplyDelete
 2. //இவர் ஒரு சித்த புருஸர், மகான் என்றும் அழைக்கப்படுகிறார். //

  சித்தி புருஸரை சித்தப்பான்னு கூப்பிடுவாங்க!
  சித்த புருஸரை மகான்னா கூப்பிடுவாங்க!?
  புதுசா இருக்கே!?


  எப்பிடி இப்படி எல்லாம், உங்களுக்கு புதுசா தோனுமோ.

  ReplyDelete
 3. முழம் முழமா காதுலே பூ! :-)

  ReplyDelete
 4. ??????????? முழம் முழமா காதுலே பூ! :-)
  நண்பா இது அத்தனையும் உன்மை சம்பவங்கள், நீங்கள் பகவான் கோவில் அல்லது சத்திரம் சென்றால் இன்னும் அவரைப் பற்றி தெரிந்துகொள்ள முடியும்.

  ReplyDelete
 5. நன்றி பித்தன்,

  சித்தர்கள் என்றும் வாழ்பவர்கள்.அவர்களை குறை கூறுபவர்களின் வினைக் கணக்கு மேலும் கூடும்.
  ஓம் நமசிவாய.

  அஷ்வின் ஜி
  www.vedantavaibhavam.blogspot.com
  பிரபஞ்சத் துகளில் 'நான்' யார்?

  ReplyDelete
 6. மிக்க நன்றி திரு அஸ்வின் ஜி.

  ReplyDelete
 7. எங்கள் கிராமங்களில் திருமலை ஐயா உலவுவதாக நம்பிக்கை உண்டு...
  நம்பாதவர்கள் கொசவலசு பகவான்கோவிலுக்கு தெலுங்கு வருடப்பிறப்பன்று வந்து பார்க்கலாம்....

  ReplyDelete
 8. சின்னக்காம்பாளைய கிராமத்தில் அவரின் உறவினர் வீட்டில் அந்த சக்கரைப் பானை பூஜை அறையில் வைக்கப்பட்டுள்ளது. இது சீரனக்கன்பட்டி தானே ???

  ReplyDelete
 9. அது தெரியவில்லை, தாராபுரம் பொள்ளாச்சி ரோட்டில் சின்னாக்காம் பாளையம் பிரிவு என்று வரும். கோவிந்தம் பாளையத்தின், சின்னப்புத்தூர் சத்திரத்தில் உள்ள கோவிலுக்கு செல்லும் போது அங்கு செல்வோம், 20 வருடங்களுக்கு முன்னர் காரில் சென்றதால் பெயர், பேருந்து பற்றிச் சரியாகத் தெரியாது.

  ReplyDelete

என்னை வளர்க்க, கருத்துரையிடுக...

பதிவைப் படித்து கருத்து போடலைனா
உங்க கனவுல பூதம் வரும்,,, ஆமா சொல்லிட்டேன்.