Friday, September 18, 2009

இந்திய வரலாறு ஒரு சிந்தனை - பாகம் 8

அந்தனர்கள் சமுதாயம் அவர்களுக்கு விதிக்கப்பட்ட கடமைகளை ஒலுங்காக செய்தவரை எல்லாம் சரியாக போய்க்கொண்டு இருந்தது, அவர்கள் தடம் புரள ஆரம்பித்ததுதான் சமுகம் சீர்கேடு அடைய ஒரு காரணமாக இருந்தது எனலாம். நாகரீக காலகட்டத்திலும்,வேதகாலத்தின் ஆரம்ப காலகட்டத்திலும் எல்லாம் ஒழுங்காவும்,அமைதியாகவும் இருந்தது. ஆனால் பின்னால் சமுதாயம் மாற ஆரம்பித்ததுக்கு இரண்டு காரணங்கள் கூறலாம், அது ஒன்று இதுவரை மனிதனுக்கு மதிப்பு இருந்ததுபோய் பணத்துக்கு அல்லது செல்வத்துக்கு(செல்வாக்கு எனவும் கூறலாம்), இரண்டு முதலில் கூறிய மாதிரி வழி நடத்தக்கூடிய பொறுப்பில் உள்ள அந்தனர்கள் தவறும்,அவர்களை தொடர்ந்த சத்திரியர்கள் தவறும் ஆகும். இது பற்றி கொஞ்சம் விரிவாக பார்ப்போம்.

முதலில் பிரமத்தை உணர்ந்த, ஒழுங்கின் வழி நடக்கும்,தான் உணர்ந்த உண்மைகளை மற்றவர்களுக்கு கூறி அவர்களையும் நல்வழிப்படுத்த பிராமணர்கள் பூஜை,யாகம்,கல்வி போன்றவகளை செய்துவந்தனர். இவர்கள் அதற்கு கிடைக்கும் சன்மானத்தை கொண்டு தினசரி வாழ்க்கை நடத்தியும் வந்தனர், பக்தியில் உள்ளவர்கள் தினமும் உஞ்ச விருத்தி என்னும் பிச்சை அல்லது யாசகம் செய்து வாழ்ந்தனர். (வேதம் கூறும்படி" அந்தனர்கள் தங்களுக்கு என்று எதையும் ஸேமிக்காமல், யாசகம் செய்து அதை தானும் தன்னை சார்ந்தவர்களும் உண்டும், பின் தான் அறிந்தவற்றை மற்றவர்களுக்கு போதிக்கவேண்டும்.) இதுதான் அந்தனர் தர்மம்.இப்படி வாழ்வபர்கள் தாம் அந்தனர்கள். பிரமத்தை உணர்ந்து மேற்கூறியபடி வாழ்க்கை நடத்துகின்றவர்கள் அனைவரும் பிராமனர்கள் ஆவார்கள்.

(தற்போது உள்ளவர்கள் பரம்பரையால் அப்படி சொல்லிக்கொள்ளுகிறார்கள்.இப்போது உள்ளவர்கள் அய்யர்கள்,அய்யங்கார்கள்(ஜாதீ) என்று சொல்லிக்கொள்ளலாம்,ஆனால் அவர்கள் அந்தனர்கள்,பிராமனர்கள் என்று சொல்ல தகுதி அற்றவர்கள்.)

முதலில் காட்டில் தவவனங்கள் அமைத்து, நாட்டில் உள்ள ஆலயங்களில்(இப்ப பாக்குற ஆலயம் இல்லை) பூஜை செய்தும் வாழ்ந்தனர். காட்டில் உள்ளவர்கள் சிறுகுடில்களில் விவசாயம் செய்தும் கல்வி போதித்து அதற்கு சன்மானம் பொற்றும் வாழ்ந்தனர். நாட்டில் உள்ளவர்கள் பூஜை,மற்றும் யாகங்கள் செய்து சன்மானம்(கொடுப்பதை வாங்கவேண்டும்,கேட்டுவாங்கக்கூடாது). மற்றும் உஞ்ச விருத்தி அல்லது தினமும் யாசகம் செய்து வாழ்ந்துவந்தனர். இது வேதகாலத்தின் ஆரம்ப நிலையில் கடைப்பிடிக்கப்பட்டது. இதன்பின் வந்தவர்கள் பிராமனர்கள் என்று சொல்லும் தகுதியினை இழ்ந்தால் நான் அந்தனர்கள் எனக் குறிப்பிடுகின்றேன்.

அந்தனர்கள் தாங்கள் பணம் அல்லது தங்கத்தை கொடுத்து பண்டம் வாங்கும் முறை வந்தவுடன் பணம் ஸேர்க்க தலைப்பட்டனர். ஒருசிலர் தங்கள் புகழ் அல்லது செல்வாக்குகாக செல்வம் ஈட்ட முற்பட்டனர்.இதானல் அவர்கள் சத்திரியர்களிடம் நெருக்கம் கொண்டு அவர்களுடன் வாழத்தலைப்பட்டனர். அவர்கள் சத்திரியர்களின் நிழலில் தங்களின் செல்வம் மற்றும் செல்வாக்கை வளர்த்துகொண்டனர். பின் இராஜாங்கம் மற்றும் அரசியலிலும் இறங்கினர்.
இதில் அந்தனர்களும் சத்திரியர்களும் முன் நிலை வகிக்க சூத்திரர்களும் சமுகத்தில் ஒரு நிலையுடன் இருந்தாலும், பஞ்சமர்களின் வாழ்க்கை மிகவும் பின் தள்ளப்பட்டனர். பணம் அல்லது செல்வம் பழக்கத்திற்கு வந்தாலும் அவர்கள் அதை ஈட்டவே அல்லது பொறவே இயலாமல் ஒடுக்கப்பட்டனர். வெகுகாலம் பஞ்சமர்கள் மட்டும் அடிமை அல்லது சார்பு வாழ்க்கை மட்டும்தான் நடத்திவந்தனர்.இந்திய வரலாற்றில் இந்த பஞ்சமர் வாழ்க்கை அதன் நாகரீக சிறப்புக்கு ஒரு கரும்புள்ளி எனலாம்.ஒருசில மன்னர்கள் காலத்தில் அவர்கள் மனிதர்களாக கூட மதிக்கப் படாத கொடுமையும் இருந்தது.
இதன்பின் அந்தனர்கள் காட்டைவிட்டு நாட்டுக்கு வந்து, நகரவாழ்க்கை வாழத்தலைப்பட்டனர். சத்திரியர்களை முந்நிலைப் படுத்தி அவர்களுக்கு ஸேவை செய்தும் வந்தனர். பின் அவர்கள் சத்திரியர்கள் செல்வாக்கு மற்றும் வெற்றிகளை நினைவு கூறும் வண்ணம் கோயில்கள் கட்டி அதன் மூலம் மக்களுக்கு நன்மையும் தங்களுக்கு வருவாயும் ஈட்டிக்கொண்டனர்.பின்னர்தான் புது தெய்வங்களும் உருவாக்கப்பட்டனர். தங்களை மேல் நிலைப்படுத்த ஒவ்வெறு பிரிவினரும் ஒவ்வெறு தெய்வங்களை உருவகம் செய்தனர். பின் அதனில் உயர்வும்,தாழ்வும் போதிக்கப் பட்டது. இதில் இருந்துதான் அழிவும் போர்களும் உருவானது.

1 comment:

  1. அருமையான பதிவு யதார்த்தை தெளிவாக சொல்லி இருக்கிறீர்கள், பாராட்டுக்கள்.

    ReplyDelete

என்னை வளர்க்க, கருத்துரையிடுக...

பதிவைப் படித்து கருத்து போடலைனா
உங்க கனவுல பூதம் வரும்,,, ஆமா சொல்லிட்டேன்.