Wednesday, September 30, 2009

நல்ல குடும்பம் பல்கலை கழகம்.

என் தாய் மிகவும் செல்லமாகவும், செல்வாக்காவும் வளர்ந்தவர். நடுத்தர வசதிதான் என்றாலும் அவர் எதாவது பிரியப்பட்டால் அது உடன் கிடைத்துவிடும். அதுக்கு இரண்டு காரணங்களும் உண்டு. ஒன்று என் தாய் பிறந்த குடும்பத்தில் அவர் அப்பா வழியில் உள்ள இரண்டு தலைமுறைகளுக்கு பெண் குழந்தைகள் கிடையாது. அவரின் மூன்று தாத்தாக்களுக்கு பெண்வாரிசு இல்லாமல் தவித்துள்ளனர். வரிசையாக அவர்களுக்கு பையங்கள் பிறந்து அவர்களுக்கும் ஆண்வாரிசுகள்தான் பிறந்தன. எட்டு ஆண்களுக்கு அப்புறம் அந்த தாயாதிகளுக்கு எங்க அம்மாதான் முதல் பெண்வாரிசு. மகாலஷ்மி பிறந்தாள் எனறு, லஷ்மி எனப் பெயரிட்டனர். என் தாயாதி வழி தாத்தாக்களுக்கு எங்கம்மா என்றால் பிரியம் அதிகம்.அதுபோல அந்த தலைமுறையில் உடன் பிறந்த அனைவருக்கும் எங்க அம்மா சொல்லவது வேதவாக்கு. தங்களின் குழந்தைகளின் திருமணம் கூட இவரைக் கேட்டுதான் சம்பந்தம் செய்வார்கள். எங்க ஊரில் உள்ள அவர்களது செந்தங்களைக் பார்க்க வந்தால் கூட என் வீட்டுக்கு வந்து லஷ்மி உன் கையால ஒரு காப்பி தா என கேட்டுவாங்கி சாப்பிடுவார்கள். அவர்களை பார்த்து நான் கூட உனக்கு எத்தனை அண்ணங்கள் என்று கிண்டல் பண்ணுவேன்.கொக்கண்ணன்,மில் அண்ணன்,கடையண்ணன் என்று அவர்கள் தொழில் மற்றும் ஊரின் பெயரால் இருக்கும். மொத்தம் உடன் பிறந்தவர்கள் இரண்டு அண்ணன், ஒரு தம்பி, சக அண்ணகள் ஒரு ஆறுபேர் இருப்பார்கள். இரண்டாவது காரணம் என் தந்தையின் ஒரே சகோதரி சிறுவயதில் (பத்து வயதில்) குடும்ப பிரச்சனை காரனமாக தற்கொலை செய்துகொண்டார். அவரின் பெயரும் என் தாயார் பெயரும் ஒன்று என்பதால், என் தந்தை என் தாயரின் சொல்லை தட்டமாட்டார். குடும்பப் பிரச்சனைகளின் வாக்குவாதம் வரும் என்றாலும் என் தந்தை என் தாயாரை அடித்துப் பாத்ததுல்லை. ஒருமுறை நான் கல்லூரியில் படிக்கும்போது இருவருக்கு வாக்குவாதம் வந்தபோது நான் எங்க அம்மா பிடிவாதமாக பேசுகிறார்கள் என்று எங்க அப்பாவிடம் சும்மா ஒரு சாத்து சாத்துங்கப்பா என்று கூறினேன்,அதுக்கு அவரும் அதுசரி எனக்கூறி சிரித்துவிட்டார். எங்க அம்மாவும் சிரித்து அவர் கல்யானமான நாள் முதல் என்னை அடித்தது இல்லை இவன் அடிக்கச் சொல்லறான் பாரு என்று என்னைக் கட்டிக்கொண்டு சிரித்தார். எங்க அண்ணாக்களிடமும் இதை சொல்ல அனைவுரும் என்னை காலாய்க்கத் தொடங்கினர். இதுபோல பாசம் மிகுந்த குடும்பம் எங்களுடையது. ஒருமுறை எங்க அப்பா இராயவேலூர் என அழைக்கப்படும் வேலூரில் பணிபுரிந்த போது அங்கு வேலூர் இரயில் நிலையத்தில் திரு. மாகாத்மா காந்தியடிகள் அங்கு வந்திருந்தார். வெள்ளையனே வெளியேறு இயக்கம் முற்றிய காலகட்டம் அது. எனது தந்தை அரசு அலுவலர் என்பதால் இரயில் நிலையத்தில் அனுமதிக்கப் பெற்றனர். அப்போது இரயில் நிலையத்தில் காந்தியடிகளைப் பார்த்த எனது தாய், தந்தை அவருக்கு வணக்கம் கூற அவரும் பதில் வணக்கம் கூறி சென்றுவிட்டார். அதில் இருந்து இன்று முதல் அவர்கள் இருவரும் மத்தியில் காங்கிரஸ் கட்சிக்கும் மற்றும் தமிழகத்தில் இலைக்கும்(குழந்தைகளுக்கு சத்துணவு போட்ட மாகாராசன் என்பது எங்க அம்மா எம் ஜியாருக்கு வைத்த பெயர்)தான் ஓட்டுப் போடுவார்கள். நான் பலமுறை வாதாடியும் மாற்றிப்போட மறுத்துவிட்டார்கள். எனது தந்தை மட்டும் வாஜ்பாய் அவர்களுக்காகவும் நான் கேட்டதற்காகவும் ஒரே ஒருமுறை ப ஜ க விற்கு மாற்றிப்போட்டார். இப்போது அனைவரும் தொழில் மற்றும் வேலை நிமித்தம் ஒவ்வெறு மூலையில் இருக்கின்றேம். நல்ல நாள் மற்றும் விழாக்களின் போதும் அனைவரும் ஒன்றுகூடினால் அங்கு பாசம்,அன்பு சண்டை என எதுக்கும் பஞ்சம் இருக்காது. நான் இந்த நாற்பத்தி இரண்டு வயதிலும் எப்பவும் எங்க பெரிய அண்ணன் முன் நாற்காலில் அல்லது சமமாக அமர்ந்து கிடையாது அவருடன் அவர் சேபாவில் அமரச் சொன்னால் கூட நாங்க நாலு தம்பிகளும் அவருக்கு முன்னால் தரையில் தான் அமர்ந்து பேசுவேம். நான் பதிவிட வந்த சம்பவம் வேறு ஆனால் என் குடும்பத்தைப் பற்றி இனிவரும் பதிவில் கூறவேண்டியுள்ளதால் இந்த பதிவில் எழுதியுள்ளேன்.

2 comments:

  1. அண்ணே பாரா பிரிச்சு எழுதுங்க.

    ReplyDelete
  2. நன்றி முருகன் இனி அப்படியே செய்கின்றேன்.

    ReplyDelete

என்னை வளர்க்க, கருத்துரையிடுக...

பதிவைப் படித்து கருத்து போடலைனா
உங்க கனவுல பூதம் வரும்,,, ஆமா சொல்லிட்டேன்.