Monday, September 14, 2009

இந்திய வரலாறு ஒரு சிந்தனை - பாகம்-5

இவர்களின் சமூகம் மற்றும் மக்களின் வாழ்க்கை முறை அவர்கள் செய்யும் தொழில்கள் அடிப்படையில் பிரிக்கப்பட்டது. அதன்படி அந்தனர், சத்திரியர்,வைஸ்யர் மற்றும் சூத்திரர்கள் ஆவார்கள். இதில் ஒவ்வெறுவர்க்கும் சில கடமைகள், கட்டுப்பாடுகள் மற்றும் வாழ்க்கை முறைகள் விதிக்கப்பட்டனர், இதை மீறுவபபர்களுக்கு தண்டனை தரப்பட்டது. அவை பற்றிப் பார்ப்போம்.

அந்தனர்கள் = அந்+தனர் நம்மில் இருக்கும் ஆத்மா அல்லது அந்தரங்கத்தை உணர்ந்தவர்கள்
நமது அந்தர் ஆத்மாவை உணர்ந்து நாம் கடைத்தொற வழி சொல்லுபவர்கள்.
அந்தனர்கள் கல்வி,வித்தை மற்றும் பக்தி மூலம் மக்கள் வாழ்க்கை நல்லபடி நடக்க வழிசெய்தனர். வேத கால தொடக்கத்தில் அந்தனர்கள் கோயில்கள்,பர்னாசாலைகள் என்னும் குருகுலங்கள் ஆகியன அமைத்து அதன் மூலம் வாழ்க்கை நடத்தினர். இதற்கு கைமாறாக மக்கள் அளிக்கும் உணவு மற்றும் தானியங்கள் கொண்டு வாழ்க்கை நடத்தினர். அவர்கள் பக்தி மார்க்கத்தில் உள்ளவர்கள் உஞ்சவிருத்தி எனும் பிச்சை முறை அவர்களுக்கு விதிக்கப்பட்டு இருந்தது.
அந்தனர்கள் பொருள் ஈட்டுவது,மற்றும் பொருள் ஸேகரீத்து வைத்துகொள்வது பாவம் ஆக கருதப்பட்டுவந்தது. கல்வி,பக்தி மற்றும் அறம் ஆகியன அந்தனர்களின் தொழில் ஆகவும் பிற வகுப்பினரின் பிரச்சனைகளை களைய ஆலொசனகள் கூறியும் வந்தனர். அந்தனர்கள் களவு குடித்தல் போன்ற தவறுகளில் ஈடுபட்டால் அவர்களுக்கு மிக கடுமையான நாலு மடங்கு தண்டனை தரப்பட்டது. அவர்களை தெசத்தை விட்டு விலக்கியும் வைக்கப்பட்டது, குடுமி மற்றும் தாடி சிரைத்து சமூகத்தில் இருந்து விலக்கி வைக்கப்பட்டனர்(இது மரண தண்டனையை வீட கேவலமாக கருதப்பட்டது). வேதத்தில் அதர்வன வேதம் பின்பற்றிய சிலர் மட்டும் கள் மற்றும் புலால் ஆகியவைகளை தொவதைகளுக்கு படைத்து உண்டதாக தெரிகிறது,ஆனால் இது பற்றி முரண்பட்ட தகவல்கள் உண்டு, பொரும்பாலும் அந்தனர்கள் புலால் உணவை தவிர்த்துவந்தனர்.

சத்திரியர்கள் = சத்+யையர்கள்.
சத்திரியர்கள் என்றால் சத்துருக்களை வெல்லுவபர்கள். சத்த்ரியர்கள் கடமை பொரும்பாலும் வேளான்மை மற்றும் மறத்தொழில் வாழ்க்கை முறையாக இருந்துவந்தது. இவர்கள் மற்றைய வகுப்பினைரை காக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டிருந்தனர். இவர்கள் குடிகள் மற்றும் மக்களை எதிரிகள் மற்றும் பிற இன்னல்களில் இருந்து காத்துவந்தனர். விவசாயம் மற்றும் போர்த்தொழில் புரிந்துவந்தனர். கால்நடை வளர்ப்பும் இவர்கள் தொழில் ஆக இருந்தது. வீரம் மற்றும் காதல் கூட சத்தியர்கள் இயல்பாக கூறப்பட்டது, பின்னாளில் தான் அரசமரபினர் மட்டும் சத்திரியர்கள் என திரிக்கப்பட்டது. குடிகளை காக்கும் சத்திரியர்கள் தவறு செய்தால் மூன்று மடங்கு தண்டனை விதிக்கப்பட்டது.மரண தண்டனை மற்றும் உடல் உறுப்பு களைதல் தண்டனையாக தரப்பட்டது. உடல்வலிமைக்காக மதுவும் புலால் உணவும் உட்கொண்டனர்.

வைஸ்யர்கள் = வைஸ்யம்+ கள்.
ஒரு விதத்தில் வசியர்கள் என்றும் கூறலாம், வியபாரம் தான் இவர்களின் முக்கிய தொழில்லாக இருந்தது,என்னுடைய சிந்தனையில் வைஸ்யர்கள் என்ற பிரிவு வேத காலத்தின் இடைச்சொருகலாக இருக்கலாம். பணம் அல்லது தங்கத்தின் விலை வந்தபிறகுதான் வியபாரம் வருகிறது, அதற்கு முன் வெறும் பண்டமாற்று முறைதான் இருந்தது. ஆதலால் வைஸ்யர்கள் என்பது இடைச்சொருகலாக இருக்க வாய்ப்பு உண்டு.அப்படி இல்லை என்றால் ஒருவரிடம் பொருள்களை வாங்கி மற்றொருவரிடம் பண்டமாற்று செய்துஇருக்கலாம்.அனால் பொருள்கள் கூலியாக தரப்படும் வரை வைஸ்சியர்கள் இல்லை என்றும் கூறலாம். இந்த பிரிவு பிற்காலத்தில் ஏற்ப்பட்டது என நம்பப்படுகின்றது. இவர்களுக்கு தவறுகளுக்கு இரண்டு மடங்கு தண்டனை தரப்பட்டது.தண்டனையாக பொருள் மற்றும் அபராதம் செலுத்துதல் மற்றும் கோவில்களுக்கு நிவந்தங்கள் அளித்தல் ஆகியன.

சூத்திரர்கள்- சூத்+திரர்
சூத்திரர்கள் என்ற வார்த்தை பின்னாளில் தாழ்த்தப்பட்டவர்கள் எனப்பொருள் கொண்டு தவறாக அர்த்தம் கொள்ளப்பட்டது. ஆனால் சூத்திரர்கள் என்றால் இயக்குவர்கள் அல்லது இயங்குவபர்கள் என பொருள்படும். மக்கள் பயன்படுத்தும் பொருள்களை தாயரிப்பது, அவர்களுக்கு உதவி புரிவது போன்ற தொழில்கள் செய்வபர்கள் உதாரனமாக, சத்திரியர்களுக்கு தெவையான இரதம்.ஆயுதம்,விவசாயக்கருவிகள்,மண்பாண்டங்கள் செய்வர்கள். இவர்களுக்கு ஒரு மடங்கு தண்டனை தரப்பட்டது. பொரும்பாழும் மொட்டை அடித்தல், அபராதம், சவுக்கடி ஆகியன தண்டனையாக இருந்தது.

இதில் ஆரம்ப்பத்தில் வைஸ்யர்கள் என்ற பிரிவு இல்லாமல் அந்தனர்கள், சத்திரியர்கள்,சூத்திரர்கள் மற்றும் பஞ்சமர்கள் என்னும் பிரிவுகள் தான் இருந்தது. பின்நாளில் வியாபாரம் வந்த பொழுது பஞ்சமர்கள் பின் தள்ளப்பட்டு தற்போது கூறும் நாலு பிரிவுகள் வந்தது.
பஞ்சமர்கள் யார் எனில் ஜந்து விதமான தொழில் செய்வர்கள் பஞ்சமர்கள் எனப்பட்டனர். இவர்கள் பொரும்பாலும் கொலைத்தொழில்(பிராணிகள் வதை ) செய்தார்கள் . மாட்டின் தொல் செருப்பு செய்வபர். பறை அடிப்பவர். மீன் பிடிப்பவர்,முடிதிருத்துவபர் மற்றும் புலால் அல்லது இறச்சி செய்வபர்(வேடுவர்). இவர்களையும் தொழில் அடிப்படையில் தான் சமுகம் பிரித்து பார்த்தனர். எனவே வேத காலத்தில் இவர்களில் அந்தனர்கள் சத்திரியர்கள் சூத்திரர்கள் ஆகியோருக்கு சம உரிமை தரப்பட்டாலும், பஞ்சமர்களை விலக்கிவைத்து இருந்தனர். அது அவர்கள் தொழில் காரணமாக தொடங்கி பின் அவர்களுக்கு அநீதியாக மாறியது. தர்மனெறிகளின் படி இவை விலக்கப்பட்ட தொழில்கள் ஆனாலும் ஏனைய சமுகத்தினர் இவர்கள் உழைப்பை பயன்படுத்திக்கொண்டு இவர்களை மட்டும் விலக்கிவைத்தது கொடுமை. பஞ்சமர்களுக்கு தண்டனையாக மொட்டை அடித்தல்,சவுக்கடி போன்றவை தண்டனையாக இருந்தது. இது வேதகாலத்தின் ஆரம்பம் மட்டும்தான் இதில் வேதங்கள் உருவாக்கப்பட்டது. வேத காலத்தொடக்கத்தில் குற்றங்கள் குறைவாக இருந்தது, மக்கள் அவரவர் கடமைகளை செய்து நிறைவான வாழ்க்கை நடத்தினர். அனால் இதற்கு பின்பற்றிய காலத்தில்தான் வேதங்களின் விளக்க உரைகளான உபனிசத்துக்கள் தொன்றின அவைகள் பல்வேறு முனிவர்களால் பல சமயங்களில் எளுதப்பட்டது.அவர்கள் அவர்களின் கருத்து மற்றும் தெவைக்கு ஏற்ப திரித்து வேதத்திற்கு பொருள் எளுதினார்கள் அதை பின்னால் வரும் பதிவுகளில் பார்ப்போம்.

4 comments:

  1. //அந்தனர்கள் = அந்+தனர் நம்மில் இருக்கும் ஆத்மா அல்லது அந்தரங்கத்தை உணர்ந்தவர்கள் //

    இதுலயே தெரிய வேண்டாமா, நீங்க படிச்ச குறிப்புகள் எல்லாம் டுபாக்கூர்னு!

    ReplyDelete
  2. வேதம்லாம் நீர்த்து போய் ரொம்ப நாளாச்சு!
    சில பார்பனர்கள் அதை மீண்டும் தூசி தட்டி மக்களை மீண்டும் கிணற்று தவளைகளாக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள், நீங்களும் அந்த குரூப் தானா!?

    ReplyDelete
  3. நான் வேதகாலத்தின் ஆரம்பத்தை மட்டும்தான் இப்ப கூறிவருகின்றேன், கொஞ்ச நாள் பொறுமைய படிச்சா நான் எந்த கும்பல்னு உங்களுக்கு புரியும், நான் எனது சிந்தனையில் இது உண்மை, அல்லது இப்படித்தான் நடந்துஇருக்கும் என்ற எனது கருத்தைதான் எளுதுகின்றேன், இதில் புனைவு அல்லது சுயனலம் ஏதூம் இல்லை.

    ReplyDelete
  4. உண்மை என்பது அதிகபட்ச சாத்தியகூறுக்ளின் இறுதி நிலை!

    ஆனால் நீங்கள் உண்மை என்று எழுதி கொண்டிருப்பது ஒரு சாராரை மட்டும் திருப்தி படுத்தும் நிலை, அது உங்களுக்கு மட்டுமே உண்மை!

    அரேபியாவில் தோன்றிய இஸ்லாம் தான் உண்மையான மதம் என்று இஸ்லாமியர்க்ள் சொல்வதற்கும், ஜெருசலேமில் தோன்றிய கிருஸ்துவம் தான் உண்மையான மதம் என்று கிருஸ்தவர்கள் சொல்வதற்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்!

    நான் எந்த மதத்தையும் ஆதரிக்காமல் இருக்கும் போது மட்டுமே எது உண்மையென அல்ச முடிகிறது, ஆனால் நீங்கள் இந்துத்துவாவாதி என்னும் போர்வை போர்த்தி கொண்டு தன் மதமே சிறந்தது என நிறுபிக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறீர்கள்!

    ஆனால் எது எப்படியும் நீங்கள் காட்டும் ஏட்டு சுரைக்காய் தடயங்கள் போதாதே! பார்பனன் தனக்கு சாதகமாக எழுதி கொண்டதை எப்படி அனைவரும் நம்ப முடியும்!

    ReplyDelete

என்னை வளர்க்க, கருத்துரையிடுக...

பதிவைப் படித்து கருத்து போடலைனா
உங்க கனவுல பூதம் வரும்,,, ஆமா சொல்லிட்டேன்.