Wednesday, September 23, 2009

நான் பித்தனா? இல்லை பைத்தியமா?

சமீப்பத்தில் உன்னைப்போல் ஒருவன் படம் பார்த்துவிட்டு வந்தென். படம் நன்றாக இருந்தது.
திரைப்படங்களில் வரும் எல்லாம் நிஜத்தில் சாத்தியம் இல்லை என்பதுதான் தமிழ் திரைப்பட வரலாறு என்பதால் படம் என்னுள் எந்த பாதிப்பையும் ஏற்ப்படுத்தவில்லை. இது இன்னுமொரு கமல் படம் என்பதை தவிர பெரிதாக ஒன்றும் இல்லை. ஆனால் இந்த பட விமர்சனங்கள் குறித்த பதிவுகளும் அதற்க்கு வரும் பின்னூட்டங்களும், அதில் அடித்துக்கொள்ளும் பதிவர்களையும் பார்த்தால் எனக்கு சந்தையின் மூலையில் இறைச்சி விற்க்கும் இடத்தில் உள்ள நாய்களின் சத்தம் தான் நினைவுக்கு வருகிறது.

இதில் வியப்பு என்ன என்றால் எல்லாரும் நன்றாக படித்தவர்கள், பண்பாளர்கள். அனால் நம்மை சுற்றி இருக்கும் பல்வேறு சிலந்திவலைகள் என்னும் உணர்வுகளை தூண்டக்கூடிய கருத்துக்களுக்கு அடிமையாகி அடித்துக்கொள்ளுகின்றனர். அனைவரும் நண்பர்கள் நல்லா பழகுவார்கள், தனிப்பட்ட சந்திப்பின் போது புன்னகையை பகிர்வார்கள். ஆனாலும் பதிவிலும் பின்னுட்டத்திலும் அந்த நாகரீகத்தை மறக்கிறார்கள். ஒருவேளை நான் உன்னை திட்டுகின்றேன் நீ என்னை திட்டு என பேசிவைத்துக்கொள்வார்களே. ஆனாலும் இவைகளை படிக்கும்போது ஆர்வத்திற்கு பதிலாக வெறுப்பும், ஆற்றாமையும் தான் வெளிப்படுகின்றது.

இன்றைய இளைஞர்களுக்கு படிக்கும் ஆர்வம் அதிகம், அவர்களின் துடிப்பும் அதிகம்.அதுபோல் வாழ்க்கை வசதிகளும் அதிகம். பத்து வருடங்களுக்கு முன்னர் நாங்கள் ஒரு நாளைக்கு நாலு மைல்தூரம் நடந்து படித்த அளவுக்கு, இன்றைய இளைஞநர்களுக்கு வருத்தம் இல்லை. அன்றுபோல் இன்று பணக்கஸ்டமும் இல்லை. நிறைய தொழில் வாய்ப்புகள் உள்ளன.
இன்றைய இளைநர் முன்னேற நல்ல வாய்ப்புகள் உள்ளன. ஆனால் அதை விடுத்து தங்களின் சுய நலத்துக்காக மக்களை கூறுபோடும் தலைவர்களும் அவர்களை அண்டிப்பிழைக்கும் அடிவருடிகளும், அவர்களை ஆதாரித்துப்பிழைக்கும் மீடியாவும், இன்றைய இளைஞர்களை மிகவும் குழப்பத்தில் ஆழ்த்துகின்றனர். இவைகளின் விளைவுகள் இன்று தெரியாது நாற்பது வயதில் தான் நம்பிய அனைவரும் கைவிட்டபின் எதாது ஒரு வேலையில் பிழைப்பை ஓட்டும்போது தப்பு செய்துவிட்டதாக நம்புவார்கள். அதுவரை இளரத்தங்கள் சூட்டில் கத்துவார்கள். இதில் ஒருசில புத்திசாலிகள் மட்டும் தங்கள் தலைவர்கள் போலவே ஊரை ஏமாற்றுவனாக மாறிப் பிழைத்துக்கொள்வார்கள்(கவனிக்கவும் பிழைப்பார்கள், வாழ்வார்கள் அல்ல). திரைத்துறையும், அரசியலும் ஒரு பிழைப்புதான் ஒழிய வாழ்க்கை அல்ல. இன்னும் எத்தனை நாள்தான் இவர்கள் இப்படி ஏமாற்றுவதும், இளைநர்கள் ஏமாறுவது என நினைத்து இருக்க இங்கு படித்தவர்கள் கூட இந்துவா, பகுத்தறிவு, ஆரியம்,திராவிடம், இஸ்லாம்,இந்து என நாய்களை வீட கேவலமாக அடித்துகொள்கிறார்கள். நாய்களுக்கு வாய் மற்றும் ஆறாம் அறிவு இருந்தால் பதிவர்களுக்கு இடம் விட்டு குறைப்பதை நிறுத்திகொள்ளும். மனது சங்கடப்படும் அளவுக்கு இருக்கிறது இவர்களின் கருத்துக்கள். இதுதான் பதிவர்களின் கருத்து சுதந்திரம் என்றால் இந்த சுதந்திரம் இல்லாமல் இருந்திருக்கலாம். சில காலம் பதிவுகளை படிக்காமல் இருப்பது என்பது மனதை ஆற்றும் எனவும் நினைக்கின்றேன். பதிவு உலகத்தில் நல்ல நண்பர்களும் நிறையப் படித்தவர்களும், இருப்பார்கள் என என்னித்தான் ஆரம்பித்தென் ஆனால் சாதீய சிந்தனை கொண்டவர்களும்(சாதியை எதிர்க்கின்றேன் என்ற பெயரில்), மதவாதிகளும்(மதத்தை எதிர்க்கின்றேன் என்ற பெயரில்) அதிகம். ஆன்மீக வாதிகளும், மதவாதிகளும் கூட இவர்களைப் போல் தீவிரவாதிகாளாய் இருப்பது இல்லை. நல்ல பயன் தரும் கட்டுரைகள் எழுதுவதை வீட பின்னூட்டங்களுக்காக எழுதுவது அதிகம் இருக்கும் சூழ் நிலையில் மேலே குறிப்பிட்ட பண்புகளை எதிர்பார்ப்பவன் பித்தனா? அல்லது பைத்தியகாரனா?.மனிதம், மனித நேயம் என்பது எல்லாம் கானல் நீராக போய்விட நட்பு என்ற ஒன்றுதான் இந்த வகை பதிவர்களை கட்டிப்போட்டு உள்ளது. அதுவாது இதுபோன்ற மாயகருத்துக்களின் ஆதிக்கத்தில் அழிந்து விடாமல் இருக்க எல்லாம் வல்ல ஆண்டவனை அல்லது உங்க பாணில இயற்கையை வேண்டிக்கொள்ளுகின்றேன். நான் எளுதிய பதிவு உன்மை இல்லை என்றாலும் எனக்கு மகிழ்ச்சியே.

3 comments:

 1. //இதில் வியப்பு என்ன என்றால் எல்லாரும் நன்றாக படித்தவர்கள், பண்பாளர்கள்//

  அது மட்டுமல்ல, விஜை, அசித், சிம்பு, தனுசு ரசிகர்கள் கூட. என்ன படிச்சாலும் நம்ம தமிழ்னாட்டோட பண்பை(சினிமாக்காரன தூக்கி வெச்சு ஆடறது) மறக்கலாமா?

  ReplyDelete
 2. /இதில் வியப்பு என்ன என்றால் எல்லாரும் நன்றாக படித்தவர்கள், பண்பாளர்கள்//

  // அது மட்டுமல்ல, விஜை, அசித், சிம்பு, தனுசு ரசிகர்கள் கூட. என்ன படிச்சாலும் நம்ம தமிழ்னாட்டோட பண்பை(சினிமாக்காரன தூக்கி வெச்சு ஆடறது) மறக்கலாமா? //

  இந்த திரையுலக கலாச்சாரம் விரைவில் அழியும் என நம்புகிறேன், அப்படி நடந்தால் தமிழகம் விரைவில் முன்னேறும் வாய்ப்பு உள்ளது.

  ReplyDelete
 3. மிஸ்டர் பித்தன்,
  உங்கள் வலைப்பதிவுகளை படித்தேன். நிறைய சொல்ல ஆசைப்படுகிறீர்கள். சொல்ல நினைத்ததை சொல்லுங்கள். வெக்ஸ் ஆகாமல் எழுதுங்கள். வலைப்பதிவர்கள் உங்களை குதறினாலும் நாகரீகம் எழுத்துக்களில் இருக்கட்டும். உங்கள் எழுத்துக்களை நான் தொடர்ந்து படிக்கிறேன். வாழ்த்துகள்.
  அஷ்வின் ஜி
  www.vedantavaibhavam.blogspot.com
  (நேரம் கிடைக்கும் போது நம்ப தளத்தையும் கொஞ்சம் பாருங்க...)

  ReplyDelete

என்னை வளர்க்க, கருத்துரையிடுக...

பதிவைப் படித்து கருத்து போடலைனா
உங்க கனவுல பூதம் வரும்,,, ஆமா சொல்லிட்டேன்.