Wednesday, September 30, 2009

அம்மாவும் கடவுள் அனுபவங்களும். ஒரு திகில் சம்பவம். (புனைவு அல்ல)

அப்போது நான் கல்லூரி இரண்டாம் ஆண்டு படித்த வந்த சமயம், எனது இரண்டாம் சகோதரி புதுமனை ஒன்று கட்டிமுடித்து புதுமனை புகுவிழாவிற்கு ஏற்பாடு செய்துருந்தார். நல்ல பொளனர்மி நாளில் விழா நடக்க இருந்தது. அதற்கு முந்திய நாளில் இருந்து எனக்கு வேலைகள் ஆரம்பமாயின. அப்போது எல்லாம் நமக்கு சைக்கிள் தான் போயிங் 707. சைக்கிள எடுத்த சும்மா அசுரவேகத்தில் ஓட்டுவேன். நான் டாவடிச்ச ஃபிகர் கூட எனது சைக்கிளின் வேகம் பார்த்து ஆச்சரியப்படும். அந்த அளவுக்கு சைக்கிள் பிரியன். அன்று காலை முதல் ஒரு இருபது, முப்பது தடவை எங்க அக்கா வீட்டிற்கும், கடைகளுக்கும் ஓட்டியிருப்பேன். அந்த வீடு எங்கள் ஊரில் பைபாஸ் சாலையத் தாண்டி, வீட்டுவசதி வாரியம் அருகில் உள்ளது. அப்போது அங்கு இரவில் நடமாட்டம் அதிகம் இருக்காது(இப்ப அதுதான் ஊரு என்று சொல்லுமளவு பிரபலம் ஆகிவிட்டது).

அன்று மாலை சரியாக எட்டரை மணி இருக்கும் நான் கடைகளுக்கு சென்றுவிட்டு எங்க அக்கா வீட்டிற்கு போய்க்கொண்டு இருந்தேன். அப்போது அங்கு தீயணைப்பு நிலையம் அருகில் ஒரு முச்சந்தி உள்ளது. அது விபத்துக்கள் அதிகம் நடக்கும் பகுதி. அப்போது எல்லாம் கோவை டு மதுரை செல்லும் போருந்து அல்லது லாரிகளில் அடிபடுவது சகஜம். ஒருமுறை ஒரு குடும்பத்துடன் அங்கு விபத்து நடந்தவுடன் அங்கு பல வேகத் தடைகளை நிறுவி தற்போது விபத்துக்களைக் குறைத்துள்ளனர். சரி நாம் விசயத்திற்கு வருவேம். நான் அப்போது அந்த வழியாக சைக்கிளில் வந்த போது அந்த முச்சந்தியை கடந்தபின் சிறிது அடிகளில் என்னால் சைக்கிளை மிதிக்கக் கூட முடியவில்லை,எனது கால்களில் பெரும் பாரம் ஏற்ப்பட்டால் போல் ஒரு உணர்வு. என் கால்கள் இரண்டையும் யாரே பிடித்து இளுப்பது போல் ஒரு அயற்சி. என்னால் சைக்கிள் ஓட்ட முடியமல் கஷ்டப்பட்டு முழு பலத்துடன் சைக்கிளை மிதித்தேன். அப்போதும் என்னால் மிதிக்க முடியவில்லை. வீடு அங்கு இருந்து கொஞ்ச தொலைவுதான் என்பதால் முழுபலத்துடன் மிதிக்க ஆரம்பித்தேன். எனக்கு சைக்கிள் மிகவும் எடை கூடியது போல்வும், என் கால்கள் இரண்டும் பலம் இழந்தது போல் ஒரு உணர்வு. நானும் சரி காலையில் இருந்து ஓட்டியதால் மிகவும் களைப்பாக இருக்கும் போய் ரெஸ்ட் எடுக்கலாம் என இறங்கி தள்ளிக் கொண்டுபோனேன். தள்ளக்கூட முடியாத ஒரு களைப்பு. ஒருவழியாக நான் அக்கா வீட்டிற்குப் போய்ச் சேர்ந்தேன். அங்கு வாசலில் இருந்த எங்க அக்கா,மாமா இனி போதும் போய் சாப்பிட்டுவிட்டு ரெஸ்ட் எடுக்கச் சொன்னார்கள். நானும் கொஞ்ச நேரம் கழித்து சாப்பிடுகிறேன் என்றி கூறிவிட்டு, வீட்டின் கீழ் உறவினர்கள் அனைவரும் இருந்ததால் நான் தனிமை வேண்டி வீட்டின் மெட்டை மாடிக்கு சென்றேன். எனக்கு கூட்டமாக இருந்தால் அதிக நேரம் இருக்கமாட்டேன். கொஞ்ச நேரம் அனைவரிடமும் பேசிவிட்டு அங்க இருந்து விலகிவிடும் தனிமை விரும்பி. கல்யானத்திற்கு போனால் கூட அனைவரிடமும் தலையை காண்பித்து அட்டடேண்ட்ஸ் போட்டுவிட்டு மண்டப வாசலில் யாருடனது கடலை போட்டுக்கொண்டு நின்றுவிடுவேன். ஆதலால் தனிமை வேண்டி நான் மொட்டைமாடிக்கு சென்றேன்.அங்கு நான் கண்ட அதிசயம்.

நான் மொட்டை மாடிக்கு சென்றவுடன் அடுத்த நாள் பொளனர்மி என்பதால் நிலவு அழகாய் குளிர்ந்துகொண்டு இருந்தது. ஜுலை மாதம் என்பதால் கேரளாவின் மழை ஈரத்துடன் பாலக்காட்டு சாரல் காற்று குளீர்ந்து அடித்தது, மனதுக்கு இதமாய் இருக்க, கால்வழி காரணமாக நான் அங்கு வெறும் தரையில் படுத்துவிட்டேன். கொஞ்ச நேரம் இருக்கும் எனது களைப்பு நீங்கி இலேசாக குளிர ஆரம்பித்தது. அப்போது அங்கு ஒரு மூலையில் குப்பையாக போட்டு வைத்து இருந்த உரச் சாக்குகளில் இருந்து ஒரு சாக்கு மட்டும் சர் என்று நகர்ந்து பின் ஒரு சுழல் வட்டம் போட்டு நின்றது, சத்தம் கேட்டு நான் சாக்கை உற்றுப்பார்க்க அது மீண்டும் சுழன்று நின்றது. அதன்பின் அது அசையவில்லை. எனக்கு அது வித்தியாசமாகப் பட்டது. எனது உடல் முழுவது சில்லிட்டது போல் ஒரு உணர்வு, எனக்கு குளிரத் தொடங்கியது.அங்கு இருந்த பத்து சாக்குகளில் அது ஒன்று மட்டும் என் நகரவேண்டும், காத்து அடித்தால் அனைத்து சாக்கும் அல்லது இரண்டு அல்லது மூன்றாவது அசையவேண்டும் ஆனால் மிகவும் மிதமான வாடைக் காற்றில் இப்படி ஒரு சாக்கு மட்டும் எப்படி என்று நினைத்து சாக்கை ஆராந்து உற்றுப் பார்த்தேன். அப்போது எதேச்சையாக மேலே வந்த எனது அக்கா இங்க தனியா என்ன பண்ணற? என்று கேக்க, நான் மிகவும் களைப்பாக இருக்கிறது ரெஸ்ட் எடுக்கிறன் என்றேன். அதுக்கு புதுமாடி சீலிங்கு நிறைய தண்ணிர் விட்டதால் வெறுந்தரையில் படுத்தால் காய்ச்சல் வரும், போய் சாப்பிட்டு விட்டு படுக்கை அறையில் போய்த் தூங்கு என்றார்கள். நான் சாக்கை ஒரு உதை போட்டு மூலையில் தள்ளி விட்டு பின் கீழே வந்தேன். இது நடந்ததை நான் யாரிடமும் சொல்லவில்லை. சாப்பிட பிடிக்காமல் சாப்பிட்டு உறங்கப் போனேன். காலையில் எனக்கு கடுமையான காய்ச்சல் பின் அசதி, ஆனலும் வெளிக்காட்டாமல் விழா வேலைகளில் கவனம் செலுத்தினேன். மாலையில் அதிக சுரம் வரவே எங்க அண்ணன் டாக்டரிடம் அழைத்துச் சென்றான். எனக்கு வைரஸ் காய்ச்சல் என்று கூறி ஊசிபோட்டார். நானும் கப்பம் கட்டித்திரும்பி வந்தேன். நான் எப்போதும் ஏழாம் வகுப்பு வரை எங்க அப்பா மார்பிலும், பின் ஒன்பதாம் வகுப்பு வரை அவர் அருகிலும் படுத்து உறங்குவேன். பின்னர் கல்லூரி நாட்களிலும் எங்க அம்மா பக்கத்தில்தான் படுத்து உறங்குவேன். இப்போது ஊருக்கு போனால் கூட அம்மா பக்கத்தில் பாய் போட்டு உறங்குவேன். கட்டிலில் படுப்பது எனக்கும் எங்க அம்மாவிற்கும் பிடிக்காது. அப்போதும் எனக்கு நல்ல காய்ச்சல் இருந்தது. நடுஇரவுக்கு முன்னர் எங்க அப்பா கட்டிலில் படுத்து இருந்தவர் திடீரென்று மிகுந்த அனத்தலுடன்(ஊளை மாதிரி) தன் இரண்டு கால்களை உதறிக் கொண்டு இருந்தார். நானும்,அம்மா இன்னேரு சகோதரும் அப்பாவை எலுப்பி என்ன என்று கேக்க அவர் எங்களை பார்த்து ஒன்றும் இல்லை கெட்ட கனவு என்று கூறி கடவுளை தொழுது படுத்தார். கொஞ்ச நேரத்தில் எனக்கு அடுத்து படுத்து இருந்த என் அண்ணன் தூக்கத்தில் பினாத்தினான், நான் அவரை எழுப்ப அவரும் அதே பதிலை கூறி விட்டு படுத்தான்.அடுத்த நாள் நான் நல்ல பிள்ளையாக என் வைரஸ் காய்ச்சலை எங்க அக்கா பெண்னுக்கு பரப்பி விட்டேன். எனக்கு காய்ச்சல் இருந்தாலும் அவ்வளவு தீவிரமாக இல்லை.
அன்று மாலை நான் வீட்டில் ரெஸ்டில் இருந்தேன் அப்போது எங்க அம்மா தினமும் மாலை விளக்கு ஏற்றும் சமயம் எங்க அம்மாவிற்கு அருள் வந்ததது, இந்தியில் மிகுந்த சத்தத்துடன் வந்த தெய்வம் நடுங்கி நின்ற என்னை உற்றுப் பார்த்துவிட்டு (எங்க அடிவிழுமே பயம்தான்) வேகமாக என் வீட்டிற்கு அடுத்த வீடு தள்ளி இருக்கும் என் பாட்டி வீட்டில் உள்ள எங்க அக்கா பெண்ணிடம் சென்று இரண்டு மூன்று அறைவிட்டார். நாங்கள் அனைவரும் கடவுள் பெயரை சொல்லி நிற்க, எங்க அக்கா தன் நடுங்கும் பெண்ணை அனைத்துக் கொண்டு நின்றார். பின் கொஞ்ச நேரத்தில் தன் நிலைக்கு திரும்பிய அம்மா எங்கள் அனைவரின் நெற்றியில் பொட்டு வைத்து விட்டார்கள்.

பின்னர் என்னை அருகில் ஆசையாக அழைத்த அம்மா நான் பயத்துடன் அருகில் சென்றபோது பயப்படாத நான் இருக்கன் என்று கூறி என் தலையை தடவிவிட்டு சொன்னார்கள். " நீ தீயனைப்பு நிலைய முச்சந்தி வழியாக செல்லும் போது ஒரு சுழல் உன் கால்களை சுற்றிக் கொண்டது. அதுதான் இப்படி எல்லாரையும் கஷ்டப் படுத்தியது. நீ கவலைப்படாத ஒன்றும் செய்யாது என்றார். நான் ஆச்சாரியத்தின் உச்சியில் இருந்தேன். அப்போதுதான் சாக்கு சுழன்றவிதம் ஞாபகத்திற்கு வந்தது. நான் எப்போதும் என் தாயாரின் அருகில் பேசிக்கொண்டு படுப்பதால் தூங்கும் முன்னர் அம்மா நான் தூங்கறன் என்று சொல்லி கண்களை மூடுவேன்,அதுபோல எங்க அம்மாவும் சரிப்பா சாமி கும்பிட்டு தூங்கு என்று சொல்வார்கள். அன்று முதல் தூங்கும் முன்னர் நான் பட்டாணி பாரக்கார, பாரா போட்டு காப்பாதும்மா என்று என் தலைமாட்டின் சுவற்றை தடவி நெற்றில் இடுவது வழக்கம். (எங்க அம்மா அருள் வந்தால் அடுப்பு அல்லது சாம்பிராணி சாம்பல் அல்லது பொருமாள் அலமாரியின் அடியில் இருக்கும் சுவற்றை தடவித்தான் நெற்றியில் இடுவார்கள்). இது ஒரு சிலிர்ப்பான அனுபவம். இந்த பதிவு இடும்போது கூட எனக்கு மயிர்கூஸ்செறிகிறது.

எங்க அம்மாவும் கடவுள் அனுபவங்களும்.

எங்க அம்மா கல்யனமான புதிதில்(1945) எங்க அம்மா, அவர்களின் குடும்பம், என் தந்தை அனைவரும் காசி சென்றுவிட்டு வந்து பின் இராமேஸ்வரம் சென்றனர். அங்கு தரிசனம் முடித்துவிட்டு அங்குள்ள சக்கர தீர்த்தத்தில் ஒரு சத்திரத்தில் தங்கியுள்ளனர். அங்கு தற்போது உள்ளது போல தங்குமிடங்களும் மின்சார வசதியும் கிடையாது. அரிக்கன் விளக்குதான் கையில் எடுத்துச் செல்லவேண்டும். அப்போது ஒரு நாள் மாலை எங்க அம்மாவின் தம்பி சாரங்கபணி(சக்கரை) என்னும் எனது தாய்மாமா சாப்பிடுவதற்காக வாதும இலை( பாதம் இலை) பறிக்கத் தோட்டம் சென்றுவந்தார். வந்தவர் உடனேயே மயங்கிவிழுந்தார். அனைவரும் பதறினர்.

எங்க அம்மா தன் தம்பியை மடிமீது வைத்து சக்கரா,சக்கரா என கூப்பிட்டார். பின் தாயார் அவரின் காதில் நாராயனா,நாராயனா என பகவானின் நாமத்தை உச்சரிக்கத் தொடங்கினார்.
அது சமயம் எப்போதும் மெதுவாக பேசும் இயல்புடைய என் தாயார் மிக சத்தமாக " அரே பாய், ருக் ஜாவ், என இந்தியில் பேசி அருள்(சாமி) வந்தவராகக் காணப்பட்டார். அவருக்கு இதுபோல் வந்தவுடன் எனது மாமாவும் தெளிவுடன் எழுந்துவிட்டார்.அவரை ஜடாமுடியுடன் கூடிய ஒரு பைசாசம் பிடித்ததாகவும் சாமி அதை அங்கு ஒரு மரத்தில் கட்டியதாகவும் கூறினார். எங்க அம்மாவிற்கு வந்த தெய்வம் வட நாட்டுப்பக்கத்தில் உள்ள ஒரு காவல் தெய்வம் என்று அறிந்தாலும் அந்த தெய்வம் எங்கு உள்ளது கோவில் எங்க என்று எங்கள் யாருக்கும் இன்றுவரை தெரியாது. அந்த தெய்வத்தின் பெயர் பட்டாணி பாரக்காரா என்றும் தன்னை எங்களின் குடும்பத்தை வழிபடும்மாறு கூறியது. நாங்கள் எங்களுக்கு காய்ச்சல் மற்றும் பயந்த குணங்கள் காரணமாக எதாது என்றால் சாமி வரும் என்று பயப்படுவேம். ஜந்து நாள் மற்றும் ஆறுனாட்கள் குணமாகத காய்ச்சல் கூட எங்க அம்மாவிற்கு சாமி வந்தால் அடுத்த நாள் குணமாகிவிடும். அதுக்காக குறி சொல்வது போல் எல்லாம் சொல்லமாட்டார்கள் யாருக்காவது உடல் சரியில்லை என்றால் அருள் வரும் அல்லது யாராது சரியில்லை என்றால் அருள் வரும்.அப்போது அருள் முடிந்தவுடன் எங்க அம்மா நாங்கள் எங்கு அல்லது எப்போது பயந்தேம் என்றும், எங்களைப் பிடித்தது என்ன என்றும் கூறுவார். அதுவும் சரியாகவும் இருக்கும். எங்கள் வீட்டில் தை மாத மூன்றாம் வெள்ளிக்கிழமையும், ஆடிமாத மூன்றாம் வெள்ளிக்கிழமையும் இந்த அம்மனுக்கு வடக்குப் பார்த்து பத்து அகல் விளக்குகள் இட்டு பூஜை நடைபெறும் அது சமயம் அருள் வந்து அனைவரையும் காப்பாத்துவாதகவும் கூறுவார். நாலாங்கிளாஸ் மட்டும் படித்த என் இந்தி தெரியாத என் தாய் அருள் வரும் நேரம் மட்டும் சரளமாக இந்தியும், தமிழும் பேசுவார். இது பற்றி நான் இரு சம்பவங்களை கூறவிரும்புகிறேன். ஒன்று

எங்க இரண்டாவது அண்ணன் கல்பாக்கத்தில் வேலை பார்த்துவந்தார் அவர் தனது நண்பர்களுடன் அரசு அளித்த விடுதியில் (குவாட்டர்ஸ்) தங்கியிருந்தார். எந்த கெட்ட பழக்கங்களும் இல்லாதவர். நான் எனது பெற்றேருடன் தாராபுரத்தில் கல்லூரி முதலாம் ஆண்டு படித்துவந்த சமயம். அப்போது இப்ப மாதிரி கைபேசி, தொலைபேசி வசதி எல்லாம் கிடையாது. பெரிய பணக்காரர்களின் வீட்டிலும். காவல் நிலைத்தில், தபால் அலுவலகத்தில் மட்டும் அடிச்சா மண்டை உடையற வகையில் பெரிய குண்டு கறுப்பு தொலைபேசி இருக்கும். கடிதம் மற்றும் மணியார்டர்தான் தொடர்புக்கு. அப்போது ஒரு நாள் ஞாயிற்றுக் கிழமை மதியம் அனைவரும் சாப்பிட்டுவிட்டு படுத்து இருந்தேம். எங்க அம்மா தினமும் சாப்பிட்டவுடன் ஒருமணி நேரம் தூங்குவார். அப்படி தூங்கும்போது அவருக்கு அருள் வந்தது. அவர் அப்பாவிடம் உம்பையன் அங்க ரொம்ப ஆபத்தான நிலமையில் இருக்கிறான் எனவும் உடனே போய்ப் பார்க்கும்மாறு கூறினார். நாங்களும் என்ன செய்வது என்று தெரியாமல் அடுத்த நாள் தொலைத்தொடர்பு அலுவலகத்தில் டிரங்கால் போட்டு சென்னையில் இருக்கும் எங்க சித்தப்பாவிடம் விசயத்தை கூறினேம்.அவரும் அன்று மாலை சென்று பார்ப்பதாக கூறினார். அப்பபோது இப்ப இருக்கற மாறி கிழக்குகடற்கரை சாலை வசதி கிடையாது. சென்னையில் இருந்து கல்பாக்கம் போக மூன்று மணி நேரம் ஆகும்(இப்ப பாண்டி வண்டில போனா ஒரு மணி நேரம்).
அவர் மறுனாள் எங்களுக்கு டிரங்கால் பண்ணி சொன்னார். எங்க அண்ணன் மஞ்சள் காமலை நேயால் பாதிக்கப் பட்டு முத்தின நிலையில் இருந்தார் எனவும் நாட்டுவைத்தியம் பார்த்தும், சரியாக உணவு கிடைக்காமல் மிகவும் இளைத்து இருந்தார். அவரை எங்க சித்தப்பா கூட்டிசென்று சென்னையில் மருத்துவமனையில் அட்மிட் செய்தார். எங்க அப்பா அம்மா இருவரும் சென்னை சென்றனர். பின் பத்துனாள் சிகிச்சை முடிந்ததும் எங்க அம்மா அவரை இரு மாத மருத்துவ விடுப்பில் எங்க ஊருக்கு அழைத்துவந்தார். இது மிகவும் ஆச்சரியத்தில் ஆழ்த்திய சம்பவம்.எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு என்றாலும் இதில் எல்லாம் நம்பிக்கை கிடையாது. இது எக்ஸ்சன்ரிக் அபக்சன் அல்லது எக்ஸஸிவ் காரக்டர் என்றுதான் விளக்கம் கூறிவந்தேன். ஆனால் நானும் வியக்கும் வண்ணம் என் வாழ்வில் நடந்த சம்பவம், அம்மாவிற்கு உறுதியாக தெய்வசக்திதான் என நம்பவைத்தது. அந்த சம்பவத்தை பதிவின் நீளம் கருதி இத்துடன் முடித்து அடுத்த பதிவில் இடுகின்றேன். நன்றி.

நல்ல குடும்பம் பல்கலை கழகம்.

என் தாய் மிகவும் செல்லமாகவும், செல்வாக்காவும் வளர்ந்தவர். நடுத்தர வசதிதான் என்றாலும் அவர் எதாவது பிரியப்பட்டால் அது உடன் கிடைத்துவிடும். அதுக்கு இரண்டு காரணங்களும் உண்டு. ஒன்று என் தாய் பிறந்த குடும்பத்தில் அவர் அப்பா வழியில் உள்ள இரண்டு தலைமுறைகளுக்கு பெண் குழந்தைகள் கிடையாது. அவரின் மூன்று தாத்தாக்களுக்கு பெண்வாரிசு இல்லாமல் தவித்துள்ளனர். வரிசையாக அவர்களுக்கு பையங்கள் பிறந்து அவர்களுக்கும் ஆண்வாரிசுகள்தான் பிறந்தன. எட்டு ஆண்களுக்கு அப்புறம் அந்த தாயாதிகளுக்கு எங்க அம்மாதான் முதல் பெண்வாரிசு. மகாலஷ்மி பிறந்தாள் எனறு, லஷ்மி எனப் பெயரிட்டனர். என் தாயாதி வழி தாத்தாக்களுக்கு எங்கம்மா என்றால் பிரியம் அதிகம்.அதுபோல அந்த தலைமுறையில் உடன் பிறந்த அனைவருக்கும் எங்க அம்மா சொல்லவது வேதவாக்கு. தங்களின் குழந்தைகளின் திருமணம் கூட இவரைக் கேட்டுதான் சம்பந்தம் செய்வார்கள். எங்க ஊரில் உள்ள அவர்களது செந்தங்களைக் பார்க்க வந்தால் கூட என் வீட்டுக்கு வந்து லஷ்மி உன் கையால ஒரு காப்பி தா என கேட்டுவாங்கி சாப்பிடுவார்கள். அவர்களை பார்த்து நான் கூட உனக்கு எத்தனை அண்ணங்கள் என்று கிண்டல் பண்ணுவேன்.கொக்கண்ணன்,மில் அண்ணன்,கடையண்ணன் என்று அவர்கள் தொழில் மற்றும் ஊரின் பெயரால் இருக்கும். மொத்தம் உடன் பிறந்தவர்கள் இரண்டு அண்ணன், ஒரு தம்பி, சக அண்ணகள் ஒரு ஆறுபேர் இருப்பார்கள். இரண்டாவது காரணம் என் தந்தையின் ஒரே சகோதரி சிறுவயதில் (பத்து வயதில்) குடும்ப பிரச்சனை காரனமாக தற்கொலை செய்துகொண்டார். அவரின் பெயரும் என் தாயார் பெயரும் ஒன்று என்பதால், என் தந்தை என் தாயரின் சொல்லை தட்டமாட்டார். குடும்பப் பிரச்சனைகளின் வாக்குவாதம் வரும் என்றாலும் என் தந்தை என் தாயாரை அடித்துப் பாத்ததுல்லை. ஒருமுறை நான் கல்லூரியில் படிக்கும்போது இருவருக்கு வாக்குவாதம் வந்தபோது நான் எங்க அம்மா பிடிவாதமாக பேசுகிறார்கள் என்று எங்க அப்பாவிடம் சும்மா ஒரு சாத்து சாத்துங்கப்பா என்று கூறினேன்,அதுக்கு அவரும் அதுசரி எனக்கூறி சிரித்துவிட்டார். எங்க அம்மாவும் சிரித்து அவர் கல்யானமான நாள் முதல் என்னை அடித்தது இல்லை இவன் அடிக்கச் சொல்லறான் பாரு என்று என்னைக் கட்டிக்கொண்டு சிரித்தார். எங்க அண்ணாக்களிடமும் இதை சொல்ல அனைவுரும் என்னை காலாய்க்கத் தொடங்கினர். இதுபோல பாசம் மிகுந்த குடும்பம் எங்களுடையது. ஒருமுறை எங்க அப்பா இராயவேலூர் என அழைக்கப்படும் வேலூரில் பணிபுரிந்த போது அங்கு வேலூர் இரயில் நிலையத்தில் திரு. மாகாத்மா காந்தியடிகள் அங்கு வந்திருந்தார். வெள்ளையனே வெளியேறு இயக்கம் முற்றிய காலகட்டம் அது. எனது தந்தை அரசு அலுவலர் என்பதால் இரயில் நிலையத்தில் அனுமதிக்கப் பெற்றனர். அப்போது இரயில் நிலையத்தில் காந்தியடிகளைப் பார்த்த எனது தாய், தந்தை அவருக்கு வணக்கம் கூற அவரும் பதில் வணக்கம் கூறி சென்றுவிட்டார். அதில் இருந்து இன்று முதல் அவர்கள் இருவரும் மத்தியில் காங்கிரஸ் கட்சிக்கும் மற்றும் தமிழகத்தில் இலைக்கும்(குழந்தைகளுக்கு சத்துணவு போட்ட மாகாராசன் என்பது எங்க அம்மா எம் ஜியாருக்கு வைத்த பெயர்)தான் ஓட்டுப் போடுவார்கள். நான் பலமுறை வாதாடியும் மாற்றிப்போட மறுத்துவிட்டார்கள். எனது தந்தை மட்டும் வாஜ்பாய் அவர்களுக்காகவும் நான் கேட்டதற்காகவும் ஒரே ஒருமுறை ப ஜ க விற்கு மாற்றிப்போட்டார். இப்போது அனைவரும் தொழில் மற்றும் வேலை நிமித்தம் ஒவ்வெறு மூலையில் இருக்கின்றேம். நல்ல நாள் மற்றும் விழாக்களின் போதும் அனைவரும் ஒன்றுகூடினால் அங்கு பாசம்,அன்பு சண்டை என எதுக்கும் பஞ்சம் இருக்காது. நான் இந்த நாற்பத்தி இரண்டு வயதிலும் எப்பவும் எங்க பெரிய அண்ணன் முன் நாற்காலில் அல்லது சமமாக அமர்ந்து கிடையாது அவருடன் அவர் சேபாவில் அமரச் சொன்னால் கூட நாங்க நாலு தம்பிகளும் அவருக்கு முன்னால் தரையில் தான் அமர்ந்து பேசுவேம். நான் பதிவிட வந்த சம்பவம் வேறு ஆனால் என் குடும்பத்தைப் பற்றி இனிவரும் பதிவில் கூறவேண்டியுள்ளதால் இந்த பதிவில் எழுதியுள்ளேன்.

Tuesday, September 29, 2009

திருப்பதி பெருமானுக்கு வேண்டுனா, மறக்காம பண்ணீடுங்க....

எங்க அம்மாவிற்கு திருப்பதி பெருமாளிடத்தில் மிகவும் நம்பிக்கை அதிகம், திருமலையானிடம் அளவு கடந்த பக்தி உடையவர். எனது தந்தை பெயரும் திருமலைசாமிதான். எப்போதும் ஸ்ரீனிவாசா, ஸ்ரீனிவாச, என்று அவரின் திரு நாமத்தை உச்சரிப்பவர். சனிக்கிழமை தோறும் பகல் முழுதும் உபவாசம் இருந்து இரவில் கடலையும், பைந்த்தம் பருப்பு பாயசம் மட்டும் அருந்துவார்.
எங்க அம்மா கூட தெய்வ சக்தி வாய்ந்தவர், அது பற்றி பின்னர் பதிவு இடுகின்றேன். தற்போது அவர்கள் வயது 86.
எங்க அம்மாவிற்கு திருமணம் ஆகும் போது வயது எட்டு, அப்பாவின் வயது பதிமூன்று. எண்பத்தியோன்பது வயது வரை மிக ஆரோக்கியமாக வாழ்ந்த என் தந்தை சென்ற வருடம்தான் காலமானார். ஏறக்குறைய எழுபத்தி ஆறு வருட அவர்களின் இல்லற வாழ்க்கையில் என் தந்தையும், தாயும் எனக்கு தெரிந்து பத்து நாள்கள் கூட ஒருவரை ஒருவர் பிரிந்து இருந்ததது இல்லை. நான் இவர்களின் எட்டாவது மகன்(கடைக்குட்டி).பாசம்,நேசம்,பரிவு,அன்பான கண்டிப்பு என எங்க அனைவரையும் வளர்த்தார்கள். அவர் வாழ்க்கையில் நடந்த ஒரு அதிசயமான சம்பவம்.ஒருமுறை எங்க அப்பாவிற்கு மிகவும் உடல் நலம் இல்லாமல் போய்விட்டது, பொடி போடும் பழக்கம் இருந்ததால் அவர் நுரையிரல் முழுவதும் சளி கட்டி மூச்சுவிட கஸ்டப்பட்டார். மருத்துமனையில் சேர்க்கப்பட்டு நிறைய கவத்தை குழாய் மூலம் எடுத்து சரி செய்தனர். பின்னர் எங்க அம்மாவின் கடுமையான கட்டுப்பாடுகளால் அந்த பழக்கத்தை விட்டுவிட்டார். சரி விசயத்திற்கு வருவோம்.

எனது தந்தை அறுபது வயதில் மேலே சொன்ன மாதிரி மருத்துமனையில் இருந்த போது எங்க அம்மா ஒரு கெட்ட கனவு கண்டுள்ளார், அதை பார்த்தவுடன் அவர்கள் என் தந்தை நல்லபடியாக குணமடைந்து வந்துவிட்டால் தனது திருமாங்கல்யத்தை திருப்பதி உண்டியலில் போடுவதாக வேண்டிக்கொண்டார். சில நாள்களில் எனது தந்தை பூரண குணமடைந்து வீடு திரும்பினார். அப்போது எங்களால் உடனடியாக திருப்பதி செல்ல இயலவில்லை. எங்க அம்மாவும் தான் வேண்டியதை பத்தி யாரிடமும் சொல்லவில்லை. ஏறக்குறைய பத்து வருடங்கள் கழித்து நான் என் அண்ணாக்கள், அம்மா,அப்பா அனைவரும் குடும்பத்துடன் திருப்பதி சென்றேம். அப்போது நாங்கள் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் முடித்து பின் எங்களின் தங்கும் இடம் வந்து சேர்ந்தொம். அப்போது என் தாயார் சத்தமாக தனது திருமாங்கல்யத்தை காணவில்லை எனக்கூறி அழுதார். அப்போதுதான் கவனித்தொம் என் தாயார் கழுத்தில் தாலி சரடு மட்டும் கழுத்தில் பிரிந்து இருக்க அதில் உள்ள திருமாங்கல்யம், குண்டுமணீ மற்றும் லக்ஸ்மி பாதம் மட்டும் கழன்று விலுந்து இருந்தது. அவரின் கழுத்தில் இருந்த ரெண்டு பவுன் சங்கிலி மற்றும் பவழமாலை ஆகியன அப்படியே இருந்தது. நாங்கள் எல்லாரும் திகைத்து இருக்க, அழும் எனது அம்மாவிற்கு அப்போதுதான் தனது வேண்டுதல் நினைவுக்கு வந்து எங்கள் அனைவரிடமும் சொன்னார். அப்போது அங்கு ஒரு மஞ்சள் கிழங்கு வைத்து மீண்டும் அந்த சரடை கட்டினார் என் தந்தை. பின் அனைவரும் ஊர் திரும்பிய உடன் அதேபோல இரண்டு திருமாங்கல்யம் செய்து ஒன்றை என் தாயார் கழுத்தில் கட்டி பின் இன்னோரு தாலியும் கட்டி, முதல் தாலியை கழட்டி மஞ்சள் துணீயில் முடிந்துவைத்து பின் திருப்பதி சென்று உண்டியலில் இட்டு தனது பிராத்தனையை நிறைவேத்தினார்.
மற்றும் ஒரு விளையாட்டான சம்பவம்,

எனது பெரிய அண்ணா திருமணம் முடிந்த சமயம் ஒரு நாள் மாலை நான் மட்டைபந்து விளையாடிவிட்டு வீட்டுக்கு வந்தென். எனது வீடு முழுவதும் ஒரே அல்லொகோலமாக காட்சியளித்தது. எல்லாரும் பரபரப்புடன் எதையோ தேடிக்கொண்டு இருந்தனர். நான் என்ன என்று கேக்க எனது பெரிய அண்ணியின் நாலு சவரன் சங்கிலியை காணவில்லை என்று கூறினர். நான் நிதானமாக அவர்களிடம் கடைசியாக எங்கு வைத்தீர்கள் என்று கேக்க அவர்கள் படுக்க போகுமுன் தனது மெத்தையில் தலையணைக்கடியில் வைத்ததாகவும் எழுந்து குளித்துவிட்டு வந்தால் காணவில்லை என கூறினார்கள். நான் அவர்களை எல்லாரையும் வெளியில் போகச்சொல்லிவிட்டு நிதானமாக அவர்கள் படுக்கை அறை முலுதும் தேடத்துடங்கினேன். எங்க அம்மா என் பின்னல் வந்து "எங்க போயிருக்கும் யாரும் வரைலையே" எனக் கூறி "ஸ்ரீனிவாச,ஸ்ரீனிவாச" என கூறத்தொடங்கினார். நான் உடனே சத்தமாக மொதல கொஞ்சம் வெளில போறிங்களா, இப்ப ஸ்ரீனிவாசன் வந்து என்ன மெட்டல் டிடிக்டர் வச்சு தேடப்போறாறா?, எனக்கூறியதும் என் வீட்டில் எல்லாரும் கவலையை மறந்து சிரித்தார்கள். பின் நான் அவர்கள் படுக்கையை நிதானமாக ஆராய்ந்த போது சங்கிலி மெத்தைக்கும் மெத்தை உறைக்கும் இடையில் உள்ளே தள்ளி இருப்பதை மெத்தை முழுவதும் தடவிப்பார்த்து கண்டுபிடித்தேன்(நம்ம தான் துப்பறியும் சாம்பு ஆச்சே). பின் அனைவரும் டென்சன் குறைந்து, ஏண்டா அதுபோல் அம்மாவிடம் சொன்னாய் என கேக்க, அமாண்ணா கொஞ்சம் விட்டா அம்மா அந்த சங்கிலி கிடைச்சா அதையும் உண்டியல போடனும் வேண்டிக்குவாங்க என்று விளையாட்டா கூற, என் அம்மா சிரித்துக்கொண்டு உனக்கு எப்பபாரு என்னை எதாது சொல்வது வேலையாப்போச்சு என்று கடிந்துகொண்டார். இது பலர் இருக்கும் கூட்டுக்குடும்பங்களின் சிலிர்ப்பான அனுபவம்.

Monday, September 28, 2009

ஆயுத பூஜை - மலரும் நினைவுகள்

இம் இப்பதான் ஆயுத பூஜை முடிஞ்சு இருக்கு, இந்த ஆயுத பூஜை வந்தாலே சிறுவயது பசுமையான நினைவுகள் ஞாபகம் வரும்.
நான் ஆறாம் வகுப்பு படிக்கறப்ப எங்க ஊருல டாக்ஸி ஸ்டாண்டுல ஆயுத பூஜை கொண்டடாடுவாங்க. மொத்தம் ஒரு இருனூறு டாக்ஸிகள் இருக்கும். ரொம்ப விமர்சரியாக கொண்டாடுவார்கள்.

சாயங்காலம் மொதலே ஆரம்பித்துவிடுவார்கள் மொத்த டாக்ஸி ஸ்டாண்ட் புல்லா கலர் டுயுப் லைட் போட்டு, ரொடியோல பக்தி பாட்டு போட்டுவிடுவாங்க, எல்லாரும் அந்த பகுதி முலுக்க வேப்பிலை தோரணம் கட்டி மைக்சுவுண்ட்ஸ் போட்டு அதுல எல் ஆர் ஈஸ்வரி பாட ஆரம்பிச்சா பண்டிகை களை கட்ட ஆரம்பிச்சுரும். எல்லா காரு ஓட்டறவங்களும் அவங்க அவங்க காரை நல்ல துடைச்சி பொட்டு, பூ, மாலை எல்லாம் வச்சி காருக்கு முன்னாடி இலைபோட்டு அவங்க வீட்டுல பண்ண சுண்டல், பொங்கல், பொரி அவல் வைத்து பூஜை பண்ணுவாங்க.

பூஜை முடிச்சதும் எல்லா காரும் ஒன்னா ஊருக்குள்ள ஹாரன் அடிச்சு பவனி வருவாங்க, பாருங்க அதான் இந்த நாளின் முக்கியமே(அந்த வயசுல எங்களுக்கு இதான் முக்கியம்). நாங்க இப்படி எந்த காருல போறதுனு ஒரு போட்டி. இதுக்காக நாங்க ஒரு வாரத்திற்கு முன்பே எதாது ஒரு டிரைவரை காக்கா புடிக்க ஆரம்பிப்போம். அந்த அன்னிக்கு போய் அவருக்கு எல்லா உதவியும் பண்ணி காருல ஏறிப்பம். எங்க அண்ணன் உடைய நண்பர்கள் சிலர் கார் ஓட்டுனர்களாக இருந்தால் இந்த பிரச்சனை எதுவும் எனக்கு இல்லை. எங்க அண்ணன் நண்பர் மற்றும் எங்க வீட்டிற்கு அடிக்கடி கார் ஓட்டும் கனகராஜ் அண்ணன் காருலதான் நாங்க ஊர் சுத்தி வருவம். இது ஆறாம் வகுப்பில் இருந்து ஒன்பதாம் வகுப்பு வரை தொடர்ந்தது. அதுக்கு அப்புறம் இது பேர் அடிக்க ஆரம்பித்துவிட்டதால் நகர்வலம் செல்வது இல்லை.(நாங்க பெரிய மனுசன் ஆகிட்டம் இல்லை).

இந்த நகர்வலம் முடிந்து கோவையில் இருந்து ஆர்கொஸ்ட்ரா கொண்டுவந்து போடுவார்கள். நிறைய தடவை கோவை எலைட் அல்லது சேரன் அல்லது கீதாலயா பார்ட்டிதான் வரும். அப்ப எல்லாம் மொதல் பாட்டு சங்கரா பரணத்துல வர்ற சங்கரா அல்லது எதாது பிள்ளையார் பாட்டு பாடுவாங்க. ரெண்டாவது அகர முதல எழுத்தலேல்லாம் அறியவைத்தாய் தேவி(சரஸ்வதி சபதம்)பாட்டும் பாடிவிட்டு, மொதல் சினிமா பாட்டா அப்ப ரிலிஸ் ஆன ரஜினி பாட்டு பாடுவாங்க. ரஜினி பாட்டுத் தவிர வேறபாட்டு பாடுனா கலாட்ட பண்ண நாங்க மொத வரிசையில உக்காந்து இருப்பம். அந்த பாட்டு முடிஞ்ச உடன பக்கத்துல எங்காவது பொட்டிக்கடை வாசல்ல தம் போட்டுக்கிட்டு கச்சேரி கேப்பம்.ஒரு ரெண்டு, மூனு தம் அல்லது ஆறு, ஏழு பாட்டு முடிஞ்ச உடன நல்ல பிள்ளையா வீட்டுக்கு வந்து வாசத்திண்ணைல படுக்கைய போட்டு படுத்துட்டு பாட்டுக்கேப்பன். இதுல முக்கியமான ஒன்னு என்னன்னா இப்படி ஆர்கொஸ்ட்ரா போனாலும் சரி, இல்ல ரெண்டாவது ஆட்டம் படத்துக்கு போனாலும் சரி. வாசத்திண்ணையில படுக்கையைப் போட்டுட்டு போனாலும், வீட்டுக்கு வந்தவுடன வெளியில இருந்து அம்மா நான் வந்துட்டேன் சொல்லி குரல் குடுக்கனும், அவங்களும் கதவை திறக்காம சரிப்பா பாத்து படுத்து தூங்கு என்று சொல்லி தூங்கபோவார்கள், அப்படி சொல்லாம படுத்துட்டம் வையுங்க எப்படியும் அடுத்த பத்து நிமிசத்தில் வந்து ஏம்பா சொல்லிட்டு படுக்கறது இல்ல அம்மா பையனா காணமுன்னு தூங்காம படுத்துஇருக்கன்னு சொல்லுவாங்க. அதுனாலையே நான் அவ்வளவா ரெண்டாது ஆட்டம் படம் போவது இல்லை. அப்படியும் போனா அது சகீலா படம் மட்டும்தான், ஏன்னா அதுதான் இண்டெர்வெல் முடிஞ்சவுடன எந்திரிச்சு வந்துராலாம் இல்ல.

Friday, September 25, 2009

ஒரு இளைய தலைவனின் வேண்டுகோள்(கொல்)

கல் தோன்றி,மண் தோன்றி, அதுக்குமுன் தோன்றிய தமிழ் பதிவர்கள் அனைவருக்கும் வணக்கம். நான் இந்த பொன்னான மேடையில் சொல்லுவது என்னவென்றால்(யாருப்பா அது மாலைய அப்புறமா போடுப்பா), ஒரு பதிவு எழுதுவது என்றால் அதுக்கு நேரம் வேண்டும் முக்கியமாக சுயமாக சிந்தித்து எழுத மூளை வேண்டும், தப்பில்லாமல் எழுத அறிவு வேண்டும், எனக்கு இறுதியாக சொன்ன இரண்டும் சுத்தமாக கிடையாது என்பதால் பதிவு எழுதுவது வீட பின்னூட்டம் இட மிகவும் பிடித்துள்ளது.(கொஞ்சம் பொறுங்க சோடா குடிச்சுகிறன்,அப்புறமா கிடைக்காது)பதிவு எழுத ஒரு விசயத்தை நல்லா படிக்கனும், அதைப் பற்றி சிந்திக்கனும், பின் நடுனிலையாக உக்காந்து பொறுமையாக ஏழுத வேண்டும், மேல சொன்னவற்றைப் போல செய்ய எனக்கு அறிவே பொறுமையோ இல்லாதால், அடுத்தவர்கள் இதை செய்தால் அதை கும்மியடிக்க வசதியாக பின்னூட்டம் இடலாம். ஆகவே நான் பின்னூட்டம் என்ற பெயரில் பின் குத்து அல்லது கும்மியடிக்க வசதியாக தங்களின் லிங்க் தாருங்கள். பதிவர்களிடம் உங்களின் பெயர் மற்றும் பதிவுகளின் பெயர்களை குறிப்பிட்டு எனக்கு மின்னஞ்சல் செய்தால் உங்களை உங்க வூட்டு பிள்ளையாக, நாயாக, நரியாக பின் தொடர வசதியாக இருக்கும். அகவே எனதருமை பதிவுச் சகோதரகளே தங்களின் மேலான பதிவுப் பெயர்களையும் தங்களின் பெயர்களையும் எனக்கு மின்னஞ்சல் செய்யுமாறு தங்களை வேண்டி, விரும்பி, மண்டியிட்டு தண்டாலிட்டு குண்டாலிட்டு கேட்டுக்கொள்கின்றேன்(கொல்கின்றேன்).
வாழ்க சந்திரன்,சூரியன் வளர்க என் நாமம்.
தங்களின் அன்புத்தம்பி
பித்தன்.

பிரிவின் ஆற்றாமை

அதிகாலை நேரத்தின் நிசப்த்தம்
உன் தெள்ளிய மொளனத்தையும்
காலை நேர வளரும் இளம்சூரியன்
உன் அழகிய சிவந்த முகத்தையும்
காலைப்பொழுதின் பரபரப்பு
உன் இடைவிடா மொழிகளையும்
மதியத்தின் சூரிய வெம்மை
உன் அழகான கோபத்தையும்
மதியத்தின் பசிவேதனை
உன் உடன் கழித்த நினைவையும்
மாலைச் சூரியனின் இளவெம்மை
உன் உடன் இருந்த அருகாமையும்
அந்தி நேரச் சூரியன் ஒளி
உன் அழகான நிறத்தையும்
பொளனம்மி இரவின் முழு நிலவு
உன் அழகான முகத்தையும்
இரவு சந்திரனின் குளுமை
உன் அருகாமையின் அமைதியும் தர
இவை எல்லாம் கனவாய்போய், நிஜமாய்
ஏனோ நிலவற்ற அம்மாவாசை இரவு
உன் பிரிவை கூட்டி அழவிடுகிறது.

Thursday, September 24, 2009

பாட்டில் கவுஜகள்

நான் பிரியாவ மறக்க பிராந்தி அடிச்சன்
வினிதாவ மறக்க விஸ்கி அடிச்சன்
ஜெயாவ மறக்க ஜின்னு குடிச்சன்
பிரமிளாவ மறக்க பீரைக் குடிச்சன்.

சாவித்திரியை நினைச்சு சாரயம் குடிச்சன்
பவித்ராவை நினைச்சு பட்டையடிச்சன்
வேதாவை நினைச்சு வேட்காவும் குடிச்சன்
கஞ்சனாவை நினைச்சு காக்டெய்லும் அடிச்சன்.

கவிதாவை பார்த்து கள்ளு குடிச்சன்
சுதாவை பார்த்து சுண்டைகஞ்சி அடிச்சன்
ரம்யாவை பார்த்து ரம்மு குடிச்சன்
ஒயிலாவை பார்த்து ஒயினுமடிச்சன்

டிஸ்கி: இந்த பாடல் வால்பையன் மற்றும் கார்க்கி கு சமர்ப்பணம்.

இப்படியும் ஒரு காதல் - இது கவிதையா? கவுஜயா?

நான் உன்னை பார்த்து வியந்த போது
நீ மண் பார்த்து நின்றாய்!
நான் உனைப்பார்க்க வரும்போது எல்லாம்
நீ தலைகுனிந்து சென்றாய்!

நான் உனைப்பார்த்து நகைத்தபோது
நீ மறுபக்கம் பார்த்து நகைத்தாய்!
நான் உனைதேடி வரும்போது எல்லாம்
நீ போவதுபோல் காத்து இருந்தாய்


நம் கண்கள் கலந்த போதுதான்
மின்னலையே கண்டுபிடித்தனர்.
நம் கைகள் பற்றினபோதுதான்
மின்சாரத்தையே கண்டுபிடித்தனர்.

நாம் கருத்துபரிமாற்றத்தின் போதுதான்
இலக்கியம் பிறந்தது
நாம் பேசும்போது எல்லாம்தான்
கவிதைகள் பிறந்தன.

எல்லாம் மாறிப்போய்விட்டது
உன் தந்தையின் வடிவில்
அவர் உனக்கு சாலையிட்டார்
அவர் எனக்கு பாலைய்ட்டார் (பாலைத்தினை)

நான் காதல்கடிதம் கொடுக்க
நீயோ உன் மணஓலை கொடுத்தாய்.
நான் மனதுக்குள் அழுது
முகத்தில் சிரித்தென்.

நீ உதட்டில் சிரித்து விழியில் அழுதாய்.
நீ உன் மனாளனின் கரம் பிடிக்க
நான் நெப்போலியனின் கரம் பிடித்தென்
என் கல்லறையில் இடம் பிடித்தென்.

டிஸ்கி: இதை நீங்க கவிதை என்று நினைத்தால் அதுக்கு நான் பொறுப்பு அல்ல.

பகவான் திருமலைசாமி அவர்களின் வரலாறு

பகவான் திருமலைசாமி என்று அழைக்கப்படும் மகான் ஏறக்குறைய நூறு அல்லது நூற்றுஅம்பது ஆண்டுகளுக்கு முன் எங்கள் முன்னேர்கள் வழியில் வந்தவர். எனக்கு ஒரு முறையில் கொள்ளு மாமா ஆவார் (கொள்ளு தாத்தா இருக்கலாம், மாமா இருக்ககூடாதா). இவர் தாராபுரத்தில் இருந்து பொள்ளாச்சி செல்லும் சாலையில் உள்ள சின்னபுத்தூர் என்னும் கிராமத்தில் கிராம கணக்குபிள்ளை என்னும் கர்ணம் ஆக இருந்தார். (முப்பது வருடங்களுக்கு முன் கோவை,ஈரொடு,திருப்பூர் மாவட்டங்களில் உள்ள கிராம கர்ணமாக உள்ளவர்கள் பொரும்பாலும் எனது உறவினர்கள் ஆவார்கள்). இவர் ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் பணிபுரிந்து வந்தார்.

இவர் ஒரு சித்த புருஸர், மகான் என்றும் அழைக்கப்படுகிறார். பகவான் கோயில் என்று ஈரொடு மாவட்டத்தில் உள்ளது இவரின் கோவில் ஆகும். இவர் வாழ்ந்த சமயம் அந்த ஊரிலும் அதை சுற்றி உள்ள கிராமங்களுக்கும் இவர்தான் அறிவிக்கப்படாத டாக்டர். இவர் பெரியம்மை மற்றும் காலரா நேய்கள் அங்கு பரவாமல் காத்துவந்தார்.இவர் எப்பொழுதும் பூஜை,பக்தி ஆகியன செய்துவந்தார். இவரிடம் வரும் பக்தர்கள் மற்றும் உடல்,மனம் சரியில்லாதவர்களுக்கு இவர் விபூதியும் சுக்கு கலந்த கரும்புச்சக்கரை என்னும் நாட்டுச்சக்கரை தான் தருவார். இப்பவும் இவர் கோவிலில் இதுதான் பிரசாதம். அந்த மக்களின் நல்ல நிகழ்வுகளுக்கு இவர்தான் நாள் குறித்து தருவார்.அனைத்தும் இவரைக் கேட்டுத்தான் செய்வார்கள். இவர் செய்த பல சித்து விளையாட்டுக்கள் அற்புதம். இவர் தன் வீட்டின் உள்ள கிணற்றில் மூழ்கி சற்று தொலைவில் உள்ள தோட்டத்தின் கிணற்றில் வெளிவருவார். அறையில் வைத்து பூட்டி பின் அறைக்கு வெளியில் வருவார். அறையை திறந்தால் அதற்குள் இருப்பார். ஒரு சமயம் எங்கள் ஊரின் எல்லையில் உள்ள தில்லாபுரி அம்மன் கோவிலில் சிலர் ஒரு கண்றுக்குட்டியை பலியிடுவதற்க்காக கொணர்ந்தனர். அந்த சமயம் அந்த கன்றுக்குட்டி அவர்களிடம் இருந்து ஓடி ஒரு நாணல் புதரில் சென்று மறைந்தது. அவர்கள் புதரை விளக்கி உள் சென்று பார்த்தபோது அங்கு இவரும், இவரின் நண்பர் ஒருவரும் அழ்ந்த தியானத்தில் அமர்ந்து இருந்தனர். இவர்கள் சென்றவுடன் கண் விழித்த அவர் அடே,அடே, வா லஸ்மி, வந்துட்டியா, பயப்படாத என கூறி கன்றுக்குட்டியை தடவிக்கொடுத்து அவர்களிம் அந்த குட்டியை விட்டுவிடுமாறு கூறினார்.

ஒருமுறை கிராம கணக்கர்களுக்கான ஜமாபந்தி என்னும் கணக்கு பார்க்கும் நாளும் வந்தது, இவர் தியானம், பக்தி மற்றும் யோகம் என்று இருந்ததால் கணக்குகளை சரியாக எழுதவில்லை. ஆங்கிலோய தாசில்தார் இவருடைய கணக்குகளை பார்த்து எழுதப்படாமல் வெறுமையாக வைத்து இருப்பதை பார்த்து அளவற்ற ஆத்திரம் கொண்டார். பின் அவர் இவரிடம் ஏன் கணக்குகளை எழுதவில்லை எனக்கேக்க, இவர் உடனே கைகளை இரண்டையும் மேலே தூக்கி சத்தம் போட்டார். டேய் தொங்காத, நான் இருக்கன் உன்னை காப்பாத்த, உன்ன சாகவிடமாட்டேன் என சத்தம் போட்டார். அதுக்கு அந்த அதிகாரி என்னவென்று கேக்க இவர் நமது ஊர் எல்லையில் உள்ள ஆலமரத்தில் ஒருவன் தூக்குபோட்டு சாகமுயற்ச்சிக்கின்றான், நான் அவனை பிடித்துஇருக்கேன். நீங்கள் போய் சீக்கிரம் அவனை காப்பாத்துங்கள் என்றார். அந்த அதிகாரி அவர் பேச்சை மாத்துவதாக கூறவும், இவர் திரும்பவும் அதையே கூறினார். அப்போது அங்குள்ள துணைத்தாசில்தார் இவரை பற்றி அறிந்தவர் ஆதலால் துரையிடம் இவரைப் பற்றி கூறி போய்ப் பாக்கலாம் என்றார். துரையும் சரி போய்ப் பார்க்கலாம் அப்படி யாரும் இல்லை என்றால் இவரை சிறைக்கு அனுப்புவேன் என்று கூறி ஜீப்பில் சென்றார். அங்கு ஆலமரத்தில் ஒருவன் தூக்குப் போட்டு துடிப்பதைப் பார்த்து அவனைக் காப்பாற்றிவிட்டு வந்தனர். துரை இவரை ஆச்சரியமாக பார்த்துவிட்டு கணக்கு புத்தகத்தைப் பார்த்தால் அது அன்றைய தேதி வரை சரியாக எழுதப்பட்டு இருந்தது. துரை இவரின் சிறப்பை பார்த்துவிட்டு இவரிடம் கடுமையாக நடந்தமைக்காக வருத்தம் தெரிவித்துப்போனார்.

இவர் மற்றும் கௌசல்யா என்னும் இவரின் மனைவியும் சின்னப்புத்தூரில் வசித்தும் அங்குள்ள மக்களுக்கு சேவை செய்துவந்தனர். அந்நிலையில் ஒரு நாள் இவர் தமது நெருங்கிய உறவினர்களை அழைத்து தாமும் தன் மனைவியும் ஓய்வெடுப்பதாக கூறி தங்களின் படுக்கை அறைக் கதவை மூடிக்கொள்ளும்படியும், யாரும் திறக்கவேண்டாம். இரண்டு நபர்கள் வந்து தங்களின் விவரம் சொல்லிக் கேட்ப்பார்கள். அப்பொழுது கதவைத் திறந்தால் போதும் என்று கூறி தங்களின் படுக்கை அறைக்குள் சென்றுவிட்டனர். உறவினரும் அறையை மூடிபூட்டிவிட்டனர்.
ஏறக்குறைய ஒருமாதம் யாரும் வராததால் கலக்கம் அடைந்த உறவினர்கள் ஒன்றுகூடி பின் கதவை திறந்து பார்க்க முடிவுசெய்தனர். அவர்கள் கதவை திறந்தபோது அங்கு கட்டிலும் இரண்டு நாகப்பாம்புகளின் சட்டையும் தான் இருந்தது. அவரோ, அவரின் மனவியோ அவர்களின் உடலே அங்கு இல்லை. உறவினர்கள் ஆச்சரியம் மற்றும் பயம் அடைந்து மறுபடியும் பூட்டிவிட்டனர்.

சிலகாலம் கழித்து அங்கு வந்த இருவர், இவர் பற்றிக்கேக்க இவர்கள் அறையை காமித்தனர். அவர்கள் அறையத் திறந்து பார்த்தவுடன் கோவமாக நீங்கள் திறந்து பார்த்தீர்களா என கேக்க உறவினர்களும் உன்மையை ஒப்புக் கொண்டனர். அதற்கு அவர்கள்" ஒரு மகான் உங்கள் குலத்தில் பிறந்து உள்ளார், அவரை புரிந்துகொள்ளாமல் விட்டுவிட்டிர்கள், ஆதாலால் உங்கள் வம்சம் அழிந்துபோகட்டும்" என சாபம் கொடுத்துசென்றனர். அவர்கள் சென்றபின் உறவினர்கள் அனைவரும் வருத்ததுடன் அந்த அறையின் முன் இருக்க அந்த அறைக்குள் இருந்து அவரின் குரல் மட்டும் கேட்டது. வருந்த வேண்டாம் எனது இந்த கட்டில் அறையை வைத்து பூஜை செய்யவும், நான் உங்கள் அனைவரையும் காப்போன் எனவும், அந்த சக்கரை வைக்கும் பானையைத் துனியால் மூடி வையுங்கள், அந்த பானை என்று பொங்கி வழிகின்றதே அப்போது நான் மீண்டும் பிறப்பேன் என்று கூறினார். அது முதல் அந்த கட்டில் அறையும், கட்டிலும் அவர் மற்றும் அவர் மனைவி கௌசலாம்பிகை தாயார் நினைவாக பூஜிக்கப்பட்டு வருகிறது. வெள்ளகோயில் அருகே உள்ள பகவான் திருமலைசாமி சமேதர கௌசலாம்பிகைத் தாயார் கோயிலும் உள்ளது. தாராபுரத்தில் இருந்து பொள்ளாச்சி செல்லும் வழியில் சத்திரம் அல்லது சின்னப்புத்தூர் சத்திரம் அல்லது கோவிந்தாபுரம் சென்றால் அந்த சத்திரம், கட்டில், அவர் குளித்த கிணறு, மற்றும் தோட்டக்கிணறு ஆகியவற்றைக் காணலாம். அந்த சத்திரத்திற்கு இரண்டு கிலோமீட்டர் முன் உள்ள சின்னக்காம்பாளைய கிராமத்தில் அவரின் உறவினர் வீட்டில் அந்த சக்கரைப் பானை பூஜை அறையில் வைக்கப்பட்டுள்ளது. இது ஒரு புனைவு அல்ல உன்மை சம்பவங்கள்.

Wednesday, September 23, 2009

நல்லா படிக்கனுனா பாம்புக்கு பால் ஊத்துங்க.

பதிவுலக நண்பர்களே. இதுவும் நான் நாலாம் வகுப்பு படிக்கும் போது நடந்த சம்பவம்.
நானும், சகாயத்துல்லாவும் நல்ல நண்பர்கள் நாங்கள் இருவரும் வகுப்புகளில் ஒன்றாக அமர்ந்து இருப்போம். எப்போதும் என் வலதுபக்கம் எப்பவும் ஆனந்தகுமாருக்கு ரிசர்வ் செய்யப்பட்டு இருக்கும். இடது பக்கம் மட்டும் நண்பர்கள் மாறி மாறி வருவார்கள். அப்படி எனது இடதுபக்கம் அந்த வகுப்பில் வந்தவன் சகாயத்துல்லா. நான் படிப்பில் சுமார். அவன் எனக்கும் கொஞ்சம் குறைச்சல்..
அதுக்கு அவன் சொல்லும் காரணம் அவன் படிக்கிறானாம் ஆனா மண்டையில ஏறலயாம். அதனால நானும் அவனும் நல்லா படிக்க ஒரு வழிகண்டுபுடிச்சம். அது பாம்பு புத்துக்கு பால் ஊத்துனா நல்லா படிப்பு வரும்னு. அதனால நான் பாம்புக்கு பால் ஊத்தறது, சகாயத்துல்லா முட்டை ஊத்தறதுனு முடிவு பண்ணுனம்.

அதன்படி நான் பால் கொண்டு வருவதும், அவன் முட்டை எடுத்து வருவது என முடிவு செய்தெம்.
பின் எங்க ஊருல இருக்க பார்க் ஒன்னுல இருக்க மின்னமரத்துக்கு அடியில இருக்க சின்ன பாம்பு புத்துக்கு பால் ஊத்தறதுனு முடிவு பண்ணுயாச்சு. அந்த நாளும் வந்தது. நாங்க ரெண்டு பேரும் பாலும், முட்டையும் எடுத்துக்கிட்டு கூட கூடுதல் இலவச இணைப்பா மஞ்சள், குங்குமம் எடுத்துகிட்டு போனம். அங்க போனா பார்க் பூட்டியிருந்தது. நாங்க மதிற்ச்சுவரை தாண்டிக் குதிர்த்து(மொத்த உயரமே 3.5 அடி தான்). உள்ள போனேம். எனக்கு உள்ளுக்குள்ள பயம் (பாம்புனா பயம் இருக்காத) ஆனா சாகாயத்துல்லாதான் அது ஒன்னும் பண்ணாது வாடா தகிரியம் சொன்னான். அவனுக்கு ஃப்ரெண்ட் போல. பின் நாங்க சத்தம் போடம புத்துக்கு குங்கும பொட்டு வச்சு முடிக்கறம் எங்க ரெண்டு பேரு சட்டையும் ஒருத்தர் புடிச்சுக்கிட்டார். அவரு பார்க் வாட்ச்சுமேன். ஜம்பது வயது முதியவர். அவரு டாய் யாருடா நீங்க? இங்க என்ன பண்ணுறீங்கனு? கேக்க, சகாய் முழிக்க, நாந்தான் கொஞ்சம் துருதுருப்பாச்சே உடனே பாம்புக்கு பால் ஊத்தற விசயத்த சொன்னன். அவர் சிரித்து அது கரையான் புத்து, பாம்பு புத்து இல்லைனார். உடனே நான் சுறு சுறுப்பா அப்ப பாம்பு புத்து எங்க இருக்கும் கேக்க, அவர் என் துருதுருப்பை பார்த்து நாங்க யாருனு விசாரிக்க நான் என் வீட்டைபற்றிச் சொன்னென், அவர் உடனே தன் கையை என்மிது இருந்து எடுத்து விட்டு ஆச்சீரியமாக நீ சீனிவாச அய்யங்கார்(அம்மா வழித்தாத்தா) பேரனா? கணக்கு பிள்ளை அய்யர்(அப்பா வழித் தாத்தா) பேரனா? எனக் கேட்டார். நானும் ஆமானு சொன்னன். அவர் ரொம்ப ஆச்சிரியப்பட்டு என்னை எதொ கடவுள் ரொஞ்ச்சுக்குப் பார்த்தார். எனக்கும், சகாய்க்கும் ஒன்னும் புரியலை. உங்களுக்கு எங்க தாத்தாவை தெரியுமானு கேக்க, அவர் தெரியும்பா என்று கூறி எங்களுக்கு டீயும், முருக்கும் வாங்கிக்கொடுத்து, எங்க பரம்பரை வரலாறு பற்றி கூறினார். அப்பதான் ஆகா, ஆகா நமக்கு கூட ஒரு வரலாறு,புவியியல் எல்லா இருக்குனு தெரிஞ்சுது. பின்னால அவர் உங்க வீட்டுல எல்லாரும் நல்லா படிப்பாங்க, நீயும் நல்லாப் படிப்ப, ஒழுங்கா போய் படிங்க, இந்த மாதிரி எல்லாம் சுத்தாதிங்க புத்தி சொல்லி அனுப்பினார். நாங்களும் அவருக்கு வணக்கம் கூறி வீட்டுக்கு வந்து எங்க அம்மா கிட்ட சொன்னன். அம்மா இந்த மாதிரி எல்லாம் பண்ணக்கூடாது உன்மையில பாம்பு இருந்த என்ன பண்றது, சொல்லிட்டு எங்க தாத்தா கதைகளை சொல்ல ஆரம்பித்தார். (என்ன தாத்தா கதை வேனுமா). இம்ம் பழைய பொருமை எல்லாம் எதுக்கு தலை. நம்ம என்ன உருப்படியா பன்னனுனம் பாக்கலாம். இப்படியா படிக்கறத்துக்காக புத்துக்கு பால் ஊத்த போய், பரம்பரைக் கதை தெரிந்து வந்தென்.

நான் பித்தனா? இல்லை பைத்தியமா?

சமீப்பத்தில் உன்னைப்போல் ஒருவன் படம் பார்த்துவிட்டு வந்தென். படம் நன்றாக இருந்தது.
திரைப்படங்களில் வரும் எல்லாம் நிஜத்தில் சாத்தியம் இல்லை என்பதுதான் தமிழ் திரைப்பட வரலாறு என்பதால் படம் என்னுள் எந்த பாதிப்பையும் ஏற்ப்படுத்தவில்லை. இது இன்னுமொரு கமல் படம் என்பதை தவிர பெரிதாக ஒன்றும் இல்லை. ஆனால் இந்த பட விமர்சனங்கள் குறித்த பதிவுகளும் அதற்க்கு வரும் பின்னூட்டங்களும், அதில் அடித்துக்கொள்ளும் பதிவர்களையும் பார்த்தால் எனக்கு சந்தையின் மூலையில் இறைச்சி விற்க்கும் இடத்தில் உள்ள நாய்களின் சத்தம் தான் நினைவுக்கு வருகிறது.

இதில் வியப்பு என்ன என்றால் எல்லாரும் நன்றாக படித்தவர்கள், பண்பாளர்கள். அனால் நம்மை சுற்றி இருக்கும் பல்வேறு சிலந்திவலைகள் என்னும் உணர்வுகளை தூண்டக்கூடிய கருத்துக்களுக்கு அடிமையாகி அடித்துக்கொள்ளுகின்றனர். அனைவரும் நண்பர்கள் நல்லா பழகுவார்கள், தனிப்பட்ட சந்திப்பின் போது புன்னகையை பகிர்வார்கள். ஆனாலும் பதிவிலும் பின்னுட்டத்திலும் அந்த நாகரீகத்தை மறக்கிறார்கள். ஒருவேளை நான் உன்னை திட்டுகின்றேன் நீ என்னை திட்டு என பேசிவைத்துக்கொள்வார்களே. ஆனாலும் இவைகளை படிக்கும்போது ஆர்வத்திற்கு பதிலாக வெறுப்பும், ஆற்றாமையும் தான் வெளிப்படுகின்றது.

இன்றைய இளைஞர்களுக்கு படிக்கும் ஆர்வம் அதிகம், அவர்களின் துடிப்பும் அதிகம்.அதுபோல் வாழ்க்கை வசதிகளும் அதிகம். பத்து வருடங்களுக்கு முன்னர் நாங்கள் ஒரு நாளைக்கு நாலு மைல்தூரம் நடந்து படித்த அளவுக்கு, இன்றைய இளைஞநர்களுக்கு வருத்தம் இல்லை. அன்றுபோல் இன்று பணக்கஸ்டமும் இல்லை. நிறைய தொழில் வாய்ப்புகள் உள்ளன.
இன்றைய இளைநர் முன்னேற நல்ல வாய்ப்புகள் உள்ளன. ஆனால் அதை விடுத்து தங்களின் சுய நலத்துக்காக மக்களை கூறுபோடும் தலைவர்களும் அவர்களை அண்டிப்பிழைக்கும் அடிவருடிகளும், அவர்களை ஆதாரித்துப்பிழைக்கும் மீடியாவும், இன்றைய இளைஞர்களை மிகவும் குழப்பத்தில் ஆழ்த்துகின்றனர். இவைகளின் விளைவுகள் இன்று தெரியாது நாற்பது வயதில் தான் நம்பிய அனைவரும் கைவிட்டபின் எதாது ஒரு வேலையில் பிழைப்பை ஓட்டும்போது தப்பு செய்துவிட்டதாக நம்புவார்கள். அதுவரை இளரத்தங்கள் சூட்டில் கத்துவார்கள். இதில் ஒருசில புத்திசாலிகள் மட்டும் தங்கள் தலைவர்கள் போலவே ஊரை ஏமாற்றுவனாக மாறிப் பிழைத்துக்கொள்வார்கள்(கவனிக்கவும் பிழைப்பார்கள், வாழ்வார்கள் அல்ல). திரைத்துறையும், அரசியலும் ஒரு பிழைப்புதான் ஒழிய வாழ்க்கை அல்ல. இன்னும் எத்தனை நாள்தான் இவர்கள் இப்படி ஏமாற்றுவதும், இளைநர்கள் ஏமாறுவது என நினைத்து இருக்க இங்கு படித்தவர்கள் கூட இந்துவா, பகுத்தறிவு, ஆரியம்,திராவிடம், இஸ்லாம்,இந்து என நாய்களை வீட கேவலமாக அடித்துகொள்கிறார்கள். நாய்களுக்கு வாய் மற்றும் ஆறாம் அறிவு இருந்தால் பதிவர்களுக்கு இடம் விட்டு குறைப்பதை நிறுத்திகொள்ளும். மனது சங்கடப்படும் அளவுக்கு இருக்கிறது இவர்களின் கருத்துக்கள். இதுதான் பதிவர்களின் கருத்து சுதந்திரம் என்றால் இந்த சுதந்திரம் இல்லாமல் இருந்திருக்கலாம். சில காலம் பதிவுகளை படிக்காமல் இருப்பது என்பது மனதை ஆற்றும் எனவும் நினைக்கின்றேன். பதிவு உலகத்தில் நல்ல நண்பர்களும் நிறையப் படித்தவர்களும், இருப்பார்கள் என என்னித்தான் ஆரம்பித்தென் ஆனால் சாதீய சிந்தனை கொண்டவர்களும்(சாதியை எதிர்க்கின்றேன் என்ற பெயரில்), மதவாதிகளும்(மதத்தை எதிர்க்கின்றேன் என்ற பெயரில்) அதிகம். ஆன்மீக வாதிகளும், மதவாதிகளும் கூட இவர்களைப் போல் தீவிரவாதிகாளாய் இருப்பது இல்லை. நல்ல பயன் தரும் கட்டுரைகள் எழுதுவதை வீட பின்னூட்டங்களுக்காக எழுதுவது அதிகம் இருக்கும் சூழ் நிலையில் மேலே குறிப்பிட்ட பண்புகளை எதிர்பார்ப்பவன் பித்தனா? அல்லது பைத்தியகாரனா?.மனிதம், மனித நேயம் என்பது எல்லாம் கானல் நீராக போய்விட நட்பு என்ற ஒன்றுதான் இந்த வகை பதிவர்களை கட்டிப்போட்டு உள்ளது. அதுவாது இதுபோன்ற மாயகருத்துக்களின் ஆதிக்கத்தில் அழிந்து விடாமல் இருக்க எல்லாம் வல்ல ஆண்டவனை அல்லது உங்க பாணில இயற்கையை வேண்டிக்கொள்ளுகின்றேன். நான் எளுதிய பதிவு உன்மை இல்லை என்றாலும் எனக்கு மகிழ்ச்சியே.

Tuesday, September 22, 2009

வருங்கால உலக ஜானாதிபதி- நான்

வணக்கம் நண்பர்களே. என் நாலம் வகுப்பு படிக்கறப்ப ஒரு சம்பவம் உங்ககிட்ட பகிர்ந்துகொள்ள விரும்புறன். அப்ப எல்லாம் எனக்கு சிவாஜி சாரையும், இந்திரா அம்மாவையும் ரொம்ப புடிக்கும். ஏன் புடிக்கும்னு காரணம் எல்லாம் கேக்கப்படாது. புடிக்கும் அவ்வளவுதான்.(எனக்கே தெரியாது).

எங்க தெருவுல தியாகி முனுசாமிபிள்ளை ஒருத்தர் இருக்கார். எங்க குடும்ப நண்பர், எனது ஆருயிர் தொழனின் தாத்தா. அவருடன் எனக்கு பழக்கம் அதிகம்.அவருக்கும் என்னை ரொம்ப புடிக்கும்.(எனக்கு ஒன்பது, அவருக்கு ஜம்பது(வயசுதாங்க) அப்போது அவர் காங்கரஸில் செல்வாக்கு உள்ள அரசியல்வாதி, எம்.சி யாக இருந்தார். அவர் வீட்டீல் இருந்துதான் பிரச்சாரம் தொடங்கும். கார்களில் வந்து அவரை பிரச்சாரத்துக்கு அழைத்துசெல்வார்கள். ஒருமுறை நான் அவர்கள் வீட்டின் அருகில் விளையாடிக்கொண்டு இருந்தென்,அப்பொழுது அவர் எனக்கு வழக்கம் போல் இந்திராகாந்தி அம்மையார் அவர்களின் போட்ஜ் ஒன்றைக்கொடுத்தார். நான் அப்ப தெர்தல் சமயத்தில் அதை சட்டையில் குத்திக்கொள்வது வழக்கம். அன்றுமாலை வழக்கம் போல போட்ஜ் குத்தி அவர் வீட்டின் அருகில் விளையாடிக்கொண்டு இருந்தென்,அப்போது மாலை ஆறு மணி இருக்கும், அவரை பிரசாரத்திற்கு அழைத்துச்செல்ல கார் வந்தது, அதில் நானும் ஒரு ரவுண்டு போற ஆசையில ஏறிக்கிட்டேன். அவங்க பிராசாரம் தொடர்ந்து இரவு பத்து மணிவரை நடந்தது. நான் வீட்டிற்கு திரும்ப முடியாமல் நல்லா மாட்டிக்கிட்டேன்.

நான் எப்பவும் எங்க வீட்டை சுத்தி இருக்கற நாலு தெருவுலையும் எந்த வீட்டுக்குள்ளையும் போற ஆசாமி. எந்த வீட்டுல போய் என்ன வோனா எடுத்து தின்னுட்டு அறைமணி நேரம் அங்க இருக்கறவங்க கூட கதை அடித்துவிட்டு வருவென், நல்லா பேசக்கூடிய சின்னப் பையன்னு நம்மளை தனியா கவனிப்பாங்க, அவங்க வீடுகளுக்கு போகலனாதான் கோவிச்சுகுவாங்க, அதானால எங்ககையாது ஒரு வீட்டுல இருப்பான் விட்டுட்டாங்க ஆனா எட்டு மணிக்கு மேல நான் வீடு திரும்பவில்லை, அதுக்குள்ள இங்க எங்க வீட்டுல பையன கானமுன்னு ஒரே காலாட்டா, எல்லா இடத்துலையும் தெடி இருக்காங்க,அதானல் ரொம்ப கவலைப்பட்டு எனது மூன்று சகொதரிகள், நாலு சகொதரகள் அம்மா,அப்பா, சித்தப்பா, மாமா, பாட்டி என ஒரு படையே என்னை தெடி இருக்காங்க. ஒரு ஒன்பது மணிக்கு எங்க தெருவுல இருக்க கீரைக்காரம்மா என்னும் ஜனதாகாரம்மா நாங்க பிரச்சாரம் பண்ண இடத்தில் பிரச்சாரம் பண்ணீட்டு திரும்பிபோய் இருக்காங்க அப்ப என் வீட்டுவாசல்ல இருக்க கூட்டத்தை பார்த்து என்ன என்று கேட்டு, இவங்க கிட்ட நான் தியாகி முனுசாமிபிள்ளை அவர்களுடன் காங்ககிரஸுக்கு ஓட்டு கேக்கற விசயத்தை சொல்லி இருக்காங்க, அதுக்கு அப்புறம் எங்க வீட்டுல சமாதானம் ஆகி அமைதியாய்ட்டாங்க. நான் போன கார் திரும்பி வர இரவு பத்து மணி ஆகிவிட்டது. என் தந்தை மிகவும் கோவமாக என்னை சொல்லாமல் போனத்ற்காக என்னை அடிக்கோலால் காலில் அடித்தார். எனது நாற்பது வயது வரை உயிருடன் இருந்த எனது தந்தை என்னை முதலும் கடைசியுமாக ஒரே ஒரு முறை அடித்த சம்பவம் இது. எங்க அம்மா என்னை தன்மடியில் உக்காரவைத்து செல்லமாக இனிமேல் எங்கயாவது போவதாக இருந்தால் அம்மாவிடம் சொல்லிவிட்டுதான் போகவேண்டும் என்றார். அதுமுதல் நான் எங்க அம்மாகிட்ட சொல்லாம எங்கயும் போறது கிடையாது. நம்ம எல்லாம் ஒன்பது வயசுல ஓட்டுகேக்கப் போன ஆளு, அதுனால அடுத்து நடக்கப்போற உலக ஜானாதிபதி தெர்தல எனக்கு ஓட்டுபோட்டுங்க.

ரமலான் நினைவுகள் -பகிர்தல்

பதிவு நண்பர்களுக்கு இனிய ரம்ஜான் வாழ்த்துக்கள், ரம்ஜான்னு சொன்னா இஸ்ஸாலாமிய நண்பர்களுக்கு முதலில் ஞாபகம் வர்றது, காலைத்தொழுகையும், நேன்பும் தான். ஆனா எனக்கு எல்லாம் ஞாபகத்துக்கு வர்றது ரம்ஜான் கஞ்சிதாங்க(அட நான் ஓட்டுக்காக குடிக்கறவன் இல்லப்பா). என்னுடய ரம்ஜான் பண்டிகை அனுவபங்களை உங்ககூட பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகின்றேன். எங்கள் ஊரு தாராபுரத்தில் உள்ள மசூதி தெருவில் உள்ளது ஜாமியா மசூதி.இதை ஸோளக்கடை வீதி மசூதி என்றும் கூறுவார்கள். இங்கும் தினமும் மாலைத்தொழுகை முடிந்தவுடன் மந்திரிப்பார்கள்,சில சமயம் மந்திரித்த துணியால் முகத்தில் விசுறுவார்கள்(பச்சை துணி) . அவர்கள் குருமார்கள் மயிலிறகு கொண்டு ஓதிக்கொண்டு வருடிவிடுவார்கள், அதனால் உடல் குணமடையும் என்பது நம்பிக்கை. எங்க வீட்டுல எனக்கு அல்லது எங்க அண்ணங்களுக்கு யாருக்காவது உடம்பு சரியில்லை என்றால் உடனே சாமி கும்புட்டு குங்கும் இட்டு சி.ஸ்.ஜ மருத்துவமனைக்கு போய்ட்டு,அப்படியே இந்த பள்ளிவாசலைக்கு போய் மந்திரிச்சுருவம்(என்ன நல்லினக்கம் பாருங்க). அப்ப எல்லாம் பள்ளி வேறு,தெவாலயம் வேறு, கோவில் வேறு என்று நினைப்பாரில்லை.

இந்த பள்ளிவாசலில் கொடுக்கும் கஞ்சிதாங்க அருமையாக இருக்கும். நல்ல அரிசிகுருனையில இஞ்சி,மிளகு, ஏலக்காய் மற்றும் தெங்காய் எல்லாம் போட்டு இருக்குமுங்க. எப்படி பண்ணாறங்கனு தெரியாது.நமக்கு அதுவா முக்கியம். நம்ம நண்பன் கடை ஜீவா பிரிண்டர்ஸ் அங்கதாங்க இருக்கும். அதுக்கு பக்கத்து கடை ஸேட்டு அப்பிடிங்கற முகமதிய நண்பர் விரதம் இருந்து பள்ளிக்கு போய்ட்டு வர்றப்ப ஒரு பெரிய தூக்கு நிறைய கஞ்சி வாங்கிவருவான். அதுக்கு நாங்க அங்க பள்ளியின் அருகில் ஒரு பிரபல டீக்கடையில் வடை, ஊறுகாய் பாக்கெட் வாங்கி நல்லா நாலந்து டம்ளர் அடிப்பங்க.(கஞ்சியும் எலுமிச்சை ஊறுகாயும் நல்ல கூட்டனிங்க) அப்புறம் ஒரு இரண்டு நாள் கழித்து இதுபோல் தினமும் என் நண்பர்கள் சாப்பிடுகிறார்கள் என்று தெரிந்து நான் சத்தம் போட்டடேன். இது நேன்பு இருக்கும் அன்பர்களுக்காவும், ஏழைகளுக்காவும் தருவது, நாம் பொழுதுபோவதற்காக அருந்த கூடாது என்று கூறினேன்,அதுமுதல் நாங்கள் ஒவ்வெறு ரம்ஜானுக்கும் இதுமாதிரி ஒன்று அல்லது இரண்டு நாள் கஞ்சி அருந்துவது உண்டு. எனது மற்றும் ஒரு நண்பனான சிக்கந்தர் கூட வருடம் ஒருமுறை கஞ்சியை கடைக்கு கொண்டு வந்து தருவதுண்டு.
எனது நெருங்கிய நண்பரான முகமது ஆசிப் அவர்கள் ஒவ்வெறு ரம்ஜான் விரதம் போது அவர்கள் வீட்டில் எனக்கு கஞ்சியும், வடையும் தருவார். ரம்ஜான் தினத்தன்று அவர் விளையாட்டாக," டாய் அய்யிரு வாடா பிரியானி சாப்பிடாலம்" என அழைப்பார். எனக்காக தனியாக சைவபிரியானியும் வைத்துஇருப்பார். என் அண்ணனின் நண்பர் டிப் டாப் டைலர் இஸ்மாயில் அண்ணாவும் கஞ்சியும் வடையும் தருவார். இப்படி ரமலான் மாதத்தில் நண்பர்களுடன் கஞ்சி சாப்பிடுவது நல்ல விஸயங்க. நண்பர்களின் அன்பும் ஆதரவும் அந்த கஞ்சிய வீட சுவையான விசயங்க. இந்த ரமலான் மாதத்தில் ஒரு விஸேஸம் என்னனு பார்த்திங்கனா விரதம் ஆரம்பித்த இருபத்திஏழாம் நாள் ரொம்ப நல்ல நாள், அன்றைய தினம் வானில் இருக்கும் தெவதகள் பூமிக்கு வந்து ஆசிர்வதிக்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன். அதில் இருந்து நானும் இந்த நாள் அவர்களை போல விரதம் இருக்க ஆரம்பித்து ஒரு இரண்டு மூன்று வருடங்கள் இருந்தென். அதன் பிறகு அந்த நாள் என்று கூற நண்பர்கள் அருகில் இல்லாததால் இப்பொழுது இருக்க இயலவில்லை. இருந்தாலும் ரமலான் நினைவுகள் மறக்க இயலாது. நன்றீ

Friday, September 18, 2009

இருபத்தி ஜந்தாவது பதிவு- நன்றிகள்

இது என் இருபத்தி ஜந்தாவது பதிவு. மொதல நான் ஒரு சென்னை நிறுவனத்துல கணக்கரா வேலை செய்யற மாதிரி ஆக்ட் பண்ணிட்டு இருந்தன். ஒரு நாலு வருசம் ஆணி புடுங்கன என் திறமைய பார்த்து எங்க நிருவன நிர்வாக இயக்குனர் என்ன கூப்பிட்டு நீ ரொம்ப ஆனீ புடுங்கிட்ட இனிமே இங்க உனக்கு வேலை இல்லைனு சொல்லிட்டார், நான் ஜெர்க் ஆக அவர் சிரித்துக்கொண்டு நம்ம நிருவனம் சிங்கபூருல ஒரு இருபத்தி ஏழு மில்லியன் (மில்லி இல்லீங்க) டாலர் இன்வெஸ்ட் பண்ணி இருக்கோம்.நீ ரொம்ப நம்பிக்கையான ஆளு,ஆதலால் நீ அதை போய் கணக்கு பார்த்துட்டு அங்கன ஆனீ புடுங்குனு சொல்லீட்டார்.நானும் பழனிமலை டாலரா இல்ல திருப்பதி டாலரானு சந்தொகம் கேக்காமல் சரி சொல்லிட்டன். அவரே எனக்கு பாஸ்போர்ட், விசா எல்லாம் எடுத்து கொடுத்து அப்பா போய்த்தொலைடா சாமீனு சொல்லீட்டார். என் நண்பர்களும் வாழ்த்து சொல்லிட்டு நிம்மதியா வீட்டுக்கு போய்ட்டங்க.

நானும் சரி சிங்கையில யாராது மாட்ட மாட்டங்களா அப்பிடினு நம்பீ வந்துட்டன். இங்கன வந்தா எல்லாம் சுத்தமா இருக்கு, ஒரு பான் பராக் போட்டு பஸ்ல இருந்து பைக்ல வர்ரவன் மேல துப்பமுடியாம ஏக்கத்துல அலுவலகம் வந்து சீனா முதாலாளிடம் ஸேர்ந்தென். அவர் ரொம்ப டீசண்டா எனக்கு ஒரு சிஸ்டம், குளிர் சாதன அறை எல்லாம் கொடுத்து நீ ஆனீ புடுங்கு ஆனா அதை தவிர எந்த வேலையும் செய்யக்கூடாதுனு சொல்லீட்டார். நான் எந்த ஆனி புடுங்கனனும் கேட்டன் அவர் நீ புடுங்கற எல்லா ஆனியும் வேண்டாத ஆனிதான் சொல்லீட்டார். எனக்கு ஒரு வேலை வெட்டீ இல்லாம எப்படி சம்பளம் வாங்கறதுனு கூச்சம் அதுக்கு பதிலா உக்காந்து நெட்டுல மேய ஆரம்பித்தன். அப்பதான் தட்ஸ் தமிழ்ல நான் ப்லொக்ஸ் எல்லாம் படிச்சன் அப்ப குடுகுடுப்பையாரின் எழுத்துக்கள் என்னை கவர்ந்தன. பின் நான் ஒரு மாசம் எல்லா ப்லொக்ஸ்யும் படிக்க ஆரம்பிச்சன் அதுக்கு அப்புறம் என் சிங்கை நண்பன் ஒருவன்தான் நீங்களும் எழுதலாம் பாஸ்னு கொழுத்திபோட்டார். அப்புறம் ஒரு ப்லொக்கை ஒபென் பண்ணி எதுவும் எளுதாம எல்லா ப்லொக்ஸ் நடைகளை வாட்ச் பண்ணேன். துளசீ டீச்சர்அம்மா வேற கோவில் பத்தி எழுதி எனது ஆர்வத்தை அதிகம் ஆக்கினார். நம்பினால் நம்புங்கள் ஒரு வாரம் அலுவலத்தில் எந்த வேலையும் செய்யாமல் இவர்கள் இருவரின் அனைத்து பதிவுகளையும் படித்தென்.அப்புறம் ஒரு ரெண்டு மொக்க போட்டு நானும் ஒரு பதிவர் ஆகிட்டன். அப்பதான் எனக்கு வால்பையன் அவர்களின் நட்பு கிடைத்தது அவர் எனக்கு பதிவின் டிசைன் மற்றும் அழகியை பரிசாக கொடுத்தார் (அதுனால எனக்கு யாராது ஆட்டே அனுப்பறாதா இருந்தா அதை அவருக்கு அனுப்புமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளுகின்றேன்). பின்னாடி எனக்கு குழலி ப்லொக் எழுத்தாளர் திரு. புருஸேத்தமன் அவர்கள் முலம் ப்லொக்ல ஆர்வம் கூடியது, என்னையும் ஒரு ப்லொக் எழத்தர்னு நம்பீ அவர் என்னை சிங்கை பதிவர் கூட்டத்திற்கு அழைத்து இருந்தார். அங்க நிறைய பதிவர்கள் வந்து நிறைய தகவல்கள் குடுத்தார்கள். நானும் எனக்கு பிடித்த கோ.வி.கண்ணன், புருஸேத்தமன் மற்றும் சில பதிவர்களை பார்த்துவிட்டு, மூனு பதிவு போட்டுவிட்டு பதிவர்னு அவங்க கிட்ட சொல்ல கூச்சமா இருந்தால யாருகிட்டையும் பேசாம, வடை, காப்பி சமேசா எல்லாம் சாப்பிட்டு(போனதே இதுக்குதான) சத்தமில்லாம பாதில (போனவேளை முடித்து) எஸ் ஆகிட்டன்.
இப்படி நான் இருந்த அப்ப கோ.வி. கண்ணனும் சில திராவிட பதிவர்களும் ஒரு தடவை பாரதியாரை,திலகரை ஜாதியின் பெயர் சொல்லி விமர்சனம் செய்ததால் நாம் ஏன் இந்திய வரலாறும், தலைவர்களும் பத்தி எளுதக் கூடாது என்று எழுத ஆரம்பித்தென்.
ஆகவே நான் எழுத காரணமாக இருந்த குடுகுடுப்பையார், துளசி டீச்சர், வால் பையன், இட்லீவடை, கோ.வீ.கண்ணன், கார்க்கி,இம்சை அரசி,பயமறியா பாவயர் சங்கம்,சித்திரகூடம், மற்றும் பின்னூட்டம் இட்டவர்கள் வால்பையன், கோவி, கிருஸ்னமூர்த்தி,உழவன் ஆகிய அனைவருக்கும் எனது நன்றி// நன்றி/// நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றென். எனக்கு பிடித்த பதிவுகளான வகுப்பு அறை வாத்தியார் அவர்களுக்கும், ஸ்வாமி ஓம்கார் அவர்களுக்கும் எனது நன்றிகள்.

முதன்முதலாய் முதல் அடி

எனக்கு ரெண்டங் கிளாஸ்னா உடனே இதுதாங்க ஞாபகம் வரும், ஒன்னு நான் வாங்கின முதல் பரிசு அப்புறம் நான் வாங்கின முதல் அடி. அது என்னன்னா நான் எல்லாம் மகாகவி சுப்பிரமணிய பாரதியார் பரம்பரையில வந்தவன். அட அதாங்க அந்த கணக்கு,மணக்கு ஆமனக்கு விவகாரம். அவர மாதிரியே நமக்கு கணக்கு வீக்குங்க (இது தெரியாம இப்ப எனக்கு கம்பெனி கணக்கு பாக்க சொல்லி மாசம் எனக்கு ஒன்னரை லட்சம் சம்பளம் கொடுக்கறான்). ஒன்னும் ஒன்னும் எவ்வளவுனா ஒரு செகொண்டுல கால்குலெட்டருல போட்டு சொல்லிருவன் அந்த அளவுக்கு நான் கணக்குல புலீ!!!!.
அப்பதான் ரெண்டாங்க கிளாஸ்ல லலிதானு ஒரு புது டீச்சர் வந்தாங்க அவங்களுக்கு நம்ம அருமை எல்லாம் தெரியாது, அவங்க கணக்குல ஒரு டெஸ்ட் வச்சாங்க நான் ஒரு குத்து மதிப்பா பக்கத்து பெண்ண பார்த்து எளுதீட்டன். ஆனா பாருங்க நமக்கு அப்பவும் சரி இப்பவும் சரி தமிழ் எழுத்தும், கையெழுத்தும் சரியா வராது. (நமக்கு கையெழுத்து, தலையெழுத்து ரெண்டும் சரி கிடையாது).
அவங்க என் சிலேட்ட வாங்கிப் பார்த்துட்டு என் கையெழுத்து பார்த்து மிரண்டு போய்ட்டாங்க, எங்ககிட்ட கோவமா இது என்ன தமிழ் எழுத்தா இல்ல தலையெழுத்தானு கேட்டங்க அதுக்கு நான் ரொம்ப பயந்து சாஃப்ட் வாய்ஸ்ல தமிழ் எழுத்துனு சொன்னன் அதுக்கு அவங்க சரியா கேக்காத்துனால உம்ம்னு மிரட்டுனாங்க நான் பயந்து தப்பா சொல்லிட்டம் போல நினைச்சு தலையெழுத்துனு பயத்துடன் சொன்னென், அதுல அவங்களுக்கு சாமி வந்து எம்மேல ஆடிட்டாங்க. என் கன்னத்தை புடிச்சு கிள்ளி,தலையில கொட்டி அடிச்சு என்ன முட்டி போட வைச்சாங்க(புது டீச்சர் இல்ல அதான் ஜயா யாருனு தெரியலை). என் சிலெட்டுல ஒரு அடி, அதாங்க கிராஸ் போடுவாங்க இல்ல அதை போட்டு ஒரு முட்டை மார்க் போட்டாங்க. எனக்கு அதான் மொதல் அடி பிளஸ் மொதல் முட்டை(இதான் கடைசியும்)வாங்கியது. எனக்கு அழுகை தாங்க முடியல்லை. அழுதுகிட்டே முட்டிபோட்டு பெல் அடிச்ச உடன வீட்டுக்கு போனன். அப்ப புதுசா கல்யாணம் பண்ணி போன என் பெரிய அக்கா வந்துருந்தாங்க அவங்களுக்கும், என் மூணு அக்காவுக்கும் என்மேல பாசம் அதிகம்(கடைக்குட்டினா சும்மாவா,அதும் கொலுக்கு முலுக்குனு இருப்பன்). என்னை பார்த்ததும், அப்படியே என் கைய புடிச்சு இன்னெரு கையில சிலெட்டையும் எடுத்துக்கிட்டு ஸ்குலுக்கு வந்தாங்க. எடுத்த எடுப்புல நீ யாருடி என் தம்பிய அடிக்க, யாருன்னு நினைத்த அப்பிடினு ஏக வசனத்தில் எடுக்க டீச்சரும் பதிலுக்கு பேச அந்த இடம் குழாய்யடி அகிடுச்சு.அந்த சத்தம் கேட்டு பள்ளி தலைமை ஆசிரியர் ஓடி வந்து என் அக்காவிடம் என்ன கோதை என்ன தகராறு என கேக்க அக்கா விவரம் கூறினார். தலைமை ஆசிரியர்(அவங்களுக்கும் என்மேல பிரியம் அதிகம்) என் கன்னத்தையும் என் சிவந்த முழங்காலையும் பார்த்து டீச்சரை திட்டினார்கள். பின் அக்காவிடம் அவர்கள் கல்யான வாழ்க்கை குடும்ப சமாச்சாரம் பேசி அனுப்பினார்கள். நானும் என் அக்கா கூட வீட்டுக்கு வந்துட்டன். அதற்க்கு அடுத்த நாள் பள்ளி சென்றபோது என்ன சொல்லவார்களே என பயந்து போனன். அவர்கள் மிகுந்த கோவத்துடன் என்னைப் பார்த்து படிச்சா படி, படிக்காட்டி போ, எனக்கு என்ன என்று கூறிவிட்டார். பின் அவர்கள் என்னை கண்டுகொள்வதில்லை. பின்னாளில் தான் தெரிந்தது அவர்கள் என் ரெண்டாவது ஆசிரியை அக்காவின் நண்பி, ஒரு ஆசிரியையின் தங்கை என்று. நான் கல்லூரி படிக்கும் போது அவர்களை சந்திக்க நேர்ந்தது அப்பவும் அவர்களிடம் எனக்கு பயம்(பின்ன மொதல அடிச்சவங்கள் இல்லயா). அவர்கள் என்னிடம் சிரித்துக்கொண்டு கேட்டார்கள், என்ன சுதா உன் கையெழுத்து இன்னமும் அதே கோழிகிறுக்கல் தானா அப்பிடினு. நானும் சிரித்துக்கொண்டு ஆமாம் டீச்சர் ஒழுங்கா நீங்க அடிச்சப் மாத்திற்க்கனும் அனா பண்ணாம விட்டு இப்ப மாத்த முடியல அப்பிடினு சொன்னன். அதுக்கு பரவாயில்ல கையெழுத்து நல்லா இல்லைனா தலையெழுத்து நல்லா இருக்கும் அப்பிடினு சொன்னாங்க. இம்ம் நமக்கு ரெண்டு எழுத்தும் சரி கிடையாதுனு மனசுல நினைத்தென். ஆதலால் உங்க வாத்தியார் அடிச்சா ஒழுங்க எதுக்கு அடிக்கிறார்னு புரிஞ்சு உங்களை மாத்திக்கங்க( அப்பா ஒரு மெஸேஜ் சொல்லிட்டன்)

நாந்தான் நேரு மாமா

ஒருசில விசயங்கள் நம் வாழ்க்கையினல் மறக்கமுடியாது. முதல் அடி, முதல் காதல்,முதல் பரிசு மற்றும் எல்லா முதலும் ஒரு தனி சுவைதான், இந்த பதிவில் நான் முதலில் பரிசு வாங்கினதை மொக்கை போடலாமுனு.
நில்லுங்க கொஞ்சம் கொசுவத்தி சுத்திட்டு வரன்(பிளாஸ்-பேக்).

அப்ப எனக்கு ஏழு வயசு, இரெண்டாம் கிளாஸ் படிக்கறப்ப ஒரு ஆரம்ப பள்ளிகளுக்கு இடையில போட்டி நடந்தது (என்ன போட்டியா, சாப்பிடறது இல்லிங்க போச்சுப்போட்டி). அதுல என் பெயரும் கொடுத்தாங்க(எனக்கு என்ன தெரியும் என் சின்னக்காதான் கோத்துவிட்டங்க, நம்ப அருமை அவங்களுக்கு தெரியும் போல). போட்டிக்கு முன்னாலயே என்ன போட்டு ரெண்டவது அக்கா படுத்தி எடுத்துட்டாங்க ஒரு நாள் பூர ஒரு பக்க வசனத்த கொடுத்து, என்ன நேரு மாதிரி பேசச் சொன்னாங்க, நானும் நாந்தான் நேரு மாமா, எனக்கு குழந்தைகள்னா ரொம்ப புடிக்கும், நான் இந்த நாட்டின் விடுதலைக்காக் பாடுபட்டேன், இந்த நாட்டின் பிரதமாராக இருந்தென் அப்பிடினு மனப்பாடம் செய்தென். இப்படி என்னை பெண்டு கழட்டிங்காக.

போட்டி நாளும் வந்தது,எனக்கு பைஜாமா,ஜிப்பா போட்டு(மொதல் அக்கா பெரிய அக்கா தைத்து தந்தாங்க), அதுல ஒரு ரோஜா பூவை சொருகி, பள்ளிக்கி போனா அங்க யாருமே இல்லை. அப்பதான் நான் காஸ்ட்யும்ல பிளஸ் மேக் அப் போட லேட் ஆனதால என்னை விட்டுட்டு போய்ட்டாங்க, எனக்கு ஒரே அழுகாச்சியா வந்துருச்சு,அழுக ஆரம்பிச்சன், என்ன ஸ்குலுக்கு கூட்டிப் போன சின்னஅக்கா என்ன பண்ணறது தெரியாம ஓடிப்போய் எங்க அப்பா கிட்ட சொல்ல அவர் அழாத அப்பிடினு சொல்லி குதிரை வண்டியில என்னை போட்டி நடந்த இடத்துக்கு அனுப்பிவைத்தார். அங்கயும் அழுதுகிட்டே போனன்.அங்க இருந்த வாத்தியருங்க என் அலுகைய நிறுத்தி என்னை போட்டில ஸேர்த்துக்கிட்டங்க. என் அக்கா பிஸ்கட்,தண்ணி(ஹொலோ இது குலாய் தண்ணி) எல்லாம் லஞ்சமா கொடுத்து என்ன போட்டிக்கு ரெடி ஆக்குனாங்க.

என்னை கூப்பிட்டதும் போய் நின்னு அழகாய் பின்னிப்பொடல் எடுத்தன், நல்லா பேசிட்டு வந்த என் அக்கா நான் எதிர் பார்த்த மாதிரி பேசிட்டடா சொல்லி செல்லமா முத்தம் கொடுத்தாங்க(இதுதாங்க பெரிய பரிசு), கடைசியா முடிவும் சொன்னாங்க நாந்தான் முதல் பரிசு(அழுது வாங்கீருவம் இல்ல).எனக்கு மாகாத்துமா காந்தியடிகள் எளுதுன சத்தியஸேதனை புத்தகம் தந்தார்கள். முதல் பரிசாக சத்தியஸேதனை புத்தகம் வந்ததில் எனக்கு ரொம்ப மகிழ்ச்சி. புத்தகம் பத்தி தெரியர வயசு இல்லைனாலும் குண்டு புத்தகம்(அதாங்க பெரிய புத்தகம்) வாங்குனதுல சந்தொசம். அதுல ஆரம்பிச்சங்க நான் கல்லூரி வரைக்கும் பள்ளியின் இலக்கிய மன்ற கூட்டத்திலும், கல்லூரி போட்டிகளிலும் மேடை ஏறுனா பரிசு வாங்காம இருந்தது இல்லை. போச்சுப்போட்டி, நாடகம், மாறுவேடப்போட்டி மற்றும் மோனா ஆக்டிங் இப்படி எதுனா ஒன்னுல பரிசு வாங்கி வந்துருவன். இதுல என் கூட கவிசுரபதி எங்கின்ற மா. இராஜெந்திரன் என் நாடக நண்பனும் பள்ளி பிளஸ் நண்பன் தான் கூட்டு.

இப்படி நான் வாங்கின சர்டிபிகேட் மட்டும் ஒரு நூறு இருக்கும், நான் கல்லூரியில் அறுபத்தி ஏழு சதவீத மதிப்பொண்கள் பொற்று மேற்படிப்புகாக (எம்.ஏ. கூட்டுறவு )கோவை இராமகிருஸ்னா வித்தியாலய கல்லூரிக்கு அப்பளை செய்த போது நான் ஓஸி என்பதால் இடம் கிடைக்கவில்லை. அப்போது எதாது ஸ்போர்ட்ஸ் சர்டிபிகெட் கேட்டங்க. நான் இந்த சர்டிபிகட் காட்டிய போது அதுல நான் வாங்கிய ஜந்து ஜோனல் லெவல் சர்டிஃபிகட் மட்டும் செல்லும் மீதி வேஸ்ட்னு சொன்னங்க என்ன பண்றது ஓஸியா பொறந்த பாவம் நினைச்சுட்டு நேரா வீட்டுக்கு வந்து மொதல் வேலையா அந்த தொன்னுற்று ஜந்து சர்டிபிகட்டையும் கொளுத்திபோட்டன்.நிம்மதியா ஒரு டீ அடிச்சன், அதொட சரி மேடை ஏற வழக்கம் முடிந்து மக்கள் நிம்மதி ஆகிட்டங்க. என்னாதான் சர்டிபிகட் கொளுத்தினாலும் போட்டிகளும் அது கொடுத்த அனுபவங்களும் ரொம்ப அருமை. என்றும் மறக்க முடியாது. பரிசுகள் இருக்கே இல்லையோ அனுபவங்கள் மனதின் சந்தொசங்கள். என்னப்பா இதுக்கே அலுதா எப்படி? இன்னும் மொக்க வரும். பயப்படாதிங்க.

இந்திய வரலாறு ஒரு சிந்தனை - பாகம் 8

அந்தனர்கள் சமுதாயம் அவர்களுக்கு விதிக்கப்பட்ட கடமைகளை ஒலுங்காக செய்தவரை எல்லாம் சரியாக போய்க்கொண்டு இருந்தது, அவர்கள் தடம் புரள ஆரம்பித்ததுதான் சமுகம் சீர்கேடு அடைய ஒரு காரணமாக இருந்தது எனலாம். நாகரீக காலகட்டத்திலும்,வேதகாலத்தின் ஆரம்ப காலகட்டத்திலும் எல்லாம் ஒழுங்காவும்,அமைதியாகவும் இருந்தது. ஆனால் பின்னால் சமுதாயம் மாற ஆரம்பித்ததுக்கு இரண்டு காரணங்கள் கூறலாம், அது ஒன்று இதுவரை மனிதனுக்கு மதிப்பு இருந்ததுபோய் பணத்துக்கு அல்லது செல்வத்துக்கு(செல்வாக்கு எனவும் கூறலாம்), இரண்டு முதலில் கூறிய மாதிரி வழி நடத்தக்கூடிய பொறுப்பில் உள்ள அந்தனர்கள் தவறும்,அவர்களை தொடர்ந்த சத்திரியர்கள் தவறும் ஆகும். இது பற்றி கொஞ்சம் விரிவாக பார்ப்போம்.

முதலில் பிரமத்தை உணர்ந்த, ஒழுங்கின் வழி நடக்கும்,தான் உணர்ந்த உண்மைகளை மற்றவர்களுக்கு கூறி அவர்களையும் நல்வழிப்படுத்த பிராமணர்கள் பூஜை,யாகம்,கல்வி போன்றவகளை செய்துவந்தனர். இவர்கள் அதற்கு கிடைக்கும் சன்மானத்தை கொண்டு தினசரி வாழ்க்கை நடத்தியும் வந்தனர், பக்தியில் உள்ளவர்கள் தினமும் உஞ்ச விருத்தி என்னும் பிச்சை அல்லது யாசகம் செய்து வாழ்ந்தனர். (வேதம் கூறும்படி" அந்தனர்கள் தங்களுக்கு என்று எதையும் ஸேமிக்காமல், யாசகம் செய்து அதை தானும் தன்னை சார்ந்தவர்களும் உண்டும், பின் தான் அறிந்தவற்றை மற்றவர்களுக்கு போதிக்கவேண்டும்.) இதுதான் அந்தனர் தர்மம்.இப்படி வாழ்வபர்கள் தாம் அந்தனர்கள். பிரமத்தை உணர்ந்து மேற்கூறியபடி வாழ்க்கை நடத்துகின்றவர்கள் அனைவரும் பிராமனர்கள் ஆவார்கள்.

(தற்போது உள்ளவர்கள் பரம்பரையால் அப்படி சொல்லிக்கொள்ளுகிறார்கள்.இப்போது உள்ளவர்கள் அய்யர்கள்,அய்யங்கார்கள்(ஜாதீ) என்று சொல்லிக்கொள்ளலாம்,ஆனால் அவர்கள் அந்தனர்கள்,பிராமனர்கள் என்று சொல்ல தகுதி அற்றவர்கள்.)

முதலில் காட்டில் தவவனங்கள் அமைத்து, நாட்டில் உள்ள ஆலயங்களில்(இப்ப பாக்குற ஆலயம் இல்லை) பூஜை செய்தும் வாழ்ந்தனர். காட்டில் உள்ளவர்கள் சிறுகுடில்களில் விவசாயம் செய்தும் கல்வி போதித்து அதற்கு சன்மானம் பொற்றும் வாழ்ந்தனர். நாட்டில் உள்ளவர்கள் பூஜை,மற்றும் யாகங்கள் செய்து சன்மானம்(கொடுப்பதை வாங்கவேண்டும்,கேட்டுவாங்கக்கூடாது). மற்றும் உஞ்ச விருத்தி அல்லது தினமும் யாசகம் செய்து வாழ்ந்துவந்தனர். இது வேதகாலத்தின் ஆரம்ப நிலையில் கடைப்பிடிக்கப்பட்டது. இதன்பின் வந்தவர்கள் பிராமனர்கள் என்று சொல்லும் தகுதியினை இழ்ந்தால் நான் அந்தனர்கள் எனக் குறிப்பிடுகின்றேன்.

அந்தனர்கள் தாங்கள் பணம் அல்லது தங்கத்தை கொடுத்து பண்டம் வாங்கும் முறை வந்தவுடன் பணம் ஸேர்க்க தலைப்பட்டனர். ஒருசிலர் தங்கள் புகழ் அல்லது செல்வாக்குகாக செல்வம் ஈட்ட முற்பட்டனர்.இதானல் அவர்கள் சத்திரியர்களிடம் நெருக்கம் கொண்டு அவர்களுடன் வாழத்தலைப்பட்டனர். அவர்கள் சத்திரியர்களின் நிழலில் தங்களின் செல்வம் மற்றும் செல்வாக்கை வளர்த்துகொண்டனர். பின் இராஜாங்கம் மற்றும் அரசியலிலும் இறங்கினர்.
இதில் அந்தனர்களும் சத்திரியர்களும் முன் நிலை வகிக்க சூத்திரர்களும் சமுகத்தில் ஒரு நிலையுடன் இருந்தாலும், பஞ்சமர்களின் வாழ்க்கை மிகவும் பின் தள்ளப்பட்டனர். பணம் அல்லது செல்வம் பழக்கத்திற்கு வந்தாலும் அவர்கள் அதை ஈட்டவே அல்லது பொறவே இயலாமல் ஒடுக்கப்பட்டனர். வெகுகாலம் பஞ்சமர்கள் மட்டும் அடிமை அல்லது சார்பு வாழ்க்கை மட்டும்தான் நடத்திவந்தனர்.இந்திய வரலாற்றில் இந்த பஞ்சமர் வாழ்க்கை அதன் நாகரீக சிறப்புக்கு ஒரு கரும்புள்ளி எனலாம்.ஒருசில மன்னர்கள் காலத்தில் அவர்கள் மனிதர்களாக கூட மதிக்கப் படாத கொடுமையும் இருந்தது.
இதன்பின் அந்தனர்கள் காட்டைவிட்டு நாட்டுக்கு வந்து, நகரவாழ்க்கை வாழத்தலைப்பட்டனர். சத்திரியர்களை முந்நிலைப் படுத்தி அவர்களுக்கு ஸேவை செய்தும் வந்தனர். பின் அவர்கள் சத்திரியர்கள் செல்வாக்கு மற்றும் வெற்றிகளை நினைவு கூறும் வண்ணம் கோயில்கள் கட்டி அதன் மூலம் மக்களுக்கு நன்மையும் தங்களுக்கு வருவாயும் ஈட்டிக்கொண்டனர்.பின்னர்தான் புது தெய்வங்களும் உருவாக்கப்பட்டனர். தங்களை மேல் நிலைப்படுத்த ஒவ்வெறு பிரிவினரும் ஒவ்வெறு தெய்வங்களை உருவகம் செய்தனர். பின் அதனில் உயர்வும்,தாழ்வும் போதிக்கப் பட்டது. இதில் இருந்துதான் அழிவும் போர்களும் உருவானது.

Thursday, September 17, 2009

அண்ணா நீங்க நல்லவரா? கொட்டவரா?

அண்ணாவின் பிறந்த தினமா அல்லது இறந்த தினமா, தெரியவில்லை, அனால் பகுத்தறிவு இன மான திலகங்கள் எதாது கொண்டடுனா இந்த இரண்டுல ஒன்னாதான் இருக்கனும். பண்டிகை கொண்டாடுனா அது மூட நம்பிக்கை,இந்த ரெண்டுல ஒன்னு கொண்டாடுனா அது பகுத்தறிவு (என்ன இழவோ). இது பத்தாதுனு நம்ம திராவிட பகுத்தறிவு பதிவர்கள் வேற அண்ணா ஆண்ணானு பதிவு போடறாங்க, நம்மளும் போடலைனா நம்மளை பதிவர்னு ஒத்துக்க மாட்டங்க அப்பிடினு நானும் ஒரு பதிவு போடறங்க(ஆணி புடுங்கறத்து இது ஒகே). நீங்களும் ஆணி புடுங்காம இத படிச்சு ஒரு ஆட்டோ அனுப்புங்க.

அது என்னனு தெரியல அண்ணாவைப் பத்தி எளுத எனக்கு ஒன்னும் தெரியலை. அப்புறம் என்ன எளுதுவது என்று எனக்கு புரியாமல் அண்ணா ஸ்டைல பேனாவை தாவகொட்டாயில வச்சுட்டு யொசனை பன்னா திடீர் ஒரு சத்தம் கேட்டுது என்னனு பார்த்த ஒரு அம்மா தன் குழந்தைக்கு ஸோறு ஊட்டிவிட்டு இருந்தாங்க, அப்ப குழந்தை அம்மா அண்ணா என்பவர் யாருனு கேட்டா?
அதுக்கு அந்த அம்மா " பாப்பா அந்தக் காலத்தில் அண்ணா அண்ணானு ஒரு கெட்டவர் இருந்தார், அவர் ரொம்ப கொலைகாரர், கொள்ளையடிப்பவர்னு சொல்லிக்கொடுத்தார். எனக்கு ரொம்ப ஷாக் ஆகிடுச்சு, தொடர்ந்து கேட்டுக்கொண்டு இருந்தென். அந்த அம்மா மேல சொல்ல ஆரம்பித்தார்கள்.
" ஒரு நாளு அவருக்கு திடீர்னு தான் இறந்து போய்டுவம்னு தெனுச்சு அப்ப அவர் தன்னுடைய
கொள்ளைகூட்டத்தை பார்த்து நான் இறந்த நாளைக்கு நீங்க என்ன பண்ணனுனா நம்ம ஜயில்ல இருக்கற கொள்ளைக்காரனுக மற்றும் கொலைகாரனுக கொஞ்ச பேரை என் நினைவா விடுதலை செய்யனுன் கேட்டார். அதனால இன்னமும் நம்ம அரசாங்கம் அவர் பிறந்த நாள் அல்லது இறந்த நாளுக்கு கைதிகளை விடுதலை செய்யறாங்க. அப்பிடினு சொல்லிமுடித்தார். திடுக்கிட்ட நான் முழித்து பார்த்தப்தான் தெரிஞ்சுது நான் கண்டது கனவுனு. என்னாடா இப்படி ஏடாகூடமா கனவு வருது யோசிக்க ஆரம்பித்தென். அப்பதான் எனக்கு ஒன்னு புரிஞ்சுது. நியாம நம்ம தீபாவளிக்கு ஒரு நரகாசுரன் கதை சொல்லி ஒரு நாள் கொண்டாடுவேம். அப்புறம் சுதந்தர தினம்,குடியரசு தினம்னா முட்டாய் கொடுத்து கொடி குடுத்து கொண்டடாடுவேம். அதுமாதிரி ஒரு தினத்தில் இது மாதிரி கைதிகளை விடுதலை செய்து கொண்ட்டாடுனா அப்ப அவங்கள பத்தி எதிர்காலத்தில் இது மாதிரி ஒரு கதை வர வாய்ப்பு உண்டு இல்லையா? அதானால இந்த கைதிகளை விடுதலை செய்யும் பழக்கம் தெவையா? கொஞ்சம் சிந்தீப்பீர். அதுக்குத்தான் இந்த பதிவு.
அப்புறம் ஒரு விசயமுங்க அது என்னமே தெரியலை இந்த ஆளுங்கட்சி ஆளுகளுக்கு அண்ணா மேல என்னமே கோவங்க அதனால அவரை எப்படி எல்லாம் அசிங்கப்படுத்துகிறர்கள் பாருங்க,
மெதல அண்ணா பிறந்த நாளுக்கு திருட்டு குற்றம் மற்றும் சிவில் ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்தார்கள், மக்களுக்கு சரி அவங்களுக்கும் அண்ணாவுக்கு எதோ சம்பந்தம் இருக்கும் போல நினத்து போசம இருந்துட்டாங்க. அப்புறம் பாருங்க அண்ணாவுக்கு இந்த அசிங்கம் பத்தாதுனு கொலை, கொள்ளை அடிக்கிற ஆயுள் தண்டணை கைதிகளை விடுதலை செய்தார்கள்.
இப்ப மறுபடியும் அவரை அசிங்கப் படுத்துனும் நேக்கத்தில் வெடிகுண்டு கைதிகளை விடுதலை செய்து இருக்கிறார்கள். ஒருவேளை அண்ணாவுக்கு இவங்களை எல்லாம் புடிக்கும் போல இருக்கு,
நமக்கு என்ன தெரியும் பகுத்தறிவு திலகங்கள் சொன்னா சரி.
எதோ கொஞ்சம் அப்ப அப்ப பூசல் இருந்தாலும் கோவை, ஈரொடு எல்லாம் அமைதியாய் இருந்துங்க, பழனிபாபா தலைமையில ஒரு கும்பல் வன்முறை ஏவிவிட அவங்க பண்ணுன கூத்துதான் கோவை வெடிகுண்டு சம்வங்கள் அதுக்கு அப்புறம் கரும்புக்கடை, குனியமுத்தூர்,செல்வபுரம் எல்லாம் இன்னும் பிரச்சனை தாங்க. அப்படி குண்டு வச்சவங்களை தான் இப்ப அடுத்த எலக்சன்ல சிறுபான்மை ஓட்டுக்காக் விடுதலை பண்ணி இருக்காக, இல்லைன இவங்கல அண்ணாக்கு புடிக்கும் போல, எதுவும் நம்ம மரமண்டைக்கு உறைக்குலைங்க. உங்களுக்கு எதாது புரிஞ்ச சரி. அடுத்த அண்ணா பிறந்த நாளுக்கு இவங்களுக்கு மத்தியில செல்வாக்கு இருந்தா அஜ்மல் காஸப்பும், பார்லியமெண்ட் தாக்குதல் புகழ் வீரப்புதல்வன் அக்பரும் விடுதலை செய்வாங்கனு எதிர்பாக்கலாம். இது எல்லாம் நமக்கு எங்க புரியும், நம்ம எதோ நாய்களும் நரிகளும் ஆட்சி செய்தால் போய்களும் சொல்லுமாம் சாஸ்த்திரம்னு பஞ்சாங்கம் படிக்கற ஆளு. இது மாதிரி உன்மையை சொன்னா நம்மளை தமிழின துரொகி, பார்ப்பன ஆளு அப்பிடினு சொல்வாங்க, அதுனால நானும் இந்த பதிவ போடுல நீங்களும் இந்த பதிவை படிக்கலைனு நினைத்து மறக்காம பின்னூட்டம் போட்டு திட்டி விட்டு மறந்துட்டு பொழப்பை பாக்க போங்க.

Wednesday, September 16, 2009

இந்திய வரலாறு ஒரு சிந்தனை - பாகம் 7

பணம் என்னடா பணம், பணம் என்று நான் தனியாக ஒரு பதிவு போட காரணம் என்ன என்றால்
இதுவரை ஒழுங்காக கட்டுப்பாட்டுடன் ஒருவரை சார்ந்து ஒருவருக்கு ஒருவர் அன்புடன் வாழ்ந்த நாகரீக காலம் முடிந்து ஒருவருக்கு ஒருவர் ஏமாற்றி, அடிமைப்படுத்தி, வென்று வாழத்தழைப்பட்டனர். ஏன் தெரியமா வேதகாலத்தின் பின்பகுதியில்தான் பண்டமாற்று முறைக்கு பதிலாக பணம் அல்லது தங்க நாணயம் முறை வந்ததது. தங்கம் மற்றும் செல்வம் மனிதன் மனதை ஆக்கரமித்த பின் அவன் முற்பட்ட நாகரீக பழ்க்கவழக்கள் முழுதும் மாறின. மனித இன அழிவும் இங்குதான் ஆரம்பிக்கின்றது. இந்த வேதகால பின்பகுதியினை வர்ணிக்குமுன் நான் ஒன்றை கூற விரும்புகின்றென். ஒரு சமுகம் நன்றாக வளரவேண்டும் என்றால் அந்த சமுகத்தில் உள்ள பொரியோர்கள் அதனை நல்லமுறையில் வழி நடத்தி செல்லவேண்டும். வழிகாட்டுதல் நன்றாக இருந்தால்தான் அந்த பயணமும் நன்றாக இருக்கும். முதலில் சொன்னமாதிரி
பிரம்மத்தை உனர்ந்த அந்தனர் முதலிலும் பின் அவரையும் அனைத்து குடிகளை காக்கும் சத்த்ரியரையும் பின் அனைவருக்கும் தெவைகளை பூர்த்தி செய்யும் சூத்திரர்களும் பஞ்சமர்களும் இருந்தார்கள், இவர்கள் அனைவரும் தாம் ஒருவர் ஒருவர் சார்ந்து பண்டமாற்று அல்லது உணவு அல்லது உடை கூலியாக பொற்று வாழ்க்கை நடத்தினர். இவர்களிடம் பரஸ்பரம் நம்பிக்கை மற்றும் ஒற்றுமை இருந்தது. ஆனால் பணம் அல்லது செல்வம் வந்த பிறகு அந்தனர்களும் சத்திரியர்களும் தங்களை முன் நிலைப்படுத்திக் கொண்டனர். மற்ற சமூகங்கள் இவர்கள் சார்ந்து இருக்கத் தலைப்பட்டனர். இதில் அந்தனர் சூழ்ச்சி அதிகம் இருந்தது. யாகங்கள் தவங்கள் ஆகியன மக்களின் நன்மைக்காக இருந்தமைப் போய், செல்வம், வெற்றி ஆகிய பயன் கருதிசெய்யப்பட்டன.
என்னைப் பொறுத்த வரையில் உன்மையான அந்தனர்கள் வேதகால பின்பகுதியில் அழிந்துவிட்டனர். இதற்கு பின் வந்தவர்கள் எல்லாம் பரம்பரை தான் தவிர பழக்கத்தால் அல்ல.
கட்டுரைக்கு போவேம்.
வேதகாலம் பின்பகுதியில் நிறைய உபனிசத்துகள், சூத்திரங்கள் எளுதப்பட்டனர். அதனில் அந்தனர்கள் முன் நிலைப்படுத்தப்பட்டனர், பின் சத்திரியர்கள் முன் நிலைப்படுத்தி அந்தனர்கள் பிழைத்துக்கொண்டார்கள். வேதகாலப் பின்பகுதியில் கூட ஒரு அளவுக்கு அந்தனர்கள் ஒழுக்கம் காத்தனர், ஆனால் மன்னர்கள் காலத்தில் அது மறைய தொடங்கியது.
இதை பற்றி பார்ப்போம். மனிதன் கொஞ்சமாக இருந்த பொழது அவன் தெவைகள் குறைவாக இருந்தது.( சப்பளை அதிகம், பயன்பாடு குறைவு). ஆதாலால் ஒரு நிறைவு இருந்தது. அனால் மக்கள்தெகை வளர வளர அவன் தெவைகளும் அதிகரித்தது. ஆக ஒருவரை ஒருவர் ஏமாற்றவும் ஏய்க்கவும் தலைப் பட்டனர். இதை இன்னம் கொஞ்சம் மாற்றிப்பார்த்தால் மனிதன் தென்றி பின் காடுகள் மலைகள் வேட்டையாடி வசித்துவந்தான் இது கொஞ்சம் காட்டுமிராண்டிகளின் காலம் கூட, பின் விவசாயம் புரிய ஆரம்பித்தவுடன் நதிக்கரையிலும் சமவெளிகளிலும் வீடுகளை கட்டி குடும்பம் நடத்தினான், பின் அந்த குடும்ப கூட்டங்களுக்கு தலைவர்கள் வந்தார்கள். பின் இயற்கை மற்றும் இடர்களிடம் இருந்து தங்களை காக்க கோட்டை மற்றும் கொத்தளங்கள் குடியிருப்புகளை உருவாக்கினார்கள். பின் தங்கள் காக்க மன்னர்கள் வந்தார்கள், வழி நடத்த அந்தனர்கள் வந்தார்கள். வந்தவரை எல்லாம் சரியாக போய்க்கொண்டுதான் இருந்தது, ஆனால் செல்வாக்கு போராட்டத்தில் சத்திரியர்கள் முன் நிலைப்படுத்தி அந்தனர்கள் மற்ற அனைவரையும் தங்களின் கட்டுப்பாட்டுகுள் கொண்டுவந்தனர். இதில் இருந்துதான் சமுகம் தடுமாறத் தொடங்கியது எனலாம். முதலில் உபனிசத்தில் அந்தனர்கள் முன் நிலைப்படுத்தி சமுகம் அமைக்கப்பட்டது, பின் சத்திரியர்கள் அந்தனர்கள் வழியில் ஆட்சி செய்யும் முறை வந்தது. இது எப்படி என்பதை அடுத்த பதிவில் பார்ப்போம்.

பணம் ஏன்னடா பணம்,பணம்

என்னைப் பொறுத்தவரையில் கடவுள் தனக்கு யாரை பிடிக்கவில்லையோ அவருக்கு நிறைய அள்ளிக் கொடுக்கிறார். நிறைய பணம் இருப்பதும் ஒரு வகையில் ஏழையாக இருப்பதுக்கு சமம்.
பணம் இருந்தால் வாழ்க்கையில் எல்லாம் இருக்கும் என நினைப்பது முட்டாள்தனம் என்றுதான் நினைக்கின்றென். மனிதன் தன் வாழ்க்கையின் முதல் பகுதி முழவதும் வெல்த்தை
தெடி அலைகின்றான், வாழ்க்கையின் பின் பகுதி முழுவதும் தெடிய வெல்த்தை கொண்டு ஹெல்த்தை தெடுகின்றான். பணம் சில பிரச்சனைகளின் முடிவு என்றாலும் பல பிரச்சனைகளின் ஆரம்பமாக இருக்கின்றது. முதலில் பணத்தை ஸேர்க்க உறவை பிரிந்து இருந்தும் பின் ஸேர்த்த பணத்தை காக்க உறவினர்களிடம் இருந்து விலகி இருக்கவும் வேண்டும். இப்படி பணம் பணம் என ஸேர்த்து பின் பணம் கொண்டு ஒன்றும் செய்யாமல் நம் மறைவுக்கு பின் மகன் மகள் அடித்துகொள்ள வேண்டும்.

என்னைப் பொறுத்தவரை நடுத்தர குடும்பங்களில் பிறந்தவர்களும், வாழ்வபர்களும் தான் கடவுளுக்கு பிடித்த குழ்ந்தைகள். ஒரே மாதிரியான வாழ்க்கை முறை, நிம்மதியான குடும்பம் ஆகியன ஒருவனுக்கு கடவுள் அளிக்கும் வரங்கள். காணி நிலம் வேண்டும் என்று பாரதியார் கேட்டார், ஆனால் நான் கடவுளிடம் கேக்க ஒரு லிஸ்ட் போட்டு வைத்து இருக்கின்றேன். அவை:

1.நல்ல அமைதியான நிலையான, மனதுக்கு நிறைவான (அதிகமான அல்ல)சம்பளத்துடன் கூடிய வேலை.
2. நல்ல மனைவீ (அழகான அல்ல) நமக்கு பிடித்த, நம்மை அறிந்த, புரிந்த மனைவி.
3.சிறிய நல்ல அமைதியான ஒரு வீடு( ஒரு ரெண்டு அல்லது மூனு மரம் இருந்தால் பெஸ்ட்)
4. அன்பான மகள் மற்றும் மகன். (ஆனால் மகள் கண்டிப்பாய் இருக்கவேண்டும்)
5. கொஞ்சம் அவசரத்தெவைக்காய் கையில் ஸேமிப்பு.
6. என்றும் என்றும் உன் ஸேவகம் ஏத்திப்பறை கொள்ளும் மனம்.(அப்பா கடவுளை மறக்கதா மனம்)
7. என்றும் எப்பொழதும் பிரியாமல் கைகொடுக்கும் நல்ல நண்பர்கள்

இதுபோதும் எனக்கு இப்படி நடுத்த வர்க்கம் குடும்பங்கள் சென்னையிலும் தமிழகத்திலும் பல உள்ளனர். உன்மையில் அவர்கள்தான் பொரும் பணக்காரர்கள், மன நிறைவுடன் வாழ்கின்றவர்கள்.

Tuesday, September 15, 2009

இந்திய வரலாறு ஒர் சிந்தனை - பாகம் 6

பாகம் ஜந்தில் நான் கூறிய அனைத்தும் ஆரீயர் சமூதாய பழக்கவழக்கள். நாம் அந்த காலகட்டத்தில் குமரிக்கண்டம், தட்சினபாரதம் எனப்படும் தென்பகுதியினை பார்ப்போம். எனக்கு ஆந்திரா,கர்னாடக வராலாறு (மிகவும் பழைய) தெரியாதலால் பழ்ந்தமிழ்ர் நாகரீகம் மட்டும் பார்ப்போம்.
தமிழர் நாகரீகம் மிகவும் கட்டமைப்புடன் விவசாயம், வாணிபம், மற்றும் கோட்டை கொத்தளங்களுடன் இருந்தது. இங்கும் பொண்களுக்கு பூரண சுதந்திரம் அளிக்கப்பட்டு இருந்தது.
கபாடபுரம் என்னும் கொற்கை, புகார், மதுரை,வஞ்சி, உறையூர் போன்ற நகரங்கள் இருந்தன. சொல்லப்போனால் ஆரியர்களுக்கும் முன்னதாக நகரங்களை உருவாக்கியது தமிழர்கள் தான் என்பது எனது கருத்து. பழந்தமிழரில் மகளிர் கல்வி கற்கவும் கவீ இயற்றவும் முடிந்தது. முறையான கட்டுப்பாடுடன் கூடிய சமுதாயம் இருந்தது, ஆனாலும் கள்ளுண்டலும்,பரத்தையரும் இருந்தனர். இவைகளைப் பயன்படுத்தும் ஆடவர்கள் சமூகத்தில் தரம் குறைந்தவர்களாகக் பார்க்கப்பட்டனர். நமது தமிழகத்தில் திராவிட இயக்கங்கள் தமிழ்ழகத்தில் ஜாதீய ஏற்றத்தாழ்வுகள் இல்லாமல் இருந்தது போலவும், ஆரியர்கள் வந்துதான் வருனாசிரம தர்மம் மூலம் அடிமைப்பட்டனர் போலவும் திரித்துகூறினார்கள், ஆனால் ஆரியர்கள் வருவதற்கு முன்போ இங்கும் ஜாதிய அமைப்பு அவர்களின் தொழில் வழி அமைந்து இருந்தது, கோவில் அல்லது இறையிலியிடங்கள் அல்லது இறைக்கோட்டங்கள் பராமரிப்போர் குருக்கள் அல்லது ஓதுவார்கள் எனவும். வேளாங்குடியினர்,கள்ளர்,மறவர்,தொவர்,இளந்திரையர்கள் மற்றும் உடையார் ஆகியோர் மறக்குடியினராகவும், வியாபாரம் மற்றும் முத்து மணிகள் வாணிகம் செய்தவர்கள் வாணிபச்செட்டியார்கள்(தமிழ்) எனவும், தச்சுஆசாரி,பொற்கொல்லர்,கணக்கன்,மணியம், குயவர்,காரனீகர் மற்றும் பாணர்(யாழ் பாட்டு பாடுவர்கள்)ஒரு பிரிவும் செருப்பு தைப்போர், பறை அடிப்போர், வேடுவர்,மீனவர்(செம்படவர்கள்,வலைஞர்கள்)கள் மற்றும் முடிதிருத்துவேர் ஆவர். இதுவும் தொழில்களை அடிப்படையாக கொண்ட பிரிவுகாளாக இருந்து பின் ஜாதியாக மாறி பின்னர் பிரிவுகளாக மாறியது. ஜாதீ என்பது ஆரியர்கள் வருமுன்னர் இருந்த ஒன்றுதான். இங்கு தொழில்கள் வாரிசு அடிப்படையில் வந்தாலும் கல்வி முதல் மூன்று வகை பிரிவுக்கும் பொதுவாக இருந்தது. இவை சங்க இலக்கியங்கள் மற்றும் கதை நூல்கள் மூலம் அறியலாம். இங்கும் கடைனிலை தொழில் புரிவேர்க்கு உரிமைகள் மறுக்கப்பட்டது.இந்த அமைப்புகளை ஆரியர்கள் பின்னாள் தங்களுக்கு ஏற்றவாறு பயன்படுத்திக்கொண்டனர் என்பதுதான் உண்மை, ஆனால் ஜாதியம் என்பது ஆரியர்களிடம் இல்லை பிரிவுகள் தான் இருந்தது. இதுவும் இரு நாகரீகங்களுக்கு இடையே இருந்த ஒற்றுமை எனலாம். இதுவரை தொழிலின் பொயரால் பிரிந்து இருந்தாலும் மக்களிடம் எந்த பாகுபாடும் இல்லை எனக்கூறலாம், ஏன் என்றால் அப்போது பணம் என்பது கண்டுபிடிக்கப்படாமல் பண்டமாற்று முறை மற்றும் பொருள் கூலீ முறைதான் இருந்தது.
சமூகத்தில் அனைவரும் ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ்ந்துவந்தனர். எனவே பாகுபாடு குறைவாக இருந்தது. மற்றும் மக்கள் அனைவரும் இறை நம்பிக்கை மற்றும் தர்ம சிந்தனை கொண்டவர்கள் ஆக இருந்தனர். என்னைப் பொறுத்தவரையில் பழந்தமிழரின் நாகரீகம் மற்ற திராவிட, ஆரிய மற்றும் சுமெரிய நாகரிங்களை காட்டிலும் முன்னெறீருந்தது(கலை,இலக்கியம் மற்றும் பண்பாடு).
தமிழர் நாகரிகமும் எகிப்து நாகரீகமும் ஒன்றை ஒன்றை போட்டியிடுவதாகவும் சம அளவில் இருந்தாக உணர்கின்றேன்.

Monday, September 14, 2009

இந்திய வரலாறு ஒரு சிந்தனை - பாகம்-5

இவர்களின் சமூகம் மற்றும் மக்களின் வாழ்க்கை முறை அவர்கள் செய்யும் தொழில்கள் அடிப்படையில் பிரிக்கப்பட்டது. அதன்படி அந்தனர், சத்திரியர்,வைஸ்யர் மற்றும் சூத்திரர்கள் ஆவார்கள். இதில் ஒவ்வெறுவர்க்கும் சில கடமைகள், கட்டுப்பாடுகள் மற்றும் வாழ்க்கை முறைகள் விதிக்கப்பட்டனர், இதை மீறுவபபர்களுக்கு தண்டனை தரப்பட்டது. அவை பற்றிப் பார்ப்போம்.

அந்தனர்கள் = அந்+தனர் நம்மில் இருக்கும் ஆத்மா அல்லது அந்தரங்கத்தை உணர்ந்தவர்கள்
நமது அந்தர் ஆத்மாவை உணர்ந்து நாம் கடைத்தொற வழி சொல்லுபவர்கள்.
அந்தனர்கள் கல்வி,வித்தை மற்றும் பக்தி மூலம் மக்கள் வாழ்க்கை நல்லபடி நடக்க வழிசெய்தனர். வேத கால தொடக்கத்தில் அந்தனர்கள் கோயில்கள்,பர்னாசாலைகள் என்னும் குருகுலங்கள் ஆகியன அமைத்து அதன் மூலம் வாழ்க்கை நடத்தினர். இதற்கு கைமாறாக மக்கள் அளிக்கும் உணவு மற்றும் தானியங்கள் கொண்டு வாழ்க்கை நடத்தினர். அவர்கள் பக்தி மார்க்கத்தில் உள்ளவர்கள் உஞ்சவிருத்தி எனும் பிச்சை முறை அவர்களுக்கு விதிக்கப்பட்டு இருந்தது.
அந்தனர்கள் பொருள் ஈட்டுவது,மற்றும் பொருள் ஸேகரீத்து வைத்துகொள்வது பாவம் ஆக கருதப்பட்டுவந்தது. கல்வி,பக்தி மற்றும் அறம் ஆகியன அந்தனர்களின் தொழில் ஆகவும் பிற வகுப்பினரின் பிரச்சனைகளை களைய ஆலொசனகள் கூறியும் வந்தனர். அந்தனர்கள் களவு குடித்தல் போன்ற தவறுகளில் ஈடுபட்டால் அவர்களுக்கு மிக கடுமையான நாலு மடங்கு தண்டனை தரப்பட்டது. அவர்களை தெசத்தை விட்டு விலக்கியும் வைக்கப்பட்டது, குடுமி மற்றும் தாடி சிரைத்து சமூகத்தில் இருந்து விலக்கி வைக்கப்பட்டனர்(இது மரண தண்டனையை வீட கேவலமாக கருதப்பட்டது). வேதத்தில் அதர்வன வேதம் பின்பற்றிய சிலர் மட்டும் கள் மற்றும் புலால் ஆகியவைகளை தொவதைகளுக்கு படைத்து உண்டதாக தெரிகிறது,ஆனால் இது பற்றி முரண்பட்ட தகவல்கள் உண்டு, பொரும்பாலும் அந்தனர்கள் புலால் உணவை தவிர்த்துவந்தனர்.

சத்திரியர்கள் = சத்+யையர்கள்.
சத்திரியர்கள் என்றால் சத்துருக்களை வெல்லுவபர்கள். சத்த்ரியர்கள் கடமை பொரும்பாலும் வேளான்மை மற்றும் மறத்தொழில் வாழ்க்கை முறையாக இருந்துவந்தது. இவர்கள் மற்றைய வகுப்பினைரை காக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டிருந்தனர். இவர்கள் குடிகள் மற்றும் மக்களை எதிரிகள் மற்றும் பிற இன்னல்களில் இருந்து காத்துவந்தனர். விவசாயம் மற்றும் போர்த்தொழில் புரிந்துவந்தனர். கால்நடை வளர்ப்பும் இவர்கள் தொழில் ஆக இருந்தது. வீரம் மற்றும் காதல் கூட சத்தியர்கள் இயல்பாக கூறப்பட்டது, பின்னாளில் தான் அரசமரபினர் மட்டும் சத்திரியர்கள் என திரிக்கப்பட்டது. குடிகளை காக்கும் சத்திரியர்கள் தவறு செய்தால் மூன்று மடங்கு தண்டனை விதிக்கப்பட்டது.மரண தண்டனை மற்றும் உடல் உறுப்பு களைதல் தண்டனையாக தரப்பட்டது. உடல்வலிமைக்காக மதுவும் புலால் உணவும் உட்கொண்டனர்.

வைஸ்யர்கள் = வைஸ்யம்+ கள்.
ஒரு விதத்தில் வசியர்கள் என்றும் கூறலாம், வியபாரம் தான் இவர்களின் முக்கிய தொழில்லாக இருந்தது,என்னுடைய சிந்தனையில் வைஸ்யர்கள் என்ற பிரிவு வேத காலத்தின் இடைச்சொருகலாக இருக்கலாம். பணம் அல்லது தங்கத்தின் விலை வந்தபிறகுதான் வியபாரம் வருகிறது, அதற்கு முன் வெறும் பண்டமாற்று முறைதான் இருந்தது. ஆதலால் வைஸ்யர்கள் என்பது இடைச்சொருகலாக இருக்க வாய்ப்பு உண்டு.அப்படி இல்லை என்றால் ஒருவரிடம் பொருள்களை வாங்கி மற்றொருவரிடம் பண்டமாற்று செய்துஇருக்கலாம்.அனால் பொருள்கள் கூலியாக தரப்படும் வரை வைஸ்சியர்கள் இல்லை என்றும் கூறலாம். இந்த பிரிவு பிற்காலத்தில் ஏற்ப்பட்டது என நம்பப்படுகின்றது. இவர்களுக்கு தவறுகளுக்கு இரண்டு மடங்கு தண்டனை தரப்பட்டது.தண்டனையாக பொருள் மற்றும் அபராதம் செலுத்துதல் மற்றும் கோவில்களுக்கு நிவந்தங்கள் அளித்தல் ஆகியன.

சூத்திரர்கள்- சூத்+திரர்
சூத்திரர்கள் என்ற வார்த்தை பின்னாளில் தாழ்த்தப்பட்டவர்கள் எனப்பொருள் கொண்டு தவறாக அர்த்தம் கொள்ளப்பட்டது. ஆனால் சூத்திரர்கள் என்றால் இயக்குவர்கள் அல்லது இயங்குவபர்கள் என பொருள்படும். மக்கள் பயன்படுத்தும் பொருள்களை தாயரிப்பது, அவர்களுக்கு உதவி புரிவது போன்ற தொழில்கள் செய்வபர்கள் உதாரனமாக, சத்திரியர்களுக்கு தெவையான இரதம்.ஆயுதம்,விவசாயக்கருவிகள்,மண்பாண்டங்கள் செய்வர்கள். இவர்களுக்கு ஒரு மடங்கு தண்டனை தரப்பட்டது. பொரும்பாழும் மொட்டை அடித்தல், அபராதம், சவுக்கடி ஆகியன தண்டனையாக இருந்தது.

இதில் ஆரம்ப்பத்தில் வைஸ்யர்கள் என்ற பிரிவு இல்லாமல் அந்தனர்கள், சத்திரியர்கள்,சூத்திரர்கள் மற்றும் பஞ்சமர்கள் என்னும் பிரிவுகள் தான் இருந்தது. பின்நாளில் வியாபாரம் வந்த பொழுது பஞ்சமர்கள் பின் தள்ளப்பட்டு தற்போது கூறும் நாலு பிரிவுகள் வந்தது.
பஞ்சமர்கள் யார் எனில் ஜந்து விதமான தொழில் செய்வர்கள் பஞ்சமர்கள் எனப்பட்டனர். இவர்கள் பொரும்பாலும் கொலைத்தொழில்(பிராணிகள் வதை ) செய்தார்கள் . மாட்டின் தொல் செருப்பு செய்வபர். பறை அடிப்பவர். மீன் பிடிப்பவர்,முடிதிருத்துவபர் மற்றும் புலால் அல்லது இறச்சி செய்வபர்(வேடுவர்). இவர்களையும் தொழில் அடிப்படையில் தான் சமுகம் பிரித்து பார்த்தனர். எனவே வேத காலத்தில் இவர்களில் அந்தனர்கள் சத்திரியர்கள் சூத்திரர்கள் ஆகியோருக்கு சம உரிமை தரப்பட்டாலும், பஞ்சமர்களை விலக்கிவைத்து இருந்தனர். அது அவர்கள் தொழில் காரணமாக தொடங்கி பின் அவர்களுக்கு அநீதியாக மாறியது. தர்மனெறிகளின் படி இவை விலக்கப்பட்ட தொழில்கள் ஆனாலும் ஏனைய சமுகத்தினர் இவர்கள் உழைப்பை பயன்படுத்திக்கொண்டு இவர்களை மட்டும் விலக்கிவைத்தது கொடுமை. பஞ்சமர்களுக்கு தண்டனையாக மொட்டை அடித்தல்,சவுக்கடி போன்றவை தண்டனையாக இருந்தது. இது வேதகாலத்தின் ஆரம்பம் மட்டும்தான் இதில் வேதங்கள் உருவாக்கப்பட்டது. வேத காலத்தொடக்கத்தில் குற்றங்கள் குறைவாக இருந்தது, மக்கள் அவரவர் கடமைகளை செய்து நிறைவான வாழ்க்கை நடத்தினர். அனால் இதற்கு பின்பற்றிய காலத்தில்தான் வேதங்களின் விளக்க உரைகளான உபனிசத்துக்கள் தொன்றின அவைகள் பல்வேறு முனிவர்களால் பல சமயங்களில் எளுதப்பட்டது.அவர்கள் அவர்களின் கருத்து மற்றும் தெவைக்கு ஏற்ப திரித்து வேதத்திற்கு பொருள் எளுதினார்கள் அதை பின்னால் வரும் பதிவுகளில் பார்ப்போம்.

இந்திய வரலாறு ஒரு சிந்தனை - பாகம்-4

இந்த மூன்று நாகரீங்களும் பற்றிய செய்திகள் அனைத்தும் பாடல்கள், புரணங்கள் மற்றும் சிறு குறிப்புகள் மூலம் அறிவேம் இவை பற்றிய ஆதாரப்பூர்வமாக செய்திகள் நான் அறிந்தவரை இல்லை. ஒவ்வொறு வராலாற்று ஆசிரியரும் தம்முடைய நடையில் தமக்கு ஏற்றவாறு எளுதி இருக்கிறார்கள், இந்த நாகரீங்களின் மக்கள் வாழ்க்கைமுறை மிகவும் அருமையானதாக உள்ளதுக்கு காரணம் அவர்களின் வாழ்க்கை பொரும்பாழும் தெவைகள் அனுசரித்து மட்டும் இருந்தது. சுயவிளம்பரம்,மற்றும் தெவைக்கு அதிகமான ஆசை அவர்களிடம் இல்லை என்பதும் ஒரு காரணம். ஆக இத்துடன் நாகரீக காலத்தை முடித்து வேத காலத்தை பற்றிப் பார்ப்போம்.

வேத காலம் மூன்று பகுதிகளாக பிரித்துகூற ஆசைப்படுகின்றென்.

அதன்படி தொடக்க காலம், பின்பற்றிய காலம் மற்றும் பிரிந்த காலம் அல்லது திரிந்த காலம் என பிரிக்கின்றேன்.(இப்படி வரலாற்றில் இல்லை,இது கட்டுரைக்காக நான் பிரித்தது.)
வேத காலத்தின் தொடக்ககாலமும் நாகரீககாலம் போல் ஒரு அற்ப்புதமான காலம்.
மனிதன் தன் தெவைகள் பூர்த்தியடைந்தவுடன் தன் வாழ்வியல் நெறிகளை பற்றி யோசிக்க ஆரம்பித்தான், தனது உணவு,உடை மற்றும் இருப்பிடம் ஆகியவற்றை நிரந்தரமாக ஓரு இடத்தில் அமைத்தவுடன் அந்த இடத்தின் அமைப்பு, ஆட்சிமுறை, வாழ்க்கைமுறை(சமுதாயம்) மற்றும் எதிர்காலம் பற்றி யோசிக்க ஆரம்பித்தான். ஆறுகளின் அருகில் சமவெளிகளில் தனது கட்டுமான இடத்தை நிருவி பின் தன்னைப் பாதுகாக்க கோட்டை கொத்தளங்களையும் நிருவினான்.
அதில் ஒரு அமைப்புமுறையும் ஏற்படுத்தினான். பின் அவன் அதில் மக்கள் வாழ வாழ்க்கைமுறைகளையும் வகுத்தான். அதன்படி வேதங்கள் உருவானது.
வேதங்கள் என்பதுக்கு அர்த்தம் வாழ்வியல் நெறி என்பது ஆகும். வாழ்க்கைமுறைகள் என்றும் கூறுவர், இதன்படி சமுதாயம் பிரிக்கப்பட்டு அவரவர் தொழில்கள் வரையறுக்கப்பட்டு அதன்படி வாழ்க்கை நடத்திவந்தனர். மக்கள் நாலு பெரும் பிரிவுகளாக பிரிக்கப்பட்டது,
அதன்படி அந்தனன்,சத்திரியன், வைஸ்யன் மற்றும் சூத்திரன் என்பது ஆகும்.
இது ஏற்ற இறக்க சமுதாயமாகப் பார்க்கப்படவில்லை. தொழில்களை வைத்துப்பார்க்கப்பட்டது.
வேதகாலத்தின் தொடக்க காலத்தில் இந்த பிரிவுகள் யாவையும் ஒன்றுபோல் பார்க்கப்பட்டது, வாரீசு அடிப்படையில் வருவது அல்ல. ஒன்றைச்செய்வர்கள் கூட மற்ற தொழில் செய்ய அனுமதிக்கப்பட்டார்கள். ஒவ்வொறு பிரிவிற்க்கும் கடுமையான கட்டுபாடுகள் உண்டு.
தற்சமயம் இந்த பிரிவின் நேக்கங்கள் திரிக்கப்பட்டதால் கடுமையான விமர்சனங்கள் எழுந்து மறைந்தூள்ளது. இந்த பிரிவினையை ஆதரிப்பது அல்ல நமது நேக்கம்,இந்த மாதிரி சமுதாயப்பிரிவினை நல்ல நேக்கில் ஒரு சமுதாயக்கட்டுபாடு காரணமாக ஏற்ப்படுத்தப்பட்டது,பின்னாள் வந்தவர்கள் தங்களது சுயநலம் காரணமாக திரித்துவிட்டார்கள்.
இதில் நாலு வேதங்கள் அடங்கும் ரிக்,யஜுர்,சாம மற்றும் அதர்வண என்பவை. இவை ரிக் மற்றும் யஜுர் வேதங்கள் வாழ்க்கை முறைகள், மக்களின் கடமைகள் மற்றும் தவம், வேள்விகள், யாகங்கள் பற்றிக்கூறுகிறது. சாம மற்றும் அதர்வன வேதங்கள் மந்திரங்கள், பிறப்பு இறப்பு நிலைகள், தெவதைகள் மற்றும் குதிரை, யுத்த நீதிகள் சாஸ்த்திரங்கள் பற்றிக்கூறுகிறது.
இந்த வேதங்கள் பல்வேறு காலகட்டத்தில் பல்வேறு முனிவர்களால் உருவாக்கப்பட்டு இருக்கலாம் என நினைக்கின்றேன். அனால் மந்வந்திரம் என சொல்லப்படும் ஆயிரம் வருடங்கள் காலகட்டத்தில் மனுவின் மந்வந்திரத்தில் சொல்லப்பட்டதால் வேதங்கள் மனுவின் காலத்தில் சொல்லப்பட்டது. எப்படி இந்து மதத்திற்கு நிலையான வரலாறு இல்லையோ அதுபோல் வேதத்திற்கும் ஒரு வரலாறு இல்லை. இதுபல காலகட்டத்தில் பலமுறை பலரால் உருவாக்கி இருக்கவேண்டும் என்பதும் எனது கருத்து. வேதங்கள் உருவான கருத்துக்களாக தற்போது கூறப்படும் கடவுள் அவருக்கு சொன்னார், அவர் இவருக்கு சொன்னார் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. இதில் வருனாசிரதர்மம் எனப்படும் பிரிவுகளை பார்ப்போம். (இதை ஆரம்பிக்கும் முன்னர் நான் இதையும் கூறிவிடுகின்றேன் நான் எந்த சாதிய சிந்தனையும் இல்லாமல்தான் இதை எளுதுகின்றேன், நான் சிறுவயது முதல் சாதீ வேறுபாடுகளை வெறுப்பவன். ஆகவேதான் தொழில் ரீதியாக பிரிக்கப்பட்டவை என்பதை மட்டும் கூறிபின் அது எப்படி மாற்றம் கொண்டது என்பதை பின்வரும் பதிவுகளில் கூறுகின்றேன்.அதற்குள் பதிவர்கள் எனக்கு ஆட்டே அனுப்பவேண்டாம் எனவும் கேட்டுக்கொள்கின்றேன்.)

Wednesday, September 9, 2009

இந்திய வரலாறு ஒரு சிந்தனை - பாகம்-3

இந்த மூன்று நாகரீகங்களும் நிறத்தால், மொழியால், குணத்தால்,பழக்கவழக்கங்களால் மாறுபட்டு இருந்தாலும் ஒன்றுக்கு ஒன்று ஒன்றுபட்ட இணைக்கப்பட்ட சமுதாயமாக இருந்தத்துக்கு காரணம் கடவுள். மூன்று கடவுள்கள் மூன்றும் ஒரே நோக்கிற்காக படைக்கபட்டன(அல்லது அவதாரம் செய்தன) ஆரிய நாகரீகத்தில் ஈஸ்வர்(தலைவர்), சிந்து நாகரீகத்தில் பசுபதி நாதர், திராவிட நாகரீகத்தில் சிவன். இந்த மூன்று தெய்வங்களும் முதல் தெய்வங்கள், மூன்றும் ஒரே தெய்வம் என்பதுதான் ஒற்றுமை.

கால்நடைகளை காக்க, பயிர்களை வளர்க்க தங்களின் குழுக்களை வழிநடத்த இந்த தலைவர்கள் தெய்வங்களாக பின்னாளில் வழிபடப்பட்டனர். இவர்களின் ஆன்மா அல்லது சக்தி நிரந்தரமானது அது தாங்களை காக்கும் என்று நம்பிக்கை கொண்டு அவர்களை வழிபட்டனர்(வழிபடுகின்றனர்). பின்னாளில் மக்கள் அதிகம் ஆக ஆக அவர்களின் பிரிவும் அதிகம் ஆகினார்கள், பிரிவுகள் அதிகம் ஆக அவர்களின் தெய்வங்களும் அதிகம் ஆகிற்று. இப்படி இந்த மூன்று நாகரீக காலத்தில் மக்களிடம் எந்த போதமும் இல்லாமல் நல்ல முறையில்தான் வாழ்க்கை நடத்தினார்கள். இந்த காலகட்டம் மக்களின் மிகச்சிறப்பான காலகட்டம் ஆகும். பொண்கள் கூட உரிய பாதுகாப்பு மற்றும் மதிப்புடன் வாழ்க்கை நடத்தினார்கள். இந்த காலகட்டம் ஆறுகளின் போக்கு மாறியதாலும், தொழில்களின் எண்ணிக்கை கூடியாதாலும், புவீயியல் மாற்றம் காரணமாக நாகரீகங்களும் மாறுபட்டன(அழியவில்லை). இந்த நாகரீங்களை இணைத்த கடவுளின் ஒற்றுமை பற்றி கூறி இந்த நாகரீங்களை பற்றிய கட்டுரை முடிக்கின்றென்.

சிவன்- ஆதியும் அந்தமும் இல்லாதவர், சித்தர்களில் முதன்மையானவர்(யோகங்களை பதினெட்டுசித்தர்களுக்கு அருளியவர், அவர்களுக்கு தலைவர்,இவர்தான் சுந்தரனாந்தர் என்ற முதல் சித்தர் ஆவார்) மலையில்(பொதிகை) வாழ்க்கை நடத்துபவர், மாட்டை வாகனமாக உடையவர்.பஞ்ச பூதங்களுக்கும் அதிபதி.

ஈஸ்வர்- ஆதியும் அந்தமும் இல்லாதவர், மகரீசிகளின் முதன்மையானவர்,(சனாகாதி முனிவர்கள், இவர்களுக்கு ஈசன் தான் வேதம் மற்றும் அதன் உட்பொருளை விளக்க அவர்கள் பரப்பியதாக வராலாறு) இவர் மலையில்(கைலாயத்தில்) வாழ்க்கை நடத்துபவர், மாட்டை வாகனமாக உடையவர். அனைத்து தொவர்களின் தலைவர்.

பசுபதி நாதர் - ஆதியும் அந்தமும் (அப்பா,அம்மா அல்லது பிறப்பு இறப்பு) இல்லாதவர், முனிவர்களின் தலைவர், மலையில் வாழ்க்கை நடத்துவர்(காத்மாண்டு) மாட்டை வாகனமாக உடையவர். அனைத்து இயற்கையும் கட்டி ஆழ்பவர்.

இதில் சிந்து நாகரிகமான மொகஞ்சதாரோ,ஹராப்பா அகழ்வாரச்சியில் நமது இந்திய சிந்து சமவெளி நாகரீக அகழ்வாரச்சியில் பசுபதி நாதர் சிலை கிடைத்துள்ளது, ஆகவே நான் பசுபதி நாதர் இந்து சமயத்தின் முதல் கடவுள் என குறிப்பிட்டேன். நமது வரலாறும் அதில் இருந்துதான் தொடங்குகிறது, ஆதலால் அவ்வாறு குறிப்பிட்டேன். உன்மையில் பசுபதி நாதர். சிவன் மற்றும் ஈஸ்வர் ஆகிய தெய்வங்கள் மூன்றும் ஒன்றுதான், அவர்கள்தான் இந்து மதத்தின் முதல் தெய்வங்கள். இதில் பசுபதி நாதருக்கு மட்டும் வரலாற்று குறிப்புகள் உள்ளன. மற்ற இரண்டு கடவுளுக்கும் புரானங்கள் மற்றும் நூல்கள்தான் ஆதாரம் ஆக உள்ளது.
இவற்றின் உருவங்கள் கூட ஒற்றுமையாக உள்ளது. இந்த ஒற்றுமைதான் நமது மக்களை கட்டிபோட்டது. நல்ல ஒலுக்கம்,கட்டுபாடு,பொரியொர் மதித்தல், விட்டுகொடுத்தல் அகியன முக்கியமாக இருந்தன. இந்த காலகட்டத்தில் மது இருந்தது ஆனால் அதை பருகுவர்கள் சமுகத்தில் தரம் குறைவாக மதிக்கப்பட்டனர்,ஆகையால் அதை பருகுவர் மிகவும் குறைவு.
இந்த காலகட்டத்தில் விலைமகளீர் இல்லை, அனால் பொண்கள் தான் விரும்பும் ஆண்மகனுடன் திருமணம் புரியவும், அவர்களை விட்டு விலகி செல்லவும் சுதந்திரமாக அனுமதிக்கப்பட்டனர். உடலுறவு பெரியதாக கருதப்படாமல் குழந்தைபேறு மட்டும் கணக்கில் எடுத்துகொள்ளப்பட்டது. பொண்கள் தான் விரும்பும் அல்லது தனக்கு பாதுகாப்பு அளிக்க கூடிய ஆண்மகனுடன் வாழ அனுமதிக்கப்பட்டனர். இனப்பொருக்கம் ஒன்று மட்டும் அவர்கள் கடைமையாக இருந்தது.

இந்த நாகரீக காலகட்டத்தில் குற்றம் என்றால் அது களவு மட்டும்தான், களவு செய்வபவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட்டனர்.
பொரும்பாலும் நெல்லும், காலநடைகள்தான் களவு பொருட்கள், பண்ட மாற்றுமுறை நடைமுறை இருந்தது பணம் கண்டுபிடிக்கப் படவில்லை. அணிகலங்கள் அலங்ககார பொருள்ளாக மட்டும் பார்க்க பட்டது. தொழிலின் காரணமாக சமூகம் பிரிக்கபடவிட்டாலும் கொல்லர்கள், வேளாங்குடிகள்,மறவர்கள், அந்தனர்கள் மற்றும் மீனவர்கள் என்னும் பஞ்சமவர்கள் இருந்தனர். ஆனால் ஒற்றுமையாக ஒன்றாக வசித்தனர். கலப்பு மணம் பொண்களின் விருப்பபடி நடந்துதது.

எனது கருத்து

(( திராவிடர்கள் ஆப்ரிக்காவைச் சேர்ந்தவர்கள் என்றும் ஆரியர்கள் வந்தேறிகள் அல்ல என்றும் சொல்லவருவதன் முலம்
திராவிடர்களே வந்தேறிகள் என்று கருத்து திணிப்பை வலிந்து செய்வதன் மூலம் உங்கள் கட்டுரையின் நம்பகத்தன்மை பற்றிய கேள்வியிலேயே அதற்கான விடையுமாக இருக்கிறது.))

எனது கட்டுரையில் நான் திராவிடர்கள் இந்தோ ஆப்பிரிக்க மொழிக்குடும்பம் என்றுதான் குறிப்பிட்டேன், வந்தெறிகள் என்ற வார்த்தையை பயன்படுத்தவில்லை, நான் அந்த அளவுக்கு பக்குவப்படவில்லை. எனக்கு என் தாய்,தந்தை,நான் பார்க்கும்,பழகும் மனிதர்கள், சகமொழி,இந்தியர்கள் அனைவரும் என் சகோதரர்கள்தான், எங்கு அவர்கள் இருந்தாளும் எனது இரத்தம்தான்,இதில் பிரித்து ஒரு சாராரை வந்தெறிகள் என கூறும் அளவுக்கு நான் ஒரு பண்பாளன் அல்ல. இந்த உலகில் எல்லாரும் ஒரு வந்தெறிகள்தாம், ஒரு இடத்தில் பிறந்து,ஒரு இடத்தில் படித்து,ஒரு இடத்தில் வேலை பார்ப்பவனும் வந்தெறிதான். ஒரு மாவட்டத்தில் பிறந்து சென்னையில் வேலை பார்ப்பன்,சென்னைக்கு வந்தெறிதான்.
லெமூரியா கண்டம் ஒன்றாக இருந்தபோது வாழ்ந்த மக்கள் காண்டினெண்டல் ட்ரிப்டெசன் காரணமாக ஆஸ்த்திரெலியா, நியுசிலாந்து பிரிந்த போது அங்கு இருக்கும்,இப்பவும் இருக்கும் அபரிஜின் பழ்ங்குடி இன மக்களின் மொழியும் தமிழும் ஒன்றாக இருக்கும், அம்மா, அப்பா அகியன வைத்து தமிழர்கள் ஆஸ்திரெலிய வந்தெறிகள் என்றால் அது எனது அறியாமை ஆகும். இப்ப இருக்கும் அமெரிக்க ஆங்கிலத்தில் வரும் மா, டாட் போன்ற்வை அம்மா, தந்தை போன்ற வார்த்தைகளை ஒப்பிட்டு உவமை கூறினால் எப்பிடி இருக்குமோ அப்பிடிதான் இருக்கின்றது உங்கள் வாதம், திராவிடம் மற்றும் சிந்தி நாகரீகம் எப்படி தங்களுக்கு அருகாமையில் உள்ள நாகரீக சொல்லுடன் கலந்து வருகிறதோ அது போல் ஆரிய நாகரீக சொல்லும் அதன் அருகாமையில் உள்ள லத்தின் நாகரீக சொல்லுடன் கலந்து வந்து இருக்காலாம். எனது கருத்து என்ன என்றால் அப்போது உள்ள பரத கண்டத்தில் அந்த பகுதியிம் நமது இடந்தான்,அதுவும் பாரத்தின் ஒரு பகுதிதான் அங்கு இருந்தவர்கள் வந்தெறிகள் அல்ல என்பதுதான். மனிதன் இருண்ட கண்டத்தில் தொன்றியவுடன் அவன் கூட்டம் பொருக பொருக நதிக்கரைகளை ஒட்டி இடம் பொயர முற்ப்பட்டான். வடக்காக இடம் பொயர்ந்தவகள் காலம்,தட்பவெப்பம் காரணமாக வேறுபாடு அடைய, தெற்க்கா பொயர்ந்தவர்கள் அதற்கு ஏற்றார்போல் மாறுபட்டனர். அப்படித்தான் கறுப்பு,வெள்ளை இனங்கள் வந்துஇருக்கலாம்.
டார்வினின் தத்துவத்தை ஏற்றுக்கொள்ளும் மாக்ஸ்முல்லர் போன்றொர் வெள்ளையர்களுக்கும் கறுப்பு இனம்தான் மூதாதையர்கள் என ஒத்துக்கொள்ள மறுப்பது ஏன். என்னை பொறுத்தவரை நாம் மனிதர்கள் நம்மில் எந்த போதமும் இல்லை, அனால் சமுதாயம் கூறும் ஒலுக்கத்தை (புலால் உன்னாமை,மது அருந்தாமை,பொய் கூறாமை,வஞ்சகம் செய்யாமை, கயமை கொள்ளாமை, மாற்றான் உடமை திருடாமை)கடைப்பிடிப்பவர்கள் உயர்ந்தவர்கள், முறை தவறுவர்கள் தாழ்ந்தவர்கள். இந்த கோட்பாட்டின்படி நானும் தாழ்ந்தவந்தான்.
பின்னுட்டங்களுக்கு பதில் எளுத ஆரம்பித்தால் நான் என் கட்டுரையில் இருந்து விலகி எளுதும்படி ஆகும். ஆகவே எனது கட்டுரை முலுதும் எலுதிவிட்டு முடிவில் பின்னுட்டங்கள் பதில் எளுதுகின்றென்.நன்றி,வணக்கம்.