Friday, February 26, 2010

லீவு விட்டாச்சு


சென்ற பதிவில் பின்னூட்டம் இட்ட அனைவருக்கும் எனது நன்றிகள். தொடருக்குப் படங்கள் கொடுத்து உதவிய துளசி டீச்சர், தலைப்பை கொடுத்த சித்ரா அவர்களுக்கும் எனது நன்றிகள்.

அலுவலகத்தில் அளவில்லா ஆணிகளைக் காட்டிப் பிடுங்கும் பொறுப்பை என்னிடம் கொடுத்து விட்டதின் காரணமாகப் பணியைத் தவிர வேறு எதுவும் சிந்திக்க இயலாத நிலை உள்ளது.

ஆதலால் ஒரு வாரகாலம் எனது பிளாக் பணிகளுக்கு ஓய்வு அளிக்கின்றேன். கடவுள் தொடரும், காதல் கதை தொடரும் மறுபடியும் எழுதுவேன் என உங்களைப் பயமுறுத்தித் தற்காலிக விடுப்பு(நிம்மதியை ) உங்களுக்கு அளிக்கின்றேன். நன்றி.

Wednesday, February 24, 2010

சிந்து சமவெளியில் ஒருவன்

கதை நடக்கும் காலம்- சிந்து சமவெளி நாகரீக காலம்.
இடம்: லோதல்.
கதைக்கான கரு: கற்பனை.
கதைக்கான மூலம்: துளசி டீச்சரின் குஜராத் பயணத் தொடரில் வந்த ஒரு படம்.

அதிகாலைக் குளிரில் சூரிய உதயத்திற்க்காக காத்து இருந்தான் மோரிஸ், இருபத்தி இரண்டு வயது இளைஞன்,திடகாத்திரமான ஆறரை அடி உயர வாலிபன் அவன். செம்பொன் கலரில் கட்டுமஸ்தான தேகமும், வசீகரமான முகமும்,கூரிய நாசியும்,அடர்த்தியான தலைமுடியும் கொண்டவன். கடலில் அடிக்கடி பிராயாணம் செய்யும் தனிமை அவனுக்கு கூர்மையான பார்வையைக் கொடுத்தது. சிறிது சிரித்த, வீரம் கலர்ந்த முகம். ஹராப்பா,மொகஞ்சதாரோ மற்றும் லோதலின் இளம் பெண்களின் தூக்கத்தைக் கெடுத்தது என்றால் அது மிகையாகது. அவன் லோதல் நகரின் வணிகரின் மகன். நாலு கப்பல்களுக்குச் சொந்தக்காரன அவரின் ஒரே மகன். இயல்பாக சுதந்திர வேட்கையுள்ளவன் ஆதலால் கப்பல் பிரயாணத்தில் பல இடங்களையும்,பல்வேறு மக்களையும் சந்திக்கும் ஆவலில் அடிக்கடி அவர்கள் இன மக்களின் இடங்களுக்கு எல்லாம் சென்று வருவான். கிரேக்கத்திற்க்கும், சுமேரியாவிற்க்கும் செல்ல அவனது மனம் துடித்துக் கொண்டு இருந்தது. அதை வீட அதிகமாக அவன் மனம் இன்னேரு விஷயத்திற்க்காவும் அமைதி இழந்து இருந்தது.

ஆறு மாதங்கள் கடலிலும்,நதியிலும் கப்பல் பிரயாணம் செய்து, வணிகத்தை நல்லபடியாக முடித்து விட்டு, அணிகளும்,மணிகளும், முத்துக்கள், பவளங்கள், வெல்லம் மற்றும் தானியங்களாக வாங்கிக் குவித்து இருந்தான். யவனர்களின் குதிரைகள் மற்றும் யவண அடிமைகளும் அவன் கப்பலில் இருந்தன. யவண அடிமைப் பெண்கள் வாங்கும் எண்ணம் அவனுக்கு இல்லையாதலால், பணிக்கு மட்டும் பணிப் பெண்கள் அவனது கப்பலில் இருந்தனர். மாலைவேளைகளில் அந்தப் பெண்களின் பாட்டும், நடனமும் உற்சாகத்தைத் தருவதுக்குப் பதிலாக அவனது வேதனையை அதிகப் படுத்தியது.மெல்ல உறக்கத்தைத் தொலைத்து கப்பலின் மேல் தளத்தில் இருந்து நட்சத்திரங்களைக் கொண்டு, திசையும், தூரத்தையும் அளக்கத் தொடங்கினான். இன்னமும் இரண்டு நாளில் கப்பல் நதியின் முகத்துவாரத்தை அடைந்து விடும். பின்னர் ஒரு பகல் பொழுதில் துறைமுகத்தை அடைந்து விடலாம். அது மட்டுமா எண்ணற்ற பெண்களின் கனவுக் கண்ணன் ஆன அவனின் கனவுக் கன்னியைக் கூடக் காணலாம். இந்த நினைப்பே அவனது சோகமான முகத்தில் ஒரு மந்தகாசமான புன்னகையைத் தோற்றுவித்தது. மெல்ல அலைகளையும் வானத்தையும் பார்த்தவனுக்கு நிலவு அவனின் காதலியின் முகம் போல தெரிந்தது. கண்களை மூடி ஒரு நிமிடம் அவளின் முகத்தைக் கற்பனை செய்தான். அவனையும் அறியாமல் மோரிஸின் அவன் வாய் முனுமுனுத்தது. " மொளனிகா" என்று. தொடரும்.

டிஸ்கி : இந்தக் கதை துளசி டீச்சரின் கட்டுரையில் வந்த ஒரு படத்தைக் கொண்டு எழுதப் பட்டது. இதற்க்காக டீச்சருக்கு எனது நன்றிகள்.

Monday, February 22, 2010

கடவுளும், கோவில்களும் ஒரு ஆராய்ச்சி - 9

சென்ற பதிவில்(பாகம் -8) நான் கூறிய பிரபஞ்ச தத்துவத்தை, ஒரு ஆராய்ச்சிப் பார்வைக்காக மட்டும் கடவுளுடன் ஒப்பிட்டுப் பாருங்கள். மையத்தில் உள்ள கருப்பொருளை,சக்தியாக,அதாவது பரம்பொருளாகப் பாருங்கள். அல்லது ஆதிபராசக்தியாகப் பாருங்கள். எதிர்வினையுடைய எலட்க்ரான் களைப் சிவனாகவும்(அழித்தல்), ஆக்க வினையுள்ள புரோட்டான் களை விஷ்னுவாகவும்(காத்தல்), நடுனிலையுள்ள நியுட்ரான் களை பிரம்மாவாகவும்(படைத்தல்) கற்பனை செய்யுங்கள். இது சாத்தியமா என்ற கேள்வி வரலாம். கொஞ்சம் மாற்றி சிந்தியுங்கள். அனுக்கரு வினைகளான, அனுக்கரு பிளவு(ஃபிஸ்சன்) மற்றும் அனுக்கரு இணைவு(பியூஸன்) ஆகிய செயல்களை நாம் இதனுடன் ஒப்பிட்டால் எப்படி?. பிரபஞ்சத்தில் ஓயாமல் அனுக்கரு பிளவு அல்லது இணைவு நடைபெறுகின்றது. அதன் மூலம் சக்தி வெளிப்பட்டு, அனைத்து இயக்கங்களும் நடைபெறுகின்றது. அப்படி நடக்கும் போது அனுக்கருவைத் தாக்கி அழித்து, மீண்டும் நிறைய எலட்ரான் களைத் தோற்றுவிக்கும் போது அதிக வெப்பம், மற்றும் அபாயகரமான கதிர் வீச்சுக்கள் உருவாகின்றன. இந்த எலட்ரான் களின் சக்தி அழிக்கும் சிவம் என்றும், இதிலிருந்து எலட்ரான் களைச் சமன் செய்து கட்டுப்படுத்தும் புரோட்டான் கள், காக்கும் விஷ்னுவாகவும், ஒரு அனுவில் இருந்து தாக்கி, எலட்ரான் களைப் 2,4,8,16,32 என பெருக வைக்கும் நியுட்ரான் கள் படைக்கும் பிரம்மாவாகவும் இருந்தால். இதிலிருந்து வெளிப்படும் கதிர்கள்,உதிரிகள்,குட்டிக் கோள்கள் எல்லாம் தனித்தனி சக்தி மண்டலங்களாக உருவாகின்றன. இது குட்டிக் குட்டி கடவுளாக உருவகம் செய்தால் எப்படி?. இது சும்மா ஒரு சக்திமூலத்தை அறிய உதவும் ஒரு கற்பனைதான். ஆனாலும் பொருந்தும் விதமாக உள்ளது. இதுவும் நம் முன்னோர்கள் கடவுள்களைப் படைத்த விதத்திற்கு ஒரு சான்று ஆகும்.

இந்த பிரபஞ்ச உதாரணத்தை மற்றும் ஒரு மூலத்துடன் ஒப்பிடுவேம். அந்த மூலம், நாம் தான். நமது உடல் கோடிக்கணக்கான செல்களால் ஆனது. இந்த செல்கள் யாவும் இரத்தம் மற்றும் திசுக்களில் உள்ளது. இவை நரம்பு மண்டலத்தால் பிணைக்கப்பட்டு, நியூரான் கள் வழி தொடர்பில் உள்ளது. இந்த நியூரான் கள் செய்தி மட்டும் கட்டளைகளை மின் காந்த சக்தி மூலம் எடுத்துச் செல்கின்றது. இந்த சக்தி செல்களின் அனுக் கரு விளைவால் உருவாகின்றது. இதை கொஞ்சம் விரிவாக பார்ப்போம். தந்தை மற்றும் தாயின் செல்களில் இருந்து உயிர் சக்தி உருவாகி அது கருவில் ஒரு செல்லாக உருவெடுக்கின்றது. இது 2,4,8,16,32 எனப் பிரிந்து உயிர் உள்ள ஒரு கரு வளர்கின்றது. இந்த கருவின் செல்களின் எண்ணிக்கைப் பெருகப் பெருக அது உடலுடன் கூடிய உயிரினமாக, அதன் மரபணுவில் உள்ள மூலக்கூறுகள் படி வளர்கின்றது. இப்போது ஒரு சக்தி அனு விளைவால் பிரிந்து பலவாகி, அது சக்தி மூலம் ஆகின்றது. இந்த சக்தி நல்ல ஆரோக்கியமான செயல்கள் மூலம் நல்ல முறையில் உடல் முழுதும் பரவி, நல்ல நோயற்ற சுகத்தைக் கொடுக்கின்றது. தீய செயல்கள் மூலம் சக்தி விரயம் ஆகும் போது, சக்திக் குறைபாடு ஏற்ப்பட்டு, நோய் வருகின்றது. ஆக பிரபஞ்சம், கடவுள், நமது உடல் என்று எல்லா இடத்திலும் சக்திதான் கடவுள் என்று காணலாம். நமது உடல்,உலகம், அண்டம், பேராண்டம், பிரபஞ்சம் என எல்லா இடத்திலும் சக்தி நீக்கமற நிறைந்து இருப்பதை உணரலாம். நமது உடலில் இந்த சக்தி மிகும் போது அது சக்தி மூலங்களில் சேகரிக்கப் படுகின்றது. இதை உணர்ந்து எவன் ஒருவன் தன் சக்தியை அதிகரித்து, சக்தி மூலங்களில் சேகரித்து வைக்கின்றானோ,அவன் தன் சக்தி மூலத்தை பிரபஞ்சத்துடன் இணைக்க வல்ல சக்தியை பெறுகின்றான். அவனுக்கு முக்காலங்களும், சகல சித்துக்களும் கைவசம் ஆகின்றது. எங்கும் இருக்கும் சக்திதான் தன் உடம்பில் உள்ளது என்று அறிந்து அதை வளப்படுத்தி தன் சக்தி மூலங்களில் சேகரிக்கும் ஒருவன், அந்த சக்தியின் நிலையினை உணர்ந்து, சாந்தமைடைகின்றான். தான் வேறு, கடவுள் வேறு அல்ல என்று உணர்ந்தவுடன், அவன் முக்தன் ஆகின்றான். இப்படி நாம் சக்தி மூலத்தில் நமது ஆற்றலைச் சேமிக்கத் தொடங்கினால், அனைத்தும் நம் வசமாகும். பின்னர் நாமும் குதம்பைச் சித்தர் போல

மலையில் ஏறி மாங்காய் பால் உண்டவர்க்கு,
தேங்காய்ப் பால் எதுக்குடி குதம்பாய்.

என்று பாடத் தொடங்கி விடுவேம். இந்த சக்தி மூலங்கள் என்று அழைக்கப் படுவன நம் உடலில் பல்வேறு பாகங்களிலும் உள்ளன.

அவை யாவும் முறையான வழிகாட்டியுடன், நல்லா கற்றறிந்த குருவின் துணையுடன் மேம்படுத்துதல் வேண்டும்.தன்னிச்சையாக மேம்படுத்துதல் எதிர்வினைகளுக்கு ஆளாக்கும். நாம் முதலில் பிரபஞ்சத்தையும்,பின்னர் கடவுளிடமும் சக்தி மூலத்தை ஒப்பிட்டுப் பார்த்தோம். இனி இதனை தத்துவங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் அதுவும் சரியாக வரும். முதலில் உள்ள உயிர் சக்தியை நாம் பரமாத்மா அல்லது பரம்பொருள் எனலாம். நம் உடலில் உள்ள உயிர் சக்தியில் இருந்து பிரிந்து செயலாற்றும் சக்திகளை ஜீவாத்மா எனவும் கொள்ளலாம். சக்தி பெருகப் பெருக அதிகரிக்கும் சக்தி மூலங்கள் இறுதியில் பரமாத்மாவான உயிர் சக்தி மூலத்தில் இணைதல் முக்தி எனலாம். நல்ல செயல்கள் மூலம் தான் இந்த சக்தியை அதிகரிக்கின்றேம். ஆகவே செயல்களை கர்மா எனலாம். சக்தியின் மீள் பிறப்பை பிறவி எனலாம். ஆகவே நல்ல கர்மங்கள் நம்மை பரமாத்மாவிடமும், தீய கர்மங்கள் நம்மை நோய் என்ற மீள் பிறப்பில் ஆழ்த்தும் என்றும் கொள்ளலாம் அல்லவா. இப்படி நம்மைச் சுற்றியுள்ள எதனுடன் ஒப்பிட்டாலும் நாம் இறுதியில் வருவது பரம்பொருள் எண்ணும் சக்தி மூலம் தான். எல்லாம் இதனின் பிரிவுகள் தான் என்பது தெளிவு.இந்தப் பரம்பொருள்தான், பரமபிதா எனக் கிறித்துவர்களும், அல்லா என இஸ்லாமியர்களும்,பராசக்தி என இந்துக்களும்,ஜோதி என தியானிப்பவர்களும், பரமாத்மா என வேதாந்திகளும் அழைக்கின்றார்கள். இது எப்படி சாத்தியம். எப்படி ஒன்றாக முடியும் என நினைப்பவர்களும், ஏற்றத்தாழ்வு பார்ப்பவர்களும், ஒரு சிறு கற்பனை செய்யுங்கள். ஒரு சிறிய வெள்ளைத்தாளில் ஒரு பெரிய பூஜ்ஜியம் வரையுங்கள். அந்த பூஜ்ஜியத்துக்குள்ளும், வெளியிலும் நிறைய பூஜ்ஜியங்களை சிறியதும், பெரியதுமாக வரையுங்கள். இப்போது பெரிய பூஜ்ஜியம், பரம்பொருள் எனவும், கொஞ்சம் பெரிய பூஜ்ஜியங்களைக் கடவுளின் அவதாரங்கள் எனவும், சிறிய பூஜ்ஜியங்களைக் குட்டிக் கடவுள்கள் எனவும் கொள்ளுங்கள். இப்போது சொல்லுங்கள் அந்தத் தாளில் எந்த பூஜ்ஜியத்துக்கு மதிப்பு அதிகம் என்று. இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில். நன்றி.

டிஸ்கி: இந்தச் சக்தி மூலங்களின் படம் ஒரு பதிவரின் பதிவில் இருந்து சுட்டு விட்டேன். பதிவரின் பெயர் மறந்து விட்டது. அவருக்கும் எனது நன்றிகள். (பட உதவி என்று டைட்டில் போட்டு விடலாம்)

Friday, February 19, 2010

வாங்க சிரிக்கலாம்.... வாங்க

2036 ஆம் வருடம்,மார்கழி மாதம்,அதிகாலையில் தூக்கத்தில் ஆழ்ந்துருந்தேன்.அப்போது பார்க்க பயங்கரமான,விகாரமான தோற்றம் உடைய இருவர் என்னிடம் வந்தார்கள். அவர்கள் "வா எங்களுடன்", என்று கூறி என்னைத் தர தரவென இழுத்துச் சென்றார்கள். (உரையாடல் முழுதும் வடிவேலு ஸ்டைலில் படிக்கவும்).

காட்சி-1 (வானவீதியில்)

நான்: ஆமாஆஆஆ நீங்க யாரு?

கிங்கரர்கள்: நாங்கள் யமதூதர்கள். உன் உயிரைப் பறித்துப் போகின்றேம்.

நான் : என்னது உயிரை எடுத்துட்டீங்களா,சொல்லவேயில்லை.

கிங்கரர்கள்: சொல்லிட்டுச் செய்ய நாங்க என்ன தமிழ் சினிமா ஹீரோவா, பஞ்ச் டயாலக் பேசி உயிரை எடுக்க.

நான் : ஆமா, ரம்பா,ஊர்வசி,மேனகா எல்லாம் நல்லா இருக்காங்களா.

கிங்கரர்கள் : நீ கொஞ்ச நேரம் வாயை அடைத்துக் கொண்டு வருகின்றாயா?

நான் : என்னது நீங்க வந்துருக்கிங்க, தேவதூதர்கள்,புஷ்பக விமானம் எல்லாம் வராதா?

கிங்கரர்கள்: அடேய் நீ பண்ணிய பாவங்களுக்கு,கெட்ட கேட்டுக்கு அவங்க எல்லாம் வரனுமா?.சும்மா பிணாத்தாம வாடா.

நான்: ஆமா எவ்வளவு தூரம் போகனும்?.நான் இன்னமும் கடவுளும் கோவில்களும் கட்டுரை கூட எழுதி முடிக்க வில்லையே.

கிங்கரர்கள்: அடேய்,எங்க பொறுமையை சோதிக்காதே. பேசாம வா.

நான்: போகின்ற வழிக்கு பொழுது போகனும் இல்லை.

கிங்கரர்கள்: சூலாயுத்தால் வாயில் இடித்து,இப்ப நீ வாயை மூடலைன்னா,அடிச்சே கிழிச்சுடுவேம்.எப்படி வசதி.

நான் : அய்யோ, ஆத்தாடி, என்று கப்சிப்.

காட்சி - 2 (எமலோகத்தில் எனது இறுதி தீர்ப்பு வாசிக்கப்படுகின்றது).

சித்ரகுப்தன்: மன்னா,இவன் ஒரு ஜெகஜாலக் கில்லாடி, நல்லவன் போல நடிப்பவன். இவனை எமலோகத்தில் விட்டு அனைத்து தண்டனைகளும் தரவேண்டும்.

யமன்: அது என் வேலை, நீ முதலில் இவனது குற்றங்களைப் படி.

நான் : அடப்பாவிகளா, இங்கனயும் பதவிப் போட்டியா?.

கிங்கரர்கள்:உஷ் வாயை மூடிக்கொள். இல்லை என்றால் உன் தண்டனை இரு மடங்கு ஆகிவிடும்.

நான் : சரி அப்பு.

சித்ரகுப்தன்: மன்னா சொல்ல அசிங்கம், இவன் கல்லூரி மூன்றாம் ஆண்டு படிக்கும் போது.....

யமன் : சரி,சரி, இரகஸ்யங்களை சப்தம் போடாதே. வாலிபக் குறும்பு. இதுக்கு தண்டனையா, இவனை தகிக்கும் தங்க பதுமையைக் கட்டி அனைக்கச் சொல்லி வறுத்து எடுப்போம்.

நான் : அடப்பாவமே, நான் எப்பவும் தங்கம் என் உடம்பில் கூடப் போட்டதே கிடையாது. கட்டிக்க தங்கப் பதுமையா?. பூலோகத்தில் அப்புறம் ஏன் தங்கம் விலை ஏறாது. சரி இங்கனயாது போட்டுக்குவேம்.

கிங்கரர்கள்: அடேய் அது சூடான கொதிக்கும் தங்கப் பதுமைடா.

சித்ரகுப்தன்:அதுமட்டும் இல்லை இவன் சென்னையில் குடித்துவிட்டு, ஒருமுறை.......

யமன்: அடேய்,கஸ்மாலம், கேப்மாரி,முடிச்சவிக்கி,டாமர் உன்னை....

சித்ரகுப்தன்: மன்னாஆஆஆ.. என்ன ஆச்சு தங்களுக்கு உளறுகின்றீர்கள்.

யமன்(சுதாரித்து): ஒன்றுமில்லை,சென்னை என்றவுடன் அதன் பாஷை ஒட்டிக் கொண்டது.இதுக்கு தண்டனையாக இவனை நாலு கிங்கரர்களை விட்டு முள்ளுச் சவுக்கால் பரேட்டாவைப் போல அடித்து புரட்டி எடுங்கள்.

சித்ரகுப்தன்: மன்னா இதையும் கேளுங்கள்,கல்பாக்கத்தில் இவன்........

யமன்: அடேய் போதும், போதும் இந்தக் குற்றத்திக்கே இவன் நரகத்தில் பல ஆண்டுகள் தண்டனை அனுபவிக்க வேண்டும்.இதுக்கு தண்டனையாக இவனை எண்ணைச் சட்டியில் போட்டுப் பொறிக்க வேண்டும்.

சித்ரகுப்தன்:இது மட்டும் அல்ல மன்னா, சிங்கப்பூரில் இவன் பதிவு என்ற பெயரில் கண்டதையும் எழுதி,தானும் குழம்பி,மற்றவர்களையும் குழப்பி உள்ளான்.ஒரு முறை இவன் பதிவர்களிடம்......

யமன் : அடேய்ய்ய், மேலே சொல்லதே,என் வாயில் கெட்ட வார்த்தை வந்துவிடும்,இதுக்கு இவன் நாவை அறுத்துச் சுக்கா வறுவல் பண்ணுங்கள்.

நான்: என்னது இது சின்னப்புள்ளைத்தனமா இருக்கு. இதுக்கு முன்னால இவரு புரோட்டாக் கடையில் மாஸ்டரா இருந்தாரா?. வறுக்கனும்,பொறிக்கனும்,கைமா போடனும்,வறுவல் போடனும் அப்படின்னு தீர்ப்பு சொல்றார்.

யமன் : அடேய் நரனே. என்ன தைரியம் இருந்தால் என்னை புரோட்டா மாஸ்டர் என்பாய். இதுக்கு உனக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும்.

கிங்கரன்: கேட்டாயா, வாயை வைச்சுக் கிட்டு சும்மாயிருந்தா,இப்படி நடக்குமா?

நான் : இல்லைனாலும்,அடப்போய்யா.. நாங்க எல்லாம் எத்தனை பேரைப் பார்த்துருக்கேம்.

சித்ரகுப்தன்: மன்னா,என்ன ஆழ்ந்த யோசனையில் ஆழ்ந்து விட்டீர்கள்.

யமன்: இந்த நரனுக்கு கடுமையான தண்டனை கொடுக்கவேண்டும், என்ன தண்டனை என்ற குழப்பத்தில் உள்ளேன்.

நான்: அப்பாடா, வந்த வேலை முடிஞ்சது. எதே நம்மளால முடிஞ்சது. குழம்பி தீர்வதுக்குள் எஸ் ஆகனும். எப்படிய்ய்ய்.

சித்ரகுப்தன்: மன்னா, இந்த மூன்று தண்டனைகளும் ஒரே காலத்தில் கொடுப்போம். அல்லது தண்டனைக் காலத்தை இன்னமும் அதிகரிப்போம்.

நான்: அடடா, மன்னர் குழம்பினாலும் இந்த அல்லக்கைகள் விடாது போல இருக்கே. சரி சமாளிப்போம். எவ்வளவே பார்த்துட்டேம்,இது என்ன..

யமன்: மிக மிக கடுமையான தண்டனையாக இருக்கவேண்டும்,அதைப் பார்த்து எவனும் என் முன் வாயைத் திறக்கக் கூடாது.

நான் : .... நாட்டுல ... ஆட்சியில அமைச்சரா போடுவாரா? வாயைத் திறக்காமல் இருக்க...

கிங்கரன்: அடேய் உன் தப்புக்கள் எண்ணிக்கை கூடிக் கொண்டே போகின்றது.வாயை மூடு.

யமன்: ஆகா கண்டுபிடித்து விட்டேன், மிக கொடுமையான தண்டனை, யாரும் வழங்காத தண்டனை. அற்புதமான, ஆளைப் பையித்தியம் பிடிக்க வைக்கும் தண்டனை.

சித்ரகுப்தன் : ஆவலுடன் மன்னா என்ன அது மன்னா, சொல்லுங்கள்.

நான்: அடாடா,வில்லங்கமா இருக்கும் போல, சரி பொறிக்கறது வீட பெரிசா என்ன தண்டனையைத் தரப்போறானுங்க.

யமன்: டேய் நரனே, அடுக்கடுக்காய் பாவங்கள் பண்ணியது இல்லாமல்,என்னையே கிண்டல் பண்ணத் துனிந்த உனக்கு அதிக பட்ச தண்டனை வழங்குகின்றேன். இதை அனுபவித்து நீ பைத்தியம் பிடித்து அனு அனுவாய் சித்தரவதைப் படுவாய்.

நான் : என்ன தண்டனைன்னு சொல்லாம, புதிர் போட்டா எனக்கு என்ன ஜோசியமா தெரியும்.

யமன்: கோபமாக,சத்தமாக எழுந்து நின்று, அடேய் நரனே, உனக்கு இந்த தண்டனைதான் பொருத்தம். நீ இங்கு இருக்கும் காலம் எல்லாம் தினமும், நீ எழுதிய பதிவுகள் எல்லாத்தையும் நீயே உக்காந்து படிக்க வேண்டும். இதுதான் நான் உனக்கு வழங்கும் தண்டனை.

நான் : பதட்டமாக, சத்தம் போடத்துவங்கினேன்.அய்யோ அய்யோ அது மட்டும் வேண்டாம், நீங்க சொன்ன எல்லா தண்டனைகளும் ஒட்டு மொத்தமாக தாருங்கள், ஆனா இந்த தண்டனை மட்டும் வேண்டாம் என்று கத்தி கண்விழிக்கின்றேன்.

(பக்கத்தில் படுத்துருக்கும் தங்கமணி, அப்பப்பா!! தூக்கத்தில் கூட பதிவா? உங்களுக்கு பைத்தியம்தான் போங்க என்று அங்காலாய்த்துத் திரும்பிப் படுக்கின்றார்).

டிஸ்கி: சும்மா கடவுள்,கோவில் குளம்ன்னு போடாம. நகைச்சுவையா ஒரு சின்ன பதிவா
போடலாம்ன்னு பார்த்தா! அப்படியே எனது கற்பனை வளம் ஊறிப் பெருக்கு எடுத்ததில் பெரிதாகி விட்டது. எனக்காக எவ்வளவே சகிச்சுக்கிற நீங்க, இதையும் சகிக்க மாட்டீர்களா?. ஆனா ஒன்னுங்க, என் பதிவை விடாம படிக்கின்ற, நீங்க எல்லாரும் ரொம்பாஆஆஆ நல்லவங்க......... நன்றி. தொடராது. (ஹி ஹி தொடரும் போட்டு பழக்க தோசம்தான் )

Thursday, February 18, 2010

கடவுளும் கோவில்களும் ஒரு ஆராய்ச்சி - 8

எனது முந்தைய பதிவுகளின் சுருக்கமாக சாராம்சத்தைக் கூறி, நாம் முக்கியமான கட்டத்தில் நுழைவேம். முதலில் நான் கடவுள் என்பது மனிதனின் பயம் மற்றும் தேவைகளின் அடிப்படையில் அமைந்தது என்று கூறினேன். இது ஆதிமனிதனின் சித்தாந்தம். பின்னர் கடவுள் என்பது ஒரு சக்தி என்று கூறினேன்.இது தத்துவ ஞானிகளின் கருத்து.இது தான் நாம் விவாதிக்கும் விஷயம். அதன் பின் கடவுளின் வடிவம் மற்றும் புறத்தோற்றங்களைப் பற்றிக் கூறினேன். இது காலம் மாற, மாறக் கூடிய ஒரு விஷயமாகக் கருதலாம்.
கடவுளின் வழிபடும் வடிவங்கள், காலம்,இடம்,சூழல் மற்றும் மனிதர்களின் குணாதியசங்களுக்கு ஏற்றவாறு வேறுபடுகின்றது என்பது ஒரு கருத்து. இந்த கட்டுரையில் ஒரு விஷயம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும். கடவுள் என்பது வேறு, வழிபடும் கடவுள் என்பது வேறு. கடவுள் என்பது எங்கும் நிறை சக்தி,வழிபடும் கடவுள் என்பது அவரவர் மன நிலைக்கு ஏற்ப மாறுபடும் ஒரு தன்மை, அல்லது பழக்கவழக்கள் காரணமாய் அமைந்த விஷயம். ஆனால் ஒன்றை நாம் கண்டிப்பாய் உணர்தல் வேண்டும். கடவுளும்,வழிபாடுகளும் வேறு வேறாய் இருக்கலாம். ஆனால் பரம்பொருள் என்ற சக்திமூலம் ஒன்றுதான், அது அல்லா,பரமபிதா அல்லது பராசக்தியாகக் கூட இருக்கலாம். சக்தி ஒன்றே எனத் தெரிதல் வேண்டும். சக்தி என்பது அம்சம், வழிபாடு என்பது சாரம், இரண்டும் இணைந்தது நம் நம்பிக்கை என்பதின் சாராம்சம்.
எந்த சக்தியாக இருந்தால் கூட நமது நம்பிக்கை இல்லை என்றால் அது வீணாய்ப் போகும். ஒரு இறை சக்தியை நாம் நம்புகின்றேம் என்றால் அதன் மீது நமது பூரண நம்பிக்கையுடன் இருத்தல் வேண்டும். நம்பிக்கை மட்டும் இல்லாது நமது செயலும் அர்ப்பணிக்க வேண்டும். நாம் நம் கடமையை அவனிடம் பூரண நம்பிக்கையை வைத்து செயல்பட வேண்டும். அப்போதுதான் அதன் பரிபூரண பலன் நமக்கு கிட்டும். எந்த சிலை வடிவம் ஆனாலும் சரி, எந்தக் கடவுள் ஆனாலும் சரி,தேவதைகள் ஆனாலும் சரி, மகான் கள் ஆனாலும் சரி, இறை சக்தி ஒன்றே, அது இங்கும்,எங்கும் ஏன் நமக்குள்ளும் வியாப்பித்து இருக்கின்றது என்பதுதான் உண்மை. ஒரு சக்தியின் அம்சங்கள்தான் இவை எல்லாம். இந்த பிரபஞ்சம் முழுதும் சக்தியால் பின்னப்பட்டுள்ளது. ஒரு சக்தி மறு சக்தியாக மாறுகின்றது. அது அழிவதில்லை. குறைவது இல்லை. செயல், சக்தி இவை இரண்டும் ஒன்றுடன் ஒன்று நெருக்கமாக பின்னப் பட்டுள்ளது. செயலின் விளைவு சக்தி, சக்தியின் விளைவு செயல். பூமி,சூரியன்,கோடிக்கணக்கான நட்சத்திரங்கள்,காலக்ஸிகள், பால்வெளிகள் ஆகியன யாவும் சுழற்ச்சி என்னும் செயலில் ஈடுபடுவதால், ஈர்ப்பு மற்றும் மின் காந்த சக்திகள் தோன்றுகின்றன.இந்த சக்தி மற்றவைகளின் சுழற்ச்சிக்கு ஆதாரமாய் விளங்குகின்றது. ஆகவே செயல்,சக்திக்கும்,சக்தி செயலுக்கும் ஆதாரமாய் விளங்குகின்றது. இதை நாம் நம் பரிமாணத்தில் பார்த்தால், நம் செயல்கள் தான்,நமது வாழ்க்கைச் சுழற்ச்சிக்கு ஆதராமாய் விளங்குகின்றது. நல்ல செயல்கள், நல்ல சக்திக்கும், தீய செயல்கள் தீய சக்திக்கும் துணை போகின்றது. இங்கு தீய சக்தி என்பது சக்திக் குறைபாடு என்று கொள்ளலாம். நமது உடலின் சக்திக் குறைபாடு என்பது நோய் என்று கொள்ளப்படுகின்றது. நல்ல செயலின் மூலம் கிடைக்கும் சக்தி,நல்ல வளர்ச்சி. நல்ல சக்திமேன்மையடையும் போது உடல் ஆரோக்கியமாய் உள்ளது. தீய செயல்களின் காரணமாய் சக்தி விரயமாகி உயிர் சக்தியின் ஆதாரம் குறைந்து சக்திக் குறைபாடு (நோய்கள்) வந்தடைகின்றன. ஆக நல்ல செயல்கள் தான் சக்தி மிக வழியாகும்.இந்த நல்ல செயல்களைக் கூட்ட நமக்கு வழிபாடுகள் துணை புரிகின்றன. ஆக செயல் என்பது வழிபாடு, அதன் விளைவாய் வரும் சக்தி இறைநிலை என்று கொள்ளலாம்.

இந்த வழிபாட்டில் நிறைய நிறைகள், குறைகள் உள்ளன. அது அவரவர் மனநிலை, வாழிடம்,சூழ்நிலை ஆகியவற்றைப் பொறுத்து அமையும். கோடைவெப்பம் நிலவும் இந்தியாவில் பானகமும், நீர்மோரும் தாக சாந்திக்காய், உடல் உஷ்ணத்தைக் கட்டுப்படுத்த வழிபாட்டுப் பொருளாய் உள்ளது. குளிர் நாடுகளான மேலை நாடுகளில் உடல் உஷ்ணத்தைக் கூட்ட வைன் வழிபாட்டில் பயன்படு பொருளாய் உள்ளது. இதில் வித்தியாசம் பார்ப்பது பேதமை. அது போலத்தான் கடவுள்களில் வித்தியாசமும், ஏற்றத்தாழ்வும் பார்ப்பது பேதமை. எல்லாக் கடவுளும் ஒரு சக்தி மூலத்தின் வடிவங்கள் என்ற உண்மை புரிந்தால் இந்தப் பேதமை விலகும். இதுதான் இந்தக் கட்டுரையின் சாராம்சம். இதை எப்படி நிறுப்பிப்பது? அல்லது இதை எப்படி புரியவைப்பது? என்ற கேள்விகளைப் புறந்தள்ளி, நாம் இதை எப்படி உணருவது என்று சிந்தியுங்கள். பரமபிதாவும் அல்லாவும் ஒன்றா?. சிவனும் ஏசுவும் ஒன்றா என்று கேட்டு நாம் சிந்திக்கத் தொடங்கினால் நாமும்,கடவுளும் ஒன்றே என்ற உண்மை புரியும். நான் கடவுள், நீங்கள் கடவுள். ஆனால் புரிதலும், செயலும் தான் வித்தியாசம். யேசுவின் செயல் அவரைக் கடவுள் ஆக்கியது,யூதாஸின் செயல் அவனைத் தூரோகியாக்கியது. ஆக நமது செயல் தான் நம்மைக் கடவுள் மற்றும் சக்தி மூலத்திடம் இருந்து தனிமைப் படுத்துகின்றது. இதை நாம் எவ்வாறு உணர முடியும். இதை நான் விளக்குகின்றேன். நீங்கள் கவனமாக உங்களுக்குள், கேள்விகள் கேட்டு உணருங்கள். உணர்ந்தவைகளை உங்களிடமும்,என்னிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள். நான் கூறியவற்றில் எதோனும் மாற்றுக் கருத்து இருந்தால் கூறுங்கள், நானும் திருத்திக் கொள்கின்றேன். இப்போது நாம் சக்தி ஒன்றுதான் என்பதுக்கு ஆதராமாய் பல தகவல்களைக் கூறுகின்றேன். இதை நீங்கள் சிந்தித்து, புரிந்து உணருங்கள்.


இந்த பிரபஞ்சம் முழுதும் சக்தி மயமாய் ஆனது. ஒரு சக்தி,பல சக்தியாய் மாறுகின்றது. ஒன்று பலவேறாய் விளங்குகின்றது. பொளதீக அடிப்படையில் பார்த்தால், அனுக்கருவில் உள்ள நியூட்ரான் கள்,எலட்ரான் கள் மற்றும் புரோட்டான் கள் சுழற்ச்சியால்,சக்தி உருவாகி அது பிரபஞ்சத்தில் ஈர்ப்பு சக்தியாய் மாறி, பல பால்வெளிகளைச் சுழல வைக்கின்றது. இந்த பால்வெளிகளின் சுழற்ச்சி,ஈர்ப்பு சக்திக்கு காரணமாய்ப் பல சூரியன் கள் மற்றும் நட்சத்திர சுழற்ச்சிக்கு ஆதாரமாய் உள்ளது. இந்த சூரியனின் சுழற்ச்சி ஈர்ப்பு சக்தி, பல கோள்களின் சுழற்ச்சிக்கு ஆதராமாய் உள்ளது. கோள்களில் பூமியை எடுத்துக் கொண்டால், அதன் சுழற்ச்சி,நமக்கு பருவ காலங்கள், உயிரியல் சூழ்நிலை ஆகியவற்றைக் கொடுக்கின்றது. ஆக எல்லா மட்டத்திலும் சக்தி பூரணமாய் உள்ளது. இவற்றின் ஆக்கமும்,அழிவும் சக்திதான் காரணம் ஆகும். இதன் பெயர்கள் வேறு, வேறாய் கொள்ளப் படுகின்றது. ஈர்ப்பு சக்தி, அயன சக்தி, மின் சக்தி என்றும் இந்த சக்தியால் வெளிப்படும் அலைகள் அவற்றின் தன்மைகளுக்கு ஏற்ப,ஆல்பா,பீட்டா,காமா என்று அழைக்கப் படுகின்றது. இந்த சக்தி வெளிப்படும் அலைகள் கதிர்வீச்சு எனவும், அதன் தன்மை,நிறம், குணாதியசங்கள் ஆகியனவற்றைப் பொறுத்து அவற்றின் பெயர்கள் வேறு, ஆனால் மூலம், சக்தி ஒன்றுதான். இதன் மூலசக்தி நாம் எலட்க்ரான், நியூட்ரான் மற்றும் புரோட்டான் கள் சுழற்ச்சி என்று பார்த்தோம் அல்லவா, அதன் மூலசக்தி நியூக்கியேலஸ் என்னும் அனுக்கருப்பொருள். இந்த அனுக்கருப்பொருள் அமினோ அமிலங்களைக் கொண்டுள்ளது. இந்த அமினோ அமிலங்களும் உட்பொருளாக மறுபடியும் இந்த அனுக் கொள்கையைச் சார்ந்துள்ளது. இதில் இருந்து பிரபஞ்சம் முழுதும் சக்தி என்னும் மூலங்களால் ஆனது என்றும்,அது செயலின் விளைவு என்றும் பார்த்தோம் அல்லவா? இந்தக் காட்சியை அப்படியே வழிபாட்டுக்கடவுளுடன் ஒப்பிட்டுப் பாருங்கள். அதாவது வழிபாட்டுக்கடவுள் என்பது ஒரு மூலத்தின் அம்சம் என்பது போலக் கொண்டால் எல்லா வழிபாட்டுக் கடவுளும் ஒரு மூலத்தின் அம்சமாகத் தான் இருக்க முடியும். இந்த மூலங்களின் அம்சம் பரம்பொருள் என்னும் சக்தி மூலமாகக் கொள்ளலாம். இந்த பிரபஞ்ச ஆதரத்தை நன்றாகக் கவனத்தில் கொள்ளுங்கள். இதுதான் மூலமும், நம் உடலின் செயல்பாடும் ஆகும். இதை நான் பின்னால் விளக்குகின்றேன்.இதை ஒவ்வெரு ஆதராத்தின் போதும் பார்ப்போம். நன்றி தொடரும்.

டிஸ்கி: நான் கூறுவதைப் போல சக்தி, மற்றும் கடவுளை மட்டும் பகுத்து உணருங்கள். மாறாக மனம்,ஆன்மா, வாழ்க்கை ஆகியவனவற்றை புரிதலோடு நிறுத்திக் கொள்ளுங்கள். இவற்றை வாழும் சூழ்நிலையில் ஒப்பீடு செய்தால் அது நம் வாழ்வின் சுவாரஸ்யத்தைக் குறைத்து விடும். மனம்,செயல் தன்மை போன்றவற்றை இனி வரும் பதிவுகளில் கூறும் போது, அதை மேம்போக்காக மட்டும் பார்க்கவும்.உங்களிடமும்,உங்களை சுற்றி உள்ளவர்களிடம், உறவுகளிடமும் கூர்ந்து கவனிக்காதீர்கள். இது வாழ்க்கைக்கு ஆபத்து. ஆகவே கடவுள், நம் வாழும் முறை ஆகியனவற்றை மட்டும் உணருங்கள். நன்றி, மொத்த யோசித்தால் வெறுமை மட்டும் தட்டும். இது நல்லது அல்ல. ஆகவே இதை நாம் விவேகமாக மாற்றி வாழும் முறைக்காக சொல்கின்றேன். நன்றி.

Wednesday, February 17, 2010

கடவுளும், கோவில்களும் ஒரு ஆராய்ச்சி - 7

நான் முன்னேர்களின் இந்த ஆழ்ந்த அறிவைப் பற்றிக் கூறினால் அதற்கு ஒரு சில பதிவுகள் பத்தாது. நிறைய எழுத வேண்டும். அதில் பல உங்களுக்கு தெரிந்து இருக்கும் என்று நம்புகின்றேன். ஆதலால் சிலவற்றை மட்டும் கூறி கட்டுரையைத் தொடங்குகின்றேன். அறுபதுகளில் இந்தியாவைக் காலரா,பிளேக் மற்றும் பெரியம்மை பரவிய சமயம்,அப்போதுதான் நம் எல்லைக் காவல் தெய்வங்களான மாரியம்மன்,காளியம்மன் போன்றவைகளின் பூஜை வழிபாடுகள் மிண்டும் பிரபலமடைந்தன. இது ஏன் என்றால் சக்தி என்பது மருத்துவ குணம் மிக்க வேப்பிலை மற்றும் மா இலைகளில் உள்ளது. தொற்று நோய்க் கிருமிகள் அண்டாமல் நம்மைக் காத்தன. இன்றைய தினம் மர்மக் காய்ச்சல் பரவியுள்ள நிலையில் மருத்துவர்கள்,சுற்றுப்புற ஆர்வலர்கள் பலரும் கொசுக்கள் மற்றும் கிருமிகள் அண்டாமல் இருக்க வேப்பிலை, மாம்பூ,வசம்பு கலந்த புகையை, மாலைவேளையில் போடச் சொல்கின்றார்கள். மாவிலை மற்றும் வேப்பிலையில் வரும் நுட்பமான வாசனை,கொசுக்களை விரட்டும் என்று சொல்கின்றார்கள். அம்மை,காலரா மற்றும் உஷ்ண சம்பந்தமான நோய்கள் பரவும் கோடைகாலத்தில் தான் இந்த அம்மன் பண்டிகைகள் வருகின்றது என்பதும் கவனிக்கத் தக்கது. நல்ல விஷயங்களை, மருத்துவக் குணங்களைப் பக்தியுடன் கலந்து கொடுத்தார்கள்,அப்போதுதான் மனிதன் பயத்துடன் ஒழுங்காக கடைப்பிடிப்பான் என்பது அவர்கள் எண்ணம்.

கிருமினாசிகள் கலந்த சானியை மொழுகுவது,மணம் பரப்பும் மலர்கள்,வீட்டின் வர்ணம் வெப்பம் இழுக்காத வெள்ளை, கூரையின் ஓடுகள்,பூஜைகள் மற்றும் சமையலில் மஞ்சளின் பயன்பாடு ஆகியன போன்றவை எல்லாம் அவர்கள் அனுவபப் பூர்வாய் கண்டு பிடித்த விடயங்கள் ஆக இருக்கலாம். ஆனால் உடல் உறுப்புகள் மற்றும் புறக்காரணிகள், சக்தி,கோவில்,சிலை வழிபாடு, கோள்களின் இயக்கங்கள் மற்றும் தன்மைகள் எவ்வாறு அறிந்தான் எனபது புதிர்.இது பற்றிப் பின்னர் பார்ப்போம். ஆனால் கடவுள் பற்றிய சில நம்பிக்கைகள்,வழிபாடுகள் யாவும் நமது மனதின் தண்மை மற்றும் பழக்க வழக்கங்கள் மூலம் தான் அமைகின்றன. ஒரு குறிப்பிட்ட சமயத்தில் அல்லது வழிமுறையில் நாம் பழகும் பழக்கங்கள் தான் நமது கண்மூடித்தனமான கடவுள் நம்பிக்கைக்கு வழிவகுக்கின்றன. நமது மதம்,கடவுள்,வழிபாடு யாவும் பழக்கத்தால் வருவபை. இந்த உணர்வினை நான் பெறுவதுக்கு காரணமாக ஒரு சம்பவத்தை நான் கூறுகின்றேன். என் அம்மா மிகவும் தெய்வ பக்தி மிக்கவர். பேருந்தில் பயணம் செய்யும் போது கூட ஜன்னல் வழியாக வழியில் வரும் கோயில்கள் எல்லாம் கும்பிட்டுக் கொண்டே வருவார். இந்தப் பழக்கம் கோவில்களைப் பற்றிய உண்மைகள் அறியாத வரை எனக்கும் இருந்தது. பேருந்தில் அமர்ந்தால் மரங்களையும்,வயல்களையும் வேடிக்கை பார்க்கும் நான் வழியில் எந்தக் கோவில்,சர்ச்,பள்ளிவாசல்,தர்க்கா வந்தாலும் கும்பிட்டுக் கன்னத்தில் போட்டுக் கொள்வது வழக்கம்.

எங்கள் ஊர் முருகன் கோவில்,காவல் நிலையத்தின் எதிரில் அமைந்துள்ளது. நான் இந்த இடத்தைக் கடக்கும் போது எல்லாம் கன்னத்தில் போட்டுக் கொள்வது வழக்கம். பின்னர் நான் சென்னை வந்த போது, தண்டையார்பேட்டை காவல் நிலையத்தின் அருகில் இருக்கும் அனுமார் கோவிலும், எலிபெண்ட் கேட் ரோட்டில் காவல் நிலையத்தின் அருகில் இருக்கும் கிருஷ்னன் கோவிலில் பேருந்தில் இருந்தவாறே கன்னத்தில் போட்டுக் கொள்வது தொடர்ந்தது. ஒரு முறை ஒரு காவல் நிலையத்தைக் கடக்கும் போது, நான் என்னை அறியாமல் கன்னத்தில் போட்டுக் கொண்டேன். உடனே நான் ஒரு நிமிடம் கூர்ந்து யோசிக்கத் தொடங்கினேன். அங்கு எந்தக் கோவிலும் இல்லை, ஆனால் நான் ஏன் வணக்கம் போட்டேன் என்று. பின்னர்தான் தெரிந்தது நான் செய்தது பழக்கத்தின் காரணமாக வந்த அனிச்சைச் செயல் என்று. (இது பின்னர் கோவில்கள் பற்றி ஆராயத் தொடங்கியது. இதுவும் சக்தி மூலங்களைப் பற்றி எழுதும் போது சொல்கின்றேன்). இந்த நிகழ்வு எனக்குள் ஒரு பெரிய மாற்றம் அல்லது தாக்கத்தை ஏற்படுத்தியது.பின்னர் தான் கடவுள் நம்பிக்கை என்பது வேறு, வழிபாடுகள் என்பது வேறு. நம் ஆழ்மனதில் கொண்ட நம்பிக்கைதான் கடவுள். அதன் மீது கொள்ளும் தொடர்புகள் தான் வழிபாடு. ஆனால் இந்த வழிபாடு என்பது பழக்கத்தால்,ஆழ் மனதுடன் தொடர்பு இல்லாமல் போய்,வெறும் அனிச்சைச் செயல் ஆகின்றது. வெறும் அனிச்சையாக மனதுடன் தொடர்பு இல்லாமல் செய்யும் போது,அது பயனற்ற ஒன்றாக ஆகிவிடுகின்றது. இப்போது நாகரீக உலகில் இந்த வழிபாடுகள் யாவும் கட்டாய முறைகள் ஆகி அது சடங்காக ஆகிவிட்டதால்,அதுவும் அனிச்சையாக செய்யும் பூஜைகள்,வழிபாடுகள்,தொழுகைகள் ஆகி அதில் பலனே அல்லது மன நிறைவே கிட்டுவது இல்லை. எனவே முன்னேர்கள் சொல்லிய மாதிரி முழு மனதுடன் அமைதியாக, வழிபடுவது,தொழுகை செய்வது ஆயிரம் மடங்கு பலனும்,மன அமைதியும் கிட்டும். நீங்கள் எப்போது எல்லாம்,சந்தோசம்,துயரம் போன்ற ஆழ்ந்த மன நிலையினை அடைகின்றீர்களே அப்போது எல்லாம் கடவுளை நினையுங்கள்,வணங்குங்கள் மன அமைதி கூடும். நாம் முன்னர் விட்ட இடத்திற்குச் செல்வேம். இனி கடவுள் என்பவர் பயத்தால்,ஆசையால் மனிதனுக்கு வந்த நம்பிக்கை என்று தொடரின் ஆரம்பத்தில் சொன்னேன் அல்லவா. அது ஆரம்ப கால கட்டத்தில் மனிதனுக்கும் கடவுளுக்கும் ஆன தொடர்புகள். பின்னாளில் இயற்கை,விலங்குகள் போன்ற அபாயங்களில் இருந்து தற்க்காத்துக் கொண்ட மனிதனின் சிந்தனைகள் விரிவடையத் தொடங்கின. பின்னர் அவன் தன்னை சுற்றியுள்ள இயற்கை, படைப்புக்கள் போன்றவற்றிக்கு மூலத்தைத் தேடத் துவங்கினான். இதுதான் கடவுளைத் தேடுதல் ஆரம்பமாகவும் இருந்தது. இந்தக் கடவுளைத் தேடும் போது ஒரு சக்தி மூலத்தைக் கண்டவுடன் அதுதான் கடவுள் என்றான்.பின்னர் அதன் சக்தி மூலம் வேறு ஒன்று என்று அறியும் போது அதுதான் கடவுள் என்றான். இப்படி அவன் சக்தி மூலங்களைத் தேடிக் கொண்டே செல்கையில் பல கடவுள்கள் தோன்றினர். இந்த வரிசையைப் பார்ப்போம். தொடரும். நன்றி.

டிஸ்கி: வேப்பிலை,மாம்பூ,வசம்பு கலந்த தூளை குமுட்டி அடுப்பில் போட்டு எரித்தாலும்(புகைப் போடுவது). அல்லது மாம்பூ,வேப்பிலை,வசம்பூ ஆகியவற்றைக் காயவைத்து பொடி செய்து சாம்பிராணித்தூளுடன் கலந்து,வெள்ளை மண்ணெய் அல்லது நல்ல எண்ணெய்யில் கலந்து, இரண்டு அல்லது மூன்று சொட் நறுமண பசை(செண்ட்)யும் கலந்து, பழைய ஆல் அவுட் அல்லது குட்னைட் ரீபீள் காலி குடுவையில் ஊற்றி வைத்தால், நல்ல உடலைக் கொடுக்காத கொசுவத்தி ரெடீ.(நன்றி ஜூ வீகடன்)

Friday, February 12, 2010

கடவுளும், கோவிலும் ஒரு ஆராய்ச்சி - 6

நான் ஆரம்பத்தில் இருந்து ஒரு விஷயத்தைக் கூறி வருகின்றேன். நமது கடவுள் நம்பிக்கை என்பது நம்பிக்கை மற்றும் பயம் காரணமாய்த் தோன்றும் ஒரு விசயம். இதை நீங்கள் ஒரு கோவிலில் முதன் முதலில் நுழையும் போது உணரலாம். முதலில் ஒரு பயம் கலர்ந்த திகைப்பு, பின் கடவுளிடம் நம்பிக்கை கொண்ட வணக்கம். பின்னர் தான் கோவில் மற்றும் அமைப்பு பற்றியும், மற்ற விசயங்களைக் கவனிக்கின்றேம். முதலில் வரும் இரண்டு உணர்வுகளும் காலம் காலமாய் நம் மரபு அனுக்களில் தீட்டப்பட்ட விசயம். இது நம்மையும் அறியாமல் வருவது. சில சமயம் பழக்கத்தால் வருவது, குழந்தையில் இருந்து நாம் பெரியோர்களைப் பார்த்துப் பழகிய பழக்கம் நம்மையும் அறியாமல் வரும். இந்த எனது கருத்துக்களுக்கு நான் இரண்டு உதாரனங்களைக் கொடுக்க விரும்புகின்றேன். ஒரு சமயம் நான் சென்னையில் இருந்து மூன்று மணி நேரப் பயணம் மேற்க் கொண்டேன். என்னுடன் கிறித்துவ நண்பன் டி.பி நாயகம் உடன் வந்தான். பேசிக் கொண்டு இருக்கும் போது, கடவுளைப் பத்தி பேச்சு வந்தது. நான் எனது கருத்துக்களைப் பற்றிக் கூறிக் கொண்டு இருந்தேன். ஊரும் வந்து இறங்கும் போது, எங்கள் அருகில் பக்கீர் போல இருந்த, முஸ்லிம் பெரியவர் ஒருவர் எனது தோளில் கைவத்து, இவ்வளவு சின்ன வயதில், எவ்வளவு யோசனை செய்கின்றாய் என்று சொல்லி, அல்லா உன்னைக் காப்பாற்றுவார் என்று கூறிச் சென்றார். அப்போது எனக்கு வயது 21.

எங்களின் பேச்சு கடவுள் பக்கம் வந்த போது கடவுள் என்பவர்,பயம் மற்றும் நம்பிக்கை அடிப்படையில் தான் வந்ததது என்று நான் விவாதிக்க, நாம் தவறு செய்தால் கடவுள் தண்டிப்பார் என்று நம்புவதும் ஒரு காரணம் ஆகும். அதற்கு ஒரு உதாரணம் சொன்னேன். அது என்ன என்றால், நம் நாட்டில் எல்லாரும் நாகப்பாம்பை, நல்ல பாம்பு எனவும், நாகம் தேவர்களில் ஒன்று எனவும். அம்மன் கையிலும், ஈசனின் தலையிலும், விஷ்னுவின் படுக்கையாகவும் இருக்கும். நிறையக் கடவுள்களுக்கு பாம்பு அருகாமையில் இருக்கும். இதில் கிறிஸ்த்தவர்களும் விதிவிலக்கு இல்லை. ஜரோப்பிய நாடுகளில் பெரும்பாலும் மக்களைக் கடிக்கும் வைப்பர் என்னும் விரியன் பாம்புகளை மேரி மாதா மற்றும் சூசையப்பரின் மீது போட்டு நடக்கும் ஊர்வலம் ஒன்று, இன்றும் நடக்கின்றது. ஆனால் பெரும்பாலும் அவர்கள் பாம்பை சாத்தானின் அம்சமாகப் பார்ப்பார்கள். இது ஆதாம், ஏவாளின் கதையால் விளைந்தது. இதுக்குக் காரணம் என்னவாக இருக்கும்? இது பற்றிய அலசல்தான் விவாதம். பாம்பு என்பது விஷம் கொண்ட பிராணி. கடித்தால் மரணம் நிச்சயம் என்பதும் உண்மை. ஆகவே பாம்பு அச்சத்தைக் கொடுக்கும் பிராணி என்பதில் சந்தோகம் இல்லை. ஆனால் கடவுளாக ஆக்கப் பட்டது எப்படி? சில சாத்தியக் கூறுகளை ஆராய்ந்தால் உண்மை புலப்படும்.

பாம்பு இரவு, பின் மாலைப் பொழுது, அதிகாலைப் பொழுது மட்டும் உலாவும் அல்லது இரை தேடும் பிராணி. பகலில் பெரும்பாலும் உறங்கும். மனிதர்கள் பெரும் பாலும் விளக்கு வசதி இல்லாத அந்தக் காலத்தில் பொழுது விடிந்தவுடன் வயல் மற்றும் வேலைக்குச் சென்று, பொழுது சாயும் சமயம் திரும்பி விடுவார்கள். பெரும்பாலும் மனிதர்கள் அந்தக் காலத்தில் இரவில் வெளி வரமாட்டார்கள். அனால் பாம்பு இரவில் நடமாடும். அப்போது மனிதர்களைக் கடிக்கின்றது என்றால் எப்படி?. அந்தக் காலத்தில் இரவில் நடமாடுவர்கள் பெரும்பாலும், திருடர்கள், தகாத உறவு கொள்வேர், குடிப்பழக்கம் உடையவர்கள் மற்றும் சூதடுவர்கள் தான் ஊருக்கு வெளியில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்க்கு செல்வார்கள். அப்போது அங்கு இரை தேடும் பாம்புகளின் கடிக்கு ஆளாகி உயிரை விடுவார்கள். இதனால் அவன் தவறு செய்தான் அதான் அவனைக் கடவுள் தண்டித்தார். தவறான பாதையில் செல்லும் ஒருவனைக் கடவுள் இப்படித் தண்டிப்பர் என்னும் நம்பிக்கை உருவாகி இருக்க வேண்டும். மனிதர்களில் ஒரு சிலரை அதிகாலையில் அது புத்தில் தஞ்சம் அடையும் சமயம் மக்களைக் கண்டால் ஓடி ஒளிந்து கொள்ளும். ஆக வயல் வேளைக்கு சென்ற நல்ல மனிதர்களை ஒன்றும் செய்ய வில்லை, ஆனால் இரவில் நடமாடும் தீயவர்களைக் கொன்று விட்டது. நல்ல ஒழுக்கங்களைக் கொண்டவர்கள் அல்லாது, தீய பாதையில் செல்வேரைத் தண்டித்ததால் அது நல்ல பாம்பு ஆயிற்று.ஆகவே இது கடவுளின் வடிவம் அல்லது தூதனாக்கப் பட்டது. புத்துக்கு அபிஷேகமும், நாகர் வடிவங்களும் கொடுக்கப் பட்டிருக்கலாம். இது ஒரு விதமான சிந்தனை.

ஆனால் இதுவே பின்னாளில் நம் முன்னேர்கள் இந்த பாம்புகள் பிண்ணிப் பிணைந்து காதல் செய்யும் வகையை உருவமாகச் செய்து, அதை அரச மரத்தின் அடியில் வைத்து வணங்கினால், பிள்ளைப் பேறு கிட்டும் என்றான். இது கொஞ்சம் திகைப்பு மற்றும் ஆச்சரியமான விசயம்தான். அவர்களின் அறிவுத்திறன் கட்டாயமாக நம்மை வீட மேம்பட்டதாகத்தான் இருக்கும். நம் முன்னேர்கள் நாம் நினைப்பதைப் போல முட்டாள் அல்லது பிற்ப்போக்கு வாதிகள் அல்ல.இந்த பிணைப்பு உருவத்திற்க்கு வணங்குதல் வேண்டும் என்று கூறி வணங்கச் சொன்னார்கள். இந்த விசயத்தில் தான் ஒரு ஆச்சரியம் என்ன என்றால் குழந்தை பிறப்பை ஏற்ப்படுத்தும் ஆர் எச் பேக்டர்கள், மற்றும் டி.என்.ஏ, ஆர்,என் ஏ மூலக்கூறுகள் யாவும் இந்த சிலை வடிவில் தான் பிண்ணிப் பினைந்துள்ளன.
இது மட்டும் அல்ல,முன்னேர்கள் தொலைநேக்கி போன்றவை இல்லாக் காலத்தில், குரு பெரிய கிரகம் என்றனர்,சனி நீல நிறமுடையவன் என்றனர், புதனுக்கு பச்சையும்,சூரியனுக்கும்,செவ்வாய்க்கும் சிவப்பையும் கொடுத்தனர். இராகுவும், கேதுவும் நிழல் கிரகங்கள் என்றனர். எதிர்புற இயக்கம் என்றனர். ஆனால் விஞ்ஞானம் இதை இப்போது உண்மை என்று கண்டுபிடித்தனர். சனி மந்தன் என்றும் மந்தமான கிரகம் என்றனர். ஆதுபோல ஆய்வாளர்களும் சனி ஒரு மந்த வாயுக்கள்,தூசுக்களால் சுற்றப் பட்டு நீல நிறமாக காட்சியளிக்கும் என்று அதன் படத்தையும் கொடுத்தனர். ஜீபிடர் பெரியது என்றும், செவ்வாய் சிவப்பு,சூரியன் நெருப்பு, புதன் கரும் பச்சை என படம் காட்டினர்.நெப்டீயூனும்,புளூட்டேவும் மற்ற கோள்களுக்கு எதிர் திசையில் சுற்றும் மறைவுக் கோள்கள் என்றார்கள். இது போன்ற ஒத்துமைகளைப் பார்க்கும் போது அவர்களின் அறிவு வியக்க வைக்கும். இல்லை நாம் நமது முன்னேர்கள் சொன்னதை இதனுடன் சம்பந்தப் படுத்தி ஒப்புமை கொள்கின்றேமா என்ற சந்தோகம் வரும். ஆனால் முன்னேர்கள் பல காலத்த்துக்கு முன்னரே இதை சொல்லி விட்டதால் இதை ஒப்புமை என்று சொல்ல முடியாது. பின்னர் எப்படிச் சாத்தியம் ஆகும்?, சிந்திப்போம், பின்னர் தீர்வும் காண்போம். தொடரும், நன்றி.

டிஸ்கி : வரும் ஞாயிறன்று சீனர்களின் புலிப் புத்தாண்டு பிறக்கின்றது. ஆதலால் எனக்கு அலுவலகம் வரும் செவ்வாய் வரை விடுமுறை. மீண்டும் உங்கள் அனைவரையும் புதன் அன்று சந்திக்கின்றேன். இனிய சீனப் புத்தாண்டு வாழ்த்துக்கள். நன்றி.

Thursday, February 11, 2010

மஞ்சள் கிழங்கு பச்சடி (அ) சப்ஜி

முன் குறிப்பு : சமையல் பதிவுகள் போட்டு மிக நீண்ட நாட்கள் ஆகின்றன, ஆதலால் மீண்டும் ஒரு வித்தியாசமான சமையல் பதிவு. இந்தப் பதிவைப் படிப்பவர்கள், படித்துப் பாருங்கள்,ஆனா சமைத்துப் பார்க்காதீர்கள், சமைத்தாலும் இரங்க மணிக்குக் கொடுக்காதீர்கள். அப்படிக் கொடுத்தால் முன்...பின் .... விளைவுகளுக்கு நான் கண்டிப்பாய்ப் பொறுப்பு அல்ல. (சும்மா ஒரு பில் டப்புதான் பயப்படாதீர்கள்.)

நான் திருப்போருரில் ஒரு நிறுவனத்தில் பணி புரிந்த சமயம், என்னுடன் பணி புரிந்த பல இராஜஸ்தான் பணியாளர்கள்,மிக விரும்பி சமைத்துக் கொடுத்தது இது. நிறைய நெய் தடவப்பட்ட அவர்களின் சுக்கா ரொட்டிக்கு இது சரியான சப்ஜியாக அமைந்தது. சுவையும் அருமை. அதை நான் உங்களுக்குச் சொல்கின்றேன். நானும் இதை முதலில் கேள்விப்பட்ட போது, இதையா என்று ஆச்சரியப் பட்டேன். ஆனால் நன்றாக இருந்தது.
நாம் பொங்கல் பண்டிகையின் போது பொங்கல் பானையில் கட்டி விட்டுத் தூக்கிப் போடும் பச்சை(இளம்) மஞ்சள் கிழங்குதான் இதில் முக்கிய அயிட்டம். இந்த பச்சை மஞ்சள் கிழங்கைப் பலர் தூக்கிப் போடுவார்கள்.சிலர் காய வைத்து அல்லது அப்படியே தேய்த்துக் குளிக்கப் பயன்படுத்துவார்கள். இந்த மஞ்சளில் தயிர்ப் பச்சடி மாதிரி செய்யும் சப்ஜிதான் இந்த பதிவு.பச்சை என்றால் காய வைக்காத மஞ்சள் கிழங்கு(நிறம் அல்ல)

தேவையான பொருட்கள் :

1.பச்சை அல்லது காயவைக்கதாத புதிய மஞ்சள் கிழங்கு 150 அல்லது 200 கிராம்,
2.பெரிய வெங்காயம் மூன்று,
3.தக்காளி மூன்று,
4.எண்ணெய் 5(அ)4 ஸ்பூன்,
5,சீரகம் ஒரு கைப் பிடி,
6.தாளிக்கும் பொருட்கள்,கறிவேப்பிலை.
7.வரமிளகாய்(அ)மிளகாய்ப் பொடி மூன்று (காரத்திற்க்கு ஏற்ப),
8.உப்பு (தேவைக்கு ஏற்ப),
9.தயிர் ஒரு கப்.
இதில் ஸ்பிரிங் ஆனியன் லீவ்ஸ்,பேபீ கார்ன், போன்றவை, பிரியப் படுவர்கள் ஒரு ரிச்சனஸ் ஆக சேர்க்கலாம்.

செய்முறை : முதலில் பச்சை (இளம்) மஞ்சள் கிழங்கைத் தோலுரித்துப் பின்னர் சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளுங்கள்,பின்னர் வெங்காயத்தைப் பச்சடிக்கு ஏற்றார்ப் போல நீளமாகவே அல்லது சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளுங்கள்.பின்னர் தக்காளியை எட்டுத் துண்டங்கள் அல்லது பொடிப் பொடியாக வெட்டிக் கொள்ளுங்கள். வெங்காயமும்,தக்காளியும் உங்களுக்கு எப்படி பிடிக்குமே அப்படி வதங்கும் வண்ணம் சிறியதாக வெட்டிக் கொள்ளுங்கள்.

முதலில் வாணலியில் எண்ணெய் விட்டு,சூடானதும் சிறிது கடுகு,வெள்ளுத்தம் பருப்பு, பெருங்காயத்தூள்,கருவேப்பிலை,மிளகாய் அல்லது மிளகாய்த்தூள் போட்டுத் தாளித்து,அதில் வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்,வெங்காயம் பொன்னிறம் ஆனவுடன், மஞ்சள் கிழங்கு துண்டுகளை எண்ணெய்யில் சிறிது வதங்க விடுங்கள்,இதில் தக்காளி மற்றும் உப்பு தேவையான அளவு சேர்க்கவும். நல்லா வதக்கவும். எண்ணெய் மற்றும் தக்களி விடும் தண்ணீரில் மஞ்சள் கிழங்கை நல்லா வதக்க வேண்டும், இது நல்லா வதங்கி சுருண்டு வரும் போது அடுப்பை அணைத்துச் சூட்டில் சிறிது வேக விடுங்கள். தயிர் இல்லாமல் சப்ஜியாகச் சாப்பிடுவர்கள் இரண்டு ஸ்பூன் நெய் விட்டும் வதக்கலாம், சுவை,மணம் கிட்டும்.

இது அடுப்பின் சூட்டில் இருக்கும் போது, கப் தயிரில் சிறிது தண்ணீர் விட்டு தளர்க்கமாக செய்து கொள்ளுங்கள்.அதிக தண்ணீர் இல்லாமல் அதே சமயம் கெட்டியாக இல்லாமலும் இருக்கட்டும். கைப் பிடி சீரகத்தை இரு கைகளிலும் நல்லா திருகி அல்லது தேய்த்து அதன் மேல் நார் இருந்தால் ஊதி அப்புறப் படுத்தி விட்டு, தயிரில் போடவும். ஆறிய சப்ஜியை தயிரில் போட்டுக் கலந்தால் மஞ்சள் கிழங்கு பச்சடி ரெடீய்ய்ய்ய்ய்ய்.சுவைக்கு ஏற்றவாறு பச்சடியில் உப்புப் போட்டுக் கொள்ளுங்கள்.

இதை ரொட்டி, மற்றும் சப்பாத்திக்குத் தொட்டுக் கொள்ளலாம். ஒரு சாப்பாட்டுத் தட்டின் அளவு இருக்கும் இராஜஸ்தான் சுக்கா ரொட்டியின் மீது இரண்டு ஸ்பூன் நெய் தடவி, சூடாக இதனுடன் தொட்டு சாப்பிட்டால் ஆலாதியாக இருக்கும். எனது நண்பர்கள் நாலு அல்லது ஜந்து ரொட்டிகளை பிய்த்துப் போட்டு அதனில் பச்சடியை கொட்டிப் பிசைந்து உண்பார்கள். என்னால் இரண்டு அல்லது மூன்று ரொட்டி சாப்பிடுவது சிரமம்.

பின் குறிப்பு : இந்த மஞ்சள் கிழங்கு மிகவும் சூடாண அயிட்டம்.அதாவது உடலுக்கு உஷ்ணம் என்று சொல்வார்கள்.அந்த உஷ்ணம் தணிக்கத்தான் நாம் தயிர், மற்றும் சீரகத்தைச் சேர்க்கின்றேம். இந்த கிழங்கு சப்ஜி அல்லது பச்சடி உடலின் உஷ்ணத்தையும், இரங்க மணிகளின் மூடையும் கிளப்பி விட வல்ல வயாக்கிரா பச்சடி. இப்ப எதுக்கும் முன் குறிப்பில் உள்ள கடைசி வரிகளைப் படித்துப் பார்த்து விட்டு, சமைப்பதா? வேண்டாமா? என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள்.
நன்றி.

Wednesday, February 10, 2010

நாயின் மீது நாய் வண்டி ஏற்றிய கதை

சாலைப் போக்குவரத்து பற்றிய தொடருக்கு சுசி அழைத்துள்ளார். நமக்கு இது பத்தி ஒன்னும் தெரியாது என்றாலும் தங்கை சொன்னா செய்து தான ஆகவேண்டும். ஆதலால் இந்தப் பதிவு. இது உங்களில் பலருக்கும் அனுபவம் இருக்கும்,ஆனாலும் எனது கருத்துக்களைச் சொல்கின்றேன். நம்ம கிட்ட காரு,பைக் எல்லாம் கிடையாது. இந்தியாவில் அதிகம் வசிக்கும் நடுத்தர வர்க்கத்து ஏழைகளில் நானும் ஒருவன். மாதச்சம்பளம் வாங்கி கணக்குப் பார்த்து செலவு செய்யும் வர்க்கம். சுருக்கமாக சொன்னால் அன்றாடம் காய்ச்சி. மாதத்தின் முதல் பதினைந்து நாள் நான் ஜதிராபாத் நிஜாம், மீதீ நாள் பரதேசி(பிச்சைக்காரனுங்க,சுசி ஒரு நூறு ரூபாய் இருக்குமா ஒன்னாம் தேதி தருகின்றேன் என்ற கட்சி). இதுதான் நம்ம லைப் ஸ்டைல். ஆனாலும் இந்தியாவில் இருக்கும் போது, என் அண்ணாவின் 1991 மாடல் பழைய கேபி 100 தான் நம்ம ஏரோப்பிளைன்ங்க. ரொம்ப அதிர்ஷ்டமான வண்டி என்னும் செண்டிமெண்ட் காரணமாக இன்னும் மாத்தாம வைச்சிருக்கோம். நான் முதலில் ஓட்டிப் பழகியதும் இந்த வண்டியில் தான். ஒரு முறை தவிர எப்போதும் இந்த வண்டி கீழ விழுந்தது இல்லை. பிரேக் அடிச்சா,அடித்த இடத்தில் அப்படியே நிற்க்கும். ஆனா பாருங்க நமக்கு எப்போதும் பிடித்தது,இப்போதும் போவது நடராஜா சர்வீஸ்தான்,அதுதாங்க கால் நடை.

எனக்கு நடப்பது ரொம்ப பிடிக்கும்,விட்டா இரண்டு, மூன்று கிலோமீட்டர் கூட நிற்காம நடப்பேன். அதுவும் எதாவது கற்பனை பண்ணிக் கொண்டு நடப்பதில் ஒரு சுகம்தான்.மத்த எல்லாரையும் வீட நடராஜ சர்வீஸ்ல போறவங்களுக்கு கொஞ்சம் சொளரியங்கள் அதிகம். சாலையில் பராக்குப் பார்த்துக் கொண்டு,கடை மற்றும் போற,வர்றவங்களை வேடிக்கை பார்த்துக் கொண்டு ஜாலியா போலாம்.எங்க வேணாலும் நின்னு,பானிபூரி,பேல்பூரி,மசால் கடலை,வேர்க்கடலை,உப்புக்கடலை,மாங்காய்,காரப்பொரி,சுண்டல்ன்னு எதுவேணா கொறித்துக் கொண்டு நிற்கலாம்,நடக்கலாம்.நான் சிறுவயதில் இருந்து தெருசுத்தி நல்ல அனுபவம் இருக்குங்க.அதுனால தான் எனக்கு மார்க்கெட்டிங் துறையில் வேலை கிடைத்த ஆரம்ப காலங்களில் கால்நடையாக (எருமை இல்லிங்க) சென்னை முழுதும் சுத்தி இருக்கங்க.மவுண்ட் ரோடு ஆரம்பம் சிம்சன் முதல் தேனாம்பேட்டை வரைக்கும் நடந்தே கஸ்டமர் கவர் பண்ணிய காலமும் உண்டு. தேனாம்பேட்டை,ஆழ்வார்பேட்டை,மயிலை,அடையார்,பெசண்ட நகர்.பாரிஸ் என சென்னையில் என் கால் படாத இடம் இல்லை. அண்ணா நகர்,அம்பத்துர் தொழில்பேட்டை,ஆவடி எல்லாம் சுத்தி இருக்கின்றேன்.ஆந்திராவில் ஜெடிமெட்லா,விஜயவாடா,பாண்டி, பெங்களுர்,கேரளாவில் பாலக்காடு,திருச்சூர்,எர்ணாகுளம், கொச்சின் என அனைத்து தொழிற்பேட்டைகளும் நான் நடந்த இடங்கள்.தமிழ் நாட்டில் திருச்சி,கோவை, மதுரை,தஞ்சை,திருநெல்வேலி,நாகர்கோவில் ஊட்டி என சுத்தாத ஊர்கள் இல்லை. எல்லாம் தொழில்முறைப் பயணத்துடன் இணைந்த கோவில்கள் பயணமும் ஆகும்.


அப்புறம் சில காலம் நான் என் நண்பன் டி.பி.நாயகம்(டூ வீலருக்கு டிரைவர் வச்ச ஆளு நான்) உடன் இணைந்து ஸ்பெண்டர் பிளஸ்ஸில் சென்னை முழுதும் சுத்திய அனுவம் உண்டு.அவனும் நல்லா பொறுமையா ஓட்டுவான்.என்ன ஒன்னு பக்கத்தில ஒரு பிகர் ஸ்கூட்டியில் போனா வண்டி தான வேகமா போக ஆரம்பிச்சுடும்.நானும் அவனைத் திட்டி நிதானத்துக்கு கொண்டு வருவேன்."அவன் நான் ஓட்டவில்லை,வண்டி அப்படி பழகிவிட்டது" எனக் கிண்டல் அடிப்பான்.இப்படி எத்திராஜ்,ஸ்டெல்லாமேரிஸ்,குயின்மேரிஸ் பெண்ணுக எல்லாருக்கும் எஸ்கார்டு டூட்டீ கூட பார்த்துருக்கேம். (எல்லாம் பழைய கதைடா பேராண்டி).

எனக்கு வேகமாக நடப்பது என்பது இயல்பான விஷயம்.பெரும்பாலும் நான் நடக்கும் போது செய்வது எல்லாம் அனிச்சை செயல்தான்.மனம் ஒரு இடத்திலும்,கால்கள் ஒரு இடத்திலும் இருக்கும். பல சமயங்களில் பழகிய முகங்கள் வந்தாலும், என்னைப் பார்த்துச் சிரித்தால் கூட,நானும் அவர்களின் முகத்தைப் பார்த்து இருப்பேன். ஆனால் சிந்தனை வேறு இடத்தில் இருப்பதால்,கவனத்தில் இல்லாது போய்விடுவேன்.வணக்கம் சொன்னாக் கூட கண்டுக்காம போகின்றாய் என்று நண்பர்களின் குறைபாட்டுக் ஆளானதும்,பின் என் நிலையைக் கூறியதும் சமாதானம் ஆனதும் உண்டு.என்னுடன் நடக்கும் நண்பர்கள் பலரும் என்னை அப்போதுக்கு அப்போ "ஓடாதட நில்லு" என்று கையைப் பிடித்து நிறுத்துவது உண்டு.தங்கமணி வந்தா பாவம், எப்படி நடப்பான்னு தெரியலை.பலர் உன் துணைவி பாவம் என்று கிண்டலடித்தும் உண்டு.பேசாம தங்கமணி கையைப் பிடித்துக் கொண்டு நடந்தா கொஞ்சம் மெதுவா நடப்பேன் என்று நினைக்கின்றேன்.சரிங்க விஷயத்துக்கு வருவேம்.


நடக்கும் போது என்னை மாதிரி இல்லாம,சாலையில் கவனம் தேவை.எதிரில் வருவர்களைப் பார்த்தும்,ஒதுங்கியும் கவனமாக நடக்க வேண்டும்.வேகமாக இல்லாமலும்,மெதுவாக இல்லாமலும்,மிதமான வேகத்தில் நடப்பது,இதயத்திற்க்கு நல்லது.சாலையைக் கடக்கும் போது குறிப்பாக சிக்னலில் கடப்பது மிகவும் நல்லது.இருபுறமும் கவனித்து வாகனங்கள் வந்தால் கடந்து செல்லும் வரை,அல்லது அதன் வேகத்தை அனுசரித்துக் கடப்பது மிகவும் நல்லது.பெரும்பாலும் வாகனங்களை முதலில் செல்லவிட்டுக் கடப்பது நன்மை பயக்கும். ரோட்டில் நடக்கும் போது இடதுபுறம் செல்வது நண்மை பயக்கும். செல்லும் இடம்,பாதை மற்றும் பயணிக்கும் இலக்கு ஆகியனவற்றில் கவனத்தில் கொள்வது நலம்.நடக்கும் போது எதாவது பிடித்த பாட்டை மனதுக்குள் ஹம் செய்து நடப்பது,நம் களைப்பைப் போக்கும். அதுக்காக சத்தமா பாடி தர்ம அடி வாங்கக் கூடாது.எனக்கு மெலோடியான சோகப் பாடல்களை ஹம் செய்து தனிமையான இரவு ரோட்டில் நடக்கப் பிடிக்கும். ஈராமான ரோஜவே,ஓராயிரம் பார்வையிலே,நான் பாடும் மொளன ராகம்,மன்றம் வந்த தென்றலுக்கு,நான் ஒரு இராசியில்லா ராஜா,வசந்த ஊஞ்சலில்லே(இரயில் பயணங்களில்) போன்ற மொலோடிப் பாடல்கள் தான் என் ஹம்மிங்கில் இடம் பெறும்.


இரண்டு சக்ர வாகனங்களில் பயணிக்கும் போது அத்தியாவசியமான காரணங்கள் இன்றி 60 கிலோமீட்டர் வேகத்திற்க்கு மேல் போகக் கூடாது.55 கிலோமீட்டர் வேகம் சரியானது.இது மைலேஜ் அளவையும்,வண்டியின் மீதான நமது கட்டுப்பாட்டையும் அதிகரிக்கும்.நான் கல்பாக்கத்தில் இருந்து திருப்பேரூர் சென்று வேலை பார்த்த போது,தினமும் கிழக்கு கடற்கரை சாலையில் முப்பது கிலோமீட்டர் பயணம் செய்வேன்.(போகவர 60) காலையில் அலுவலகம் செல்லும் போது 70 முதல் 80 கிலோமீட்டர் வேகத்திலும்,மாலையில் 60 முதல் 70 கிலோமீட்டர் வேகத்திலும் பயணிப்பது வழக்கம்.ஒருமுறை எனக்கு இரண்டாம் சுற்று ஏழரை சனிதிசை ஆரம்பித்த போது,ஒரு தெரு நாய் குறுக்கில் வந்து, நாயின் மீது ஏறி கீழே விழுந்தேன்.வண்டியுடன் நானும் சில அடி தூரங்கள் இழுத்துச் செல்லப் பட்டேன்.என் அதிர்ஷ்ட வண்டி,அடி முழுவதையும் தான் வாங்கி என்னைக் காப்பாற்றியது.வண்டியில் பெட்ரோல் டாங்க் கவரில் வைத்து இருந்த ரெயின் கோட்,என் மார்பில் விழுந்த பலமான அடியைத் தாங்கியது.வண்டி சிராய்த்துக் கொண்டு போகும் போது நான் வண்டியின் மேல் படுத்த நிலையில் ஹாண்டில் பாரைக் கெட்டியாக பிடித்த நிலையில் பெரும் பாலும் இருந்தால் எனக்கு சிராய்ப்புக்கள் கம்மி. வண்டி சேப்டி கார்டு முற்றிலுமாக தேய்ந்து வளைந்து போனது.எனது பேண்ட் தேய்ந்து கிழிந்து நூலாகப் போனாலும் என் தொடையில் சிறிய சிராய்ப்புக்கு காயம்தான்.கண்ணாடி, இண்டிகேட்டர்கள்,முகப்பு விளக்கு என அனைத்தும் நெறுங்கியது.எனது செருப்பு என் காலை விட்டு அகலாமல்,அது முற்றிலும் தேய்ந்து, பிரஷ் மாதிரி ஆனாலும்,என் கால் பாதத்தில் ஒரு அடி கூட படாமல் காப்பாற்றியது.பின்னாலும்,முன்னாலும் வாகனங்கள் வராமல் இருந்தது என் அதிர்ஷ்டம் என்று சொல்ல வேண்டும்.எல்லாம் வல்ல கடவுள் செயல் என்பதைக் காட்டிலும் வேறு என்ன சொல்ல முடியும்.நான் வண்டியை சரி செய்து வளைந்த ஹேண்டில் பாரை அதன் போக்கில் ஓட்டி, பக்கத்தில் இருக்கும் டீக்கடைக்குப் போனதும், என் நடுக்கம், மற்றும் வண்டியைப் பார்த்தவர் கேட்டார்,நீங்க அங்கயா விழுந்தீர்கள் என்றார்.நானும் ஆமாம் என்று சொல்ல,அவர் அங்க கடைக்காரர்கள் கோழிக்கழிவுகள் கொட்டுவதால் நாய்கள் தொல்லை என்றும் அந்த மாதத்தில் நான் ஏழாவது அள் என்றும், இரண்டு பேர் ஸ்பாட் அவுட், ஒருத்தன் கால் போயிவிட்டது.இரண்டு பேர் ஹாஸ்பிட்டலில் இருக்கின்றார்கள்.எனக்கு தெரிந்து கீழ விழுந்து,எழுந்து வந்து டீக்குடிப்பவர் நீங்கள் தான்.கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள் என்றார்.


நானும் கடவுள் அன்றி வேறு என்ன என்றும், எல்லாம் நம்மைப் பெற்றவர்கள் செய்த புண்ணியம் என்றும் நினைத்துக் கொண்டேன்.வீடு சென்று குளித்ததும்,பிள்ளையார் கோவில் சென்று அர்ச்சனை செய்து வழிபட்டேன். இரவு முழுதும் கொஞ்சம் இலோசான நெஞ்சு வலி மற்றும் தொடையில்,முழங்கையில்,முழங்காலில் இருந்த சிறிய சிராய்ப்புகளின் வலி இருந்தது.எனக்கு நமக்கே இவ்வளவு வலி இருக்கே, வயிற்றின் குறுக்கே ஏறிய அந்த வாயில்லா ஜீவன் என்ன செய்யும் என்று கவலை கொண்டேன். அப்போது அது எழுந்து ஓடினாலும்,உயிருடன் இருக்கோ இல்லையோ என்ற கவலையும் வேறு.கடவுளே நாயிக்கு ஒன்றும் ஆகியிருக்கக் கூடாது என்று வேண்டிக் கொண்டேன். மறுனாள் வண்டி எல்லாம் சரி செய்தவுடன் விழுந்த இடத்தில் போய்ப் பார்த்தேன்.நாயைக் காணவில்லை,ஆக நாய் சாகவில்லை என்ற நிம்மதியில் வீடு வந்தேன். அதற்க்கு மறுனாள் அலுவலகம் செல்லும் போது நாய் கொஞ்சம் விந்தி விந்தி நடப்பது கண்டு வேதனை அடைந்தேன். மறுவாரம் நாய் முழுக்க குணம் அடைந்தவுடன்,அப்பாடா ரெண்டு நாய்க்கும் ஒன்றும் ஆகவில்லை என்று திருப்திப் பட்டேன்.அதிலிருந்து நான் காலை அலுவலகம் செல்லும் போது 55 முதல் 60 கிலோமீட்டர் வேகத்திலும்,மாலை வீடு திரும்பும் போது 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இரசித்து நிதானமாக ஓட்ட ஆரம்பித்தேன்.உங்களுக்கு இப்படிப்பட்ட அனுவபம் எல்லாம் வேண்டாம்.எப்போதும் உங்கள் வண்டியை உங்களின் முழுகட்டுப்பாட்டு வேகம் என்னவே, அதில் சாலை விதிகளை அனுசரித்து ஓட்டுங்கள். நன்றி.


டிஸ்கி : நான் ஊர் சுத்தின அனுபவங்களைப் பற்றி பேச ஆரம்பித்தால் பல பதிவுகள் வரும். அது வேணாங்க. இதற்க்கு அப்புறம் நான் வண்டியை மிதவேகத்தில் ஓட்டிய போது இரண்டு மூன்று முறைகள், நாகப் பாம்பு, சாரைப் பாம்பு,கண்ணாடி விரியன் மற்றும் ஒரு ஆட்டுக் குட்டி வந்த போது வண்டியை நிறுத்தி,அவற்றின் மீது ஏற்றாமல் ஓட்டி வந்தேன் என்பது குறிப்பிடத்தக்கது.

Tuesday, February 9, 2010

பிள்ளையாரும்,சனியீஸ்வரரும் ஒரு கதை


பார்வதி தான் குளிக்கப் போறதுக்காக மண்ணுல ஒரு உருவத்தை செய்து அதற்க்கு உயிரைக் கொடுத்து, பாதுகாப்பாக நிறுத்தியதாகவும், ஈஸ்வரன் வந்த போது அவரை அனுமதிக்காமல் சண்டை போட்டதால் அவரின் தலை போனதாகவும், பின்னர் அவருக்கு யானைத் தலை வந்ததாக ஒரு கதை உள்ளது. ஆனால் இந்தக் கதை எந்த அளவுக்கு உண்மை உள்ளது என்பதும், பார்வதி தன் கனவனுக்குத் தெரியாமல் அல்லது அனுமதி பெறாமல் ஒரு பாலகன் அல்லது சிருஷ்டியில் இறங்குவாள் என்பதும் எனக்கு நம்பிக்கை இல்லை. என் பாட்டி சொன்னதும், பின்னாளில் நான் ஒரு ஆண்டு மலரில் படித்த, இந்த சுவையான கதையை உங்களிடம் எனது நடையில் பகிர்ந்து கொள்கின்றேன்.

பிள்ளையார், பார்வதி பரமேஸ்வரனுக்கு பிறந்த குழந்தை. (எந்த ஹாஸ்ப்பிடல்?, நார்மலா?,சிஸ்ஸேரியன்னா? எல்லாம் கேக்கக்கூடாது). ஆதலால் மிக அழகாகச் செக்கச் சிவப்புடன் குண்டாக, கொழு,கொழு என்று இருப்பார். பார்வதின் செல்லக்குழந்தை என்பதால் அந்தம்மாவும் நியூட்ரமுல், செரல்லாக்,ஹார்லிக்ஸ் காம்ப்ளான் எல்லாம் கலந்து கொடுத்து அழகா,குண்டாக வளர்த்து இருந்தார்.பார்த்தால் பரவசமும்,ஆனந்தம் கொள்ள வைக்கும் அழகு குழந்தை. ஆதாலால் பார்வதியும்,பிள்ளையைப் பார்த்து பார்த்துப் பூரித்துப் போவாள். ஒரு வருடம் முடிந்து கையிலையில் பிள்ளையாருக்கு ஆயுஸ்ஹேமம் மற்றும் விழா நடந்தது. அனைத்து மும்மூர்த்திகளும், முப்பத்து முக்கோடி தேவர்களும் கலந்து சிறப்பித்த விழா அது. அதில் சூரியனின் மனைவியும், நிழலுக்கு தேவதையும் ஆன சாயாவும், அவர்களின் பிள்ளை சனியும் கலந்து கொண்டார். சனி சூரியன் புத்திரன் ஆனதால் அவரிடம் ஒரு விசேச குணம் இருந்தது. அது என்ன என்றால் அவர் யாரையாது நிமிர்ந்து நேருக்கு நேர் பார்த்தால் அவர் தலை வெடித்துச் சிதறிவிடும். ஆதலால் சனி எப்போது தலை குனிந்து இருப்பார். சனியின் பார்வை அவ்வளவு பவர். (ஆதலால் தான் நவக்கிரங்களில் சனியை மட்டும் பக்க வாட்டில் நின்று வழிபட வேண்டும். நேருக்கு நேர் நின்று வணங்குதல் கூடாது). விழா நடை பெற்றுக் கொண்டு இருக்கும் போது பார்வதிக்கு பெருமை தாங்கவில்லை. அந்த பெருமையின் காரணமாய் கொஞ்சம் ஆணவமும் தலைதூக்கியது.


சனிக்கு குழந்தையைப் பார்க்க ஆர்வம்,ஆனால் தன் சக்தியின் காரணமாக தலை குனிந்தே இருந்தார். ஆனால் பார்வதி காரணம் கேட்ட போது சாயா,சனியின் பவரைப் பற்றிக் கொஞ்சம் பெருமையாக சொல்லி விட்டாள். இது பார்வதியின் ஆணவத்தை மேலும் கூட்டியது. பார்வதி கொஞ்சம் கர்வத்துடன், சாயா பிள்ளையார் எங்களின் புதல்வன். அகில உலகத்தையும் கட்டிக் காக்கும் சர்வேஸ்வரனின் புதல்வன். ஆகையால் சனியின் சக்தி அவரை ஒன்றும் செய்யாது, ஆதலால் உன் பிள்ளையைப் பார்க்கச் சொல். ஒன்றும் ஆகாது என்றாள் கர்வத்துடன்.ஆனால் சாயா மறுக்க, பார்வதி பிடிவாதமாக இருந்தாள். அவளுக்கு ஈஸ்வரன் மற்றும் தன் சக்தியின் குழந்தை ஆதாலால் ஒன்றும் ஆகாது என்ற நம்பிக்கை. ஏற்கனவே குழந்தையைப் பார்க்கும் ஆவலில் இருந்த சனியும் குழந்தைதான். ஆசையின் காரணமாக சனி நிமிர்ந்து பார்த்தார். பிள்ளையாரின் தலை வெடித்து சிதறியது. இதைப் பார்த்த பார்வதி செய்வது அறியாது புலம்பினாள். விழா வீடு, இழவு வீடாகியது. நடந்த சம்பவங்களைப் பார்த்த ஈஸ்வரன் வடக்கில் தலை வைத்துப் படுத்து இருந்த யானையின் தலையைக் கொய்து பொருத்தினார். பிள்ளையாருக்கு உயிர் வந்தது. யானை முகத்துடன் மனித உடலுடன் விளங்கினார். அழகாய் இருந்த குழந்தை இப்படி போனதில் பார்வதிக்கு எல்லையற்ற கோபம் பெருகியது. தன் கோபம் மேலிட சனிக்கு சாபம் தந்தாள்.

பார்வதி பெரும் சினத்துடன் " சனியின் பார்வை மந்தமாக போகக் கடவுது. சனியைக் கண்ட மக்கள் பயப்படக் கடவது, என்றும். என் பிள்ளை அவலட்சனமாக இருப்பது போல சனியின் கால்களும் முடமாக போகட்டும் என்றாள். அவளின் கோபமும்,சாபமும் கண்ட சாயா. தான் பலமுறை சொல்லியும் கேளாது பார்க்கச் சொன்னது நீதானே. இப்போது சாபம் கொடுத்தால் எப்படி என்று கோபமுற்ற அவள் பிள்ளையாரை மனிதர்கள் ஆற்று மேட்டிலும், மரத்தடியிலும் காட்டிலும் வைத்து வணங்கட்டும் என்று சாபமிட்டாள். பெண்களின் சண்டை, குழாயடிச் சண்டையானது. இதைக் கண்ணுற்ற சிவபெருமான் இருவரையும் சாந்தப் படுத்தினார். பின்னர் பிள்ளையாரின் தலை மாறியது விதியின் வசத்தால் தான். பிள்ளையார் கஜமுகாசூரன் மற்றும் மேஷிகா சூரனை வதம் செய்யத்தான் இந்த உருவம் கிடைத்தது என்றும் கூறி அவர்களை சமாதனப் படுத்த வரங்களைக் கொடுத்தார். பிள்ளையாரின் வடிவம், நீங்கள் நினைப்பது போல அவலட்சணம் அல்ல. அது ஓம் என்னும் பிரணவ வடிவம் ஆகும், என்றும் இன்றில் இருந்து பிள்ளையாரை மக்கள் விக்கினேஸ்வரன் என்று அழைப்பார்கள். மக்களின் விக்கினங்களைப் போக்கும் தலைவன் என்பதால் விக்கினேஸ்வரன் என்னும் ஈஸ்வரப் பட்டத்தைக் கொடுத்தார். இவருக்கு எல்லா முதல் வழிபாடும், முதல் மரியாதையும் கிடைக்கட்டும். பிள்ளையாரின் பூஜைகள் நடக்காமல் ஒரு வழிபாடு நடந்தால் அதில் பலன் இல்லை என்றும் வரம் கொடுத்தார்.

சாயா மற்றும் சனியைச் சமாதனப் படுத்தும் வண்ணம், இது உலக மக்களின் நன்மையைக் கருத்தில் கொண்டு அமைந்த சாபம் ஆகும். இனி உன் பார்வை படும் பக்தர்கள் பலவித சோதனைகளுக்கு ஆளானலும், முடிவில் எண்ணற்ற பயனை அடைவார்கள். மும்மூர்த்திகள், தேவர்கள்,கிங்கரகர்கள், அனைவரும் உன் பார்வையில் இருந்து தப்ப முடியாது. பிரம்மச்சரியம் காக்கும் முனிவர்கள் தவிர அனைவரும் உன் பார்வைக்குக் கட்டுப்பட்டவர்கள். இனி நீ எனக்கு சமமாக சனியீஸ்வரன் என்று அழைக்கப் படுவாய் என்றும். சனியை தன் ஆலயத்தில் வடக்குப் பக்கம் அல்லது தன் இடப்புறம் அமர்ந்து இருப்பார். என் கோவிலுக்கு வரும் பக்தர்கள் சனியை வணங்கிய பின்னர் என்னை வணங்கிணால் தான் முழுப்பயனும் அடைவார்கள் என்று கூறி வரங்கள் தந்தார். சமாதானம் அடைந்த சனியும், பிள்ளையாரைப் போற்றி, என் பார்வை ஏற்கனவே தங்களைப் பாதித்து விட்டதால் இனி என் பார்வை உங்களை ஒன்றும் செய்யாது. தங்களை வணங்கும் பக்தர்களுக்கும், எனது பார்வையின் கடுமை குறையும் என்று வரம் அளித்தார். விழா இனிது நிறைவுற்று அனைவரும் சாப்பிடச் (சுவையான சுவை வீட்டிற்க்கா அல்லது மேனாக சத்தியா வீட்டிற்க்கா எனக் கேக்கக் கூடாது)சென்றனர். நன்றி.

டிஸ்கி: இந்திரனின் வஜ்ராயுதத்தால் அடிபட்ட அனுமனை எடுத்துக் கொண்டு வாயுபகவான் ஒரு குகையில் முடங்கிய போது, சனி இதே வரத்தை அனுமாருக்கும், என் பார்வை ஒரு முறை மட்டும் தான் உன்னைத் தீண்டும், என்றும் உன்னை வணங்கும் பக்தர்களை நான் ஒன்றும் செய்ய மாட்டேன் எனவும் வரம் அளித்தார். சனியின் பார்வையின் போது, சனி பகவான் அனுமாரை வணங்கி, தான் பிடிக்கும் காலம் வந்து விட்டது எனவும், எனது பார்வை எங்கு பார்க்கட்டும் என்ற போது அனுமார், குரங்குக்கு வால் தான் அழகு. நீ எனது வாலைப் பார் என்றார். அப்போதுதான் அவரின் வாலில் தீ வைத்து இலங்கை எரிந்தது. சனியின் பார்வை பெற்ற வாலும் கருகியது. நன்றி. ஈஸ்வரன் என்பது கடவுள் அல்ல அது தலைவர் என்று பொருள் படும் பட்டம் இது, விக்னேஸ்வரன், சனியீஸ்வரன், தட்சினாமூர்த்திஸ்வர், இராவனேஸ்வரன்,முனிஸ்வரன் ஆகியோருக்குக் கொடுக்கப்பட்டது.

Monday, February 8, 2010

கடவுளும், கோவிலும் ஒரு ஆராய்ச்சி - 5

மனிதன் மெல்ல மெல்ல பாதுகாப்பு உணர்வு பெற்றான். இப்போது புறகாரணிகளைப் பற்றிச் சிந்திக்க ஆரம்பித்தான். சூரிய,சந்திரர்கள், கோள்கள், பூமி, தட்ப, வெப்பம். விவசாயம், கால் நடை வளர்த்தல் போன்றவை அவனது கவனத்தை ஈர்த்த விசயங்கள். இவை எல்லாம் அவனது சக்திக்கு மீறிய விடயங்கள். ஆதலால் அவன் இதை எல்லாம் கடவுளின் பொறுப்பு ஆக்கினான். பின்னர் இதை தனித்தனியாகத் தன்னைப் போலவே இயல்புடைய மனிதனின் உருவத்தைக் கொடுத்தான். மனிதன் சிலை ரூபமாய்க் கடவுளை உருவாக்கினான் எனபதில் எந்த மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது. இதுக்கு ஒரு உதாரணத்தைக் கூறலாம் யேசு ஒரு மிகப் பெரிய சித்த புருஷர்,மகான். அவரின் உருவம் இதுதான் என்று எவராலும் சொல்லப் படவில்லை. முதலில் யேசு பழைய ஏற்பாடு அல்லது விவிலியத்தில், ஒரு யூதனைப் போல இடுங்கிய கன்னம் மற்றும் ஒடுங்கிய தேகத்துடன் இருப்பார். இதே யேசு பின்னாளில் இந்தியா வந்த போது வெள்ளைக்காரனைப் போல அல்லது ஜரோப்பியனைப் போல இருப்பார்(இது பிரிட்டிஷார் கொணர்ந்தால்).ஆப்பிரிக்காவில் கறுப்பர்களைப் போல சித்தரிக்கப் படுகின்றார். அவரின் சக்தி ஒன்றுதான் ஆனால் வடிவங்கள், அவரை வணங்கும் மக்களின் குணாதிசயங்களைப் போல மாறுபடுகின்றன. நாட்டுக்கு நாடு பள்ளிவாசல்களின் மற்றும் மசூதிகளின் அமைப்பும் இஸ்ஸாலாமிய சட்டதிட்டங்களும் வேறுபடும் ஆனால் கிழக்கு திசை தொழுகையும், அல்லா என்ற சக்தி மூலமும் ஒன்றுதான். இது போலவே இந்து மதத்தில் எண்ணற்ற கடவுள்கள் இருந்தாலும் அவைகளின் சக்தி மூலம் ஒன்றுதான். கீதையில் கண்ணன் கூறியது போல நான் உருவம்,அருவம் இரண்டும் அப்பாற்ப்பட்ட சக்தி, எல்லாத் தேவதைகளும் நானே. நீங்கள் எப்படி வணங்குகின்றீர்களே நான் அப்படி பலனளிக்கின்றேன். இது அவரின் சக்தி மூல கோட்ப்பாட்டின் காரணியாக உள்ளது.

முதலில் மனிதன் தன்னைக் காக்கவும், தனது சொத்தான பசுக்கூட்டங்களைக் காக்கவும் படைத்த கடவுள் பசுபதி நாதர் ஆவார். இவர் வடிவில் சிவன் அல்லது ருத்திரன் போலத் தோன்றுகின்றார். இவரின் காலடியில் பசுவும், ஆட்டுக்கிடாயும் இருக்கும். இன்றும் பசுபதி நாதரின் கோவில் நேபாலில் காட்மாண்டுவில் உள்ளது.இவர் அந்த மக்களின் பேரிடர் வேளைகளில் தன் அனுபவம் மூலம் காத்து, அதனால் கடவுள் ஆக்கப் பட்டு இருக்கலாம். அல்லது மனிதனின் சூப்பர் பவர் நம்பிக்கையில் கடவுளாக உருவகம் பெற்று இருக்கலாம். அந்நாளில் வரும் கடவுள்கள் பசுக்கள், ஆடுகள் மற்றும் இயற்கை அழிவுகள் ஏற்படுத்தும் சக்திகளை கட்டுப்பாட்டில் வைத்து இருப்பார்கள். பின்னாளில் வந்த கடவுள்கள் பொற்காசுகள், தங்க ஆபரணங்கள் மற்றும் செல்வச் செழிப்புடன் வடிமைக்கப் பட்டன. இது மனிதனின் ஆசையின் பிரதிபலிப்புதானே தவிர கடவுளின் வடிவம் இல்லை.தினமும் தூங்கும் போது கூட மகாவிஷ்னு பத்து கிலோ நகை அணிந்தால் அது அவருக்கு சுமையாக இருக்குமே தவிர அழகாக இருக்காது. இதுவும் மனிதனின் வடிவம் என்பதில் மாற்றுக் கருத்து இருக்காது. எனவேதான் சொல்கின்றேன். கடவுள் என்பது ஒரு சக்தி,அந்த சக்தியினை மனிதன் வடிமைத்த விதம் அவனுக்கு ஏற்றவாறு,சூழ் நிலைக்கு ஏற்றவாறு அமைந்தது என்பது எனது கருத்து.

இந்த சக்தினைப் பின்னர் உணரத் தலைப்பட்டான்.அப்போது மனிதனுக்கு ஒன்று மட்டும் விளங்கவில்லை. அதாவது ஒரு பெண்ணின் தாய்மையும், அவள் பிள்ளை பெறும் விதத்தையும்.கூடலில் விளையும் என்று அறிந்தாலும், அவள் பிள்ளை பெறும் விதம், அவள் தாய்மை பொங்கும் உணர்வுகளை மதிக்கத் தொடங்கினான். ஆதலால் தன்னை சுற்றியுள்ள நதி மற்றும் சக்திகளை பெண்ணின் வடிவமாகப் பார்க்கத் தொடங்கினார். அதாலால் அவைகளுக்கு பெண்களின் பெயரும் இட்டான். பல நதிகளுக்கு பெண்களின் பெயர் அமைய காரணமும் இதுவாகத்தான் இருக்க முடியும். அதுபோலவே ஆதிசக்தியை பெண்ணாக படைத்தான். இது அனைத்து நாகரீங்களிலும் ஆதிசக்தி அல்லது மூல சக்தி பெண்தான். ஏன் என்றால் அவள்தான் படைக்கின்றாள்.(பெண்கள் தங்களை பலவீனர்களாக உணருகின்றார்கள், ஆனால் அவர்கள் தான் சக்தி, அவர்கள் நினைத்தால் ஒரு குடும்பத்தை ஆக்கவும் முடியும், அவர்கள் தடுமாறினால் குடும்பத்தை நிர்மூலம் ஆக்கவும் முடியும். ஒரு ஆண் ஒரு குடும்பத்தை மட்டும் காக்கின்றான் அல்லது உருவாக்குகின்றான், ஆனால் ஒரு பெண் ஒரு நல்ல தலைமுறையே உருவாக்குகின்றாள்.ஆசை அல்லது பேராசை,காமம் போன்ற விடயங்களில் தடுமாறும் பெண்கள், தாங்கள் தடுமாறினால் ஒரு தலைமுறையே தடுமாறும் என்று உணர்தல் அவசியம்.) ஆகவே அந்த சக்தியைப் பெண்ணாக்கி மகாசக்தி என்றான். திராவிட,ஆரிய,எகிப்து சுமேரிய சித்தாதங்களில் பெண்தான் கடவுளின் உருவங்கள். அதன் பின்னர் தோன்றிய கடவுள்கள் பலரும் ஆணாக இருந்தனர்.அறிவு(கல்வி) செல்வம்,சக்தி ஆகியவற்றுக்கு ஏன் பெண் தெய்வங்களைப் படைத்தான்,அவளின் பொங்கும் தாய்மை(கருனை) உணர்வுகள் போல, அதுவும் பொங்கும் அல்லது பெருகும் என்பதற்கத்தாகத்தான்.அது வெறும் ஈஸ்வரி,லஷ்மி சரஸ்வதி வடிவங்கள் அல்ல.


மனிதன் அறிவு வளர வளர தன் கட்டுப்பாடற்ற இயற்கை மூலமாக அவனுள் உருவாகும் சிந்தனை,கோபம்,காமம், ஆற்றல் என்பனவற்றையும் கடவுளாகக் கொள்ள ஆரம்பித்தான். இதில்தான் மரணத்திற்கு ஒரு கடவுள்(யமன்), அறிவிற்க்கு குரு, கோபம் மற்றும் ஆற்றலுக்குச் செவ்வாய், காமத்திற்க்கு மன்மதன் போன்ற கடவுள்கள் உருவகம் ஆகி இருக்க முடியும். கொஞ்சம் சிந்தியுங்கள் இன்று கடவுள் அல்லது தேவர்கள் என்று சொல்லப்படுவர்கள் எல்லாம் மனிதனின் சக்திக்கு அப்பாற்ப்பட்ட குணாதியசங்கள் கொண்ட கடவுள்தான். இதில் இருந்து கடவுள் என்பது மனிதனால் முடியாத சக்தியாகவும்,அவனது எதிர்பார்ப்பில் உருவாக்கப் பட்ட ஒன்று என்று கொள்ளலாம். பின்னர் மனிதன் கடவுளையும் தன்னைப் போலவே நினைத்தான். கடவுளுக்கும் பிள்ளை, குட்டிகள் கொடுத்தான். ஒவ்வெருக்கும் ஒரு சக்திகள் எனப் பிரித்தான். மனிதனால் உயிரைப் படைக்க முடியாது, பிரம்மன் வந்தார். உயிர் எப்போது வரும் அல்லது போகும் என்று தெரியாது ஆகையால் விஷ்னுவிடம் காத்தல் என்று கொடுத்தான்.பஞ்ச பூதங்கள் அழிவு போன்றவை இவன் கையில் இல்லை ஆதலால் சிவனைப் படைத்து அவரைப் பொறுப்பாளியாக்கினார்கள். இன்னமும் அவனது அறிவு வளர வளர நிறைய புராணங்கள் மற்றும் கதைககள் வந்தது. ஒரு மகா சக்தி பிரிந்து பல ரூபங்கள் ஆனது. மனிதனால் படைக்கப்பட்டதா அல்லது ஒவ்வெரு காலத்திற்க்கும் சக்தி தேவைக்கு ஏற்றவாறு அவதாரம் செய்ததா என்பது புரியாத புதிர். இருந்தாலும் நாம் கடவுள் ஒன்றே அது ஒரு மகா சக்தி என்று கொள்வேம். நன்றி தொடரும்.

டிஸ்கி: அடுத்த பதிவில் நாம் பதிவில் சுவாரஸ்யம் கருதி விநாயகருக்கு ஏன் யானை முகம் வந்தது, சனியின் பார்வை ஏன் மந்தமானது மற்றும் கால்கள் ஏன் முடமானது குறித்து ஒரு நல்ல கதையைப் பார்ப்போம். நன்றி.

Friday, February 5, 2010

கடவுளும் கோவிலும் ஒரு ஆராய்ச்சி - 4

மனிதன் ஆதியில் இருந்து கொஞ்சம்,கொஞ்சமாக குழுவாக வாழத் தலைப்பட்டவுடன் அவன் பாதுகாப்பும்,தேவைகளும் ஓரளவு உறுதி செய்யப்பட்டது. அதன் பின்னர் அவனின் குழுக்கள் இணைந்து கூட்டம்,கூட்டமாய் வாழ்ந்தான். இந்தக் காலக் கட்டத்தில் தான் அவன் விவசாயமும் செய்யத் தொடங்கினான். குழுவாய் வாழ்ந்த போது,உணவு,நீர் மற்றும் சீதோசணம் ஆகிய காரணங்களுக்காக அடிக்கடி இடம் பெயர்ந்தான்.பின்னர் நீர் நிறைந்த ஆற்றுப் படுகைகளிலும், சமவெளிகளிலும் நிரந்தரமாய்க் கூட்டமாகத் தங்க ஆரம்பித்தான். இந்த மாற்றத்தின் பரிணாம வளர்ச்சிதான் நாகரீகம் தோன்றக் காரணமாய் அமைந்தது. பல நதிகளின் கரைகளில் பல நாகரீங்கள் வளர்ந்தன.இப்போது வாழும் முறைகள்,தர்ம சாத்திரங்கள்,சுய ஒழுக்கங்கள்,கட்டுப்பாடுகள் கொணரப் பட்டன. என்னதான் சட்டங்கள் இருந்தாலும் மனிதன் தன்னை வீட ஒரு சக்தி இருக்கு,அது நாம் தப்பு செய்தால் தண்டிக்கும் என்று நம்பினார்கள்.இதுதான் கடவுளின் தோற்றத்திற்க்கு முதல் காரணம். அசுரர்கள் வலிமையானவர்கள்.ஆனால் அவர்கள் தப்பு செய்தால் தண்டிக்கப்பட்டார்கள் என்று கதைகள் புனையக் காரணம் இதுதான்.

கடவுள் எனபது ஒரு புனைவுதானா? உண்மையில் இல்லையா? என்றால், நம்மையும் மீறி ஒரு சக்தியுள்ளது எனபதை பகுத்தறிவு வாதிகள் கூட ஒப்புக்கொள்வார்கள். நானும் ஒப்புக் கொள்கின்றேன். காலத்தின் தேவைகளுக்கு ஏற்ப இந்த சக்தியை பல வடிவங்களில் போற்றி வழிபட்டார்கள். இந்த வடிவங்களை அவதாரங்கள் என அவர்களும்,உருவாக்கம் என நான் சொன்னாலும் சக்தி என்ற ஒன்று எல்லாக் காலங்களிலும் இருந்து வருகின்றது.இந்த சக்திதான் பல இடங்களில், பலவேறாக உருவானது. இந்தக் கடவுள் உருவாக்கம் பற்றி நான் இறுதியில் சொல்கின்றேன். இப்போது நாகரீகம் அடைந்த மனிதன் தன் தோற்றம்,வளர்ச்சி மற்றும் பிறப்பு இறப்பு பற்றி சிந்திக்க ஆரம்பித்தான்.( இந்த இறப்பு என்னும் பயம்தான் மனிதனைக் கடவுளுக்கு அருகாமையில் கொண்டு சென்றது என்பதும் உண்மை. இரத்தம் சூடாக இருக்கும் போது வசனம் பேசும் பலரும், இரத்தம் சுண்டியதும்,கடவுள் என்றும், இயற்கை என்றும் கதை பேச ஆரம்பித்து விடுவார்கள். ) இப்படி அவன் சிந்திக்க ஆரம்பித்ததும், அவனுக்கு பாதுகாப்பு உணர்வு மேலோங்கியது. அதன் படி அவனையும், அவன் சார்ந்த நிலம், பொருள்கள்,கால் நடைகளை இயற்கை அழிவிலிருந்து காப்பாற்ற ஒரு துணை அல்லது வழிகாட்டி தேவைப்பட்டது. இதுக்கு அவர்களை வீட ஒரு வல்லமையான கடவுள் அல்லது ஒரு சக்தி தேவைப்பட்டது.இதன் காரணமாய் அவர்கள் சூப்பர் பவர் அல்லது நம்ப முடியாத,கற்பனைக்கு எட்டாத பாத்திரங்களை கடவுளாகப் படைத்தார்கள். இவர்கள் முன்னர் கடவுள்களான பஞ்ச பூதங்களை வீடச் சக்தி வாய்ந்தவர்கள் என்று நம்பினார்கள்.

ஆதலால் தான் முதலில் மனிதனால் படைக்கப் பட்ட கடவுள் எல்லாம் நம்ப முடியாத வண்ணம் மிருக உடல் அல்லது தலையுடன் இருக்கும். பஞ்ச பூதங்களில் ஒன்றான நெருப்பு அல்லது நீரை தன் உடம்பில் கட்டுப் படுத்தி வைத்துருக்கும். நெருப்பு வாயில் உமிழும், நீர் கையில் அல்லது தலையில் கொட்டும். இடி மற்றும் மின்னலை ஆயுதமாக வைத்துருக்கும். இதன் மூலம் ஒன்றை அறிந்து கொள்ளலாம். மனிதனுக்கு எது எல்லாம் பிரச்சனையோ அதை எல்லாம் அந்த சக்தியிடம் வைத்து அதனைக் கடவுள் ஆக்கி விடுவார்கள். இதுக்கு உதாரணம் பார்க்கலாம். மாகாவிஷ்னுவின் பத்து அவதாரங்களில் முதல் மூன்று அவதாரங்கள் மச்சம்(நீர்) கூர்மம்(நிலம்,நீர்), வராகம் (நிலம்) போன்றவை மனிதனும்,மிருகமும் கலந்து சூப்பர் பவராக இருக்கும். கிரேக்கர்களும் இதுபோல படைத்தார்கள். ஆட்டுத்தலையுடன் ஒரு கடவுள்,கழுகுத் தலையுடன் ஒரு கடவுள்,பாம்பு மற்றும் பயம் தரும் பாலைவன விலங்குகள் உடல் அல்லது தலையுடன் இருக்கும். ஜரோப்பிய மற்றும் சீனர்களின் பறக்கும் பல்லிகள்,டிராகன் போன்றவை எல்லாம் இப்படி படைக்கப் பட்ட பாத்திரங்கள். இன்னும் ஒரு உதாரனம் பார்க்கலாம். வைணவத்தில் நரசிம்மரைப் படைத்தார்கள். சிம்ம தலையுடன்,மனித உடலுடன் கோரமான சக்தி மிக்க உருவம் என்றார்கள்.இந்த சிம்மக் கடவுள் ஆசிய மற்றும் ஆப்பிரிக்க சிங்கங்க்களைப் போல அடர்ந்த தலைமயிர் பிடறியுடன் இருக்கும். இதுபோல கிரேக்கர்களிலும் ஒரு சிங்க கடவுள் இருக்கார். ஆனால் அவர் தலை ஜரோப்பிய மற்றும் எகிப்து மலைகளில் வாழும் பூமா என்று அழைக்கப்படும் சிங்கத்தைப் போன்று பிடறி மயிர் குறைவாக இருக்கும்.பூமாவின் முகவடிவான சிம்மத்தின் தலையுடன் இருக்கும். வைணவர்களின் இந்த சிம்ம உருவத்தை முறியடிக்க சைவர்கள் சரபோஜர் என்னும் மனிதனும் மிருகமும் கலந்த கடவுளைப் படைத்தார்கள். பின்னர் ஜோடிக்குப் பிரத்தியாங்கா தேவி என்னும் கதை சொன்னார்கள். மனிதனைப் போலவே கடவுளும் இருப்பர் என்ற நம்பிக்கையில் கடவுளுக்கும் குடும்பம் குட்டி குழந்தைகள் படைத்தார்கள். கடவுள்கள் எண்ணிக்கை பெருகப் பெருக கதைகளும்,புராணங்களும் பெருகின.


ஒரு கட்டத்தில் மனிதனின் சிந்தனை விரிவைடையத் தொடங்கியதும் இது போல சூப்பர் கட்டுக் கதைகளை மக்கள் யோசிக்க ஆரம்பித்தார்கள். ஆதலால் கடவுளும் மனிதனைப் போலவே, ஆனால் சக்திமான்களாக உருவானர்கள். முன்னர் வரை மச்சம்,கூர்மம்,வராகம் என்று படைத்து வாமணனன் என்ற குள்ள உருவமும் படைத்து சிம்மத்துடன் இது போல படைத்தலை நிறுத்தி,மக்கள் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் பரசுஇராமன்,இராமன் கிருஷ்னன் ஆகியோர் வந்தனர். இதில் பரசு இராமர் வந்தால் புயலும் சூறாவளியும் வரும். இராமன் மட்டும் முழுக்க மனிதப் பாத்திரப் படைப்பு என்றாலும் அவ்வப்போது கடவுளாக்கப் பட்டார். கிருஷ்னன் பத்தி நான் சொல்ல வேண்டியதில்லை. அவரின் மாகா உருவ தரிசனத்தைப் பார்த்தால் புரியும் ஒரு தலையில் நீர்,இன்னேரு தலையில் நெருப்பு, சக்ரத்தில் இடி மின்னல் போல ஒளி,ஒலி. கூட்டிக் கழிச்சுப் பாருங்க. இல்லை என்றால் ஆழ்ந்து சிந்தியுங்கள். கடவுளின் உருவாக்கம் என்பது மனிதனின் பயம் மற்றும் காத்தலின் நம்பிக்கையில்,தேவைகளின் அடிப்படையில் உருவானது எப்படி என்பது புரியும். அடுத்த பதிவில் முதலில் கடவுள் எப்படி வந்தார். பின்னர் எப்படி பல்கிப் பெருகியது என்பது குறித்துப் பார்ப்போம்.

டிஸ்கி: இப்படிப்பட்ட சிந்தனை தாங்க,திரைப்படங்களில் நம்ம இரசினி,விசய் எல்லாம் நடந்து வந்தா நெருப்பு பறக்கும், மழை கொட்டும். என்ன ஆயுதத்திற்க்கு பதிலா கையிலயே இமய மலையைக் கூட உடைச்சுருவாங்க. அம்புட்டுத்தான்.

Thursday, February 4, 2010

பேயும் நானும்

மனம் பலவீனம் மற்றும் பேய்கள் குறித்த பயம் உள்ள பதிவர்கள் இதைப் படிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.

மாலை ஆறு மணியிருக்கும், நான் என் வீட்டினுள் நுழைந்தேன். என் மனதில் வித்தியாசமான எண்ணங்களும், இனம் புரியாத உணர்வுகளும் ஏற்ப்பட்டன. எதோ அமானுஷ்ய சக்தி ஒன்று என் வீட்டில் நுழைந்தது போல உணர்ந்தேன். என் எண்ணங்கள் பரபரப்பாக ஆரம்பித்தது. காது மடல்கள் உஷ்ணம் ஆகியது. எப்போதும் அன்பும்,சாந்தியும் நிறைந்து விளங்கும் என் வீடு, அன்று சவக்களையுடன், ஒரு மர்மமாகத் தோன்றியது. இந்த இனம் புரியாத உணர்வில் வீட்டுக்குள் சென்றேன்.

காட்சி -1
என் வீட்டில் துக்கமா,திருமணமா என்ன நிகழ்வு என்று தெரியவில்லை. பலரும் கூட்டமாக இருந்தார்கள். பார்ப்பதற்க்கு இழவு வீடு போல இருந்தாலும் யாரும் மரித்தற்க்கான அடையாளமே, யாரிடமும் துக்கமோ காணப்படவில்லை. திருமண வீடு போல கூட்டம் இருந்தாலும் எல்லாரும் ஒரு அமானுஷ்ய சக்திக்கு கட்டுப் பட்டவர்(பொம்மைகள்) போல இருந்தனர். நான் இனம் புரியாத உணர்வுடன் என் வீட்டை சுத்திச் சுத்தி வந்தேன். வாசலில் என் அப்பாவுடன்(இறந்து விட்டார்) பாஷ்யம் மாமா (இறந்து விட்டார்) பேசிக் கொண்டு இருந்தார். நான் உள்ளே சென்றவன் நேராக என் பெரிய அம்மான்(இறந்து விட்டார்) காலில் விழுந்து நமஸ்காரம் செய்தேன். அவரும் எழுந்து ஆசிர்வதித்தார். என் அப்பாவை சுற்றி மூன்று உறவினர்கள் இருந்தார்கள்(அனைவரும் இறந்தவர்கள்). என் அண்ணா இளைய அம்மான்னுடன் பேசிக்கொண்டு இருந்தார். நான் எப்போதும் அவருடன் பேசுவது வழமையாதலால், அவரிடம் நலம் விசாரித்தேன். அவரும் உறவினர்களும் எனது சிங்கைப் பயணத்தைப் பற்றி கேட்டனர். நான் விளக்கம் அளித்தேன்.காட்சி - 2
நான் முற்றிலும் குழப்பத்தில் இருந்தேன். என்ன நடக்கின்றது. எந்த அமான்ஷ்ய சக்தி என் வீட்டில் புகுந்தது என்ற யோசனையில் இருந்தேன். தண்ணீர் குடிப்பதற்க்காக சமையல் அறையில் நுழைந்தவன், அங்கு தீபாவைப் பார்த்தவுடன் அதிர்ந்தேன். அவள் உருவம் மாலாவைப் போலக் காட்சியளித்தது. மாலா சில மாதங்களுக்கு முன்னர் பருவ வயதில் இறந்தவள். நான் தண்ணீர் கேட்டவுடன் தீபாவாகத் தான் தோன்றியது. நான் குழப்பத்தில் ஆழ்ந்தேன். ஒருவேளை மாலாதான் ஆவியாக வந்து இருக்கின்றாளா? அல்லது தீபாவின் உடலில் புகுந்துள்ளாளா என்று நினைத்தேன். அல்லது இது எனது பிரம்மையா என்று யோசிக்கும் முன்னர் மீண்டும் ஒரு முறை தீபாவின் உடலில் மாலா தோன்றி எப்போதும் போல ஓர் பாச சிரிப்பு சிரித்தாள். நான் அதிர மீண்டும் தீபாவானள். நான் குழம்பினேன். இது எப்படி சாத்தியம். பலமான காவல் தெய்வங்களால் காவல் புரியும் என் வீட்டிற்க்குள் எப்படி மாலா வந்தாள். நல்லாண்டவன், போஜராஜன்,செல்லாண்டி, பொன்மாசடைச்சி, பட்டாணி பாராக்காரா, அங்காளம்மன் போன்ற காவல் தெய்வங்கள், காவல் புரியும் என் வீட்டில் எப்படி மாலா வரமுடியும்? தெய்வங்கள் போய் விட்டனவா. அல்லது அவர்களை வீட ஒரு அமானுஷ்ய சக்தி என் வீட்டில் புகுந்து மாலாவின் வடிவில் என்னைக் குழப்புதா எனப் புரியாமல் தவிர்த்தேன். அன்று மாலைப் பொழுது முழுதும் இந்த சிந்தனைகளால் போனது. இரவும் வந்தது.காட்சி - 3

இரவு பெண்கள் அனைவரும் என் பாட்டி வீட்டில் படுத்துக் கொள்ள,உறவினர்கள் மற்றும் தாய்மாமா (அம்மான்) இருவரும் என் பாட்டி வீட்டு முற்றத் திண்ணையில் படுத்து உறங்கினர். நான் என் வீட்டில் படுப்பதுக்கான ஆயத்தங்களை செய்தேன். இன்னமும் அமானுஷ்ய உணர்வுகள் இருந்து கொண்டேதான் இருந்தது. என் அண்ணாக்கள் அனைவரும் ஹாலில் படுத்துக் கொள்ள, நான் வழக்கம் போல என் தாய் அருகில் படுக்கையை விரித்துக் கொண்டு இருந்தேன். அப்போது என் அம்மா சுதா என்னமே தெரியவில்லை. என்னமே ஒரு மாதிரி இருக்கு வீடு என்றார்கள். நான் காட்டிக் கொள்ளாமல் அது எல்லாம் ஒன்னும் இல்லை என்றேன். என் அம்மா கொல்லைப் பக்கம் போய்விட்டு படுப்பதற்க்காகக் கொல்லைக் கதவைத் திறந்த்தவர்கள். அமைதியாய் என்னிடம் வந்தார். சுதா கொல்லையில் ஒரு பெண்ணின் உருவம் உக்காந்து இருக்கின்றது. நான் சிலிர்த்தேன். காரணம் புரிந்தது. இரவில் விளக்கு கூட போடவில்லை. நான் கொல்லைப் பக்கம் விரைந்து சென்றேன். அங்கு யாரும் இல்லை. வெட்ட வெளியில் கத்த ஆரம்பித்தேன். யாரு யாரு இருக்கீங்க?. வெளிய வாங்க என்று கத்தினேன்?. தொண்டை அடைத்துக் கொண்டு வார்த்தைகள் பலவீனமாய் வெளி வந்தன. இருந்தாலும் கத்தினேன். என் மீது ஒரு உருவம் உரசுவது போல ஒரு பிரமை. நான் கத்திக் கொண்டே ஓடி வந்து விளக்கைப் போட்டேன்.யாரும் இல்லை. நான் என்னை மறந்து பலவீனமாக கத்தினேன். "எவடி அவ? வெளியில வாடி" என்று கத்திக் கொண்டு, பக்கத்தில் இருக்கும் விறகுக் கட்டைகளை இரு கைகளிலும் எடுத்துக் கொண்டேன். "யாருடி நீ?. வாடி முன்னாலே" என்று சுற்றும் முற்றும் பார்த்துக் கத்தினேன். அப்போது கிணற்றில் தண்ணீர் மொண்டு கொட்டும் சத்தம் கேட்டது. புதிதாக தோண்டப் பட்ட கிணறு. படிகள் இல்லாத அம்பது ஆடி ஆழத்திற்க்கு தோண்டிப் பாதியில் நிற்கும் பெரிய கிணறு அது. அப்போது கொட்டப் பட்ட மண் மேட்டின் ஏறி உள்ளே பார்த்தவன் பிரமிப்பாய் சிலிர்த்து நின்றேன்.அங்கு படிகள் இல்லா ஆழக்கிண்ற்றில் ஒரு பெண் குளித்துக் கொண்டு இருந்தாள். கறுத்த நடுத்தர வயது,அளவான கட்டான உடல், பற்கள் பெரிதாய் எடுப்பாய் வெளியில் தெரிந்தது.ஒரு பாவாடையை மார்பு வரை ஏற்றிக் கொண்டு, கால்களை பகுதி நீட்டி உக்காந்து, குனிந்து கைகளால் தண்ணீரை மொண்டு மொண்டு மேலே ஊற்றிக் கொண்டு இருந்தாள். நான் அதிர்ந்தேன். அங்கு ஒரு பெண்ணால் செல்ல சாத்தியமே இல்லை. படி கிடையாது. அம்பது ஆடி ஆழம் கயிற்றில் இறங்கி, இரவு குளிக்க ஒரு பெண்ணுக்கு அவசியம் இல்லை. அது பேய்தான். சந்தோகம் இல்லை, அந்த அமானுஷ்ய சக்தி, பேய் இவள்தான் என முடிவு செய்தேன். கத்த ஆரம்பித்தேன்."ஏய் யாருடி நீ? உனக்கு இங்க என்ன வேலை? என்ன தைரியம் இருந்தால் என் வீட்டினுள் வருவாய்" எனக் கத்தினேன். "வாடி வெளியில. வாடி மேல வாடி" என்று கத்திக் கொண்டே, கையில் இருந்த ஒரு விறகுக் கட்டையை அவள் மேலே எறிந்தேன். பலவீனமாய் சக்தியற்ற நிலையில் நான் எறிந்த அந்த விறகுக்கட்டை ஒரு பேப்பர் துண்டு போல அவள் முன்னால் கிணற்றில் விழுந்தது. நான் கத்திக் கொண்டே இருந்தேன். அவள் என்னை நிமிர்ந்து பார்க்கவும் இல்லை. சட்டை செய்யவும் இல்லை. அவள் பாட்டுக்குக் குளித்துக் கொண்டுருந்தாள். தண்ணீரை கையால் மொண்டு ஊத்துவதையும் நிறுத்தவில்லை. நான் கத்த ஆரம்பித்தவன் கை கால்களை உதறிக் கொண்டு விழித்தேன். சில வினாடிகளுக்குப் பின்னர் தான் இது கனவு என உணர்ந்தேன்.


டிஸ்கி : இது 02.02.10 அன்று அதிகாலையில் நான் கண்ட கனவு. மணி 3.45 இருக்கும். பின்னர் நான் தூங்க 4.20 ஆயிற்று. பின்னர் ஒரு குட்டிப் பேய்க் கனவு வந்தது. அது பின்னர் சிறுகதையாக வரும்.
அகிலன் தன் பதிவு ஒன்றில் சாப்பாட்டுத் தட்டில் ஒரு பருக்கை இருந்தததுக்கு ஒரு மகாபாரதக்கதைப் பதிவு போட்டுச் சொன்னார். எங்களுக்குச் சாப்பிடும் போது கூட பதிவு ஞாபகம் என்றார். நான் தூங்கும் போது கனவை வைத்துக் கூட பதிவு போடுவேம் நன்றி.

Tuesday, February 2, 2010

கடவுளும், கோவிலும் ஒரு ஆராய்ச்சி - 3

முதலில் மனிதன் தனது அடிப்படை தேவைகளைத் தேடி ஓடும்வரை அவனுக்கு கடவுள் நம்பிக்கை அல்லது ஆன்மீகம் போன்றவற்றில் நாட்டம் இல்லை. பின்னர் அவன் குழு அடிப்படையில் வாழ ஆரம்பித்த போது தன்னை துன்புறுத்தும் காரணிகளைக் கடவுளாகவும் அவை தங்களைத் தண்டிப்பதாகவும் நினைத்தான். அதனால் நிலம், நீர், காற்று, நெருப்பு பின்னர் ஆகாயமும் கடவுளாகச் சேர்ந்து கொண்டது. இப்படி மனிதன் குழுவாக வாழத் தலைப்பட்டவுடன் நாகரீகங்கள் தோன்றலாயிற்று. மனிதன் கொஞ்ச கொஞ்சமாக பஞ்ச பூதங்களிடம் இருந்து தன்னைக் காக்க, கத்துக் கொண்டான். அப்படி கத்துக் கொண்ட சில நாட்களில் தனது பாதுகாப்பு மற்றும் தேவைகளை ஓரளவு உறுதி செய்தததும்,மனிதன் புறக்காரணிகள், பிரபஞ்சம் போன்றவற்றில் நாட்டம் கொள்ளத் தொடங்கினான். இந்நாகரிக காலத்தில் தான் முதலில் அக்கினி,வருணன், வாயு,நிலமகள் போன்றேர் உருவங்களுடன் படைக்கப் பட்டனர். இதில் ஆச்சரியம் என்ன என்றால் எல்லா நாகரிங்களிலும் ஒரே மாதியான படைப்புகள் இருப்பதுதான். பின்னர் ஆகாயம் மனிதனுக்கு எந்த பிரச்சனையும் செய்யாதால் ஒதுக்கப் பட்டது. நிலமும் முக்கியத்துவம் இழந்தது. குடிக்கவும்,விவசாய ஆதரமாய் நீர் இருந்ததால் நீருக்கும், வருணன் என்ற பெயரிலும். அழிக்கும் நெருப்பு, சமையல் மற்றும் யாகங்களில்,வேள்விகளில் பயன்படுத்தப் பட்டதால் நெருப்புக்கும் அக்னி என்ற பெயரில் வழிபாடு அதிகம் காணப் பட்டது. இன்றளவும் இது காணப்படுகின்றது.

சில அக்னிக் கடவுள் உருவங்கள்.
பின்னர் இந்த நாகரீகம் வளர வளர ஒரு கடவுளுக்குப் பெரிய இன்னோரு கடவுள், இவர், அவரை வீட சக்தி வாய்ந்தவர் என்று எல்லாம் ஒவ்வெறு கூட்டத்தினால், ஒரு கடவுள் உருவாக்கப்பட்டது. புராணங்களை நல்லா கவனித்தால் இந்த கடவுளின் மேன்மை விளக்கங்கள் புரியும். பின்னர் நான் உதாரனத்துடன் விளக்குகின்றேன்.
பின்னர் இந்த பஞ்ச பூதங்களுக்கு கடவுள் வடிவம் கொடுத்து, அவற்றைக் கடவுள் ஆக்கி வழிபாடு நடத்தினார்கள். பின்னர் மனிதன் இயற்கை இடர்களை சமாளிக்கும் விதத்தை அறிந்தவுடன், கொஞ்சம் கொஞ்சமாக இவர்களின் மவுசு குறைய ஆரம்பித்தது. பின்னர் இவர்களுக்கு ஒரு தலைவன் நியமிக்கப் பட்டான். இந்திரனின் படைப்பும் நடந்தது. கவனிக்கவும் இந்திரன் எனபது கடவுள் அல்ல, இந்திரன் என்பதும்,இந்திர பதவி என்பது ஒரு பட்டம். தலைவர்களில் சிறந்தவர்களுக்கு இந்திரன் என்னும் பட்டம் கொடுக்கப் பட்டது. இந்த தேவர்களுக்கு அதிபதியாக தேவேந்திரன் வந்தான். இடியும் மின்னலும் அவன் வஜ்ஜிராயுதத்தில் இருந்து கிளம்புதாக கதையும் சொல்லப்பட்டது. இது போல ஒரு கிரேக்கக் கடவுளும் அதிபதியாக உள்ளார். என்ன ஒரு வித்தியாசம் என்றால் இடியும், மின்னலும் அவரின் விரலில் இருந்து கிளம்பும். ஒரு காலத்தில் தேவேந்திரனும்,இந்த தேவர்கள் தான் பூமியின் இரட்சகர்கள்.பின்னர் ஒப்புமைக் கடவுள்கள் வந்தவுடன் இந்திரனை வர்றவன் போறவன் எல்லாம் மட்டம் தட்டும் கதைகளைப் பார்க்கலாம். இந்திரனை வென்றதால் இந்திரஜித்து, இந்திரனை சபித்த முனிவர்கள் என பல கதைகள் உள்ளன. இதில் இருந்து என்ன தெரிகின்றது. இந்திரன் என்பது ஒரு காலத்தில் உயர்வாய் இருந்து பின்னர் அவனை வெல்பவர்கள் பராக்கிரம சாலிகள் என்று உயர்வு படுத்தப் பட்டுள்ளது.


இவர்களுக்கு யாகங்களும், வேள்விகளும் செய்து குளிர்வித்து மழை,நல்ல விளைச்சல் மற்றும் நெருப்பு,சூறாவளி கொள்ளை நேய்களை தடுக்கலாம் என்றும் நம்பினார்கள். இதில் மழைக்காத்தான் அதிக யாகங்கள் செய்தனர். அந்தக் கால மக்களின் வாழ்க்கை பெரும்பாலும் விவசாயம்,கால் நடை வளர்ப்பு என்று இருந்ததால் அவர்களுக்கு நீரின் ஆதாயம் மிகவும் இருந்தது.ஆதலால் யாகங்கள், வேள்விகள் மூலம் மழை வரவைக்கும் பணியை முனிவர்கள் ஏற்றனர். அவர்கள் காடுகள் மற்றும் ஊரின் வெளியில் அமைதியான இடத்தில் பர்ணசாலை அமைத்து யாகங்கள்,வேள்விகள் மற்றும் தவம்,ஜெபங்களில் ஈடுபட்டனர்.

யாகங்கங்கள் செய்து மழை வரவைப்பது, தேவர்களுக்கு பூஜை நடத்துவது போன்றவற்றை நாம் புராணங்களில் அறியலாம். அக்னிக்கு ஒரு தனி மரியாதையும், அதனை காக்கும் ஹேமங்கள்,யாகங்கள் செய்யும் அக்னியை அனையாமல் காக்கும் விதம் கூட மந்திரகோசஉபனிசத்தில் தெளிவாக கூறியிருக்கின்றார்கள். அது போல மக்கள் மலை, நிலம், ஆகாயம்,போன்றவற்றை வணங்க அவற்றின் தலைவனான இந்திரனுக்கு விழா எடுக்கும் கோவர்த்தன பூஜையைப் பாகவத்தில் இருந்து அறியலாம். இதில் தேவேந்திரனின் ஆனவத்தை அடக்கியதின் மூலமாக கண்ணன் அல்லது விஷ்னு பெரியவர் என்ற பாத்திரப் படைப்பு புரியும். பல புராணங்களில் தேவேந்திரன் ஒரு பெரிய தலைவனாகவும், தவறு செய்யும் போது அவனை சபிக்கும் முனிவர்கள் அவனை வீட தவசீலர்களாகவும், சக்தி மிக்கவர்களாகவும் காட்டிக் கொண்டனர். இப்படி முனிவர்களைக் கொண்ட பரம்பரை,சந்ததியினர் வழி வழியாக வந்தனர். இவர்கள் காட்டில்,வாழ்விலும் தவசீலர்களாக வாழ்ந்தனர். இவர்கள் மக்களின் நன்மைக்காக வாழ்ந்தனர்(இப்ப இருக்கிற சாமியாருங்க இல்லைங்கோ). இவர்கள் யாகங்கள் நடத்தி மழை பொழியவும், விளை நிலங்கள் சிறக்கவும், தர்மம் தழைக்கவும் பாடுபட்டனர். இதிலும் நம் முன்னேர்களின் ஒரு ஆற்றல் உள்ளது. யாகங்கள் அக்னி,வருணன் போன்றவர்களுக்கு இவர்களால் யாகங்கள் நடத்தப் பெற்றன. மன்னர்கள் தங்களின் வீரம் வெற்றியைக் காட்ட இராஜசூய யாகம்,தனுர் யாகம் போன்றவற்றை நடத்தினர். இந்த முனிவர்கள் யாங்கங்கள் நடத்தி மழை பொழிவிக்க முடியுமா?. சும்மா உக்காந்து கொண்டு தீயில் கட்டையும், நெய்யும் விட்டால் அதுக்கும் மழைக்கும் என்ன சம்பந்தம் என்று கேக்கலாம்.

இந்த யாகங்கள் நடத்தும்போது அக்னியில் அரச மரத்தின் விறகுகள் போடப் படுகின்றன. இவை சமித்து என்று சொல்லப் படுகின்றது. இதில் நம் செயற்கை மழை தத்துவம் செயல் படுகின்றது. ஒரு சில இடங்களில் மழை பொழியாவிட்டால் கொஞ்சம் மேகமூட்டம் அல்லது வானத்தில் ஈரப்பதம் உள்ள இடங்களில் மேலே சென்று சில்வர் அயோடைடு குச்சிகளை வெடிக்கச் செய்தால் மழை பொழியும். இதனை செயற்கை மழை என்பார்கள். இப்போது உள்ள ஆராய்ச்சியாளர்கள் இந்த சமித்து என்னும் அரச மர குச்சியில் இந்த சில்வர் அயோடைடு கலர்ந்துள்ளதாக கூறுகின்றார்கள். ஆதலால் தொடர்ந்து யாங்கள் புரிவதின் மூலம் சிறப்பான ஒரு அமைப்பை சிருஷ்டி செய்துள்ளார்கள். வழக்கம் போல சாரத்தைப் பிடித்துக் கொள்ளும் மக்கள் இந்த யாகங்களை தங்களின் வளமையைக் காட்டுவதற்க்காக செய்வார்கள். இதில் உணவும்,பட்டுத்துணி மற்றும் விலையுயர்ந்த பொருட்களைப் போட்டும்.பெயரளவில் சமித்துப் போட்டு,விறகு சிராய்கள்,சந்தன சிராய்கள் போடுகின்றார்கள். யாகங்கள் என்றால் ஆடம்பரம் என்ற அளவில் மாற்றி விட்டார்கள். இதை செய்வர்களும் உலக நன்மையைக் கருதாமல் தட்சினைக்காக செய்யும் ஒன்றாக ஆக்கிவிட்டனர். நாம் கடவுளின் ஆதித் தோற்றங்களான பஞ்ச பூதங்கள் பற்றிப் பார்த்தோம். இவற்றினால் பாதிப்பு ஏற்ப்படும் வரையில் தான் இவர்கள் கடவுளாக இருந்தார்கள். பின்னர் இவற்றில் இருந்து மனிதன் தன்னைத் தற்காத்துக் கொள்ள ஆரம்பித்ததும் இவர்கள் தேவர்களாக மாறினர்.அதன் பின்னர் பெரிய கடவுள்கள் தோன்றினார்கள். அதன் தோற்றத்தை அடுத்த பதிவில் பார்ப்போம். நன்றி.

Monday, February 1, 2010

கடவுளும்,கோவிலும் ஒரு ஆராய்ச்சி - 2

கடவுள் தோன்ற காரணிகள் வேண்டும், பயம்,ஆசை,அமைதி என்ற இந்தக் காரணிகள் தான் கடவுளை மனிதன் தோற்றுவிக்கவும்,வணங்கவும் வைத்தது. மனிதனைப் பொறுத்தவரை அவன் ஒரு சார்ந்து வாழும் விலங்கு, தனிமை அல்லது நிசப்பதம் வெற்றான இடம் மனிதனுக்கு பயமும், வெறுப்பையும் தரும்.ஆதலால் அவனுக்கு சார்ந்து வாழ உதவி செய்ய ஒரு துணை தேவைப்பட்டது.அவனுக்கு நம்பிக்கை அளிக்க ஒரு புறம்சார ஒரு மூலம் தேவைப்பட்டது. நிலையானதும்,மாறாததும்,எப்போதும் அருகில் இருக்கும் துணையாக அவன் கடவுளைப் படைத்தான். அதன் மூலம் அவனுக்கு ஒரு நம்பிக்கை ஏற்ப்பட்டது. இந்த நம்பிக்கை அவனை வழினடத்தியது. இந்த நம்பிக்கைதான் கடவுள். இராமன்,கிருஷ்னர்,அல்லா,யேசு,கர்த்தர், நெருப்பு என்னும் இவைகள் கடவுள் அல்ல. இவர்கள் எல்லாம் கடவுள் இல்லை. பின்னர் கடவுள் என்பது யார் தெரியுமா?. இவர்கள் எல்லாம் கடவுள்கள்,இவர்கள் எந்நேரமும் நம்மைக் காத்து வழி நடத்துவார்கள் என்று நாம் நம்புகின்றேமே அந்த நம்பிக்கைதான் கடவுள். சித்ராவின் நம்பிக்கை யேசு,ஜலில்லாவின் நம்பிக்கை அல்லா, துளசி டீச்சரின்,சுசியின் நம்பிக்கை பிள்ளையார்,எனது நம்பிக்கை இராமர். என கடவுள்களில் நாம் வைக்கும் நம்பிக்கையும்,எண்ணங்களும் தான் கடவுள். இது எப்படி சாத்தியம்? அப்படி என்றால் கடவுள் என்ற ஒன்று தனியாகக் கிடையாதா? கடவுள் இருக்கின்றாரா? இல்லையா? என்றால் கடவுள் கண்டிப்பாய் இருக்கின்றார், அவர் சக்தி வடிவில் எல்லாவற்றுளும் நிறைந்துள்ளார். நாம் அவரைப் பார்க்கும், வணங்கும் ரூபங்கள்தான் இவை. இது அனைத்தும் நம் மனம் சார்ந்த விடயங்கள்.கடவுள் இல்லை என்று கூறும் வால் பையனுக்கும்,கோவி அண்ணாவிற்க்கும் அவர்களது தனிப்பட்ட தன்னம்பிக்கைதான் கடவுள். அதுக்கு அவர்கள் பெயர் இடுவதில்லை.வணங்குவது இல்லை. ஆனால் நல்லது நடக்கும் என்று நம்புவார்களே அந்த நம்பிக்கைதான் கடவுள். இதைச் சரியாக புரிந்து கொள்ள நாம் கடவுள்களின் தேற்றத்தைப் பார்த்தால் நமக்கு புரியும்.

ஆதிமனிதன் தான் உருவான காலத்தில் முதலில் கடவுள் என்பது இல்லை. அவன் முதலில் பயந்தது இடி மற்றும் மின்னல்தான். அவைகள் கடவுள்கள். நாம் தவறு செய்தால் அவை நம்மை தண்டிக்கும் என்று நம்பினார்கள்,பயந்தார்கள். இந்த இடி மற்றும் மின்னல் பின்னர் அவை உண்டாக்கும் காட்டுத்தீயைப் பார்த்த போது, தீயில் அனைத்தும் சாம்பல் ஆன போது, அதுதான் கடவுள் என்று நம்ப ஆரம்பித்தான். இன்றளவும் இந்த தீயை வழிபடும் பழக்கம் உள்ளது. இவற்றில் இருந்து தன்னைக் காத்துக் கொள்ள குகை மற்றும் மலைகளில் தஞ்சம் அடைந்தான். மலைகளில் கவர்ச்சியும் அழகும் அதைக் கடவுள் ஆக்கிற்று. பின்னர் மனிதன் குழுவாக வாழ ஆரம்பித்தவுடன் அவன் தஞ்சம் அடைந்தது மரம் மற்றும் மரக்குடில்கள். பின்னர் அவனைக் காக்கும் மரம் கடவுளாயிற்று. மரங்களில் அடர்ந்து இருக்கும் அரச மரமும்,ஆலமரமும் அவனது தெய்வங்கள் ஆயின. பின்னர் முன்னேர்களில் தேர்வு அரச மரம் ஆயிற்று. கீதையில் கண்ணன் நாம் மரங்களில் அரசு என்று கூறியுள்ளார்.இப்ப மக்கள் அரச மரம் வணங்குவதுடன் ஒரு பிள்ளையாரையும் வைத்து டூ இன் ஒன் ஆக்கிவிட்டார்கள். அரச மரம் கடவுளா என எனக்கு தெரியாது?. ஆனால் அரச மரத்தில் ஒரு சக்தியுள்ளது. விஞ்ஞானிகள் அரச மரத்தை ஆராய்ச்சி செய்து ஒரு கட்டுரை வெளியிட்டுள்ளார்கள். அதாவது அரச மரத்தில் காலையிலும் மாலையிலும் செபோனின் என்னும் ஒரு வாயு வெளிப்படுகின்றது. இந்த செபோனின் வாயு நம் மூளையில் உள்ள செரட்டின் என்னும்,சிந்திக்கும்,ஞாபக சக்தியை அதிகரிக்கும், சுறுசுறுப்பைக் கொடுக்கும் பகுதியைக் தூண்டுவதாக அமைகின்றது. அந்தக் கட்டுரையில் தினமும் மாலை ஒரு அரைமணி நேரம் உக்காந்து இருந்தால் நம் ஞாபக சக்தி,சிந்தனை, மன அமைதி கிட்டும் என்று கூறுகின்றது.இதை சொல்லி உட்கார் என்றால் நம்ம ஆளுக உட்கார மாட்டார்கள்.(நான் எங்கள் ஊர் ஆத்து மேட்டில் உள்ள அரச மரத்தின் அடியில் மாலை அமருவது வழக்கம்.நிறைய பெரிய கருனாகங்கள் நாணல் புதரில் இருந்து மாலையில் வெளிப்பட்டு ஆற்றில் தண்ணீர் குடிக்க வரும்,நான் அமைதியாய் வேடிக்கை பார்ப்பது வழக்கம்) எனவே ஒரு கடவுளை வைத்துப் போய் கும்பிடு, தண்ணீர் ஊத்து என்றால் போய் ஊற்றுவான் அவன் நம்பிக்கை அது. இது போல பல விடயங்கள் நம் முன்னோர்கள் மறைத்து வைத்து இலைமறை காயகச் சொன்னார்கள். ஆனால் இதிலும் நம்ம ஆளுக சாரத்தை மட்டும் பிடித்துக் கொண்டார்கள். அரசும் மருத்துவ குணம் மிக்க வேம்பும் வைத்து அதில் சக்தியாக அம்மனை வைத்தார்கள். வெறும் மரத்தைச் சுற்று என்றால் சுற்றாத பெண்கள், அம்மனை சுற்றும் போதாவது மரத்தின் பயனை அனுபவிக்கட்டுமே என்றுதான் அமைத்தார்கள். இதுக்கு ஒரு குட்டிக்கதை சொல்ல விரும்புகின்றேன்.

பழைய காலத்தில் ஒரு தாயின் ஒரே மகன் பொருள் தேடுவதற்காக வெளியூருக்குச் செல்ல விரும்பினான்,அனுப்புவதற்கு தாயின் மனம் இடம் கொடுக்கவில்லை.ஆனாலும் மகன் பிடிவாதமாக இருந்தான். தாய் ஒரு தந்திரம் செய்தாள். அவள் மகனிடம் சொன்னால் சரி மகனே பொருள் தேடப் போய்வா, ஆனால் நான் சொல்லும் விதம் செய்தால் தான் அனுப்புவேன் என்றாள். மகனும் சம்மதிக்க, தாய் அவனிடம் இரண்டு மூட்டைகளைக் கொடுத்துச் சொன்னாள், இதில் ஒரு மூட்டையில் நிறைய புளி சாதம் உள்ளது.இதை நீ போகும் வழியில் புளிய மரத்தின் அடியில் அமர்ந்து சாப்பிடு, இரவு தூங்கும் போதும் புளிய மரத்தின் அடியில் தூங்கு. ஒருவேளை உனக்கு திரும்பி வரவேண்டும் என்று தோன்றினால், நீ இன்னேரு மூட்டையில் அவல் இருக்கின்றது,நனைத்துச் சாப்பிடு,ஆனால் திரும்பி வரும்போது வேப்ப மரத்தின் அடியில் உட்காந்து சாப்பிடு,தூங்கு என்றாள். மகனும் சம்மதித்துக் கிளம்பினான். மூன்று இரவு,மூன்று பகல் கழிந்தது. தொடர்ந்து உண்ட புளி சாதம் வயிற்றைக் கெடுத்தது, இரவு புளிய மரத்துக் கார்பன் டை ஆக்ஸைடு காற்று தலை நேயையும்,மன அமைதியையும் கெடுத்தது. உடல் முடியாமல் வீடு திரும்ப நினைத்தான். தன் தாய் கூறிய படி அவலை நனைத்து உண்டு, வேப்ப மரத்தின் அடியில் படுத்து வீட்டிற்க்கு வந்தான். வீடு திரும்பிய போது அவன் பூரண குணமடைந்து இருந்தான். அவலின் கார்போஹைடிரேட் சக்தியும் மருத்துவ குணம் மிக்க வேப்ப மரக்காற்றும் அவனைக் குணப்படுத்தியது.தாயும் தன் திட்டம் பலித்தது குறித்து மகிழ்ந்தாள். இது கதை என்றாலும் கருத்து மிக்கது. ஆனால் பொதுவாக இரவில் அனைத்து மரமும் கார்பன் டை ஆக்சைடு வாயுவைத்தான் வெளிப்படுத்தும்,ஆகவே இரவில் மரத்தின் அடியில் தூங்குவது தவறு. பகலில் வேப்ப மரம் அல்லது அரச மரத்தின் அடியில் கயித்துக் கட்டிலில் படுத்து தூங்கினால் தனி சுகம்.(என்னது காலைப் பிடிக்க ஆள் வேணுமா,ரொம்பத்தான் கற்பனை வழியுது).சரி சரி மரத்தின் கதையை நான் பதிவர்களுக்கு ஒரு தகவலுக்காதான் சொன்னேன்.இனி நாம் கடவுளைப் பார்ப்போம்.

இப்படி ஆதிமனிதன் பயம் காரணமாய் இடி,மின்னல்,நெருப்பு,மழை,பூகம்பம்,எரிமலை காரணமாய் நிலம்,மலை என வணங்கிப் பின்னர் மரத்தையும் வணங்க ஆரம்பித்தான். நிழல்,காய்,கனி என அனைத்து நண்மைகளையும் அளிக்கும் மரம் உண்மையில் கடவுளே.(அதுனாலதான் வெட்டுறாங்க).இனி பின்னர் அவன் குழுவாக வாழ ஆரம்பித்ததும். அவனுக்கு பேய்,பிசாசு நம்பிக்கையும் ஏற்ப்பட்டது. பின்னர் நாகரீங்கள் தோன்ற ஆரம்பித்தது. இந்த நாகரீகத் தோற்றம்தான் கடவுளின் தோற்றமும் ஆகும். இந்த நாகரீங்களில் ஆரிய,கிரேக்க,திராவிட,சுமேரிய நாகரீங்கள் தான் முக்கியமனாவை. இதில் ஆரிய மற்றும் கிரேக்க நாகரீகம் தான் அதிக கடவுள் கதைகளைத் தோற்றுவித்தன. அவை எப்படி என்பதை அடுத்த பதிவில் பார்ப்போம். நன்றி.