Wednesday, December 30, 2009

வெள்ளியங்கிரி மலை புனிதப் பயணம் - பாகம் 7

சென்ற பதிவின் படங்களைப் பார்த்து அதன் இயற்கை அழகை மிகவும் இரசித்தீர்கள் அல்லவா. அழகுதான் ஆபத்து என்று சொல்வது போல, இந்த மலையில் இந்த அழகிய இடம்தான் மிகவும் ஆபத்தான இடம். இங்கு வனவிலங்குகள் அதிகம் என்றாலும் யாரும் அவை தாக்கி இறந்தது கிடையாது.ஆனால் இங்கு அவ்வப்போது அடிக்கும் பனிபுயல் மிகவும் ஆபத்தானது. இந்தப் பனிப்புயலில் கனத்த உடலை ஊடுருவும் குளிர் காற்று புயல் போல சுழன்று அடிக்கும்.நமது நெஞ்சை ஊடுருவி அடிக்கும் காற்று இதயத்தை உறைய வைக்கும்.சில சமயம் நம்மை விறைப்படையச் செய்ய வைக்கும் காற்று ஆளைத் உருட்டிப் பள்ளத்தாக்கில் தள்ளிவிடும்.இந்தப் பனிப்புயலில் சிக்கி பலரும் இறந்துள்ளனர்.இந்தப் பனிப்புயல் அடிக்கும் போது அனுபம் மிக்கவர்கள் அங்கு இருக்கும் குகைகளில் சென்று பதுங்கிக் கொள்வார்கள்.இல்லை என்றால் காற்று அடிக்கும் திசையில் பாறைகளின் பின்னால் குறுகி உக்கார்ந்து கொள்வார்கள்.கனத்த ஊய் என்ற ஓசையுடன் அடிக்கும் பனிப்புயல் ஒன்றுதான் இங்கு ஆபத்தானது. என் தந்தை ஒருமுறை இந்தப் பனிப்புயல்லில் சிக்கி பாறைகளின் பின்னால் பதுங்கித் தப்பித்தார். அனால் அவர் நுரையிலில் தாக்கிய பனி ஒருவாரம் தொடர் குளிர் காய்ச்சலில் விட்டது. என் அண்ணாவும் ஒருமுறை இதில் சிக்கினார்.ஆனால் அனுபவம் மிக்க குழுவினருடன் சென்றதால் ஒரு குகையில் தங்கி,எந்தவித பாதிப்பும் இல்லாமல் திரும்பினார். நான் சென்ற போது எல்லாம் பனிப்புயல் அடிக்கவில்லை என்பதில் எனக்குக் கொஞ்சம் வருத்தம்.

ஆண்டி சுனையில் இந்தக் குடிசையில் அந்த இரவில் பதினோரு மணியளவில் தங்கினோம். நானும் என் அண்ணாவும் போர்த்திக் கொள்ளவோ அல்லது காதுகளை மூட மப்ளர் இல்லாததால் குளிரில் தங்கினோம். உடன் வந்த நண்பர்கள் சாக்கை விரித்துப் பாலித்தீன் ஷீட் மூடி படுத்து உறங்கி விட்டனர். நான் என் கனத்த டீ சர்ட்டை தலை மீது போர்த்தி காதுகளை மூடி, மூக்கின் முன்புறம் பட்டன் மூடும் படி செய்து படுத்துவிட்டேன். அனாலும் குளிர் கை,கால் எல்லாம் சிறிது நடுக்கத்துடன் படுத்துவிட்டேன். என் அண்ணா ஒரு இரண்டு மணி நேரம்தான் பொறுத்துக் கொள் அப்புறம் நடக்க ஆரம்பித்து விடலாம் என்று கூறித் தூங்க ஆரம்பித்தார். நான் கொஞ்சம் கண் அயர்ந்து இருப்போன். அப்பத் தான் அந்த சோதனை ஆரம்பித்தது. எனக்கு மிக அவசரமாக சிறுனீர்(இனி இதை உபாதை என்று சொல்கின்றேன்) கழிக்க வேண்டும் போல இருந்தது. கண் விழித்துப் பார்த்தால் அனைவரும் நல்ல உறக்கத்தில் இருந்தார்கள். எனக்கு நள்ளிரவில் தனியாக வெளியே போக பயம். ஒன்று காடு, எதாவது மிருகங்கள் வந்தால் என்ன செய்வது என்ற பயம்.நான் அடக்கிக் கொண்டு படுத்து உறங்க முயற்ச்சி செய்தால்,உறக்கம் வரவில்லை. குளிரும்,உபாதையும் என்னை வாட்டி அடித்தது. நான் எழுந்து தூங்கும் அனைவரையும் பார்ப்பது,பின் படுப்பதுமாக இருந்தோன்.இப்படி இருமுறைகள் செய்து விட்டேன்.குடிசைக்குள் உள்ளே நாங்கள் படுத்த இடத்திற்க்குப் பின்னால் நிறைய காலி இடம் இருந்தது.நான் அங்கு ஒரு மூலையில் கழித்து விடலாமா என்ற யோசனை.ஆனாலும் எனது நாகரிகமும்,பக்தியும் தடுத்தது. பல பக்தர்கள் வந்து தங்கும் இடத்தை அசுத்தம் செய்வதா என்ற எண்ணம் அதைத் தடுத்தது.

பின்னர் நான் துணிந்து (வேற வழியில்லாமல்) வெளியே சொல்லலாம் என்று நினைத்து எழுந்து அமர்ந்தோன்.குடிசையின் வெளியே இருந்த கும்மிருட்டும்,விலங்கு பயமும் திருப்பவும் பயமுருத்தின.நல்லவேளையாக என் அண்ணா எழுந்தவர் என்ன என்று விசாரித்தார். நான் விஷயத்தைக் கூற அவர் நான் வேனா கூட வரட்டுமா?என்றார்.இல்லை வரவேண்டியதில்லை. யாரது ஒருத்தர் முழித்து இருந்தால் போதும்,எதாவது என்றால் கத்தினால் ஆள் வேண்டுமே அதான் என்றேன்.அவர் குளிரில் எனக்கு உறக்கம் வரவில்லை.நான் கண்ணை மூடிப் படுத்து இருந்தேன்,நீ போய் வா என்றார்.நான் கையில் டார்ச் எடுத்து வெளியே வந்தேன்.வந்தவன் மூன்று விதமான அவஸ்தையில் மாட்டிக் கொண்டேன்.வெளியே கூதக் காற்று என்று சொல்வார்களே அதுபோல மிக்க குளிர் காற்று அடித்தது. நான் கழிக்க ஆரம்பித்த சில விநாடிகளில் என்னால் நிற்க முடியவில்லை.எனது உடல் நடுங்க ஆரம்பித்தது. நான் மைக்கேல் ஜாக்ஸன்,பிரபுதேவா, லாரன்ஸ் என அனைவரையும் தோற்க அடிக்கும் வண்ணம் டான்ஸ் ஆட ஆரம்பித்தது.மக்கா அப்ப மட்டும் போட்டி போட்டா நான் அனைவரையும் தோற்கச் செய்து இருப்பேன்.உள்ளே போக முடியாமல்,நீண்ட நேரம் அடக்கி வைத்ததால் வரும் நிறைய உபாதை வேறு. குறைந்தது மூன்று நிமிடங்கள் நிற்க வேண்டும். அனால் சில வினாடிகள் கூட நிற்க இயலாத நடுக்கம், டார்ச் வெளிச்சம் கண்டு மிருகங்கள் வந்து விடுமோ எனற பயம், என மூன்று விதமான சிக்கலில் மாட்டிக் கொண்டேன். நான் கொஞ்சம் துணிச்சலானவன்,இரவில் தனித்து ஊர் சுற்றக் கூடியவன், இருப்பது ஒரு உயிர் போவது ஒரு முறை என்று வீரவசனம் பேசியும் இருக்கின்றேன்(அடுத்தவனுக்கு சொல்ற அட்வைஸ்தான)அனாலும் அந்தக் குளிரும்,காடும்,கும்மிருட்டும் என்னைப் பயப்படுத்தியது. இயற்கையாது மண்ணாங்கட்டியாது என்ற எண்ணம் கூட வந்தது. நான் ஆடிய ஆட்டத்தில் (நடுக்கத்தில்) ஆர் டி ஓ டெஸ்ட் வைத்த மாதிரி என் டார்ச் வெளிச்சம் தரையில் எட்டு,ஒன்பது எல்லாம் போட்டது. எனது இதயத்தில் வலி போன்ற நடுக்கம் ஏற்ப்பட்டது. கை,கால்கள் எல்லாம் விரைக்கும் வண்ணம், பற்கள் கிட்டி,வாய் ஒட்டிப் போனது. ஒருவழியாக வெற்றி வீரனாக அவஸ்தையை முடித்துக் குடிசைக்குள் வந்தவன்,நிற்க முடியாமல் கை,கால்கள் விரைத்து, "ஜயம் எ டிஸ்கே டான்ஸர்" என பாட்டுப் பாடமல் ஆடிக் கொண்டு நின்றேன். கடகடவென்று பற்கள் அடிக்க ஆடிக் கொண்டு இருந்த என்னை என் அண்ணா என்னாச்சு என்றவர். நான் நடுங்கி விசயத்தைச் சொன்னேன். அவர் நின்றால் ரொம்ப குளிரும் படுத்துக் கொள் என்றார்.

நான் சுருண்டு படுத்துக் கொண்டேன். ஆனாலும் குளிர் என் கை,கால் எல்லாம் ஆயிரம் ஆயிரம் ஊசிகள் குத்துவது போல வலி எடுத்தது. மார்பு கனத்து மிகவும் வலித்தது. நான் நிச்சயமாக இறந்து விடுவேன் என்று நினைக்கும் அளவுக்குக் குளிரும்,நடுக்கமும் எடுத்தன. உடம்பு உதறித் தள்ளியது. . எனது எண்ணம் இறப்பைப் பத்தி யோசிக்க ஆரம்பித்தது. நான் இறக்கப் பயப்படவில்லை,ஆனாலும் இவ்வளவு தூரம் வந்து விட்டு சாமியைப் பார்க்காமல் போய்விடுவனே,"அப்பனே ஈஸ்வரா உன்னை தரிசிக்க வேண்டும்" என்று வேண்ட ஆரம்பித்து விட்டேன்.பின்னும் வயதான காலத்தில் தாய்,தந்தை இருக்க, அவர்களை துக்கத்தில் ஆழ்த்திப் போய் விடுவனே என்ற ரீதியில் நம்ம கற்பனைக் குதிரை தறி கெட்டு ஓடியது. பின்னர் நான் என் கைகள் இரண்டையும் பரபரவென தேய்த்து என் முகம்,மார்பு என தேய்த்து சூடு படுத்தினேன். கொஞ்சம் நல்லா இருந்தாலும் நடுக்கம் குறையவில்லை. எழுந்து உக்காந்து கை,கால்களையும் தேய்த்து விட்டேன். பக்கத்தில் இருந்த அண்ணா, என்ன ஆச்சு ரொம்ப முடியவில்லையா, ஆரம்பத்திலே சொல்ல வேண்டியதுதான என்றவர். எழுந்து தன் வாயை உப்பிக் காற்றை இரண்டு மூன்று நிமிடம் தம் கட்டி, தன் சூடான மூச்சுக் காற்றை என் காதுக்குள் ஊதினார். இப்படி என் இரு காதுகளிலும்,நாலு முறைகள் ஊதியதும் என் குளிரும்,உடல் அதிர்வும் நின்றன. அனாலும் மெல்லிய நடுக்கம் போகவில்லை. இந்த சத்தம் கேட்டு எழுந்த அண்ணாவின் நண்பரும், குழுத் தலைவரும் ஆன பரத்குமார் என்னை "ஏம்பா என்னை எழுப்ப வேண்டியதுதான" எனக் கேட்டுப் அவர் பையில் இருந்து குறுமிளகு பத்து எடுத்துக் கொடுத்து சாப்பிடச் சொன்னார். நான் சாப்பிட்டதும் நடுக்கமும் குளிரும் விட்டது. அவர் "நல்ல பையன் நீ, முதல்ல எழுப்பி இருந்தா இந்தக் கஷ்டப் பட வேண்டியது இல்லை அல்லவா?" என்றார். நான் நீங்கள் எல்லாரும் பயணத்தால் அயர்ந்து தூங்குகின்றீர்கள்,தொல்லை கொடுக்க வேண்டாம் என்று விட்டு விட்டேன் என்று கூறியவனிடம்,"அது எல்லாம் இல்லை,எனக்கும் குளிரில் தூக்கம் விட்டு விட்டுத்தான் வந்தது. சரி நீ தூங்கு" என்று அவரின் பாலித்தீன் ஷீட்டைக் கொடுத்தார். இருவரும் "இந்தக் கூதக் காற்றையே உன்னால் தாங்க முடியவில்லை.உனக்குப் பனிப்புயல் வேற அடிக்கவில்லை என்ற வருத்தமா", என்று கிண்டல் அடித்தனர்.நான் சிரித்து இதுவும் ஒரு வித்தியாசமான அனுபவம்தானே என்று நிம்மதியாக தூங்க ஆரம்பித்தேன். தொடரும் நன்றி.

வெள்ளியங்கிரி மலைபுனித பயணம் - பாகம் 6

சென்ற பதிவின் படங்களைப் பார்த்து அதன் இயற்கை அழகை மிகவும் இரசித்தீர்கள் அல்லவா. அழகுதான் ஆபத்து என்று சொல்வது போல, இந்த மலையில் இந்த அழகிய இடம்தான் மிகவும் ஆபத்தான இடம். இங்கு வனவிலங்குகள் அதிகம் என்றாலும் யாரும் அவை தாக்கி இறந்தது கிடையாது.ஆனால் இங்கு அவ்வப்போது அடிக்கும் பனிபுயல் மிகவும் ஆபத்தானது. இந்தப் பனிப்புயலில் கனத்த உடலை ஊடுருவும் குளிர் காற்று புயல் போல சுழன்று அடிக்கும்.நமது நெஞ்சை ஊடுருவி அடிக்கும் காற்று இதயத்தை உறைய வைக்கும்.சில சமயம் நம்மை விறைப்படையச் செய்ய வைக்கும் காற்று ஆளை உருட்டிப் பள்ளத்தாக்கில் தள்ளிவிடும்.இந்தப் பனிப்புயலில் சிக்கி பலரும் இறந்துள்ளனர்.இந்தப் பனிப்புயல் அடிக்கும் போது அனுபம் மிக்கவர்கள் அங்கு இருக்கும் குகைகளில் சென்று பதுங்கிக் கொள்வார்கள்.இல்லை என்றால் காற்று அடிக்கும் திசையில் பாறைகளின் பின்னால் குறுகி உக்கார்ந்து கொள்வார்கள்.கனத்த ஊய் என்ற ஓசையுடன் அடிக்கும் பனிப்புயல் ஒன்றுதான் இங்கு ஆபத்தானது. என் தந்தை ஒருமுறை இந்தப் பனிப்புயல்லில் சிக்கி பாறைகளின் பின்னால் பதுங்கித் தப்பித்தார். அனால் அவர் நுரையிலில் தாக்கிய பனி ஒருவாரம் தொடர் குளிர் காய்ச்சலில் விட்டது. என் அண்ணாவும் ஒருமுறை இதில் சிக்கினார்.ஆனால் அனுபவம் மிக்க குழுவினருடன் சென்றதால் ஒரு குகையில் தங்கி,எந்தவித பாதிப்பும் இல்லாமல் திரும்பினார். நான் சென்ற போது எல்லாம் பனிப்புயல் அடிக்கவில்லை என்பதில் எனக்குக் கொஞ்சம் வருத்தம்.

ஆண்டி சுனையில் இந்தக் குடிசையில் அந்த இரவில் பதினோரு மணியளவில் தங்கினோம். நானும் என் அண்ணாவும் போர்த்திக் கொள்ளவோ அல்லது காதுகளை மூட மப்ளர் இல்லாததால் குளிரில் தங்கினோம். உடன் வந்த நண்பர்கள் சாக்கை விரித்துப் பாலித்தீன் ஷீட் மூடி படுத்து உறங்கி விட்டனர். நான் என் கனத்த டீ சர்ட்டை தலை மீது போர்த்தி காதுகளை மூடி, மூக்கின் முன்புறம் பட்டன் மூடும் படி செய்து படுத்துவிட்டேன். அனாலும் குளிர் கை,கால் எல்லாம் சிறிது நடுக்கத்துடன் படுத்துவிட்டேன். என் அண்ணா ஒரு இரண்டு மணி நேரம்தான் பொறுத்துக் கொள் அப்புறம் நடக்க ஆரம்பித்து விடலாம் என்று கூறித் தூங்க ஆரம்பித்தார். நான் கொஞ்சம் கண் அயர்ந்து இருப்போன். அப்பத் தான் அந்த சோதனை ஆரம்பித்தது. எனக்கு மிக அவசரமாக சிறுனீர்(இனி இதை உபாதை என்று சொல்கின்றேன்) கழிக்க வேண்டும் போல இருந்தது. கண் விழித்துப் பார்த்தால் அனைவரும் நல்ல உறக்கத்தில் இருந்தார்கள். எனக்கு நள்ளிரவில் தனியாக வெளியே போக பயம். ஒன்று காடு, எதாவது மிருகங்கள் வந்தால் என்ன செய்வது என்ற பயம்.நான் அடக்கிக் கொண்டு படுத்து உறங்க முயற்ச்சி செய்தால்,உறக்கம் வரவில்லை. குளிரும்,உபாதையும் என்னை வாட்டி அடித்தது. நான் எழுந்து தூங்கும் அனைவரையும் பார்ப்பது,பின் படுப்பதுமாக இருந்தோன்.இப்படி இருமுறைகள் செய்து விட்டேன்.குடிசைக்குள் உள்ளே நாங்கள் படுத்த இடத்திற்க்குப் பின்னால் நிறைய காலி இடம் இருந்தது.நான் அங்கு ஒரு மூலையில் கழித்து விடலாமா என்ற யோசனை.ஆனாலும் எனது நாகரிகமும்,பக்தியும் தடுத்தது. பல பக்தர்கள் வந்து தங்கும் இடத்தை அசுத்தம் செய்வதா என்ற எண்ணம் அதைத் தடுத்தது.

பின்னர் நான் துணிந்து (வேற வழியில்லாமல்) வெளியே சொல்லலாம் என்று நினைத்து எழுந்து அமர்ந்தோன்.குடிசையின் வெளியே இருந்த கும்மிருட்டும்,விலங்கு பயமும் திருப்பவும் பயமுருத்தின.நல்லவேளையாக என் அண்ணா எழுந்தவர் என்ன என்று விசாரித்தார். நான் விஷயத்தைக் கூற அவர் நான் வேனா கூட வரட்டுமா?என்றார்.இல்லை வரவேண்டியதில்லை. யாரது ஒருத்தர் முழித்து இருந்தால் போதும்,எதாவது என்றால் கத்தினால் ஆள் வேண்டுமே அதான் என்றேன்.அவர் குளிரில் எனக்கு உறக்கம் வரவில்லை.நான் கண்ணை மூடிப் படுத்து இருந்தேன்,நீ போய் வா என்றார்.நான் கையில் டார்ச் எடுத்து வெளியே வந்தேன்.வந்தவன் மூன்று விதமான அவஸ்தையில் மாட்டிக் கொண்டேன்.வெளியே கூதக் காற்று என்று சொல்வார்களே அதுபோல மிக்க குளிர் காற்று அடித்தது. நான் கழிக்க ஆரம்பித்த சில விநாடிகளில் என்னால் நிற்க முடியவில்லை.எனது உடல் நடுங்க ஆரம்பித்தது. நான் மைக்கேல் ஜாக்ஸன்,பிரபுதேவா, லாரன்ஸ் என அனைவரையும் தோற்க அடிக்கும் வண்ணம் டான்ஸ் ஆட ஆரம்பித்தது.மக்கா அப்ப மட்டும் போட்டி போட்டா நான் அனைவரையும் தோற்கச் செய்து இருப்பேன்.உள்ளே போக முடியாமல்,நீண்ட நேரம் அடக்கி வைத்ததால் வரும் நிறைய உபாதை வேறு. குறைந்தது மூன்று நிமிடங்கள் நிற்க வேண்டும். அனால் சில வினாடிகள் கூட நிற்க இயலாத நடுக்கம், டார்ச் வெளிச்சம் கண்டு மிருகங்கள் வந்து விடுமோ எனற பயம், என மூன்று விதமான சிக்கலில் மாட்டிக் கொண்டேன். நான் கொஞ்சம் துணிச்சலானவன்,இரவில் தனித்து ஊர் சுற்றக் கூடியவன், இருப்பது ஒரு உயிர் போவது ஒரு முறை என்று வீரவசனம் பேசியும் இருக்கின்றேன்(அடுத்தவனுக்கு சொல்ற அட்வைஸ்தான)அனாலும் அந்தக் குளிரும்,காடும்,கும்மிருட்டும் என்னைப் பயப்படுத்தியது. இயற்கையாது மண்ணாங்கட்டியாது என்ற எண்ணம் கூட வந்தது. நான் ஆடிய ஆட்டத்தில் (நடுக்கத்தில்) ஆர் டி ஓ டெஸ்ட் வைத்த மாதிரி என் டார்ச் வெளிச்சம் தரையில் எட்டு,ஒன்பது எல்லாம் போட்டது. எனது இதயத்தில் வலி போன்ற நடுக்கம் ஏற்ப்பட்டது. கை,கால்கள் எல்லாம் விரைக்கும் வண்ணம், பற்கள் கிட்டி,வாய் ஒட்டிப் போனது. ஒருவழியாக வெற்றி வீரனாக அவஸ்தையை முடித்துக் குடிசைக்குள் வந்தவன்,நிற்க முடியாமல் கை,கால்கள் விரைத்து, "ஜயம் எ டிஸ்கே டான்ஸர்" என பாட்டுப் பாடமல் ஆடிக் கொண்டு நின்றேன். கடகடவென்று பற்கள் அடிக்க ஆடிக் கொண்டு இருந்த என்னை என் அண்ணா என்னாச்சு என்றவர். நான் நடுங்கி விசயத்தைச் சொன்னேன். அவர் நின்றால் ரொம்ப குளிரும் படுத்துக் கொள் என்றார்.

நான் சுருண்டு படுத்துக் கொண்டேன். ஆனாலும் குளிர் என் கை,கால் எல்லாம் ஆயிரம் ஆயிரம் ஊசிகள் குத்துவது போல வலி எடுத்தது. மார்பு கனத்து மிகவும் வலித்தது. நான் நிச்சயமாக இறந்து விடுவேன் என்று நினைக்கும் அளவுக்குக் குளிரும்,நடுக்கமும் எடுத்தன. உடம்பு உதறித் தள்ளியது. . எனது எண்ணம் இறப்பைப் பத்தி யோசிக்க ஆரம்பித்தது. நான் இறக்கப் பயப்படவில்லை,ஆனாலும் இவ்வளவு தூரம் வந்து விட்டு சாமியைப் பார்க்காமல் போய்விடுவனே,"அப்பனே ஈஸ்வரா உன்னை தரிசிக்க வேண்டும்" என்று வேண்ட ஆரம்பித்து விட்டேன்.பின்னும் வயதான காலத்தில் தாய்,தந்தை இருக்க, அவர்களை துக்கத்தில் ஆழ்த்திப் போய் விடுவனே என்ற ரீதியில் நம்ம கற்பனைக் குதிரை தறி கெட்டு ஓடியது. பின்னர் நான் என் கைகள் இரண்டையும் பரபரவென தேய்த்து என் முகம்,மார்பு என தேய்த்து சூடு படுத்தினேன். கொஞ்சம் நல்லா இருந்தாலும் நடுக்கம் குறையவில்லை. எழுந்து உக்காந்து கை,கால்களையும் தேய்த்து விட்டேன். பக்கத்தில் இருந்த அண்ணா, என்ன ஆச்சு ரொம்ப முடியவில்லையா, ஆரம்பத்திலே சொல்ல வேண்டியதுதான என்றவர். எழுந்து தன் வாயை உப்பிக் காற்றை இரண்டு மூன்று நிமிடம் தம் கட்டி, தன் சூடான மூச்சுக் காற்றை என் காதுக்குள் ஊதினார். இப்படி என் இரு காதுகளிலும்,நாலு முறைகள் ஊதியதும் என் குளிரும்,உடல் அதிர்வும் நின்றன. அனாலும் மெல்லிய நடுக்கம் போகவில்லை. இந்த சத்தம் கேட்டு எழுந்த அண்ணாவின் நண்பரும், குழுத் தலைவரும் ஆன பரத்குமார் என்னை "ஏம்பா என்னை எழுப்ப வேண்டியதுதான" எனக் கேட்டுப் அவர் பையில் இருந்து குறுமிளகு பத்து எடுத்துக் கொடுத்து சாப்பிடச் சொன்னார். நான் சாப்பிட்டதும் நடுக்கமும் குளிரும் விட்டது. அவர் "நல்ல பையன் நீ, முதல்ல எழுப்பி இருந்தா இந்தக் கஷ்டப் பட வேண்டியது இல்லை அல்லவா?" என்றார். நான் நீங்கள் எல்லாரும் பயணத்தால் அயர்ந்து தூங்குகின்றீர்கள்,தொல்லை கொடுக்க வேண்டாம் என்று விட்டு விட்டேன் என்று கூறியவனிடம்,"அது எல்லாம் இல்லை,எனக்கும் குளிரில் தூக்கம் விட்டு விட்டுத்தான் வந்தது. சரி நீ தூங்கு" என்று அவரின் பாலித்தீன் ஷீட்டைக் கொடுத்தார். இருவரும் "இந்தக் கூதக் காற்றையே உன்னால் தாங்க முடியவில்லை.உனக்குப் பனிப்புயல் வேற அடிக்கவில்லை என்ற வருத்தமா", என்று கிண்டல் அடித்தனர்.நான் சிரித்து இதுவும் ஒரு வித்தியாசமான அனுபவம்தானே என்று நிம்மதியாக தூங்க ஆரம்பித்தேன். தொடரும் நன்றி.

Tuesday, December 29, 2009

வெள்ளியங்கிரி மலை புனிதப் பயணம் - பாகம் 5

நான் என் திருக்கோவில் தரிசன பதிவில் தெளிவாக கூறியிருப்பது போல, ஒரு கோவில் தரிசனம் என்பது வெறும் கருவறையில் சூடம் ஏற்றி சாமி கும்பிடுவது மட்டும் அல்ல. அந்தக் கோவிலில் சுற்றிப் பார்த்து பிரகாரம்,சிற்ப்பங்கள்,கதை,, குளம்,பிராசாதம் என பூராவும் அனுபவித்து வந்தால்தான் மனதுக்குத் திருப்தி தரும். நாமும் இந்தக் கட்டுரையில் மலையின் அழகு, காட்டின் சிறப்பு மற்றும் அங்கு உள்ள சிறப்பு,பாதக அம்சங்கள் பற்றித் தெளிவாக தெரிந்து கொள்ளலாம். இந்தக் கட்டுரையின் இப்பதிவில்தான் நாம் மலை அழகை இரசிக்கலாம். சீதாவனம்,ஆண்டி சுனை மற்றும் சுவாமி மலையின் அடிவாரம் ஆகியவை இயற்கை அழகை பரிபூரணமாக காட்டுவை. நாம் பார்க்கலாம் வாருங்கள்.

இந்த இடங்கள் மலையுச்சியில் உள்ள சமவெளிகள் ஆகும். இங்கு சிறிது ஏற்ற இறக்கமாகவும்,சுற்றிலும் அடர்ந்த வனங்கள், பூக்கள்,மூலிகைச் செடிகள்,மரங்கள்,பாறைகள் நிறைந்த இடங்கள். இங்கு பல இடங்களில் குகைகள் உள்ளன. இங்குள்ள தும்பை,கொன்றை மலர்ச் செடிகளின் அழகும்,மணமும் மிக அழகாக இருக்கும். மலைகளின் சரிவுகள் நம்மை பிரமிக்க வைக்கும். நாம் இங்கு மலையின் ஒருபுறம் கோவை மாநகரின் அழகும்,மறுபுறம் கேராளாவின் பாலக்காட்டின் அழகும் அற்புதமாக இருக்கும். இரவில் தெரியும் மின்விளக்குகளின் அழகு அதி அற்புதம். இந்த மலையின் சரிவில் கோவை மாநகரின் குடினீர் ஆதராமாக விளங்கும் சிறுவானி நதியின் தண்ணீர் கேட்ச்மெண்ட் ஏரியா என்னும் நீர்பிடிப்புப் பகுதிகளைக் காணலாம். சிறுவானி நதியின் அணையின் ஒரு பகுதியும் மிக அழகாக இருக்கும். இரவு மற்றும் அதிகாலைப் பனியின் நீல வண்ண அழகு மிக இரம்மியமாக இருக்கும்.

நீலமலைத் தொடர்களின் அழகும்,மிக ஆபத்தான பள்ளத்தாக்குகளும் பயத்துடன் கூடிய அற்புத உணர்வைத் தரும்.அதிகாலைப் பனியில் கலந்து வரும் இயற்கையின்,மரங்களின் வாசனை உணர்ந்து அனுபவிக்கத் தக்கது. இங்கு நீங்கள் படத்தில் காண்பது ஜோதிப்புல் என்னும் புல் வகையச் சார்ந்தது. இந்தப் புல் பகலில் சூரியனில் இருந்து வெப்பத்தை எடுத்து இரவில் வெளியிடும். இதன் கதகதப்பு மிகவும் அருமையாக இருக்கும். இது இரவில் பனியில் நனைந்து அதன் இலைகளில் நீர்த்துளியாக கேர்த்து இருக்கும். அந்த நீர்த்துளிகளில் நிலவின் ஓளி பட்டு எதிரெளிப்பது,தீ எரிவது போல தோன்றமளிக்கும். ஆதலால்தான் இதை ஜோதிப்புல் என்பார்கள்.
இந்த புல்லை வெட்டி அங்கு இருக்கும் தங்கும் குடிசைகளின் உட்புறம் போட்டு இருப்பார்கள். இந்தக் காய்ந்த புல்லின் மீது படுத்தால்,நமக்கு இயற்கையான கதகதப்பு கிடைக்கும்.

காட்டின் ஓரத்தில் மலை சரிவில் வனத்துறையினர் மூங்கில்,நாணல் மற்றும் பனை ஓலைகளைக் கொண்டு குடிசை அமைத்து,தரையில் இந்த ஜோதிப் புல்லைப் பரப்பி இருப்பார்கள். வெளியே அடிக்கும் குளிரின் பகுதிதான் இந்தக் குடிசைக்குள் இருக்கும். தூங்குவதுக்கு மிக அருமையான இடமும் இது ஆகும். எப்போதும் படுக்க உரச்சாக்கும், பாலித்தீன் ஷீட்களையும்,தலைக்கு மப்ளரும் எடுத்துச் செல்லும் நாங்கள்,இந்த முறை இரவு முழுதும் மலை ஏறலாம் என்ற திட்டத்தின் படி அவற்றை எடுத்துச் செல்லவில்லை. இங்கு நின்றால் அல்லது அமர்ந்தால் குளிரும், நடந்தால் வியர்க்கும் ஆதலால்,இரவு முழுக்க நடக்கப் போகின்றேன். தேவையில்லை என்று கொண்டு வரவில்லை. ஆனால் நல்ல காலனிலை நிலவியதால் நாங்கள் ஆண்டி சுனை என்னும் பகுதிக்கு இரவு பதினோரு மணியளவில் அடைந்து விட்டேம். இனி சுவாமி மலை ஒன்றுதான் பாக்கி. மிக மெதுவாக ஏறினால் கூட ஒரு மணி நேரப் பயணத்தில் ஏறி விடலாம். சுவாமி மலை உச்சியில் ஜம்பது பேர் மட்டும் தங்க முடியும் என்பதால், நாங்கள் இரவு ஆண்டி சுனையில் இந்தக் குடிசையில் தங்கி அதிகாலையில் சுனையில் குளித்து மலை ஏற முடிவு செய்தனர். நானும் என் அண்ணாவும், படுக்க மற்றும் குளிருக்கு மப்ளர், ஸ்வெட்டர் இல்லாமல் மாட்டிக் கொண்டேம். என்ன செய்வது, சமாளிப்போம் என்று இரவு தங்க முடிவு செய்தோம். நண்பர்கள் கொண்டு வந்த உரச்சாக்கில் புல்லின் மீது விரித்து படுத்தோம். இன்று புகைப்படங்கள் அதிகம் ஆதலால் நாளை எனது வித்தியாசமான அனுபவத்தை எழுதுகின்றேன்.நான் இரசித்து எழுதிய மாதிரி இந்த இயற்கை அழகுகளை ஒரு முறைக்கு, இரு முறை கண்டு களியுங்கள். நன்றி.

Monday, December 28, 2009

வெள்ளியங்கிரி மலை புனிதப் பயணம் - பாகம் 4

கைதட்டி சுனையில் அருகில் இருக்கும் தங்கும் குடிசையில் முக்கால் மணினேர தூக்கத்திற்க்குப் பின்னர் நாங்கள் சீதாவனம் அல்லது வீபூதி மலை நோக்கிய பயணத்தைத் தொடர்ந்தோம். இதற்கு இடையில் வருவதுதான் வழுக்குப் பாறை என்னும் மலை. ஒரு அடர்ந்த காட்டை உடைய மலையின் சரிவில் உள்ள பாறை முடிவுதான் இந்த வழுக்குப் பாறை. பெயருக்கு ஏற்ற சரிவும், வழவழப்பும் கூடியது இந்தப் பாறை. மரங்களற்று பெரிய பாறையில் சிறிய அளவில் படிகள் போன்று செதுக்கிய அமைப்பை உடையது. என் தந்தையார் சென்ற காலத்தில் இந்தப் படிகளும் இருக்காதாம். பாறையைப் பற்றித் தவழ்ந்து ஏறவேண்டுமாம். இப்போது படிகள் இருந்தாலும் கவனமாக ஏறவேண்டும். ஒரு பக்கம் காடுடன் கூடிய பாறைச் சரிவும், மறுபுறம் அடர்ந்த காடும் உடையது. இந்தப் பாறையில் வழுக்கி விழுந்து,சரிவில் உருண்டால் நாம் நேராக குறுக்கு வழியில் சிவபதவி என்னும் கையாலாய மலையை அடைவேம். அப்படி போவது நல்லது அல்ல என்பதால் நாம் கவனமாக நடப்போம்.

இந்தப் பாறையைக் காலையில், அல்லது மாலையில் கடப்பது சுலபம். வெய்யிலில் ஏறினால் கால் கொப்பளித்து விடும். மழை பெய்யும் போது வழக்கும் தன்மையுடையது. இரவில் ஏறும் நாங்கள், இறங்கையில் காலை பத்து மணிக்கு முன்னர் இந்த இடத்தைக் கடந்து விடுவோம். மிக கவனமாக குச்சி ஊன்றி ஏறவேண்டும். ஏறுவதைக் காட்டிலும் இறங்குவது மிகக் கடினம். குச்சியை நன்றாக, அழுத்தமாக ஊன்றி இறங்க வேண்டும். இது மிக செங்குத்தாக ஒரு இருபது படிகளும், பின்னர் சற்று சமதரையாக படிகளும் இருக்கும். படத்தைப் பெரிதாக்கிப் பார்த்தால்,படத்தில் முன்னால் இறங்கிய மனிதர்கள் எவ்வளவு சிறியதாக காட்சியளிக்கின்றார்கள் என்பதில் இருந்து பாறையின் இறக்கத்தைக் காணலாம். இந்த இடத்தைக் கடந்து சிறிது தூரம் மலை ஏறினால் நாம் சீதாவனத்தை அடையலாம். இந்த இடம் சீதாவனம் என்று அழைக்கப்படும் காரணம் எதுவும் தெரியாது. தென்றுதொட்டு வரும் பெயர்.ஆனால் வீபூதி மலை என்று அழைக்கப்படும் காரணம். இந்த மலையில் மண்ணை சிறிது கிளறி விட்டுப் பார்த்தால் வெள்ளை ஜிப்சம் மண் கிடைக்கும். இதை அந்தக் காலத்தில் வீபூதியாக மக்கள் எடுத்துச் செல்வார்கள். மருத்துவ குணம் உடையது.

இதற்காக நம் மக்கள் அங்கு தோண்டித் தோண்டி அந்த மலை மிகவும் குண்டும் குழியுமாக இருக்கும். மழையில் அரித்து அங்கு ஏற்ற இறக்கமாக இருக்கும். ஆதலால் மிக கவனமாக நடக்க வேண்டும்.கொஞ்சம் தடுமாறினாலும் கீழே விழுந்து கால் சுளுக்கிக் கொள்ளும். ஒருபுறம் அடர்ந்த காடும், மறுபுறம் அபாயமான மலைச் சரிவும் கொண்டது. மிகப் பெரிய பாறைகளை கொண்ட வளைந்து வளைந்து ஏற்றம் மற்றும் இறக்கங்களைக் கொண்ட சீதாவனத்தைக் கடந்தால் வருவது ஆண்டி சுனை. இந்த சீதாவனத்திலும், அண்டிசுனை, சுவாமி மலையின் அடிவாரத்தில் உள்ள அடர்ந்த காடுகளில் தான் வீரப்பனைத் தேடி அதிரடிப் படையினர் முகாம் அமைத்து இருந்தார்களாம். தமிழர் இயக்கத் தீவீரவாதி மாறனைக் கைது செய்ததது இந்தச் சீதாவனத்தில் என்ற தகவலும் உண்டு. சீதாவனம் குளிரும், வெய்யிலும் உடைய அற்புதமான காலனிலை உடையது. இங்கும்,அடுத்து வரும் ஆண்டிசுனை, சுவாமிமலை அடிவாரப் பகுதியிலும் இந்திய காட்டெருமைகள் அதிகம் காணப் படும். காட்டெருமைகள் வந்தால் நாம் பல்லி அல்லது சிலந்தி போல அங்கு இருக்கும் பிடிமானம் இல்லாத பெரிய பாறைகளின் மீது ஏறினால் உயிர் தப்பலாம். இல்லாவிட்டால் தப்பிக் கூட வழி கிடையாது. ஆனால் இதுவரை யாரும் இந்த மலையில் வனவிலங்குகளால் தாக்கப் பட்டது கிடையாது.

இதற்கும் ஆண்டி சுனைக்கும் இடைப் பட்ட பகுதியில் அந்த மலைவாசிகளின் கடைகள் இரண்டு அல்லது மூன்று இருக்கும்.இந்த கடைகளில் ஜாதிக்காய்,ஜவ்வாது,வேங்கை போன்ற மூலிகைப் பொருட்களும், மூலிகை மரங்களின் வேர்கள், கட்டைகள் விற்பார்கள். மூலிகை லோகியங்கள், மற்றும் வேங்கை மரத்தின் பால் என்னும் மை போன்ற பிசினை விற்பார்கள். இந்த வேங்கை மரத்து பிசினால் குழந்தைகளுக்கு மையிட்டால் குழந்தைகளுக்கு வியாதி, காத்துக் கருப்பு எதுவும் அண்டாது என்ற நம்பிக்கை உள்ளது. நாங்களும் எங்க அண்ணாவுன் குழந்தைக்கு வாங்கி வந்தோம். நாங்கள் இரவு வேளையில் அங்கு சென்ற போது, அவர்கள் வளர்க்கும் நாய்கள் குரைத்துக் கொண்டு கடைகளுக்குப் பின்னால் கூட்டமாக ஓடியது. நாங்கள் புதியவர்களான எங்களைப் பார்த்துக் கொண்டு ஓடியது என்று நினைத்துக் கொண்டு, கூலாக பேசிக் கொண்டு நடந்தோம். இதை அடுத்து உள்ள ஒரு இடத்தில் நாங்கள் கொஞ்சம் அமர்ந்து களைப்பாறியும் நடந்தோம். ஆனால் அடுத்த நாள் காலையில் நாங்கள் இந்த இடத்திற்க்கு வரும் போது, நாய்கள் சர்வ சாதரனமாகப் பார்த்து விட்டுத் தூங்கியது. நான் வியப்புற்று கடைக்காரரிடம் கேட்டபோது. அவர் சிரித்துக் கொண்டு சொன்னார். அது அப்ப காட்டுக்குள் காட்டெருமைகள் கூட்டம் வந்தது. அதுனாலதான் நாய்கள் அவைகளை துரத்திக் கொண்டு ஓடியது. இங்கு நாய்கள்தான் அவைகளிடமும், செந்நாய் கூட்டத்திடமும் எங்களுக்குப் பாதுகாப்பு என்றார். நான் அவைகள் வந்து விட்டால் என்ன செய்வீர்கள் எனக் கேட்டபோது அவர், அவைகள் மிகப் பலமும், கோபமும் உடையது. மனிதர்களை அவற்றிக்குப் பிடிகாது. இந்தக் கடைகளை எல்லாம் நொடியில் முட்டி உடைத்து விடும். நாங்கள் ஓடிப் போய் பாறைகளில் ஏறினால் மட்டும் உயிர் பிழைக்கலாம் என்று கூறினார். நான் அங்கு தங்கிய விசயத்தைக் கூறியபோது, அவர் இதுவரை பக்தர்கள் யாரையும் அவைகள் முட்டவில்லை. அது உங்கள் கண்ணிலும் படாது. இது எல்லாம் ஈசனின் அருள் என்றார். அவ்வளவு அடர்ந்த காட்டில் எனது மூன்று வருடப் பயணங்களின் போது, நான் பாம்பு அல்லது எந்த மிருகத்தையும் கண்டதில்லை என்பதை நினைக்கும் போது இது இறையருள் தானே. அடுத்த பதிவில் நாம் ஆண்டி சுனை பற்றிப் பார்ப்போம். நன்றி.

டிஸ்கி : அடுத்த பதிவில் நான் எனக்கு ஏற்ப்பட்ட வித்தியாசமான ஒரு அனுபவத்தை,ஏறக்குறைய நான் செத்துப் பிழைத்த கதையைக் கூறுகின்றேன். நன்றி.

Thursday, December 24, 2009

வெள்ளியங்கிரி மலை புனிதப் பயணம் - பாகம் 3

அந்த இருளில் கையில் டார்ச்சு லைட்டுடன் எங்களின் பயணம் தொடர்ந்தது. இனி வெள்ளைப் பிள்ளையார் கோவிலில் இருந்து பாம்பாட்டி சுனை, மற்றும் கைதட்டி சுனை, சீதாவனம் வரை, நூறடிகளுக்கு மலைப்பாதையும்,பின்னர் பத்துப் படிகளும் இருக்கும். பாதையும்,படிகளும் மழையினால் ஏற்ற இறக்கமாகவும்,சீர்குழைந்தும் இருக்கும். மெதுவாகவும்,பார்த்தும் நடக்க வேண்டும். சில சமயம் பாறைகளின் மீது நடக்கும் போது அது வழவழப்பாக இருந்தால், நல்லாக் காலை ஊன்றிப்,பின்னர் மறுகாலை எடுத்து வைக்க வேண்டும். வழுக்கி விடாமல் கவனமாக நடக்க வேண்டும். கையில் ஊன்று கோலை கொட்டியக ஊன்றி முட்டுக் கொடுத்து, ஏறி இறங்க வேண்டும். இப்படியாக நாங்கள் பாம்பாட்டி சுனையை அடைந்தோம்.

பாம்பாட்டி சுனை என்பது பாறைகளின் இடையில் கசிந்து வரும் தண்ணீர் ஆகும். நல்ல சுவையான, தெளிந்த சுத்தமான தண்ணீர், இங்கு மினரல் வாட்டர் போல காசில்லாமல் கிடைக்கும். இந்த தண்ணீர் தாகம் தீர்ப்பதுடன் ஆரோக்கியத்தையும், நிறைவையும் தரும். இந்த சுனையில், நீர் வரும் பாதையில் மூங்கில் குச்சியை பிளந்து(மூங்கில் தப்பை) சொருகி இருப்பார்கள். அதில் பைப்பில் வருவது போல தண்ணீர் நில்லாமல் கொட்டிக் கொண்டு இருக்கும். இந்த சுனைக்கும் பாம்பாட்டி சித்தருக்கும் சம்பந்தம் இல்லை. இந்த சுனையில் தண்ணீர் வரும் பாறையின் அருகில் காதை வைத்துக் கேட்டால் பாம்பு சீறுவதைப் போல உஷ், உஷ் என்ற சத்தம் கேக்கும். ஆதலால் இதுக்கு பாம்பாட்டி சுனை என்ற பெயர் வந்தது. இங்கு நாங்கள் அமர்ந்து இரவு உணவுவாக சப்பாத்தியும்,தக்காளித் தொக்கும் சாப்பிட்டேம்.அரைமணி நேர ஓய்வுக்குப் பின்னர் நாங்கள் கைதட்டி சுனை நோக்கிப் பயணத்தைத் தொடர்ந்தோம். இரவு கைதட்டி சுனை அடைந்து,அங்கு சிறுது நேரம் ஓய்வு எடுத்தோம். கைதட்டி சுனை என்பது மூன்று பெரிய பாறைகளுக்கு நடுவில் ஒரு மூங்கில் தப்பையைச் சொருகி வைத்துருப்பார்கள். அதில் குழாயில் கொட்டுவது போல தண்ணீர் கொட்டும். இந்த தண்ணீர் பாம்பாட்டி சுனைத் தண்ணீரை வீட அதிகமாகவும், சுவையாகவும் இருக்கும். ஒரு காலத்தில் இங்கு பாறையில் கையைக் குவித்துப் பிடித்து அதில் கொட்டும் தண்ணீர் எடுப்பது வழக்கம்.ஆதலால் இது கைகட்டி சுனை என்றும், இங்கு பாதை ரண்டாக இரண்டாகப் பிரியும். ஒரு பாதை காட்டுக்குள்ளூம்(கழிக்க), மறு பாதை மலைக்கும் செல்லும்,ஆதலால் இது கைகாட்டி சுனை என்றும் அழைக்கப் பட்டு, இப்போது கைதட்டி சுனை என்றாகி விட்டது.(கை தட்டினால் தண்ணீர் வரும் எனக் கதையும் உண்டு)

இங்கும் ஒரு கடை இருக்கும், ஆரஞ்சு மிட்டாய்,மாங்காய்,நெல்லிக்காய்,மிக்சர்,நிலக்கடலை போன்றவற்றை விற்பார்கள். சூடாக பால் இல்லாத சுக்கு டீ, மற்றும் சுக்கு காப்பி கிடைக்கும். தூங்குவதற்க்கு குடிசையும் இருக்கும். இங்கு நாங்கள் ஒரு மணி நேர ஓய்வும்,முக்கால் மணி நேர தூக்கமும் போட்டேம். பின்னர் அங்கு இருந்து சீதாவனம் நோக்கிப் பயணத்தை தொடர்ந்தோம். ஏறுவதற்க்கு மிகச் சிரமமான, அதைவீட இறங்குவதற்க்கு கடினமான வழுக்குப் பாறை பயணம் பற்றி நாளைய பதிவில் பார்ப்போம். தொடரும்.

டிப்ஸ் : நண்பர் இராஜேந்திரன் அவர்கள் நாளை இங்கு செல்வதால் மலையாத்திரைக்குச் செல்ல அவசியமானவைகளை டிப்ஸாக செல்கின்றேன். ஒரு தோல் பை ஒன்றும், ஒரு பெரிய வாட்டர் கேனும், தண்ணீர் குடிக்க ஒரு பிளாஸ்டிக் வாட்டர் கேனும் எடுக்கவும். பெரிய வாட்டர் கேனில் வரும் போது ஆண்டி சுனை தீர்த்தத்தை வீட்டில் உள்ளவர்களுக்காகப் பிடித்து வரலாம்.நல்ல பெரிய டார்ச் லைட் மற்றும் புதிய பாட்டரிகள் பெருத்தப் பட்டு எடுத்துக் கொள்ள வேண்டும்(இரவில் ஏறினால்). மழை பெய்தாலே, அல்லது இரவில் தங்கினால் படுக்க பாலித்தீன் ஷீட் அல்லது உரச் சாக்கு எடுத்துக் கொள்ளவும். கையில் பிரசாத நைவேத்தியத்திற்க்கு, முந்திரி, உலர் திராட்சை, கற்கண்டு,பேரிச்சை,அவல்,நாட்டுச் சக்கரை எடுத்துக் கொள்ளவும். வழியில் தொண்டை வறட்சிக்கு ஆரஞ்சு மிட்டாய், பாப்பின்ஸ், மாங்கோ பைட்ஸ் அல்லது கலோரி தரும் எக்லர்ஸ் சாக்லோட்டுகள்,குட் டே பிஸ்கட்கள் எடுத்துச் செல்லவும். கண்டிப்பாய் குளுக்கோஸ் பாக்கெட் எடுத்துக் கொள்ளவும்.உணவுக்குக் கூடுமான வரையில் வயிற்றுக் தெந்திரவு தராத காரமற்ற உணவுகள் நன்று. என்னைப் பொறுத்த வரை சப்பாத்திதான்(காரமில்லாத தக்காளித் தொக்கு) சிறந்தது. கட்டுச் சாதங்கள் வயிற்றில் பொருமல்,அல்லது வயிறு உப்புசம் ஏற்படுத்தும். கால் அல்லது அரை வயிறு உணவு சிறந்தது. மலை அடிவாரத்தில் தான் கழிப்பிடம் உள்ளது. மலை ஏறினால் அடுத்த நாள்தான் மீண்டும் வர முடியும். ஆதலால் உணவுக் கட்டுப் பாடு அவசியம். இல்லாவிட்டால் சுனை அருகில் உள்ள காட்டுப் பகுதிக்குத்தான் செல்லவேண்டும். பின்னும் களைப்படைய வைக்கும். ஆதலால் உணவுக் கட்டுப்பாடு மிகவும் அவசியம். காதுக்கு மப்ளரும்,முடித்தால் ஸ்வெட்டர் ஒன்றும் எடுத்துக் கொள்ளவும். அல்லது கனமான டீ ஸர்ட் போடவும். மலை ஏறும் போது வெற்று உடம்பும், தங்கும் போது டீ ஸ்ர்ட்டும் போட்டுக் கொள்ளலாம். நடக்கும் போது மிகவும் வேர்க்கும், தொண்டை வறளும். நிற்கும் போதும், தங்கும் போதும் மிகவும் குளிரும் இடம் அது.இளவயதினர் அங்கு விற்கும் ஊன்று கோலான மூங்கில் கழி இல்லாமல் ஏறிவிடுவார்கள். ஆனால் ஏறுவதற்க்கு வீட றங்குவதற்க்கு ஊன்று கோல் மிக அவசியம். இது நம் காலின் சுமையைக் குறைப்பதுடன், கால் ஆடுதசையின் பிடிப்பைக் குறைக்கும். கழி இல்லாமல் பயணம் செய்தால் விழுவதற்க்கு அதிகமான சாத்தியங்களும், அடுத்த ஒரு வாரம் கால் பிடிப்பும் நிச்சயம். ஆகவே உங்களால் முடிந்தாலும் கழி வைத்துக் கொள்வது நன்று.

முக்கியமான டிப்ஸ்:
குண்டானவர்கள், என்னைப் போல தொப்பை உடையவர்கள், உடல் எடை அதிகம் உள்ளவர்கள் செங்குத்தாக இறங்கும் போது முன்னேக்கி விழ வாய்ப்புக்கள் அதிகம். ஆதலால் அவர்கள் இறங்கும் போது முன்புறமாக தடியைக் குறுக்கு வாட்டில்(கவனிக்கவும் உடலின் முன், உடலுக்கு குறுக்கு வாட்டில்) ஊன்றி இறங்கவும்.நன்றி.

Tuesday, December 22, 2009

வெள்ளியங்கிரி மலை புனிதப் பயணம் - பாகம் 2

சத்குரு ஜக்கிவாசுதேவ் அவர்களின் ஆசிரமத்தில் இருந்து கிளம்பி, வெள்ளியங்கிரி அடிவாரக் கோவிலுக்கு வந்து அடைந்தோம். இங்கு திரு வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. பெண்கள் தங்கள் குடும்பத்துடன் இங்கு வந்து வழிபாடு நடத்திப் பின்னர் தங்கள் கனவர், மற்றும் குழந்தைகள் அனைவரும் மலை மீது ஏறி திரும்பி வரும்வரை இங்குதான் காத்துருப்பார்கள். சுமாரான வசதிகளுடன் தங்கும் அறைகள்(சத்திரங்கள்) உள்ளன. (படத்தில் நானும் என் நண்பன் முரளியும் வலது ஓரம் உள்ளேம்) நாங்கள் இங்கு வந்து காலை கடன் முடித்துப் பின்னர் அங்குள்ள இறைவன் வெள்ளியங்கிரி ஆண்டவர், பார்வதி, விநாயகர் மற்றும் முருகன் ஆகியோருக்குப் புது வஸ்த்திரங்கள் அணிவித்துப் பூஜைகள் நடத்தி விட்டு, மதிய உணவு அருந்தி, இரவு பயணக் களைப்பு போக ஓய்வு எடுத்தோம். இரவு முழுக்க மலை ஏறிக் காலை சூரிய உதயத்தின் போது மலை மீது உள்ள வெள்ளியங்கிரி ஈசனின் அற்புத தரிசனம் காண்பதுதான் பயணத்தின் நேக்கம். ஆதாலால் மாலை ஜந்தரை மணிக்கு மலை ஏற திட்டமிட்டுக் கிடைத்த மூன்று மணி நேர தூக்கத்தைப் போட்டேம். ஆனால் எங்கள் வேலைகள் எல்லாம் மதியம் மூன்று மணிக்கு முடிந்து விட்டதாலும், கால நிலை மிகவும் அருமையாக, வெய்யிலும் இல்லாமல் இருந்ததால் மதியம் மூன்று மணியளவில் பயணத்தை ஆரம்பிக்கத் தொடங்கினோம். நான் கேமாரவின் பாட்டரி சார்ஜ் கருதி கோவிலைப் படம் எடுக்கவில்லை. மன்னிக்கவும்.

அங்கு இருக்கும் சாமியார்கள் பலர் இல்வாழ்க்கையை வெறுத்து, துறவறம் பூண்டவர்கள். அவர்களில் சிலர் நிறையப் படித்தவர்கள், நல்ல வேலைகளில் இருந்தவர்கள். அங்குள்ள சாமியார்கள் யாரிடமும் கையேந்தமாட்டார்கள். அவர்கள் கூட்டமாக அமர்ந்து தோவாரம், திருமுறைகள் போன்ற பாசுரங்களைப் பாடிக் கொண்டு இருப்பார்கள். அவர்கள் முன்னர் ஒரு திருவோடும், கற்பூரத் தட்டும் இருக்கும். பக்தர்கள் தாங்கள் விரும்பும் காணிக்கையை இட்டு நமஸ்காராம் செய்தால் ஆசிர்வாதம் செய்வார்கள். காணிக்கை இடாவிட்டாலும் அவர்கள் ஒரே நிலையில் தான் இருப்பார்கள். குடும்பம் மற்றும் சொந்தபந்தங்களுடன் வருவேர் அங்கு சமைத்து இவர்களுக்கு அன்னதானம் இடுவார்கள். இவர்களும் அவர்களுடன் பூஜைகள் செய்து அவர்களை ஆசிர்வாதம் செய்வார்கள். அவர்கள் மலைப் பயணத்தின் போது கடைப்பிடிக்கும் சில அறிவுரைகள் கூறுவார்கள். மலையில் பனி, மழை,குளிர் மற்றும் விலங்குகளின் நடமாட்டம் போன்ற பயனனுள்ள தகவல்கள் மற்றும் தங்கும் இடங்களைப் பற்றியும் கூறுவார்கள். இவர்களின் அறிவுறுத்தலின் பேரில் நாங்கள் மூன்று மணியளவில், மலை தேவதையான செல்லியம்மனுக்கு புது வஸ்த்திரங்கள் சார்த்திப் பூஜைகள் முடித்து மலை ஏறத் தொடங்கினோம்.

திருப்பதி மலை போல இங்கும் ஏழு மலைகள் ஏறவேண்டும். சிலர் சமவெளிகளை விட்டு விட்டு ஜந்து மலைகள் என்றும் கூறுவார்கள். ஆனால் அவை மலைமீது இருக்கும் ஏற்றத்தாழ்வான நிலப் பரப்பு ஆகையால் அவையும் மலைகள் தான். ஆக நாம் சரித்திரக் கதையில் வருவது போல ஏழு மலைகள் தாண்டிப் பயணம் செய்யவேண்டும். அந்த ஏழுமலைகள் வரிசையாக :

1. வெள்ளைப் பிள்ளையார் கோவில்,
2. பாம்பாட்டி சுனை,
3.கைதட்டி சுனை,
4.சீதாவனம் அல்லது விபூதி மலை,
5.ஆண்டி சுனை,
6.ஒட்டன் சமாதி,
7. சுவாமிமலை.

இதுதான் நமது பயண வழித்தடம். நாம் முதலில் வெள்ளைப்பிள்ளையார் கோவிலுக்குச் செல்வேம். கரடு முரடான, உருக்குலைந்த படிகள் ஏறக்குறைய மூவாயிரம் படிகள் ஏறினால் முதலில் வருவது வெள்ளைப்பிள்ளையார் கோவில். இங்கு இருக்கும் விநாயகர் கோவில் வெள்ளை வர்ணம் உடையதாலும், பிள்ளையார் முழுக்க விபூதி பூசப்பட்டு, வெள்ளையாக காட்சி தருவதால் வெள்ளைப்பிள்ளையார் கோவில் என்று அழைக்கப் படுகின்றது. சொல்வாடையில் சிலர் இதை அறியாமல் வெல்லப்பிள்ளையார் கோவில் என்று அழைத்து, நாட்டு வெல்லங்களைப் பிரசாதமாக தருவார்கள். இந்தக் கோவிலை அடைவதுதான் நம் பிரயாணத்தில் மிகவும் கடினமான பகுதி. செங்குத்தான படிகள். மழையில் சீர்குழைந்து இருக்கும். அப்போதுதான் ஏற ஆரம்பித்து இருப்பதால் மேல் மூச்சு வாங்கும். இதில் ஏறுவதுக்கு அதிக நேரம் பிடிக்கும். அதிகமாக காடு சூழ்ந்து இல்லாமல் அடர்ந்த மூங்கில் காடுகள் புதர் போல இருப்பதால் இங்கு நாகங்கள், கரடிகள் அதிகம் காணப்படும். இருனூறு படிகள் அல்லது மூந்நூறு படிகளுக்க்கு ஒரு முறை இது போல அமர்ந்து மூச்சு சமனிலைக்கு வந்தவுடன், திரும்பவும் ஏறவேண்டும். இருபுறமும் புதர்கள் மற்றும் மலைச் சரிவை வேடிக்கை பார்த்தபடியும், மனதில் ஈசனின் மந்திரம், அல்லது கடவுளைத் துதித்தபடி ஏறவேண்டும். நாங்கள் ருத்திரம் சொல்லிக் கொண்டு மலை ஏறினோம். பரத்குமார் ருத்திரம் படிக்க நாங்கள் அனைவரும் அவரைத் தொடர்ந்து மலை ஏறினோம்.(படத்தில் நானும் என் இரண்டாவது அண்ணா, திரு.இராமானுஜம் அவர்களும்)

எங்களைப் போன்றவர்கள் ஒரு இரவு முழுதும் இயற்கை இரசித்தபடி ஏற, அங்கு வாழும் சிறுவர்கள் ஜந்து மணி நேரத்தில் மொத்த மலையும் ஓடி ஏறுவார்கள். கடும் முயற்ச்சியில் மலை ஏறி கோவிலை அடைந்து அங்கு பிள்ளையாருக்கு வஸ்த்திரங்கள் சார்த்திப் பூஜைகள் முடித்துப் பின்னர் அங்கு உள்ள சோடாக்டையில் பன்னீர் சோடா, லெமன் சோடா போன்றவைக் குடித்துவிட்டு, ஒரு அரை மணி நேர ஓய்வுக்குப் பின்னர் மலைப் பயணத்தை ஆரம்பித்தோம். இரவு ஏழு மணியளவில், எங்களின் அடுத்த கட்டமான பாம்பாட்டி சுனை நோக்கி நடக்க ஆரம்பித்தோம்.(படத்தில் எங்களை அழைத்துச் சென்ற திரு.பரத்குமார். நடுவில் எனக்கு முன் இருப்பவர்) வாருங்கள் நாமும் அடுத்த பதிவில் பாம்பாட்டி சுனைக்குப் போவேம். தொடரும். நன்றி.

டிப்ஸ் : இது போன்ற மலைப் பிராயனத்தில் ஓய்வு எடுக்கும் போது கால்களை மடித்து அமரக் கூடாது. அப்படி அமர்ந்தால் தொடை அல்லது கெண்டைகால் ஆடுதசைப் பிடிப்பு ஏற்ப்படும். கூடுமான வரையில் கால்கள் தளர்வாக நன்று நீட்டி அமரவேண்டும்.

டிஸ்கி : அடிவாரக் கோவிலின் அருகில் இருட்டுப் பள்ளக் காட்டில் ஒரு ஓடை உள்ளது. இங்கு சுதந்திர விரும்பிகளான நம் மக்கள் தமது கடன் கழிக்க, குளிக்கச் செல்வார்கள். எங்கள் குருப்பும் செல்வார்கள். ஆனால் நான் இவர்களுடன் இணையும் முன் வருடம். எங்க அண்ணா, மற்றும் பரத்குமார் ஆகியோர் குளிக்க ஓடைப் பக்கம் சென்று உள்ளனர். அங்கு ஓடைக் கரையில் இருந்த அப்போது போட்ட சூடான யானை லத்திகளைப் பார்த்துத் திரும்பி வந்து விட்டனர். ஆதலால் எனக்கு காட்டுக்குள் ஓடைக்கு செல்லும் வாய்ப்புக் கிடைக்கவில்லை. கோவில் குழாய்யடிதான் குளியல்.

Monday, December 21, 2009

வெள்ளியங்கிரி புனிதப் பயணம்

இந்த பூமிப் பிரபஞ்சத்தில் மிகச் சிறந்ததும், புண்ணிய பூமியுமான நம் பாரத தேசம், மிகப் பழமையானதும், சக்திவாய்ந்ததும் ஆகும். எண்ணற்ற மகான், மற்றும் சித்தர்களால் நம் நாடு சிறப்புற்றது. அவர்கள் மலைவாழிடங்களில் தங்களின் சக்தியாலும், தவத்தாலும் கணக்கற்ற மலைகளில் கோவில்களும், பீடங்களும் நிறுவி இருக்கின்றார்கள். மலை,கடல் நிலம் போன்றவைகளில் சக்தி மிக்க இடங்களை தெரிந்து, அவற்றில் இவற்றை நிறுவி இருக்கின்றார்கள். அங்கு நாம் செல்வதின் மூலம், நாம் நமது மனம், உடல் மற்றும் ஆன்மாவை வலுப்படுத்திக் கொள்ள முடியும். சில இடங்களில் இறைவனே சுயம்புவாக வந்து குடியேறியும் உள்ளான். அவனின் ஆற்றல் மிக்க இடங்களாகும் அவை. அப்படி எல்லாம் வல்ல ஈசனாகிய சிவபெருமான் வந்து குடியேறிய இடம் தான் நாம் பார்க்கும் இந்த திருத்தலம்.

வட நாட்டில் பரந்து விரிந்த இமாலயத் தொடரில் எண்ணற்ற மலைச் சிகரங்களும், சக்திபீடங்களும் உள்ளன. அது போல நம் தென்னாட்டிலும் மேற்குத் தொடர்ச்சி மலையில் திருப்பதி,காளகஸ்தி, திருவண்ணாமலை, பர்வதராஜமலை, கொல்லிமலை, ஜவ்வாது மலை, திருமூர்த்தி மலை போன்ற மலைகள் உள்ளன. சபரி மலையும் சக்தி வாய்ந்த ஒரு மலைதான். இது போல ஏறுவதுக்கு கடினமான மலையும், உயரம் கூடிய மலையும் ஆகிய வெள்ளியங்கிரி மலைதான் நாம் இந்த தொடரில் காணும் திருத்தலம் ஆகும். இறைவன் இங்கு ஒரு குகையில் சுயம்புவாக ஒரு பாறை வடிவில் தோன்றி காட்சியளிக்கின்றான். தினமும் காலை ஒரு அற்புத தரிசனமும் அளிக்கின்றான். நாம் அந்த அற்புத தரிசனம் காண இந்த மலைக்கு யாத்திரை செய்வேம். நான் இந்த யாத்திரையை தொடக்கத்தில் இருந்து முடிவு வரை ஒரு பயணம் செய்வதைப் போல கூறவுள்ளேன். அருமையான சுனைகள், நீறுற்றுக்கள், மூலிகை நிறைந்த தண்ணீர் என ஒரு வித்தியாசமான காட்சிகளைப் பார்க்கலாம் வாருங்கள்.

சபரிமலைப் போலவே இந்த மலையிலும் பெண்களுக்குக் கட்டுப்பாடுகள் உள்ளன. பன்னிரண்டு வயதில் இருந்து ஜம்பது வயது வரை உள்ள பெண்களுக்கு இந்த மலையில் ஏற அனுமதி இல்லை. அங்கு யாரும் இருந்துகொண்டு, யாரையும் போகக் கூடாது என்று தடுப்பது இல்லை. ஆனாலும் காலகாலமாய்த் தொடரும் சம்பிரதாயம் இது. மீறி ஏறும் பெண்கள் பல இன்னல்களுக்கு ஆளாகிப் பாதியில் திரும்பி வந்ததாகச் செவி வழிக்கதைகள் கூறுகின்றன. நான் ஏற்கனவே உங்களை சபரி மலைக்கு அழைத்துச் சென்றேன், அதுபோல உங்களால் தரிசிக்க முடியாத வெள்ளியங்கிரி மலைக்கும் அழைத்துச் செல்லுகின்றேன்.மான், காட்டுஎருமை, யானைகள், கரடிகள், சிறுத்தைகள், செந்நாய்கள்,பறவைகள்,குரங்குகள் மற்றும் நொடியில் கடித்து ஆளைக் கொல்லும் மிக விஷம் உடையதும் மிக நிளமானது ஆன இராஜ நாகங்கள்,கரு நாகங்கள் அடந்த காடு இது. அனால் இவற்றில் ஒன்றைக்(நம்ம ஆளு குரங்கைத் தவிர) கூட நான் கண்ணால் பார்த்தது இல்லை. சித்திரை மாதம் முதல் மூன்று மாதங்களில் மட்டும் பயணம் செய்வார்கள். நாம் ஏறும் தடம் பூராவும் மழைக்காலங்களில் தண்ணீர் வழிந்தோடும் வழியாதலால் கோடை காலத்தில் மட்டும் பயணம் மேற்க் கொள்ளுகின்றனர்.

என் தந்தை சுமார் நாற்பது வருடங்களுக்கு முன்னர் இந்த பயணத்தை மேற்க் கொண்ட போது ஒழங்கான பாதையும், வசதிகளும் இல்லை. கையில் பாதை ஏற்ப்படுத்த கத்தியும், மன்னெண்ணய் விளக்குமாய் பயணம் செய்ததைக் கேட்டதில் இருந்து நான் இந்த லைக்கு பயண ஆசை கொண்டேன். ஆனால் கடந்த நாலு வருடங்களுக்கு முன்னர் தான் என் ஆசை நிறைவேறிற்று. முதல் வருடம் ஒரு பயணத்தைப் போலத் தான் இருந்தது. இரண்டாம் வருடம்தான் நல்ல அனுபவங்களும், புகைப் படமும் எடுக்க முடிந்தது. ஆகையால் என் இரண்டாம் வருட யாத்திரையை விவரிக்கின்றேன். கல்பாக்கத்தில் இருந்து நிறையப் பேர் வருடா வருடம் இங்கு போவது வழக்கமாக கொண்டுள்ளனர். என் இரண்டாவது அண்ணாவும் அவர்கள் அலுவலக ஊழியர்களும், திரு. பரத்குமார் என்பவரின் தலையில் மேற்க் கொண்ட யாத்திரை இது. நாங்கள் அனைவரும் கல்பாக்கத்தில் இருந்து இரயிலில் கோவை சென்று, காந்திபுரம் புற நகர் பேருந்து ஒன்றில் போரூர் வழியாக முதலில் இருட்டுப் பள்ளம் என்றும், பூண்டி என்னும் மலை அடிவாரப் பகுதியும், காட்டுப் பகுதியில் உள்ள யோகி.ஜக்கி வாசுதேவ் அவர்களின் ஆசிரமத்தை அடைந்தேம்.காந்திபுர பேருந்து நிலையத்தில் என் நண்பன் முரளியும் தாராபுரத்தில் இருந்து வந்து இணைந்து கொண்டான்.

அங்கு முழுக்க பாதரசத்தில் ஆன பாதரச லிங்கத்தின் குளத்தில் குளித்துப் பின்னர், பாதரசத்தைக் கட்டி செய்து உருவாக்கி இருக்கும் தியான லிங்கத்தில், மண்டபத்தில் உக்காந்து, தியானம் செய்துவிட்டு எங்களின் வெள்ளியங்கிரிப் பயணத்தைத் தொடர்ந்தேம். இங்கு இருட்டுபள்ளம் பூராவும் வளமான தென்னந்தோப்புகள் மற்றும் பாக்கு மரங்கள், அடர்ந்த காடுகள் உள்ள பகுதி. அங்காங்கே "இது யானைகள் நடமாடும் பகுதி யாரும் தனித்து நடமாட வேண்டாம்" என போர்டு வைத்து நம் சுவாஸ்யத்தைக் கூட்டுவார்கள். இந்த பகுதி சாலையில் போருந்துகள் உள்ளன. அவைகளில் ஏறி நாம் வெள்ளியங்கிரி மலை அடிவாரம் வரை செல்லலாம். கோவை, ஈரோடு, பொள்ளாச்சி மற்றும் திருப்பூர் மக்கள் சர்வ சாதரனமாய் செல்லும் இடம் வெள்ளியங்கிரி ஆகும். வயது மூத்த பெண்கள் கூட, காடு கழனிகளில் வேலை பார்த்த திடகாத்திரத்துடன் சாதரனமாய் ஏறுவதையும் காணலாம்.
மீண்டும் நாளை புனிதப் பயணத்தைத் தொடருவேம். நன்றி.

Friday, December 18, 2009

மென்மையான சுரைக்காய் மற்றும் தக்காளி தோசை

சமையல் பதிவு போட்டு ரொம்ப நாள் ஆச்சு, அதுனால ஒரு வித்தியாசமான பதிவு போடலாம்ன்னு. கிராமத்துல பிறந்த பெண்களுக்கு இந்த பதிவு ஒன்னும் புதுசா இருக்காது. இன்றைய பதிவு மென்மையான சுரைக்காய் தோசை. இது திருச்சிப் பக்கம் கிராமங்களில் செய்யும் தோசை. அந்த ஊரு அம்மா ஒருத்தர் எங்க அண்ணிகிட்ட சொல்லும் போது நான் ஒட்டுக் கேட்டுப் போட்ட பதிவு இது.


சுரைக்காய் தோசை : --

தேவையான பொருட்கள் :
அரிசி- 3 கப் அல்லது உங்கள் குடும்பத்திற்க்கு தேவையான அளவு,
ஒரு பிடி துவரம் பருப்பு
சுரைக்காய் ஒன்று. (பெரியதாய் இருந்தால் பாதியளவு).
உப்பு தேவையான அளவு.

செய்முறை : அரிசியையும் துவரம் பருப்பையும் ஒன்றாக இட்டு, தண்ணீரில் ஒரு ஜந்து மணி நேரம் ஊற வைக்கவும்.
சுரைக்காயை தோலுரித்து அதன் சதைப் பகுதிகளை மட்டும் தனியாக வெட்டி எடுத்துப் பின்னர் மாவு அரைக்கும் போது சுரைக்காயும் சேர்த்து அரைக்கவும். மாவு புளிக்க வைத்து தோசை ஊற்றினால் மிகவும் மென்மையான சுவையான சுரைக்காய் தோசை ரெடி.

தக்காளி தோசை : --

தக்காளி தோசை நான் ஊருக்கு போய் இருந்த பொழுது என் மூன்றாவது அக்கா சமைத்த தோசை இது. அன்று நான் முழு விரதம் ஆகையால் நான் சாப்பிடவில்லை. ஆதலால் நீங்கள் சமைத்து நல்லா வந்தா பார்சல் அனுப்பவும். அவரிடம் நான் அளவு கேட்டு இட்ட பதிவு இது.

தேவையான பொருட்கள் :
அரிசி - மூன்று கப்
உளுந்து மூன்று கப்,
துவரை ஒரு கப்
தக்காளி எட்டு
வெங்காயம் இரண்டு.
மிளகாய்த்தூள் ஒரு ஸ்பூன்,
பெருங்காயத்தூள் ஒரு ஸ்பூன்,
உப்பு தேவையான அளவு.

செய்முறை : முதலில் தக்காளியை வெந்நீரில் இட்டு தோலை உரித்து விடவும், பின்னர் நாம் உளுந்து மாவு மற்றும் அரிசி மாவு ஆட்டி(வழக்கமாக மாவு அரைப்பது போல), மாவை எடுக்கும் தருவாயில் மூன்று அல்லது நாலு தக்காளியை மாவில் விட்டு ஆட்டவும். சில சுற்றுக்களில் தக்காளி அரைத்ததும் மாவை எடுத்து, சில மணி நேரம் மாவை புளிக்க விடவும்.வெங்காயத்தை சிறிதாக அரிந்து, வாணலியில் இட்டு வதக்கிப், பின்னர் அதில் மீதம் உள்ள தக்காளியை நறுக்கி அல்லது பிய்த்து போட்டு,மிளகாய்த்தூள்,பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கி, மாவில் கலக்கி தோசை இடவும். செய்து பார்த்துப் பின்னூட்டம் இடவும். நன்றி.

நீங்கள் அனைவரும் தரும் ஆதரவு மற்றும் தைரியத்தால் நான் திங்கள் முதல் மீண்டும் ஒரு படங்களுடன் கூடிய தொடர் பதிவு ஆரம்பிக்க உள்ளேன்.சகோதரிகள் அனைவருக்கும், அனைத்துப் பதிவர்களுக்கும் இந்தத் தொடர் ஒரு பரிசு. குறிப்பாக பெண் பதிவர்களுக்கு இது ஒரு அருமையான வாய்ப்பு. அவர்கள் சென்று பார்க்க முடியாத ஒரு இடத்தையும், அந்த இடத்தில் நடக்கும் ஒரு அற்புதத்தையும் நான் பதிவாக இடவுள்ளேன். எனது அருமை பதிவுலக சகோதரிகளுக்கு இத் தொடர் ஒரு பரிசாக அமையும். தங்கள் அனைவரும் தொடரின் அனைத்தையும் படிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன். இது ஒரு ஆன்மீகம் மற்றும் பயணத் தொடர் ஆகும். வாருங்கள் திங்கள் முதல் பயணத்தைத் தொடருவேம். நன்றி. தங்கள் ஆதரவை நாடும் உங்களின் சகோ. சுதாகர்.

Thursday, December 17, 2009

பயணங்கள் முடிவதில்லை

நான் பதிவு எழுத வந்த கதையை என் ஜம்பதாவது பதிவில் கூறியிருந்தாலும், என் தங்கை சுசியின் அழைப்பை ஏற்று நூறாவது பதிவாக இடலாம் என நினைத்துருந்தேன். ஆனால் சபரிமலைப் இறுதிப் பதிவு நூறாவது பதிவாக அமைந்துவிட்டது. ஆதாலால் கல்யாண மொய் மாதிரி சுசியின் பதிவு நூத்தியேன்னா வச்சுக்கலாம். நான் சிங்கை வந்த கதையைப் பல பதிவுகளில் சொல்லிவிட்டேன். இங்க எனக்கு கணக்குப் பதிவுகளை, வெறும் மானிட்டர் பண்ணும் வேலைதான். ஆதலால் எனக்கு இங்க வேலை கம்மியாக இருந்தது. ஆனி புடுங்காம சும்மா உக்காந்து ஈ அல்லது கொசு ஓட்டலான்னா, இங்க அதுவும் கம்மியாதான் இருக்கு. என்ன பண்ண. அப்பத்தான் நம்ம ஊரு நாட்டு நடப்பை பத்தி தெரிஞ்சுக்கலாம்ன்னு தட்ஸ்தமிழ் பக்கமா ஒதுங்கினேன். அங்கனதான் நமக்கு பிளாக் பத்தி எல்லாம் தெரிஞ்சுது. அப்ப குடுகுடுப்பையாரின் கல்லூரி அனுபவங்களை பற்றி படிக்க நேர்ந்தது. பின் துளசி டீச்சரின் ஆன்மீக மற்றும் கோவில்கள் பதிவுகளையும் படிக்க ஆரம்பித்தேன்.(ஆக நான் பிளாக் எழுதும் தவறுகளுக்கு இவர்கள் தான் பொறுப்பு)

வீட்டுல மாலை வேளைகளில் நானும் என் பக்கத்து அறை நண்பன் திரு. பாஸ்கரும் இரவு சாப்பாடு, மற்றும் மாலை வாக்கிங் போவது வழக்கம். அப்ப நாங்கள் அலுவலம், வீடு மற்றும் கல்லூரிக் கதைகள் பேசுவது வழக்கம். அப்ப நான் அவனிடம் இப்ப பதிவில் இருக்கும் கதைகள் மற்றும் என் அனுபவங்களைக் கூறுவது வழக்கம். அவரும் நல்லா கதை கேப்பாரு. அதை விட்டா பொழுது போக வழியில்லை. அப்ப நான் அவரிடம் இந்த பிளாக்ஸ் பத்திக் கூற அவரும் மடிக்கணினியில் பார்த்துவிட்டு படிக்க ஆரம்பித்து விட்டார். என் கதைகளையும், நான் கூறும் விதத்தையும் கவனித்த அவர் என்னையும் பிளாக் ஆரம்பிக்க சொல்லி என்னை நல்லா சுருதி ஏத்திவிட்டார்.(என்ன நல்ல எண்ணம் பாருங்க அவரு காதுல இரத்தம் வந்த மாதிரி எல்லாருக்கும் வரனும் எண்ணம்- வெய் பிளட் சேம் பிளட்) நான் அப்ப கொஞ்ச கொஞ்சமா நிறைய பிளாக்ஸ் படிக்க ஆரம்பித்த சமயம் அது. ஜாதி இன மோதல்கள் பல இருந்தாலும் நம் பதிவர்கள் அந்த ஜாதிக்கார்களை எல்லாம் விட்டு விட்டு வெறும் பிராமண எதிர்ப்பு மட்டும் பகுத்தறிவு என்றும் ஒரு சாராரை மட்டும் திட்டி பதிவுகள் இடும் போக்கு எனக்கு வெறுப்பை தந்தது. அது மட்டும் இல்லாமல் வலது சாரி சிந்தனையாளர்களால் திரிக்கப் பட்ட அல்லது மறைக்கப் பட்ட இந்திய வரலாற்றை வைத்துக் கொண்டு, தலைவர்களையும், பாரதியையும் கேவலமாய் பேசும் போக்கும் எனக்கு மிகுந்த கோபமும், பிளாக் எழுத ஆர்வமும் வந்ததது. அதன் படி முதலில் இம்சை இளவரசன் என்ற பெயரில் ஆரம்பித்து இரண்டு நாளில் பித்தன், பின்னர் சென்னை பித்தனுக்காக பித்தனின் வாக்கு என்ற பெயருக்கு மாற்றம் செய்தேன். இந்திய வரலாறும் எனது சிந்தனை என ஆரம்பித்துப் பின்னர் நிறுத்தி விட்டேன். குழலி புருஸேத்தமன் அவர்கள் நட்பும், அழைப்பும் பெற்று பதிவர் கூட்டங்களுக்குச் சென்றேன். அதன் பின்னர் கோவியாரின் நட்பும், எனது கட்டுரைகளின் தாக்கத்தால் வால் பையனின் நட்பும் கிடைத்தது. வால் பையன் முதலில் என் பிளாக்கை வடிவமைக்க ஆலோசனைகள் கூறினார். பின்னர் அப்பாவி முருகு என்னும் முருகேசன் இப்போது இருப்பது போல பிளாக்கை வடிமைத்துக் கொடுத்தார். அவர் பிளாக்கில் எழுதும் முறை, பதிவர்களின் போக்கு மற்றும் பதிவுலக நடைமுறைகள் பற்றி இரண்டு மணி நேரம் உரையாடினார். அது எனக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. பின்னர் அனுபவக் கட்டுரைகள் எழுதவும் ஆரம்பித்தேன். அப்ப இருந்து இப்ப வரைக்கும் மாறாதது எனது எழுத்துப் பிழைகள்தான்.

மேனகா சத்தியா பதிவுகளை படிக்க ஆரம்பித்து பின்னர் சமையல் பதிவுகளையும் எழுத ஆரம்பித்தேன். என் வீட்டில் சாதரனமாகச் செய்யும் சமையல்களுக்கு இங்கு நல்ல வரவேற்ப்புகளை பெற்றது.எனக்கு வால் பையன், முருகு, கோவியார்,குழலி,ஜோசப் பால்ராஜ், முகவைராம், ஜோதிபாரதி,நாடேடி, ஞானப் பித்தன், ஆகியோரின் அன்மை மற்றும் பழக்கம் ஆர்வத்தைத் தூண்டுவதாக இருந்தாலும் என்னுடைய பிளாக் வாழ்வில் மிகவும் அக்கரையாகவும் ஆர்வமாகவும் படித்து, என்னை வளர்த்த சகோதரிகள் நீங்கள் அனைவரும் இந்த பயணத்தின் முக்கிய தூண்கள்.முதலில் வந்து பாராட்டிய துளசி டீச்சர்,மேனகா,சத்தியா,சாருஸ்ரீராஜ்,சுசி,ஹேமா,சுவையானசுவை,கலகலப்பிரியா,ரம்யா,தமிழரசி,அன்புடன்மலிக்கா,விஜி,சந்தனமுல்லை,சுருஸ்ரீ, தெய்வசுகந்தி,வல்லி அம்மா, சின்ன அம்மினி மற்றும் அனைவரும் என் எழுதும் ஆர்வத்திற்கு துணையாக இருந்தார்கள்.

சகோதரி சந்தன முல்லை அவர்கள் எனக்கு முதலில் பிளாக் அவார்டு கொடுத்தார்கள், பின்னர் ஜலில்லா, சுவையான சுவை, கலகலப்பிரியா,தோழி கிருத்திகா மற்றும் மலிக்கா அவர்களும் விருதுகள் கொடுத்து ஊக்க்ப் படுத்தினார்கள். தியாவின் பேனா, டி வி இராதாகிருஷ்னன், மகா, வால் பையன், சந்ரு,முகுந்தன், ஜெட்லி,ரோஸ்விக் மற்றும் சிங்ககுட்டி ஆகியோர் என் எழுத்துக்களுக்கு ஊக்கம் அளிக்கின்றார்கள். அய்யா குடுகுடுப்பையார் என்னை தன் வலைப் பதிவில் என்னை அறிமுகப்படுத்தினார். இப்படியாக எனது பிளாக் பயணம் பிளாக்(தடை) இல்ல்லாமல் செல்கின்றது. சுசி தங்கை மற்றும் சகோதரிகள், நண்பர்கள் சகபதிவர்கள் அனைவரும் இதுவரை ஆக்கமும், ஊக்கமும் அளித்த நீங்கள், நான் இன்னும் எழுத ஒத்துழப்பை தருமாறு பனிவுடன் கேட்டுக் கொள்கின்றேன். நன்றி.

டிஸ்கி : இந்த பதிவு எழுத வந்த கதையை விவரிக்க நான் அழைக்கும் பதிவர்கள்,

மேனகா சத்தியா,
சுவையான சுவை,
ரோஸ்விக்,
மகா,
தியாவின் பேனா
ஜலில்லா
சாருஸ்ரீராஜ்

ஆகியோரை அழைக்கின்றேன். நன்றி.

Tuesday, December 15, 2009

சபரிமலை யாத்திரை


கன்யாகுமரியில் வெய்யில் பட்டையைக் கிளப்பியது. அங்கு குமரி அம்மனை தரிசனம் செய்து, இரண்டு மணி நேரம் சுற்றி விட்டு, பின் மதியம் அங்கு உள்ள திரிவேணி ஓட்டலில் நானும், என் அண்ணாவும், என்னுடன் வந்த சாமிகள் 22 பேருக்கும் அன்னதானம் செய்தேம். பின்னர் மாலை திருச்செந்தூர் செல்லும் வழியில் உள்ள நவதிருப்பதிகளில் நாலு மட்டும் தரிசனம் செய்தேம். தென் திருப்போரை, திருகோளுர், ஆழ்வார்திரு நகரி, திருவைகுண்டம் சென்றேம். ஆழ்வார் திரு நகரியில் உள்ள 5199 அண்டுகள் பழமையான உறங்காப் புளியமரம் பார்த்துவிட்டு, பார்த்துவிட்டு ஸ்ரீவைகுண்டம் செல்லும் போது கிட்டத்தட்ட மணி எட்டு. அங்கு இரவு கோஸ்டி பூஜை முடிந்து அருமையான வெண்பொங்கல் கொடுத்தார்கள். இரவு திருச்செந்தூர் சென்று முருகனின் தரிசனம் செய்தேம். இரவு பதினோரு மணி வரை சக நண்பர்களுடன் (சாமிகள்) கடல்கரையில் அமர்ந்து பேசிக் கொண்டு பொழுது பேக்கினேம். இரவு பன்னிரண்டு மணியளவில் புறப்பட்டு, வெக்காளியம்மன் தரிசனம் செய்து காலை திருப்பரங்குன்றம் அடைந்தேம். அங்கு காலைக் கடன் முடித்து, தரிசனம் செய்து பின்னர் மதுரை புறப்பட்டேம்.

கன்யாகுமரியில் இருந்து திருச்செந்தூர் பயணம் செய்த போதுதான் கடந்த பத்து நாள்கள் முன்னர் அடித்த மழை மற்றும் புயலின் தீவிரம் புரிந்தது. வழிபூராவும் தண்ணீர் வெள்ளக்காடாக இருந்தது.
வயல், பொட்டல்,வீடுகள் ஆகியவை முழுதும் நீரால் சூழப்பட்டுள்ளது. பத்து நாள் கழித்து இவ்வளவு தண்ணீர் தேங்கியுள்ளது என்றால்,அப்போது எவ்வளவு பாதிப்பு இருக்கும் என்று கணக்கிட்டுக் கொள்ளுங்கள். அம்மா ஆட்சியின் போது செய்திகளை நீட்டி முழக்கும் ஒரு டீ வீ காரார்கள் இதை எல்லாம் இருட்டடிப்பு செய்து விட்டதாகவும், அரசு வெள்ள பாதிப்புகளை மறைத்து விட்டதாகவும், வண்டியில் பேசிக் கொண்டனர். நாங்கள் சென்ற பாதையில் ஒரு இடத்தில் கால் கிலோ மீட்டர் தூரம் சாலையில் தண்ணீர் ஆறாக ஓடியது, அதில் ஆடிக் கொண்டு சென்றபோது நாங்கள் கவிழ்ந்து விடுமோ என அஞ்சினேம், ஆனால் ஓட்டுனர் சாமார்த்தியமாக கடந்து சென்றார். திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் இடைத்தேர்தல் பிராச்சாரம் அனல் பறந்தது. அனைத்து கட்சிகளும் ஓட்டு வேட்டையாடிக்(ஓட்டுப் பிச்சை) கொண்டு இருந்தனர். இதை எல்லாம் பார்க்கும் போது எனக்கு கோவில் வாசலில் வயிற்றுக்காக பிச்சை எடுப்பவர்கள் மற்றவர்களை வீட கொளவரம் மற்றும் கடமை, கண்ணியம் மிக்கவர்களாக தெரிந்தனர்.

மதுரை வந்ததும் எனக்கு என்னமே களைப்பு மற்றும் மனம் சரியில்லாதால் நான் மீனாட்சி அம்மன் கோவில் செல்லாமல் வண்டியில் படுத்து உறங்கிவிட்டேன். பின்னர் மதியம் திருமலைனாயக்கர் மகாலுக்கு சென்று விட்டு அழகர் மலை நோக்கி பயணம் செய்தேம். வழியில் வசந்தம் ஹேட்டலில் உணவு எடுத்து நாங்கள் பழமுதிர்சோலைக்கு சென்றேம். அங்கு முருகனை வழிபட்டு, ஒரு மணி நேர இளைப்பாறுதலுக்கு பின்னர் அழகர் கோவிலும் சென்று தரிசனம் செய்தேம். நேராக உள்ளே சென்று பெருமாளை வழிபட்ட நான், கலைசிற்பம் மிகுந்த அந்தக் கோவிலில் சுற்றிப் பார்க்க ஆசைப் பட்டேன். ஆனால் வயிறு மற்றும் இயற்கை உபாதைகளால் நான் விரைவில் கோவிலில் இருந்து வெளியில் வரவேண்டியதாயிற்று. பின்னர் திருமோகூர் செல்லக் குருசாமி கேட்டபோது,உடன் வந்த சாமிகள் வீடு திரும்ப ஆசைப்பட்டதால், அனைவரும் வீடு திரும்ப வேண்டியதாயிற்று. இரவு எட்டு மணி அளவில் தாராபுரம் வந்து அடைந்தேம். மறுனாள் காலை அய்யப்பனின் பூஜைகள் முடித்து, மாலை கழட்டிப்,அன்று இரவு மங்களூர் விரைவு வண்டியில் செங்கல்பட்டு வந்து, கல்பாக்கத்தில் ஞாயிறு இருந்து அவியல் சாப்பிட்டு, இரவு புலி வாகனத்தில் (டைகர் ஏர்வேஸ்) ஏறி சிங்கை வந்து அடைந்தேன். கடந்த ஒரு மாத காலமாய் எழுதி உங்களை டிரையல் ஆக்கிய சபரிமலைத் தொடரை இத்துடன் முடித்துக் கொள்கின்றேன். ஆதரவு அளித்த உங்கள் அனைவருக்கும் நன்றி. களைப்பு மற்றும் உடல் அசதி இன்னமும் உள்ளது. குற்றாலத்தில் வண்டியில் உள்ள ஒரு இரும்பு கம்பி என் காலை பதம் பார்த்து விட்டது. நான் அதை சிறு காயம் என்று அலட்சியமாக விட்டது, தவறாய் போய் இங்கு வந்து வீங்கி விட்டது. அசதி,ஜலதோசம் மற்றும் வயிறு உப்புசங்கள் உள்ளது. இன்னமும் இரண்டு நாளில் பூரண குணமடைவேன் என எதிர்பார்க்கின்றேன். நன்றி.

Monday, December 14, 2009

சபரிமலை யாத்திரை

அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். எனது பயணம் வெற்றிகரமாகவும், நல்ல படியாகவும் முடிந்தது. குறிப்பாக என் அய்யப்பனை கண் குளிர, மனமார ஸேவித்து வந்தேன். கடந்த 04.12.09 அன்று நான் சென்னை சென்று, அண்ணா வீட்டுக்குச் சென்று அங்கு இரு தினங்கள் தங்கினேன். அவர்கள் இரு வயது குழந்தை ஷ்ரவ்யா(ஷ்ரவீஸ்டா நட்சத்திரம்) என்னும் பொண்மணி (பெயர்)என்னுடன் நல்லா ஒட்டிக் கொண்டாள். நான் இரு தினங்கள் செய்த பூஜையினைப் பார்த்து இப்ப அவ சாமிய்யோ சரணம் அய்யப்பா என்று சொல்ல ஆரம்பித்து விட்டாள். நல்ல சுட்டியான, அய்யப்பன் அருளால் பிறந்த குழந்தை அவள். பொண்மணி என்னும் அவள் பெயர், பொண் எங்கள் குலதெய்வம் பொங்காளியம்மனையும், மணி என்பது மணிகண்டன் என்ற அய்யப்பனின் பெயரைக் குறிக்கும். நல்ல அறிவும், மிக புத்திக் கூர்மையும் உடைய பெண்ணாகவும் உள்ளாள். என் இரண்டாவதுஅண்ணி எனக்குப் பிடித்த ஆப்பம் தேங்காய்ப் பால், அரிசி உப்புமா, மற்றும் சுண்டைகாய்+ மணத்தக்காளி வத்தக்குழம்பு, பருப்புத்தொகையல், மற்றும் மிளகு இரசம் பண்ணிக் கொடுத்தார். கடைசி கிளம்பும் நாளில் அவியலும் செய்து கொடுத்தார். முதல் அண்ணியும் அங்கு இரு தினங்கள் நல்லா சாப்பாடு செய்து கொடுத்துக் கவனித்துக் கொண்டார்கள். மொத்ததில் நாலு நாள் நல்ல வேட்டைதான்.

08.12.09 அன்று நாங்கள் எங்கள் ஊர் தாராபுரத்தில்,தென் தாரையில் உள்ள சின்னக் காளியம்மன் கோவிலில் இருமுடிக் கட்டு முடித்து பயணம் கிளம்பும் போது மணி மணி மூன்று பத்து.








நான் கட்டு கட்டும் படங்கள்
அப்போது இராகு காலம் என்பதால் சாமிகள் அனைவரும் படுத்து ஓய்வு எடுத்து பின் நாலரை மணிக்குக் கிளம்பி ஆஞ்சணேயர் கோவில் பிள்ளையாருக்கு தேங்காய் உடைத்து யாத்திரையைக் கிளம்பினேம். பின் சாலக்கடையில் உள்ள பிள்ளையார் மற்றும் கருப்பண சாமி கோவிலில் சாமி கும்பிட்டு, வழினடைக் காவலுக்காக வேண்டி யாத்திரை தொடங்கினேம். ஒட்டன் சத்திரம் பஸ் நிலையம் அருகே கடையில் மிளாகாய் பஜ்ஜி, வாழைக்காய் பஜ்ஜி, டீ சாப்பிட்டேம். பின் குமுளி சோதனைச் சாவடி அருகே ஒரு கோவில் மண்டபத்தில் நாங்கள் கொண்டு சென்ற உப்புமாவை உண்டு. இரவு பன்னிரண்டு மணியளவில் எருமேலி சென்று பேட்டை துள்ளும் நிகழ்வை நிகழ்வு முடித்துப், பின் அதிகாலை ஜந்து மணியளவில் பம்பையை அடைந்து அதிகாலைக் குளியல் முடித்து பூஜைகள் முடித்துக், காலை ஆறரை மணிக்கு பம்பா கணபதியைச் வணங்கி மலை ஏறத்தொடங்கினேன்.

காலை ஏழரை மணிக்கு நீலி மலை, அப்பாச்சிமேடு, இப்பாச்சிக்குழி தாண்டி, சபரி பீடத்தை அடைந்தேன். இந்த வருடம் எனது பிரார்த்தனைகள் நிறைவேற நான் மலை அடிவாரத்தில் இருந்து அய்யனைக் காணும் வரை தலையில் உள்ள இருமுடிக் கட்டை இறக்குவது இல்லை எனவும், அது வரை நீர் கூட அருந்துவதில்லை எனவும் முடிவு செய்தேன். வழக்கமாக நான் அப்பாச்சி மேட்டில் தங்கி, பைனாப்பிள், எழுமிச்சை சாறு, குளுக்கேஸ் சாப்பிடுவது வழக்கம். அதன்படி நானும் என் நண்பன் முரளி சாமியும் கட கட வென ஏறி சபரி பீடத்தை அடைந்தேம். அதன் பின்னர் அங்கு இருந்து சோதனையாக, வரிசை ஆரம்பம் ஆகியது. நல்ல கூட்டம் வேறு. டிசம்பர் 6 முன்னிட்டு பாதுகாப்பு கொடுபிடிகள் வேறு. மொத்த கூட்டத்தையும் இரண்டு மெட்டல் டிடக்டர் வழியாக மட்டும் அனுப்பியதால் சராசரியான கூட்டம் கூட மிக காலதாமதமானது. சபரி பீடத்தில் ஆரம்பித்து சரங்ககுத்தி வழியாக வரிசை நகர்ந்தது. கூட்டத்தில் முட்டி மோதி, நசுங்கி, பின்னர் பாதை சரியயில்லாத காரணத்தால் பலரும் கூட்டத்தில் கீழே பார்க்க முடியாமல் கற்களில் காலில் அடிபட்டனர். நூற்றுக்கணக்காவர்கள் அடிபட்டதாகப் பத்திரிக்கைகள் கூறின. மதியம் பன்னிரண்டு பதினைந்துக்கு அய்யப்பனை நல்ல நிறைவாக தரிசனம் செய்துவிட்டு வெளிவந்த உடன் அங்கு தரும் மிதமான சூட்டில், சுக்கு, மல்லி மற்றும் மூலிகை நீரை நல்லா நாலு டம்ளர் குடித்து என் மலையேற்றதை முடித்துக் கொண்டேன். பின்னர் இரவு நிலக்கல் அடைந்து குற்றாலம் நோக்கி பயணித்தேம்.

ஆறு மணி நேரம் கியூ காரணமாக எங்கள் பயணத்தில் மாறுதல் செய்து, திற்பரப்பு நீர்வீழ்ச்சி, மற்றும் திருவனந்தபுரம் ஆகிய இடங்களைக் கான்சல் செய்து, குற்றாலம் மற்றும் நெல்லைப்பர் கோவிலுக்கு செல்ல முடிவு செய்து, இரவு ஒரு மணிக்கு குற்றாலம் அடைந்தேம். நல்ல தண்ணிர் கொட்டியது. சாரலும், பனியும் இல்லாமல், அருவியில் நிறைய நீரும் கொட்டியது மிகவும் மகிழ்வாய் இருந்தது. நான் பிசாசு மாதிரி இரவு இரண்டு முதல் மூன்று மணி வரை ஆட்டம் போட்டேன். சக பக்தர்கள், காவலர்கள் தொல்லை என எதுவும் இல்லாமல் நன்றாக குளித்தது, மனதுக்கு இதமாக இருந்தது. (இது எனது நண்பன் முரளி சாமியை நான் சென்ற வருடம் எடுத்த படம், இந்த வருடம் இதுபோல மூன்று மடங்கு தண்ணீர் கொட்டியது.) அருவியின் பகுதியில் மையப் பகுதியில்,அடர்த்தியாக தண்ணீர் கொட்டிய இடத்தில் நின்ற போது, ஆயிரம் சரவெடி வெடிக்கும் சமயத்தில் அதன் மையத்தில் நின்றது போல இருந்தது. மிக அருமை. உடல் வலி, கால் வலி களைப்பு தீர ஒரு நல்ல குளியல் போட்டோம்.அங்கு நேந்திரம் சிப்ஸ், அல்வா வாங்கினேம். பின்னர் திருனெல்வேலி நெல்லையப்பர் தரிசனம் முடித்து கன்யாகுமரி சென்றேம். இதன் தொடர்ச்சியை நாளை மீண்டும் பதிவு இடுகின்றேன். நன்றி

டிஸ்கி: நேரம்மின்மை காரணமாக எனது முந்தைய பதிவுகளைக்கு பதிவு இட்ட உங்கள் அனைவருக்கும் எனது நன்றிகளை இங்கு தெரிவித்துக் கொள்கின்றேன். முதல் பின்னூட்டம் இட்ட கோமதி அரசு மற்றும் மாதேவி அவர்களுக்கும் எனது நன்றிகள். மாதேவி அவர்களின் சமையல் பதிவகள் நன்றாக உள்ளது. அவர் பீட்ரூட் குறித்த பதிவு, மிகவும் பயன் உள்ளது. அனைவரும் படிக்கவும். சத்தான பதிவு அது. மனம் நிறைந்த நன்றிகளுடன் சுதாகர்.

Friday, December 4, 2009

அய்யப்பனின் திருவருள்

இறுதியாக நான் கடந்த 2007 ஆம் அண்டு டிசம்பரில் சபரி யாத்திரை முடித்து வந்து ஒரு மாதம் ஆகி இருக்கும், ஜனவரியில் ஒரு நாள் அலுவலகத்தில் காலையில் தேனீர் அருந்தும் போது நான், தொழிற்ச்சாலை மேலாளர், உற்பத்தி மேலாளர் அனைவரும் தொழிச்சாலை மேலாளார் அறையில் அமர்ந்து மிக முக்கியமான உரையாடல் நடத்திக் கொண்டு இருந்தோம். அது சிட்னி போட்டியில் ஆஸ்ரோலியாவின் அழுகுனி ஆட்டம் பற்றி மிகத் தீவிரமாக பேசிக் கொண்டு இருந்தோம். எங்கள் தொழிச்சாலை மிகவும் சிஸ்டமேட்டிக் மற்றும் ஆட்டோமாட்டிக் காஸ் ரிபில்லிங் யுனிட். இதில் பிரச்சனை ஏதும் இல்லாதவரை, எங்களுக்கு எந்த வேலையும் இருக்காது. எதாது பிரச்சனை என்றால் தான் எங்களுக்கு வேலை வரும். இல்லை என்றால் எல்லாம் ரெகுலர் புராசஸ் தான்.

அப்போது எங்க மேலான் இயக்குனர் என்னை அழைத்தார். தன்னை உடன் தலைமை அலுவலகத்தில் வந்து சந்திக்குமாறு பணித்தார். நானும் உடனே கிளம்பி சென்னை வந்து, அவரின் அறையில் ஒரு பவ்யமாக வணக்கம் போட்டு நின்றேன். அவரும் அமரச் சொல்லி, என்னிடம், " என்னையா வேலை பார்க்குற? என்றார். நானும் இந்த ஆனி, அந்த ஆனி எல்லாம் பிடிங்கிக் கொண்டுள்ளேன். என்றேன். அவர் உடனே கோபமாக நீ எந்த ஆனியும் புடுங்கக் கூடாதுன்னு நான் எத்தனை தடவை சொல்வது, நான் தான் உனக்கு எல்லாத்திற்க்கும் உதவியாளர்களை நியமித்து உள்ளேன் அல்லவா? அவர்களை பிடிங்க சொல்லி நீ சும்மா வேடிக்கைப் பார். இனி நீ ஆனி புடுங்கினால், நான் உன்னை வேலையை விட்டு அனுப்பி விடுவேன் என்றார். நான் உடனே, சார் நான் குட்டிச் சாத்தான் மாதிரி, எதாவது வேலை செய்து கொண்டே இருக்க வேண்டும், இல்லை என்றால் எனது புத்தி பரதேசம் போய்விடும் என்றேன். நீ தான் எம் பி ஏ படிக்கின்றாய் அல்லவா அதைச் செய் என்றார். நான் அதையும் முதல் வகுப்பில் தோர்ச்சி பெற்று விட்டேன் என்றேன். அவர் ஜெர்க் ஆகி, "நீ எல்லாம் பாஸ் பண்ணுகிறாய் என்றால் நம்ம ஊரில் கல்வி அவ்வளவு மட்டமாவா இருக்கு" என்றார். நான் "இல்லை சார் எனக்கு பக்கத்துல்ல உக்காந்து எழுதிய பெண்ணு அவ்வளவு நல்லா படிச்சிருக்கு" என்றேன். அவரும் சிரித்து, "நீ நல்ல நாள்லயே அதைச் செய்யக் கூடாது, இதைச் செய்யக் கூடாது என்று ரூல்ஸ் போடுவாய். இப்ப எம் பி ஏ வேறய்யா எனக்குத் தான் தலைவலி. உன்னை முதல ஊரை விட்டுத் துரத்தனும்" என்றார்.

பின் அவர் சுதா நாம் சிங்கப்பூரில் ஒரு நிறுவனத்தை பல மில்லியன் டாலர்கள் விலை கொடுத்து வாங்கியுள்ளேம். அதன் வரவு செலவுகளைப் பார்த்துக் கொள்ள (கொல்ல) எனக்கு நம்பிக்கையான ஆள் வேண்டும். ஆதலால் உன்னை அனுப்பத் தீர்மானித்துள்ளேன். நீ உங்கள் வீட்டில் அனைவரிடமும் கலர்ந்து பேசி, எனக்கு ஒரு முடிவு சொல் என்றார்(இவரும் நான் நல்லவன்னு ஏமாந்துட்டார்). நானும் என் அண்ணா, மன்னி, அம்மா, அப்பாவிடம் கலர்ந்து பேசிச் சம்மதம் தெரிவித்தேன். அம்மா மட்டும் தூரதேசம் எல்லாம் வேண்டாம், நாம் காசு, பணம் வைத்து என்ன பண்ணப் போறேம். பேசமா பக்கத்துல்லயே இரு என்றார். (இன்றும் அதைத்தான் சொல்லிக் கொண்டுள்ளார்). நான் பக்கம்தான் அம்மா பிளைட் புடித்தால் நான் ஜந்து மணி நேரத்தில் வந்து விடுவேன் எனச் சமாதனம் சொல்லியுள்ளேன். (இதுக்கு அப்புறம் நடந்த கதையை நான் மலைக்குப் போய்ட்டு வந்து சுசி அழைத்த தொடர் பதிவில் போடுகின்றேன்.)

பின் சில மாதங்கள் கழித்து வந்த அவர், நான் தூங்கமல் வேலை செய்வதைப் பார்த்து மகிழ்ந்து, "சுதா நீ இன்னும் எவ்வளவு நாள் தான் இப்படி வேலை செய்வாய், நீயும் முதலாளி ஆக வேண்டாமா" எனக் கேட்டவர். தனது பங்குகளில் இருந்து சில பங்குகளைப் பிரித்து எனக்குக் கொடுத்து என்னை நிதி நிர்வாக இயக்குனராய் அழகு பார்த்தார். கூடவே "மகனே இனி நீ சிங்கபூர்ல தான் இருக்கனும், ஒழுங்கா இங்க கல்யாணம் பண்ணி செட்டில் ஆகிடு, இனி அங்க (சென்னை) வந்து எனக்கு குடைச்சல் கொடுத்தா, அவ்வளவுதான் காலி பண்ணிடுவேன்" எனக் கூறிவிட்டு ஓடிப் போய்ட்டார். இப்ப நான் எங்களின் ஒரு நிறுவனத்தில் மூத்த நிதி எச்சக்கூட்டிவ் ஆகவும், அந்த நிறுவனத்தில் முதலீடு செய்யும் மற்றெரு நிறுவனத்தின் இயக்குனர் ஆகவும் உள்ளேன். முதலில் நான் மூவாயிரம் ரூபாய் சம்பளம் வாங்கும் போது நான் ஒரு சபதம் போட்டேன். நான் என் வாழ்க்கையில் ஒரு பொது மேலாளர் - நிதி அல்லது உதவி அதிபர் - நிதி (வைஸ் பிரசிடெண்ட்) ஆக வருவது என் லட்சியமாகக் கொண்டேன். ஆனால் இப்போது மிகக் குறுகிய காலத்தில் என் உழைப்பு, படிப்பு(இதுக்கு ஒரு தனிப் பதிவு வரும்) மற்றும் அய்யப்பனின் அருள் காரணமாக, இன்று அதுக்கும் மேலாக நிதி இயக்குனர் ஆக உள்ளேன். இது எல்லாம் அவன் அருளன்றி வேறு இல்லை.

இந்த வருடம் நான் மூன்று பிரார்த்தனைகளுடன் சபரி மலை செல்கின்றேன், அவை யாவையும் அய்யப்பன் நிறைவேற்றுவான் என நம்புகின்றேன்.

1.என் அண்ணா ஒருவர் திருமணம் இல்லாமல் இருக்கின்றார், அவருக்கு திருமணம் ஆக வேண்டும்.
2. எனக்கு முகம் அறியாது, எந்த தொடர்பும் இல்லாத, டேக்கடு வெப் சைட்டில் நண்பியாக பழகும் ஒரு வட இந்தியப் பெண்ணிற்க்கு குழந்தை பாக்கியம் அளிக்க வேண்டும். (ஏழு வருடமாக குழந்தை இல்லை)
என் மன்னியின் தோழி கனடாவில் வாழும் ஒரு இலங்கைத் தமிழ் சகோதரிக்கு மழலைச் செல்வம் அளிக்க வேண்டும் ( பன்னிரண்டு வருடங்கள்).
3. இலங்கைத் தமிழர்கள் அனைவரும் தங்களின் பழைய நிலைமைக்கும், நல்ல அமைதியான வாழ்க்கைக்கும் திரும்ப வேண்டும்.

அப்புட்டுதாங்க. இன்றிரவு (04.12.09)சென்னை செல்லும் நான் இரண்டு நாள் கல்பாக்கத்தில் என் அண்ணாவின் குழந்தையுடன் விளையாடி, அங்கு, கிரிவரதர், திருவட்டிஸ்வரை தரிசனம் செய்து, தாராபுரம் போய் இரண்டு நாள் அம்மா சமையல் சாப்பிட்டு, எனது அனுமார், அகஸ்தீஸ்வரர் ஆகியோரைத் தரிசனம் செய்து, 08.12.09 அன்று நண்பகல் காளியம்மன் கோவிலில் இருமுடிக் கட்டு முடித்து, இரவு எரிமேலியில் பேட்டைதுள்ளி, 09.12.09 அன்று அதிகாலை பம்பை பூஜை முடித்து மலைஏறி அய்யப்பனை தரிசனம் செய்து, அன்று மாலை வரை இறை தரிசனம் செய்து, இரவு மலை இறங்கிப் பின்னர், 10.12.09 அன்று திருவனந்தபுரம் பத்மனாப சுவாமி, நாகர்கோவில் நாகராஜா, திற்ப்பரப்பு நீர்வீழ்ச்சி,கன்யாகுமரி, சுசீந்தரம், திருச்செந்தூர்(11.12.09), வெக்காளியம்மன், ஆழ்வார் திருனகரி, ஸ்ரீவைகுண்டம், நாங்கு நேரி, முதலிய பொருமாள் கோவிலும், திருபரங்குன்றம், மதுரை மீனாட்சியம்மன் தரிசனம் செய்து தாராபுரம் வந்து விடுவேம்.

12.12.09 அன்று அம்மா கையால் சாப்பிட்டுக், கொஞ்ச நேரம் மடியில் தாய்ச்சிப், பின்னர் அன்று இரவு கல்பாக்கம் வந்து 13.12.09 இரவு சிங்கைக்கு வருகின்றேன். இந்த அனுபவங்களை நான் 14.12.09 அன்று இடும் பதிவில் உங்கள் அனைவரையும் மீண்டும் சந்திக்கின்றேன். உங்கள் அனைவரின் வாழ்விலும் சாந்தியும், சந்தோசமும் நிலவ அந்த இறைவனை வேண்டி வருகின்றேன். நன்றி. சாமிய்யே சரணம் அய்யப்பா !!!.

டிஸ்கி : 2007 ஆம் வருடம் கனடாவைச் சேர்ந்த ஒரு இலங்கை தமிழ் சகோதரிக்கும், திருச்சியைச் சார்ந்த ஒரு முகமதிய சகோதரிக்கும் வேண்டினேன். அவைகளை நிறைவேற்றிய இறைவன் இந்த முறையும் இந்த பிரார்த்தனைகளை நிறைவேற்றி வைப்பான்.
2006 ஆம் ஆண்டு பதினேழு வருடங்களாக குழந்தை இல்லாமல் இருந்த, எங்க அண்ணா மன்னிக்கு குழந்தை வரம் அருளினார். (தனிப் பதிவு வரும்). நன்றி.

Thursday, December 3, 2009

அய்யப்பன் போட்ட பிச்சைகள்

மன்னிக்கவும்,நான் அய்யப்பனின் அற்புதங்கள் தொடரை ஒரு முக்கியமான விசயத்தைச் சொல்லாமல் முடித்து விட்டேன். அதைச் சொல்லி விடுகின்றேன்.
என் முதல் வருட மலோரிய யாத்திரையில் எல்லா இடங்களும் சுற்றிக் கடைசியாக பழனியில் நிறைவு பெற்றது. பழனிப் பேருந்து நிலையத்தில் பேருந்து உள் நுழையும் மூலையில் ஒரு வடை, போண்டா போடும் டீக்கடை ஒன்று உள்ளது. அங்கு, நான் எப்ப பழனி போனாலும் சாப்பிடுவது வழக்கம். நான் நல்லா இருக்கும் என்று குருசாமியிடம் சொல்ல, அனைவரும் சாப்பிட்டு விட்டு, திருச்சி சென்று, சென்னையை அடையத் திட்டமிட்டேம். அங்கு சென்று சாப்பிடும் போது, எங்கள் குருசாமி எங்களிடம்," சாமிகளா இத்துடன் நமது மலையாத்திரை நிறைவு பெற்றது, இனி நாம் நமது வீடு நோக்கிப் போவேம் என்றார். நாங்களும் "சாமி சரணம்" என்று கூறி இரவு ஏழு மணியளவில் திருச்சிக்குப் பேருந்து ஏறினேம். பேருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் எனக்கு கடுமையான குளிர் எடுத்தது, அதைத் தொடர்ந்து காய்ச்சல் கொதிக்கத் தொடங்கியது. என் பக்கத்தில் அமர்ந்த என் அண்ணா முரளி சாமி என்னிடம், " என்ன சாமி நாளைக்கு அலுவலகம் போகனும் சொன்னதும் காய்ச்சல் வந்துடுச்சா" எனக் கேட்டார். நான் அடுத்த நாள் மாலை மறுபடியும் டாக்டரிடம் போக, எனக்கு சுரம் 104 டிகிரியாக இருந்தது. டாக்டர் மிகவும் ஆச்சரியப் பட்டார். என்ன சார் 104 ல்ல போய்த், திரும்பி 104ல்ல வந்துருக்கீங்க. இந்த உடம்பை வைத்துக் கொண்டு, நீங்க போய் வந்தது ஆச்சரியம் என்றார். நான் உடனே நான் எங்க போனேன். அவன் கூட்டிப் போய்க் கொண்டு வந்து விட்டான் என்றேன். அவர் எனக்கும் ரொம்ப நாள் ஆசை, உங்களைப் பார்த்த பிறகு, நான் கண்டிப்பாய் அடுத்த வருடம் போவேன் என்றார்.அடுத்த வருடம் மலைக்கும் போனார். நன்றி.

அய்யப்பன் கருனைகள்(பிச்சைகள்):-

இந்த முதல் வருட யாத்திரையின் போது நான் எனது அலுவலகத்தில் சர்வீஸ் ரெப் ஆக பணிபுரிந்து வந்தேன். யாத்திரை போய் வந்த இரண்டாம் வாரம் நான் சேல்ஸ் மற்றும் சர்வீஸ் ரெப் ஆகவும், இரண்டாம் வருட யாத்திரை முடிந்தவுடன் ஏரியா சேல்ஸ் ரெப் ஆகவும்.
மூன்றாம் வருட யாத்திரையின் போது நான் ஏரியா சேல்ஸ் மேலாளராகவும் பதவி உயர்வுகள் பெற்றேன். அடுத்த மூன்று வருடங்கள் நான் மலையாத்திரை செய்யவில்லை. இந்த வருடங்கள் என் வாழ்வின் இருண்ட காலங்கள். எப்பவும் சேகம், மனக்குறை. வாரம் நாலு நாள் குடி, ஊர் சுற்றுவது என்ற வாழ்க்கை ஓடியது. குடி என்னை முழுமையாக ஆக்ரமித்தது. ஒன்னு நான் குடிப்பேன் இல்லை என்றால் நண்பர்களை நச்சிக் குடிக்க வைப்பேன். என் வேலையும் என்னை தென் இந்தியா முழுதும் சுற்ற வைத்தது. இளம் வயது, கை நிறையப் பணம், வேலை, வேலை மற்றும் வேலை சார்ந்த குடி, செல்லும் இடங்கள் எல்லாம் ஊர் சுற்றிப் பார்ப்பது என்பது மட்டும் எனது வாழ்க்கை முறையாக இருந்தது. 2000 ஆண்டில் திடிரென்று நான் பார்த்த நல்ல வேலை (அரசு திட்டங்கள் மாறியதால் ஆட்குறைப்பு) போனது. அப்போது நான் நிலைகுழைந்து போனேன். என் நண்பன் ஒருவன் மிகவும் திறமையான ஜோதிடர் மற்றும் பிரஸ் முதலாளி. அவன் என ஜாதகத்தைப் பார்த்து, உனக்கு வேலை போனது நல்லது என்று நினைத்துக் கொள், இல்லை என்றால் நீ திருட்டுப் பட்டத்துடன் அல்லது கெட்ட பெயருடன் வேலை போயிருக்கும், இப்ப நீ நல்ல பெயருடன் இரண்டு மாத சம்பளத்துடன் வேலை போனது நல்லது என்றான். இன்னமும் ஆறு மாதத்திற்க்கு எந்த வேலைக்கும் போகதே. என் கடையில் சும்மா உட்க்கார், உனக்கு வேளாவேளைக்கு நான் டீ, காப்பி, வடை, போண்டா,(சரக்கு) வாங்கித் தருகின்றேன். என்றுகூறி செய்யவும் செய்தான். எங்க அம்மாவும் எத்தனை நாள் ஊரு,ஊரா சுத்துவ கொஞ்ச நாள் நான் சமைத்துப் போடுகின்றேன் உக்காந்து சாப்பிடு என்றார் ஆசையாக. ஆறு மாதங்கள் கழித்து அவர்கள் வீட்டில் அனைவரும் சபரி மலை செல்பவர்கள் ஆதலால் என்னையும் அழைத்தான் நான் வேலை இல்லாமல் எப்படி என்றேன். அவன் நீ வாடா அது தானா அமையும் என்றான். நானும் என் அம்மாவிடம் கேக்க, அவரும் ஆவலுடன் சம்மதித்தார். நான் மாலையிட்ட இரண்டாம் நாள் எனக்கு மபத்லால் நிறுவனத்தில் கோவையில் வேலை கிடைத்தது. பின் நான் அந்த வேலையும் பிடிக்காமல் எட்டு மாதத்தில் விட்டு விட்டேன், அலையும் சந்தையியல் வேலை எனக்கு பிடிக்காமல் போனாதால், நான் படித்து இருந்த பி.ஏ. கூட்டுறவை வைத்து, சென்னை வந்து டாலி அக்கவுண்ட் சாப்ட்வேரையும் கற்று, கிண்டியில் ஒரு நிறுவனத்தில் சேர்ந்தேன். நான் சந்தையியலில் இருந்தாலும், குடித்துச் சுற்றினாலும், எனக்கு படிப்பில் ஆர்வம்(ஸ்டடி செண்டரில் பெண்ணுக கூட கடலை) காரணமாக நான் எம். ஏ . பொது மேலான்மையும், உயர்னிலை சந்தையியல் டிப்ளமோ படிப்பும் படித்துருந்தேன். சந்தையியலில் நான் மாதம் பதினைந்தாயிரம் வாங்கிய வேலையை விட்டு, அக்கவுண்ட்ஸில் வெறும் மூவாயிரம் ரூபாயில் சேர்ந்தேன்.

கிண்டியில் அந்த நிறுவன முதலாளி, ரொம்ப நல்லவர், உழைப்பால் உயர்ந்தவர், கண்டிப்பானவர், தந்தையைப் போன்றவர். நான் பத்து வருட காலத்தில் கற்றுக் கொள்ளும் உற்பத்திக் கணக்குகள், வங்கிக் கணக்குகள், அரசு வரிக் கணக்குகள் போன்றவை ஒரு வருட காலத்தில் அவரிடம் இருந்து கற்றுக் கொண்டேன். அவர் அதிகாரம் மிக்கவர், சில சமயம்(பொரும்பாலும்) கன்னாபின்னா என்று திட்டுவார். இதில் கெட்ட வார்த்தைகளும் அடங்கும். திட்டிய அரைமணி நேரத்தில் மன்னிப்பும் கேப்பார். அனாலும் நல்லவர். (இவர் சொன்ன தத்துவம் ஒன்னு இந்தக் காலத்துப் பசங்களுக்குப் பொருந்தும் அது என்ன என்றால், "இளம் பசங்க ஒன்னு பணத்தின் மீது ஆசை வையுங்க, இல்லை என்றால் பெண்களின் மீது ஆசை வையுங்க, அப்பத்தான் உருப்படுவீர்கள்" என்றார் ). அந்த வருடம் நான் மலைக்கு செல்லும் போது நிறைய வாழ்த்துச் சென்னார். அனுப்பி வைத்தார். நாலாம் வருட யாத்திரையும் சென்று வந்தேன். பின்னர் ஒருனாள் அவர் நான் மலைக்குப் போய் வந்ததை, மிகக் கேவலமாக வர்ணித்தார். எனக்குப் பிடிக்க வில்லை. அந்த நிமிடம் எதுவும் யோசிக்காமல் வேலையை விட்டு நின்றுவிட்டேன். பத்து நாளைக்கு அப்புறம் அந்த நிறுவனத்தின் ஆடிட்டர் கூப்பிட்டு சமாதானம் செய்தார். நான் மறுத்து விட்டேன். அந்த ஒரு வருடத்தில் சில முறை என்னைத் திட்டியவைகளைக் கூட பொறுத்துக் கொண்ட நான் வயதில் மூத்தவர்,அவர் அய்யப்பனைத் திட்டியதைப் பொறுக்க இயலவில்லை. பின் ஆடிட்டர் நீ ரொம்ப நல்லவன்(இப்படித்தான் பலரும் ஏமாறாங்க) ஆதலால் உன்னை மாதிரி ஆளுங்க எனக்கு வேணும் என்று தன்னுடன் இணைத்துக் கொண்டார். பின் அவரிடம் ஆடிட் அசிஸ்டெண்ட் ஆக, ஒரு வருடம் ஆறு மாதங்கள் வேலை பார்த்தேன். இந்த காலங்களில் எனக்கு, டி.வி.ஸ், சிம்சன்,ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்களில் வகுச்சிங் மற்றும் அக்கவுண்ட்ஸ் ரிகன்ஸ்லேசன் போன்றவை நல்லாப் பழக்கம் ஆனது. சிம்சனில் ஆடிட்டர் சார்பாக எனக்கு ஒரு வருட அனுபவம் கிடைத்தது. வாசு, ஸ்ரீனிவாஸ் மற்றும் நிதி மேலாளர் இராஜகோபால் போன்றவர்கள் எனக்கு வெளி ஆளாக பார்க்காமல் நிறைய நுணுக்கங்கள் சொல்லித் தந்தார்கள். மூனு வேளையும் அலுவலகத்தில் சாப்பிட்டு, காலை எட்டு முதல் மாலை எட்டு வரை பணி புரிந்தேன். நல்ல சந்தோசமான சூழ்னிலை மற்றும் நிறையக் கற்றுக் கொண்ட காலம் அது.

எனது ஜந்தாம் வருட பயணம் முடிந்தவுடன் போது எனக்கு திருப் போருர் அருகே ஒரு நிறுவனத்தில் வேலை கிடைத்தது. அங்கு நான் கல்பாக்கத்தில் வீட்டில் இருந்து சென்று வர ஏதுவாக இருக்கும் என்று, திருவல்லிக்கேனி மேன்சனைக் காலி செய்து விட்டு அந்த நிறுவனத்தில் அக்கவுட்ன்ஸ் அசிஸ்டெண்ட் ஆக இணைந்தேன். எனது முதல் அக்கவுட்ண்ஸ் வேலை போல, உற்பத்தி, விற்பனைக் கணக்கு, சில்லறை வங்கிக் கணக்கு(கேஷ்),அரசு வரிக்கணக்கு( விற்பனை வரி, கலால், சுங்கம், தொழில் வரி, பஞ்சாயத்து வரிகள்) முதலியன என் வசம் இருந்தது. சம்பளம் மூவாயிரம் ரூபாய்தான். இந்த நிறுவன நேர்முகத் தோர்வின் போது என் திறமைகளைப் பரிசோதித்த அவர்கள், நீங்கள் என்ன எதிர்பார்க்கின்றீர்கள் என்றனர். நானும் நீங்க என்ன வேணா கொடுங்க, ஆனா என் கண்டிசன் ஒன்னுதான். நான் வருடா வருடம் டிசம்பர் இறுதியில் சபரி மலை போவேன். ஆதலால் அதற்கு எனக்கு ஒருவாரம் லீவு கட்டாயமாகத் தர வேண்டும், தராவிட்டால் வேலையை விட்டு விட்டுப் போய்விடுவேன் என்றேன். அந்த நிறுவன மேலான்மை இயக்குனர் சிரித்து விட்டார். நேர்முகத் தோர்வில் லீவு கேக்கற ஆளை இப்பத்தான் பார்க்கின்றேன் என்றவர், ஆனா மக்கா! "உன் நேர்மை எனக்குப் புடித்துள்ளது" என்றார். "நமது நிறுவனம் இந்த வருடம் தான் ஆரம்பித்துள்ளேன். ஆதலால் உனக்கு நான் சம்பளம் குறைவாகத் தான் தருவேன். ஆனால் ஒரு வாக்குறுதி தருகின்றேன். நமது நிறுவனம் வளர, வளர நீங்களும் வளருவீர்கள்" என்றார். நானும் "இது, இதைத்தான் எதிர்பார்த்தேன், உங்க நேர்மையும் எனக்கு புடிச்சுருக்கு" என்று இணைந்தேன். ஆனால் உண்மையில் எனக்கு இணைய விருப்பம் இல்லை, அதுபோல அவருக்கும் என்னை சேர்த்துக்க விருப்பம் இல்லை. அனாலும் இருவரும் இணைந்தோம் என்பதுதான் விதி. நான் தொழிற்சாலையில் பணி புரிந்தேன். இறுதியாக நிறைய நேரம் சும்மா கிடைத்ததால் நானும் சைட் அடிக்க, அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் முது நிலை வணிகவியல் பாடத்தில் இணைந்தேன்.

எனது ஆறாம் வருட யாத்திரை முடிந்த ஒரு இருபது நாள் கழித்து அவர் கூப்பிட்டார். என்ன சுதாகர் என்ன பண்ணறிங்க என்றார். நானும் நல்லா ஆனி புடுங்கறன் சார், ஆனா அலுவலகத்தில் சரியா தூக்கம் வர மாட்டேன் என்பதால், ஒரு டபுள் காட் மெத்தையும், குளிர் சாதன அறையும் வேண்டும் என்றேன். அவரும் நிறுவன விசிட்டர் ஓய்வு அறை சும்மாதான இருக்கு, நீ அங்க போய் படுத்துக்கே என்றார். அதுக்கு சம்பளமா ஒரு ஜந்தாயிரம் தருகின்றேன் என்று கொடுத்தார். பின்னர் நான் நல்லா தூக்கம் வருது என்று சொன்னதால் ஒன்பதாயிரம் ஆக்கினார். அப்ப என் வேலை என்ன தெரியுமா? உண்மையைக் கூறுகின்றேன்.
காலை ஒன்பது மூப்பதுக்கு உள்ள போய், பேப்பர் படிக்க ஆரம்பித்தால், ஹிண்டு, இந்தியன் எக்ஸ்பிரஸ், தினமலர், தினத்தந்தி படிக்க பதினேன்னு. மசாலா டீ வரும் குடித்து விட்டு, இரண்டு மணி நேரம் அன்றைய அலுவலக வேலை. பின் ஒரு மணிக்கு நல்லா நிறைய நெய் தடவிய இராஜஸ்தான் ரெட்டி, தால், சப்ஜி, கொஞ்சம் சாம்பார் சாதம், சாப்பிட்டு படுத்தால் மதியம் மூனு வரைக்கும் தூக்கம், பின் மசாலா டீயுடன் எழுப்பி விடுவார்கள். குடித்து விட்டுப் போய் உக்காந்து மாலை ஜந்து வரை அலுவலக வேலை. பின் ஏழு மணி வரை அலுவக நண்பர்களுடன் கிரிக்கெட் அல்லது வாலிபால் விளையாட்டு. பின் இரவு எட்டு மணிக்கு வீடு திரும்புவேன்.

இப்படியாக நான் கஷ்டப் பட்டு வேலை பார்த்து ஏழம் வருட யாத்திரை சென்று வந்த போது அழைத்த அவர். சரி தூங்கியது போதும் இனிமே கொஞ்சம் நிறைய ஆனி புடுங்க வேண்டும் என்று கூறியவர். நான் முது நிலை வணிகவியலை முதல் வகுப்பில் தோர்ச்சி பெற்றதைச் சொன்னவுடன், உனக்கு எல்லாம் எவன் மார்க்கு போட்டது. ஒன்னும் தெரியாம பாஸ் பண்றது எப்படின்னு உங்கிட்டதான் கத்துக் கொள்ளனும் சொல்லி, சரி,சரி இன்னியில் இருந்து நீ அக்கவுண்ட்ஸ் எச்சக்கியுட்டிவ்(எக்ஸிகியுட்டிவ்), உன் சம்பளம் பதினாலாயிரம் என்றார்.

எட்டாம் வருட யாத்திரை முடித்த போது, நான் எனது மூன்றாம் முது நிலைப் படிப்பான எம். பி. ஏ வில் நிதி மேலான்மை எடுத்து முதல் வருடம் முதல் வகுப்பில் தோர்ச்சியடைந்தேன். ஒரு மாதம் கழித்து அழைத்த அவர் என்னிடம் நிறுவன விசயங்களைப் பற்றி உரையாடி விட்டு, நானும் நீ எதாது உருப்படியா ஆனி புடுங்கவாய் என்று பார்த்தால், உருப்படி இல்லாமல் இருக்கின்றாய். இனி நீ எச்சக்கூட்டிவ் எல்லாம் கிடையாது, இன்று முதல் தொழிற்ச்சாலை நிதி மேலாளர் என்றும், உனது சம்பளம் இருபது ஆயிரம் என்றும் சொல்லிச் சென்று விட்டார். நானும் மேலாளர் ஆகிட்டா தூக்கம் வருமா? வராதா? என்ற கவலையில் வீட்டுக்கு வந்துட்டேன்.

ஒன்பதாம் யாத்திரை முடிந்தவுடன் (ஒவ்வெரு வருடம் நான் டிசம்பரில் யாத்திரையும், ஜனவரியில் பதவி உயர்வும் கிடைப்பது வழக்கம், ஆனால் நிறுவனத்தில் எல்லாருக்கும் மார்ச்சில் தான்).
ஒரு நாள் அழைத்த அவர் சும்மா இங்க தொழிற்சாலையில் அமர்ந்து ஈ ஓட்டுனா மட்டும் பத்தாது. நீ நம்ம தில்லி, அகமதாபாத், மும்பை, ஹைதிராபாத் ஆகிய கிளைகளுக்கும் சென்று அங்கும் சரியாகத் தூக்கம் வருதா என பரிசோதிக்க வேண்டும் என்றார். நானும் சரி என்று கூறிவிட்டு திரும்ப, அவர் என்னிடம் இனி நீ சீனியர் நிதி மேலாளார். நீயும் நம்ம தலைமையக சீனியர் மேலாளாரும் இணைந்து கூட்டாகக் கணக்குப் பார்க்கவும் என்றார். நானும் ஜந்தாயிரம் ரூபாய் சம்பளஉயர்வு பெற்றுத் திரும்பினேன். இப்படி நாலு வருடத்தில் நாலு பதவி உயர்வும், பத்து மடங்கு சம்பள உயர்வும் அந்த அய்யன் எனக்கு என் தகுதிக்கு மீறி பிச்சையிட்டார். நிறுவன மேலான் இயக்குனருக்கும் நான் மிகவும் கட்டுப் பட்டவன் ஆனேன். அவரும் நான் உனக்கு கொடுக்கக் கூடாதுதான் நினைக்கின்றேன், ஆனா எப்படியோ வாங்கி விடுகின்றாய் என்பார். இப்படியாக நான் வளருகின்றேனே மம்மி என்பது போல நாற்பது கிலோ இருந்த நான் எழுபது கிலோவும், ஒல்லியா எழும்பனாய் இருந்தவன் இராஜஸ்தான் ரெட்டியாலும், எங்க மன்னியின் சுவையான வீட்டுச் சாப்பாட்டாலும் குண்டாய், தொப்பையுடன் வளர்ந்தேன். அதுக்காகத் தான் சொல்லறேன் மதியம் தூங்காதீர்கள். அதுவும் அலுவலகத்தில் தூங்காதீர்கள். நன்றி..... பத்தாம் வருடத்தை நாளைய இறுதிப் பதிவில் பார்க்கலாம்.... நன்றி.

டிஸ்கி : நாளைக்குள்ள முடிக்க வேண்டும் என்ற கட்டாயத்தால நான் இன்னைக்கி கொஞ்சம் பெரிய பதிவாக போட்டு விட்டேன். தயவு செய்து பொறுமையாக படித்து நன்றாகத் திட்டவும். நன்றி.