Friday, October 30, 2009

அந்த நாள் பயங்கரம் - சுனாமி- 3

அவர் அப்படி என்னிடம் கேட்டுவிட்டுப் பின் தான் தள்ளிக்கொண்டு வந்த அவரின் வண்டி கடல் தண்ணியால் பழுதுஆகி விட்டது. ஆதலால் உங்கள் வீட்டு காம்பவுண்ட் உள்ளே நிறுத்திப் போகின்றேன். அப்புறமா மெக்கானிக் கூட்டி வந்து சரி செய்து எடுத்துக் கொள்கின்றேன் என்றார்.(ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள் வாகனம் வைத்துள்ளார் ஆனால் இடம் பெயர உதவவில்லை,இதாது பரவாயில்லை கார்களின் நிலை இன்னமும் மேசம், அடித்துச் செல்லப்பட்டு கதவு கண்ணாடிகள் உடைந்து சீட் எல்லாமும் செம்மண்ணும் சேருமாக இருந்தது). அவரும் நிறுத்திவிட்டுப் பின் தயங்கி என்னிடம் நீங்க கொஞ்சம் சாப்பாடு கேரியர்ரில் தர முடியுமான்னு கேக்க நான் இருங்க என்று சொல்லி என் மன்னியிடம் தெரிவித்தேன். அவர் சிறிதுகூட (நான் கூட யேசித்தேன்) யேசிக்காமல் சரி, உள்ள கூப்பிட்டு உக்கார சொல்லுங்க நான் கேரியர் ரெடி பண்ணுகின்றேன் என்று சமையலறை உள் சென்றார்.
மூன்றடுக்கு கேரியரில் எவ்வளவு அடைக்க முடியுமே அவ்வளவு போட்டு சாம்பார், ரசம் மேர் என்று கலர்ந்து கொடுத்தார். அவரின் கண்களில் தண்ணீர் வந்துவிடும் போல உணர்ச்சி வசப்பட்டு நன்றி கூறி கிளம்பினார். நான் இன்னும் யாராது கூப்பிட ரோட்டிக்கு அவருடன் வந்தேன். அவர் என்னிடம் மிகவும் தயங்கி தயங்கி ஒன்று கேட்டார்.

தம்பி சாப்பாடு கொடுத்தீங்க நன்றி, கேக்கக்கூடாது, ஆனாலும் எனக்கு வேறவழி தெரியலை, தப்பா எடுத்துக் கொள்ளவில்லை என்றால் ஒரு நூறுரூபாய் தரமுடியமா? நான் வண்டி எடுக்கும் போது கேரியரும் பணமும் கண்டிப்பா தருகின்றேன் என்றார். நான் ஒரு நிமிடம் திகைக்க அவர் சொன்னார், திடீர்னு கடல் அலைகள் வீட்டினுள் புகுந்து பீரோ, எல்லாம் கவித்து அடிச்சுட்டு போய்டுச்சு, பணம் நகை எல்லாம் போய்விட்டது, மின்சாரம் இல்லாததால் ஏ டி எம் வேலை செய்யவில்லை. அனுப்புரம் போய் எப்படி சென்னைக்கு இவர்களை உறவினர் வீட்டுக்கு அழைத்துப் போவது? பஸ்ஸிக்கு காசு வேணும் என்றார். அவரின் கண்கள் கலங்கிய நிலையில் இருந்தது. நான் அதுனால என்னங்க பரவாயில்லை என்று கூறி என் சட்டை பையில் பணம் எடுக்கும் நேரம் அவரின் மனைவி குழந்தைகள் மற்றும் பெரியோர் இருவரை கைபிடித்து அழைத்து இவரை காணாமல் தேடி வந்த அவரைப் பார்த்ததும் நான் ஒரு நிமிடம் மொத்த வாழ்கையும் வெறுத்துப் போனேன். எனக்கு மிக ஆச்சரியம் என்றாலும் கவலை சூழ்ந்தது. அவரின் மனைவி என்னுடன் பஸ்ஸில் வந்து பணிபுரியும் பெண்மணி.

நான் அவருடன் பேசியது இல்லை என்றாலும் தினமும் பார்த்து இருக்கின்றேன்(வேற என்ன வேலை). எப்படி இருப்பார் தெரியுமா? அவர் ஒரு பொறியியல் கல்லூரியின் விரிவுரையாளர். எங்கள் அலுவலகம் செல்லும் வழியில்தான் அவரின் கல்லூரியும் உள்ளது.
லலிதா, ஜி ஆர் டி, குமரன் என அத்தனை நகைக்கடைகளின் நகைகளையும் மொத்தமாக கழுத்தில், காதில், கையில் என தினமும் ஒரு முப்பது பவுன் நகை அனிந்துதான் வருவார். அவர் போடாதது கையில் புஜத்தில் மாட்டும் அணியும், ஒட்டியானமும் தான். இதை தவிர கழுத்தில் ஒரு மூனு வட செயின், நெக்லஸ், ஆரம் எனவும், இரு கைகளில் இருபது தங்க வளையல்களும் மூன்று விரல்களில் மேதிரம் என தினமும் கல்யாணத்திற்கு போவது போல்தான் கல்லூரிக்கு வருவார். அவர் கருப்பு என்பதால் நகைகள் இன்னும் ஜொலிக்கும். நானும் டிரைவரும் அவரை நகைக்கடை வருது, போகுது என்றுதான் பேசிக்கொள்வேம்.நான் அவருக்காக இல்லை என்றாலும், அவர் எனக்கு மிகவும் புடிக்கும் காதில் போடும் ஜிமிக்காக பார்ப்பேன். அப்படி இருந்தவர் எப்படி வந்தார் தெரியுமா. கலைந்த தலை, கண்களில் சேகம், பயம், சேர்வு, அவசரம் என்று வெறும் நைட்டியில் தாலி மட்டும் அனிந்து வந்தார். அவரைப் பார்த்ததும் நான் வாங்க என்றேன். அவர் தன் கனவரை என்னுடன் பார்த்ததும் புரியாமல் விழித்து, என்னங்க இவ்வளவு நேரம் கானமுன்னு பயந்து போய்த் தோடிக்கொண்டு வந்தேன் என்றார். அவர் இந்த தம்பி வீட்டில் நம்ம குழந்தைகளுக்கும், அப்பா அம்மாவிற்கு சாப்பாடும், சென்னை போவதற்கு பண்மும் கொடுத்தார்கள் என்றார். அவர் ஒரு நிமிடம் பார்த்து நீங்கள் பஸ்ஸில் வருவீர்கள் அல்லவா என்றார். நான் ஆமாங்க நீங்க வேனுமுன்னா எங்க வீட்டில் வந்து சேலையுடுத்தி பின் சாப்பிட்டு செல்லுங்க என்றேன். அவர் டையம் இல்லை, நான் அனுப்புரம் சென்று சாப்பிட்டு, உடைமாற்றிப் பின் சென்னைக்கு போகின்றேன். இப்ப அனுபுரம் பஸ்ஸை நிறுத்திவிட்டால் கஸ்டம். நாங்க சீக்கிரம் இங்கிருந்து போகவேண்டும் என்றார்.நான் அவர் கனவரிடம் இருனூறு ரூபாயாக கொடுத்து நாலு பேரும் போறதா இருந்தா 100 ரூபாய் பஸ்ஸிக்கே சரியாகிவிடும் ஆதலால் இதை வைத்துக் கொள்ளுங்கள், ஒன்றும் அவரசம் இல்லை பொறுமையாக கொண்டுவந்து தாருங்கள் என்று சொல்லி அனுப்பினேன்.
அந்த மனிதர் ஒரு பொறியாளர். மத்திய அரசில் உயர்ந்த பதவியில் உள்ளவர். வீடு நில புலங்கள் உள்ளவர், ஆனால் ஒரு நிமிடத்தில் இயற்கை நடுத்தெருவில் கொணர்ந்தது. அப்போது உணர்ந்தேன் நான் :---

கற்றது எங்கே? கட்டிய மனையாள் எங்கே?உற்றார் எங்கே? பெற்ற செல்வம் எங்கே? மாட மணி மாளிகை எங்கே? சூழ்ந்த நண்பரும் எங்கே? சேர்த்த செல்வமும் எங்கே ?பாடையில் போகும் போது உடன் வருமோ? ஆவிதான் அதை திருப்பித் தருமோ? என்ற பட்டினத்தாரின் பாடல் என் கண்களில் நீராக வந்தது. உண்மையில் அந்த பாடல் அப்போதுதான் உறைத்தது. தெருவில் நான் குட்டிப்பாலத்தின் கைப்பிடி சுவரில் பிரமித்து சில நிமிடங்கள் உக்காந்து இருந்தேன். எங்க மன்னி சன்னல் வழியாக கூப்பிட சிந்தனை கலைந்து சென்றேன். அப்புறம் ஒரு தாயின் அன்பும் எமனிடம் போராடிய கதையும் ஒன்றும் உள்ளது. அந்த கதைக்குப் பின் நான் உயிர் பிழைத்த கதையச் சொல்லுகின்றேன். நன்றி.

டிஸ்கி : அடுத்த வாரம் நாங்கள் சபரி மலை செல்லுவதற்காக எங்கள் சொந்த ஊருக்கு வந்துவிட்டேம். அவர்கள் அந்த கேரியர் நிறைய ஸ்வீட்டுடன், பணத்தையும் எதிர் வீட்டில் கொடுத்துச் சென்றுள்ளார்கள். அந்த நிகழ்வுக்குப் பின் அவர்கள் கடல் ஓர வீடே வேண்டாம் என்று செங்கல்பட்டில் சென்று குடியேறிவிட்டனர். கோடிரூபாய் கொடுத்தாலும் அந்த வீட்டுக்கு வருவதாக இல்லை என்றும் கூறிவிட்டார் அந்தம்மா. அதற்கு பிறகு நான் அவர்களை இதுவரை பார்த்ததில்லை. இது கூட அவர் போனில் கூறியதுதான். நன்றி.

8 comments:

  1. படித்ததும் அந்த பெண்மணியை பற்றி மனம் கலங்கிவிட்டது.இயற்கை 1 நிமிடத்தில் அனைத்தையும் மாற்றிவிட்டது.எவ்வளவு சக்தி வாய்ந்ததுன்னு நானும் சுனாமி அப்பதான் புரிஞ்சுக்கிட்டேன்...

    ReplyDelete
  2. அதிர்ச்சியாகவும் சோகமாகவும் இருக்கு.

    வாழ்நாள் சம்பாத்தியமெல்லாம் போய் நடுத்தெருவுக்கு வர்றது என்பதை நினைச்சுக்கூடப் பார்க்க முடியலை(-:

    ReplyDelete
  3. இன்னைக்கு தான் உங்கள் பிளாக் பார்த்தேன் .... உங்கள் பதிவுகள் அனைத்தையும் படித்தேன். நன்றாக எழுதி இருந்தீர்கள் . உங்கள் நினைவுகள் மிகவும் அருமையாக இருந்தது.

    ReplyDelete
  4. சக்தி வாய்ந்ததுன்னு இயற்கை:(
    http://susricreations.blogspot.com

    ReplyDelete
  5. வணக்கம் பித்தன் ஐயா
    சுனாமி விட்டுச் சென்ற சுவடுகள், நினைவுப் பக்கங்களில் நீங்காத வடுக்கள்.
    அஷ்வின்ஜி
    www.vedantavaibhavam.blogspot.com

    ReplyDelete
  6. மூணு பதிவுமே படிச்சிட்டேன் அண்ணா.

    என் உறவுகள் பட்ட அவலங்களும் இழந்த நட்புகளும் ஊர்க்காரர்களும் நினைவுக்கு வந்தாங்க... ஏன் அழிக்கப்பட்ட என் ஊர் கூட...

    ReplyDelete
  7. நானும் அந்த கட்டுரையைப் படித்தேன், சுசி. எவ்வளவு அழகான பள்ளிக்கூடம்,மலர்களும்,செடிகளும் பார்க்க அருமை. குண்டு போட்டு சிதைத்தார்கள் என்று படிக்கையில் மனது மிகவும் சங்கடத்திற்கு ஆளானது. அதன்பின் தான் சுனாமி பதிவு எழுத ஆரம்பித்தேன். நன்றி.

    ReplyDelete
  8. நன்றி. மேனகாசத்தியா,துளசிடீச்சர்,சாருஸ்ரீராஜ்,அஸ்வின் ஜி, சுசி.

    என் எழுத்துக்களுக்கும் தொடந்து எழுத ஆதரவும் அளிக்கும் உங்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்.

    ReplyDelete

என்னை வளர்க்க, கருத்துரையிடுக...

பதிவைப் படித்து கருத்து போடலைனா
உங்க கனவுல பூதம் வரும்,,, ஆமா சொல்லிட்டேன்.