Friday, October 2, 2009

பெரிய மனுசன் ஆனது- ராகிங் 2

எனக்கு நம்ம செட் ஆளுக ஒரு பெண்ணை ராகிங் பண்ணச் சொன்னதும் ரொம்ப டிரையல் ஆகிட்டன். கொஞ்சம் மனசுக்குள்ள மெர்சலும் இருந்தது. மெல்ல ஜகா வாங்கலாம்னு பார்த்தா நம்ம ஹிரே இமெஜ் டமார் ஆகிடும் என்ன பண்றதுனு புரியாம சரினு தலையாட்டிட்டன். ஆனா ஒரு கண்டிசன் எனக்கு புடிச்ச பெண்ணைத்தான் ராகிங் பண்ணுவன் ஸ்ட்ரிக்டா சொல்லிட்டன். எனக்கு பிடிக்கலைனாலும் செய்து ஆக வேண்டியிருக்குனு ஒரு சங்கடம்.எந்த பெண்ணுனு டிசைட் பண்ண கொஞ்சம் டைம் ஆகிடுச்சு. இந்த ராகிங் முன்னாடி நீங்க என்னைப் பத்தி கொஞ்சம் தெரிஞ்சுக் கிட்டாதான் இந்த பதிவு சுவாஸ்யமாக இருக்கும்.

எங்க ஊரு அப்ப ஒரு கிராமமும்னு சொல்ல முடியாம நகரமுன்னு சொல்ல முடியாத ரெண்டுங் கெட்டானா இருந்து. எங்க ஊரு ஒரு கிராமம் மாதிரி ஒரு குளேஸ் சர்க்யுட், எல்லாரையும் இவரு, இன்னாரு, இன்ன வீட்டு ஆசாமி என்று கூறலாம். ஊருக்குள் அந்த அளவுக்கு ஒற்றுமையும் புரிந்துணர்தலும் இருந்தது. எங்க ஊருல அப்ப எல்லாம் நாலு பள்ளிகள் தான் இருந்தது. அதுல பசங்களுக்கு மூன்று பள்ளிகள், அரசு மேல்னிலைப் பள்ளி, நகராட்சி உயர்னிலைப் பள்ளி, சி ஸ் ஜ உயர்னிலைப் பள்ளி. அரசு மேல்னிலைப் பள்ளி இடத்தில் கொஞ்சம் பெரிசு, பழமை வாய்ந்தது. நல்ல ரிசல்ட் கிடைக்கும்,ஆதலால் நிறைய பேரு இங்க தான் சேருவாங்க. சி,ஸ்.ஜ பள்ளி ஊரை விட்டு தள்ளி இருக்கும் அப்புறம் அங்க நிறைய மாணவர்கள் இந்த டிரைபல்ஸ் மற்றும் கன்வெட்டடு மாணவர்கள் தான் இருப்பாங்க, தரமும் குறைவு. இது எல்லாம் இல்லாம மற்றவை இரண்டும் உயர்னிலைப் பள்ளிகள் இங்க பத்தாவது முடித்தால் மீண்டும் பிளஸ் டூக்கு அரசுப் பள்ளியில் சேரனும், அதுக்கு அரசுப் பள்ளியில் ஆறாவது சேர்ந்தால் பன்னிரென்டாவது வரை ஒரே பள்ளியில் படிக்கலாம்,அதனால எல்லாரும் இங்கதான் சேருவாங்க. எங்க வீட்டில் அண்ணன், நான் ஜந்து பேரும் இங்கதான் படிச்சம்.பெண்ணுகளுக்கு பார்த்தீங்கனா புனித அலேசியஸ் மேல்னிலை பள்ளியும்,சி ஸ் ஜ யும் தான். சி ஸ் ஜ இரு பாலர் பள்ளி மற்றும் ஊருக்கு வெளிய இருக்கறதால அங்க பெற்றேர்கள் அனுப்ப மாட்டார்கள். எங்க ஊரு பெண்ணுக எல்லாம் இந்த அலேசியஸ் பள்ளில தான் படிப்பாங்க. நல்ல தரம் வாய்ந்த டெடிக்கேட்டட் பள்ளி. எங்க அரசு பள்ளிக்கும் இந்த பள்ளிக்கும்தான் படிப்புல போட்டி, ஹி ஹி எப்பவும் பெண்ணுகதான் ஜயிப்பாங்க.நாங்க பெரிய மனசு பண்ணி விட்டுக் கொடுப்பம்( ஹி ஹி நொண்டிச் சாக்கு). சரி விசயத்திற்கு போலாமா. எங்க ஊருல பெண்ணுகனா இந்த பள்ளில தான் படிப்பாங்க (இந்த ஒரு விசயத்த சொல்லத்தான் இவ்வளவு பில் டப்பு) இந்த பள்ளியின் நேர் எதிரில் தான் என் வீடு(என்ன காதுல புகை).ஆனாலும் சைட் அடிக்க முடியாது. ஏன்னா என் இரண்டாவது சகோதரி இந்த பள்ளியின் முக்கியமான ஆசிரியை. ஏன் முக்கியமான ஆசிரியை என்றால் அவர்கள் நல்ல அறிவு மற்றும் இரக்க சுபாபம் உடையவர். அந்த பள்ளியின் தேசிய மாணவிகள் படையின் நிர்வாகி, இந்திய இரானுவத்தின் பகுதி அதிகாரி. மிகவும் அழகு, நல்ல மிடுக்கு,நல்ல குரல், நல்ல துணிச்சல், பெறுமை இவற்றின் மொத்த உருவம்தான் எங்க அக்கா. அந்த பள்ளியின் எந்த விழா என்றாலும் முன் நிற்ப்பார். அந்த பள்ளியில் படிக்கும் நிறைய பெண்ணுகளுக்கு அவங்கதான் ரோல் மாடல் டீச்சர்.அன்பானவர். யாரையும் அடிக்க மாட்டார், ஆனால் முறைத்துப் பார்த்து கண்டிப்புடன் சத்தமிட்டு திருத்துவார். நிறைய ஏழைக் குழந்தைகளுக்கு கட்டணம் செலுத்துவார், இலவச தனிப்பாடம் நடத்துவார். அங்க உள்ள பெண்களும் எங்க அக்கா என்றால் உயிரைக் கொடுக்கும் அளவுக்கு ஒரு கிரெஸ் இருந்தது.

இந்த அக்கா என்றால் எனக்கு உயிர், மற்ற அக்காவும் பிடிக்கும் என்றாலும் இந்த அக்கா எனக்கு பொன்னின் செல்வன் குந்தவை மாதிரி, சின்னப் பையன்ல நான் இந்த அக்கா மனுஸி இல்ல தேவதை என்று நினைத்தது உண்டு. நான் இந்த அக்கா கூட ஏழாம் கிளாஸ் படிக்கும்வரை அட்டை மாதிரி ஒட்டிக்கொள்வேன்.அவர்கள்தான் எனக்கு பொன்னியின் செல்வன்,சிவகாமியின் சபதம்,அலை ஓசை கதைகள் சென்னவர். நான் காலையில் இருந்து இரவு வரை அவர்களுடன் தான் இருப்பேன், இரவு மட்டும் எங்க அப்பா நெஞ்சு மேல படுத்துக்குவன். அதுதான் எனக்கு மெத்தை. அக்காவிற்கு தலைவலி, கால்வலி என்றால் பிடித்துவிடுவன் நாந்தான். இன்னைக்கி என் நாற்ப்பத்தி இரண்டாவது வயதில் நான் அந்த அக்காவிற்கு போன் செய்தால் கேக்கும் முதல் வார்த்தை " டாய் சுதாக்குட்டி எப்பிடிடா இருக்க?" இன்னமும் அவர்களுக்கு நான் குட்டிப்பையந்தான் ( நான் சின்னப் பையந்தானா வயசு பதினேட்டுதான்). என்ன சொல்ல வரன்னா நான் விளையாடுவது, அடிக்கடி இருப்பது எல்லாம் அந்த பெண்கள் பள்ளியில் தான். ஆதலால் டீச்சர் தம்பி மற்றும் கொஞ்சம் கலரா,குண்டா,சுமார் அழகா, நல்ல படுக் படுக்னு பேசுற பையன். அதனால எல்லா பெண்ணுகளுக்கு என்ன புடிக்கும் எப்பவும் எதாது பெண்ணுக எனக்கு ஜவ்வு மிட்டாய், மாங்காய், குச்சி ஜஸ் லஞ்சம் கொடுத்து என்னைத் தூக்கி வச்சுக்குவாங்க, என்னை ஒரு இரண்டாயிரம் பெண்ணுகள் வரை என் கன்னத்தைக் கிள்ளி இருப்பார்கள். நானும் எங்க அக்காவிடம் நிறைய தடவை புகார் சொல்லி இருக்கின்றென். அதுனால எனக்கு பெண்ணுக கிட்ட பேசுற கூச்சம் எல்லாம் கிடையாது. எங்க வீட்டுல எப்பவும் பத்து பதினைந்து பெண்கள் தனிப்பாடம் படிப்பார்கள். அங்க இருக்க எங்க அக்காவின் சக டீச்சர்ஸ் எல்லாருமென் வாயப் புடுங்குவது அவர்களின் பொழுதுபோக்கு நானும் சளைக்காமல் பதில் சொல்வேன்.இது இல்லாம எங்க வீடு சுத்தி இருக்கற நாலு தெருவுலையும் எந்த வீட்டுலையும் போய் அந்த ஊட்டு அம்மா, பாட்டி எல்லார் கிட்டையும் கதை அடிக்கறது என் பொழுதுபோக்கு. நான் நாலு நாள் அவங்க யாரது வீட்டுக்கு போகலைனாக் கூட என்னைத் திட்டுவாங்க இல்லைனா எங்க வீட்டுல வந்து என்ன உடம்பு சரியில்லையானு கேப்பாங்க. எனக்கும் எல்லார் கிட்டையும் மரியாதையாக பழகுவது, அன்பா பேசுவது ஆசையாக இருப்பது போன்றவை எங்க வீட்டில் கற்ற பாடம். போடா,போடி, வாடா, வாடி என்று ஒருமையில் அழைத்தால் எங்க அம்மாவிற்கு பிடிக்காது. எங்க அண்ணன் கண்ணதில் கைரேகை வச்சுடுவார். நிறைய, கொள்ளை கொள்ளையாக அன்பு காட்டினாலும் எங்க வீட்டில் படிப்பு, ஒழுக்கம் என்ற விசயத்தில் ரொம்ப ஸ்டிரிக்ட். எங்க அம்மா மத்துகட்டை தூக்கிடுவாங்க,அல்லது எங்க பெரிய அண்ணன் அடி பின்னிடுவார், கையில எது கிடைத்தாலும் அடிச்சுடுவார். ஆதலால் இந்த இரு விசயத்திலும் நாங்களும் ஒழுங்காக ஒழுங்கை கடைப் பிடிப்போம். பொய் சொன்னால் விழும் அடிகளுக்கு கணக்குப் பாக்க முடியாது,அந்த அளவுக்கு அடி விழுகும், இதுக்கு நான் அடி வாங்குனது இல்லை(ஒருமுறை பொய் சொல்லாமல் பொய் சொன்னதாக தர்ம் அடி வாங்கினனேன்,அது தனி பதிவில் சொல்கின்றேன்). ஏன் என்றால் பொய் சொல்வது எனக்கும் சிறுவயதில் இருந்து பிடிக்காது. எங்க அப்பா எல்லா குழந்தைகளுடன் நல்ல பாசமா இருப்பார் என்றாலும் பெண் குழந்தைகள் மூவரிடமும் அளவு கடந்த அன்புடன் இருப்பார். என் வாழ்கையில் எங்க அக்காக்களை எங்க அப்பா திட்டி நான் பார்த்தது இல்லை. கோவப் படக்கூடமாட்டார். பெண் குழந்தைகளை மகாலட்சுமி என்பார். அந்த பழக்கம் எனக்கும் ஒட்டிக்கொண்டது. எனக்கும் பெண்கள் முகம் வாடியிருந்தால் புடிக்காது,பொதுவாக அழுகாய்ச்சி எனக்கு சினிமாவில் கூடப் பிடிக்காது அதுவும் நேரில் அழுதால் கேக்கவேனாம். குழந்தைகள்,பெண்கள் அழுதால் எனக்கு மனம் இளகிவிடும் அல்லது என் கண்ணில் கன்னிர் இருக்கும். இன்னமும் அப்படித்தான்.(சுய புராணம் போதுமுனு நினைக்கின்றேன்) இப்படி நான் எப்போதும் அந்த பள்ளியில்தான் இருப்பேன், டீச்சர் தம்பி என்று எல்லா பெண்களுக்கும் தெரியும். எங்க வீட்டில் அனைவரும் நல்லா படிப்பார்கள்,ஒழுக்கமாகவும் இருப்பார்கள் எனவே அய்யிரு வூட்டுப் பசங்க நல்ல பசங்க என்று என் அண்ணன்கள் அனைவரும் பேரு எடுத்ததால நானும் ஒழுக்கமா இருந்து தொலைக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானனேன். நான் இப்படி அந்த பள்ளியிலே வளர்ந்தால எனக்கு பெண்ணுக மத்தியில நல்ல பெயர் இருந்தாலும் எனக்கு தனிப்பட்ட முறையில் சுதந்திரம் பறி போய்விட்டது. இது எல்லாம் ஒன்பதாம் கிளாஸ் வரையில் தான் அப்புறம் எனக்கு வெக்கம் வர ஆரம்பித்து பள்ளிக்குள் செல்வதை நிறுத்தினேன்.எங்க வீட்டில் எதாது எங்க அக்காவிற்கு கொடுத்து அனுப்பினால் கூட நான் வாட்ச்மேனிடம் கொடுத்துவிடுவேன். அவர் ஏம்பா உள்ள போய் கொடுத்துவா என்றால் நான் நெளிவதைப் பார்த்து புரிந்து கொண்டார். ஒருமுறை நான் உள்ள போக வேண்டிய கட்டாயத்தில் போன போது அங்கு என் அக்கா கூட நிறைய டீச்சர்ஸ் லஞ்ச் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் என்னிடம் சுதா! வா வா என்று ஏன் வருவது இல்லை என்று சகஜமாக கேக்க, நான் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் முழித்து கூச்சத்தில் நெளிய, அவர்களில் ஒரு சீனியர் டீச்சர் "ஏய் மஞ்சு உன் தம்பி பெரிய மனுசன் அகிட்டாண்டி" என்று கமண்ட் பண்ண எல்லாரும் சிரிக்க நான் என் அக்காவிடம் கூட சொல்லாமல் வெக்கத்தில் வெளிய ஓடிவந்துட்டன். அப்பதான் எனக்கு பெரிய மனுசன்னா என்னனு புரியாமல் பெரிய மனுசன் ஆகிட்டனு புரிஞ்சது. அதுக்கு அப்புறம் நான் அந்த பள்ளிக்குள் போவது இல்லை எங்க அக்காவும் கூப்பிடுவது இல்லை. என் டாவு ஃபிகர் கலை நிகழ்ச்சிக்கு மட்டும் உள்ள போயி ஒரு ஓரமா நின்னு பார்த்துட்டு வந்தன். இந்த புரணத்தில் புரிந்து இருப்பீர்கள் நான் ஏன் பெண்களை ராகிங் பண்ண தயங்குனன்னு. அப்படியும் ஒரு பெண்ணை ராகிங் பண்ணினேன். சுய புரணத்தில் பதிவு ரொம்ப நீளம் ஆகிட்டது, தப்பா எடுத்துக்காதிங்க, என் குணத்தை புரிந்தால் தான் அடுத்த பதிவு சுவாரஸ்யமாக இருக்கும் என்பதால் இவ்வளவு பில்டப்பு. அடுத்த பதிவில் கண்டிப்பா அந்த ராகிங் பற்றிச் சொல்லறன். நன்றி.

3 comments:

  1. அடுத்த பதிவை ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்...

    ReplyDelete
  2. அப்பாவி முரு சொன்னாச் சரியாத்தான் இருக்கும் - உண்மையிலெயே உனா தானா நேர் வாரிசுதான்
    சந்தேகமே இல்ல

    ReplyDelete

என்னை வளர்க்க, கருத்துரையிடுக...

பதிவைப் படித்து கருத்து போடலைனா
உங்க கனவுல பூதம் வரும்,,, ஆமா சொல்லிட்டேன்.