Tuesday, October 27, 2009

புளி அவல் உப்புமா

எல்லாரும் சீக்கிரமாக சமைக்க அருமையாக விரைவில் செய்ய ஒரு டிபன் வகை உப்புமா. இதுல அவல் உப்புமா எல்லாரும் பண்ணுவது ஒன்றுதான். ஆனாலும் அதில் மிகவும் சுவையான புளி அவல் உப்புமா தான் நம்ம பதிவு. இதை உப்புமா என்று சொல்லக் கூடாது ஏன் என்றால் இதுவும் புளிசாதம் மாதிரிதான். இது கோயிகளில் கூட பிரசாதமாக தரும் ஒன்று. ஏகதசி விரதத்திற்கு ஏற்றது. சரி செய் முறை பற்றிப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள் :
1. கொட்டி அவல் 1/2 கிலோ,
2.புளி சிறிதளவு,
3.பச்சை மிளகாய் 4
4. இஞ்சி சிறிது,
5.நிலக்கடலை 50கிராம்.
6.முந்திரி 4 (தேவைப்பட்டால்),
7.எண்ணெய்,கடுகு,பெருங்காயத்தூள் தாளிக்க,
8.தேங்காய் துருவல் நாலு ஸ்பூன்.

முதலில் ஓர் உருண்டைப் புளியை நல்லா கொதிக்கும் தண்ணிரில் விட்டு ஊறவைத்து கரைத்து அந்த கரசலை கொஞ்சம் பச்சை வாசம் போக, கொஞ்சம் மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் போட்டு கொதிக்க விடவும். புளித்தண்ணீர் கொதிக்கும் போது, கொட்டி அவலை கல் இல்லாமல் எடுத்து ஒரு மிக்ஸியில் போட்டு இரண்டாக்கவும்( ஒரு சுற்றுப் போதும்). அவல் இரண்டாக உடைபட்டால் போதும். தூள் ஆகக் கூடாது. ஒரு பாத்திரத்தில் இந்த உடைத்த அவலில் சூடான புளித்தண்ணிரை கொஞ்சமாக விட்டு கிளறி ஊறவைக்கவும். அவலும் தண்ணீரும் சரியாக இருக்கவேண்டும். அதிக புளித்தண்ணீர் கூடாது. தெளித்தாற் போல அதே சமயம் அவல் நனையும் வண்ணம் இருக்கவேண்டும். இதை ஒரு 5 நிமிடம் ஊற வைக்கவேண்டும்.

நிலக்கடலையை ஒன்றுக்கு நாலு ஆகா (கடலைப் பருப்பு) அளவில் மிக்ஸில் இட்டு பொடித்துக் கொள்ளவும், முந்திரியையும் அதே அளவில் பொடிக்கவும்.இஞ்சியை மிக சிறிய துண்டுகளாக நறுக்கவும்.

பின் அடுப்பில் ஒரு வாணலியை இட்டு இரண்டு அல்லது மூன்று ஸ்பூன் எண்ணெய் விட்டு அதில் அரை ஸ்பூன் மஞ்சள் பொடி, அரைஸ்பூன் பெருங்காயத்தூள் போட்டு தாளித்து அதில் கடலைப் பருப்பு ஒரு ஸ்பூன், நிலக்கடலை, முந்திரி, பச்சை மிளகாய் கருவேப்பிலை,இஞ்சி போட்டுப் பின் உறிய அவலையும் போட்டு கலக்கவும். அவலில் உள்ள ஈரப்பதம் போகும் வரை சூடு செய்யவும்(மிதமான சூட்டில்). அவல் வெந்ததும் அடுப்பை அனைத்து அதில் தேங்காய் துருவலை போட்டு களறி அடுப்பின் மீது மூடி வைக்கவும். அடுத்த ஜந்து நிமிடத்தில் புளி அவல் ரெடீ.

கவனிக்க: புளி அவல் உதிரியாக இருக்க வேண்டும். ஆதலால் புளித்தண்ணீர் கொஞ்சமாக தெளித்தாற் போல விடவேண்டும். லேசு அவல் ஆக இருப்பின் புளித்தண்ணிரில் ஊற வைக்காமல் தாளித்து முடித்ததும் அதில் அவலைப் போட்டு அதில் புளித்தண்ணீர் தெளித்துக் கிளரினால் போதும்.அவல் புளித்தண்ணீர் பிளஸ் சூட்டில் வெந்துவிடும்.
இதில் புளிக்கு பதிலாக எழுமிச்சை கலர்ந்த நீரைப் பயன்படுத்தி எழுமிச்சை அவல் கூட பண்ணலாம். நன்றி.

15 comments:

 1. நல்ல டிஷ் ஆக தெரிகிறது.
  சமைத்துப் பார்த்து சொல்கிறேன்.

  ReplyDelete
 2. கண்டிப்பாக செய்யவும். நன்றி.

  ReplyDelete
 3. புதியதுனு லேபில் கொடுத்திருக்கீங்க, பழையகாலத்து உணவாச்சே இது! நல்லா இருக்கும், சூடாச் சாப்பிட்டா! நன்றி.

  ReplyDelete
 4. புதுசா இருக்கு.புளில அதுவும் அவல் உப்புமா.
  செய்யவும் சுலபமா இருக்கு.

  ஆனா ஏன் நிறைய சாப்பாடுகளில புளி சேர்க்கிறீங்க ?பழப்புளி அவ்வளவா உடம்புக்குக் கூடாது.
  தேசிக்காய்ப் புளி நல்லது.

  ReplyDelete
 5. ரொம்ப ஈஸியா இருக்கும்,இந்த உப்புமா செய்வதற்க்கு...எனக்கு மிகவும் பிடித்த உணவு இது.

  ReplyDelete
 6. எங்க வீட்டுல அடிக்கடி செய்யறது இது. ஆனா புளித்தண்ணீரை கொதிக்கவிட மாட்டாங்க.நல்லா இருக்கும்.

  ReplyDelete
 7. எங்கிருந்துங்க இப்படி புதுசு புதுசா பிடிக்கிறிங்க!

  ReplyDelete
 8. // புதியதுனு லேபில் கொடுத்திருக்கீங்க, பழையகாலத்து உணவாச்சே இது! நல்லா இருக்கும், சூடாச் சாப்பிட்டா! நன்றி. //
  புதியது என்று நான் கூற காரணம், புளி மற்றும் நிலக்கடலை சேர்ப்பதால். இது சென்னை மற்றும் காஞ்ச்சீபுரம் போன்ற இடங்களில் செய்வார்கள், ஆனால் பிற இடங்களில் இது புதியதுதான். நன்றி திருமதி கீதா சாம்பசிவம்.
  // ஆனா ஏன் நிறைய சாப்பாடுகளில புளி சேர்க்கிறீங்க ?பழப்புளி அவ்வளவா உடம்புக்குக் கூடாது.//
  உப்பு,புளி, காரம்தான் சமையலின் அடிப்படை. ஆதலால் நிறைய வருகின்றது. தினமும் ஒருவேளை அளவாக சாப்பிட்டால் நல்லது. நீங்கள் சொல்லும் புளி நான் கேள்விப்பட்டது இல்லை. நன்றி ஹேமா.
  நன்றி மேனகா சத்தியா, தெய்வசுகந்தி மற்றும் வால்பையன்.
  நான் புதியதாக எதுவும் சொல்லவில்லை, எங்கள் வீட்டில் அடிக்கடி சமைக்கும் உணவுவகைகள் இவை. நன்றி.

  ReplyDelete
 9. ரெம்ப நல்லா இருக்கும் போல ட்ரை பண்ணி பார்க்கிறேன்!

  ReplyDelete
 10. புத்தாண்டு வாழ்த்துக்கள்.பொங்கல் வாழ்த்துக்கள் பித்தன்.நேத்து திட்டேர்னு அக்கா வந்தாங்க எங்க வீட்டுக்கு.quicka என்ன சமைக்க னு தெரியல.சீக்கிரம் செய்வது போல் சிற்றுண்டி தேடிக்கிட்டு இருந்தேன்.அப்புறம் உங்களுடைய அவல் புளி உப்மா நேத்து பண்ணினேன்.அக்காக்கும்,அத்திம்பேர் க்கும் ரொம்ப புடிசுச்சு.amazing taste..நன்றி.

  ReplyDelete
 11. // புத்தாண்டு வாழ்த்துக்கள்.பொங்கல் வாழ்த்துக்கள் பித்தன்.நேத்து திட்டேர்னு அக்கா வந்தாங்க எங்க வீட்டுக்கு.quicka என்ன சமைக்க னு தெரியல.சீக்கிரம் செய்வது போல் சிற்றுண்டி தேடிக்கிட்டு இருந்தேன்.அப்புறம் உங்களுடைய அவல் புளி உப்மா நேத்து பண்ணினேன்.அக்காக்கும்,அத்திம்பேர் க்கும் ரொம்ப புடிசுச்சு.amazing taste..நன்றி. //
  மிக்க நன்றி. அம்மு மது, இந்தப் பின்னூட்டம் நான் ஒரு உருப்படியான பதிவு போட்டுள்ளேன் என்ற நிறைவைக் கொடுத்தது. வெள்ளரிப்பிஞ்சு மசாலா, கடலை மசால், காரப் பொரி செய்து பாருங்கள், கண்டிப்பாய் அனைவருக்கும் பிடிக்கும்,பாராட்டுவார்கள். நன்றி.
  தங்களது அனைத்துப் பின்னூட்டங்களுக்கும் எனது நன்றிகள்.

  ReplyDelete
 12. கண்டிப்பா செஞ்சு பாக்கறேன்.

  ReplyDelete

என்னை வளர்க்க, கருத்துரையிடுக...

பதிவைப் படித்து கருத்து போடலைனா
உங்க கனவுல பூதம் வரும்,,, ஆமா சொல்லிட்டேன்.