Monday, November 2, 2009

அந்த நாள் பயங்கரம் சுனாமி -4

சுனாமியால் மக்கள் பட்ட வேதனைகளும் வடுக்களும் பலருக்கும் ஏராளம், எங்கள் வீட்டில் வந்த பலரில் ஒரு நடுத்தர வயது பெண்மணி,தன் இரு சிறுமிகளுடன் வந்துருந்தார். அவர் கூறியதை கேட்ட நான் உறைந்துபோனேன். அவர் காலையில் தனது குழந்தைகளுக்கு காபி கொடுத்துவிட்டு, காலை சிற்றுண்டி தயார் செய்துகொண்டுருந்தார். கனவர் அலுவலகம் சென்றுவிட்டார். அப்போதுதான் அந்த ஊழிக்காலத்தின் அலைகள் போல பெரிய அலை அடித்து தண்ணீர் அவர் வீட்டுக்கதவை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்தது, இவர் செய்வது அறியாது தன் இரு குழந்தைகளை பிரோவின் மீது ஏற்றிவிட்டார். பின் அலையில் பிரோ கவிழ்ந்து விடாதபடி சுவருடன் அழுத்தி தாங்கி பிடித்துக் கொண்டு நின்றுள்ளார். தண்ணீர் மிக வேகமாக வர மிகவும் சிரமப்பட்டு, என்ன நடந்தாலும் சரி எப்படியாவது தன் குழந்தைகளைக் காப்பாற்ற வேண்டும் என்ற முனைப்பில் நிற்க. வேகமாக வந்த தண்ணீரின் மட்டம் அவரின் கழுத்து வரை ஏறியது, அவர் எல்லாத் தெயவங்களையும் வேண்டியபடி இருந்தார். அலைகள் எவ்வளவு வேகமாக அடித்தாலும் அவர் இறுதி வரை சுவருடன் அழுத்திப் பிடித்த பிரோவை விடவில்லை. அவர் மருவத்தூர் பக்தை என்பதால் மேல்மருவத்தூர் அம்மா காப்பாத்து என வேண்டியபடி நிற்க, அவர் முகம் வரை ஏறிய தண்ணீர் பின் வடிந்தது. திரும்பிச் செல்லும் அலைகள் அவரை இழுக்க, அவர் பிரோவை கொட்டியாக பிடித்து நின்றதால் அவரின் புடவை முழுதும் உருவிச்சென்றது. தண்ணீர் சென்றவுடன் மாற்று ஆடை அணியக்கூட அவர் சிந்தனை செல்லவில்லை. குழந்தைகளை காப்பாற்றும் எண்ணம் மேலோங்கி நின்றதால், அவர் தன் இரு குழந்தைகளை இறக்கி, கைகளைக் பிடித்துக் கொண்டு தெருவில் ஓடி, சாலையின் இந்த புறம் வந்துவிட்டார். பின் பலரும் அவரிடம் புடவை இல்லை என்று கூறும்போதுதான் தன் நிலை உணர்ந்தார். அங்கு கிடைத்த ஒரு துணியைக் சுற்றிக் கொண்டு வந்தவர்.எங்கள் வீட்டில் மன்னியின் நல்ல புடைவை ஒன்றைக் கட்டிக்கொண்டார். காலையில் நனைந்த நைட்டியுடன் இருந்த அந்த குழந்தைகளுக்கு எங்கள் மன்னி அவரின் சுடிதார்களைக் கொடுத்தார்.

இதுபோன்று எங்கள் அண்ணாவின் அலுவலகத்தில் பணி புரியும் ஒருவர் கடலில் கரையில் நின்று தூண்டில் போட்டு மீன் பிடித்துக் கொண்டு இருந்தார். அவர் பெரிதாக வரும் அலைகளைப் பார்த்து ஓடத்தொடங்க, அடித்த அலையில் சென்ற அவர் இடையில் ஒரு பாலத்தின் கைப் படி சுவர் கிடைக்க அதைப் பற்றிக் கொண்டார். அலைகள் அவரின் முழு ஆடைகயும் உருவிச் சென்றன. 45 வயது மதிக்கத் தக்க அவர் பிறந்த மேனியாக தெரு முழுதும் ஓடிப் பின் அங்கு ஒரு வீட்டுக்குள் சென்று வேஷ்டி கட்டினார். அவர் இது தனது மறுஜென்மம் என்றுதான் கூறுவார்.

அது போல நான் டீ சாப்பிடும் கடை உரிமையாளர், கடலை ஒருபுறம் வரும் பெரிய அலையை புரியாமல் வேடிக்கை பார்க்க, அவர் கடையின் பின்புறமாக வந்த அலை அவரைக் கடலினுள் இழுத்துச் சென்றது. அவர் கடலை நேக்கி வேகத்துடன் இழுத்துச் செல்லும் அலையுடன் போராடும் போது, அவரின் நல்ல காலம் அடுத்து வந்த பெரிய அலை ஒன்று அவரை மிண்டும் கடலில் இருந்து அடித்து ஒரு மரத்தின் மேல் போட்டது. அவர் அந்த மரத்தை கொட்டியாக பிடித்துக் கொண்டு மரக் கிளையில் மயங்கி விழுந்தார். பின் நினைவு திரும்பும் போது மருத்துமனையில் இருந்தார்.

நான் இருபது ரூபாய் மிச்சம் பிடிக்க போலாம் என்று சொன்ன ஸ்டேர்ஸ் முழுதும் கடலால் மூழ்கி, சுற்றிலும் கடல் அலைகள் அடித்து துவசம் ஆகிவிட்டது. அங்கு பணிபுரிந்த இருவர். காலையில் பொருள் வாங்க வந்த நால்வர் பலி ஆனார்கள். நானும் மூன்றாவது அண்ணாவும் அங்கு சென்று இருந்த்தால் கண்டிப்பாய் மரணம்தான். எங்க இரண்டாவது அண்ணாவின் தன்னிச்சை செயல் எங்களைக் காப்பாற்றியது(அய்யப்பன் காப்பாத்தினார்னு சொன்னா வால்ஸ் திட்டுவார்). நான் காலை ஏழு ஜம்பத்தி ஜந்துக்கு போட்ட பெட்ரோல் பங்கு முழுதும் அடுத்த எட்டு நிமிடங்களில் அலைகள் அடித்து சின்னா பின்னம் ஆகியது. அங்கு பணிபுரிந்த மூவரில் ஒருவர் உயிரிழக்க, ஒருவர் மரத்தின் மீது ஏறித்தப்பிக்க, ஒருவரை அலைகள் அடித்து பக்கிங்காம் கால்வாயில் தள்ளியது. மீனவர் ஆன அவர் நீச்சல் தெரிந்ததால் அலைகளின் போக்கில் போய் உயிர் தப்பினார். நான் எட்டு மணிக்கு பயணம் செய்த சாலை முழுதும் அலைகள் அடித்து ரோடு முழுதும் முழங்கால் அளவு சேறும் சகதியும் ஆனது. அந்த சாலையின் இடப்புறம் அரைக் கிலோமீட்டர் தொலைவில் உள்ள கடலில் வந்த அலைகள் சாலையைக் கடந்து சாலையின் மறுபுறம் நின்று இருந்த டிப்பர் லாரியைக் கூட (எல் & டியின் சிமெண்ட் மற்றும் ஜல்லிக்கலவை, காங்கிரீட் கலவை எந்திரம்) கவிழ்த்து உருட்டும் அளவுக்கு வலிமை கொண்டதாக இருந்தது. மூன்று நிடங்களுக்கு முன்னால் இந்த சாலையினை கடந்து சென்றேன் எனபதை நினைத்தால் பயமாக உள்ளது.

நான் முன்னால் சொன்னது எல்லாம் சாலையின் வலப்புறம் உள்ளதுதான். சாலையின் இடப்புறம் தான் கடலை ஒட்டிய குடியிருப்புகள் மொத்தமாக அழிந்தன. மீனவர் குடியிருப்புகள் எல்லாம் தரைமட்டமாயின. நகரியத்தில் உள்ள அடுக்கு மாடி வீடுகளின் தரைமட்ட வீடுகள் எல்லாவற்றிலும் தண்ணீர் புகுந்து, வீட்டில் அனைத்துப் பொருளும் நாசமாயின்ன. எங்க அண்ணாவின் நண்பரும், அவரின் மனைவி எங்க மன்னியின் தோழிக்கு கடல் என்றால் மிகவும் பிடிக்கும். அதற்காக அவர் கடலை ஒட்டியுள்ள வீடு வாங்கினார். தினமும் காலை எழுந்தவுடன், சாரளம் வழியாக கடலைப் பார்த்துக் கொண்டுதான் பல் விளக்கி, அடுப்பங்கரையில் கூட கடலைப் பார்த்துதான் காபி போட்டுக் குடிப்பார். அவர் அன்று காலை வழக்கம் போல காபி போடும் போது கடலைப் பார்த்தார். அப்போது ஒரு பனைமர உயரத்திற்கு எழுந்து வரும் அலைகளைப் பார்த்து எதே உள்ளுனர்வு உந்த ஹாலுக்கு ஓடி வந்து தனது இரு மகன் களின் கைகளைப் பிடித்து கனவரையும் கத்திக் அழைத்துக் கொண்டு தெருவில் ஓடிவந்தார். அலைகள் அவர் ஓட ஓட துரத்தி வந்தது. சாலைக் கடந்த அவர் அங்கு அடுக்கு மாடியில் மேல் நின்றவர்கள் மேலே ஏறுமாறு கத்த மேலே ஏறிக் கொண்டார். அவரின் வீட்டில் பின்புறம் சாரளம், வெண்டிலோட்டரை உடைத்துப் புகுந்த அலைகள் வீடு முழுதும் அடித்து, வீட்டின் பால்கனி மற்றும் வாசல்கதவை உடைத்து வெளியேறியது.

டீவி, துவைக்கும் எந்திரம், குளிர் சாதனப் பொட்டி, பிரோ, என அனைத்தும் உடைந்து சர்வ நாசம் ஆகியது. நாங்கள் போய் அந்த வீட்டில் இருந்த பாத்திரங்கள் முடிந்த வரை அங்கு இருந்த பொருள்கள் எல்லாம் அவருக்கு தற்காலிகமாக கிடைத்த வேறு வீட்டுக்கு மாற்றிக் கொடுத்தேம். எங்கள் மன்னியும் அவர் நண்பியும் அவரின் வீட்டில் கணங்கால் அளவு மூடிக்கிடந்த மண்ணில் குச்சியால் தோண்டித் தோண்டி நகைகள் எல்லாம் தேடி எடுத்தார்கள். அப்படியும் ஒரு பத்து பவுன் நகைகள் போனது. வீடு மொத்தமும் போய் எல்லாம் புதியதாக வாங்கினார்கள்.

நானும் எங்க மூன்றாவது அண்ணாவும் மதியம் அனைத்தும் முடிந்தவுடன் கடலுக்கு அருகில் இருந்த இரண்டு அடுக்கு மொட்டை மாடியில் போய் கடலைப் பார்த்தேம். அழகாய் நான் இரசித்த கடல் செந்தண்ணிராக பொங்கி குமறிக் கொண்டு இருந்தது. அதன் அலைகள் நகரியத்தின் இடிந்த மதில் சுவர் வரை வந்து போய்க் கொண்டு இருந்தது. நான் பயம் மற்றும் பசி வயிறைப் பிசைய அண்ணாவை அழைத்துக் கொண்டு திரும்பினேன். பெரிய கூட்டம் ஒன்று பக்கிங்காம் கால்வாயில் கடல் புகுவதை வேடிக்கைப் பார்க்க, எங்க அண்ணா பிரியப்பட்டார் என நாங்களும் போனேம். அங்கு கடலை அலைகள் கால்வாயில் புகுவதால், கால்வாயிலும் அலைகள் அடித்தன. அப்போது எங்கள் முன்னால் ஒரு போரலை ஒன்று வர, அண்ணா ஓடி வாங்க என்று கத்திக் கொண்டு பின்னங்கால் பிடறியில் பட, புலி துரத்தும் மானாய் ஓடிணேன். சிறிது தூரம் ஓடி வந்து விட்டு திரும்பிப் பார்த்தால் எங்க அண்ணா சிரித்துக் கொண்டு நூறு அடி பின்னால் நின்று கொண்டிருந்தார். அவர் " டேய் அலை அப்பவே பின்னால போயிருச்சு, நீ இப்படி பயப்படுறியே" என்றார். பின் நான் அவரை நச்சரித்து வீட்டுக்கு கூட்டிப் போனேன்.

ஒரு டாட்டா சுமோவை அடித்து புரட்டிப் போட்டு இருந்தது. ஒரு அம்பாசிடர் தலைகீழாக கவிழ்த்தும், மாருதி ஜென்னை இழுத்து பக்கிங்காம் கால்வாயிலும் தள்ளி இருந்தது. அடுத்த நாள் கடலை ஒட்டி எங்கு பார்த்தாலும் பிணங்கள், மொத்தம் ஜம்பது பேருக்கு மேலே உயிர்கள் நகரியத்தில் பலியாகினர். அதில் அதிகம் குழந்தைகள்தான், அப்புறம் பெண்கள். இவர்களின் நினைவாக ஒரு சுனாமி பூங்கா ஒன்று உள்ளது. அதில் இவர்கள் அனைவரின் பெயர்களும் பொறிக்கப் பட்டுள்ளது. ஒருவர் தன் இரு செல்லக் குழந்தைகளையும், மனைவியும் பறிகொடுத்து மருத்துவமனையில் இருந்து குழந்தைகளைப் பொட்டலமாக வாங்கி வந்தார். துணி சுற்றிய அந்த பிஞ்சு குழந்தைகளின் துணியை விளக்கி அவர் அழுத போது மனம் நெடித்துப் போனேன்.

இப்படி சுனாமி பற்றி சொல்ல நிறைய இருக்கு ஆனாலும், இந்த சுனாமி பற்றி எழுதி ரொம்ப சேகத்தில் ஆழ்த்த வேண்டாம் என்று பெரிய பதிவாக போட்டு அடுத்த தொடருடன் முடிக்கின்றேன். அந்த கோவில்களைப்(கருமாரியம்மன் கோவில்) பற்றி ஒரு பதிவு பின்னால் ஆன்மீகப் பதிவில் போடுகின்றேன்.

13 comments:

 1. இன்னும் இப்பதிவை தமிழிஸில் இணைக்கலையா?

  நல்லதொரு பதிவு..

  ReplyDelete
 2. உன்மையில் இனைக்க மறந்து விட்டேன், நீங்கள் கூறிய பிறகு இனைத்தேன். உங்களின் வருகைக்கும் நினைவூட்டலுக்கும் நன்றி.

  ReplyDelete
 3. தொடர்ந்து நான்கு பதிவுகளையும் இப்போதான் வாசித்தேன்.அந்த நாளை நினைத்தாலே மனம் இப்போதும் நடுங்குது.உங்க கோர்வையான எழுத்து நல்லா இருக்கு.இப்படி உங்க அனுபவங்களைத் தாங்க.

  ReplyDelete
 4. நான் ஏன் கோவிச்சுக்கப்போறேன்!

  எனக்கு வேற வேலையில்லையான்னு அய்யப்பன் தான் கோவிச்சுகணும்!

  ReplyDelete
 5. படிக்கிற எங்களுக்கே திக்னு இருக்குன்னா அனுபவிச்ச உங்களுக்கு... நல்லா எழுதி இருக்கீங்க அண்ணா.

  ReplyDelete
 6. //கலையில் பொருள் வாங்க //

  //ஏழு அப்பத்தி ஜந்துக்கு //

  //அதற்காக அவரின் கடலை ஒட்டியுள்ள வீடு வாங்கினார்//

  இதை எல்லாம் திருத்தவும்.

  -:)

  ReplyDelete
 7. தவறுகளை சுட்டிக்காட்டியமைக்கும் தங்களின் வருகைக்கும் நன்றி. தோழரே. திருத்திக் கொள்கின்றேன்.

  ReplyDelete
 8. மிகுந்த வருத்தமும் வேதனையான நாட்கள் அவை. ஆனாலும் என்ன செய்வது இயற்கை நம் கையில் இல்லை அல்லவா. நன்றி.

  ReplyDelete
 9. ம்.....எங்க ஊரில் இது போன்று 1000 ம் 1000 ம் கதைகள், குழந்தைகள் அனைத்தையும் அலைக்கு விலை இல்லாமல் கொடுத்த பெற்றோர்கல் உண்டு
  :(

  ReplyDelete
 10. உண்மைதான். உங்கள் ஊர்தான் அதிகம் பாதிக்கபட்டது. தங்களின் கருத்துக்கு நன்றி.

  ReplyDelete
 11. பொய்களை அழகாய்ச் சொல்பவன் கவிஞன்! உண்மையை உரக்கச் சொல்பவன் பித்தன்!

  எத்தனை அழகாய் சொல்லி உள்ளீர்கள்.
  சுனாமி பற்றி இத்தனை நெருக்கமாய் படித்தது பார்த்தது போல் உணர்ந்த உங்கள் எழுத்துக்கள்.

  ஆனால் கசிப்பான வார்த்தைகளை, உங்கள் சுய அறிமுகத்தை நீக்கிவிடுங்கள். தரம் அதிகம் இருப்பதால் சொல்கிறேன்.

  இணைக்க மறந்தது போல் தயை கூர்ந்து உருவாக்கம் கொடுத்தவுடன் உரக்க படித்து பிழையையும் திருத்தி விடுங்கள்.

  சோறில் கல் இருக்கலாமா? அதிகப்பிரசங்கி என்று எண்ணி விடாதீர்கள். நானும் இப்போது தான் திருந்திக்கொண்டு திருத்திக்கொண்டு வருகிறேன்.

  ReplyDelete
 12. நான் என் சுயவிவரத்தில் உண்மைகளைத்தான் கூறியுள்ளேன். நான் எம் காம், எம் பி எ, எம் எ போன்ற மூன்று உயர்னிலை பட்டமும் மற்றும் உயர்னிலை சந்தையியல் டிப்ளமே படித்து ஜ ஸ் ஓ தனிக்கையாளர் படிப்பும் படித்து இருக்கின்றேன். ஆனாலும் எதுவும் சாதிக்காதது போன்ற உணர்வு. ஆதலால்தான் உருப்படி எதுவும் இல்லை என்று கூறியுள்ளேன்.

  தவறுகளை இப்போது குறைத்துள்ளேன், இன்னமும் குறைத்துக் கொள்கின்றேன். தங்களின் யேசனைக்கு சிரம் தாழ்ந்த நன்றி. தங்களின் தோழமைக்கும் முதல் வருகைக்கும் நன்றி.

  ReplyDelete

என்னை வளர்க்க, கருத்துரையிடுக...

பதிவைப் படித்து கருத்து போடலைனா
உங்க கனவுல பூதம் வரும்,,, ஆமா சொல்லிட்டேன்.