Thursday, October 1, 2009

கல்லூரிச் சாலை- ராகிங் அனுபவங்கள்.

பொதுவா எனக்கு ராகிங் எல்லாம் புடிக்காதுங்க, ஆனா ராகிங் பண்றவங்களை வேடிக்கை பார்த்து சிரிச்சுக் கிட்டு இருப்பன். நமக்கு நல்ல பல்லு இளிக்க தெரியுமுங்க, அந்த மாதிரி எனது கல்லூரி நண்பர்கள் (எல்லாரும் நண்பர்கள்தான் ஆனாலும் எங்க செட்). இந்த காபி டவரா செட், சேவிங் செட் மாதிரி நாங்க ஒரு ஆறுபேரு கல்லூரி செட், உன்மையா ஜந்து பேருதான் செட்,நான் அப்ப அப்பப்போய் ஒட்டிக்குவன்.
அவனுக எங்கிட்ட டேய் எங்க டேர்ம் முடிந்ச்சது, இப்ப நீதான் பண்ணும்னு, என்னமே சொத்துல பாகம் பிரிக்கற மாதிரி சொல்லிட்டானுக நானும் மறுப்பு தெரிவித்து வேற வழி இல்லாதால ஒத்துக்கிட்டேன். அப்பப் பார்த்து பிரெம் நவாஸ்னு ஒருத்தன் முதல் ஆண்டு மாணவன் பேண்ட் சர்ட் டக் இன் செய்துகொண்டு வந்தான். பசங்களும் அவன் ஸ்டைலா இன் பண்ணிட்டு வரான், அவனை ராகிங் பண்ணுனு டார்கொட் கொடுத்தாங்க. எங்க கல்லூரியில் ஒரு எழுதாத சட்டம் எங்க சீனியர்கள் எங்களுக்கு சொல்லியிருந்தாங்க. அது என்னன்னா முதலாமாண்டு மாணவர்கள் இவர்கள் கொடுக்கும் வெல்கம் பார்ட்டி வரைக்கும் சர்ட்டை டக் இன் செய்துகொண்டு வரக்கூடாது. (ரூல்ஸ் நொ ஒன்னு)

நானும் பிரெம் நாவாஸக் கூப்பிட்டு தம்பி பேரு என்ன? எந்த ஊரு? என்ன கோர்ஸ் என்று கேட்டு(ஏன்னா அடுத்த கோர்ஸ் பசங்களை நாங்க கிண்டல் பண்ணக் கூடாது(ரூல்ஸ் நொ இரண்டு). அவனும் எங்க கோர்ஸ்தான். உடனே நான் இத பாருனு ரூல்ஸ் நொ ஒன்னை சொன்னன். அதுக்கு அவனும் இன்சர்ட்டை எடுத்துவிட்டு எங்க எல்லாருக்கும் ஒரு சல்யூட் பண்ணிட்டு போய்ட்டான். எங்க செட் எல்லாரும் என்னைக் கொலைவெறியுடன் பார்த்து டாய் இதுக்கு பேரா ராகிங் என்று கடுப்பானார்கள். நானும் சரி நாளைக்கி வேற யாரையாது பண்ணறன் என்று கூற அவர்கள் சமாதானமாக போய்விட்டார்கள். முதல் வருசம் எனக்கு சீனியர்கள் எல்லாரும் எனக்கு பள்ளித் தோழர்கள் என்பதால் எனக்கு ராகிங் அவ்வளவா இல்லை. நான் பிளஸ் டூ ல கணக்குல கப்பு வாங்கிய காரணத்தால் என் பள்ளித்தோழர்கள் அனைவரும் எனக்கு சீனியர்கள். அவர்கள் என் வகுப்பிற்கு ராகிங் வந்தபோது நான் எனக்கு நல்லா தெரிஞ்ச ஒருத்தனை பெயர் சொல்லிக் கூப்பிட அவன் சும்மா இருடா நான் இப்ப சீனியர் என்றான். அதுக்குள்ள மற்ற மாணவர்கள்(அவர்களும் நண்பர்கள்தான், எனக்கு நட்பு வட்டம் கொஞ்சம் யுனிவர்ஸ் மாதிரி பெருசு) ஹலோ நாங்க இப்ப சீனியர்ஸ் இந்த பிரண்ட்சிப் எல்லாம் கல்லூரிக்கு வெளியில் வைத்துக்க என்று கூறி என்னை எழுந்து ஒரு பாட்டு பாடச் சொன்னார்கள். நானும் எழுந்து என் பஞ்ச கல்யானி (கழுதை) குரலில் விநாயகனே வினை தீர்ப்பவனே என்று ஆரம்பிக்க அவங்க உடனே என் இசைத்திறமையைப் பார்த்து டாய் உக்காருடா என்று ஏக காலத்தில் கத்தினார்கள். நானும் உக்காந்துட்டன். இதுதான் என் ராகிங் அனுவபம். சரி விசயத்திற்கு வரன். இல்லனா வால்பையன் என்னை பின்னூட்டத்தில் அறுவை சக்கரவர்த்தி விருது கொடுப்பார்.

அடுத்த நாள் மறுபடியும் பிரெம் நாவாஸ் டக் இன் செய்து வர, நான் கடுப்பாகி அவனைக் கூப்பிட்டு ஏம்பா நான் நேத்தே சொன்னன் இல்ல டக் இன் எடுத்துவிட்டு போ என்று சொல்ல அவன் எனக்கு இன் செய்துதான் பழக்கம், ஆதலால் முடியாது என்று சொன்னான், நான் உடனே நீ இப்ப எடுக்கறியா இல்லை நான் எடுக்கட்டுமானு கடுப்பா கேக்க, அவன் நான் யார் தெரியுமா? ராயல் எலக்ரிக்கல்ஸ் சாதிக் உடைய மச்சினன்னு சீன் போட்டான். எனக்கு ரொம்ப கோவமாகி கடுப்பில் அவன் பெல்ட்ட கழட்டி ஜிப்பை இறக்கி சர்ட்டை வெளியில் எடுத்துவிட்டு நீ போய் சாதிக், இல்ல சாகுல் இல்ல ஜாகீர் யாரை வேனா போய்க்கூட்டி வா என்று கூற அவன் அதிர்ச்சியாகி அவனும் கோவத்தில் பேன்ட் போட்டுட்டு ஓடிப்போய்ட்டான். எங்க கல்லூரி ஒரு இருபாலர் கல்லூரி. இது நடந்த கொஞ்ச தூரத்தில் சில நண்பிகளும் இருக்க(நல்லவேளை அவங்க யாரும் பார்க்கலை) அவன் ரொம்ப கோவம் பிளஸ் அவமானத்துல ஓடிப்போய்ட்டான். நான் கோவத்துல இப்படி பண்ணிட்டாலும் குற்ற உணர்வில் இருந்தேன். என் நண்பர்கள் எனது முதல் கோபத்தைப் பார்த்ததால் அதிர்ச்சி மற்றும் ஆச்சிரியத்தில் இருந்தனர். இது அன்று காலை நடந்தது.

அன்று மதிய உணவு இடைவேளையின் போது நாங்க மரத்தடியில் நின்றுருந்தேம்(குரங்கு எல்லாம் அங்கதான இருக்கும்). அப்போது பிரெம் நாவாஸ் அவன் மாமா சாகுல் அமிது என்ற சாகுலுடன் வந்தார். பிரெம் நாவாஸ் என்னைக் கை காட்ட அவர் அப்படியே ஆச்சரியத்தில் மூழ்கிவிட்டார். என் எதிரில் நின்று என்னை வியப்பாக பார்த்துக் கொண்டு சுதா நீயா?, சுதா நீயா? எனப் பலமுறை கேட்டார்(ஏன்னா நான் ரொம்ப நல்லவன்னு எல்லார் கிட்டையும் சீன் போடுவமில்லை). நான் ஆமான்னா! நான் முதல் நாள் ஒழுங்கா சொன்னேன். அடுத்த நாளும் இன் பண்ணிட்டு வந்தது இல்லாம நான் யாருனு தெரியுமானு திமிரா பேசினான். உங்களை எல்லாம் கூட்டி வருவதாக கூறினான். அதான் கோவத்துல இப்படி பண்ணிட்டேன் பதிலளிக்க அவர் பிரெம் நாவாஸிடம் டேய் இவரும் உனக்கு அண்ணன் மாதிரிதான் ஒழுங்கா சொல்லறத கேட்டு நடடா. என்று சொல்லிவிட்டு சரி சுதா நம்ம சொந்தக்காரன் தான் பார்த்துக்க என்றும் சொல்லிவிட்டுப் போனார். பிரெம் நாவாஸும் சாரிங்க என்று சொல்லிவிட்டு டக் இன்னை எடுத்துவிட்டுப் போனான். அவனுக்கு ஆச்சரியம் அவன் மாமா என்னிடம் இப்படி பேசியதும், என்னை என்னமே பெரிய தாதா ரேஞ்சுக்கு நினைச்சுட்டன் போல.

என்ன நடந்துன்னா எங்க வீட்டுல நாங்க எப்பிடி அண்ணன் தம்பி ஜந்து பேரே அதுபோல அவர்கள் வீட்டிலும் ஜந்து பேர்.எல்லாரும் எங்க அண்ணன் எல்லாரும் அவங்க வீட்டுல எல்லாருடன் படித்து இருக்கார்கள். ஒவ்வேறு அண்ணனுக்கும் ஒவ்வேறுத்தர் பிரண்ட். இந்த சாகுல் அண்ணா என்னுடைய நேர் மூத்த அண்ணன் பிரண்ட். அவங்க வீட்டு கடைசிப் பையன் ஜாகீர் என்னுடைய வகுப்பு தோழன் இல்லாவிட்டாலும் எனக்கு மட்டைப்பந்து விளையாட்த் தோழன். அவர்களின் சகோதரிகள் இருவரும் எங்க அக்கா உடைய மாணவிகள். நான் அவர்கள் வீட்டில் சென்று விளையாடி, சாப்பிட்டும் இருக்ககேன். என்னை அங்க எல்லாருக்கும் பிடிக்கும். அப்படி இருக்க அவங்களை சொல்லி என்னை மிரட்டினால் (படம் காண்பித்தால்) எப்படி இருக்கும். அதற்க்கப்ப்றம் பிரெம் நாவஸிடம் என்ன நடந்தது என்று கேக்க அவன் வீட்டில் அவன் அக்காவிடம் போய் அழாத குறையாக நான் கல்லூரிக்கு போகமாட்டேன் என்று கூறியுள்ளான் அதுக்கு அவன் அக்கா என்ன என்று கேக்க அவர்களிடம் சொல்ல அங்க சாப்பாட்டு டேபிளில் ஒரு பஞ்சாயத்து(ரவுண்ட் டேபில் கான்பரன்ஸ்) நடந்துள்ளது. அதில் சாதிக் பாய் முதலில் சீனியர்ஸ் சொன்னா செய்துட்டு போ என்று சொல்ல அதுக்கு என்னங்க நீங்க ஒரு பொறுக்கி நடு கிரவுண்டில் வைத்து இப்படி பண்ணியிருக்கான் நீங்க அட்வைஸ் பண்ணறீங்க என்று கோவப்பட, அவங்க பெரிய அண்ணன் இது கல்லூரி விசயம் நம்ம உள்ள போகக் கூடாது. வேனா கல்லூரி முதல்வரிடம் புகார் செய்யலாம் என கூறியுள்ளார். ஜாகிர் அது எல்லாம் வேண்டாம் நான் கல்லூரிக்கு வெளில உதைக்கிறேன் என்று கூற, கடைசியா சாகுல் அண்ணாதான் அந்த பையன் நம்ம பேரு எல்லாம் சொல்லியிருக்கன். அதனால தெரிந்தவந்தான் இருக்கும், முதல நான் போய்ப் பார்த்துட்டு வரன் அப்புறமா பார்த்துக்கலாம் என்று சொல்லியிருக்காங்க. அப்புறம்தான் உங்களுக்கு தெரியுமே.

ஆஆ ஒரு முக்கியமான விசயம் சொல்ல மறந்துட்டன், வெல்கம் பார்ட்டியில் நான் நாவஸிக்கு டீ ஊத்திக் கொடுத்ததும், நானே அவனுக்கு ட்க் செய்துவிட்டது. அதன்பின் இருந்த இரண்டு வருடங்களில் அவன் எந்த சந்தொகம் என்றாலும் என்னிடம் தான் கேப்பான். என் நேட்ஸ் மற்றும் பாடக் குறிப்புகள் எல்லாம் அவனுக்குத்தான் குடுத்தேன். அந்த இரண்டு வருடமும் அவன் என்னை எங்கு பார்த்தாலும் வணக்கம் சொல்லுவான். (ஒர் ரகசியம் என் நண்பர்களுக்கு தெரியாது உங்களுக்கு சொல்லறன், நீங்க யாருகிட்டையும் சொல்லாதிங்க, நான் நடு கிரவுண்டில் இந்த மாதிரி கோவத்தில் கேவலமாக நடந்துகொண்டது என் மனதை உறுத்திக்கொண்டே இருந்தது. ஒரு நாள் நவாஸை அழைத்து சாரி நவாஸ் எதே கோபத்தில் அந்த மாதிரி நடந்துக்கிட்டேன், தப்பா எடுத்துக்காத என்று மன்னிப்பு கேக்க அவன் அதுனால என்னங்க பராவயில்லை என்றான், ஒரு தாதா ரேஞ்சுல பார்த்த என்னை இப்ப ஒரு பெரிய மனுசன் ரேஞ்சுக்கு பாக்க ஆரம்பிச்சுட்டான்).
ஜாகிர் கல்யானத்தில் நான் போயிருந்த சமயம் அவன் சகோதரிகள் எல்லாம் என்னை டாய் பொறுக்கி என்று செல்லமாக திட்டியதும் மறக்க முடியாத சம்பவம்.

டிஸ்கி: பதிவு ரொம்ப நீளமா வந்ததால இன்னேரு விசயத்த சொல்ல முடியலை. இந்த ராகிங் நடந்த அடுத்த நாள் பசங்க என்னிடம் ஒகே. அடுத்து ஒரு பெண்னை ராகிங் செய்யவேண்டும் என்று கட்டளையிட்டார்கள். அதுவும் ஏறக்குறைய கல்லூரி சீட்டுக் கிழிக்கிற அளவுக்கு போச்சு. அந்த ஸ்வாரஸ்யமான சம்பவம் அடுத்த பதிவில். நன்றி.

4 comments:

  1. நிஜமாவே நீங்க நல்லவங்க பித்தன். மீதிய அடுத்த பதிவில போடுறதா சொல்லி இருக்கீங்களே...:))))
    நல்லா எழுதி இருக்கீங்க.

    ReplyDelete
  2. நன்றி சுசி அக்கா. தங்களின் ஊக்குவித்தல் என்னை இன்னும் எழுத சொல்லும்.

    ReplyDelete
  3. ஆகா அருமை அருமை - மலரும் நினைவுகளைத் தொகுத்து வழங்கியமை நன்று - நீ சாதிக் இல்ல சாகுல் இல்ல - ஜாகீர் யார வேணாக் கூட்டி வா - இது சாதாரணமா செருகப்பட்டதுன்னு நினைத்தேன். கடைசியில் அவ்ன் நம்ம பேர எல்லாம் சொல்லி இருக்கான் - நமம் பயலாத்தான் இருப்பான்னு சாகுல் முடிவெடுத்தது - ம்ம்ம் தொடர் எழுதுவதிலும் திறமை இருக்கிறது

    நல்ல இடுகை - எங்கள் காலத்து ராகிங்கே வேற

    நல்வாழ்த்துகள் சுதா

    ReplyDelete

என்னை வளர்க்க, கருத்துரையிடுக...

பதிவைப் படித்து கருத்து போடலைனா
உங்க கனவுல பூதம் வரும்,,, ஆமா சொல்லிட்டேன்.