Wednesday, October 28, 2009

அந்த பயங்கர நாள்- சுனாமி 1

சென்னையில் இருந்து பாண்டி செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் மாமல்லபுரம் தாண்டியவுடன் வரும் புதுப்பட்டினம் கிராமத்தில் இறங்கி உள் சென்றால் வருவது கல்பாக்கம் அனுமின் நகரியம். அதில் ஒருபுறம் வீடுகளும், பார்க்குகளும் இருக்க, மறுபுறம் முழுதும் நீண்ட அழகான சுத்தமான வங்ககடல் கரை. அழகான கடற்கரை, நிறைய நெறுக்குத்தீனிகளுடன் நண்பர்களுடன் சென்று இரண்டு மணி நேரம் உரையாடி, மணலில் படுத்து வானத்து நட்சத்திரங்களை வேடிக்கைப் பார்த்து, விழும் எரிகற்களைப் பார்த்துப் பொழுதுபோக்கும் கடற்கரை, துக்கமே அல்லது மகிழ்வே நான் தனிமையில் இருக்கும் கடற்கரை, இதை நான் காதலித்ததும் உண்டு. சித்திரை முழுனிலவு நாளில் எங்க வீடு,எதிர் மலையாளி வீடு, என் அண்ணியின் நண்பியின் வீடு அனைவரும் கூட்டாஞ் சேறு கொண்டு சாப்பிட்டு மகிழும் கடற்கரை. கல்பாக்கம் நகரிய கடற்கரை, ஆனால் இது எல்லாம் ஒரு நாளில் மாறிப்போனது. அந்த நாள்?

எங்க பார்த்தாலும் செல்போன் மயம், மனிதர்கள் பைத்தியாமாகி விட்டனர் என்று செல்போனை நான் திட்டுவது உண்டு, வீட்டில் இருக்கும் பெரியேரை மதிக்காத ஒருவன், செல்லில் நண்பருக்கும், நண்பிக்கும் எஸ் எம் ஸில் குட்மார்னிங் சொல்வார்கள் என கிண்டல் செய்ததும் உண்டு. ஆனால் செல்போன் மிகவும் அவசியம் என உணர்த்திய நாள். அந்த நாள்?.

நாம் திரட்டிய செல்வம், பணம், காசு, ஏ டி எம், நகைகள், கட்டிய வீடு அனைத்தும் பெய், இயற்கை நினைத்தால் அனைத்தையும் ஒரு நொடியில் புரட்டிப் போட்டுவிடும் என உணர்த்திய நாள் அது. நம்மால் ஆவதும் ஒன்று இல்லை, நம்மால் முடியாத காரியமும் உள்ளது என உணர்த்திய நாள் அது. செல்வந்தனும், குடிசை ஏழையும் தெருவிற்கு வந்த நாள்.

கட்டிய மனைவி, பெற்ற செல்வம்(குழந்தை), உடன் பிறந்தவர், உற்றார் உறவினர் என அனைத்தும் மாயை. நொடியில் அழியும் என எனக்கு உணர்த்திய நாள் அது. என் வாழ்வில் நிகழ்ந்த,எனக்கு பாதிப்பு இல்லாது, ஆனால் என்னை மிகவும் வேதனையிலும்,துன்பத்திலும் ஆழ்த்திய நாள் அது. என் கண் முன் நடப்பது, காண்பது கனவா அல்லது நிஜமா என்பது புரியாத நாள். இறைவா நீ இருக்கின்றாயா அல்லது நீயும் செத்துவிட்டாயா எனக் கேட்ட அந்த நாள்.
என் வாழ்வில் முன் கண்டிராத பயங்கர நாள். நானும் இறக்கவேண்டியிருந்து அல்லது நான் மயிரிழையில் தப்பித்த அந்த நாள் 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 25 அன்று காலை. ஆம் நம் நாட்டின் சுனாமி என்னும் அரக்கன் வந்த நாள். எல்லாமும் புரட்டிப் போட்ட நாள் அது. அதை ஒரு பதிவில் சொல்வது இயலாது என்பதால் தொடராக எழுதுகின்றேன். படியுங்கள்.

அந்த வருடம் எனது ஏழாவது சபரி மலை யாத்திரைக்காக மாலை போட்டுருந்தேன். எங்க இரண்டாவது அண்ணா முதல் வருடமும், என் மூன்றாவது அண்ணா இராண்டாம் வருட யாத்திரைக்காக மாலை போட்டுயிருந்தார்கள். எங்க இரண்டாம் அண்ணாவின் முதல் வருடம் என்பதால் கன்னிசாமி பூஜை அன்று மாலை நடப்பதற்க்கு ஏற்பாடுகள் செய்துகொண்டு இருந்தேம்.அதன் முந்திய நாள் பொருட்கள் வாங்குவது குறித்த விவாதம் நடந்தது. நான் மளிகை பொருட்கள் எல்லாம் சட்ராஸ் செட்டியார் கடையிலும், பூஜை பொருட்கள் எல்லாம் நகரிய ஸ்டேர்ஸ்லும் வாங்கலாம் என்றேன். பத்தி, சூடம் எல்லாம் ஸ்டேர்ஸில் ஒரு ரூபாய் அல்லது ஜம்பது காசு கம்மீயாக இருக்கும் மொத்தமாக வாங்குவதால் ஒரு இருபது, முப்பது ரூபாய் மிச்சமாகும் என்றேன், எங்க அண்ணாவும் சரி என்றார். அதன்படி நானும் எங்க மூனாவது அண்ணாவும் போய் காலை 6.30க்கு மளிகை வகைகளை செட்டியார் கடையிலும், காலை எட்டு மணிக்கு ஸ்டேர்ஸ் திறந்தவுடன் பூஜை பொருட்களை வாங்குவது என்று முடிவு செய்தேம்.அதன் பின் மாலை(24.12.04) நாங்கள் கடலுக்கு மிக அருகில் உள்ள ஒரு வீட்டில் பக்தர் ஒருவரின் பூஜையில் கலந்துகொண்டேம். பூஜை சரியாக பத்து மணிக்கு ஆரம்பித்து அன்னதானம் முடிய மணி பன்னிரண்டு ஆகிவிட்டது. அதன்பின் நாங்கள் அங்கு வந்த அனைவரையும் நாளை எங்கள் வீட்டுக்கு வருமாறு அழைத்துவிட்டு அங்கு கடற்கரையில் அவர்கள் குழு மீட்டிங் நடந்தது. அதில் ஒரு சாமியின் குடும்ப சூழ்னிலை காரணமாக பணம் செலுத்த இயலவில்லை எனவும் குழுவில் உள்ளவர்கள் சிறிது பணம் போட்டு அவரை அழைத்து செல்லாம் என குருசாமி கூறியவுடன் எங்க அண்ணா அவருக்காக ஜநூறு ரூபாய் பணம் கொடுத்தார். அவரும் நாளை பூஜைக்கு காலையிலேயே வந்து உதவி செய்வதாக கூறினார். குருசாமியும் இன்னும் இருவரை காலையில் எங்கள் வீட்டுக்குப் போய் உதவி செய்யுமாறு பணித்தார். அவர்களும் வர இசைந்தனர். நாங்கள் நாளை முழுதும் எங்கள் வீட்டில் சாப்பிடுங்கள் எனவும் காலையில் வந்துவிடுங்கள் எனவும் கூறிவிட்டு கடற்கரையில் இருந்து வந்தேம். அப்போது கூட இன்னம் எட்டு மணி நேரத்தில் அந்த கடல்கரை மரண சாம்ராஜ்ஜியம் ஆகும் எனத் தெரியாது.

அந்த மறுனாளும் வந்தது. பதிவின் நீளம் கருதி முடித்து அடுத்த பதிவில் எழுதுகின்றேன். நன்றி.

13 comments:

 1. அடுத்த பதிவுக்கு காத்து இருக்கிறேன்

  ReplyDelete
 2. சார்.. இதை கொஞ்சம் படிச்சு பாருங்க...!

  http://anbudan-mani.blogspot.com/2009/07/26-2004.html

  ReplyDelete
 3. உங்களை சுனாமியிலிருந்து அய்யப்பன் தான் காப்பாற்றினாரா!?

  ReplyDelete
 4. திகிலா இருக்கு! சீக்கிரம் அடுத்த பாகத்தை போடுங்க!

  ReplyDelete
 5. சீக்கிரம் அடுத்த பாகத்தை எழுதுங்க....

  ReplyDelete
 6. // உங்களை சுனாமியிலிருந்து அய்யப்பன் தான் காப்பாற்றினாரா!? //
  அப்படியும் எடுத்துக் கொள்ளலாம், ஆனால் என்னைக் காப்பாற்றிய அவர் ஏன் மற்றவர்களை காப்பாற்றவில்லை. நான் இன்னமும் இந்த பூமியில் நிறைய பாவம் பண்ணவேண்டும் போல உள்ளது. நான் தப்பியது கடைசி நேர அதிர்ஸ்டம் என்றுதான் சொல்லவேண்டும்.
  தங்கள் அனைவரின் வருகைக்கும் ஆதரவுக்கும் நன்றி.
  உங்களின் பதிவுகளை படிக்கின்றேன் மணி. தங்களின் வருகைக்கும் முதல் பின்னூட்டத்திற்கும் நன்றி. மணி , ஜெட்லி.
  நன்றி முல்லை அக்கா, மேனகா மிகவும் நன்றி.

  ReplyDelete
 7. அடுத்த தொடருக்காக...

  ReplyDelete
 8. விரைவில், தினமும் ஒரு பதிவு தொடராக எழுதுகின்றேன். நன்றி ஹேமா.

  ReplyDelete
 9. //நான் இன்னமும் இந்த பூமியில் நிறைய பாவம் பண்ணவேண்டும் போல உள்ளது. //

  அப்ப ப்ளாக் எழுதுறது பாவம்னு சொல்றிங்களா?

  எனக்கு தெரிஞ்சி நீங்க முழு நெரௌம் ப்ளாக்கில் தான் இருக்கிங்க!

  சராசரியா ஒரு நாளைக்கு ஒரு பதிவாவது வந்துருது!

  இது தான் அந்த பாவமா!?

  ReplyDelete
 10. // அப்ப ப்ளாக் எழுதுறது பாவம்னு சொல்றிங்களா? //

  // எனக்கு தெரிஞ்சி நீங்க முழு நெரௌம் ப்ளாக்கில் தான் இருக்கிங்க! //

  சராசரியா ஒரு நாளைக்கு ஒரு பதிவாவது வந்துருது!

  இது தான் அந்த பாவமா!? //

  இது மட்டுமா நான் ஒரு நாளைக்கி குறைந்தது 50 பதிவாவது படித்து பின்னூட்டம் இடுகின்றேன். அது எந்த கணக்கு? குறிப்பா உங்க பதிவை மறக்காமல் படிக்கின்றேன். அது மகா பாவம் அல்லவா?
  சும்மானாஸ்சுக்கு பாஸ். புண்ணிய பூமியில் அதுவும் பாரத்தில் பிறக்க கொடுத்து வைத்துருக்கவேண்டும்.

  ReplyDelete
 11. //புண்ணிய பூமியில் அதுவும் பாரத்தில் பிறக்க கொடுத்து வைத்துருக்கவேண்டும்.//

  இது புண்ணியபூமி என்று எவ்வாறு அழைக்கிறீர்கள்!

  ஏன் புண்ணியநிலா, புண்ணியசெவ்வாய் என்று அங்கே குடியிருக்க செல்லவில்லை!?

  சான்று எதாவது கிடைக்குமா!? அல்லது நீங்கள் பிறந்ததால் ”புண்”ணிய சேர்ந்துக்குச்சா!?

  ReplyDelete
 12. நல்ல ஆரம்பமா இருக்கு.

  தலைப்பில் மட்டும் தொடர் பதிவுன்னு போடாமல் சுநாமி- தொடர் ன்னு இருக்கட்டும்.

  சின்னச் சின்னத் தட்டச்சுப்பிழையை நான் இப்போதைக்குக் கணக்கில் எடுத்துக்கலை:-)

  ReplyDelete
 13. பயந்துகிட்டே படிச்சேன், தாமதமானாலும் படிச்சிட்டோம்லே!

  ஆமாம் நாம எல்லாரும் பாரதத்தில் பிறக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்தான்.

  ReplyDelete

என்னை வளர்க்க, கருத்துரையிடுக...

பதிவைப் படித்து கருத்து போடலைனா
உங்க கனவுல பூதம் வரும்,,, ஆமா சொல்லிட்டேன்.