Wednesday, October 7, 2009

திருக்கோவில் தரிசன முறை

இது என்னுடைய ஜம்பதாவது பதிவு, எனக்கு பலவகையிலும் ஆதரவு அளித்த பதிவர்கள் அனைவருக்கும் நன்றி. என் பதிவுகளை படிக்கும் அனைவருக்கும் நன்றி. ஆன்மீகப் பதிவுகளை பின்னாளில் எழுதலாம் என்று நினைத்த பொழுதும் இந்த ஜம்பதாது பதிவை ஆன்மீகப் பதிவாக எழுதுகின்றேன். நம் கோவில்கள் மற்ற இடங்களைப் போல் இல்லாமல் அங்கு அனைத்து விசயங்களையும் மக்களுக்கு போதிக்கும் இடமாக நம் முன்னேர்கள் கட்டியுள்ளனர். அந்த காலத்தில் மக்கள் பேர்க் காலங்களில் புகலிடம் அடைய பெரிய மதில்களுடன் பெரிய கோவில்களை கட்டியுள்ளனர். நமது பாரம்பரியக் கோவில்கள் பக்திக்கான இடமாக மட்டும் இல்லாமல் அவை வாழ்க்கையின் முறைகளுக்கான இடங்கள் ஆகவும் உள்ளன.

நாம் கோவில்களுக்கு செல்லும் போது அந்த கோவிலின் பூஜை முறைகள், தூண்களின் சிற்பங்கள், கோவிலின் தலவரலாறு,கோவிலின் அமைப்பு ஆகியனவற்றை தெளிவாக அறிந்து பக்தி செலுத்துதல் முறை. அப்போதுதான் நாம் முழுமையாக கோவிலுக்கு சென்றுவந்த மன அமைதி கிட்டும். இந்த வகையில் துளசி டீச்சரின் பயணங்களும், கட்டுரைகளும் மிகவும் அருமை. அந்த கட்டுரைகளைக் கையேடாக கொண்டு போவது நலம்,இது இல்லாமல் கோவிலுக்கு அவசர கதியில் சென்று சாமியின் முன்னால் கையேடுத்து கும்பிட்டு கன்னத்தில் போட்டுக் கொண்டு தட்டில் ஜம்பது ரூபாய் போட்டு வருவது நானும் போய்ட்டு வந்தேன் என்ற திருப்தி மட்டும் மிஞ்சும்.மெதுவாக அமைதியாக கோவிலுக்கு சென்று முறையாக வழிபட்டு வந்து அங்கு கிடைக்கும் பிரசாதத்தை குடும்பத்தினருடன் குளக்கரையில் அல்லது அர்த்த மண்டபத்தில் அமர்ந்து பகவானின் நினைப்புடன் உண்டு, வெளியில் வரும்போது நம்மால் முடிந்த அளவு இயலாதவர்களுக்கு தர்மம் செய்வது சாலச் சிறந்தது. இப்படிச் செய்தால் நல்ல மன நிம்மதியும், ஆத்ம திருப்தியும் கிடைக்கும். இப்ப கோவில்லுக்கு எப்படி போவது என்று பார்ப்போம்.கூடுமான வரையில் குளித்தவுடன் அல்லது வெறும் வயிறுடன் செல்லுதல் நலம்.

பொதுவாக நம் பாரம்பரிய பழைய கோவில்கள் ஜந்து நிலைகளை கொண்டு இருக்கும் அவை 1.அர்த்த மண்டபம் அல்லது வாசல் அல்லது அத்தானி மண்டபம். 2.கருட மண்டபம் அல்லது கொடிமர மண்டபம், சில இடங்களில் அத்தானி மண்டபமும் கொடிமர மண்டபமும் ஒன்றாக இருக்கும்,3.வசந்த மண்டபம், 4, பிரம்ம மண்டபம், 5, கருவறை.

அர்த்த மண்டபம் அல்லது அத்தானி மண்டபம் முக்கால்வாசி இடங்களில் முதல் சுற்றுப் பிரகாரமாக இருக்கும், இதில் பொரும்பாலும் கோவில்கள் இருக்காது என்றாலும் இந்த பிரகாரத்தில் கொடிமரம், தலவிருஷ்சம் என்னும் கோவில் மரம்,பிள்ளையார், நாகராஜா, கன்னிமார் மற்றும் காவல் தெய்வங்கள் இருக்கும். ஒரு கோவிலுக்கு செல்லும் போது இவர்களை வணங்குதல் அவசியம். இந்த சுற்றில்தான் திருக்குளமும் இருக்கும். குளத்தில் குளிக்க முடியாது என்றாலும் சிறிது தண்ணிரை தலையில் விட்டுக் கொள்ளுதல் நலம். இங்கும் அமர்ந்து பிரசாதம், உணவு உண்ணலாம், ஆனால் தூய்மை அவசியம்.கோவில்களுக்கு சென்று கடவுளைத் தவிர மனிதர்கள் யாவருக்கும் வணக்கம் செலுத்தல் கூடாது. நம் வீட்டு பெரியோர்கள் ஆயினும் அவர்களை வீட்டில் வணங்க வேண்டுமே தவிர கோவிலில் காலில் விழுதல் கூடாது.

கருட மண்டபம் என்னும் கொடிமர மண்டபத்தை அமைதியாய் சுற்றிவருதல் அவசியம் இந்த சுற்றில் மண்டங்கள் தூண்கள் சிற்பங்கள் அனைத்தும் பொறுமையாக பார்ப்பது அவசியம். இதில் சித்தர்கள்,மகான் கள், கோவிலின் கதை, அந்த கோவிலுக்கு தொண்டு செய்த தேவதாசிகளின் சிற்ப்பங்கள் மற்றும் அந்த கோவிலைக் கட்டிய ராஜா. ராணி,அவர்களின் முன்னேர்கள் சிலைகளும் இருக்கும். சுவாமியின் வாகனங்களும் இந்த மண்டபத்தில் இருக்கும். (வொவ்வாலும் இருக்கும் ஒரு சில இடங்களில் அவைகளின் நாத்தம் அடிக்கும் என்பதால் கைக்குட்டை அவசியம். இங்கு கொடிமரத்தின் அருகில் சிறிது நேரம் ஒன்றும் பேசமல் அமரவேண்டும். ஏனென்றால் இங்கு வான மண்டலத்தில் இருக்கும் மின் காந்த கதிர்கள் மற்றும் காஸ்மிக் கதிர்கள் போன்ற பிரபஞ்ச சக்திகளை இழுத்து அங்கு பரவி இருக்கும். பழைய கோவில்களில் சக்தி யந்திரங்களும், நவரத்திங்களும் பொன்னும் இந்த கொடிமரத்தின் அடியில் புதைத்து இருப்பார்கள். இடிதாங்கி தத்துவம் போல் அவை வானில் உள்ள கதிர்களை பூமிக்கு இழுத்து மண்டபத்தில் பரவச் செய்யும், ஆதலால் இங்கு அமைதியாய் தியானிப்பது நன்று. கொடிமரத்தின் அருகில் விழுந்து வணங்குதல் நலம். (வணங்கும் முறைய அடுத்த பதிவில் கூறுகின்றேன்)

அடுத்த இடம் நம்ம வாழ்க்கையில் முக்கியமான ஒன்று. வசந்த மண்டபம். இது நம் வாழ்க்கையை பிரதிபலிக்கும்,அந்த காலத்தில் முறையான காமமும் இறைவழிபாடும் வாழ்க்கை அத்தியாவசியமாக புனிதமாக கருதப்பட்டது. இங்குதான் ஆடல் பாடல் அனைத்து விழாக்களும் நடக்கும். அந்த காலத்தில் செக்ஸ்(தமிழ்ல என்ன?) பாடமும், இந்த அளவுக்கு மீடியா அசிங்கமும் கிடையாது. ஆதலால் அப்போது புதுமண தம்பதிகள் மணமுடிந்தவுடன் இப்ப ஹனிமூன் போவது போல தீர்த்த யாத்திரை என மகப்பேறு வேண்டிக் கோவில்கள் செல்வது வழக்கம். அவர்களுக்கு பல்வேறு கோணங்கள், உறவு முறைகளைப் போதிக்கும் வகையில் ஏற்ப்படுத்தப் பட்டது வசந்த மண்டபம். இதில் மன்மதன், ரதியின் சிலைகள் எல்லாத் தூண்களிலும், மண்டப மேற்க் கூரைகளிலும் வடிக்கப்பட்டு இருக்கும். தங்கமணியுடன் செல்லும் ரங்கமணிகள் இவற்றைக் காட்டி பாத்தியா இது அந்த காலத்தில் கூட சகஜம், இதில் தப்பில்லை என்று அவர்களின் கூச்சத்தை விலக்கலாம் அல்லது அறிவைக் கூட்டலாம். நான் ஒருமுறை திருப்பதி சென்று இருந்த போது இந்த வசந்த மண்டபத்தில் ஒரு தூணில் ஒரு செயல்முறை பார்த்தேன், மிகவும் வியந்தேன், அப்படி ஒரு முறை கற்பனை செய்துகூட பார்க்க முடியாது, நம்ம தங்கமணி கிட்ட சொன்னாலே உதை பின்னி எடுப்பாங்க.(எங்க இருக்குனு கேக்கறிங்களா, வசந்த மண்டபம் முடிந்து பிரம்ம மண்டபத்தில் நுழையும் போது இருக்கும் ஒரு தூணில் உள்ளது. நாம் கியுவில் செல்லும் வழியில் வரும். வசந்த மண்டபம் எது என்றால் நாம் பெருமாளை ஸேவித்துவிட்டு வெளியே வந்தால் கொஞ்சுண்டு லட்டும், புளியோதரை அல்லது பொங்கல் கொடுப்பாங்க இல்ல அதுதான். இந்த லட்டு வாங்க கியுவில் நிற்கும் போது அப்படியே திரும்பி மேற்கூரையில் பார்த்தால் அங்கு பல சிற்பங்கள் இருக்கும்.கொஞ்சம் அசிங்கமாக நினைக்காமல் கலைனுக்கத்துடன் பாருங்கள். அதுக்காக அந்த சிலைகளை உற்றுப் பார்த்து நிற்க வேண்டாம், பார்க்கின்றவர்கள் தவறாக எடுத்துக் கொள்வார்கள். இன்னமும் நம் சமுகம் பண்படவில்லை. சரி இதுபோதும் என்று பதிவர்கள் உதைப்பதற்குள் நிறுத்திவிடுகின்றேன்.

அடுத்து பிரம்ம மண்டபம் இது முக்கியமான இடம் இங்கு அமைதியும் ஒழுங்கும் கடைப் பிடிக்கவேண்டிய இடம். இந்த இடத்தில் நல்ல அதிர்வுகள் இருக்கும். இங்கும் கொஞ்ச நேரம் உக்காருவது நலம்.இந்த மண்டபத்தில் பிரம்ம ரிஸிகள், பிரம்மா, முனிவர்கள்,சித்தர்கள் மற்றும் பஞ்ச பூதங்களின் சிலைகள் செதுக்கப் பட்டு இருக்கும். இந்த மண்டபம் நம் அந்தர் ஆத்மாவை சரி செய்வது இங்கு அனையா விளக்கு, பாவை விளக்கு, பகவானின் பாதங்கள் செதுக்கப் பட்டிருக்கும். பல இடங்களில் பிரம்ம மண்டபத்தில் இருந்துதான் கருவறைக்குள் தரிசனம் செய்ய முடியும், சில இடங்களில் கருவறைக்கும் பிரம்ம மண்டபத்திற்கும் ஒரு இடைவெளி விட்டு அங்கும் நின்று ஸேவிக்க வசதி இருக்கும். இங்கு அமைதியாய் அமர்ந்து பகவானின் சுலேகங்களை சொல்லுதல் நலம். வாய் விட்டு செல்லுவதை விட ஆத்மார்த்தமாக மனதுக்குள் சொல்வது கோடி நன்மையளிக்கும். இந்த பிரம்ம மண்டபத்தில் தான் உற்ச்சவங்கள் நடக்கும். இனி நாம் கருவறைக்குள் நுழையும்முன் இங்கு நம் மனதை ஒருனிலைப் படுத்தி பகவானுடன் ஜக்கியமாக வேண்டும்.

ரொம்ப முக்கியமான இதயப் பகுதி கருவறை. எல்லாக் கருவறையும் முக்கோண பிரமீட் அமைப்புடனும் ரொம்ப சக்திவாய்ந்த மின் காந்த அதிர்வுகளுடன் இருக்கும். இங்கு நம் மனம் தியனிக்க, கண்கள் பகவானின் அழகைப் பருக மட்டும்தான் வேலை. அங்கு நாம் மற்றும் கடவுள் மட்டும் உள்ளதாக எண்ணவேண்டும். மிக அமைதியாக கடவுளை உற்றுப் பார்த்துப் பின் கண் மூடி அந்த பிம்பத்தை நம் மனதுள் வாங்கி நிலை நிறுத்திக் கொண்டால், நாம் அமெரிக்காவில் இருந்தும் திருப்பதியில்(எந்த உங்களின் ஆதர்சன தெய்வமும்) தரிசனம் செய்யமுடியும். நம் மனக்கண்ணில் அந்த உருவத்தைப் பதித்துக் கொண்டால் நாம் எப்ப வேண்டுமானலும் ரிவைண்ட் பண்ணி தரிசனம் செய்ய முடியும்.அதுக்கு நாம் முறையாக அமைதியாக தரிசனம் செய்து மனதில் வேறு சிந்தனை இல்லாமல் கடவுளைப் பார்த்து அவரின் திவ்ய செருபத்தை அனுபவித்து, நாம் ஒரு நிமிடம் அல்லது நம் கண்ணில் நீர் வரும் வரை உற்றுப் பார்த்து கண் வலிக்கும் போது கண்மூடி அந்த பிரதிபிம்பத்தை மனதில் கொண்டால் போதும், இப்ப கடவுள் நம்ம பாக்கொட்ல. எப்பவேனா கண்மூடி கூப்பிட வருவார். வந்து நாம் கேட்டதை செய்வார். இது சத்தியம் சத்தியம் சத்தியம். நான் ஏன் இப்படி கூறுகின்றேன் என்றால் இது என் அனுபவ உண்மை. இந்த மாதிரி கடவுளை மனதில் நிறுத்திவிட்டால் நாம் கோவிலுக்கு செல்ல வேண்டிய அவசியம் கூட இல்லை.அவன் நம் குருவாய்,நண்பனாய், காவலனாய்,கடவுளாய்,உற்றதுணையாய் நம்மிடம் இருப்பான். நம் துன்பமான சமயத்தில் மனம் உருகி உள்ளே இருக்கும் கடவுளிடம் அவரை நினைத்துச் பிரச்சனையை சொல்லுங்கள் அது தீரும்(இதுபோல பல சம்பவங்களை விரைவில் பதிவிடுகின்றேன்). இதில் முக்கியம் நீங்கள் ஒரு தெய்வத்தை(ஏக தெய்வம் ஸ்மரனம்) தேர்ந்து எடுத்து கண்ணன்,ராமன், பிள்ளையார், முருகர், சங்கிலி கருப்பன்,அய்யனார் அல்லது அய்யப்பன் யேசு, மேரிமாதா,துர்க்கா,அம்மன் யார் வேண்டுமானாலும், ஆனால் கோவிலும், உருவமும். இரண்டையும் வீட அயராத நம் நம்பிக்கைதான் ரொம்ப முக்கியம். நம்பிக்கையுடன் அவனிடம் நம்மை ஒப்புக்கொடுத்து, சரணாகதி அடைந்து என்ன நடந்தாலும் அவன் தான் அவன் விருப்பம் தான் என தெளிய வேண்டும். இந்த மாதிரி ஒரு தெளிந்த மனதுடன் கோவிலுக்கு சென்றால் மன அமைதியும் ஆத்ம திருப்தியும் கிட்டும். இதைப் படிக்கும் போது உங்கள் மனம் ஒரு நிலையில் இருந்தால் கண்டிப்பாக உங்களால் கடவுளை வசப்படுத்தி அவரை அடைய முடியும் என்று அர்த்தம். அர்த்தம் புரியாத அல்லது புரிந்த வெற்றுக் கூச்சலும் போலிப் பக்தி வெளிப்பாடுகளும் வேண்டாம், அவை நம்மை பரவசப் படுத்தும் அன்றி ஆத்ம திருப்திப் படுத்தாது.

இந்த முறையில் கடவுள் தரிசனம் முடித்து பின் அமைதியாக வெளிவந்து இயலாதவர்களுக்கு அன்னம் அல்லது பிச்சையிட்டு முழு நிறைவுடன் திருக்கோவில் பயணத்தை முடிப்போம். அடுத்த பதிவில் சிவன் கோவில் மற்றும் பெருமாள் கோவில் வணங்கும் முறைகளை குறிப்பிடுகின்றேன். நன்றி. ஸ்ரீராமஜெயம்.

9 comments:

 1. 50 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்!


  இனிமேலுவாது இந்த மாதிரி ஆதாரமில்லாத கட்டுகதைகளை விட்டு உருப்படியா எதாவது பதிவு போடுங்க!

  ReplyDelete
 2. ஆதரமில்லாத கட்டுரை என்று எப்படி தலைவா சொல்லுவீர்கள். நம்பிக்கைதான் இதுக்கு ஆதாரம்.

  ReplyDelete
 3. //நம்பிக்கைதான் இதுக்கு ஆதாரம். //

  அப்படியானால் லேபிளில் ”சுயசொறிதல்” என்று இருக்க வேண்டும்! இல்லையென்றால் பலர் குழம்ப கூடும் அல்லவா!

  ReplyDelete
 4. தலைப்பு வேறு லேபிள் வேறு!

  தலைப்பை நீங்கள் ”கடவுளுக்கே சொறிந்து விட்டவன்” என்று கூட வைத்து கொள்ளலாம்!

  ReplyDelete
 5. ஓ...நீங்க கடவுள் பக்தரா.அதான் என்னைத் திட்டிட்டு வந்திட்டீங்க.சரி.ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு கருத்து.எங்கு எதனால் அடி படுகிறோமோ அப்போதான் அதன் அருமையும் பெருமையும் வேண்டாம் தேவையில்லை இது பொய் இங்கு உண்மையில்லை என்கிற அவநம்பிக்கையும் வருகிறது.என்ன செய்ய காலம் காலமாக அடிபடுகிறோம்.அலைகிறோம்.ஏதாவது ஒரு தெய்வம் காணவில்லையே என்கிற ஒரு ஆதங்கமும் வேதனையும்தானே தவிர,கடவுள் என்கிற ஒருவர் தேவை என்பதை மனம் தேடுகிறது.இதில் பின்னூட்ட அடிமைத்தனம் எனக்கு எதுவுமில்லை எனக்கு.

  என்றாலும் உங்கள் வருகைக்கும் எனக்கு எதையோ உணர்த்தியமைக்கும் நன்றி.

  ReplyDelete
 6. உங்கள் 50 ஆவது பதிவுக்கு என் மனமார்ந்த வாழ்துகளும் பாராட்டுக்களும்.

  முன் பக்கத்திலுள்ள இரண்டு பதிவுகள் மட்டும் பார்த்தேன்.கவிதை - கதாலில் குழப்பம் இருந்தால் தொடர்ந்தும் எப்படி...?மற்றும் புளியம்பூத் தொக்கு எனக்கு என் அம்மமா வை ஞாபகப் படுத்தியது.அவ தன் சேலைத்தலைப்பில் புளியம்பூக் கொண்டு வந்து இதே தொக்கு செய்து தருவா.அது இப்போ 20 வருடத்திற்கு முன்.அவர் இப்போ எங்களிடை இல்லை.நன்றி உங்களுக்கு.

  இன்னும் நிறைய பிரயோசனமான பதிவுகள் இருக்கும் போல் உள்ளது இன்னும் வருவேன்.

  ReplyDelete
 7. நன்றி சுதாண்ணா... அப்டியே கோவிலை ஆற அமர ஒரு சுத்து சுத்தி வந்தா மாதிரி இருக்கு...

  உங்க ஐம்பதாவது பதிவுக்கு வாழ்த்துக்கள். இன்னும் எழுத்து தொடரட்டும்...

  ReplyDelete
 8. 50 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்!!.தரிசன முறையை விளக்கி சொல்லிருக்கிங்க.நன்றி!!

  ReplyDelete
 9. கருத்து இட்ட பதிவர்கள் அனைவருக்கும் நன்றி.

  ReplyDelete

என்னை வளர்க்க, கருத்துரையிடுக...

பதிவைப் படித்து கருத்து போடலைனா
உங்க கனவுல பூதம் வரும்,,, ஆமா சொல்லிட்டேன்.