Wednesday, March 24, 2010

இராமன் எத்தனை இராமனடி













இது ஆன்மீகப் பதிவு மாதிரி இருந்தாலும் மொக்கைதாங்க. அதுனால எல்லாரும் படிக்கலாங்க.(கடவுளைப் பிடிக்காதவர்கள் நேரா ரெண்டாவது பத்திக்கு ஜீட் விடுங்க) எங்கள் ஊர் தாராபுரத்தில் ஸ்ரீகாடு ஹனுமந்தராய சுவாமி கோவில் உள்ளது. சிறு வயதில் இருந்து நான் இந்தக் கோவிலுக்குப் போவது வழக்கம். எட்டாங்கிளாஸில் இருந்து கல்லூரி முடியும் வரை, அதன் பின்னரும் நான் இந்தக் கோவிலுக்கு விடாது தினமும் போவது வழக்கம். இந்தக் கோவில் குறித்து நான் என் முதல் பதிவில்(தப்புத் தப்பான ஸ்பெல்லிங்கில்) இட்டுள்ளேன். இந்தக் கோவிலில் இருக்கும் ஆஞ்சினேயர் ஏறக்குறைய நம்ம பிரண்டு மாதிரி. நான் இப்படிச் சொல்கின்றேனே என்று சாதராணமாக நினைத்து விடாதீர்கள். மிகவும் சக்தி வாய்ந்தவர், வரப் பிரசாதி. இவரை வணங்குவர்களுக்கு நல்லது நடக்கும் என்பது நிச்சயம். நான் மிக நீண்ட நாட்களாய்ப் போனதால் ஒரு இனம் புரியாத அன்னியோன்யம் ஆகிவிட்டது. கடவுள் என்னும் நிலையை வீட அருகில் இருக்கும் உணர்வுதான் ஏற்படுகின்றது. இவருடன் சைட் அடிக்க ஒப்பந்தம் எல்லாம் போட்டுள்ளேன். இந்தக் கோவிலில் இருக்கும் இராமரை நான் அப்பா என்றும், சீதாவை சீதம்மா என்றும் அழைத்து வணங்குவது வழக்கம். இவர்கள் எந்த நேரத்திலும் காத்து, என்னை வழி நடத்துவதாக ஒரு நம்பிக்கை. அந்த நம்பிக்கையில் தான் என் வாழ்க்கை ஓடிக் கொண்டு இருக்கின்றது. நம்பிக்கைதானே வாழ்க்கை. அது முட்டாள்தனம் என்றாலும் மூட நம்பிக்கை என்றாலும், நாம் இறைவனிடம் வைக்கும் நம்பிக்கைதான் வாழ்க்கை. சரியிங்களா நான் சொல்றது?. சரி நான் இப்பக் கோவிலைப் பத்தியும், கடவுளைப் பத்தியும் சொன்னது ஒரு முன்னூரைதாங்க. ஏன்னா அதுதான் இந்த பதிவின் அடிப்படை. பதிவுக்குப் போகலாம்மா?

நான் எனது கல்லூரிக் காலங்களை முடித்து விட்டு, ரிசல்ட்டு வந்தது ஆகஸ்ட் எட்டாம் தேதியன்று. ஆகஸ்ட் 23,1990. என் பிறந்த நாளின் போது, நம்ம தமிழ் சினிமாவில் காட்டுற, ஹீரோ கணக்கா, சாதிப்பதுக்காக ஒரு ரெக்ஸின் பேக்கைத் தூக்கிக் கொண்டு, சென்னைக்குப் புறப்பட்டேன். நல்லவேளையாக சென்னை என்னப் போடா வெண்ணெய் என்று சொல்லவில்லை. நான் ஊருக்கு வந்த என் இரண்டாவது அண்ணாவுடன்(இராமானுஜம்), அப்பா,அம்மா சகிதம் கல்பாக்கம் வந்து அடைந்தேன். கிராமமும் இல்லாமல் நகரமும் இல்லாமல் சிறிய நகராட்சியாக இருந்த ஊரில், இருந்து வந்த நான், மத்திய அரசால் நிர்வகிக்கும் சகல வசதிகளுடன் இருந்த அனுமின் நகரியத்தில் ஈர்க்கப் பட்டேன். கடலும்,பீச்சும் என் நண்பர்களிடம் இருந்து பிரிந்த பிரிவைப் போக்கியது. நான் அப்பா,அம்மா செல்லம், அவர்களுடன் வந்து இருந்ததால் எனக்கு அவ்ளவாக ஹேம் சிக் தெரியவில்லை. நான் ஜாலியாக கல்பாக்கத்தைச் சுற்றுவது,சாப்பிடுவது என்று இருந்தேன். (பின்ன எத்தனை வருட படிப்புக்குப் பின்னர் கிடைத்த ஓய்வு அல்லவா?.) இப்படிப் போகும் போது ஒரு நாள் என் அண்ணா என்னைத் திட்டிவிட்டார். நானும் இரண்டு மாதமாகப் பார்க்கின்றேன். என்ன நீ பாட்டுக்கு இருக்கின்றாய், ஒரு பொறுப்பு கிடையாதா? மேற்க் கொண்டு என்ன செய்யப் போகின்றாய். படிக்க வேண்டும்,வேலைக்குச் சேரவேண்டும் என்ற ஆர்வம் கிடையாதா?, தினமும் செய்தித்தாள் பார்த்து, வேலைக்கு அப்பளை பண்ண வேண்டும் என்று ஒரு பாட்டுப் பாடி விட்டார். இவர் சொன்னது அனைத்தும் வாஸ்த்தவம். அனால் சொல்லும் போது தண்டச் சோறு என்று ஒரு வார்த்தை விட்டு விட்டார். முதல் அண்ணா படிக்கவில்லை என்றார் அடிப்பார்,ஆனால் கடினமான வார்த்தைகளைப் பேசமாட்டார். ஆனால் இவர் மிகவும் மென்மையானவர், அடிப்பது,திட்டுவது போன்றவற்றைச் செய்ய மாட்டார். ஆனால் ஒரு வார்த்தை சொன்னாலும் சுருக்கு என்று தைக்கும் விதமாக செல்வார்.இவரிடம் நான் திட்டு வாங்குவது இதுதான் முதல் தடவை. (அப்புறம் பழகிப் போய்விட்டது). இவர் சொல்லி விட்டு வேலைக்குப் போய் விட்டார். நான் உம் என்று மூஞ்சியத் தூக்கி வைத்துக் கொண்டு இருந்தேன். எங்க அம்மா புரிந்து கொண்டு என்னைச் சமாதானப் படுத்தினார். இருந்தாலும் மன வருத்தத்துடன் நான் மாலை கடற்கரைக்குச் சென்று தனிமையில் அமர்ந்து கொண்டேன்.

அப்போது இந்த இராமரையும், அனுமாரையும் நினைத்து,வருந்தி, என்ன இப்படி மாட்டிவிட்டு விட்டாய். ஒழுங்கா எனக்கு ஒரு வேலை வேண்டும். உடனடியாக ஒரு வேலை கொடுங்கள் இல்லை என்றால் ஊருக்கு வந்து 1008 சுத்து சுத்தி உங்களுக்கு தலை சுற்ற வைத்து விடுவேன் என்று மனமுருகி மனதார வேண்டிக்(மிரட்டிக்) கொண்டேன். மாலை 6.30க்குச் சென்ற நான், இரவு எட்டு மணி வரை இப்படி பல சிந்தனையில் ஆழ்ந்து இருந்தேன். பின்னர் வீடு வந்து விட்டேன். இரவு எட்டரை மணியளவில் என் அண்ணாவின் நெருங்கிய நண்பர்,கோதண்ட இராமன் என்பவர் வந்தார். அவர் ஒரு மார்க்கெட்டிங் வேலை இருக்கின்றது போகின்றாயா என்றார். எங்க இராமு அண்ணா,மார்க்கெட்டிங் வேலை என்றால் அலைச்சல் இருக்கும், மேற்க்கொண்டு படிக்க முடியாது. பின்னும் நான் கிராமப் புறத்தில் இருந்து வருவதால் கம்யூனிக்கேசன் இருக்காது என்றார். ஆனால் எந்த வேலை கிடைத்தாலும் பரவாயில்லை என்ற மன நிலையில் இருந்த நான், அது பரவாயில்லை, நான் போகின்றேன்,படிக்கவும் செய்வேன் என்றேன்(பின்ன நமக்கு ரோசம் ஜாஸ்த்தியில்லை).எங்க அண்ணாவும் உனக்கு மார்க்கெட்டிங் வேலை கிடைக்காது, ஆனால் இண்டர்வியூ ஒரு நல்ல அனுபவமாக இருக்கும், போய் வா என்றார்.


உடனே கோதண்ட இராமன் அண்ணா, என்னை வெங்கட இராமன் என்பவரிடம் அழைத்துப் போனார். அவர் சென்னையில் அவருக்குத் தெரிந்த நிறுவனத்தில் சீனியர் மார்க்கெட்டிங் மேலாளராக பணி புரியும் கல்யாண இராமன் என்பவரிடம் தொலைபேசியில் பேசினார். கல்யாண இராமன் என்னை மறு நாளே இண்டர்வியூக்கு வரச் சொன்னார். இரவேடு இரவாக நான் என் பேண்ட், சர்ட் ரெடி பண்ணி, என் அண்ணாவின் சூவை மாட்டிக் கொண்டு. அந்த நிறுவனத்துக்குச் சென்றேன். அங்கு கல்யாண இராமன் என்னை வரவேற்று, ஸ்ரீராம் என்பவரிடம் அனுப்பி வைத்தார். அவர் முதல் இண்டர்வியூ செய்துப் பின்னர் நிறுவனத்தின் ஜென்ரல் மேனேஜர் பி.கே. நஞ்சப்பா என்பவரிடம் அனுப்பி வைத்தார். அவர் என் கொடுமையான ஆங்கிலமும், புவர் கம்யூனிக்கேசன் அபிலிட்டியும் பார்த்து யோசித்தாலும், நீ ரொம்ப நல்ல பையன். உன்னைப் போன்றேர்( குட் யங் சாப்ஸ்) எங்கள் நிறுவனத்திற்குத் தேவை. நீ தினமும் ஹிண்டு, இண்டியன் எக்பிரஸ் பேப்பர்களைப் படி. நல்ல முன்னேற்றம் வரும் என்று கூறியவர். அனால் சேல்ஸுக்கு நல்ல எபிலிட்டி வேணும்,புது கஸ்டமர்களிடம் உரையாடும் போது மிகவும் சிரமப் படுவாய், ஆதலால் நான் உன்னை சேல்ஸ் அண்டு சர்வீஸ் டிபார்ட்மெண்டில் போடுகின்றேன். சர்வீஸ் என்றால் ஏற்கனவே உள்ள கஸ்டமர்களிடம் ஆர்டர் எடுப்பதுதான்,அதில் அவ்வளவு சிரமம் இருக்காது. ஆர்டர் எடுத்து பேமேண்ட் பாலோ செய்தால் போதும். மெக்கானிக்குகள் சர்வீஸ் செய்வார்கள். கொஞ்ச காலம் அதில் பணிபுரிந்து பழகிக் கொண்டுப், பின்னர் சேல்ஸுக்கு வந்து விடு என்றார். நான் சரி என்று சொல்ல, எதுக்கும் நீ, உன் வீடு மற்றும் உன்னை சிபாரிசு செய்தவர்களிடம் கலந்தாலேசித்து, வந்து ஜாயின் செய் என்றார்.



















(ஒரு கையத் தூக்கிக் கொண்டு அடிக்க வர்ற மாதிரி இருக்காரு பாருங்க, இன்னேரு கை அபய ஹஸ்தம். அதான் மாலையைப் போட்டு மூடி வைத்து விட்டார்கள்,
கீழே தக்குனுண்டா இருக்கறவங்கதான் இராம்,சீதா மற்றும் அனுமான். இந்தக் கோவிலில் இளைய பொருமாளுக்கு நோ எண்டரி. )


நானும் வீட்டுக்கு வந்து அனைவரிடமும் வந்து என் சம்மதத்தைத் தெரிவித்து விட்டு, அக்டோபர் 19,1990 அன்று முதன் முதலாய் வேலையில் இணைந்தேன். இப்படியாக நான் இராமரை வேலைக்காக வேண்ட, கோதண்ட இராமன்,வெங்கட இராமன்,கல்யாண இராமன்.இராமு அண்ணா, ஸ்ரீராம் ஆகிய அத்தனை இராமர்கள் மூலமாக நான் என் முதல் வேலையில் இணைந்தேன். எங்க நான் மறுபடியும் ஊருக்குத் திரும்பி வந்து கழுத்தறுப்பனோ என்ற பயத்தில் எத்தனை இராமன் இருக்காங்களே அத்தனை இராமர்களையும் விட்டு ஹெல்ப் பண்ணி எனக்கு ஒரு வேலை வாங்கிக் கொடுத்து அவரு எங்கிட்ட இருந்து எஸ் ஆகிட்டாரு.(தலைப்பு வந்துருச்சுங்களா). நானும் கையில பை,கழுத்துல டை, வாயில பொய் என்று என் முதல் வேலை ஆரம்பித்தது. கழுத்தில் நாய்ச்சுருக்கு என்னும் டையைக் கட்டிக் கொண்டு ஆரம்பித்த வேலை. முதலில் அண்ணா நகர், கீழ்பாக்கம்,அம்பத்தூர்,ஆவடி என்று போய்ப் பின்னர், பாரிஸ்,மவுண்ட் ரோடு,தீநகர்,சைதை,தேனாம் பேட்டை என்று மாறியது. மூன்று வருட அனுபவத்தில் நான் மொத்த சென்னையும்,புற நகர் பகுதிகளையும் சுற்றி விட்டேன். 1991 வருட மிகச் சிறந்த சேல்ஸ் அண்டு சர்வீஸ் ரெப் ஆக தேர்ந்து எடுக்கப் பட்டேன். 1993 ல் நான் இந்த நிறுவனத்தில் இருந்து விலகி கூட்டுறவு சங்கத்தின் செயலராக இணைந்தேன். பின்னர் அதையும் விட்டு விட்டு மறுபடியும் மார்க்கெட்டிங் வந்து தமிழகம் மற்றும் தென்னிந்தியாவின் முக்கிய பகுதிகள் அனைத்தும் சுத்தினேன். இதுதாங்க நான் முதன் முதலில் வேலைக்குப் போன வரலாறு.

டிஸ்கி : இதை நான் ஏன் இன்று பதிவாகப் போட்டேன் என்றால் இன்று தலைவருக்குப் பிறந்த நாள். ஸ்ரீராம நவமி. காலையில் பூ, பழம் எல்லாம் வைத்து பூஜை போட்டேன். மாலையில் வடபத்ர காளியம்மன் கோவிலில் இருக்கும் ஸ்ரீராமரை தரிசிக்க வேண்டும். அது ஏன் வடபத்திர காளியம்மன் கோவில் என்றால் அங்கதான் நிறைய பிரசாதம் தருவார்கள். இதுவே எங்கள் வீடு என்றால் இன்று. பூஜை அமர்க்களமாக இருக்கும். நீர்மோர்,பானகம், கோசுமறி,வடை,களத்தம் பருப்பு கண்ணமது(பாசிப்பருப்பு பாயசம்), வாழைக்காய்ப் பொறியல்,பருப்பு தாளித்தது,தயிர்ப்பச்சடி என வயிறுப் புடைக்க தின்று விட்டு, அலுவலகத்திற்க்குப் போய்த் தூங்கலாம்.

ஹேப்பி பர்த் டே டூ இராமா.

( எச்சரிக்கை. இது இத்துடன் முடியாது. இதன் தொடர்ச்சி வெள்ளிக் கிழமையன்று, நானும் ஹீரோதான் என்னும் பதிவில் வரும்,இது ஒரு மரண மொக்கை. படிக்கத் தவறாதீர்)

நன்றி.

18 comments:

  1. நீர்மோர்,பானகம், கோசுமறி,வடை,களத்தம் பருப்பு கண்ணமது(பாசிப்பருப்பு பாயசம்), வாழைக்காய்ப் பொறியல்,பருப்பு தாளித்தது,தயிர்ப்பச்சடி என வயிறுப் புடைக்க தின்று விட்டு, அலுவலகத்திற்க்குப் போய்த் தூங்கலாம்.


    ........ha,ha,ha,ha...... அண்ணாச்சிக்குள் தூங்கி கொண்டிருந்த மொக்கை மிருகத்தை, யாரோ தட்டி எழுப்பி விட்டு விட்டார்கள்.

    ReplyDelete
  2. //(பின்ன நமக்கு ரோசம் ஜாஸ்த்தியில்லை).//

    உங்க கதைய படிக்க படிக்க எனக்கு கண்ணு கலக்கிருச்சு , இந்த ஒரே ஒரு வாகியதுக்காக நீங்க என்னா கஷ்ட பட்டு இருக்கீங்க.வேலைகெல்லாம் போய் சே...................

    ReplyDelete
  3. தாங்கள் முதன்முதலில் வேலைக்குப் போன வரலாறு......

    நல்லாருக்கு....

    நட்புடன்...
    காஞ்சி முரளி..........

    ReplyDelete
  4. சுதாகர் சார் ஒரு சந்தேகம்., ... இந்த அளவு பக்தி உள்ள ஆள் எப்படி ஒரு நாத்திகர் அளவுக்கு கடவுள் ஆராய்ச்சி எழுத முடியும். ஒரு நம்பிக்கையில இருப்பவர் அந்த நம்பிக்கையையே சந்தேகப்படுவது மாதிரி எனக்கு சற்று முரணாகவே தோன்றுகிறது. நேரம் இருந்தால் பதில் சொல்லலாம்

    ReplyDelete
  5. உங்கள் ஆராய்ச்சியை நான் குறை சொல்லவில்லை!! கவனிக்கவும்.,.முரண்பாடு மட்டுமே( பயத்தினால் மனிதன் உண்டாக்கினான் என்றால் இப்போதுதான் பயம் இல்லையே. முன்னர் மின்சாரம் இல்லை பயம் , இப்போதுதான் 1000 வாட்ஸ் பல்ப் வஎதுவிட்டதே!!))

    ReplyDelete
  6. அட ராமா, சரியாப் போச்சு போங்க! :P:P:P அது சரி, அம்பத்தூர் வந்திருக்கீங்க, எங்க வீட்டுக்கு ஏன் வரலை?? நறநறநறநறநறநற

    ReplyDelete
  7. பதிவு நன்று
    கொடுத்து வச்ச ஆள் சார் நீங்க ...
    ரொம்ப ஈசியாக முதல் வேலை கிடைத்து விட்டது....

    எனக்கெல்லாம் முதல் வேலை கிடைப்பதற்குள் எவ்வளவு அவமானங்கள் ,,கண்ணீர்கள் ???

    ReplyDelete
  8. //எங்கள் ஊர் தாராபுரத்தில்//

    சேலத்திற்கு அருகில் உள்ள தாராபுரமா ?

    ReplyDelete
  9. இன்னும் தொடருமா...வெள்ளிக்கிழமையன்று நான் காணாமல் போக போகிறேன்...
    //நீர்மோர்,பானகம், கோசுமறி,வடை,களத்தம் பருப்பு கண்ணமது(பாசிப்பருப்பு பாயசம்), வாழைக்காய்ப் பொறியல்,பருப்பு தாளித்தது,தயிர்ப்பச்சடி
    // ம்ம்ம் ஒரே ஏக்கமா இருக்கு...கொடுத்து வச்ச மனுஷர் நீங்க...

    ReplyDelete
  10. தாராபுரம் அஞ்சனேயரைப் பற்றிப் படித்தபோது ப்ரவசமடைந்தேன் என் குழந்தைகைகள் கோவையில் படித்தபோது ஆஞ்சனேயரை வணங்கவே நான் தாராபுரம் சென்று இருக்கேன் அங்கே ஒரு பெருமாள்கோயும் விஷேஷம் ..பாண்டவர்கள் அஞ்ஞாதவாசம் புரிந்த இடம் விராடபுரி அதுவே மருவி தாராபுரம் அகிவிட்டது ..நன்றி சுதாகர்
    ஜெய் பஜ்ரங் பலி கீ

    ReplyDelete
  11. பித்தனின் வாக்கு said ,
    //ஆகஸ்ட் 23,1990. என் பிறந்த நாளின் போது,//

    23 / 08 / 1990 அன்னைக்கு தான் பொறந்திங்களா? வயசு 20 தான் ஆகுதா?

    மூஞ்ச பார்த்தா கொஞ்சம் முத்துன மூஞ்சி மாதிரி தெரியுது!

    பொய் சொல்லாதிங்க, உண்மைய சொல்லுங்க , நாங்க வெளிய சொல்ல மாட்டோம்.

    ReplyDelete
  12. பித்தனின் வாக்கு said ,
    //இப்படியாக நான் இராமரை வேலைக்காக வேண்ட, கோதண்ட இராமன்,வெங்கட இராமன்,கல்யாண இராமன்.இராமு அண்ணா, ஸ்ரீராம் ஆகிய அத்தனை இராமர்கள் மூலமாக//

    உங்களுக்காக இராமர் மீண்டும் தச அவதாரம் எடுத்திருக்கின்றார்.

    //வாயில பொய் என்று என் முதல் வேலை ஆரம்பித்தது//

    இன்று வரை பொய் தொடர்கின்றது.

    மொக்கை சுமாராகத்தான் இருக்கு. பரவாயில்லை அட்ஜஸ்ட் பண்ணிக்கிறோம். அடுத்து இதை விட பெரிய மொக்கையா போடுங்க

    ReplyDelete
  13. //நானும் ஹீரோதான் என்னும் பதிவில் வரும்,இது ஒரு மரண மொக்கை. படிக்கத் தவறாதீர்///
    கண்டிப்பா தவற மாட்டோம்..

    ReplyDelete
  14. அப்போ இது தொடரும் வாழ்க்கை வரலாறா?

    ReplyDelete
  15. நன்றி சித்ரா,
    நன்றி மங்குனி அமைச்சரே, நான் சொன்னது எந்த வேலையா இருந்தாலும் பரவாயில்லை என்று.
    நன்றி சைவ கொத்து புரோட்டா,
    நன்றி காஞ்சி முரளி,
    நன்றி ஜெய்லானி,உங்கள் கேள்விகளுக்கு தொடரின் இறுதியில் பதில் அளிக்கின்றேன்.
    நன்றி கீதா சாம்பசிவம் அம்மா,
    நன்றி யூர்கன், சேலம் பழனி வழியில் உள்ள தாராபுரம்தான்.
    நன்றி மேனகாசத்தியா,
    நன்றி தேன்மயில், நீங்கள் ஆஞ்சினேயரைத் தரிசித்தமைக்கு மிக்க நன்றி.அந்தப் பெருமாள் கோவில் விராட,வீரராகவ உத்திரப் பெருமாள் கோவில்.
    நன்றி புண்ணாக்கு மூட்டை, நான் பிறந்த நாளின் போது என்றுதான் சொல்லியிருக்கின்றேன், பிறந்த போது என்று சொல்லவில்லை. அன்று 22 வது பிறந்த நாள். போதுங்களா. மார்க்கெட்டிங்னாலே பொய்தான.
    நன்றி நாடோடி,
    நன்றி ஸ்ரீராம், அவ்வளவு சீக்கிரமா தப்பிக்க விட்டு விடுவமா?

    பின்னூட்டமும் ஓட்டும் இட்ட அனைவருக்கும் எனது நன்றிகள்.

    ReplyDelete
  16. நல்ல அனுபவப் பகிர்தல். :-)

    ReplyDelete

என்னை வளர்க்க, கருத்துரையிடுக...

பதிவைப் படித்து கருத்து போடலைனா
உங்க கனவுல பூதம் வரும்,,, ஆமா சொல்லிட்டேன்.