Wednesday, March 10, 2010

ஸ்ரீலஸ்ரீ. தொப்பையானந்தாவின் " டவுசர் பாக்கெட்டைத் திற, சில்லறை வரட்டும்"


கடந்த ஒருவாரமா நித்தியானந்தா சீசன், இப்பத்தான் கொஞ்சம் ஓய்ந்துள்ளது. எல்லாரும் கும்மி எடுத்துட்டாங்க. நானும் நித்தி பதிவு போடுல்லைன்னா யாரும் நம்மளைப் பதிவர்ன்னு ஒத்துக்க மாட்டாங்க. நானும் என் பதிவில் இப்ப நித்தியானந்தான்னு சொல்லிட்டதால, ஒத்துக்கங்கப்பா நானும் பதிவர்தான், பதிவர்தான். என்ன ஒன்னு கொஞ்சம் தப்புத் தப்பா எழுதுற, தப்பான பதிவர். பெரிய மனசு பண்ணி, மன்னிச்சு விட்டுருங்க. என் ஆன்மீகத் தோடல்கள் தொடர்பாக, நான் புரவிபாளையம் கோடி சுவாமிகள்(104 வயது), வேதாத்திரி மகரிஷி, விறிசி சுவாமிகள், ஸ்ரீரங்க இராமானுஜ ஜீயர்(வானமாமலை),புவனேஸ்வரி சுவாமிகள்,எங்க வீட்டுக்கு வந்து வழக்கமா யாசகம் வாங்கும் ஒரு நொண்டிச்சாமியார், தெருவில் பார்த்த பிச்சைச் சாமியார்கள் போன்ற சில சுவாமியார்களைச் சந்தித்து ஆசி வாங்கியுள்ளேன். இரமணர் மகரிஷி, சேலம் கந்தாசிரமம்,சேஸாத்திரி ஸ்வாமிகள் ஆசிரமம்,சத்குரு ஜக்கி வாசுதேவ்,பாம்பாட்டி சித்தர், பன்றிமலை பாம்பன் சுவாமி போன்றேரின் ஆசிரமங்களுக்குச் சென்று உள்ளேன்.திருவண்ணாமலை,சபரி மலை,திருமூர்த்தி மலை,பழனி மலை,மருத மலை, பர்வதராஜ மலை, செஞ்ச்சேரி மலை,கொல்லிமலை,தீர்த்தா மலை,கல்வராயன் மலை போன்ற மலை எல்லாம் போயிருக்கேன். சரி இதை விடுங்க பதிவுக்கு வருவேம். இந்த பிரேமானந்தா, குஜேயேந்திரர், நித்தியானந்தா போன்றேர் எல்லாம் என்னை மாதிரியே சாமியார்கள் என்பதால் நான் அவர்களை சந்திக்க வில்லை. நான் அவர்களை விமர்சனமும் பண்ண முடியாது. ஏன்னா நான் முதலில் யோக்கியன் கிடையாது. என் முதுகின் அழுக்கையும்,அரிப்பையும் நான் சொறிந்து கொள்ள முடியாத போது, எப்படி அடுத்தவர் முதுகை சொறிவது என்ற எண்ணம்தான். ஆதலால் இந்தப் பதிவில் நான் இவர்களைப் பத்தி எழுதவர வில்லை. (சரி, சரி, பில்டப்பு போதும், மேட்டருக்கு வாடா மாப்பு)

நம்ம கவிதாயினி ஹேமு, வேற நம்மளைப் பித்தானந்தா ஸ்வாமிகள்ன்னு சொல்லிட்டாங்க. நானும் "ஹை இது கூட நல்லாயிருக்கேன்னு", அந்தப் பெயரை வைச்சு ஊரை ஏமாத்தலாம்ன்னு இருந்தேன். இந்த ஞானப்பித்தன் என்னடான்னா, ஊடால புகுந்து இந்தப் பெயருக்கு நான் காப்பி ரைட்ஸ், டீ ரைட்ஸ் எல்லாம் வாங்கிருக்கேன்னு, அமெரிக்காகாரன் மாதிரி கலாட்டா பண்ண ஆரம்பிச்சுட்டார். சரி நம்ம ஸ்ரீலஸ்ரீ.பித்தலாட்டானந்தான்னு பெயரு வைக்காலாமுன்னு யோசிச்சா, இந்த அப்பாவிப் பெண்ணுக சுசி,திவ்யாஹரி,சித்ரா,ஜலில்லா எல்லாம் நீங்க ரொம்ப நல்லவருன்னு சொல்லி இந்தப் பெயரை ஒத்துக்க மாட்டாங்க. என்னடா பண்றதுன்னு யோசிச்சப்பத்தான் நம்ம மூத்த பதிவர்,பதிவுல பிதாமகன்(ர்), பதிவுத்தாயின் தவப்புதல்வர், ஆயிரம் பதிவுகள் கண்ட அபூர்வ சிகாமணி, காலத்தில் களம் கண்ட வீரர், திரு. கோவி அண்ணா,அவர்கள் எனக்குத் தெப்பையானந்தான்னு(ஜோதிகா ஞாபகத்தில்) என்று நாமகரணம் சூட்டினார். ஆகா இதுகூட நல்லாயிருக்குன்னு சொல்லி, யாரும் தரல்லைன்னாலும், நமக்கு நாமே(நாமமே)என்ற கழகத் திட்டத்தின் படி, ஸ்ரீலஸ்ரீன்னு கூடச் சேர்த்துக்கிட்டேன். (என்ன பண்ண?, பில்டப்பு போட்டாத்தான் மதிப்பாங்க, நம்ம ஊரு ஞான சூனியங்கள்). ஆக இதுதாங்க ஸ்ரீலஸ்ரீ.தொப்பையானந்தாவின் வாழ்க்கை வரலாறு,பூகோளம் எல்லாம்.

அடுத்த கட்டமா நாலு மஞ்ச மாக்கானுகளை சிஷ்யனுகளா புடிக்கேனும்.அதுக்கு ஒரு செட்டப் பண்ணலாம்ன்னு தலையில் ஒரு சுருள் முடி டோப்பா செட் பண்ணிட்டு, பீச்சாங்கையில கையில் கமண்டலமும், சோத்தாங்கையில் கவட்டையை முட்டுக் கொடுத்து, கை விரல்ல மாலையுமா, நெத்தியில பட்டையும்,கழுத்துல கொட்டையுமா போட்டு உக்காந்தாச்சு. இந்தப் பக்கம், பங்களாதேஷ் பிகரும், அந்தப் பக்கம் இரஷ்யா பிகரையும் உக்கார வைச்சு, கிஞ்சிதா மாதிரி பணிவிடை செய்ய வைச்சாச்சு.

(இந்தா பாரு மங்குனி, நீயும் நம்ம பட்டாபட்டி மாதிரி அவங்க எல்லாம் எதுக்குன்னு சந்தேகம் எல்லாம் கேக்கக்கூடாது.அதுக்கு ரெண்டு காரணம். )
ஒன்னு, பக்கத்துல பொண்ணுக இருந்தால்தான் சாமியாருன்னு மதிக்கிறாங்க, நம்ம மக்கள்.
இரண்டாவது காரணம், இந்த இரண்டு நாட்டு அழகான பெண்களையும், தொப்பையானந்தாவிற்க்கு மிகவும் (ஜொள்ளு விடப்) பிடிக்கும்.

இப்படி நான் டவுசர் பாக்கெட்டைத் திறந்து வச்சுக் கல்லா கட்டலாம்ன்னு பார்த்தா ஒரு பையனையும் காணேம். அப்பத்தான் நம்ம அப்பாவி முருகு மாதிரி வில்லங்கமா ஒரு அளு வந்தாரு. அவரு கூட நடந்த கருத்துக் களஞ்சியம்தாங்க இந்தப் பதிவுங்க.

ஸ்ரீலஸ்ரீ.தொப்பையானந்தா : ஸ்டெபியாக நம, சாமந்தா பாக்ஸாய நம, ஜெனிபர் லோபஸாய நம,மடோன்னாயா நம (நம்ம ஆளுக ரொம்ப விவரமானவங்க,உள்ளூர் ஆளுக பேரு வைச்சுத் தமிழ்ல மந்திரம் சொன்னாக் கண்டு புச்சுருவானுங்க,சில்லறை தேறாது.).

சிஷ்யன் : சுவாமி நமஸ்காரம், எனக்கு ஒரு சந்தேகம்,

தொ.ஆனந்தா: சொல் மகனே, அதை தீர்க்கத்தானே நான் இருக்கேன்.

சிஷ்யன் : சுவாமி, நான் ஞானத்தை அடைவது எப்படி?

தொ. ஆனந்தா (ஆகா மாட்டினாண்டா, இதை வச்சுக் குழப்பிக் காசு பார்த்து விடவேண்டியதுதான் என்ற எண்ணத்தில்): மகனே, அது ஒன்றும் பெரிது அல்ல, அதற்கு முதலில் நீ சுத்தி செய்ய வேண்டும்.

சிஷ்யன் : எதற்கு சுவாமி? ஆணி அடிக்கவா இல்லை பிடுங்கவா?

தொ ஆனந்தா : (கடுப்ப்பாக) அடேய் மடையா, இது அந்த சுத்தி இல்லைடா , அகச்சுத்தி, உன் ஆன்மாவை சுத்தம் செய்ய வேண்டும்.

சிஷ்யன் : அது எப்படி சுவாமி,

தொ.ஆனந்தா : அப்படிக் கேள் மகனே, நீ முதலில் உன் சுவாசத்தைக் கட்டுப் படுத்த வேண்டும். அதுக்கு நீ முதலில் மூச்சை வலப்பக்க மூக்கில் இழுக்க வேண்டும்,இதுக்கு பேரு ரோசகம், பின்னர் இடப்பக்க மூக்கில் வெளிவிட வேண்டும், இதுக்கு பேரு அவரோசகம், இடையில் மூச்சை ஒரு சில நிமிடங்கள் தம் கட்ட வேண்டும். இதுக்கு பேரு கும்பகம்.

சிஷ்யன் : தம் கட்டுவது என்றால் நம்ம ஜலில்லாக்கா பிரியாணிக்குத் தம் கட்டுவார்களே அது மாதிரியா?

தொ.ஆனந்தா (செம கடுப்பில்): அடேய் நீ திங்கறதில்லேயே இரு. இது மூச்சினை இழுத்து தம் கட்டுவது.

சிஷ்யன் : சரி சாமி, அடியேனை மன்னித்து மேலே சொல்லுங்கள்.

தொ ஆனந்தா : இப்படி நீ தொடர்ந்து பல வருடங்கள் செய்தால்,உன் குண்டலினி சக்தி கிளர்ந்து, நீ ஞானத்தை அடைவாய்.

சிஷ்யன் (குழப்பத்துடன் ): சுவாமி குழப்பமாக இருக்கின்றது. ஒரு சின்ன சந்தேகத்திற்க்கு மட்டும் பதில் சொல்லுங்கள்.

தொ ஆனந்தா : (அப்பாடா ஒரு வழியா குழப்பிட்டேன், இனி காசு கறந்து விட வேண்டியதுதான்) சொல் அப்பனே, என்ன சந்தேகம்?

சிஷ்யன் :பக்கத்து வூட்டுல குடியிருக்கற சப்ப பிகர் ஞானத்தை அடைய இவ்வளவு கஷ்டப் பட வேண்டுமா?

தொ ஆனந்தா (டவுசர் டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ருனு கிழிய டர்ருன்னு ஆகிட்டார்): அடேய் நரனே உன்னை கும்மி அடிச்சு குலைவையில் போடும் முன்னர் ஓடிப் போயிடு, வர்றானுக பாரு,கபோதிப் பசங்க.

( பணிப் பொண்கள் இருவரும் கையக்,கால அமுக்கி, நெஞ்சு தடவி சாந்தப் படுத்துகின்றார்கள், கோபம் அடங்காதா தொப்பையானந்தா,கமண்டலத்தில் இருக்கும் சரக்கை அடித்து விட்டு)

தொ ஆனந்தா: சரி அடுத்த பார்ட்டியை வரச் சொல், அதுவாது தேறுதான்னு பார்ப்போம்.

சிஷ்யன் 2 : வணக்கம் சுவாமி,

தொ ஆனந்தா : மங்களம் உண்டாகட்டும், மகனே, மங்களம் உண்டாகட்டும்,

சிஷ்யன் 2 (அதிர்ச்சியாக) : சுவாமி, மங்களம் பக்கத்து வூட்டுக்காரி, என் பொண்ட்டாட்டி பேரு பங்கஜம்.

தொ ஆனந்தா (செமக் கடுப்பைப் பல்லைக் கடித்து அடக்கிக் கொண்டு) : இது மங்களகரமான மங்களம் உண்டாகட்டும்ன்னு என்று சொன்னேன். சரி விஷயத்தைச் சொல்.

சிஷ்யன் 2: சுவாமி, எனக்கு ரொம்ப நாளாக ஒரு சந்தேகம் சுவாமி,

தொ ஆனந்தா : சிஷ்யா, சந்தேகத்தை மனதில் அடக்கி வைத்தால் அது நம்மை எரித்து விடும், ஆதலால் கேளு மகனே கேளு, கேட்டுக்கிட்டே இரு.

சிஷ்யன் : சுவாமி, நான் சித்தியடைவது எப்போது?

தொ ஆனந்தா : (மிகக் கோபமாக கவுண்டமணி ஸ்டைலில்)அடேய் பண்டாரப் பரதேசி, எத்தனை பேரு இப்படி எரிச்சல் பண்ணக் கிளம்பி இருக்கிங்க. கொய்யால,
புண்ணாக்குத் தலையா! போடாப் போய், உங்கப்பன் கிட்ட கேளுடா, சித்திக்கு ஏற்பாடு பண்ணுவாரு. சித்தி வேணுமாம் சித்தி!!!, நான் என்ன இராதிகாவாடா சீரீயல் எல்லாம் எடுத்துக் கொடுக்கிறதுக்கு, வந்துட்டானுக பொடி டப்பாப் பசங்க.,

நான் ஒன்னும் சாமியாரும் இல்லை, ஒரு மண்ணும் இல்லை, இது எல்லாம் ஒரு பொழப்பாடான்னு சொல்லி டோப்பாவை எறிந்து விட்டு ஓடுகின்றார்.

பிகருங்க ரெண்டும் அவரைத் தடுத்து, சுவாமி எங்களின் கதி என்ன எனக் கேக்க.

கண்ணுகளா அப்பால தனியா வாங்க, கண்டுக்கிறேன். இப்ப ஆளை விடுங்கடின்னு எஸ்கேப்புபூஊஊஊ ஆகி ஓடுகின்றார் தவத்திரு. ஸ்ரீலஸ்ரீ.தொப்பையானந்தா.

டிஸ்கி : படத்துல தொப்பை நல்லாத் தெரியுதுங்களா? அதுதான் ரொம்ப முக்கியம், ஏன்னா அதை வைச்சுத்தான் இந்த பதிவே. இதுக்கே கோபப்படாதீங்க அடுத்து ஸ்ரீலஸ்ரீ.சொட்டையானந்தான்னு ஒரு பதிவு வரும்.நன்றி.

34 comments:

 1. அப்பு.. கூல் டவுன்... கூல் டவுன்..
  ரஞ்சியக்கா ஆட்டோல வந்திட்டு இருக்காங்களாம்..

  என்னமோ வீசிங்க் ப்ராப்ளத்துக்கு.. உங்ககிட்ட மருந்து இருக்கிறதா,
  மங்குனி போட்டுக்குடுத்துட்டான்..
  எதுக்கும் , ஜாக்கிரதையா இருந்துக்குங்க..
  ( மொக்க பதிவர்கள் நாங்க இருக்க, எங்க பட்டாபட்டிய உருவ வாரீகளா?..
  மங்குனி.. ஸ்டார்ட் மீசிக்...)

  ReplyDelete
 2. :)
  செமையாக இருக்கு !

  ReplyDelete
 3. //ஸ்ரீலஸ்ரீ.தொப்பையானந்தா : ஸ்டெபியாக நம, சாமந்தா பாக்ஸாய நம, ஜெனிபர் லோபஸாய நம,மடோன்னாயா நம //

  மந்திரமெல்லாம் வெளிநாட்டு மொழிகள்ல இருக்கு :)

  ReplyDelete
 4. ஸ்ரீலஸ்ரீ அண்ணாச்சி அவர்களே: தொப்பை ஆனந்தாவும் நீரே! சொட்டை ஆனந்தாவும் நீரே!
  எல்லா சாமியார்களும் போலி சாமியார் அல்ல, சாமியார்தம் நாமம் - ஆனந்தா என்று முடிந்தால் விலகு............!!! எப்பூடி!
  அடுத்து மாட்டுற சாமியாராவது வேற பேர்ல மாட்டுங்கப்பா .......

  கலக்கல் கும்மி பதிவு!

  ReplyDelete
 5. என்ன ஒரு கலக்கல் தொப்பயானந்தா வாழ்க!
  ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் பார்த்து இருங்கப்பு பாக்கெட்ட பத்திரப்படுத்துங்க...ஹா ஹ ஹா
  ஓட்டும் போட்டுட்டோம்

  ReplyDelete
 6. தொப்பையானந்தா சாமிகளே அதுக்குள்ள ஓடினா எப்படி, சில ஏக்கர்களை வளைக்க வேண்டாமோ,
  நல்ல கலாய்ப்பு :))

  ReplyDelete
 7. வர வர தொப்பையானந்தாவுக்கு (ரொம்ப எதத்தாளமா போச்சு)லொள்ள பாரு, இதுக்கு சரியான பதில் மங்குனி அமைச்சராலும் , ஜெய்லானியாலும் தான் கொடுக்க முடியும்..
  பார்த்து ரஞ்சி வந்ததும் வீசிங் பிராப்ளம்ன்னு வந்தா , தம் என்று என்னிடம் தம் போட அனுப்பிடாதீங்க‌

  ReplyDelete
 8. ஆஆஆஆஅ அமைச்சரே சீக்கிரம் வாரும் என்ன செய்கிறீர் அங்கு, இந்த தொப்பயானாந்தவ வந்து கவனியும்

  ReplyDelete
 9. ஆடியோ, வீடியோ ரைட்ஸ் எனக்கு வேணும் சொல்லிபுட்டேன்...

  ReplyDelete
 10. நம்ம ஆளுக பூராம் எங்கையா இருக்கீங்க... வேகமா வந்து இந்த சாமிக்கு நாம யாருன்னு காமிங்க...

  ReplyDelete
 11. ஹி ஹி ஹி , ஒன்னும் இல்ல நம்ம cable சங்கர் சார் ப்ளாக்-ல HOT SPOT -ல இருக்கிற அந்த பொண்ணோட பேசிக்கிட்டு ( நெஜம்மா பேசிக்கிட்டுதான் இருந்தேன் ) இருந்தேன் அதுதான் லேட். அட கொக்க மக்கா அதுக்குள்ளே ஒரு ஆனந்தா, டேய் பட்டா நக்கீரனுன்க்கு போனபோட்ரா , நம்ம ரோஷ்விக் கூட ஒரு கேமரா வச்சுருக்காராம் அதையும் பிக் அப் பண்ணின்க்க , அப்புறம் கேப்டன போடோ புடிசியே அந்த கேமராவையும் பிக் அப் பண்ணின்க்க. அதோட அந்த தொப்பையானந்தா சைடு - ல இருக்க அந்த ரெண்டு குட்டிகளையும் பிக் அப் பண்ணி நம்ம அந்தபுரதுக்கு அனுப்பிட்டு எல்லா கேமராவையும் எல்லா ஆங்கில்லையும் வச்சு அந்த தொப்பைய குளோஸ் அப்-ல படம்புடி . தக்காளி இனி எல்லார் வீட்லயும் இந்த போடோ தான் திருஷ்டிக்கு இருக்கணும்.

  ReplyDelete
 12. //படத்துல தொப்பை நல்லாத் தெரியுதுங்களா? அதுதான் ரொம்ப முக்கியம், ஏன்னா அதை வைச்சுத்தான் இந்த பதிவே. இதுக்கே கோபப்படாதீங்க அடுத்து ஸ்ரீலஸ்ரீ.சொட்டையானந்தான்னு ஒரு பதிவு வரும்.//

  நல்லா தெரியுதுங்க அண்ணா தொப்பையும்.. அடுத்த பதிவிற்கான சொட்டையும்.. ஹி.ஹி.ஹி..

  ReplyDelete
 13. ஹலோ..ஹலோ..தொப்பையானந்தா ஸ்வாமிகளே ஓடாதீர்..கதவைத் திறந்து வைங்க.. என் காமிராவை அனுப்பி வைக்கறேன்.

  ReplyDelete
 14. சார்... அவசர வேலையா வெளிய போயிட்டேன்..
  இந்த தொப்பைய குறைப்பதற்கு.. நல்ல வழியிருப்பதா,
  மங்குனி சொன்னாரு..

  நீங்க...2 லிட்டர் விளக்கெண்ணய , நல்லா சூடா காச்சி ,
  படக்கு படக்குனு , குடிச்சுட்டு , கதவை திறந்து வெச்சா...மங்குனிக்கு , 10 கிலோ குறையுமாம்..

  முடிஞ்சா.. மங்குனிய ...படக்கு படக்குனு , குடிக்க வெச்சு..
  நீங்க, பழைய அரவிந்தசாமி ஆகமுடியமானு பாருங்க...
  சொல்றதை சொல்லிட்டேன்.. அப்புறம் உங்க பாடு...

  ReplyDelete
 15. தொப்பையானந்தா சுவாமிகள் நிறைய ஆசிரமங்களுக்குப்போய் அனுபவம் போல் இருக்கு!இனி தொப்பையையும்,சொட்டயையும் பார்த்தால் பித்தலாட்டனந்தாதான் ஞாபகத்திற்கு வருவார்.(அண்ணே...2010 இல் செம‌ காமெடி பதிவு இதுதான் அவார்ட் கொடுத்துடலாம்)

  ReplyDelete
 16. தலைப்பே படா குஜாலா இருக்குதே!

  ReplyDelete
 17. //புவனேஸ்வரி சுவாமிகள்,//

  இவுங்க என்னை சீடனா சேர்த்துப்பாங்களா!?

  ReplyDelete
 18. //இந்தப் பக்கம், பங்களாதேஷ் பிகரும், அந்தப் பக்கம் இரஷ்யா பிகரையும் உக்கார வைச்சு, கிஞ்சிதா மாதிரி பணிவிடை செய்ய வைச்சாச்சு. //

  இந்த சீ.டீ எப்போ ரிலீஸ் ஆகும்!?

  ReplyDelete
 19. //பக்கத்து வூட்டுல குடியிருக்கற சப்ப பிகர் ஞானத்தை அடைய இவ்வளவு கஷ்டப் பட வேண்டுமா?//

  அதானே!
  அதுக்கு போய் இம்புட்டு பில்டப்பு!
  குச்சி மிட்டாயும், குருவி ரொட்டியும் வாங்கிட்டு போங்க சிஷ்யரே!

  ReplyDelete
 20. //படத்துல தொப்பை நல்லாத் தெரியுதுங்களா? //

  ஓ! இது தான் தொப்பையா!?
  நான் பானைன்னு நினைச்சேன்!

  ReplyDelete
 21. தொப்பை இல்லாதவரை சிஷ்யனா எடுத்துக்கமாட்டீங்கன்னு ஒரு பறவை வந்து சொல்லிட்டுப் போகுதே!!!!!!

  தொப்பை வளர!!!!!!!!!!!

  ReplyDelete
 22. சாமிக்கு நல்ல எதிர் காலம் இருக்கு

  ReplyDelete
 23. கி கி கி ;-) கலக்கல்.

  ReplyDelete
 24. அண்ணே கேமிரா ஜாக்கிரதை

  ReplyDelete
 25. தொப்பையானந்தா?!??!?!

  அடடா பொருத்தமான பெயருங்கோ

  ReplyDelete
 26. நன்றி பட்டாபட்டி, நம்மளை வச்சு கச்சேரி நடத்தறன்னு முடிவு பண்ணிட்டாங்கைய்யா.
  நன்றி கோவி. அண்ணா, நீங்க விளையாட்டுக்ச் சொன்ன ஒரு வார்த்தையை வச்சு ஒரு பதிவே போட்டுட்டேன்.
  நன்றி சின்ன அம்மினி, நீங்க இப்படிக் கேப்பீங்கன்னு தெரிந்துதான்,மந்திரங்களுக்குப் பக்கத்தில் விளக்கமும் கொடுத்துள்ளேன்.
  நன்றி சித்ரா, இது சாமியார்களின் தப்பு இல்லை. போற சிஷ்யைகள் எல்லாம் நித்தம் ஆனந்தம் தா (நித்தியானந்தா) என்று சொன்னால், அவர் வேற எண்ண பண்ணூவார்.
  நன்றி மலிக்கா, நம்ம டவுசர் பாக்கெட் எப்பவும் காலியான ஒன்னு. அதுனால பத்திரம் தேவை இல்லை. நான் அண்ணாடம் காய்ச்சிங்க. ஓட்டுக்கு நன்றி, ஆனா பிரியாணிப் பொட்டலம் எல்லாம் கொடுக்க மாட்டேன். ஏன்னா எனக்கே பத்தாது.
  நன்றி சைவகொத்துபுரோட்டா, இதுக்கு மேல இருந்தா புழலில் இடம் கொடுத்துவிடுவார்கள்.
  ஹா ஹா நன்றி ஜலில்லா, எல்லாம் நீங்க கொடுத்த இடம்தான், லொள்ளு ஜாஸ்தியாடுச்சு, எனக்கு பிரியாணி தான் தரமாட்டிங்க,அட்லீஸ்ட் தம் ஆவது மேப்பம் பிடிக்கலாம் இல்லையா?
  ஜலில்லா, மங்குனி என்ன மாங்குடி மைனர் வந்தால் கூட தொப்பையானந்தாவை ஒன்றும் செய்ய முடியாது, ஏன்னா தொப்பை அவ்வளே பெரிசு.
  நன்றி ரோஸ்விக், தமிழ்னாட்டுல எந்தப் படம் எடுத்தாலும் ஒரு குடும்பத்துக்குத்தான் ரைட்ஸ் இருப்பது தெரியாதா?
  நன்றி மங்குனி, கொஞ்சம் மேக்- அப் போட்டதுக்கு அப்புறம் படம் புடிங்ககைய்யா, குழந்தைப் புள்ளைக மூஞ்சிய பார்த்து பயந்துடப் போகுது.
  நன்றி திவ்யாஹரி,
  நன்றி விவேக் நாராயன்,தங்களின் முதல் வருகைக்கும், பின்னூட்டத்திற்க்கும் நன்றி. நம்மளைப் படம் பிடிக்க ஸ்பீல் பெர்க் மற்றும் ஜேம்ஸ் கேமரூன் எல்லாம் வரப் போறாங்க, நீங்களும் சேர்ந்துக்கங்க.
  பட்டாபட்டி ஜடியா கொடுத்ததுக்கு நன்றி, இராயபுரத்தில் இருக்கும் எங்க ஆஸ்மரக் கிளை பக்தர்களிடம் சொல்லி, மங்குனிக்கு 10 லிட்டர் விளக்கெண்ணை ஊத்தி விட வேண்டியதுதான்,
  நன்றி ஸாதிகா, தொப்பையும்,சொட்டையும் பார்த்தா என் நினைவு வருவது சந்தேசம், ஆனா எனக்கு தரவேண்டிய பிரியாணியை அவங்களுக்குக் கொடுத்து விடாதீர்கள்.
  நன்றி வால்பையன், புவனேஸ்வரி ஸ்வாமிகள் ஆம்பிளை, எண்பது வயது முதியவர். டைரக்டர் மங்குனி, தயாரிப்பாளர் ரோஸ்விக் மற்றும் காமிராமேன் பட்டாபட்டியைத் தான் கேக்கனும், எதுக்கும் தினம் பன் டீ வி பாருங்க, அதுல விரைவில் ரீலிஸ் ஆகும்.
  வால்ஸ் குச்சி முட்டாய் தெரியும்,அது என்ன குருவி ரொட்டி, நம்ம ஊருல சாப்பிட்டதில்லையே. அப்ப அப்ப தொப்பை பானை ஆகும், பானை தொப்பை ஆகும்.
  வணக்கம் டீச்சர், வரவுக்கு நன்றி. வாழ்த்துக்கள் எதுக்கு, தொப்பை வளரவா? இல்லை தொப்பையானந்தா வளரவா?
  நன்றி முகவை மைந்தன்,
  நன்றி நசரேயன்,
  நன்றி பிரபு, பெயர் வைச்ச பெரியவா, நம்ம கோவி.அண்ணாவாச்சே.
  பின்னூட்டம் இட்ட அனைவருக்கும் நன்றிகள்.

  ReplyDelete
 27. நல்லா இருக்கு பாஸ்...... :)

  ReplyDelete
 28. நல்ல எதிர் காலம் இருக்கு
  :-))))

  ReplyDelete
 29. முதலில் இரண்டு முறை உங்கள் கொல்லிமலை(?)ப் பதிவுகளில் படித்துவிட்டு பின்னூட்டமிட்டிருந்தேன்..கருத்து சொல்லலைன்னாதான் பூதம் வரும்னு சொல்றீங்க...ஆனால் கருத்து சொன்ன பிறகும் பூதம் வருதே..!

  நித்யா பேரைச் சொல்லி ஒரு கலக்கல் பதிவு போட்டு இருக்கீங்க...நன்றி..

  ReplyDelete
 30. நன்றி இல்லுமினாட்டி,
  நன்றி டீ வி ஆர்,
  நன்றி அறிவன், இன்னமும் பூதம் வருதா? நான் பூதத்தைக் கண்டிக்கின்றேன். எதுக்கும் நீங்க தூங்கும் முன்னர், மூன்று முறை ஓம் தொப்பையாந்தாய நம என்று சொல்லிவிட்டு படுங்கள். ஹா ஹா ஹா நன்றி.

  ReplyDelete
 31. என்னங்க அந்த பக்கம் இருக்கற எல்லா சாமியாரையும் பாத்துட்டீங்க போல.

  ReplyDelete
 32. நன்னா எழுதி இருக்கேள் போங்கோ!

  சூப்பர்!

  நல்ல நகைச்சுவை உணர்வு!

  அதுக்காக உங்களை ரொம்ப தாழ்த்திக் கொள்ள வேண்டும் என்பது அவசியமில்லை.

  உண்மையாக இருக்கும் பட்சத்தில், நீங்கள் எழுதியது நன்று!

  ReplyDelete
 33. பொட்டு வச்ச தங்கக்குடம் நீங்க!

  குடம் என்பது உங்க தொப்பைதான்!

  அஜித் கணக்க இருக்கீங்க!

  அப்பரம் அந்த தல....!

  ReplyDelete

என்னை வளர்க்க, கருத்துரையிடுக...

பதிவைப் படித்து கருத்து போடலைனா
உங்க கனவுல பூதம் வரும்,,, ஆமா சொல்லிட்டேன்.