Wednesday, March 17, 2010

குட்டி,சட்டி,பன்னிக்குட்டி

நான் எல்லாம் சின்ன பையனா இருக்கறப்ப சினிமாவுக்குப் போவது என்பது ரொம்ப கஷ்டமான விஷயம். ரொம்பக் கண்டிப்பான வீடு என்பதால், அனுப்ப மாட்டார்கள். எங்க இரண்டாவது அக்கா திருமணம் ஆகாதவரை, நான் எஸ்கார்டு டியூட்டிக்காக சினிமாவிற்குப் போவேன். நான் படத்துல யாராது அழுதா நானும் அழுகும் ஜாதி(ரொம்ப இளகிய மனசு,கொயந்த பையனுங்க). ஆனா அக்கா ரொம்ப செலக்ட்டிவா குடும்பக் கதைகளுக்குத்தான் போவார். குறிப்பா சிவாஜி மற்றும் ஜெமினி படங்களுக்கு, அங்கன போனா,சாவித்திரி, கண்ணாம்பா,வரலட்சுமி,ஊர்வசி சாரதா மாதிரி நடிக்கறவங்க எல்லாம் என்னியக் கொயந்தன்னு கூடப் பார்க்காமல்,நம்மளை அழ வச்சுருவாங்க. பொதுவாக சிரிப்புப் படங்களை விரும்பிப் பார்ப்பேன். அக்கா கல்யாணத்திற்க்கு அப்புறம் படம் பார்ப்பது என்பது ரொம்பக் குறைவு. பின்னர் கொஞ்சம் வயது வந்தவுடன், நான் தலைவர் ரஜினிகாந்தின் படங்களை விரும்பிப் பார்ப்பது உண்டு, எனக்கு நேர் மூத்த அண்ணா கமல் இரசிகர் என்பதால் அவருடன் கமல் படங்களுக்குப் போவேன்.இவங்க படத்தில் கூட ஹீரோவின் தங்கச்சிய கற்ப்பழிக்கும் போது அல்லது அவங்க அப்பா,அம்மாவைக் கொலை செய்யும் போது,அழுகாய்ச்சி சீன் வந்தா, நான் வெளிய அல்லது பாத்ரூமுக்கு ஓடிப் போயிடுவேன். கச்சியில வில்லனை மாத்தி,மாத்திக் குத்தும் போது,அடிடா,குத்துடான்னு படம் பார்த்து, சந்தோசமா வீட்டுக்கு வருவேம்.


நானும் என் நாலாவது அண்ணாவும்தான் படத்திற்குப் போவேம், கமல் படம் வந்தால் அவனும், ரஜினி படம் வந்தால் நானும், வீட்டில் கேட்டு அனுமதி வாங்க வேண்டும். இந்த அனுமதி வாங்குவது இருக்கே இது ஒரு பெரிய வேலை. படம் வந்தவுடன் போஸ்டரைப் பார்த்துவிட்டு, முதலில் அம்மாவை நச்சரிக்க வேண்டும், பின்னர் அம்மா சரி நான் சொல்கின்றேன் என்று சொல்லிவிட்டு, மெதுவாக எங்க பெரிய அண்ணா கிட்ட சொல்வார்கள். அவர் முதலில் ஏன் படம் பார்க்கவில்லை என்றால் இவனுகளுக்குத் தூக்கம் வராதோ? என்று கேப்பார். நாங்க மொசப் பிடிக்கத் தெரியாத மாதிரி மூஞ்சியை அப்பாவியா வைச்சுக்குவேம். பின்னர் என்ன படம்? என்று விசாரிப்பார்.அந்தப் படத்தைப் பத்தி அவருக்கு நல்ல அபிப்பிராயம் இருந்தால் உடனே அனுப்பி விடுவார். தெரியவில்லை என்றால் எல்லாம் இரண்டு நாள் கழிச்சுப் பார்க்கலாம் என்பார். விசாரித்து விட்டு அனுப்புவார். நல்ல படம் இல்லை என்றால் சத்தமில்லாமல் விட்டு விடுவார்.
நாங்களும் இரண்டாவது தடவைக் கேட்க மாட்டேம்.ஆனா அவரே, நாங்க கேக்காமக் கூட, சார்லி சாப்ளின் படம்,லாரல்-ஹார்டி படம், ஜாக்கிசான் படம், காட் மஸ்ட் பி கிரேசி போன்ற படங்களுக்கு அனுப்புவார். நல்ல படம் என்றால் அவரே பணம் கொடுத்து அனுப்புவார். எனக்கு ஒன்னேகால் ரூபாய்,எங்க அண்ணாவிற்க்கு ஒன்னேகால் ரூபாயும், மொத்தம் இரண்டரை ரூபாய் கிடைக்கும்.நான் மொதல்ல படத்துக்குப் போறப்ப, பெஞ்சி டிக்கெட்- 40 காசு,பேக்பெஞ்சி - 60காசு, சேர்- 1 ரூபாய்(நாற்காலி). எங்களுக்கு சேருக்குப் போக ஒரு ரூபாயும், இடைவேளையில் எதாது வாங்கித் திண்ண 25காசும் கொடுப்பார்கள். அப்ப எல்லாம் பாப்கார்ன் மற்றும் கோன் ஜஸ் 25 காசு, ஜவ்வு மிட்டாய்,மாங்காய்த்துண்டு,கடலை உருண்டை,கம்மர் கட் எல்லாம் 5காசு. நியுட்டரமுல் சாக்லேட் மட்டும் பத்துக் காசு. பாப்பின்ஸ் 20காசு விற்கும். நாங்க பேக் பெஞ்சுக்குப் போயிட்டு, டவுசர் பாக்கெட்டில் ஜவ்வு மிட்டாய்,மாங்காய்,கம்மர் கட் எல்லாம் 40 காசுக்கு வாங்கிக் கொள்வேம், மீதி 25 காசுக்கு இடைவேளையில் பாப்கார்ன் வாங்கிக் கொள்வேம். இது கதை. இனி பதிவுக்குப் போவேம். நான் ஒன்பதாம் வகுப்பில் படிக்கும் போது, எங்க ஊரில் சத்தியா கொட்டாயில ஒரு கமல் படம் போட்டியிருந்தாங்க, எங்க நாலாவது அண்ணா வீட்டில் அனுமதியும், பைசாவும் வாங்கினான்.நாங்க படத்துக்குப் போய்க்கிட்டு இருக்கும் போது அறிஞர்.அண்ணாவின் சிலைக்கிட்ட என் நண்பன் முரளி வந்தான், அவன் சில்க்ஸ்மிதா நடித்த போலிஸ்,போலிஸ்,போலிஸ்ன்னு ஒரு படம் போவதாகவும், எங்களையும் கூப்பிட்டான். அது கொஞ்சம் கிளாமர்,கில்மா படாமாமே. எங்களுக்கு என்ன தெரியும்.நாங்க எந்தக் காலத்தில் படத்தைப் பத்தி எல்லாம் கேள்விப் பட்டேம். நண்பனுடன் போகும் ஆசையில், நான் கேட்க,எனக்கு நேர் மூத்த அண்ணனும் மாடு மாதிரி தலை ஆட்டிவிட்டான். படமும் ஓடுச்சு, நாந்தான் கொயந்தை ஆச்சே, எனக்கு என்ன தெரியும் வழக்கம் போல ஜவ்வு மிட்டாயை வாயில் அதக்கிக் கொண்டு படம் பார்த்தேன்.

இந்த விஷயம், எங்க உள்ளூரு சி.ஜ.ஏ ஆளுக மூலமா எங்க பெரிய அண்ணன் காதுக்குப் போச்சு. எங்க பெரிய அண்ணா, நாலாவது அண்ணாவிடம் எந்தப் படத்துக்குடா போனிங்க என்றார். கேள்வி கொஞ்சாம் காரமா இருந்ததால, அவன் உண்மையைச் சொன்னா, அடிவிழுகும் என்று கமல் படத்துக்குத்தான்னா என்றான். பளீர் என்று கன்னம் காலியாச்சு. பின்னர் திருப்பி என்னிடம் கேட்டார், நான் தான் ரொம்ப விவரமான ஆள் இல்லியா? அதுனால படுக்குன்னு போலிஸ்,போலிஸ்,போலிஸ்ன்னு சத்தமா சொன்னேன். ஒவ்வெரு போலிசுக்கும், ஒரு அறை விழுந்தது. நான் எதே தப்பா சொல்லிவிட்டேன்னு,கன்னத்தைப் பிடித்துக் கொண்டு நின்று விட்டேன். ஏண்டா ஒரு படத்துக்குப் போறேம்ன்னு பொய் சொல்லி,ஏண்டா மாத்திப் போனிங்க ? டாமர்,டிமீல் என்று பூஜை நடந்தது. நான் அழுது கொண்டே, நண்பன் கூப்பிட்ட விஷயத்தைச் சொல்ல, எங்க பெரிய அண்ணா எங்க அறியாமையைப் புரிந்து கொண்டாலும், ஏண்டா அவன் தான் சின்னப் பையன், உனக்கு எங்கடா புத்தி போச்சுன்னு, என் அண்ணாவிற்கு இன்னமும் நாலு அறை கிடைத்தது. பின்னர் அவர் இனிமே நான் சொல்ற படத்துக்குதான் போகனும் என்று சொல்லிவிட்டு வெளியில் போயிட்டார். இதுபோல சந்தர்பங்களில் எல்லாம் நாங்க சின்சியரா புஸ்த்தகத்தை வைத்துக் கொண்டு படிப்பது போல ஆக்ட் கொடுப்போம். அது மாதிரிப் பண்ணும் போது என் அண்ணன் கேட்டான், " டேய் நாம எதாது தப்பான படத்துக்குப் போயிட்டமோ? என்று. நான் சுறு சுறுப்பாய் பதில் சொன்னேன், " இல்லைடா நாம படம் மாத்திப் போயிட்டேமுன்னு அடிச்சாருன்னேன். அவனும் உன்னாலதாண்டா அடிவாங்கினேன், போடா குட்டி சட்டி பன்னிக்குட்டி என்றான்.எங்க வீட்டில் நான் கடைக்குட்டி என்பதால்,என் அம்மா அழைக்கும் பெயர் சுதாக்குட்டி, இதை இவன் கிண்டல் செய்யும் பெயர்தான் "குட்டி,சட்டி,பன்னிக்குட்டி"(அப்பாடா தலைப்பு வந்துருச்சு). நானும் போடாக், கழுதை (அவன் பெயர்) என்று சொல்லிப் படிக்க ஆரம்பித்தேன். ஒரு மணி நேரத்தில் வழக்கம் போல, எங்களை அடித்த வருத்ததில், வடை போண்டா எல்லாம் பெரிய அண்ணா வாங்கி வந்தார். நாங்களும் மகிழ்வுடன் சாப்பிட்டேம்.


இது நடந்து ஒரு வருடம் ஆகியிருக்கும், நான் பத்தாங்கிளாசு பரிச்சை எழுதிவிட்டு,விடுமுறையில் இருந்தேன். அப்ப என் இரண்டாவது அக்காவின் மச்சினனும்,எனது உயிர் நண்பனான குட்டி எங்கின்ற கோவிந்தராஜன் ஊரில் இருந்து வந்தான். அவனைப் படத்துக்கு அழைத்துப் போகுமாறு அக்கா சொன்னாங்க. மெல்லத் திறந்தது கதவு படத்துக்கு சத்தியா தியேட்டரில் போட்டுருந்தார்கள். நான் என் அம்மா மூலமாக, பெரிய அண்ணாவிடம் கேக்க, அவர் என்னிடம் விசாரித்து விட்டுப் பின்னர்க் குட்டியிடம் கூறினார். "குட்டி அவன் சிலுக்கு இரசிகன், பார்த்து உன்னை தியேட்டர் மாத்திக் கூட்டிப் போயிடப் போறான்" என்றார் சிரித்துக் கொண்டு. அவனும் "இல்லை அண்ணா நான் பார்த்துக் கொள்கின்றேன்" என்றான் விவரம் புரியாமல். அப்ப அதே வசந்தா தியேட்டரில் ஓடிய படம்,சில்க்,சில்க்,சில்க். ஆனா நாங்க இந்த முறை ஒழுங்கா, சத்தியா தியேட்டரில் படம் பார்த்து வந்தோம். பின்னாளில் இந்த நிகழ்வின் மூலமாத்தான் எனக்கு சில்க்கை தெரிந்தது. பின்னர், பில்லா,இரங்கா,பாயும்புலி,சகலகலாவல்லவன் என ஏவிஎம், முத்துராமன்,தேவர் பிலிம்ஸ் மற்றும் பாலாஜிடைரக்சனில் வந்த இரஜினி,கமல் படம் எல்லாம் சிலுக்கின் குத்துப்பாட்டு இருக்கும். பின்னர் நான் சிலுக்கின் கோழி கூவுது மற்றும் ஜீவா படம் பார்த்த போது, தீவீர இரசிகன் ஆயிட்டேன். போஸ்டரில் சிலுக்கின் ஸ்டில் இருந்தா ஓடிவிடுவேன். ஆனாலும் அது கமல்,இரஜினி,கார்த்திக் படமா இருந்தால்தான் வீட்டில் கேட்க முடியும். (அமரன்னில் போட்டாங்க பாரு ஒரு ஆட்டம்)

இதுதாங்க நான் சில்க் இரசிகன் ஆன கதை. பின்னாளில் கல்லூரி வந்த பிறகு, இந்த எண்ணம் குறைந்து விட்டது. பின்னர் படம் பார்ப்பதும் எனக்குப் பிடிக்கவில்லை. தலைவர் படத்தை மட்டும் மிஸ் பண்ணாமல் பார்ப்பேன். நண்பர்கள் கட்டாயப் படுத்தினால் பார்ப்பேன். என்னைப் பொறுத்தவரை தியேட்டருக்குச் செல்வது என்பது இரண்டு மணி நேர அரஸ்ட் மாதிரிதான். சிலுக்கு இறந்த செய்தி கேட்டு மிக வருத்தப் பட்டேன். குழந்தை, குட்டிகளுடன் நல்ல திருமண வாழ்க்கை வாழப் பிரியப் பட்ட, அந்த நல்ல பெண்ணின் வாழ்க்கை ஏமாற்றமாக முடிந்தது. அதன் விளைவாய்த் தூக்கில் தொங்கிவிட்டார். என்ன செய்வது. பிறரை மகிழ்விக்கும் எவரையும் அண்டவன் மகிழ்வாய் வைத்தது இல்லை. ஒரு சிலர் மற்றவர்களுக்காவும்,தன்னைச் சுற்றி இருப்பவர்களுக்காகவும் வாழ்க்கையைத் தியாகம் செய்ய வேண்டியுள்ளது. நன்றி.

35 comments:

 1. படிக்க....படிக்க....சிப்பு வருது, இவ்ளோ அப்பாவியா!!!!
  ஆமா, ஏன் தமிலிஷில் இணைக்க வில்லை.

  ReplyDelete
 2. இது இரண்டாவது தடவையாய், நான் புரூப் பார்த்து,தமிலீஷ்ஷில் இணைக்கும் முன்னர் நீங்கள் பின்னூட்டம் போட்டு விட்டீர்கள். மிக்க நன்றி சைவக் கொத்துபுரோட்டா.

  ReplyDelete
 3. இணைச்சுடீங்க..........நாந்தேன் அவசரத்துல வந்திட்டேன் போல :))

  ReplyDelete
 4. நீங்க அண்ணாகிட்ட அடிவாங்கின கதையை படிச்சு நல்லா சிரிச்சேன்.

  @ சில்க் - எல்லாருக்கும் அவங்கமேல ஒரு சாப்ட் கார்னர்.

  ReplyDelete
 5. அட! குட்டி சட்டி பன்னிக்குட்டி:-))))))

  நல்லா சிரிச்சேன்.

  யூ மேட் மை டே.

  டேங்கீஸ்

  நாங்க சினிமாவுக்குப்போவது இப்படி.

  http://thulasidhalam.blogspot.com/2008/08/blog-post_04.html

  ReplyDelete
 6. ஐயா (சில்க்)பித்தன் அவர்களே!

  பதிவு மிக நன்றாக இருந்தது! உங்களைப்போலவே எனக்கும் ஒரு அனுபவம்.

  பத்தாவது படித்து முடிக்கும் வரை தனியாக சினிமாவுக்கு போனதில்லை. குடும்பத்துடன் தான். என்னுடைய பத்தாவது தேர்வு முடிந்தவுடன் தனியாக சினிமாவுக்கு போக அனுமதி கிடைத்தது. ஏதோ ஒரு படத்திற்கு போகலாம் என்று முடிவுசெய்து போஸ்டரை பார்த்துவந்து கிளம்பிக்கொண்டு (கிளப்பியல்ல) இருந்தேன். பக்கத்தில் (3 km ) இருந்த டூரிங் டாக்கீஸ், படம் : இளமை ஊஞ்சலாடுகிறது. எனக்கு படத்தின் தன்மை தெரியாது. என் தந்தைக்கு தெரியும் போல். அதுவரை அவரும் கேட்கவில்லை, நானும் என்னபடம் என்று சொல்லவில்லை.

  சைக்கிளை எடுத்து வெளியே வைத்து காற்று அடித்தேன். துடைத்தேன். மணி பார்த்தேன். கிளம்ப சரியாக இருந்தது. வெளியே வந்தேன்.

  அப்பொழுது நடந்தது கீழே:

  அப்பா: பார்த்து போயிட்டு வா.
  நான்: சரிங்கப்பா.
  அப்பா: எந்த தியேட்டர்?
  நான்: ' xxxxxxxxxx ' தியேட்டர்.
  அப்பா: என்ன படம்?
  நான்: ' இளமை ஊஞ்சலாடுகிறது '
  அப்பா: இளமை உஞ்சலாடுதோ, கமினாட்டி என்ன படத்துக்கு போகுது பாரு. உருப்புடவாபோற நீ. சைக்கிள வச்சிட்டு போய் மாட்டுக்கு தண்ணி காட்டு.

  நான்: திரு திருவென்று விழித்தேன். இளமை ஊஞ்சலாடுகிறது படத்தைப்பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது அப்பொழுது. ஆனால் அந்த படத்தை பார்க்க வேண்டும் என்ற வெறி மட்டும் கிளம்பிவிட்டது.

  அதே வெறியுடன் அந்த படத்தை 4 ஆண்டுகளுக்கு பிறகு பார்த்தேன்.

  இப்படிதான் ஊஞ்சலாடி கிளம்பியது என் இளமை!

  இப்படிக்கு,
  பண்புடன் வாழ நினைக்கும் (ஆனால் முடியவில்லை ) பாலா.
  +6590150346

  ReplyDelete
 7. வணக்கம் பாலா அவர்களே. நீங்க சொன்ன உங்கப்பா கதைகளே இன்னமும் நினைவில் உள்ளது. அதற்குள்ள இன்னேரு கதையா?
  உங்கள் வாழ்க்கையிலும் நிறைய சுவாரஸ்யமான சம்பவங்கள் இருக்கும் போல. நல்ல நினைவுகள். தங்களின் வருகைக்கும்,பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றிகள்.

  ReplyDelete
 8. //பிறரை மகிழ்விக்கும் எவரையும் அண்டவன் மகிழ்வாய் வைத்தது இல்லை.//

  ஒரு காலத்தில் எத்தனையே தயாரிப்பாளர்களையும் , நடிகர்களையும் வாழவைத்த பெண் , பார் , முடி வெட்டும் கடை , பத்திரிக்கை என்று இவர் படம் இல்லாத இடமே இல்லை . விதி வலியது.

  ReplyDelete
 9. சிரிச்சி, சிரிச்சி படித்தேன்...

  ReplyDelete
 10. அண்ணே.. உள்ள வரலாங்களா?..
  எல்லோரும் சிலாகிச்சுட்டு பேசரப்போ , பட்டாபட்டிய
  மாட்டிட்டு வந்துட்டானு சொல்லக்கூடாது..

  அப்புறம் மனசு கஷ்டமாயிடும்..

  நான் என்ன சொல்ல வரேனா...
  .
  .
  .
  ம்..ம்.. வந்து... வந்து...
  .
  .
  பதிவு சூப்பர்..

  ( தப்பா நினச்சுக்காதீங்க..பட்டாபட்டி காலண்டர்படி கணக்கு போட்டா..
  நீங்க..இப்ப தியாகி பென்ஷன் வாங்கிட்டு இருக்கனுமே..ஹி..ஹி )

  ReplyDelete
 11. பட்டா உன் காலண்டர் கணக்கு தப்பு, நான் காசு கணக்குதான் சொல்றேன். அணா கணக்கு சொன்னால்தான் தியாகி பென்ஷன் எல்லாம் கிடைக்கும். சரியா? காலண்டரை ,மாத்துப்பாஆஆஅ

  ReplyDelete
 12. @பித்தனின் வாக்கு said...
  பட்டா உன் காலண்டர் கணக்கு தப்பு, நான் காசு கணக்குதான் சொல்றேன். அணா கணக்கு சொன்னால்தான் தியாகி பென்ஷன் எல்லாம் கிடைக்கும். சரியா? காலண்டரை ,மாத்துப்பாஆஆஅ
  //

  அட.. ஆமா சார்..
  என்ன இருந்தாலும் , ‘பெரியவங்க’ சொன்னா சரியாத்தான் இருக்கும்..

  ReplyDelete
 13. இதுபோல சந்தர்பங்களில் எல்லாம் நாங்க சின்சியரா புஸ்த்தகத்தை வைத்துக் கொண்டு படிப்பது போல ஆக்ட் கொடுப்போம். அது மாதிரிப் பண்ணும் போது என் அண்ணன் கேட்டான், " டேய் நாம எதாது தப்பான படத்துக்குப் போயிட்டமோ? என்று. நான் சுறு சுறுப்பாய் பதில் சொன்னேன், " இல்லைடா நாம படம் மாத்திப் போயிட்டேமுன்னு அடிச்சாருன்னேன்.


  ..........அப்பூராணி அண்ணாச்சிக்கு வெள்ளந்தி மனசு. நல்லா இருக்கீகளா? பதிவை படிச்சிட்டு நல்லா சிரிச்சேன். ரொம்ப நன்றி.

  ReplyDelete
 14. படிக்க படிக்க சிரிப்பு சிரிப்பா வருது, உண்மைய சொல்லுங்க சில்க் ஸ்மிதா படத்த பார்க்க நீங்களே தானே முடிவெடுதீங்க, எதுக்கு பாவம் உங்களுடைய நன்பன சொல்றீங்க

  ReplyDelete
 15. ஏன் சார் சில்க் படம் ஒன்னே ஒன்னு தான் போற்றிகீங்க ? ஒரு ஆல்பம் போடுங்க சார், சில்க்காக ஒரு படையே அடிச்சாலும் தாங்கலாம் சார், (டே மங்கு போதும் ஜொள்ளு வடியுது )

  ReplyDelete
 16. @மங்குனி அமைச்சர் said...
  ஏன் சார் சில்க் படம் ஒன்னே ஒன்னு தான் போற்றிகீங்க ? ஒரு ஆல்பம் போடுங்க சார், சில்க்காக ஒரு படையே அடிச்சாலும் தாங்கலாம் சார், (டே மங்கு போதும் ஜொள்ளு வடியுது )
  //
  ஆமா.. நல்லா ஏத்திவிடு..
  பாவம் சின்ன வயசில இருந்து அடி வாங்கி..ஏதொ இப்பத்தான் கொஞ்சம் நிம்மதியாயிருக்காரு..
  கோத்து விடாதே மங்கு

  ReplyDelete
 17. இந்த பதிவுல முதல் நாலு பேரா அப்படிய நம்ம வாழ்க்கையிலும் நடந்ததுங்கோ...

  ReplyDelete
 18. மங்குனி மக்கா, நான் மேல குட்டியூண்ட ஒரு சில்க் படம் போட்டுருக்கறது உன் கண்ணுக்குத் தெரியவில்லையா?
  டூ பீஸ்ல நின்னா மட்டும் பார்த்துருவீங்களே. திருந்த மாட்டிங்களா?

  ReplyDelete
 19. ஹலோ பட்டாப்பட்டி,

  பித்தனுக்கே இப்படியா. இளமை உஞ்சலாடுகிறது நான் பார்த்ததை பற்றி எழுதினதால என்னை சுடுகாட்டிலிருந்து எழுந்துவந்து எழுதினியான்னு கேட்கக்கூடாது. நான் அந்த படத்தை ரொம்ப லேட்டா பார்த்தேன். அந்த படம் பார்க்க 'baggie pant ' போட்டுக்கிட்டு தான் போனேன்.

  So , நானும் youth தான் (cable சங்கரைவிட).

  இப்படிக்கு,
  பாலா.

  ReplyDelete
 20. ஒரு சிலர் மற்றவர்களுக்காவும்,தன்னைச் சுற்றி இருப்பவர்களுக்காகவும் வாழ்க்கையைத் தியாகம் செய்ய வேண்டியுள்ளது.

  உண்மை தான்..

  ReplyDelete
 21. //ஏன்யா இப்படி சொறியா மொழிப்படமாவே போடுறியே, எப்பத்தான் பதிவு போடுவீங்க.//

  பாஸு,இந்த சட்டி,குட்டி,புட்டி பத்தி எல்லாம் எனக்கு எதுவும் தெரியாது.நான் சின்னப்பையன்.அதான்,ஏதோ என்னால முடிஞ்ச அளவுக்கு மொக்க போடறேன்.நீங்க எல்லாம் ‘பெரியவங்க’. உங்க அளவுக்கு என்னால முடியாதுங்க.கொஞ்சம் பாத்து அட்ஜஸ்ட் பண்ணிக்கங்க.....

  ReplyDelete
 22. // சட்டி,குட்டி,புட்டி பத்தி எல்லாம் எனக்கு எதுவும் தெரியாது. //
  ஏம்பா பொய் சொல்ற, புட்டி பத்தி தெரியாதுன்னு சொன்ன நாங்க நம்பனுமாக்கும். மங்குனி இந்த அக்கிரமத்தைக் கேக்க ஆளில்லையா?

  ReplyDelete
 23. பித்தனின் வாக்கு said...
  //மங்குனி மக்கா, நான் மேல குட்டியூண்ட ஒரு சில்க் படம் போட்டுருக்கறது உன் கண்ணுக்குத் தெரியவில்லையா?
  டூ பீஸ்ல நின்னா மட்டும் பார்த்துருவீங்களே. திருந்த மாட்டிங்களா?//

  சாரி சார் என்னக்கு பெரிய்ய , பெரிய்ய அது தாங்க மனசு (நேத்து கூட அந்த சமந்தா மாதிரி ) இருந்தா தான் சார் என் கண்ணுக்கு தெரியுது

  ReplyDelete
 24. @Punnakku Moottai said...
  ஹலோ பட்டாப்பட்டி,
  பித்தனுக்கே இப்படியா. இளமை உஞ்சலாடுகிறது நான் பார்த்ததை பற்றி எழுதினதால என்னை சுடுகாட்டிலிருந்து எழுந்துவந்து எழுதினியான்னு கேட்கக்கூடாது. நான் அந்த படத்தை ரொம்ப லேட்டா பார்த்தேன். அந்த படம் பார்க்க 'baggie pant ' போட்டுக்கிட்டு தான் போனேன்.
  So , நானும் youth தான் (cable சங்கரைவிட).
  இப்படிக்கு,
  பாலா.
  //

  அண்ணே..உங்களைப்போயி சொல்லுவனானே..
  கேபிள் சங்கர் அண்ணன் , நீங்க , நானு எல்லாருமே செம யூத்னே..
  ஆனா.. நம்ம அண்ணாச்சி சீனியர் சிட்டிஷன்ணே..

  ( ஆதாரம்.. அவர் கையிலிருந்த சீனியர் சிட்டிஷன் E-Link Card-ணே...)

  ReplyDelete
 25. //என்னைப் பொறுத்தவரை தியேட்டருக்குச் செல்வது என்பது இரண்டு மணி நேர அரஸ்ட் மாதிரிதான்.//

  சரியச் சொன்னீங்க அண்ணா.. நானும் இதை சொல்லியே தான், சினிமாவிற்கு போக மறுப்பேன். ரஜினி படம் மட்டும்தான் பார்க்க பிடிக்கும்..

  உங்க பதிவ படிச்சிட்டு சிரிக்காம போக முடியாது எப்போதும்.. இப்போ பின்னூட்டங்களும் அப்டியே இருக்கு அண்ணா.. நேரமின்மை காரணமாக பின்னூட்டம் இட முடியவில்லை.. இப்போ அனைத்தும் படித்து விட்டேன் அண்ணா..

  ReplyDelete
 26. நல்லா இருக்குய்யா கதை :-)

  ReplyDelete
 27. //குட்டி,சட்டி,பன்னிக்குட்டி // ஹி..ஹி... உங்க கதை ரொம்ப நல்லாயிருக்கு!!

  ReplyDelete
 28. சின்ன வயது சினிமா பார்த்த அனுபவங்கள் கிட்டத்தட்ட வீரப்பிரதாபங்கள் போலத்தான் எல்லாருக்கும் இருக்கும் போலிருக்கிறது. அதிலும் சில்க் ஸ்மிதா பற்றி எழுதி, அவர் மறைந்தாலும் மறக்கப்படவில்லை என்பதை உணர்த்த்யிருக்கிறீர்கள்.

  ReplyDelete
 29. நன்றி சைவகொத்துபுரோட்டா,
  நன்றி சின்ன அம்மினி,
  நன்றி டீச்சர்,அத்தொடரை நானும் படிச்சேன்.மிக அருமை.
  நன்றி பாலா,
  நன்றி ஜெய்லானி,
  நன்றி நாடோடி,
  நன்றி பட்டாபட்டி,
  நன்றி சித்ரா,
  நன்றி சசிகுமார், நான் தெரியாமத்தான் போனேன்.
  நன்றி ஸ்ரீராம்,இதுகூட நல்ல தலைப்பாகத்தான் இருக்கு.
  நன்றி மங்குனி அமைச்சரே
  நன்றி சதீஷ்,
  நன்றி ஜீவன் சிவம்,
  நன்றி இல்லுமினாட்டி,
  நன்றி திவ்யாஹரி,
  நன்றி உழவன்,
  நன்றி மேனகா சத்தியா,
  நன்றி சேட்டைக்காரன்.
  பின்னூட்டமும்,ஓட்டுக்களும் இட்ட அனைவருக்கும் நன்றி.

  ReplyDelete
 30. /So , நானும் youth தான் (cable சங்கரைவிட).
  //

  aloo.. மிஸ்டர் புண்ணாக்கு.. உங்களை யாராவது கேட்டாங்களா..? சரி.. ஓகே.. ரைட்டு.. ரெண்டு பேரும் யூத்துதான்.. ஓகேயா..

  ReplyDelete
 31. பளீர் என்று கன்னம் காலியாச்சு. பின்னர் திருப்பி என்னிடம் கேட்டார், நான் தான் ரொம்ப விவரமான ஆள் இல்லியா? அதுனால படுக்குன்னு போலிஸ்,போலிஸ்,போலிஸ்ன்னு சத்தமா சொன்னேன். ஒவ்வெரு போலிசுக்கும், ஒரு அறை விழுந்தது...:)

  சில்க் சுமிதாவை பெண்களுக்கும் பிடிக்கும்...

  அவரின் கண்களும் உதடும் வெகு அழகு, அந்த அப்பாவி முகம். அவரின் வெகுசில ந்ளின்மான நடனங்கள்..சில படங்களில் உடைத்தேர்வு...

  ReplyDelete
 32. சில்க் சில்க் சில்க் னே தலைப்பு வச்சிருக்கலாம்.கவர்ச்சியா இருந்தாலும் ஆபாசமாகத் தோன்றாத நடிகை அவுங்க.

  ReplyDelete
 33. பித்தா....
  /////இரண்டாவது அக்கா திருமணம் ஆகாதவரை,
  நான் எஸ்கார்டு டியூட்டிக்காக சினிமாவிற்குப் போவேன்/////

  என்
  நிழல்கள்
  நிஜமாய்... என் கண்முன்னே
  நடமாடும்போது....

  I feel very happy....!

  உறுத்தலில்லாமல்
  உண்மை எழுதியமைக்கு
  பாராட்டுக்கள்...

  நானும் தாங்கள் அனுபவித்த இந்த அனுபவத்தை அனுபவித்தவன் என்ற முறையில்..

  என்ன உங்களுக்கும் எனக்கும் வித்தியாசம்...

  நான் சினிமா பார்க்க 33 பைசா டிக்கெட்டில்.... அப்போது பாபின், பொப்கோர்ன் எல்லாம் கிடையாது.... வெறும் முறுக்கு, தட்டை, இதுபோல தின்பண்டங்கள் மட்டுமே...

  ஞாபகம் வருதே....! ஞாபகம் வருதே....!

  நல்ல இடுகை...
  பாராட்டுக்கள்...

  நட்புடன்...
  காஞ்சி முரளி.........

  ReplyDelete
 34. என்ன பாலா சார், கேபிள் சார், உங்களை வீட யூத்தானா இந்த 16 வயசு பையன மறந்துட்டீங்களே.
  நன்றி கன்னகி,
  நன்றி கண்மனி, உண்மையில் நான் இந்தக் கட்டுரைக்கு சில்க்,சில்க்,சில்க் என்றுதான் வைக்காலம் என்று முடிவு செய்து இருந்தேன். ஆனால் டைப்பிய பிறகு ஏனே தலைப்பை மாற்றி விட்டேன்.
  நன்றி முரளி அய்யா. நான் போகும் போதும், முறுக்கு, மிளகு வடை, அதிரசம், மைதா மாவு உருண்டை எல்லாம் விற்ப்பார்கள். ஆனால் பாப்கார்னும், கோன் ஜஸ்ஸும் வந்த புதிது என்பதால் வாங்கி உண்போம். மிக்க நன்றி.

  ReplyDelete

என்னை வளர்க்க, கருத்துரையிடுக...

பதிவைப் படித்து கருத்து போடலைனா
உங்க கனவுல பூதம் வரும்,,, ஆமா சொல்லிட்டேன்.