Friday, March 26, 2010

நானும் ஹீரோதாங்க- மொக்கை


ஒரு வழியாக அந்த நிறுவனத்தில் முதல் வேலை கிடைத்து, அவர்கள் டை கட்டி வரச் சொன்னார்கள் என்று டை வாங்கலாம் என்று இருந்தேன். அதற்குள் என் அண்ணாவின் நண்பன் மகேஷ் என்பவர், என் கல்யாணத்திற்கு வாங்கிய டை சும்மாதான இருக்கு, நான் தருகின்றேன் என்று கூறித் தந்தார். சென்னை வண்ணாரப் பேட்டையில் என் இரு சித்திகள் இருந்தார்கள். மகாராணி தியேட்டர் அருகே வீடு. நான் தினமும், என் வெயிட்டை வீட வெயிட்டான ஒரு சூவை மாட்டிக் கொண்டு, சோளக்கொல்ல பொம்மைக்கு டிரஸ் போட்டாப்புல ரெடிமேடு சர்ட் பேண்டையும் மாட்டி,கழுத்துல நாய்ச்சுருக்கையும் மாட்டிக்கிட்டு, கையில ஒரு புது வி.ஜ.பி ஆல்பா சூட்கேஸை எடுத்துக் கொண்டு போவேன். பத்தாததுக்கு ஜாஸ்மின் அத்தர் வேற. அலுவலகம் கிரீம்ஸ் ரோடு முடிவில் மூர்ஸ் ரோட்டில் இருந்தது. சுருக்கமா சொல்லனும் என்றால் எக்மோர் கோ-ஆப் டெக்ஸ் அருகில். நான் மகராணி தியேட்டர் பஸ் ஸ்டாப்பில் இருந்து காயிதே மில்லத் வந்து இறங்கி, எத்திராஜ் காலேஜ் ரோடு வழியாக நடந்து செல்வேன்.

இப்படிக நான் பாரதி ஆர்ட்ஸ்,காயிதே மில்லத் மற்றும் எத்திராஜ் காலேஜ் கல்லூரிகளைக் கவர் பண்ணினேன்.காலை அலுவலகம் செல்லும் போது, காலைக் கல்லூரி மாணவிகளுக்கும், மாலை திரும்பும் போது மாலைக் கல்லூரி மாணவிகளுக்கும் எஸ்கார்ட் டியூட்டி பார்த்தேன். காலை முழுதும் பீல்டில் சுற்றிவிட்டு, மதியம் 2 மணியளவில் வீட்டுக்கு வந்து சாப்பிட்டு விட்டு,ஒரு தூக்கம் போட்டு, நாலு மணிக்கு கிளம்பி அலுவலகத்திற்குப் போய் ரிப்போட்டிங் முடித்து, 5.30க்கு வீடு திரும்புவது வாடிக்கை. நான் என் பழைய பதிவுகளான பெரிய மனுசன் ஆனது எப்படி பதிவில் நான் சைட் அடிக்க முடியாமல் எவ்வளவு கஷ்டப் பட்டேன் என்று கூறியிருந்தேன். அப்ப சென்னையில் நானும் என் நண்பனும் வசதியாக சுற்றினேம். வேலை ஏரியாக்களில், ஸ்டெல்லா மேரிஸும்,குவின் மேரிஸும் உண்டு. ஆனா நாங்கதான் பார்த்தமே தவிர, எங்களை எந்தப் பொண்ணும் பார்க்கவில்லை. அதைப் பத்தி நமக்கு என்ன கவலை, நாம் நம் கடமையை ஒழுங்கா செய்யனும் இல்லை. இப்படிப் போகும் கட்டத்தில் ஒரு நாள், நான் எஸ்.குமார்ஸ்ஸில் புதிதாக ஒரு ரெடிமேட் பேண்ட் சட்டை வாங்கிப் போட்டுக் கொண்டு,நாய்ச்சுருக்கை மாட்டிக் கொண்டு,ஹீரோ கணக்காய்(நினைப்புத்தான்) காலை அலுவலகம் அவரசரமாகப் புறப்பட்டேன்.

கலைக்கல்லூரி நிறுத்தத்தில் இறங்கி, நான் எத்திராஜ் ரோடு வழியாக நடக்கும் போது,எதிரில் வந்த இரு வட இந்தியப் பெண்கள் மெதுவாகப் புன்னகைத்துப் போனார்கள். அய்யாவுக்கு சந்தேசம் தாங்கவில்லை. நம்மளப் பார்த்துச் சிரிக்கற அளவுக்கு ஹீரோ ஆகிட்டேம்ன்னு மனசில கொண்டாட்டம். இன்னும் நடந்து வரும் போது மற்ற சிலரும் மெல்லியதாகச் சிரித்துப் போனார்கள். "ஆகா,புது பேண்ட்,புது சொக்கா சுதாகரு,கலக்குற சுதாகருன்னு" நினைத்துக் கொண்டேன். இப்படி நடந்து போய் அலுவலகத்தில் ஸ்ரீராம்மின் செகட்டரி வேறு என்னைப் பார்த்து சிரித்தார்கள். நானும் பதிலுக்கு சிரித்து விட்டு, உள்ளே சென்றேன். என்னாடா இது என்னிக்கும் சிரிக்காத ஹெட் வெயிட் பார்ட்டிங்க எல்லாம் சிரிக்குதுன்னு,அவ்வளே டக்கர் ஆயிட்டமான்னு ஒரு பீலிங்கு. பின்னர் என் இருக்கைக்கு சென்று பீல்டு வெர்க் அசைன் செய்து விட்டு, பாஸிடம் ரிப்போட்டிங் முடித்து விட்டு, டீ சாப்பிடுவதற்க்காக, பாண்ட் ரிக்குள் போனேன். அப்போது என் பாஸுக்கும்,எனக்கும் கிளரிக்கல் வெர்க் பண்ணும் பெண் வந்தார். நானும் அவரும் டீ சாப்பிட்டுக் கொண்டு கிளையண்ட்ஸ் பத்திப் பேசிக்கொண்டு இருந்தேம். அவரும் சிரித்துக் கொண்டே கேட்டார். "சுதா நான் ஒன்னு சொன்னா தப்பா எடுத்துக்க மாட்டியே" என்றார். நான் சொல்லுங்க, என்ன விஷயம்? என்றேன்.

இன்னிக்கு நல்லா டீசண்டா, அழகா டிரஸ் பண்ணியிருக்கிங்க என்றார். நான் உச்சிக் குளிர்ந்து "ஆகா, நம்மளும் ஹீரோவாயிட்டமடா அப்புன்னு" என்று நினைத்துக் கொண்டேன். "ஆமாங்க, இன்னிக்கு எல்லா பொண்ணுகளும் என்னைத்தான் பார்த்தார்கள். சிரித்தார்கள்" என்றேன்.சந்தேசமாக, இதற்குள் அவர் டீயைக் குடித்து முடித்து இருந்தார்கள்.அவர்கள் கவனிக்கவில்லை என்று நினைத்து, இன்னேரு தபா சொன்னேன். " இன்னிக்கு பொண்ணுக எல்லாம் அய்யா மேலதான் லுக்கே. எல்லாரும் சிலைட்டா சிரித்துக் கொண்டு வேற போனார்கள். என்றேன். அவரும் ஒரு தரம் சிரித்து விட்டு, பின்னர் அருகில் வந்து, " ஏன் சிரிக்க மாட்டாளுக, முதல்ல ஜிப்பைப் போடுங்க, என்று கூறிவிட்டு அவரசமாகத் திரும்பிப் பார்க்காமல் சென்று விட்டார். நானும் உடனே திரும்பி ஜிப்பைப் போட்டேன். "அட ஆத்தி இதுக்குத்தான் எல்லாம் லுக் விட்டாங்களா லுக்கு, கன்றாவி நம்மளை வைச்சு ஒரு பொருட்காட்சியே நடத்திட்டாங்க போல. என்று நினைத்துக் கொண்டேன். இந்த அனுபவம் இப்போதும் என்னை விட்டுப் போகவில்லை. இப்பக் கூட எதாவது ஒரு பொண்ணு ரோட்டில பார்த்துச் சிரிச்சா, உடனே நைசா ஜிப்பைத் தொட்டுப் பார்த்துக் கொள்வேன். இப்படித்தான் நான் ஹீரோ கணக்கா வேஷம் போட்டு,கட்ச்சியில ஜீரோ கணக்கா ஊரு எல்லாம் நாறிப் போச்சு. மக்கா யாரு என்ன சொன்னாலும் சர்தான், நான் ஹீரோதான் தெரியுதுங்களா. நன்றி.

டிஸ்கி: இது எல்லாம் நடந்து முடிந்தவுடன்,என் நண்பன் வந்தான், என்னடா பீல்டுக்கு போலாம்மா? என்றான். நான் இதே போலாம் என்றேன். குனிந்து பார்த்தவன் என்னடா ஜிப்பை போட்டுட்டியா? என்றான். நான் உனக்குத் தெரியுமா? என்றேன். நான் கலையில் நீ வந்தவுடன் கவனித்து விட்டேன். ஏண்டா சொல்ல வேண்டியதுதானே என்று கேட்டவனிடம் கூலாக,எனக்கு என்ன தெரியும், நீ காத்து வாங்குறேன்னு நினைத்தேன். இருந்த ஆத்திரத்தில் எட்டி அவன் கொரல்வளையைப் பிடித்தேன். அவன் விடுறா, பக்கத்துல உன் பாஸ் இருந்தார்,அதுனால அப்புறம் சொல்லலாம் என்று விட்டு விட்டேன் என்றான். இது சக நண்பர்களிடம் பரவி,பின்னர் ஒருவாரம் என்னை நல்லா ஓட்டினார்கள்.

35 comments:

 1. பித்தனாரே!

  நான் அப்பவே சொன்னேன்!

  தல அஜித் ஹீரோ பதவியிலேருந்து விலகுவதாக ஏஜென்சி செய்திகள் தெரிவிக்கின்றன. உங்கள் ஒருவரால் தான் அவரின் விலகலால் எற்படும் வெற்றிடத்தை நிரப்ப முடியும்.

  தல அஜித் கணக்காத்தான் இருக்கேள்!

  கேபிள் சங்கர் கிட்ட சொல்லி வச்சுருக்கேன்!

  அவரும் மைண்டுல வச்சுக்கிறேன்னு சொல்லி இருக்கார்!

  கவலை வேண்டாம்!~
  :)

  ReplyDelete
 2. சமுதாயத்திலே பொறுப்புணர்ச்சி ரொம்பவே குறைஞ்சு போயிருச்சு! ஒருத்தர் ஜிப் போடாம போனா, இத்தனை லட்சம் பேரிலே ஒருத்தராவது சொல்லி மானத்தைக் காப்பாத்துறாங்கள....இப்படித்தான் ஒரு தடவை....(எதுக்கு, வேண்டாமுங்க, பழசையெல்லாம் கிளறிக்கிட்டு....! :-)))) )

  ReplyDelete
 3. அய்யோ..அய்யோ... நீங்க ஹீரோதான்...ஒத்துக்கிட்டோம்..

  ReplyDelete
 4. சரியான காமடி, கவுண்டமணி ரேஞ்சில்.

  ReplyDelete
 5. இப்படித்தான் நான் ஹீரோ கணக்கா வேஷம் போட்டு,கட்ச்சியில ஜீரோ கணக்கா ஊரு எல்லாம் நாறிப் போச்சு.
  ///

  உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு

  ReplyDelete
 6. ஜெயலலிதாMarch 26, 2010 at 1:41 PM

  இந்த போட்டோவை எடுத்து , என்ன ஒரு 20 வருஷம் இருக்குமா? Mr.பித்தன்

  ReplyDelete
 7. அதுவும் ,காலேஜ் ரோட்ல.........

  ReplyDelete
 8. உங்க பயோகிராஃபி எப்பத்தான் முடியும்!

  ReplyDelete
 9. சார்.... கலக்கல்.... அது எப்படி சார் ஒழுங்கா போனா மட்டும் பொண்ணுங்க பாக்கமாட்டேங்குதுங்க...ஜிப்பு போடாம போனா கரக்டா கண்டுபிடிச்சு சிரிக்குறாளுங்க.... எப்படி சார் அது----?

  ReplyDelete
 10. வாசித்தோம் அண்ணா....

  ReplyDelete
 11. ஹா..ஹா..ஹா.. நீங்க ஜீரோ ச்சீ.. ஹீரோ தான் ஒப்புக் கொள்கிறேன் அண்ணா..
  சென்னை போயிருந்தேன் அண்ணா.. அதான் யார் பதிவையும் படிக்கச் முடியல.. இப்போ எல்லாத்தையும் படிச்சிட்டேன்..

  ReplyDelete
 12. தல உங்க பேரு சுதாகரா ஏன் கேக்குறேன்னா என்னோட செல்ல பேரும் அது தான் ஆசையாக என் அம்மா மட்டும் தான் என்னை இது போல் கூப்பிடுவார்கள். ஆனால் இப்பொழுது கூப்பிட அவர்கள் இல்லை இந்த பேரை பார்த்தவுடன் எனக்கு அந்த ஞாபகம் வந்துவிட்டது. வருத்ததுடன்

  ReplyDelete
 13. //நான் தினமும், என் வெயிட்டை வீட வெயிட்டான ஒரு சூவை மாட்டிக் கொண்டு, சோளக்கொல்ல பொம்மைக்கு டிரஸ் போட்டாப்புல ரெடிமேடு சர்ட் பேண்டையும் மாட்டி,கழுத்துல நாய்ச்சுருக்கையும் மாட்டிக்கிட்டு, கையில ஒரு புது வி.ஜ.பி ஆல்பா சூட்கேஸை எடுத்துக் கொண்டு போவேன்....//

  //ஹீரோ கணக்காய்(நினைப்புத்தான்) காலை அலுவலகம் அவரசரமாகப் புறப்பட்டேன்......///

  இவ்வரிகள் யதார்த்தமான அக்கால இளைஞனின் அபிலாசையை வெளிப்படுத்தும் வரிகள்...

  இந்த இடுகை நல்லா இருக்கு...!

  நட்புடன்...
  காஞ்சி முரளி......

  ReplyDelete
 14. அண்ணா.. அவ்வ்வ்வ்..
  அடுத்தவங்க துன்பத்தில சிரிக்க கூடாதுங்கிற என் பாளிசியையும் மறந்து சிர்ச்சுட்டேன்.. சாரிண்ணா..
  ஆவ்வ்வ்வவ்..

  ReplyDelete
 15. அது பாலிசி..

  ReplyDelete
 16. //அதற்குள் என் அண்ணாவின் நண்பன் மகேஷ் என்பவர்,என் கல்யாணத்திற்கு வாங்கிய டை சும்மாதான இருக்கு, நான் தருகின்றேன் என்று கூறித் தந்தார்.//

  சார் , லைட்டா இல்ல, இல்ல ரொம்ப ஸ்ட்றாங்கவே பேட் ஸ்மெல் வருது(போடோ பாத்தாலே ஸ்மெல் வருதே?) , அந்த டைய தூக்கி போட்டு இப்பவாவது புதுசா வேற வாங்குங்க ,

  ReplyDelete
 17. சிரிப்பு தாங்க‌ முடிய‌லை...

  ReplyDelete
 18. நல்லா இருக்குங்கோ. நானும் பேண்டு போடலாமான்னு நெனக்கிறேனுங்க. பேண்ட் போட சொல்லித்தர்ரதுக்கு ஏதாச்சும் பள்ளிக்கூடம் இருக்குதுங்களா?

  அப்புறமுங்க ஒரு சந்தேகமுங்க. அதென்னமோ சீப்பு சீப்புன்னு எளுதிருந்தீங்களே, அது எதுக்குங்க, தலெயச்சீவறதுக்குங்களா?

  ReplyDelete
 19. உங்களைப் பார்த்தா பாவமா இருக்கு. ;)

  ReplyDelete
 20. அவ்வ்வ்வவ்

  ReplyDelete
 21. திவாகர்சார்.
  மைக் மேடையெல்லாம் ரெடி. அப்படியே வந்து இங்கேயும் பிரசங்கம் நானும் ஹீரோதான் நானும் ஹீரோதான்னு செய்யலாம். இதைகூடிக் கேட்பவர்களுக்கும் கொக்கு பிரியாணி இலவசம்..

  ReplyDelete
 22. கமெண்ஸ் போடுவதால் வருத்தம் வருவதால்.. படித்துவிட்டு சென்றுவிடுவேன்..
  ஆனால்.. இரண்டு நாளாக.. நீங்கள் பதிவு பக்கம் வராமலிருப்பதால்தான் இந்த கமென்ஸ்..


  என்னாச்சு சார்..கோவிச்சுட்டீங்களா?..

  இல்ல உடம்பு சரியில்ல்லையா.. ?

  ReplyDelete
 23. // கேபிள் சங்கர் கிட்ட சொல்லி வச்சுருக்கேன்!

  அவரும் மைண்டுல வச்சுக்கிறேன்னு சொல்லி இருக்கார்! //
  அத்திவெட்டியாரே இதுதான வேணாங்கிறது. அவருக்கு நான் கடவுள் படத்துல வர்ற மாதிரி பத்து உருப்படி வேணும் சொல்றார். நீங்க என்னை கோத்து விடலாமுன்னு பார்க்கின்றீர்கள்.
  நன்றி சேட்டைக்காரன், யூ டூ
  நன்றி எல்.கே.
  நன்றி சித்ரா, ஏன் லேட், பெஞ்சு மேல ஏறி நில்லுங்க, ஹா ஹா,
  நன்றி கண்ணகி, அது!!!!!!
  நன்றி ஜலில்லா, ஆகா இப்பத்தான் கண்ணகி ஹீரோன்னாங்க, நீங்க அதுக்குள்ள காமெடியன் ஆக்கிட்டிங்களே.
  நன்றி சாருஸ்ரீராஜ்,
  நன்றி பிரியமுடன் பிரபு,
  நன்றி சைவகொத்துபுரோட்டா,
  நன்றி ஜெயலலிதான்னு சொல்ல மாட்டேன், உங்க மூனு பேருல யாரு இந்தப் பெயரில் வந்தது?

  நன்றி ஜெய்லானி,
  நன்றி வால்பையன், இன்னும் நிறைய இருக்கு சொல்ல,

  // சார்.... கலக்கல்.... அது எப்படி சார் ஒழுங்கா போனா மட்டும் பொண்ணுங்க பாக்கமாட்டேங்குதுங்க...ஜிப்பு போடாம போனா கரக்டா கண்டுபிடிச்சு சிரிக்குறாளுங்க.... எப்படி சார் அது----? //
  நாஞ்சிலாரே, இதுக்கு ஒரு தீசீஸ்ஸே இருக்கு, இதை வைத்து பதிவு கூட போடலாம், ஆனா போட்டா என் தங்கச்சிக கொன்னு போடுவாங்க.
  ஒரு குளு மட்டும் கொடுக்கின்றேன், முடிஞ்சா புரிஞ்சுக்கேங்க--- C.W
  நன்றி கவிதாயினி தமிழரசி,
  நன்றி திவ்யா, ஆகா பட்டணம் போயி வந்தியா? மெட்ராஸ் மெட்ரோ குழாய்த்தண்ணீர் மட்டும் குடிச்சிராதே.
  நன்றி ஆடுமாடு,
  நன்றி சசிகுமார், அம்மாவின் மறைவு வருத்தம்தான். மனைவி வந்தால் சரியாகிவிடும். அவர்களை மட்டும் உங்க அம்மா மாதிரி கூப்பிடஸ் சொல்லுங்கள். அவங்கதானே இரண்டாம் தாய்.
  நன்றி காஞ்சி முரளி, நீங்கள் பதிவு எதுவும் இடுவது இல்லையா?. படிப்பது மட்டும்தானா?. என்னால் உங்களின் பிளாக்கை அடையாளம் காண இயலவில்லை.
  நீங்க சின்னக் காஞ்சிபுரமா? பெரிய காஞ்சியா?. சின்னக் காஞ்சி கோவில் அருகில் எனது உறவினர்கள் உள்ளார்கள்.
  நன்றி இராதாகிருஷ்னன் அய்யா,
  நன்றி சுசி, இது துன்பம் இல்லை, தற்செயலால் கிடைத்த பாடம். அவ்வளவுதான். கவனமாக இருக்க கற்றுக் கொள்ள வேண்டும்.
  நன்றி மங்குனி, இப்ப புதுசா எங்கிட்ட நாலு டை இருக்கு, ஆனா கட்டுவது இல்லை.
  நன்றி நாடோடி,
  நன்றி அநன்யா மகாதேவன்,
  நன்றி அம்முமது,
  நன்றி மசக்கவுண்டரே, சீப்பு இல்லைங்க ஜிப்பு, முக்கியமான பொருள் எல்லாம் போட்டு மூடிவைக்கிறது.
  // உங்களைப் பார்த்தா பாவமா இருக்கு. ;) //
  நன்றி விக்கினேஸ்வரி, அய்யா பதிவர்களே எல்லாரும் நல்லா பார்த்துக்குங்க எனக்கு வருத்தப் படக்கூட ஒரு சிஸ்டர் இருக்காங்க.
  நன்றி இராஜன்,
  நன்றி மலிக்கா, என் பெயர் திவாகர் இல்லை சுதாகர். புதுப் பெயரை வைத்தமைக்கும் நன்றி.
  நன்றி பட்டாபட்டி, எனக்கு வைரல் பீவர், அதான் நாலு நாள் ஆப்செண்ட்.
  பின்னூட்டமும், ஓட்டுக்களும் இட்ட அனைவருக்கும் எனது நன்றிகள்.

  ReplyDelete
 24. //நன்றி மலிக்கா, என் பெயர் திவாகர் இல்லை சுதாகர். புதுப் பெயரை வைத்தமைக்கும் நன்றி//

  நீங்க உஷாரா இருக்கீகலான்னு ஒரு செக்கிங்தான்.

  நல்லவே உஷாரா இருக்கீங்க அப்ப நீங்க ஹீரோதான்..
  ஜலிக்கா.[இதெல்லாம் நீங்க கண்டுக்கப்புடாது ஓகே]

  ReplyDelete
 25. பதிவைப் படித்து கருத்து போடலைனா
  உங்க கனவுல பூதம் வரும்,,, ஆமா சொல்லிட்டேன்
  த்லைவரே ரொம்ப சின்ன பிள்ளைத்தனமால இருக்கு.

  ReplyDelete
 26. பார்த்தீங்களா பதிவுக்கு கருத்து சொல்லாமல், இதுக்கு கருத்து போடறீங்க. இதுக்குத்தான் இப்படி ஒரு காமெடியா, ஒரு அட்ராக்சனா ஒரு கேப்சனை போட்டேன். இது ஜெய்லானியைப் பார்த்து காப்பி அடித்து போட்டேன்.
  நான் ஆவது கனவுல பூதம் வரும்ன்னு சொன்னேன். அவரு நீங்க தூங்கும் போது கண்ணுத் தெரியாதுன்னு பூச்சாண்டி போட்டுருக்கார். தங்களின் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி ஆசியா ஓமர்.

  ReplyDelete
 27. //ஏண்டா சொல்ல வேண்டியதுதானே என்று கேட்டவனிடம் கூலாக,எனக்கு என்ன தெரியும், நீ காத்து வாங்குறேன்னு நினைத்தேன். இருந்த ஆத்திரத்தில் எட்டி அவன் கொரல்வளையைப் பிடித்தேன்// ROFTL...:) avaru friend illai anukuula sathru!!!...:)

  ReplyDelete

என்னை வளர்க்க, கருத்துரையிடுக...

பதிவைப் படித்து கருத்து போடலைனா
உங்க கனவுல பூதம் வரும்,,, ஆமா சொல்லிட்டேன்.