Monday, March 15, 2010

எனக்குப் புச்ச பெண்கள்

என்னங்க நம்மளை டிபன் சாப்புடுறதுக்கு ஒபாமா கூப்புட்டாக, புடின் கூப்புட்டாக, சார்க்கோஸி கூப்புட்டாக, ஆனா நான் ரொம்ப பிஸிங்களா,அதுனால நம்மாள போக முடியல்லைங்க. ஆனாலும் இந்த திவ்யா பொண்ணும், மலிக்காவும் நம்மள தொடர் எழுதக் கூப்ட்டாக, தங்கைகள் கேட்டு எழுதாம இருந்தா நல்லா இருக்காது. அதுவும் இல்லாம மலிக்கா வேற ஸ்பெசல் ஆபர்ன்னு(லஞ்சம்) தொடர் எழுதுனா, அரபு பிரியானி தரன்னு சொன்னாங்க. அதுனால எனக்குப் பிடித்த பெண்கள் 10 பேரை சொல்றங்க. பெண்ணுன்னா பேயிக்கும் புடிக்கும்மாம், நமக்குப் புடிக்காம இருக்குமுங்களா?. நிறையப் பெண்ணுகளை நமக்குப் புடிக்குங்க, ஆனா அந்தப் பெண்களுக்குத்தான் நம்மளைப் புடிக்காதுங்க. என்ன பண்ண?நம்ம மூஞ்சி அப்படி.. யாராவது காலை 8.30 ல் இருந்து மாலை 5.30 வரை அலுவலகத்தில் ஒரு ஆணி கூடப் புடுங்காம இருப்பது எப்படின்னு பதிவு போடச் சொன்னா, நான் ஒரு முப்பது பதிவு போடுவேன். ஆனா சொல்ல மாட்டேங்கிறாங்க. என்ன பண்ண, நானும் அபிஸில ஆணி புடுங்கறேன், எதாது ஆணி காட்டுங்கையான்னு கெஞ்சறேன். ஆனா ஆணி புடுங்கினா கையை உடைப்போம். நீ வேடிக்கை பாருப் போதும் என்று சொல்லி, சம்பளம் வேற தராங்கையா. என்னத்தப் பண்ண. திங்க கிழமை காலங்கார்த்தால ஆபிஸில பதிவு போடுற வெட்டி ஆப்பிஸர் நானாத்தான் இருக்கும். ஒருவேளை பதிவு போட சம்பளம் தராங்க போலும். சரி பதிவுக்குப் போவேம்.

இரங்க நாயகி டீச்சர் : என் ஆரம்பப் பள்ளியின் ஒன்னாம் வகுப்பு டீச்சர். எப்போதும் சிரிக்கும் மாகாலட்சுமி படம் இவங்களைப் பார்த்துதான் போட்டுருப்பாங்க போல. சிரித்த முகம். எனக்கு நினைவு தெரிந்த நாள் வரை, கோபப்படும் முகத்தை நான் பார்த்தது இல்லை. தகர சிலேட்டு, மற்றும் கல் சிலேட்டில் மாவுக்குச்சிப் பல்பத்தில் அ.ஆ.இ.ஈ ன்னு கைபிடித்துக் கற்றுக் கொடுத்தவர். அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்ன்னு, முன்னரே அறிவித்த கடவுள் அவர். (படம் இல்லைங்க, இவுங்க எனக்கு தமிழ் நல்லாத்தான் சொல்லிக் கொடுத்தாங்க, நம்ம மண்டையில் தான் ஏறவில்லை.அதுனால நான் பண்ணும் தப்புகளுக்கு இவங்களைத் திட்டாதிங்க)அன்னை தெரஸா : நான் இவங்களைப் பத்தி உங்களுக்கு புச்சா ஒன்னும் சொல்லவேண்டியதில்லை. உங்களுக்கே தெரியும். நம்ம ஊட்டுப் பல்லி,கரப்பான்பூச்சிக்கெல்லாம், அருவெறுப்பும், பயமும் கொண்டு ஓடும் பெண்களுக்கு மத்தியில் தொழு நோயாளிகள், பிச்சைக்காரர்கள். அனாதைக் குழந்தைகளை அரவனைத்துச் சென்ற கடவுள் இவர்.டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி: பொட்டுக் கட்டும் தேவதாசிக்குலத்தில் பிறந்து தன் சுயமுயற்சியால் டாக்டர் பட்டமும் பெற்று, தமிழகத்தின் முதல் பெண் அமைச்சாராக ஆகியவர். தேவதாசி முறை ஒழிப்பு, பெண்கள் பிரசவம், கலப்புத் திருமணம்,விதவைகள் மணம் என்று புரட்சி செய்தவர் இவர்.
வாலேண்டினா தெரஸ்கோவா : இரஷ்யாவில் சாதாரனக் குடும்பத்தில் பிறந்து, முதன் முதலில் விண்வெளிக்கு சென்ற சாதனையாளர்.பூமியின் சுற்றுவட்டப் பாதையில் 1963 ல் ஜீன் 6ஆம் திகதி பறந்தவர். (நான் பொறக்கவேயில்லிங்க).
டாங்கோ திபு,பச்சோந்திரி பால் : இவர்கள் இருவரும் எவரெஸ்ட் மலைச்சிகரத்தில் முதன் முதலில் ஏறியவர்கள். கடும் குளிர்,உறைபனி எதிலும் பெண்கள் சளைத்தவர்கள் அல்ல என நிருபித்தவர்கள். பச்சோந்திரி பால் ஏறியவர். டாங்கோ கைடுங்க.
(ஹில்லாரி,டென்சிங்க் மாதிரி).

டாக்டர் கீதாஹரிப்பிரியா: நிறைய பெண்களின் வயிற்றில் பால் மட்டும் அல்ல, குழந்தைகளையும் வார்த்தவர். சிறந்த கைனக்காலிஸ்ட். இவரிடம் மருத்துவம் பார்த்த கனடா,யு.எஸ்.ஏ, பிரான்ஸ் மற்றும் இலங்கைத் தமிழ் பெண்கள் அதிகம். மலடி என்னும் கொடுமையான சொல்லில் (சொல்வறங்க வாயில் ஈயத்தைக் காச்சி ஊத்தனும்)இருந்து எண்ணற்றவர்களைக் காப்பாத்தியவர். எங்க அண்ணா,அண்ணிக்குப் பதினெட்டு வருடங்களாக குழந்தை இல்லாமல் இருந்த குறையப் போக்கியவர். சிரித்த முகமும், கொஞ்சம் கண்டிப்பும் காட்டுவார். இவர் மருத்துவமனையில் பணி புரியும் இன்னோரு டாக்டர் சுதா அவர்கள் எங்கள் மன்னி சுதாவைக் கவனித்துக் கொண்டார். அங்கு அனைவருமே இன்முகத்துடனும், சினேக மனப்பான்மையுடனும் பழகுவார்கள். சென்னை சேத்துப்பட்டில் இருக்கின்றது மருத்துவமனை.பி.சுசிலா : எனக்கு தெரிந்து நிறைய நாள் தூக்கத்தில் இருந்து என்னை எழுப்பியவர் இவர்தான். அதிகாலை ஜந்து மணிக்கெல்லாம் எங்க வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் சர்ச்சில், "அரோக்கிய மாதாவைப் பாருங்களேன்னு" பாட ஆரம்பிச்சுருவார். இவர் கிராமப் போன் ரெகார்டுதான் எங்களுக்கு அலாரம் டைபீஸ்ங்க. "ஆலய மணியின் ஓசையை நான் கேட்டேன்னு" பாட ஆரம்பிச்சாருன்னா எங்களுக்குத் தூக்கம் போயிடும். குயிலிசைக்குச் சொந்தக்காரர், "அன்பே வா,அருகே வான்னு" சொல்லி, "நினைக்கத் தெரிந்த மனமேன்னு" அழுக வைச்சாருங்க.
டாக்டர் ஜெ.ஜெயலலிதா : நம் தமிழகத்தின் சிறந்த பெண் முதல் அமைச்சர். ரொம்ப தைரியமான பெண்மணி. ஆண்கள் நிறைந்த சட்டசபையில் கேடு கெட்டதனமாக, பாவாடை நாடாவை அவித்துப் பார் என்று ஒரு ஜம்பது வயது பெண்ணிடம் சொன்ன கயவானிகள் அவையில் புகுந்து புறப்பட்டவர். இவர் ஜெயித்த நாளில் நான் அடைந்த சந்தோசத்திற்கு அளவே இல்லை. ஆனா ஒரு ஆட்சி நடத்துனாங்க பாருங்க. அதைப் போல கேவலம் எதுவும் இல்லை சொல்லும் அளவுக்கு இருந்துவிட்டது. இனிமே எந்த அரசியல்வாதியையும் நம்பாதேன்னு சொல்லாம சொல்லிக் கொடுத்தவர். நானே பாதிக்கப் பட்டேன்.(ஆனா அதுவும் நல்லதுக்குத்தான், இல்லைன்னா நான் பதிவர் ஆகியிருக்க மாட்டேன்). சர்ச் பார்க் பெண்ணு,நிறைய அறிவாளின்னு,சிறந்த நிர்வாகத் திறமை கொண்டவர்னு ரொம்ப எதிர்பார்த்தேன்,அத்தனையும் கவித்துவிட்டார். என்ன இருந்தாலும் மகத்தில் பிறந்த இந்த பெண் சிங்கத்தை எனக்கு ரொம்ப பிடிக்கும். எதிர்காலத்தில் ஆவது அம்மா ஒரு நல்ல ஆட்சி கொடுப்பாங்கன்னு நம்புகின்றேன்.


சமந்தா பாக்ஸ் : என்னமே தெரியல்லைங்க, இவங்களை எனக்கு ரொம்பாஆஆஅ புடிக்குமுங்க. நானு காலேஜ் படிக்கும் போது இருந்து இந்த அம்மினியை ரொம்ப புடிக்குமுங்க. நான் படிக்கறப்ப அதிசயமா ஒருத்தன் டொபோனியர் புஸ்த்தகம் கொண்டு வந்தான். அப்பத்தான் பசங்க எல்லாம் மரத்தடியில் கூடி ஆர்வமா பார்த்துட்டு இருந்தாங்க. நானும் எட்டிப் பார்த்தேன். அம்புட்டுத்தானுங்க அய்யா அங்கனயே பிளாட்டுங்க. சே.சே என்ன கண்கள், என்ன உதடு, என்ன அட்ராட்டிவ் பேஸ்ன்னு நான் புகழ, என்னைய சுத்தி இருந்த நண்பர்கள் எல்லாம் என்னை உதைக்காத குறையா பார்த்தானுக. டேய் என்னத்தப் பார்க்கின்றேம், நீ என்னடா பார்க்கின்றாய்ன்னு ஓட்ட ஆரம்பிச்சுட்டாங்க. நாம் என்ன இரசிக்கின்றமே அதைதாங்க சொல்ல முடியும். இங்கன அந்தப் படத்தைப் போட்டா நம்ம தங்கைகள் எல்லாம் உதைக்க வந்து விடுவார்கள் என்பதால் இந்தப் படத்தப் போட்டேங்க., எனக்குப் பிடித்த படங்களில் இதுவும் ஒன்னு. அப்பா எம்மாம் பெரிய........ பாடகின்னு சொல்ல வந்தேங்க.சில்க் ஸ்மிதா : நான் ஸ்மிதா இரசிகன். எப்படி இரசிகன் ஆனேன்னு தனியா ஒரு சுவையான தனிப்பதிவு ஒன்னு போடுகின்றேன்.
கவர்ச்சியான முகம், பவர்புல் கண்கள், அழகான பெண். என்ன வாழ்க்கைதான் சரியாக அமையவில்லை. இவங்க சாப்பிட்ட ஆப்பிளை ஏலத்தில் எடுத்தவர்கள் ஏராளம். ஒல்லிக்குச்சி உடம்புக்காரி,ஒய்யார டான்சுக்காரி, நல்ல மனசுக்காரி, ரொம்பத் தங்கமான, இரக்க மனதுடையவர். நல்லவர். என்னமோ தெரியல்லை இவரைப் பார்க்கும் போது எல்லாம் நம்ம மனசு ஜிங்குச்சாம் ஜிங்குச்சாம் போடுவது உண்டு(இப்ப இல்லை).கண்களில் காந்தமும் வசியமும் வைச்சுருப்பாங்களோ. நல்ல கண்கள்.கூடிய சீக்கிரம் ஒருகாலத்தில் நம்ம கனவுக்கன்னி சில்க்ஸ்மிதாவுக்கு ஒரு தனிப்பதிவு போடுவேனுங்க.

மொத்தத்துல கண்கள் அழகாய் இருக்கும் பெண்கள் அனைவரையும் நமக்கு ரொம்பப் பிடிக்கும்.

சரிங்க,ரொம்ப சொல்லிட்டேன்(ஜொள்ளிட்டேன்). என்ன திவ்யா இப்ப திருப்தியா?. மல்லிக்காவுக்கும் சந்தேசமுன்னு நினைக்கின்றேன். போன பதின்மம் தொடருல கோத்து விட்ட ஆளுக கூட ஸ்ரீராம் அப்புறம் தேனம்மையை இத்தொடரை எழுதுமாறு கேட்டுக் கொ(ல்)ள்கின்றேன். அப்புறம் பிரியானி ஆறிப்போயிடும்ன்னு மலிக்கா கோவிச்சுக்குவாங்க. வரட்டுங்களா. நன்றி.

29 comments:

 1. தல அந்த ஆணி புடுங்குற மேட்டர்ல என்னையும் சேர்த்துக்கங்க, நானும் அப்படிதான் இருக்கிறேன். நல்ல பதிவு நண்பரே. தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. ///அப்பா எம்மாம் பெரிய........ பாடகின்னு சொல்ல வந்தேங்க.///

  மடோனாவை புகழும் போதே நினைச்சேன். ஹி..ஹி..

  ReplyDelete
 3. அட ஆமாங்க, நீங்க உண்மையிலேயே ரொம்ப ஆனி பிடிங்கறிங்க. நான் பதிவு போட்டு ப்ரூப் பார்ப்பதுக்குள்ள பின்னூட்டம் போட்டு விட்டீர்கள். மிக்க நன்றி.

  ReplyDelete
 4. கலக்கலா எழுதியிருக்கீங்க போங்க! :-))

  ReplyDelete
 5. அட மடானேனாவும்,சமந்தா பாக்ஸிம் (பெண்கள்) நம் கண்கள் ஆயிற்றே.

  ReplyDelete
 6. உங்களுக்கு பிடித்த பெண்கள் தொடரில், சைக்கிள் கேப்ல, உங்களை ஜொள்ள வைத்த பெண்களையும் சொல்லி ஆட்டோ ஓட்டி இருக்கீங்க. .........
  அடுத்து சிலுக்கு பத்திய பதிவு எழுதுவதுதான், ஆபீஸ்ல் வேலையா? நடத்துங்க, அண்ணாச்சி!

  பி.கு. கொஞ்சம் எழுத்து பிழை இல்லாமல் சரி பாருங்க அண்ணாச்சி.

  ReplyDelete
 7. //ஜெய்லானி said...
  ///அப்பா எம்மாம் பெரிய........ பாடகின்னு சொல்ல வந்தேங்க.///

  மடோனாவை புகழும் போதே நினைச்சேன். ஹி..ஹி..//

  ரிப்பீபீபீபீபீபீபீபீபீபீபீ......................ட்டு

  ReplyDelete
 8. சிலுக்க சொன்னியே தல...அதுல நிக்குதய்யா உன் குசும்பு

  ReplyDelete
 9. அட....அட.....அந்த கடைசி ரெண்டுல மீண்டும் உங்க நேர்மையை நிருபிச்சிடீங்க நண்பரே,
  சிலர் எனக்கு புதிய அறிமுகம்.

  ReplyDelete
 10. என்ன பிரியாணியா சொல்லவேயில்ல அப்பமே சொல்லியிருந்தா ஆக்கச்சொல்லியிருப்போமுல்ல
  சரி சரி ஒருசட்டிபோதுமா இல்ல இங்கவந்துட்டுப்போரவுகளுக்கெல்லாம் வேணுமா?

  சுசிலாம்மா எனக்கும் பிடிக்கும்
  எல்லாரும் சொன்னதையே சொல்லாமா வித்தியாசமா சொல்லியிருக்கீங்க

  அதுசரி அங்கே என்ன பிரியாணியா சொல்லவேயில்ல அப்பமே சொல்லியிருந்தா ஆக்கச்சொல்லியிருப்போமுல்ல
  சரி சரி ஒருசட்டிபோதுமா இல்ல இங்கவந்துட்டுப்போரவுகளுக்கெல்லாம் வேணுமா?

  சுசிலாம்மா எனக்கும் பிடிக்கும்
  எல்லாரும் சொன்னதையே சொல்லாமா வித்தியாசமா சொல்லியிருக்கீங்க

  அதுசரி அங்கே நீங்க வரலை ஏஏஏஏஏஏஏஏஏஏன்?????????? ஏஏஏஏஏஏஏஏஏஏன்??????????

  ReplyDelete
 11. என் கனவுல பூதம் வருதோ இல்லியோ... உங்க இந்த பதிவுல சில வந்துருக்கு

  ReplyDelete
 12. சில்கா??????????????
  சரி ரைட்டு

  ReplyDelete
 13. முதல் முதலாய்...
  "பித்தனின் வாக்கு" க்குள்....
  (குரி கேட்க வந்துருக்கேன்...!)

  இதில்....
  //"இரங்க நாயகி டீச்சர் : என் ஆரம்பப் பள்ளியின் ஒன்னாம் வகுப்பு டீச்சர். எப்போதும் சிரிக்கும் மாகாலட்சுமி படம் இவங்களைப் பார்த்துதான் போட்டுருப்பாங்க போல. சிரித்த முகம். எனக்கு நினைவு தெரிந்த நாள் வரை, கோபப்படும் முகத்தை நான் பார்த்தது இல்லை. தகர சிலேட்டு, மற்றும் கல் சிலேட்டில் மாவுக்குச்சிப் பல்பத்தில் அ.ஆ.இ.ஈ ன்னு கைபிடித்துக் கற்றுக் கொடுத்தவர். அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்ன்னு, முன்னரே அறிவித்த கடவுள் அவர்.....//

  எந்த ஓர் மனிதனும் தாங்கள் சொன்ன இந்த "குரு"வின் பாதிப்பு இல்லாமல் இருக்கமாட்டார்கள்.. தங்களுக்கு எப்படி இரங்க நாயகி டீச்சரோ... அதுபோல எனக்கு தங்கள் வர்ணணையுடன் "பிரேமா" என்ற "அழகு தெய்வம்".... இன்றும் என் கண்களை மூடினால் அவர்களின் முகம் மின்னலாய் வந்து செல்லும்.... தங்களுக்கு பிடித்த 10 பேரில் முதலில் 'அ, ஆ'வைக் கற்றுத்தந்த "குரு"வை முன்னிறுத்தியிருப்பது தங்களின் "குருப் பக்தி"யை காட்டுகிறது..... மிகச் சரியான, சிறந்த தேர்வு.....

  அதேபோல்....
  "இசைக்குயில்" பி. சுசீலாவின் தேர்வும் தங்கள் வரிகளும்... சூப்பர்....

  அடுத்ததாய்....
  ஜெயலலிதாவைப்பற்றி தங்கள் வரியினை வழிமொழிகிறேன்....

  மொத்தமாய்... சொல்லப்போனால்...
  "எனக்கு புடிச்ச பெண்கள்"
  "சூபெர்ப் "...........

  அவசரமாய் படித்ததினால் அடுத்த இடுகைகளை பார்க்க முடியவில்லை...
  பார்த்து, படித்து, என் கருத்துரை எதிர்பாருங்கள்....

  வாழ்த்துக்கள்....

  நட்புடன்....
  காஞ்சி முரளி..........

  ReplyDelete
 14. கடைசி இரண்டு படமும் பார்த்துதான் நான் வோட்டுப் போட்டேன்னு நினைக்கக் கூடாது. ரெண்டு வோட்டும் போட்டதால சந்தேகம் வரக் கூடாது இல்லை? என்னை ஏற்கெனவே திவ்யா ஹரி தொடர்ல இழுத்துட்டாங்க. எழுதி வைச்சுட்டேன்..பிரசுரமாகத்தான் தாமதமாகுது...நன்றி.

  ReplyDelete
 15. ம்ம்.. நடத்துங்க நடத்துங்க :-) நல்ல தேர்வுகள்

  ReplyDelete
 16. அட நல்ல தேர்வா இருக்கேன்னு ஆச்சர்யப்பட்டுட்டே வந்தா, கடைசியில கவுத்திட்டீங்க. உண்மையில் சில்க் பரிதாபத்துக்குரியவர்!!

  ReplyDelete
 17. நல்ல தேர்வுகள்..அப்படியே கிடைத்த கேப்பில் நல்லா ஜொள்ளும் விட்டுருக்கிங்க...

  ReplyDelete
 18. எல்லா ரேஞ்சிலயும் ரசிக்கிறீங்க பாஸ்...

  பிரபாகர்.

  ReplyDelete
 19. அண்ணா.. இது நியாயமா.. இன்னமும் முதல் பதிவையே தொடர முடியல.. இதில இன்னொண்ணாஆ..

  ஜொள்ளு விட்டாலும் நல்லா எழுதி இருக்கீங்க அண்ணா.

  ReplyDelete
 20. //
  இரக்க மனதுடையவர். நல்லவர். என்னமோ தெரியல்லை இவரைப் பார்க்கும் போது எல்லாம் நம்ம மனசு ஜிங்குச்சாம் ஜிங்குச்சாம் போடுவது உண்டு(இப்ப இல்லை).
  //

  எப்படி சார்.. இப்படி ?..
  பதிவு சூப்பர் தான்.. ஆனா சின்ன டவுட்டு..
  இப்ப இல்லைனா .. சில்க் இல்லயா?.. இல்ல வேற ஏதாவதா?..
  கொஞ்சம், என்ற மரமண்டைக்கு புரியறமாறி சொல்லியிருக்கலாம்..

  சரி சார்.. கடைசி வரைக்கும் புச்ச 10 பேர சொல்லவேயில்லையே?..
  சீக்கிரம் சொல்லுங்க.. தோ.. அப்புறம் வாரேன்...

  ReplyDelete
 21. நன்றி சசிகுமார்,
  நன்றி ஜெய்லானி,
  நன்றி சேட்டைக்காரன்,
  நன்றி சித்ரா, முயற்சிக்கின்றேன்.
  நன்றி மங்குனி,
  நன்றி சதீஸ்குமார்,
  நன்றி சைவகொத்து புரோட்டா, நான் உண்மையை உரக்கச் சொல்வேன்னு கேப்சனில் சொல்லிவிட்டேன்.
  நன்றி டி.வி ஆர் அய்யா,
  நன்றி மலிக்கா, ஒரு சட்டி போதும், நான் சாப்பாட்டில் யாருக்கும் பங்கு தருவது இல்லை,
  நன்றி அண்ணாமலையான்,
  நன்றி பிரியமுடன் பிரபு,
  நன்றி காஞ்சி முரளி,தங்களின் முதல் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றிகள்.
  நன்றி ஸ்ரீராம், ரெண்டு ஓட்டுக்கு ரெண்டு நன்றி. நன்றி
  நன்றி உழவன்,
  நன்றி ஹிசைனம்மா, நான் விருப்புக்களை மறைக்காமல் சொன்னேன்.
  நன்றி மேனகாசத்தியா,
  நன்றி பிரபாகர், தங்களின் முதல் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றிகள்.
  நன்றி சுசி,
  நன்றி மெஹர், நான் தங்களின் பாரம்ங்களை பூர்த்தி செய்து அனுப்பிவிட்டேன்.
  நன்றி எங்க ஊரு அய்யா, உண்மையில் இத்தொடரை எழுதியவர்களில் தங்களின் பதிவுதான் மிகச் சிறந்த பதிவு.
  நன்றி பட்டாபட்டி, இப்ப சில்க் மட்டும் இல்லை, யாரு கிட்டையும் ஜொள் விடுவது இல்லை, ஆனா அழகை இரசிக்காமலும் இல்லை. வயது ஏற ஏற அனுபவம் என்ற படிப்பில் எதிர்பாலின மோகம் குறைந்து,அன்பும்,ஆதரவும்தான் வெளிப்படுகின்றது.
  பின்னூட்டமும்,ஓட்டுக்கள் இட்ட அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

  ReplyDelete
 22. எல்லாம் நல்ல சொல்லிபுட்டு கடைசியில தொப்பையானந்த ஜொள்ளு விட்டு லொல்லா எழுதிட்டாரே, நல்ல பகிர்வு தான் , நாஞ்சிலாந்தா கீழே பதிவ படிக்க வருபவருக்கு கொஞ்சம் கில்மா வேணுமே அதான் இப்படி போட்டீங்கலா?

  ReplyDelete
 23. அப்படி எல்லாம் இல்லிங்க ஜலில்லா, எனக்கு என்ன தோணுச்சே அதை அப்படியே பதிவிட்டேன். அவ்வளவுதான். எனக்கு கல்லூரி நாட்களில் சமந்தா பாக்ஸ் என்றால் பிடிக்கும். அதுதான் போட்டேன். வருகைக்கு நன்றி

  ReplyDelete
 24. உங்களின் இந்தப் பதிவிலிருந்து சில விவரங்கள் என் இந்தப் பதிவில் பயன்படுத்திக் கொண்டேன், ஆட்சேபிக்க மாட்டீர்கள் என்ற நம்பிக்கையில்!!

  ReplyDelete
 25. கடைசி ரெண்டு பேரைப் போட்டு நீங்க நேர்மையானவர்னு நிரூபிச்சுட்டீங்க பித்தன் நாந்தான் மலிக்காவையே எழுத அழைத்தேன் திவ்யா என்னை அழைத்து இருந்தார் என் ப்ளாக்கைப் பார்த்து கருத்து சொலுங்க பித்தன்

  ReplyDelete
 26. என்ன திவ்யா இப்ப திருப்தியா?..

  ஹா..ஹா..ஹா.. ரொம்ப திருப்தி அண்ணா..

  ReplyDelete
 27. ச‌ரி ச‌ரி ஒத்துக்கொள்கிறேன்.

  ReplyDelete

என்னை வளர்க்க, கருத்துரையிடுக...

பதிவைப் படித்து கருத்து போடலைனா
உங்க கனவுல பூதம் வரும்,,, ஆமா சொல்லிட்டேன்.