Tuesday, March 23, 2010

ஆம்லேட் நிறைவு


இப்படியாக எங்களின் மூன்று ஆண்டு படிப்பு முடிந்து, நான் பைனல் இயர் புராக்ஜட் ரிப்போட்டுகளை ரெடி பண்ணிக் கொண்டுருந்தேன். அதை தட்டச்சு செய்ய எங்கள் வீட்டின் அருகில் உள்ள தட்டச்சு நிலையத்திற்கு கொண்டு சென்றேன். அடித்து முடித்துக் கொடுக்கும் அன்று, நான் அதை வாங்கச் சென்ற போது, அங்கு தாஸ் மாஸ்டர் இருந்தார். அவர் என்னிடம் எனது புராஜட் பத்திக் கேட்டார். நான் விளக்கிச் சொன்னேன். அவரும் அதைப் படித்துப் பார்த்து விட்டு, மிகச் சிறப்பாய்ச் செய்து உள்ளாய், வைவாவில் நல்லா பதில் சொல் என்று சொல்லித் திருப்பிக் கொடுத்தார். கல்லூரி நாட்கள் எல்லாம் முடிந்து விட்டது. தேர்வுகள்தான் இனி பாக்கி. எங்கள் ஊரில் எங்களுக்குத் தெரிந்தவர் வீட்டுக்கு,நான் அடிக்கடி போவது வழக்கம். அவர்கள் வீட்டில் எங்க டீச்சர் அக்காவின் ஸ்டண்ட், ஒரு அக்கா இருப்பார். என்னைச் சிறு வயது முதல் அவர்களுக்குத் தெரியும். மிகவும் பாசமாக இருப்பார். அவர்கள் வீட்டில் இருந்த நால்வரில் ஒருவர் தவிர, அனைவரும் என் மீது அன்பாக இருப்பார்கள். நான் கல்லூரி படிக்கும் சமயம், அவர்கள் எம்காம் படித்துக் கொண்டு இருந்தார்கள். இவரிடம் தான் தனி வகுப்புக்குப் போவார்கள். நானும் இவரைப் பற்றியும், நாங்கள் அடிக்கும் கிண்டலைப் பற்றியும் கூறுவேன். அவர்கள் படிக்கும் மாஸ்டரை அவ்விதம்(ஆம்லேட்)கூறக் கூடாது என்று கண்டிப்பார்கள். இருந்தாலும் நான் இவரைப் பற்றிக் கிண்டல் அடிப்பதை நிறுத்தவில்லை. இப்படித்தான் போய்க் கொண்டு இருந்தது.

ஒரு நாள் நான் அவர்கள் வீட்டுக்குச் சென்றேன். அங்கு ஹாலில், அந்த அக்காவின் அப்பா, தாஸ் மாஸ்டருடன் பேசிக் கொண்டு இருந்தார். அப்ப நான் போனவுடன் என்னையும் அமரச் சொன்ன அவர், தாஸ் மாஸ்டரிடம். "இவரும் உங்க கல்லூரியில் தான் படிக்கின்றான். பையன் எப்படி?" எனச் சாதாரனமாகக் கேட்டார். எனக்கு பகீர் என்றது. "போச்சுடா! மொத்தமாக மானம் கப்பல் ஏறப் போகுது என்று நினைத்தேன். அந்த அக்காவும், மாட்டினாயா என்பது போல சிரித்தார்கள். அவர் கேட்ட விநாடியே சிறிதும் இடைவெளி இல்லாமல், தாஸ் மாஸ்டர் என்னைப் பற்றிக் கூறத் தொடங்கினார். அவர் சொன்னது. " இம்ம், பையன் ரொம்ப நல்ல பையன், நல்லாப் படிப்பான். நான் முதல் வருடத்தில் இவனைப் பற்றிப் பேசிய போது கூட, இவன் டிபார்ட்மெண்டில் இவனுக்கு மிகவும் நல்ல பெயர் இருந்தது. பாடங்களைப் புரிந்து கொண்டு சொந்த நடையில் எழுதுவான். யுனிவர்சிட்டி டாப்பர்ஸில் ஒருத்தனா வந்து, கல்லூரிக்கு நல்ல பெயர் எடுத்துக் கொடுப்பான் என்று எதிர்பார்க்கின்றார்கள். இவன் புராஜட்ஸ் கூடப் பார்த்தேன். நல்லா செய்து இருக்கான், என்று சொல்லிய அவர் என்னிடம் "வைவா எப்படிப் பண்ணினாய்?, என்ன ஸ்கோர்?" என்றார். நானும் 49 அவுட் ஆப் 50 என்றேன். " வெரிகுட் நல்லா படித்து நல்ல மார்க் எடுத்து, உங்கள் டிபார்ட்மெண்ட் பெயரைக் காப்பாற்று" என்றார். நானும் "சரி" என்று கூறித் தலையைக் குனிந்து கொண்டேன். அந்த அக்கா, "பார்த்தியா மாஸ்டரை" என்பது போல, நக்கலாக சிரித்தார்கள். நான் கடைவீதிக்குச் செல்வதாக விடை பெற்றுக் கொள்ள, மாஸ்டரும் தானும் அங்குதான் சொல்வதாகக் கூறி, என்னை வண்டியில் ஏற்றிக் கொண்டார். நாங்கள் இருவரும் கடைவீதி சென்று, சக்தி பேக்கரியில் எனக்கு டீயும், உருளைக்கிழங்கு போண்டாவும் வாங்கிக் கொடுத்தார்.


எனக்கு அவமானம் பிடிங்கித் தின்றது. இப்பக் கூட அவரிடம் மன்னிப்புக் கேக்காவிட்டால் நான் மனிதனே இல்லை(அதான் போண்டா வாங்கிக் கொடுத்தாரில்லை), என்று நெகிழ்ந்த நான்.அவரிடம் திக்கித் திணறி, "சார் நான் பலமுறை உங்களிடம் தவறுதலாய் நடந்து கொண்டுள்ளேன். ஆனாலும் நீங்கள் என்னை மிகவும் உயர்வாய்ப் பார்க்கின்றீர்கள். நான் அப்படி உண்மையில் நடந்து கொள்ளவில்லை. என்னை மன்னித்து விடுங்கள்" என்றேன். அதுக்கு அவர் என் தோளைத் தட்டிக் கொடுத்து," இது எல்லாம் சகஜம் தம்பி, உன் வயசு அப்படி, உன் வயதில் நானும் இப்படித்தான் இருந்தேன். என்னதான் பண்ணினாலும் நீ என் கல்லூரி மாணவன், உன்னை பிறர் முன்னிலையில் நான் எப்படி விட்டுக் கொடுக்க முடியும். அப்படி விட்டுக் கொடுத்தால், நம் கல்லூரியின் பெருமை என்ன ஆகும் என்றார். மேலும் "நான் முதல் வருடம் விசாரித்த போதும், கட் அடிக்கின்றான் என்று கூறிய போதும், உன் டிபார்ட்மெண்டில் உன்னைப் பற்றி நல்ல விதமாகக் கூறினார்கள். சரி இந்த வயதில் இது ஆர்வக் கோளாறு என்று விட்டு விட்டேன். நான் அவரிடம் இரண்டு, மூன்று முறை மன்னிப்புக் கேட்டு விட்டு, வீடு வந்து சேர்ந்தேன். என்னால் யுனிவர்சிட்டி டாப்பராக வர இயலவில்லை என்றாலும் முதல் பத்து இடங்களில் ஒருவனாக வர இயன்றது.(எட்டாம் இடம்)

இது என் வாழ்க்கையில் இரண்டாவதாக நடந்த சம்பவம். முதலாவது நான் பன்னிரண்டாவது படிக்கும் போது, எனக்கு அநியாயம் இழைத்ததாக ஒரு ஆசிரியரிடம் நான் கோபமாக கத்த, அதை அவர் சும்மா விட்டாலும், அதைப் பார்த்த இன்னேர் ஆசியர், என்னை மற்றவர்களிடம் போட்டுக் கொடுத்தார். எல்லா ஆசிரியர்களுக்கும், நான் இப்படி நடந்து கொண்டதில் ஆச்சரியம். இந்தக் குடும்பத்தில் ஒருத்தன் இப்படிப் பண்ணி விட்டானே என்று. ஒரு ஆசிரியர் மட்டும், என்னை சும்மா ஒரு ஒரு மணி நேரம் போட்டுக், குனிய வைச்சுக் கும்மி குலைவையிட்டார். அந்த சுவாஸ்யமான சம்பவம் பின்னால் ஒரு பதிவில் கூறுகின்றேன். இந்த இரண்டும்தான் நான் என் கல்வி வாழ்க்கையில் செய்த தவறுகள். நன்றி .

டிஸ்கி : படத்தில் கையில் வைத்து இருப்பது பிரபல பதிவர். அறிவிலி இராஜேஷ் அவர்கள் பதிவர் சந்திப்பில் கொடுத்த பட்டாணி சுண்டலுங்கே. அதுனால அவருக்கும் நன்றி.

25 comments:

 1. அண்ணாச்சி, பேராசிரியர் ரொம்ப நெகிழ வைச்சிட்டார். அவரின் நல்ல உள்ளத்தை அடையாளம் கண்டு கொண்ட உங்களுக்கும் பாராட்டுக்கள்!
  எட்டாவது இடம் - வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 2. ஆம்லேட் சூடும் சுவையும்....

  எங்கே காணும் என்று கேட்டீர்கள் வநது விட்டேன் .பதிவி போட்டேன் பாருங்கள்...
  நன்றி....

  ReplyDelete
 3. ஆசிரியர் என்பதற்கே அர்த்தம் (மண்ணிப்பு) அதுதானே!!!

  ReplyDelete
 4. தொடர்ச்சி நல்லாவே இருக்கு...

  ReplyDelete
 5. //எனக்கு அநியாயம் இழைத்ததாக//

  எங்க சார் புடுசின்ங்க இந்த லைன ?

  ReplyDelete
 6. //எனக்கு அநியாயம் இழைத்ததாக//

  எங்க சார் புடுசின்ங்க இந்த லைன ?

  புரியல்லை மங்குனி புழக்கத்தில் இருக்கும் வார்த்தைதானே. இல்லை நான் தப்பா டைப்பி விட்டனா?

  ReplyDelete
 7. ஆம்லேட் ருசியா இருக்கு.

  ReplyDelete
 8. ரொம்ப நல்லா இருந்தது

  ReplyDelete
 9. இளமைப்பருவத்தைத் திரும்பிப் பார்த்திருக்கிற விதம் நல்லாயிருக்கு! :-))

  ReplyDelete
 10. சுவையான ஆம்லட்

  ReplyDelete
 11. //பித்தனின் வாக்கு said...
  //எனக்கு அநியாயம் இழைத்ததாக//

  எங்க சார் புடுசின்ங்க இந்த லைன ?

  புரியல்லை மங்குனி புழக்கத்தில் இருக்கும் வார்த்தைதானே. இல்லை நான் தப்பா டைப்பி விட்டனா?//

  நான் அதற்காக சொல்லவில்லை ஐயா , இந்த வாக்கியங்களை நான் அந்த கால தமிழ் படங்களில் தான் கேட்டுள்ளேன் ஐயா. (சந்தரலேகா பட டைலாக் போல் படிக்கவும் )

  ReplyDelete
 12. தோழரே....
  தங்கள் 'ஆம்லேட்'ம் - 'ஆம்லேட்நிறைவும்'வும் படித்தேன்...

  உண்மையில்
  'நெஞ்சில் இட்ட கோலமெல்லாம் அழிவதில்லை....
  என்றும் அது கலைவதில்லை...
  எண்ணங்களும் மறைவதில்லை..." என்ற வைர வரிகளின்படியும்........

  கல்லூரி காலத்தில் நடந்த ஒவ்வொரு நிகழ்வுகளும்
  காதலியின் முதல் முத்தத்தைப் போலவும்
  என்றும் நெஞ்சை விட்டு நீங்கா.. என்பதற்கு தங்கள் இந்த இடுகையே சாட்சி.....
  இதில் ஒரு அனுபவ பாடமும் பெற்றிருக்கிரீர்கள்....

  இவ்விடுகை...
  என்னை,
  என் கல்லூரிக்கு அழைத்து சென்றதென்னவோ உண்மை....

  வாழ்த்துக்கள்...

  நட்புடன்...
  காஞ்சி முரளி........

  ReplyDelete
 13. கல்லூரி வாழ்க்கையெல்லாம் நமக்கு இல்லீங்கங்கோ.

  ஆனாலும் ஆம்லெட் சூப்பர்..திவாகர்சார் கலக்குறீங்க..

  ReplyDelete
 14. அருமையான அனுபவம்

  ReplyDelete
 15. சர்க்கரைMarch 23, 2010 at 5:30 PM

  இன்னா சார்.. சுரத்தேயில்ல..
  அந்த பயலுகளை இழுத்து உள்ள போடுங்க சுதாகர் சார்..

  ReplyDelete
 16. உண்மையிலேயே உணர்ந்து எழுதி இருக்கிறீர்கள். இடையே வந்த "அதான் போண்டா வாங்கிக் கொடுத்துட்டாருல்ல" என்ற மெல்லிய நகைச்சுவையும் ரசித்தேன்

  ReplyDelete
 17. பரவாயில்லீங்க, நீங்க இவ்வளவுதான் பண்ணிணீங்களா. நம்ம கதை ரொம்ப மோசமுங்க. க்ளாஸ்லெ கடசி பெஞ்சுல பட்டாசுக்கட்டெ ஒரு நீளத்திரிலெ பத்தவெச்சு மறச்சுவச்சுட்டு, மொதபெஞ்சுலெ வந்து உக்காந்துட்டனுங்க. அரை மணி களிச்சு அந்த பட்டாசுக்கட்டு வெடிக்க, கடசிபெஞ்சுல இருந்தவங்க எல்லாம் மாட்டிட்டாங்கல்ல.

  ReplyDelete
 18. நல்ல அனுபவம்.நல்ல உள்ளம் கொண்ட பேராசிரியர்.

  ReplyDelete
 19. ஆம்லேட் சூப்பர் சுவை!!

  ReplyDelete
 20. மனம் விட்டு நீங்கள் செய்த தவறை சொல்லியபோதே எல்லாம் சரி ஆகிவிட்டது இல்லையா சுதாகர் மன நிம்மதி கிடத்தது போலவும்

  ReplyDelete
 21. இது முற்றிலும் தங்களின் வேறொரு பதிவிற்கான பின்னூட்டம், கருத்துரை.....

  தோழனே....

  ///////நான் பித்தனா? இல்லை பைத்தியமா?///// எனும் தலைப்பில் தங்களின் பதிவை கண்டேன்....

  அதில் அனைத்து கருத்துகளை இட்டேன். "Your HTML cannot be accepted: Must be at most 4,096 characters " என்பதால் தாங்கள் பதிவில் சில கருத்துக்களை மட்டும் எடுத்துகொள்கிறேன்... (இப்பதிவில் அனைத்து வரிகளும் சூபெர்ப்)...

  /////// ஆனால் இந்த பட விமர்சனங்கள் குறித்த பதிவுகளும் ...................................... நாய்களின் சத்தம் தான் நினைவுக்கு வருகிறது////.

  /////இதில் வியப்பு என்ன என்றால் ........................ஒருவேளை நான் உன்னை திட்டுகின்றேன் நீ என்னை திட்டு என பேசிவைத்துக்கொள்வார்களே. ............................ வெளிப்படுகின்றது.////

  ///இன்றைய ................................................ திரைத்துறையும், அரசியலும் ஒரு பிழைப்புதான் ஒழிய வாழ்க்கை அல்ல/////

  தொடர்கிறது தோழனே... (part 1)

  ReplyDelete
 22. குறிப்பாக இந்த paraவில்

  ***** இன்னும் எத்தனை நாள்தான் இவர்கள் இப்படி ஏமாற்றுவதும், இளைநர்கள் ஏமாறுவது என நினைத்து இருக்க இங்கு படித்தவர்கள் கூட இந்துவா, பகுத்தறிவு, ஆரியம்,திராவிடம், இஸ்லாம்,இந்து என நாய்களை வீட கேவலமாக அடித்துகொள்கிறார்கள். நாய்களுக்கு வாய் மற்றும் ஆறாம் அறிவு இருந்தால் பதிவர்களுக்கு இடம் விட்டு குறைப்பதை நிறுத்திகொள்ளும். மனது சங்கடப்படும் அளவுக்கு இருக்கிறது இவர்களின் கருத்துக்கள். இதுதான் பதிவர்களின் கருத்து சுதந்திரம் என்றால் இந்த சுதந்திரம் இல்லாமல் இருந்திருக்கலாம். சில காலம் பதிவுகளை படிக்காமல் இருப்பது என்பது மனதை ஆற்றும் எனவும் நினைக்கின்றேன். பதிவு உலகத்தில் நல்ல நண்பர்களும் நிறையப் படித்தவர்களும், இருப்பார்கள் என என்னித்தான் ஆரம்பித்தென் ஆனால் சாதீய சிந்தனை கொண்டவர்களும்(சாதியை எதிர்க்கின்றேன் என்ற பெயரில்), மதவாதிகளும்(மதத்தை எதிர்க்கின்றேன் என்ற பெயரில்) அதிகம். ஆன்மீக வாதிகளும், மதவாதிகளும் கூட இவர்களைப் போல் தீவிரவாதிகாளாய் இருப்பது இல்லை. நல்ல பயன் தரும் கட்டுரைகள் எழுதுவதை வீட பின்னூட்டங்களுக்காக எழுதுவது அதிகம் இருக்கும் சூழ் நிலையில் மேலே குறிப்பிட்ட பண்புகளை எதிர்பார்ப்பவன் பித்தனா? அல்லது பைத்தியகாரனா?.************  ******..... ***** இவற்றினுள் இருந்த கருத்துக்கள் அத்தனையும் உண்மை...

  தொடர்கிறது தோழனே... (part 2)

  ReplyDelete
 23. நான் யதார்த்தமாய் தங்கள் பழைய பதிவுகளை மேலோட்டமாய் படித்துக் கொண்டிருந்தபோது....... மேற்சொன்ன வரிகளைப் படித்து வியந்துபோனேன் .

  நான் கர்வப்பட்டு கொள்கிறேன். நீங்கள் எனது மாவட்டம் என்பதாலும் அல்லது என் ஊருக்கு அருகாமையில் (சற்று தள்ளியிருந்தாலும்) வாழ்ந்து வருபவர் என்பதாலும்...

  மேற்சொன்ன கருத்துக்கள் அனைத்தும் சத்தியமான வார்த்தைகள்...  அதிலும் ///"பதிவு உலகத்தில் நல்ல நண்பர்களும் நிறையப் படித்தவர்களும், இருப்பார்கள் என என்னித்தான் ஆரம்பித்தென் ஆனால் சாதீய சிந்தனை கொண்டவர்களும்(சாதியை எதிர்க்கின்றேன் என்ற பெயரில்), மதவாதிகளும்(மதத்தை எதிர்க்கின்றேன் என்ற பெயரில்) அதிகம். ஆன்மீக வாதிகளும், மதவாதிகளும் கூட இவர்களைப் போல் தீவிரவாதிகாளாய் இருப்பது இல்லை...////" என்ற வரிகள் superb...! superb...! superb...!  யார் ஏற்றுக் கொள்கிறார்களோ இல்லையோ...! "உள்ளதை உள்ளபடி உண்மையை ஊருக்குரைப்பது என் கடமை" என்ற தங்களின் கொள்கையை தொடர்வீர்...!  இப்பதிவுலகதிற்கு நான் புதியவன்... நானும் //சில காலம் பதிவுகளை படிக்காமல் இருப்பது என்பது மனதை ஆற்றும் எனவும் நினைக்கின்றேன்// என்ற தங்களின் நிலைமைக்கு வந்துள்ளேன்... காரணம் தாங்கள் மேற்சொன்ன கருத்துக்கள்தான்...

  அதோடு 'ஆதிக்க'ங்களின் அழுத்தங்கள் அதிகமாகும்போது ( இக்கருத்தை வைத்தே "ஆதிக்கம்" எனும் தலைப்பில் ஓர் கவிதை எழுதி, அது 'எனது பழைய பனை ஓலை"களில் சேகரிப்பாய்...) அவ்விடத்தைவிட்டு விலகுவதுதான் எனக்கு நன்மை என்ற கொள்கை கொண்டவன் நான்..  வாழ்த்துக்கள்....  நட்புடன்...

  காஞ்சி முரளி......... (the end)

  ReplyDelete
 24. நன்றி யூர்கன்,
  நன்றி சித்ரா,
  வாங்க மலர்.ரொம்ப நாளைக்கு அப்புறம் வர்றீங்க. பொண்ணு +2ந்னா பதிவுகளைப் படிக்க கூடாதா?, எழுதக் கூடாதா? மிக்க நன்றி.
  நன்றி ஜெய்லானி,
  நன்றி நாடோடி,
  நன்றி மங்குனி அமைச்சரே, நான் வார்த்தைகளை தப்பா அடிச்சிட்டன் சொல்லிக் கேட்டேன். நிறைய சரித்திர நாவல்களில் இருந்து சுட்டது.
  நன்றி சைவ கொத்துபுரோட்டா,
  நன்றி சாருஸ்ரீராஜ்,
  நன்றி சேட்டைக்காரன்.
  நன்றி ஸாதிகா,
  நன்றி காஞ்சி முரளி,
  நன்றி அன்புடன் மலிக்கா,
  நன்றி சின்ன அம்மினி,
  நன்றி சக்கரை, வருவதும், போவதும் அவர்கள் விருப்பம். ஆனா நான் படிப்ப்பேன்.
  நன்றி ஸ்ரீராம்,
  வாங்க மசக்கவுண்டன், நாங்களும் ஊதுபத்தியில பட்டாசைக் கட்டி பாத்ரூமில் போட்டுவிட்டு, வகுப்புக்குள் போய் உக்காந்துக்குவேம்.நன்றி.
  நன்றி மாதேவி,
  நன்றி மேனகா சத்தியா,
  நன்றி தேன்மயில் லஷ்மணன்,
  வாங்க காஞ்சி முரளி, அந்த பதிவும், விமர்சனங்களும், நான் வந்த புதிதில் பல இடங்களில் முட்டி மோதி அலுத்துப் போய் எழுதியது. அந்தப் பதிவு போட்ட கொஞ்ச நாளில் எதுக்கும் ஒரு வித்தியாசமாய் சமையல் பதிவு போடலாம் என்று போட்ட போது, சகோதரி மேனகா சத்தியா, வந்தார். அவர் பதிவில் உடன் படிக்கும் சாருஸ்ரீராஜ்,ஜலில்லா,தெய்வசுகந்தி,சுஸ்ரீ,ஸாதிகா,மலிக்கா ஆகியோரும் வந்து என்னை உற்சாகப்படுத்தினார்கள். அதே சமயம், நான் உங்களை அண்ணா என்று அழைக்கலாமா என்று கேட்டு தங்கை சுசி வந்தாள், பின்னர்தான் நான் பதிவுலக சொந்தங்களைக் கண்டு கொண்டேன். இது சமயம் எனக்கு சிங்கை பிளாக்கர்ஸில் குழலி புருஷோத்தமன் நட்பு கிடைத்துப் பின்னர், கோவி அண்ணாவின் நட்பு கிடைத்தது. ஜோசப் பால்ராஜ்,ஜெக்கு, அத்திவெட்டி ஜோதி,முகவை இராம்,ஞானப்பித்தன் வெற்றிக் கதிரவன் ஆகியோரின் நட்பு கிடைத்தது. ஒரு நாள் அப்பாவி முருகு என் இல்லம் வந்து என் பிலாக்கை டிசைன் செய்ததோடு, பதிவு உலகம்,நடைமுறை,செயல்பாடுகள் போன்றவற்றை எடுத்துக் கூறினார். எப்படி நடந்து கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். கிட்டத்தட்ட மூன்று மணி நேர உடையாடலும், அவரின் பொறுமையான எடுத்துக் காட்டுகளும், என்னை பதிவுலகில் செம்மைப் படுத்தின. துளசி டீச்சரின் வழிகாட்டல், அய்யா குடுகுடுப்பையாரின் என்னை அறிமுகமப் படுத்தியதன் காரணமாக சின்ன அம்மினி வந்தார். பின்னர் சித்ராவும்(வாயாடி) இணைந்தார். முக்கியமாக ஒருவரைச் சொல்ல வேண்டும் என்றால் அது வால்பையன் மட்டுமே. எனக்கு ஆரம்பத்தில் இருந்து வழிப்படுத்தினார். பதிவுகளின் போக்கு,தொடர்கள் எழுதும் முறை, பதிவு வழமை போன்றவற்றைக் கூறினார். என் அனைத்து பதிவுகளுக்கும் பின்னூட்டம் இட்டு உற்சாகப்படுத்தினார். அவரைத் தொடர்ந்து கிருஷ்ண மூர்த்தி ஜயா என்னை ஊக்குவித்தார். இராதா கிருஷ்னன்.உழவன். நாடோடி,சைவ கொத்துபுரோட்டா,முத்துலெட்சுமி இன்னமும் பலரின் ஆதரவும் என்னைத் தொடர்ந்து எழுத வைத்தது. இப்ப மங்குனி,ஆடுமாடு,ஸ்ரீராம், மலர், ஜெய்லானி,சேட்டைக்காரன் போன்றேர்களும் இணைந்தனர். நான் ஆரம்பத்தில் என்ன நினைக்கின்றேனே அதை பதிவாகப் போடவேண்டும் என்று நினைத்துத்தான் எழுத ஆரம்பித்தேன். இப்பவும் என் எழுத்தில் மாற்றம் இல்லை. ஆனால் நான் ஒரு பதிவு போட்டேன் என்றால் மேலே சொன்ன அனைவரும் படித்தார்களா? எனப் பின்னூட்டத்தில் பார்க்கும் ஆர்வம் இருக்கின்றது. மிக்க நன்றி.
  பின்னூட்டமும் ஓட்டுக்களும் இட்ட அனைவருக்கும் எனது நன்றிகள்.

  ReplyDelete

என்னை வளர்க்க, கருத்துரையிடுக...

பதிவைப் படித்து கருத்து போடலைனா
உங்க கனவுல பூதம் வரும்,,, ஆமா சொல்லிட்டேன்.