Friday, March 19, 2010

பதிவர்கள் வீட்டு சமையல் அறையில் (ஆண்கள்) -- பாகம் 3


அன்புள்ள பதிவுலக ஆண்களே! நான் பதிவர் வீட்டு சமயலறையில்(பெண்கள்) என்று மகளீருக்கு இடஒதுக்கீட்டில் முக்கியத்துவம் தந்த மாதிரி, முதன் முதலில் பதிவிட்ட போது,அவர்கள் அனைவரும் நல்ல புரிந்துணர்தலோடு நகைத்தார்கள். அதுபோல, இப்ப உங்களையும் வைத்து பதிவைப்(நம்பிப்) போடுகின்றேன். பெருந்தன்மையுடன் இதை நகைச்சுவையாக மட்டும் பார்த்து ஆதரவு தரவேண்டுகின்றேன். நான் முதலில் குடுகுடுப்பையாரின் கல்லூரி அனுபவங்களைப் படித்துதான் பதிவை ஆரம்பித்தேன். ஆதாலால் அவருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அவரில் இருந்து ஆரம்பிக்கின்றேன்.(இதுதான் குரு வணக்கம்முன்னு சொல்வாங்க போல)

குடுகுடுப்பையார் (தோழர் முகிலனிடம்) : மொதல் மொதல்ல என் மனைவி ஊருக்குப் போனப்ப நான் சமைச்சன் பாரு.

துனைவியார் : ஹிக்கும், இந்த சுடுதண்ணி வச்ச கதையவே, எத்தனை நாளுக்கு சொல்வீங்க. வந்த நாள்ல இருந்துபார்க்குறேன், உருப்படியா என்ன சமைச்சீக் கொடுத்தீங்க?


கோவி. கண்ணன் (தன் மகளிடம்) : செல்லம், அம்மாவிற்கு அலுவலகத்தில் மீட்டிங். அதுனால நீ ஒழுங்கா ஹோம் வெர்க் பண்ணுடா.

மகள் : அப்பா, நான் ஒரு, ஒரு மணி நேரம் விளையாடி விட்டுப் பண்ணுகின்றேனே.

கோவியார் : இதப்பாரும்மா, ஒழுங்கா நீ ஹோம் வெர்க் பண்ணு, அப்பா சமைத்துச் சாப்பிடத் தருகின்றேன்.

மகள்: அப்பாஆஆஆ! தயவு செய்து அந்த பனிஸ்மெண்ட் மட்டும் வேண்டாம், நான் ஒழுங்கா ஹோம் வெர்கே பண்றேன்.

(குறிப்பு : கோவியார் நல்லா சமைப்பார்).வெண்பா புலவர் முகவை இராம்(அடுக்களையில் பால் காய்ச்சிக் கொண்டு) : வெண் பாலுக்கும், வெண்பாவிற்க்கும் என்ன சம்பந்தம் இருக்கும்,

வெண்பாலில் கருமைக் காப்பிக் குழம்பி இட்டு
சீனியக் குறைவாய் இட்டு, நிறைவாய் ஆத்தி

மனைவி : அப்பப்பா ! தலைவலி தாங்கலைன்னு ஒரு கப் காப்பி கேட்டா, உங்க தலைவலி வேறா ? கொஞ்சம் பேசாமக் காப்பி போடுங்க.நசரேயன் (துனைவியாரிடம்) : நான் இன்னிக்கு உனக்கு ஹைதிராபாத் சிக்கன் பிரியாணி பண்ணித்தரட்டா ?

துனைவியார் : அய்யய்யே, அதுக்குப் பேசாம, அந்த மட்டமான புளிச்சோறு சிக்கன் பிரியாணியவே வாங்கிச் சாப்பிட்டிருக்கலாம்.அப்பாவி முருகு (கே.எப்.சியில் தனது நண்பர்களிடம்): ஆக்ச்சுவலி இந்த சிக்கன் பிரியாணி எப்படி பண்றாங்கன்னா.

நண்பன் : சரி,சரி. உனக்குக் கல்யாணம் நிச்சயம் ஆகிடுச்சுன்னு நாங்க நம்புறேம்.அதை இப்படி எல்லாம் புரூப் பண்ணாதே.குலவுசனப்பிரியன்(பால்கனியில் தம் அடிக்கின்றார்)

துனைவியார் : உங்களை ஜலில்லா அக்கா பதிவிட்ட, "தம் கேப்பேஜ்" பண்ணச் சொன்னா, இங்க என்ன பண்றீங்க.

கு.பிரியன் (சிகரட்டை மறைத்தபடி) : ஹி ஹி , அதுதான் முதல்ல "தம்" போட்டுட்டு இருக்கேன்.பட்டாபட்டி : நான் கொத்தவராங்காயில் கொத்து பரோட்டா பண்ணலாமான்னு யோசிச்சுட்டு இருக்கேன்.

மனைவி : நீங்க கொத்தவரங்காயில் கொத்து பரோட்டா பண்ணுவீங்களே! அல்லது கொத்தவரங்காய் சால்னா பண்ணூவீங்களே! தெரியாது.
சாப்பிட்டு விட்டு நான் உங்களைக் கொத்தி எடுக்காமப் பார்த்துக்குங்க.

பட்டாபட்டி : *************மங்குனி அமைச்சர் : கண்ணே நான் உனக்கு, என்ன பண்ணித்தரட்டும், கொசுக் கருவாடு, கொசு இரத்தப் பொறியல், நாய்த்தோல் பிரியானி எது வேனும்? சொல் அன்பே.

மனைவி : நீங்க, சாப்பிடறது எல்லாம் எனக்கு எதுக்கு?. முதல்ல மனுசங்க,நான் சாப்பிடறது மாதிரி எதாது பண்ணுங்க.

மங்குனி : $$$$$$$$$$$.ஜெய்லானி : ஏம்மா ! பிரியானி பண்றதுக்கு முன்னாடி, ஆட்டை நான் ஹலால் பண்ணித் தரட்டா !

மனைவி : செய்யறதே செய்யறீங்க! அப்படியே பிரியானியும் நீங்களே செய்ஞ்சுருங்க.

ஜெய்லானி : ஆகா! இதுதான் வம்பை விலைக்கு வாங்குறதா?சைவக்கொத்து புரோட்டா(பாடிய படி) : கொத்துபுரோட்டாவில் சைவமின்னு,அசைவமின்னு ரெண்டு வகை உண்டூஊஊஊ, இதில் எந்த வகை வேணும் உனக்கு?

மனைவி : எந்த வகையா இருந்தா என்ன, சாப்பிடும் வகையில் சமைங்க. அதுபோதும். இல்லைனா உங்களுக்கு " இன்னிக்கு சைவம்தான்" . புரிஞ்சுதா?.

சை.கொ பு: ????????????


ஸ்ரீராம் : நான் கத்திரித் தோல் சாம்பார் பண்ணப் போறேன்.

மனைவி : சரி,சரி வயித்துல கத்திரிக் கோல் வைக்காமப் பார்த்துக்கேங்க.

ஸ்ரீராம் : @@@@@@@@@

மனைவி : என்னங்க அடுப்படியில உக்காந்து என்ன் யோசிக்கிறிங்க ?

வால்பையன் : நான் வாழைப்பழத்தோலில் அல்வா பண்ண முடியுமான்னு யோசிக்கின்றேன்.

மனைவி : கஷ்டகாலம், எங்க அப்பா அப்பவே சொன்னார்.

வால்பையன்(ஆர்வத்துடன்) : என்ன சொன்னார்?

மனைவி : " நல்லா யோசிக்சுப் பாரும்மா, இது மாதிரி (வால்பையன்) பெயருல்ல எழுதுறான்னு.

வால்பையன் : !!!!!!!!!!!!!!!!!


சரிங்க, சிரிப்பு கொஞ்சமாது வந்துருக்குமுன்னு நம்புகின்றேன். இனி கடைசியா வழக்கம் போல நான்.

(பித்தனின் வாக்கு சுதாகர், நல்லாக் குடித்து விட்டு இரவு லேட்டா வரேன்)

சுதாகர் : ஹி ஹி இன்னிக்கு ஒரு மீத்திங், அதான். கேவிச்சுக்காதே சாலி(சாரி) டியர்.

மனைவி : இது எல்லாம் ஒரு சாக்கா, என்னைக்கிதான் மீட்டிங் இல்லை,
சரி.சரி கிச்சனில் உப்புமா வச்சுருக்கேன், எடுத்துக் கொட்டிக்கே, எனக்குத் தூக்கம் வருது.

(பித்தன் சாப்பிட, மனைவி எதே சந்தேகம் வந்தவராக எழுந்து வருகின்றார்)

மனைவி : உப்புமா ஹாட்பேக்கில் அப்படியே இருக்கே, என்ன சாப்பிடுறீங்க.

பித்தன் : ஹி ஹி குண்டானில் இருந்த மீதி உப்புமாவையே சாப்பிடுகின்றேன்.
(ஜஸ் வைக்க). சும்மாச் சொல்லக் கூடாது, நீ பண்ற உப்புமா சூழ்ப்பரு.

மனைவி : அய்யே அது பசைங்க. குழந்தைக புஸ்தகத்துக்கு அட்டை போட வைச்சு இருந்தது.

பித்தன் : ??????????.


சரிங்க, சிரிச்சுருபீங்கன்னு நம்புறேன். இந்த ஸாதிகா அக்காவும்,சித்ராவும்தான் ஆண்கள் வீட்டு சமையலறையில் பதிவு எப்ப போடுறீங்கன்னு தொல்லை பண்ணீனாங்கா, அதுனால பின்னூட்டமும், ஓட்டும் எனக்குப் போட்டு. அட்டோ அல்லது லாரி! எதுனாலும் அவங்களுக்கு அனுப்பி வையுங்க. நன்றி.

67 comments:

 1. நானும் நல்லா சாப்பிடுவேன். சமைக்கவும் செய்வேன்

  ReplyDelete
 2. எனக்குத் தெரியும் அய்யா, ஒரு பதிவில் குறிப்பிட்டு இருந்தீர்கள், சும்மா ஒரு தமாசுக்குத்தான். நன்றி.

  ReplyDelete
 3. :)


  :(((
  :((((
  :(((((
  :((((((

  மேலே குறிப்பிடப்பட்டவர்களில் என்னையும் சேர்த்து பலருக்கும் சமையல் நன்றாக தெரியும்...

  முகவைராம் வீட்டில் மான் பிரியாணி சாப்பிட்டுட்டு எப்பிடி எழுதலாமா?


  (நான் என்னைச் சொன்னேன்)

  ReplyDelete
 4. நல்லா கலாய்ச்சிருக்கீங்க

  ReplyDelete
 5. சீக்கிரம் ஒரு கல்யாணத்தைப் பண்ணித் தொலைங்க. ஒரே கனவும் காட்சியுமா தொல்லையாப் போச்சு.

  ஆமாம்.....குண்டான் பசை தின்னுமா வாயைத்திறக்க முடிஞ்சது?????

  பசை க்வாலிட்டி? நோ நோ

  ச்சும்மா:-))))))

  ReplyDelete
 6. அண்ணாச்சி, கடைசியிலே எங்களையும் போட்டு கொடுத்துட்டீங்களே........!

  பித்தனின் மொக்கை வர வர மெருகேறி அசத்திக்கிட்டு இருக்குது. அடுத்து எந்த பதிவர் தலை, எதுக்கு உருள போகுதோ?
  என்ன அண்ணாச்சி, பதிலையே காணோம்? ஓ, அந்த பசை இன்னும் வாயில்தான் இருக்கா?

  ReplyDelete
 7. அமர்க்களம்...:)...:)

  ReplyDelete
 8. //ஜெய்லானி : ஆகா! இதுதான் வம்பை விலைக்கு வாங்குறதா?//

  அடடா...அது உங்களுக்கும் தெரிஞ்ஜிப் போச்சா!!!

  ReplyDelete
 9. //இல்லைனா உங்களுக்கு " இன்னிக்கு சைவம்தான்" . புரிஞ்சுதா?.//

  புரிந்தது........அவ்வவ்..............
  நான் ரொம்ப ருசியாக..................................சாப்பிடுவேன்,
  கொஞ்சம் சுமாரா சமைப்பேன் :))

  ReplyDelete
 10. வித்தியாசமான வாக்கு பித்தரே!

  ReplyDelete
 11. //சரி.சரி கிச்சனில் உப்புமா வச்சுருக்கேன், எடுத்துக் கொட்டிக்கே, எனக்குத் தூக்கம் வருது.//

  சும்மா சொல்லக்கூடாது சுதாகர் சார், மனைவி உங்கமேல நல்ல மரியாதை!!! ஓகே...ஓகே..

  ReplyDelete
 12. ஹா ஹா ஹா... ரொம்ப நல்லா இருக்கு அதிலும் வால் பையனுக்கு ஒரு படம் வேற போட்டு கலக்கிட்டிங்க .... அஹா இப்படியா பசைக்கும் உப்புமாவிற்கும் வித்யாசம் தெரியாம சாப்பிடுறது....

  ReplyDelete
 13. //மனைவி : அய்யே அது பசைங்க. குழந்தைக புஸ்தகத்துக்கு அட்டை போட வைச்சு இருந்தது.//

  உங்க வீட்டு பசை கூட ருசிப்போல!!!! ஹீம்..குடுத்து வச்ச ஆள் சார் நீங்க!!!!!!

  ReplyDelete
 14. என்ன ஒரு ஒற்றுமை சகோ நான் இந்த மொக்கை டைப் பண்ணும் போதே நீங்க இப்படி ஒரு கமெண்ட் போடுவீங்கன்னு நினைச்சேன். ரொம்ப நன்றி

  தினம் தோறும் எனது பிராத்தனை ...
  எனக்கு என்று எதுவும் வேண்டாம் கடவுளே
  என் அம்மாவுக்கு மட்டும் ஒரு சூப்பர் figure மருமகளா வரணும்
  அது போது எனக்கு

  ReplyDelete
 15. நம்ம மன்குனியார் எட்டாங் கிளாஸ் அரியர்ஸ் எக்ஸாம் எழுத சென்றுள்ளதால், இன்று அவர் பித்தனின் வாக்கு ப்ளாக் பக்கம் வரவில்லை என்பதை மிக தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறேன்.
  இப்படிக்கு
  சத்தியமாக நான் மங்குனி அமைசர் இல்லை , இல்லை , இல்லை

  ReplyDelete
 16. அண்ணே..உப்புமா என்று நினைத்து பசையை சாப்பிட்ட பித்தனின் வாக்கை நினைத்து சிரித்து..இன்னும் சிரித்து முடிந்தபாடில்லை.பசையை சாப்பிட்டுவிட்டு எத்தனை நாள் கழித்து வாயைத்திறந்தீர்கள்?சரிங்க..பெரியம்மாவுடைய செல்பேசி எண் இருந்தால் கொடுங்க(அதாரு பெரியம்மான்னு கேட்கறீங்களா?)சீக்கிரம் பித்தன் அண்ணாச்சிக்கு ஒரு கால்கட்டு போடுங்கன்னு சிபாரிசு பண்ணுறேன்.

  ReplyDelete
 17. கலக்கல்னா கலக்கல், செம கலக்கல்! வவுறு வலிக்குது!! :-)))))))))))))))))))

  ReplyDelete
 18. அண்ணே.. என்னய வச்சு, ஏன் காமடி பண்ணமாட்டிங்கிறீஙக?..


  அண்ணே.. ப்ளீஸ்ணே...

  ReplyDelete
 19. @@@@@@@பட்டாபட்டி.. said...
  அண்ணே.. என்னய வச்சு, ஏன் காமடி பண்ணமாட்டிங்கிறீஙக?..அண்ணே.. ப்ளீஸ்ணே..////

  ஹா..ஹா...மரண கலாய்...!! :)

  ReplyDelete
 20. என்ன ஆச்சு, நீங்க சொன்ன கொத்தவரங்காய் கொத்து புரோட்டாவை வைத்து போட்டுள்ளேன்னே.

  ReplyDelete
 21. //பட்டாபட்டி.. said...
  அண்ணே.. என்னய வச்சு, ஏன் காமடி பண்ணமாட்டிங்கிறீஙக?..


  அண்ணே.. ப்ளீஸ்ணே...//

  ஏம்பா பட்டா அவரே பாவம் ரொம்ப சீரியஸ் ஆனா ஆளு அவர்ட போய் காமெடி, கீமேடின்டு பேசாம வா நாம போய் அந்த சைனீஸ் லேடி டிரைவர்ட சமையல் குறிப்பு கேட்கலாம்
  இப்படிக்கு
  நான் மங்குனி அமைசர் இல்லை , இல்லை , இல்லவே இல்லை

  ReplyDelete
 22. வாழைப்பழ தோலில் அல்வா பண்ண முடியாதுன்னு நினைக்கிறிங்களா?

  ReplyDelete
 23. //அப்பாவி முருகு (கே.எப்.சியில் தனது நண்பர்களிடம்): ஆக்ச்சுவலி இந்த சிக்கன் பிரியாணி எப்படி பண்றாங்கன்னா.

  நண்பன் : சரி,சரி. உனக்குக் கல்யாணம் நிச்சயம் ஆகிடுச்சுன்னு நாங்க நம்புறேம்.அதை இப்படி எல்லாம் புரூப் பண்ணாதே.//

  ஹா..ஹா..ஹா..
  அண்ணா ஒரு சின்ன விண்ணப்பம்.. உங்கள் தங்கைகள் சிலரும் படிக்க வருவதால் double meaning-ஐ தவிர்க்கவும்..

  ReplyDelete
 24. //வாழைப்பழ தோலில் அல்வா பண்ண முடியாதுன்னு நினைக்கிறிங்களா?//

  ஐயோ...ஐயோ.. சொக்கா..சொக்கா..இந்த டிப்ஸை தானே தேடிகிட்டிருந்தேன்...

  ReplyDelete
 25. @@@@ஜெய்லானி said...
  //வாழைப்பழ தோலில் அல்வா பண்ண முடியாதுன்னு நினைக்கிறிங்களா?//
  ஐயோ...ஐயோ.. சொக்கா..சொக்கா..இந்த டிப்ஸை தானே///

  யோவ் ஜெயிலு..இதுக்கே மெரண்டா எப்டி..அண்ணேன் கொம்முட்டி பழத்த வெச்சு முட்டை பச்சடி பண்ணுவாரு..தக்காளி அப்புடித்தான் இருக்கும்...!!

  ReplyDelete
 26. அண்ணேன் இந்த பதிவுல இருக்கிற போட்டோல சூப்பரா இருக்கீங்கன்னேன் ..ரொம்ப சின்ன வயசுல எடுத்தது போலருக்கு..இப்ப உள்ளத விட ரொம்ப அழகா இருக்கீங்க...!!

  ReplyDelete
 27. அண்ணேன் அந்த ஆப்பிள வெச்சு ஆப்பம் செய்யறது எப்புடின்னு நீங்க இன்னும் சொல்லி தரவே இல்ல..!!...அப்பறம் நான் கடுப்பாகி வெங்காயபழத்துல முட்ட லாப்பா செஞ்சு உங்க மூஞ்சுல போட்ருவேன்..ஒழுங்கா சொல்லி குடுத்துருங்க..!!

  ReplyDelete
 28. அன்புடன் மலிக்காMarch 19, 2010 at 3:58 PM

  அம்மாடியோ சிப்பு தாங்களப்பா இறைவா இதற்கு வழிச்சொல்.

  பிராத்தனைப் பலிக்கட்டும்.. கவனமாயிருங்கோஒஓஓஓ அல்லாரும்..

  ReplyDelete
 29. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 30. கொய்யாக்காவையும் கொத்தவரங்காவையும் பாம் வச்சுதான் தகர்க்கணும்ங்கிற அடிப்படை அறிவு கூட இல்லாத பட்டாபட்டி அவர்களே... நீர் சமைக்கும்போது பித்தனின் வாக்கு அசிஸ்டன்டாக மாறக் கடவது...( இதை விட தண்டனை வேற இருக்குமான்னு தெரியலை!)

  ReplyDelete
 31. என்ன ஆச்சு. இன்னிக்கு கும்மி போட வேற இடம் கிடைக்கிலியா?

  ReplyDelete
 32. @@@@@பட்டாபட்டி.. said...
  மீதி மண்டையன.. சே..தண்டனைய நான் கேண்டில் பண்ணிக்கிறேன்..///////

  ஹா ..ஹா..யோவ் பட்டாப்பட்டி...அடங்குயா..சிரிச்சு முடியல...வயத்த வலிக்குது...!!

  ReplyDelete
 33. @@@@ஜெய்லானி said...
  அம்மில மட்டும்தான் வச்சு அரைக்கனும்..///

  அம்மி ரொம்ப வழவழன்னு இருக்கேயா..!..பரவால்லையா...அரைச்சர்லாமா...என்னா பட்டாப்பட்டி..அரைச்சர்லாமா..???

  ReplyDelete
 34. @@@பட்டாபட்டி.. said...
  எனக்கு கொஞ்சம் ஏறுநெத்தினே ..//

  அண்ணன்ட்ட சொல்லி கொத்தமல்லில கருவாட்டு பொரியல் செஞ்சு சாப்டுயா..முடி கருகருன்னு அண்ணன மாதிரியே வளந்துடும்..அப்டியும் வளர்லைனா கொசு முட்டைய வெச்சு ஜினுக்குனக்கா கிச்சடி பண்ணுவாரு அண்ணேன்...வாங்கி மூணு நாளைக்கு குளிக்காம சுத்தபத்தமா வெறும்வைத்துல சாப்டுட்டு குடல் வலிக்க வாந்தி எடு..தக்காளி வளந்துடும்...முடி..!!

  ReplyDelete
 35. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 36. @@@@பட்டாபட்டி.. said...
  நித்திகிட்ட போயி, முடிய கருகருனு எப்படி வளற்க்கிறானு கேட்டுட்டு,.///////////
  //////////////

  அண்ணேன் எங்கன்னேன் போய்டீங்க..வாங்கன்னேன்...பாருங்க முடிய நித்தி மாதிரி கருகருன்னு வளர்பேன்னு,மறைமுகமா உங்க ஹேர் ஸ்டைல கலாய்க்கறான் பட்டாப்பட்டி..!!..எனக்கு கோவம் கொந்தளிச்சுகிட்டு வருதுன்னேன்..!!

  ReplyDelete
 37. அண்ணேன் கோவமாயட்டாருன்னு நெனைக்கறேன்..சாரி அண்ணேன்...கோச்சுகாதீங்க..!!

  ReplyDelete
 38. நீங்க பண்ற அலும்பல்,சலும்பல் எல்லாம் படிச்சுட்டுத்தான் இருந்தேன். சும்மா சொல்லக் கூடாது. எனக்கு நம்ம ஊரு மாதிரி இங்கன வள் வள், லொள், லொள் சண்டைய பார்க்க முடியவில்லை என்ற குரை(றை)யைத் தீர்த்து வைத்தீர்கள் நன்றி.

  ReplyDelete
 39. அப்புச்சி..நீங்க கொடுத்த அலப்பறைல பாதிபேரு அக்கவுண்டையே டெலிட் பண்ணிடுவாங்க.. இதான் என்னோட பஸ்ட்டு என்ட்ரி.. செம ஜாலியா இருந்தது.. :)

  ReplyDelete
 40. @@@பித்தனின் வாக்கு said...
  எனக்கு நம்ம ஊரு மாதிரி இங்கன வள் வள், லொள், லொள் சண்டைய பார்க்க முடியவில்லை என்ற குரை(றை)யைத் தீர்த்து வைத்தீர்கள் நன்றி.///

  ஹா... ஹா... அண்ணேன் எங்கள நாய்னு தான சொல்றீங்க..இதுல என்ன அண்ணேன் வெக்கம் உங்களுக்கு...சும்மா டைரெக்டா சொல்லுங்க...நாங்கல்லாம் நாய்லையே நாதாரிக..கோச்சுக்க மாட்டோம்..(ஆனா, பெருமாள் கோவில்ல நீங்க உண்டக்கட்டி வாங்க வரும்போது எழந்தபழத்துல அணுகுண்டு பச்சடி செஞ்சு உங்க தலைலேயே போட்ருவோம்..)

  ReplyDelete
 41. நானும் ரொம்ப நல்லா சமைப்பேன் நண்பா . வெஜ் அண்ட் நான் வெஜ். அதுவும் நேற்று நீங்க எழுதியிருந்த பாகற்காய் (மிதி) பிட்ளை...

  ReplyDelete
 42. செம காமெடி,நல்லா சிரித்தேன்...

  ReplyDelete
 43. தலைவா எனக்கு நல்லா சாம்பார் வைக்க தெரியும் .. நம்புங்க

  ReplyDelete
 44. அடேடே...நானும் லிஸ்ட்டுல இருக்கேனா?

  ReplyDelete
 45. அண்ணேன் தூக்கம் வர்றதுக்கு க்ரோட்டன்ஸ் செடிய அரிஞ்சு போட்டு,நெய்ய ஊத்தி பதமா வதக்கி ஒரு தொக்கு செய்வீங்கலாமே நீங்க..அத செஞ்சு குடுங்கன்னேன்..தூக்கம் வர மாட்டேங்குது...!!

  ReplyDelete
 46. அண்ணேன் ஒன்னு எங்கள நல்லா கன்னாபின்னான்னு திட்டி ப்ளாக விட்டு வெரட்டி விடுங்க..சிரிச்சிகிட்டே ஓடிருவோம்..இல்லைனா சண்டைக்கு வாங்க..என்ன நீங்க ரெண்டுமே பண்ண மாட்டேன்கறீங்க...இதெல்லாம் நல்லாள ஆமாம் சொல்லிபுட்டேன்..!!

  ReplyDelete
 47. சுதாகர் ஆனா நீங்க இப்படி பசையை சாப்பிட்டு வீட்டம்மாகிட்ட டோஸ் வாங்கி இருக்க வேணாம்

  :)))))

  ReplyDelete
 48. நல்லா கலாய்ச்சிருக்கீங்க

  அதிலும் கோவி முரு அப்புறம் முகவை அடடா

  ReplyDelete
 49. நல்லா சிரிச்சேன்... பதிவர்கள் சமையல் ரெம்ப சூப்பர்.

  ReplyDelete
 50. உங்களைப்பத்தி போடலையேன்னு சொல்ல நினைச்சேன் கடைசியில் உங்களை பத்தியும் போட்டு உங்க நடு நிலையை நிரூபிச்சீட்டீங்க அண்ணா...

  ReplyDelete
 51. வித்தியாசமான காமடி, ரொம்ப அசத்தல் இடையில் என்னுடைய தம்மும் வந்து விட்டது.

  இதிலிருந்து எல்லாரையும் நீங்க டீப்பா வாட்ச் பண்ணி ரூம் போட்டு யோசிச்சீங்களோ?

  அப்ப ரொமப் வெண்டைக்காய் சாப்பிட்டீங்கலா? இவ்வள்வு ஞாபக சக்தி, மூளைய நல்ல கசக்கி பிழிஞ்சி எழுதிட்டீஙக் , ரொமப் சிரிச்சாச்சு

  கத்திரி கோல் காமடி ம்ம்ம்ம்ம் ஹிஹ் ஈ

  ReplyDelete
 52. @பித்தனின் வாக்கு மற்றும் Jaleela

  வித்தியாசமான காமடி, ரொம்ப அசத்தல் இடையில் என்னுடைய தம்மும் வந்து விட்டது.
  இதிலிருந்து எல்லாரையும் நீங்க டீப்பா வாட்ச் பண்ணி ரூம் போட்டு யோசிச்சீங்களோ?
  அப்ப ரொமப் வெண்டைக்காய் சாப்பிட்டீங்கலா? இவ்வள்வு ஞாபக சக்தி, மூளைய நல்ல கசக்கி பிழிஞ்சி எழுதிட்டீஙக் , ரொமப் சிரிச்சாச்சு
  கத்திரி கோல் காமடி ம்ம்ம்ம்ம் ஹிஹ் ஈ
  //


  வணக்கம் சார்.. ரொம்ப கலாய்சிட்டோமுனு நினக்கிறேன்..
  தவறாக எண்ண வேண்டாம்..

  (அன்பு அதிகமா பீறிட்டு.. கடைசியா , எங்களாலேயே கண்ரோல் பண்ண முடியாம போயிடுச்சு..அதற்காக
  எங்களை தண்டித்து விடாதீர்கள்..)

  நன்றி
  பட்டாபட்டி மற்றும் வெளியூரு...

  ReplyDelete
 53. @@@@பட்டாபட்டி.. said...
  வணக்கம் சார்.. ரொம்ப கலாய்சிட்டோமுனு நினக்கிறேன்..தவறாக எண்ண வேண்டாம்..///

  யோவ் பட்டாப்பட்டி அவங்கல்லாம் ரசிச்சு பாராட்றது பித்தன் அண்ணேன் பதிவுல கன்னாபின்னான்னு கலாசிருகாருள்ள..அந்த நகைசுவைய பத்தியா...!..இப்ப நீ என் தேவை இல்லாம தலைய உள்ள விடற..!..அப்பறம் அண்ணேன் நம்ம ரெண்டு பேரையும் வெளியே போங்கடா அயோக்ய ராஸ்கல்னு திட்டவா..!! (அண்ணேன் ஏன் அண்ணேன் எங்க ரெண்டு பேரையும் நீங்க திட்டவே மாட்றீங்க..நல்ல நறுக்குன்னு நாலு கெட்ட வார்த்தைல திட்டுங்க அண்ணேன்..பயந்து போய் ஓடி போய்றோம்..இனிமே இந்த பக்கம் வரவே மாட்டோம்..!!)

  ReplyDelete
 54. எதையா எல்லாரும் சேர்ந்து இப்டி கன்னாபின்னான்னு பாராட்றாங்க..இரு..ஒரு தடவ நானும் போய் ஒழுங்கா படிச்சு பார்த்துட்டு வர்றேன்...!!

  ReplyDelete
 55. நன்றி குடுகுடுப்பை அய்யா,
  நன்றி முருகு, நான் மான் கறி வாங்கும் போது பக்கத்தில் இருந்தேன். ஆஸ்த்திரோலியா மானுக்கும், மத்த மானுக்கும் ஏன் விலை வித்தியாசம், இது புள்ளி வச்சுக்குக் கோலம் போட்ட மானா? கோலம் போடாதா மானா என முகையாரிடம் கேட்டேன். இதுக்கு பயந்துக்கிட்டு அவர் சமைக்கும் போதும், சாப்பிடும் போது கழட்டி விட்டு விட்டார்.
  நன்றி சின்ன அம்மினி,
  நன்றி டீச்சர்,
  நன்றி சித்ரா, அதுதான் பசை குவாலிட்டி இல்லைன்னு சொல்றாங்களே. இதுக்கு மேல வாயைத் திறந்தா அடி விழுகாது. அதான் திறக்க வில்லை.
  நன்றி கண்ணகி,
  நன்றி ஜெய்லானி,
  நன்றி சைவ கொத்துபுரோட்டா,
  நன்றி நட்புடன் ஜமால்,
  நன்றி சாருஸ்ரீராஜ், அதான் மப்புன்னு சொல்லிட்டனே.
  நன்றி மங்குனி, எட்டாங்க கிளாஸ் பாஸ் பண்ண வாழ்த்துக்கள்.
  நன்றி ஸாதிகா, பெரிய அம்மாவிற்க்கு வயசு 87 ஆதலால் அவங்க பெண் பார்க்க இயலாது. அந்தப் பொறுப்பை எங்க இரண்டு பெரிய அண்ணிகள் எடுத்து இருக்காங்க.
  நன்றி சேட்டைக்காரன்.
  நன்றி பட்டாபட்டி, வெளியூரு.
  நன்றி வால் பையன். பார்முலா சொல்லுங்க, ஈரோட்டுல பாக்டரி கட்டிருவம்.
  நன்றி திவ்யாஹரி, இனிமேல் குறைத்துக் கொள்கின்றேன்.
  நன்றி மலிக்கா,
  நன்றி ரெட்டைவால்,
  தங்களின் முதல் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி சிவாஜி சங்கர்.
  நன்றி தண்டோரா,
  நன்றி கானா பிரபா,
  நன்றி மேனகா சத்தியா,
  நன்றி நசரேயன். உங்களுக்கும் நல்லா சமைக்கத் தெரியும் எனக்கு தெரியும் சார். சும்மா ஒரு காமெடிக்காத்தான் எழுதினேன்.
  நன்றி ஸ்ரீராம்,
  நன்றி தேன்மயில் லஷ்மணன்.
  நன்றி நாடோடி,
  நன்றி பிரியமுடன் பிரபு,
  நன்றி கவிதாயினி தமிழ்.
  நன்றி ஜலில்லா, சமையலைப் பத்தி எழுதும் போது, உங்க பேரும் , மேனகா பேரும் கண்டிப்பா நினைவுக்கு வரும். போன தடவை அவர்களை இரண்டு முறை எழுதியதால் இப்ப எழுதலை.
  நன்றி காஞ்சி முரளி, வரது நல்லாயிருக்காரா?
  பின்னூட்டமும், ஓட்டுக்களும் இட்ட அனைவருக்கும் நன்றி.

  ReplyDelete
 56. அனைத்தும் கலக்கல்.

  ReplyDelete

என்னை வளர்க்க, கருத்துரையிடுக...

பதிவைப் படித்து கருத்து போடலைனா
உங்க கனவுல பூதம் வரும்,,, ஆமா சொல்லிட்டேன்.