Wednesday, March 3, 2010

சிந்து சமவெளியில் இருவர் - 4








மோரிஸையும், மொளனிகாவையும் ஒன்றாக கண்ட டைரிஸின் விழிகள் ஆத்திரத்தால் சிவந்தன. கைகள் உடைவாளை நோக்கிச் சென்றன. அந்தக் கோபத்தில் கூட அவனது மூளை சிந்திக்கத் தொடங்கியது. அவரசப்பட்டுப் போரிட்டால் தான் மோரிஸிடம் தோற்று அவமானப்பட நேரிடும். அல்லது இருவரையும் ஊரைக்கூட்டி காட்டிக் கொடுக்கலாம் என்றால், அப்போது காதலும், காந்தர்வ விவாகமும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று, ஆதலால் ஊரார் இணைத்து வைத்து விடுவர். நாமே இருவரையும் இணைத்தது போல ஆகிவிடும். தந்திரமாக எதாவது செய்யவேண்டும் என்ற சிந்தனையில் அங்கிருந்து சத்தமில்லாமல் மனதிற்க்குள், தனக்குக் கிடைக்காத மொளனிகா, மோரிஸிக்கும் கிடைக்கக் கூடாது என்ற நினைப்பில் நகர்ந்தான்.

காலம் கடப்பதைக் காதலி நினைவூட்ட மோரிஸ் அவளிடம் விடைபெற்றுத் தன் இல்லம் வந்தடைந்தான். இரவு உண்டு உறங்கச் செல்லும் முன்னர் அவனது தந்தை அவனிடம் யாஹீவின் மகளை மணமுடிக்கும் எண்ணத்தைச் சொன்னார். அதுக்கு அவன் முதலில் மழுப்பலாக பதிலளித்தவன், பின்னர் அவனுக்கும் மொளனிகாவிற்க்கும் இடையிலான காதலைச் சொன்னான். அவன் பதிலால் அதிர்ந்த அவனது தந்தை, அந்தஸ்த்தைக் காரணம் காட்டி நிராகரித்தார். இருவருக்கும் கருத்துக்கள் பரிமாற்றத்தில் வார்த்தைகள் தடித்தன. மோரிஸ் முடிவாக சொல்லிவிட்டான், தான் மொளனிகாவைத் தவிர வேறு எந்தப் பெண்ணையும் மணமுடிக்க விருப்பம் இல்லை என்று.இதுவரை எதுக்கும் எதிர்வாதம் செய்யாத மகன் தன்னை எதிர்த்துப் பேசிய கோபத்தில் அவரும், தான் இருக்கும் வரை மொளனிகா உன்னை திருமணம் செய்ய வாய்ப்பு இல்லை என்றும், நீ யாஹீவின் மகளை மணமுடிக்க வேண்டும் என்றும் கூறிவிட்டார். மோரிஸ் தன் அறைக்குப் போய்விட்டான்.

அதே சமயம் டைரிஸிம் தன் தந்தையிடம் இது பற்றி விவாதித்துக் கொண்டு இருந்தான். அவனது தந்தை இதில் என்ன தவறு என்று கூறிக் கொண்டு இருக்க, டைரிஸ் அவருக்கு எதிராக தூபம் போட்டுக் கொண்டு இருந்தான். ஏழைகள் எல்லாருடனும் சம்பந்தம் செய்தால், நாளை மணமகன் கேக்கும் அளவுக்கும், பின்னர் நம்மிடம் பதவியில் உரிமை கேக்கும் அளவுக்கு வளர்ந்து விடுவார்கள். இதை ஆரம்பத்திலேயே கிள்ளி எறிவது நலம் என்பது அவனது வாதம்.பதவிக்கு ஆபத்து என்றவுடன் அவரும் இது குறித்து மோரிஸீன் தந்தையிடம் பேசுவதாகக் கூறினார். இந்த விஷயம் மொளனிகாவின் தந்தையிடமும் பகிரப்பட்டது. அவர் தன் மகளின் விருப்பத்திற்க்கே அல்லது காதலுக்கே எதிரி அல்ல என்றாலும் ஊராரின் அவப்பெயருக்கு அஞ்சி,காதலுக்குத் தடையாக இருந்தார். அந்த நீண்ட இரவில் நிம்மதியாகத் தூங்கியது ஒரு இதயம் மட்டுமே. அது டைரிஸ் மட்டும்தான்.











மறுனாள் மோரிஸ் தன்னைச் சந்தித்த மொனிகாவிடம் தன் வீட்டில் நடந்தவற்றைக் கூறினாள். காதலர் இருவரும் தங்களின் குடும்பத்தார் எதிர்ப்புகளைக் கண்டு வருந்தினர். மோரிஸ் அவளிடம், கண்ணே நான் உன்னை மணக்க என் சொத்துத்தான் தடை என்றால் அந்த சொத்து உற்றார் உறவினர் என எதுவும் தேவையில்லை. வா நாம் காந்தர்வ விவாகம் செய்து,கடல் கடந்து போவேம். கிரேக்கம்,சுமோரியா என நாம் உலகை வலம் வருவேம். யார் குறுக்கே வந்தாலும் இந்த வாளுக்கு இரையாவார்கள் என்றான். ஆனால் மொளனிகா இதை ஏற்கவில்லை. மற்றவர்களுக்குப் பயந்து நாம் பெற்றவர்களை விட்டு ஓடுவதா?. நம் திருமணம் அவர்களின் ஆசியுடன் தான் நடக்கவேண்டும், அப்படி இல்லை என்றால் என்று கூறி நிறுத்தினாள். மோரிஸ் இல்லை என்றால் என்று அவளை நெருங்கிக் கேட்டான். நமக்கு மணமாலை சூடுவதும்,பிணமாலை சூடுவதும் நம் பெற்றவரின் விருப்பம் என்றாள் கண்ணீருடன். மோரிஸ் கலங்கிப் போனான். அவள் கண்ணீரைத் துடைத்த வண்ணம், மொளனிகா உன் விருப்பம் எதுவே அதுவே என் விருப்பமும். நீ எப்படி சொன்னாலும் நான் கட்டுப்படுவேன் என்றான். நாம் மீண்டும் இருவரும் நம் பெற்றவரிடம் மன்றாடுவேம், அப்படி இல்லை என்றால் இன்னமும் பத்து தினங்களில் காந்தர்வ விவாகம் செய்வேம், என்றாள் ஒரு நிபந்தனையுடன். அவனும் சம்மதிக்க, காதலர் இருவரும் வேதனையுடன் அனைத்தனர். தொடரும். நன்றி.

4 comments:

  1. ஆசையை...ச்சே ஆர்வத்தை கூட்டிடிங்களே சார்.

    ReplyDelete
  2. //சும்மா சொன்னேன். மங்குனி இப்படிப்பட்ட பின்னூட்டங்கள் தான் நாம் தொடர்ந்து எழுத வைக்கும் டானிக் அல்லது ஊக்க மருந்து//.

    சார் நான் சும்மா காமெடிக்கு சொன்னேன் தப்பா எடுத்துகாதிங்க , உண்மையில் அருமையா கப்பல் போயிட்டு இருக்கு சார்

    ReplyDelete
  3. நமக்கு மணமாலை சூடுவதும்,பிணமாலை சூடுவதும் நம் பெற்றவரின் விருப்பம் என்றாள் கண்ணீருடன்.

    ..........அட அட அட........ அண்ணாச்சி - கூடிய சீக்கிரம் தமிழ் படத்துக்கு வசனம் எழுத அழைக்கப் படுவார்.

    ReplyDelete
  4. நன்றி ஜெய்லானி,
    நன்றி சித்ரா,
    நன்றி மங்குனி அமைச்சரே.
    அனைவருக்கும் எனது நன்றிகள்.

    ReplyDelete

என்னை வளர்க்க, கருத்துரையிடுக...

பதிவைப் படித்து கருத்து போடலைனா
உங்க கனவுல பூதம் வரும்,,, ஆமா சொல்லிட்டேன்.