Monday, October 12, 2009

சீரக மிளகு (பூண்டு இரசம்)

இன்று நாம் சீரக மிளகு இரசம் பற்றிப் பார்ப்போம். இந்த இரசம் உடல் நலத்திற்கு நல்லது. மழைக்காலத்திலும்,குளிர்காலத்துக்கும் ஏற்றது.
தேவையான பெருட்கள்:
1.தனியா அல்லது கொத்தமல்லி ஒரு பிடி(கையளவு)
2.சீரகம் அரைப்பிடி.
3.மிளகு அரைப்பிடி.
4.புளி சிறிதளவு.
5.மஞ்சள் பொடி, பெருங்காயத்தூள் ஒரு ஸ்பூன்.
6.பச்சைக்கொத்தமல்லி.
7.பூண்டு 5 பல்.

தாளிக்க
1.கடுகு
2.எண்ணெய்.
3.கறிவேப்பிலை.
4.வரமிளகாய் மூன்று.

முதலில் புளியைக் கரைத்து கொட்டியாக உள்ள புளிக்கரைசலில் ஒன்றுக்கு மூன்று பங்கு நீர் சேர்க்கவும்.இந்த இரசத்தில் புளிப்பு அதிகம் தேவையில்லை. பின் அகலாமான பாத்திரத்தில் விட்டு அடுப்பில் வைக்கவும். இந்த கரைசலில் மஞ்சத்தூள், பெருங்காயத்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிவிடவும்.
இது கொதிக்கும் போது தனியா,சீரகம் மற்றும் மிளகு சேர்த்து மிக்ஸியில் இட்டு அரைக்கவும். தண்ணிர் விடாமல் இரசப் பொடி போல மைய அரைக்காமல் உதிரியாக அரைக்கவும்.ஒரு நிமிடம் அரைத்தால் போதும். முதலில் புளித்தண்ணிர் பச்சை வாசம் போகக் கொதித்தவுடன் தோலுரித்த பூண்டை சிறு சிறு துண்டுகள் ஆக்கி இதில் சேர்த்து ஒரு கொதிவிடவும். பின் கொதிக்கும் தண்ணிர்க் கரைசலில் அரைத்த இரசப் பொடியை சேர்த்து ஒரு கொதிவிட்டு நுரை கட்டியவுடன் இறக்கி வைத்து தாளித்துக் கொட்டவும்.
இரசம் மீது பச்சைக் கொத்தமல்லியை அலம்பி கையால் பிய்த்து போட்டு மூடி வைத்தால் வாசனையான அருமையான இரசம் ரெடி. இந்த இரசத்தை தெளிவாக இறுத்து டம்ளரில் இட்டு குடிக்கலாம். வாயு மற்றும் ஜலதேசத்திற்கு சாப்பிட அருமையாக இருக்கும்.இந்த இரசப் பொடியை அரைத்து வாசம் போகமல் ஒரு பாட்டிலில் போட்டு வைத்துக் கொண்டால் எப்போது வேண்டுமானலும் நிமிடத்தில் இரசம் ரெடி செய்யலாம். நன்றி.

அடுத்த சமையல் பதிவில் ஞாயிற்றுக் கிழமை மாலைகளில் கொறிக்கும் வகைகளை பார்ப்போம். அதில் முதலில் கடலைமசாலா என்னும் வித்தியாசமான வகையப் பார்ப்போம்.

3 comments:

  1. அருமையாயிருக்கு,செய்துப் பார்த்து சொல்றேன் ப்ரதர்!!

    ReplyDelete
  2. ரசம் சாப்டாச்சு... ரொம்ப நல்லாருக்கு.
    இப்போ கடலை மசாலாவுக்கு ஆவலோட காத்துக்கிட்டு இருக்கேன்.

    ReplyDelete
  3. அருமையாயிருக்கு,செய்துப் பார்த்து சொல்றேன் ப்ரதர்!!

    ரசம் சாப்டாச்சு... ரொம்ப நல்லாருக்கு.
    இப்போ கடலை மசாலாவுக்கு ஆவலோட காத்துக்கிட்டு இருக்கேன்.

    நன்றி ஹேமா,சுசி, மேனகா சத்தியா.

    ReplyDelete

என்னை வளர்க்க, கருத்துரையிடுக...

பதிவைப் படித்து கருத்து போடலைனா
உங்க கனவுல பூதம் வரும்,,, ஆமா சொல்லிட்டேன்.