Friday, November 13, 2009

ராணி என் மகாராணி - மஜா கவிதை

சில்லென்று மணக்கும் மல்லிகையைத்
தலையில் சூட்டி,அள்ளி அனைத்து
ஆதரவாய் கரம் கேத்து மகிழ
வரும், ராணி என் மகாராணி,

ஜாதி மல்லியின் வாசத்தில்
நீ ஒரு உயர் ஜாதி என
உன் பாதம் தாங்கி அழகு பார்க்க
வரும், ராணி என் மகாராணி,

செண்பகமே மணம் வீச
உன் கூந்தல் என் முகத்தில்
அலைபாய,ஆனந்தமாய் நான்
மயங்க, ராணி என் மகாராணி,

காம்பு தாங்கா ரோஜப்பூ
உன் கூந்தலின் ஓரத்தில்
அழகு சேர்க்க, நான் மயங்கி
நிற்க, ராணி என் மகாராணி,

முல்லை மலரனிந்து சிங்காரித்து
முத்து பல் வரிசையில்
நீ சிரிக்க, நான் இரசித்து
மகிழ, ராணி என் மகாராணி,

மெட்டு அவிழ்ந்த தாமரை போல
கட்டு அவிழ்ந்த காமத்தில் மயங்கி
மார்கழி குளிர் போக அனைத்து
விழி நீருடன் இருமனமும் கலர்ந்து
இருக்க, ராணி என் மகாராணி

தாழம்பூ மயக்கத்தில் பினைந்திடும் பாம்புகளாய்
நாம் இருக்கும் நாள்,எந்த நாளே
நீ வரும் நாளும்,எந்த நாளே
ராணி என் மாகாராணி.

டிஸ்கி: கவிதையைப் படித்து யாரும் தப்பா எடுத்துக்காதிங்க. நம்ம அறிவு அப்ப அப்ப இப்படித்தான் கிளைவிடும்.
கொஞ்ச நாளா தனிமை ரொம்ப பேரடிக்குது. அதுனால எங்க வீட்டுல ஒரு தங்க மணியைப் பார்க்க சொல்லிவிட்டேன். அடுத்த ஜீன் அல்லது ஜூலையில் மோளம் கொட்டியிரலாம் என்று ஆசை.
இம்ம் தங்கமணி வந்து இதைப் படித்து உதைக்கப் போறா. உதை வாங்க நானும் ரெடீய்ய்ய்ய்ய்.
நன்றி.

14 comments:

  1. ரொம்ப சந்தோஷம் அண்ணா....
    அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

    கல்யாண சாப்பாடு பார்சல் அனுப்பிடணும் சொல்லிட்டேன்.

    அவங்க பேரு ராணியா ???

    ReplyDelete
  2. அட்வான்ஸ் வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  3. இப்பவாவது மனசு வந்ததே!

    ReplyDelete
  4. கல்யாண வாசம் இப்பவே வீச ஆரம்பிச்சாச்சு.
    சமையலும்..... மாப்பிள்ளை நீங்கதானே !

    ReplyDelete
  5. நன்றி சுசி, பெண்ணு இப்பத்தான் தேடிக்கிட்டு இருக்காங்க, அது ஆகும் இன்னம் மூணு மாசம். நான் இராணின்னு சொன்னது வந்துட்டாங்கன்னா அவங்க தான ராணி. அந்த அர்த்தத்தில் சொன்னேன்.
    நன்றி மேனகா சத்தியா,
    // இப்பவாவது மனசு வந்ததே! //
    மனசு வருலை வால்ஸ், தனிமை குறித்து பயம் வந்துவிட்டது. துணை வேண்டும் என்ற எண்ணம் வர காரணம், என் பெரிய குடும்பத்தை பிரிந்து நான் இங்கு தனிமையில் இருப்பதுதான். நன்றி வால்ஸ்.
    நன்றி சுவையான சுவை

    // கல்யாண வாசம் இப்பவே வீச ஆரம்பிச்சாச்சு.
    சமையலும்..... மாப்பிள்ளை நீங்கதானே ! //
    ஆகா ஆரம்பிச்சுட்டாங்கப்பா ஆரம்பிச்சுட்டாங்க, என்ன ஹேமா விட்டா அட்வான்ஸா ஒரு கரண்டி, பாத்திரம் எல்லாம் கிஃப்ட் கொடுத்து சமையலறை உள்ள தள்ளி விடுவிங்க போல இருக்கே. நன்றி ஹேமா.

    ReplyDelete
  6. நன்றி நாதாஸ், தங்களின் முதல் வருகைக்கும், பின்னூட்டத்திற்க்கும் நன்றி.

    ReplyDelete
  7. மேனகா சத்தியா நான் அப்ப அப்ப அக்கான்னு கூப்பிடுவது அப்படியாவது என் வயசை குறைக்கலாம் அல்லவா?

    எனக்கு வயது 14தான் ஆகின்றது. நீங்க வேணா திருப்பிப் போட்டுக்குங்க, நன்றி.

    ReplyDelete
  8. வாழ்த்துக்கள் மச்சான்...

    ReplyDelete
  9. அட்வான்ஸ் வாழ்த்துக்கள்

    ReplyDelete

என்னை வளர்க்க, கருத்துரையிடுக...

பதிவைப் படித்து கருத்து போடலைனா
உங்க கனவுல பூதம் வரும்,,, ஆமா சொல்லிட்டேன்.