Tuesday, November 3, 2009

கொள்ளு மசியல், கொள்ளு இரசம் மற்றும் கொள்ளு சுண்டல்

மேனகா சத்தியா அவர்கள் கொள்ளு பீன்ஸ் உசிலி பதிவு போட்டாங்க, சுவையான சுவை பதிவில் கொள்ளு தோசை போட்டார்கள். சரி இந்த வாரம் கொள்ளு வாரம் ஆக போட்டால் என்ன என்று தோன்றியது. ஆதலால் நான் கொள்ளு மசியலும், கொள்ளு இரசமும் பதிவிடலாம் என்று உள்ளேன். குளிர் காலத்தில் உடலுக்கு உஷ்ணமும், அதிக சக்தியும் கொடுப்பது கொள்ளுதாங்க( என்ன இரங்கமணி கொஞ்சம் வம்பு பண்ணுவார், அப்புறம் என்ன பண்ண, சூட்டைக் கிளப்பியது நீங்கதான ). பாக்கியராஜ் முருங்கைக்காய் மாதிரி கொள்ளுக்கும் அந்த சக்தி உண்டுங்க. சரி கொள்ளு மேட்டரை சொல்லியாச்சு(பத்த வச்சுட்டியே பரட்டை). பதிவுக்குப் போவேமா. முதலில் கொள்ளு மசியல் பார்ப்போம். இது ஒன்னும் பெரிய விசயம் இல்லீங்க. நீங்க பாசிப்பருப்பு மசியல் பண்ணுவிங்க இல்ல, அந்த பார்முலாதான் இதுக்கும்.

தேவையான பொருட்கள் :

1. கொள்ளு அரைக்கிலோ,
2. சின்ன வெங்காயம் 8,
3. பச்சை மிளகாய் மூன்று,
4. தாளிக்கும் பொருள்கள்.

முதலில் கொள்ளு நல்லா அலம்பி சுத்தம் செய்து, கொள்ளு மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு(இரண்டரை டம்ளர்), அரை ஸ்பூன் உப்பு போடவும். குக்கரில் ஏழு அல்லது எட்டு விசில் விடவும். பின் கொள்ளு வெந்தவுடன் கொள்ளு வெந்த தண்ணீரை வடித்து சேகரித்துக் கொள்ளவும்.(இரசத்திற்கு). கொள்ளு மசிய வேகாமல் இருந்தால் அதை கொஞ்சம் கடைந்து கொள்ளவும் அல்லது மிக்ஸியில் நாலு சுற்றுக்கள் சுற்றவும். பின் ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு கொஞ்சம் கடுகு.வெள்ளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, ஒரு ஸ்பூன் பெருங்காயத்தூள், அரை ஸ்பூன் மஞ்சசத்தூள், இரண்டாக நறுக்கிய பச்சை மிளகாய், கொஞ்சம் கருவேப்பிலை போட்டு தாளித்து பின் அதில் சின்ன வெங்காயத்தை தோலுரித்து இரண்டு அல்லது நாலு துண்டுகளாக நறுக்கிப் போட்டு வதக்கவும். வெங்காயம் வதங்கியவுடன் கொள்ளு மசியலை அதில் போட்டு தேவையான அளவு உப்புப் போட்டு, கொஞ்சமாக களறி இறக்கவும். கொள்ளு மசியல் ரெடி. இனி கொள்ளு இரசம் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

1. கொள்ளு வேகவைத்த தண்ணீர் இரு டம்ளர்,
2. புளிக்கரசல் முக்கால் டம்ளர்,
3. சீரகம் ஒரு ஸ்பூன்,
4. மிளகு 10,
5. தணியா அல்லது கொத்தமல்லி ஒரு பிடி
6.பூண்டு நாலு பல்
7.சின்ன வெங்காயம் 4,
8. தாளிக்கும் பொருள்கள்.


முதலில் புளிக்கரசல் கொட்டியாக உப்பு, மஞ்சத்தூள் பெருங்காயம் போட்டு கொதிக்க வைத்து ரெடி பண்ணவும். பின் சீரகம், மிளகு, தணியா ஆகியனவற்றை பொடியாக ஒரு முக்கால் திட்டம்(மைய அரைக்காமல் உதிரியாக) அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். புளித்தண்ணீர் கொள்ளுத் தண்ணீர் ஆகியன கலர்ந்து நல்லா கொதிக்கவிடவும். இது நுரை கட்டும் போது அரைத்த பொடியைப் போட்டு கலக்கவும். பின் நுரை கட்டி வரும் போது அடுப்பை சிம்மில் வைத்து, பக்கத்து அடுப்பில் தாளிக்கவும். கொஞ்சம் எண்ணெய்யில் கடுகு, பெருங்காயத்தூள் மற்றும் மஞ்சள் பொடி கருவேப்பிலை போட்டு அதில் நாலு சின்ன வெங்காயத்தை தோலுரித்து கையில் ஒரு தட்டுத் தட்டிப் போடவும், பூண்டையும் சிறு துண்டுகளாக நறுக்கிப் போடவும். வெங்காயம்,பூண்டு வதங்கியவுடன் இரசத்தில் கொட்டி ஒரு கொதி விட்டு இறக்கவும். கொஞ்சம் நேரம் மூடி வைக்கவும். இரசமும் ரெடி.

இதற்கு ஊறுகாய், அப்பளம் மற்றும் வடகம் நல்ல காம்பினேசன் ஆகும்.

கொள்ளு சுண்டல் :

இதில் வெந்த கொள்ளைக் கொண்டு மசியல் பண்ணாவிட்டால், வெங்காயம் போட்டுத் தாளித்து தேங்காய் துருவல் போட்டு சுண்டல் செய்யலாம். சுண்டல் தண்ணீரிலும் இரசம் செய்யலாம்.
பெரியவர்கள் இதை உடலுக்கு உஷ்னம் என்று செல்வார்கள், ஆதலால் கர்ப்ப காலத்தில் தவிர்க்கவும். குளிருக்கு ஏற்றது.

டிஸ்கி : எனக்குத் தெரிந்து ஜந்து அல்லது ஆறு பதிவர்களுக்கு மேல் சமையல் பதிவுகளை எழுதுகின்றனர். இவர்கள் ஒரு குழுவாக சேர்ந்து வாரம் ஒரு வகை அல்லது காய். ரெசிப்பிஸ் எடுத்து அதில் அவர்களுக்கு தெரிந்தை பதிவிட்டால் என்ன. ஒரு ஒழுங்கும்,குழு உணர்வும் இருக்கும் அல்லவா. சிந்திக்கவும். நன்றி.

22 comments:

  1. கொள்ளு மசியல், ரசம் ரெண்டும் அருமையா இருக்கு

    ReplyDelete
  2. கொள்ளூ ரெசிபி இரண்டுமே சூப்பர், செய்து பார்த்து விட வேண்டியது தான்

    ReplyDelete
  3. கொள்ளு ரசம் என்னுடய பேவரட் மெனு!
    ஆனா செய்யத்தான் தெரியாது!

    ReplyDelete
  4. ஆஹா... அருமைங்க... கொள்ளு கேள்விப் பட்டிருக்கேன்... பார்த்ததில்ல... :(...

    ReplyDelete
  5. செய்வது மிகச் சுலபம். கொள்ளு சுண்டல் குக்கரில் வேகவைத்து தண்ணீயை எடுத்து புளித் தண்ணீரைக் கலர்ந்து செய்ய வேண்டும். இந்த இரசம் சாப்பிடுவதை வீட குடிக்க நல்லா இருக்கும். நன்றி வால்ஸ்

    ReplyDelete
  6. நன்றி. சாருஸ்ரீராஜ்,ஜெலிலா மற்றும் வாண்டுப் பிரியா.

    ReplyDelete
  7. கொள்ளு வாராமா...சூப்பர்ப்....

    வாரத்திற்கு ஒரு முறை கண்டிப்பாக எங்கள் வீட்டில் கொள்ளு சமையல்...(எற்கனவே கொள்ளுகின்ற சமையல் என்பது வேறு விஷயம்!!!!!!!!!!!)

    கொள்ளு ரசத்தில், சின்ன வெங்காயம் சேர்ப்பது புதுசு...நாங்கள் பொதுவாக ரசத்தில் வெங்காயம் சேர்க்க மாட்டோம்.

    ReplyDelete
  8. கொள்ளு இங்க கிடைக்குமான்னு தெரியல. விசாரிச்சு பாத்து வாங்கி செய்து பாக்கிறேன் சுதாண்ணா.

    சமையல் பதிவு ஐடியா நல்லா இருக்கு. எல்லாரும் சேர்ந்து செயல்படுத்தினா நல்லது.

    ReplyDelete
  9. ஆஹா இதென்ன கொள்ளு வாராமா...உங்க சமையல் பதிவுகள் அனைத்தும் அருமை பித்தன்.ரசத்தில் வெங்காயம் சேர்க்க மாட்டோம்.நீங்க சேர்த்திருப்பது புதுசா இருக்கு..

    ReplyDelete
  10. நாங்க அடிக்கடி செய்யறது கொள்ளுப்பருப்பு, பொடி, ரசம். எங்க வீட்ல எல்லோருக்கும் பிடித்தது கொள்ளு

    ReplyDelete
  11. குழு பதிவு நல்லா இருக்கும்.english cookary blogs ல மாசத்துக்கு ஒரு பொருள் வெச்சு பண்ணறாங்க. தமிழ்லயும் முயற்சி பண்ணினா நல்லா இருக்கும். கீதா, மேனகா யாரவது ஆரம்பிங்கப்பா.

    ReplyDelete
  12. ஒகே சார்
    நாங்களும் சேர்ந்துகொள்ளலாமா?
    இவன்
    தமிழ்குடும்பம்
    http://www.tamilkudumbam.com

    ReplyDelete
  13. ஆஹா ஆரம்பித்துட்டீங்களே ரெம்ப நல்லா இருக்கு உங்க கொள்ளு மசியல், கொள்ளு ரசம்

    ReplyDelete
  14. நானும் கொள்ளு ரசம் செய்து சாப்பிடுவேன்.
    பிடிக்கும்.வெங்காயம் போடமாட்டேன்,அதுதான் வித்தியாசப்படுது.

    ReplyDelete
  15. நன்றி.கீதா ஆச்சால்,சுசி,மேனகாசத்தியா,தெய்வசுகந்தி மற்றும் கவிதாயினி ஹேமா.

    தெய்வசுகந்தி கூறியது போல எங்கள் ஈரோடு,கோவை மாவட்டங்களில் கொள்ளு,கம்பு,இராகி போன்ற உடலுக்கு வலிமை தரும் தானியங்கள் சமைத்து உண்பது வாடிக்கை. எனது பதிவுகளில் வரும் சீரக மிளகு இரசம், கொள்ளு இரசம் ஆகியவற்றில் சிறுவெங்காயத்தை போடுவது எங்க அம்மாவின் முறை. இது அதன் சூட்டைத் தணிக்கும். இந்த இரு இரசத்தையும் தெளிவாக எடுத்து ஒரு டம்ளரில் குடித்தால் அருமையாக இருக்கும். தங்கள் அனைவரின் பெரும் ஆதரவுக்கு நன்றி.

    ReplyDelete
  16. மிக்க நன்றி. சுவையான சுவை அவர்களே.

    ReplyDelete
  17. தாரளமாக இணையலாம். நாங்களும் உங்கள் குடும்பத்தில் இணைவது எப்படி என்று கூறுங்கள். நன்றி.

    ReplyDelete
  18. // வாரத்திற்கு ஒரு முறை கண்டிப்பாக எங்கள் வீட்டில் கொள்ளு சமையல்...(எற்கனவே கொள்ளுகின்ற சமையல் என்பது வேறு விஷயம்!!!!!!!!!!!) //
    நல்ல பொருத்தம், எனக்குத் தெரிந்து நீங்கள் எல்லா சமையல் பதிவுகளிலும் பாலோயர் மற்றும் பின்னூட்டம் இடுகின்றீர்கள். மற்றும் உங்கள் பதிவுகளும் அருமை. ஆகவே உங்கள் வீட்டிலும், மேனகா சத்தியா வீட்டிலும் கண்டிப்பாய் மனதை அள்ளிக் கொள்கின்ற சமையாலகத்தான் இருக்கும். நன்றி.

    ReplyDelete
  19. கொள்ளுறிங்க !
    :)

    வூட்டுக்கார அம்மா சமயக்கட்டு பக்கம் போகத் தேவை இல்லை போல

    ReplyDelete
  20. என்னங்க அண்ணா வெறுப்போத்திறங்களே. நானே ஒரு ஊட்டுக்காரம்மா இல்லாம தவிச்சுட்டு இருக்கேன். வந்தா அசத்திடுவம் இல்ல.

    ReplyDelete
  21. குழந்தைகள் தின வாழ்த்துகள் என்றும் அன்புடன் வாழ்க வளமுடன்
    தமிழ்நெஞ்சம்

    ReplyDelete
  22. நன்றி தமிழ் நெஞ்சம், தங்களின் வருகைக்கும், முதல் பின்னூட்டத்திற்கும் எனது நன்றிகள்.

    ReplyDelete

என்னை வளர்க்க, கருத்துரையிடுக...

பதிவைப் படித்து கருத்து போடலைனா
உங்க கனவுல பூதம் வரும்,,, ஆமா சொல்லிட்டேன்.