Wednesday, November 18, 2009

அய்யப்பனின் அற்புதங்கள் - பாகம் 2சாமியே சரணம் அய்யப்பா.

எங்க பெரிய அண்ணா மாளிகைபுறத்து மஞ்சமாதா கோவிலில் சாமி கும்பிட்டுத் திரும்புகையில் கருவறையில் இருந்து எடுத்து வந்த தீபாராதனைத் தட்டு குருக்கள் பக்தர்களுக்குக் காட்டிவிட்டு திரும்பும் அவரின் கற்பூர நெருப்பு தவறுதலாக, எங்க அண்ணாவின் இடதுகை புஜத்தில் பட்டுவிட்டது. நல்லா சிவபெருமான் நெற்றிக்கண் மாதிரி அழுத்தமாக நீளவாக்கில் சூடு பட்டது. அங்கு கோவில் பூஜாரி எண்ணெய்யும், விபூதியும் குழைத்து இட்டு, கவலைப் படாதே, இது நல்லதுக்கு என்று நினைத்துக் கொள் என்றார். எங்க அண்ணா வீடு திரும்பி மருத்துவத்தில் காயம் குணமானது. இது நடந்தது 1983ஆம் வருடம். அன்றிலிருந்து இன்று வரை எங்க அண்ணாவிற்க்கு தொடந்து வந்த வலிப்பு வருவதில்லை. இது எதிர்பாராமல் நடந்த விபத்து மாதிரி என்றாலும், அந்த அய்யனின் கருனைக்கு ஈடு இல்லை. இது நடந்து பின் எங்க அண்ணா தொடர்ந்து ஒன்பது வருடங்கள் மலைக்குப் போனார்.

நான் கல்லூரி முடித்து சென்னைக்கு வந்து ஒரு பிரபலமான பெரிய நிறுவனத்தில் விற்பனை மற்றும் உதவிப் பிரதினிதியாக பணி புரிந்த சமயம். நான் என் சித்தியின் (அம்மாவின் தங்கை) வீட்டில் தங்கி பணிபுரிந்து வந்தேன். ஒரு நாள் மாலை பணி முடித்து வந்த போது எங்க சித்தி மகன் முரளியண்ணா என்னிடம், சுதா இந்த வருடம் நாம் மலைக்குப் போலாம்மா என்றார். எனக்கு மிகவும் வேண்டிய நாராயண குருசாமி போறார். அவருடன் போலாம்மா என்றார். எனக்கு அப்படியே கொள்ளை சந்தோசம். நான் உடனே எங்க அப்பா,அம்மா, பெரிய அண்ணா மற்றும் இரண்டாவது அண்ணாவின் சம்மதத்தைப் பெற்று, நானும், அவரும் 1991அம் வருடம் மாலையணிந்தேன். நான் மிகுந்த மகிழ்ச்சியுடன் சென்னையில் கழித்தேன். அப்போது நாங்கள் பழைய வண்ணையில் உள்ள தியாகராயா கல்லூரி மைதானத்தில் கிரிக்கெட் ஆடுவது வழக்கம். எங்கள் வீடு இந்த மைதானத்தின் பின்புறம் தான் இருந்தது.

மாலையிட்ட பின் ஒரு நாள் எங்கள் டீம் ஆடுவதை வேடிக்கைப் பார்க்க மைதானத்திற்க்கு சென்றேன். அப்போது அவர்கள் என்னை லெக் அம்பயரிங் பண்ணச் சொல்ல, நானும் அங்கு இருந்த ஒரு சிறு சைக்கிளில் உக்காந்து கொண்டு எங்கள் டீமுக்கு லெக் அம்பயரிங் பண்ணிக் கொண்டு இருந்தேன். அப்போது பக்கத்து பிட்ச்சில் ஆடும் ஒருவன் அடித்த சாட்டில் கார்க் பால் பேட்டில் இருந்து நேராக என் தாவாக் கொட்டையில்(முகவாய்) அடித்தது. அப்படியே கன்னத்தை பிடித்து அமர்ந்த எனக்கு தலை சுற்றியது, கண்கள் இருட்டியது. நான் இரண்டு கைகளையும் கன்னத்தைப் பிடித்துக் கொண்டு சரணம் அய்யப்பா என்று கத்தினேன். மறு நிமிடம் நான் சகஜ நிலையடைந்தேன். எனக்கு வலியே, வீக்கமே எதுவும் தெரியவில்லை. பந்து வந்த வேகமும், அடித்த சத்தமும் கேட்டு பயந்த பக்கத்தில் இருந்த அனைவரும், நான் சகஜமாக எழுந்ததைப் பார்த்து மிகவும் ஆச்சரியப் பட்டனர். மாலை வீட்டுக்கு வந்த முரளி சாமி (அண்ணா) என்னிடம் சாமி மாலை போட்டுட்டு விளையாட எல்லாம் போகாதிங்க, என்று சொல்லி அன்று புரசைவாக்கத்தில் ஒரு வீட்டு பூஜைக்கு அழைத்துச் சென்றார்.

நாங்கள் இருவரும் கன்னிசாமி என்னும் முதல் வருட சாமிகள் ஆதலால் நாங்கள் எங்கள் வீட்டில் கன்னி அய்யப்ப பூஜையும், அன்னதானமும் வைத்து இருந்தேம். எங்கள் வீட்டு பூஜை முரளி(தனலஷ்மி வங்கி) குருசாமியின் தலைமையில், நாராயண குருசாமியால் நடந்தது. பூஜை முடியும் சமயம் நான் முரளி குருசாமியின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கவும், கன்னி மூல கணபதியின் படத்தில் இருந்து பூ கீழே விழவும் சரியாக இருந்தது. உடனே அவர் என்னிடம் உனக்கு கன்னி மூல கணபதியின் அருள் கிடைத்து விட்டது. நீ இருமுடி கட்டும் மூன்று நாளைக்கு முன்னால் இருந்து உப்பில்லாமல் சாப்பிட்டு வா, கட்டு கட்டி முடித்ததும், பின்னர் சாப்பிடு என்றார். நானும் சரி என்று கூறி ஆசிவாதம் வாங்கிக் கொண்டேன். எங்களின் சபரிமலை யாத்திரைக்கான வாரமும் வந்தது. என்னுடைய கன்னி யாத்திரைக்கு இன்னும் ஜந்து நாள்கள் தான் பாக்கி இருந்தன. சரியாக ஜந்து நாள்களுக்கு முன்னர் இரவு நான் நல்லா உறங்கிக் கொண்டு இருந்தேன். அப்போது எனக்கு..... தொடரும். நன்றி.

11 comments:

 1. சரியான இடங்களில் தொடரும்போட நல்லாத் தெரிஞ்சுருக்கே!!!!!

  ReplyDelete
 2. நன்றி டீச்சர், எல்லாம் உங்க கிட்ட இருந்து கத்துக் கொண்டதுதான் டீச்சர்.

  ReplyDelete
 3. என்னையும் 8 மாசத்துல ஃபிட்ஸிலிருந்து காப்பாத்தினது ஐயப்பன் தான் அப்படின்னு அப்பா சொல்வார். அதனால் 6 வயதில் மலைக்கு கூட்டிகிட்டு போனார்.

  ReplyDelete
 4. //அப்போது பக்கத்து பிட்ச்சில் ஆடும் ஒருவன் அடித்த சாட்டில் கார்க் பால் பேட்டில் இருந்து நேராக என் தாவாக் கொட்டையில்(முகவாய்) அடித்தது. //

  :) படிக்கும் போது அடிப்பட்ட இடம் குறித்து கொஞ்சம் குழப்பம் ஏற்பட்டது ! அப்பறம் அடைப்புக்குறி போட்டு இருப்பதைப் பார்த்தும் தான்... தப்பிச்சிருக்கிறாருன்னு தெரிஞ்சது.

  ...ப்பூ சாட்டில் கார்க் பால் தானா ! எடை குறைவாக இருக்கும், அதுவே கிரிக்கெட் பால் என்றால் ....

  முன்னர் இரவு நான் நல்லா உறங்கிக் கொண்டு இருந்தேன். அப்போது எனக்கு..... கனவு வந்ததா ?
  :)

  சரி சரி இந்த முறைப் போனால் விரைவில் திருமணம் நடக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள்.

  ReplyDelete
 5. அடுத்த பதிவு எப்போ?

  ReplyDelete
 6. நல்லா எழுதி இருக்கீங்க அண்ணா...

  விட்ட பதிவுகளையும் படிச்சுட்டேன்....

  இப்போ தொடர வெயிட்டிங்.

  ReplyDelete
 7. நன்றி கோ.வீ. ஆர்,
  நன்றி மேனகா சத்தியா,
  நன்றி சுசி.
  நன்றி திரு. புதுகை தென்றல். அய்யப்பன் பலர் வாழ்விலும் புது வழிகளை உண்டு பண்ணியிருப்பார். அவர் உண்மையில் கலியுகத்தில் வாழும் கலியுக வரதன்.

  ReplyDelete
 8. அப்பு...சாமின்னு சொல்லிகிட்டே படிக்கிறேன்.அடுத்த பதிவையும் போடுங்கோ !

  ReplyDelete
 9. படியுங்கள் ஹேமா. ஸ்விஸ்ல கூட அய்யப்ப பூஜை வழிபாடுகள் நடப்பதாக திரு.தங்க முகுந்தன் கூறினார். நன்றி ஹேமா.

  ReplyDelete
 10. கொஞ்சம் சின்ன சின்ன பத்தியா எழுதுங்க. படிக்க சுலபமா இருக்கும். :)

  ReplyDelete
 11. நன்றி சின்ன அம்மினி, எழுதுகின்ற ஆர்வத்தில் பத்திகளை கவனிக்க வில்லை. இனி மாற்றிக் கொள்கின்றேன்.

  ReplyDelete

என்னை வளர்க்க, கருத்துரையிடுக...

பதிவைப் படித்து கருத்து போடலைனா
உங்க கனவுல பூதம் வரும்,,, ஆமா சொல்லிட்டேன்.