Thursday, November 12, 2009

அவன் தான் மனிதன் - நிறைவு

அத்தையின் மரணம் நடந்து சில வருடங்கள் கடந்தன. மைனரின் மகன் பெரியவன் ஆனான். அவருக்கு சாமியின் மூத்த மகளை மைனர் பெண் கேட்க, சாமியின் மகளுக்கும் விருப்பம் இல்லை. மறுபடியும் அந்த குடும்பத்துடன் சம்பந்தம் செய்ய சாமிக்கும் விருப்பம் இல்லை. மைனர் அரசுப் பணியாசிரியை ஒருவருக்குத் தன் மகனை மணம் செய்வித்தார். கொஞ்ச காலம் கழித்து, நல்ல வாட்ட சாட்டமான மைனருக்கு வந்தது இரத்தப் புற்று நேய். அந்தக் காலத்தில் புத்து வியாதிக்கு மருந்து கிடையாது. இப்போது செய்வது போல இரத்த மாற்று சிகிச்சையும் கிடையாது. மைனர் இரத்த வாந்தி எடுத்து இருமி, இருமிச் செத்தார். ஒரு குவளை தண்ணீர் குடித்தாலும் அதே அளவு இரத்த வாந்தி எடுப்பார். மிகவும் மெலிந்து, அமிழ்ந்து, படுத்த படுக்கையாய் பல நாட்கள் கஷ்டப் பட்டு இறந்தார்.

மைனரின் மகனும் நல்லவர். ஆனாலும் குடி அவரைக் கெடுத்தது. தன் சொத்துக்களில் பாதியைக் குடித்து அழித்தார். அவரின் மனைவி அவரிடம் இருந்து விலகிப்,பணியின் காரணமாக தன் குழந்தைகளை அழைத்துக் கொண்டு பக்கத்தில் இருக்கும் பின்னலாடை நகரில் குடி பெயர்ந்தார். கொஞ்ச காலத்தில் அவரும் மறைந்தார். அவரின் மனைவி இந்த சொத்து வந்த கதை எல்லாம் கேள்விப் பட்டு, நிலங்கள் அனைத்தையும் விற்று விட்டு நகரில் குடியேறிவிட்டார். என் சித்தப்பாவும் பொன்னையாவிற்குச் சொத்துக்களை விற்றார். பாப்பா அத்தை மட்டும் தனது சகோதரனுடன் ஜமின் வீட்டில் வசித்து வந்தார். என் அப்பா அத்தையின் வருமானத்துக்காகத் தன் நிலங்களை பாப்பா அத்தையின் பராமரிப்பில் கொடுத்தார். அத்தையின் மறைவுக்குப் பின் பொன்னையனும் மறைய, அவரின் மகனுக்கு எங்கள் பங்கு நிலங்களை என் அம்மாவின் வற்புறுத்தலின் காரணமாய் விற்றார். இப்போது எல்லாரும் எல்லா சொத்துக்களும் விற்ற நிலையில் யாருமின்றி அந்த ஜமின் வீடு மட்டும் பூட்டி இருக்கின்றது.

என் தந்தைக்கு பிரச்சனைகள் வந்த போது எல்லாம், தன் தங்கை கனவில் வந்து ஆறுதல் கூறியதாக என் தாயிடம் சொல்லியுள்ளார். பல சமயங்களில் அவருக்கு கனவில் செய்தி சொல்லியுள்ளார். அவர் தனது 73 மூன்றாம் வயதில் இரட்டை ஹிரண்யா அறுவைச் சிகிச்சை நடந்தது. அப்போது அவருக்கு இரத்த அழுத்தம் தொடர்ந்து 180 முதல் 145 வரை இருந்தது. அவருக்கு உறங்க காம்போஸ் மருந்து டிரிப்ஸ் மூலம் கொடுக்கப் பட்டது. நானும் என் அண்ணாக்களும் அவர் உறக்கத்தில் அவர் கையை ஆட்டி விடாமல் பிடித்துக் கொண்டு இரவும் பகலும் கண்விழித்துக் காத்து இருந்தோம். அப்போது நான் ஒரு கையில் புத்தகமும், மறு கையில் அப்பாவின் கையையும் பிடித்துக் கொண்டு அமர்ந்து இருந்தேன். அப்போது ஒரு ஹீம்ம்ம் என்று சத்தத்துடன் எழுவது போன்ற அசைவு அவரிடம் காணப் பட்டது. நான் பயத்தில் அப்பா, அப்பா என்று அவரை உலுக்க, அவர் கண் விழித்த அவர் சிரிப்புடன் என்னிடம் "அம்மா எங்க?" என்று கேட்டார். நான் வெளியில் அமர்ந்த அம்மாவை அழைக்க, என் அம்மாவிடம் எங்க அப்பா குழந்தையைப் போல சிரித்துக் கொண்டு சொன்னார். "கனவில் லஷ்மி வந்தாள்,அவள் என்னிடம் "அண்ணா நீ கவலைப் படாத உனக்கு இன்னமும் நாள் இருக்கு, நீ நல்லா இருப்பாய் என்று கூறிச் சென்றாள்" என்று முகமலர்ச்சியுடன் கூறினார்.அடுத்த இரு நாளில் அவர் பூரண குணம் பெற்று வீடு திரும்பினார்.

தன் பதிமூன்று வயதில் மணம் புரிந்து,பதினேட்டு வயதில் இல்லறம் தொடங்கிய சாமி. தொடர்ந்து 73 மூன்று ஆண்டுகள் என் தாயை விட்டு பத்து நாட்கள் கூட பிரிந்து இருந்ததில்லை. வீட்டின் அவரின் எல்லா வேளையும் அவரே செய்வார். எங்கள் வீட்டில் சாதம் சமைத்தவுடன், சாப்பிடுவதற்கு முன் அந்த சாதத்தை பெருமாளுக்கு நிவேதனம் செய்து,காக்கைக்கும் ஒரு பிடி வைத்து, பின்னர் சாப்பிடுவதுதான் வழக்கம். அதாலால் எங்கள் வீட்டில் தினசரி குளித்து விட்டுதான் சமைப்பது வழக்கம். அதுபோல குளித்து விட்டு பின் தண்ணீர் எடுப்பதும் வழக்கம். என் தந்தைதான் பெருமாளின் திருனாமங்கள் கூறியவாறு தண்ணீர் பிடிப்பார்.தண்ணீர் எடுத்த உடன் காப்பி குடித்து பின்னர் ஒரு மணிணேரம் பூஜையில் ஈடுபடுவது அவர் அன்றாட வழக்கு. நல்ல திடமான ஆரோக்கியத்துடன் தனது 89 வயது வரை வாழ்ந்த அவர், கடந்த 2008 ஆம் வருடம் ஆகஸ்டு மாதம் 7ஆம் தேதி காலை வழக்கம் போல நாராயணா, நாராயணா என்று உச்சரித்தவாறு குளித்த அவர் திருமண் என்று அழைக்கும் நாமம் இடுவதற்க்காக தலை நிமிர்ந்த அவர் தடுமாறி மயங்கினார். என் அம்மா அவருக்கு காப்பி எடுத்து வந்தவர் அதை மேஜையில் வைத்து விட்டு அவரை "என்னங்க" என்று தாங்கிப் பிடிக்க முடியாமல் அப்படியே படுக்க வைத்தார். அப்போது அவரை மருத்தவமனையில் சேர்க்க தலையில் ஸ்கேன் செய்ய வேண்டும் எனவும் கோவை அழைத்துச் செல்லவும் கூறினார்கள். கோவை பி எஸ் ஜீ மருத்துமனையில் அவருக்கு மூளையின் மத்திய நரம்பு மண்டல முக்கிய நரம்பான சென்ரல் வெரிக்குலர் நரம்பு வெடித்து மூளையில் மொத்தம் 16 இடங்களில் இரத்தம் கட்டியுள்ளதால் அவருக்கு மூளைச்சாவு ஏற்ப்பட்டுள்ளதாகவும், ஆனால் அவரின் உடல் உறுப்புகள் தொடர்ந்து செயல் புரிகின்றன. எப்போது மரணம் சம்பவிக்கும் எனத் தெரியாது என்றனர். வலி, வேதனை என்று எந்த உணர்வுமில்லாமல் கேமாவில் இருந்த அவருக்கு தூக்கத்தில் இருதய வலி வந்து மறுனாள் உயிரிழந்தார்.பதிமூன்று வயதில் ஆரம்பித்து 73 மூன்று ஆண்டுகள் மணவாழ்வில் அவருடன் சில நாட்கள் கூட பிரியாமல் வாழ்ந்த என் அம்மா இப்போது பேரன், பேத்தி என்று எங்களுடன் இருந்தாலும் வருத்ததுடன் இருக்கின்றார். ஒரு நல்ல மனிதரைப் பத்தி உங்களுடன் பகிர்ந்து கொண்டது எனக்கு மிக்க சந்தோசம். விடாது படித்து ஆதரவு அளித்த உங்கள் அனைவருக்கும் நன்றி. எனது அடுத்த விறு விறுப்பான அனுபவத் தொடர் வரும் செவ்வாய், கார்த்திகை முதல் நாள் அன்று தொடரும். அதுவும் அற்புதமான என் சொந்த வாழ்வில் நிகழ்ந்த அற்புதங்களைக் கொண்ட தொடர். அதற்க்கும் இது போன்ற ஆதரவு அளித்து உற்சாகப் படுத்துமாறு வேண்டி நன்றியுரைகின்றேன். நன்றி. சுபம்.

21 comments:

  1. நல்லதொரு அப்பா அம்மாவைப் பெற்றுக்கொள்வதிலும் அதிஸ்டம் வேணும்.கொடுத்து வைத்தவர் நீங்கள்.மனம் நெகிழ வாசித்து முடித்தேன்.அவரின் ஆசி என்றும் உங்களை ஆசீர்வதிக்கும்.நன்றி.அருமையான நல்ல ஒரு மனிதரின் கதை தந்தீர்கள்.

    ReplyDelete
  2. //எனது அடுத்த விறு விறுப்பான அனுபவத் தொடர் வரும் செவ்வாய், கார்த்திகை முதல் நாள் அன்று தொடரும். //

    என்னது அடுத்த கதையா ? 'உங்க' கதையா ?
    :)

    //வேதனை என்று எந்த உணர்வுமில்லாமல் கேமாவில் இருந்த அவருக்கு தூக்கத்தில் இருதய வலி வந்து மறுனாள் உயிரிழந்தார்.//

    உங்கள் அப்பாவின் ஆன்மா அமைதியடையட்டும்.

    ReplyDelete
  3. //அதுவும் அற்புதமான என் சொந்த வாழ்வில் நிகழ்ந்த அற்புதங்களைக் கொண்ட தொடர். //

    போச்சுடா இதுல யார் யார் வில்லனாக வரப் போறாங்கன்னு தெரியல, எதுக்கும் சுதாக்கருக்கு நெருங்கிய பதிவரல்லாத நண்பர்கள் படித்தால் அதிர்ச்சி அடையாமல் இருக்கனும்........சாமியோவ்

    ReplyDelete
  4. நன்றி ஹேமா, அப்பா அம்மா மட்டும் அல்ல மூன்று அக்கா, நாலு அண்ணா என நல்ல ஒரு குடும்பத்தை அமைத்த ஆண்டவனுக்கு நன்றி. உண்மை அப்பாவின் ஆசி என்றும் உண்டு. மிகவும் நன்றி ஹேமா.

    கோவியார் என் வாழ்க்கையில் நடந்த அற்புதம்தான் தொடர். இதில் வில்லன் யாரும் இல்லை.
    உங்களுக்கு ஞானம் எதாது இருக்குதா. அடுத்த தொடருக்கான தலைப்பை உங்களின் பின்னூட்டத்தில் சரியா சொல்லிட்டிங்க. நன்றி.

    ReplyDelete
  5. //உங்களுக்கு ஞானம் எதாது இருக்குதா.//

    விற்கும் அளவுக்கு இல்லை :)

    // அடுத்த தொடருக்கான தலைப்பை உங்களின் பின்னூட்டத்தில் சரியா சொல்லிட்டிங்க. நன்றி.//

    சரிங்க... சாமியோவ்

    ReplyDelete
  6. என் குப்ப மேட்டரையும், சப்ப மேட்டரையும் படிக்கவே ரொம்ப பெரிய மனசு வேணும். உங்கள் ஆதரவுக்கு நன்றி பித்தன்.

    ReplyDelete
  7. சாரி அண்ணா....

    நீங்க சொன்னா மாதிரி உங்க அப்பா ஆசி எப்பவும் உங்களுக்கு இருக்கும். அம்மா கூடவும் அப்பா எப்பவும் துணையா இருப்பார்... பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் வடிவில....

    இதுவும் சரிதான். உங்களுக்கு நல்ல அப்பா அம்மா மட்டுமில்ல.. நல்ல குடும்பமே கிடைச்சிருக்கு.

    ReplyDelete
  8. உங்களுக்கு நல்ல அப்பா அம்மா மட்டுமில்ல.. நல்ல குடும்பமே கிடைச்சிருக்கு.உண்மையில் அந்த கடவுளுக்கு நன்றி சொல்லனும்..

    ReplyDelete
  9. அனுபவ தொடரை எல்லாம் கொஞ்சம் லேட்டா வச்சுகலாமே!

    இப்ப தானே ஒன்னு முடிஞ்சது!

    ReplyDelete
  10. அருமையான நல்ல ஒரு கதை நல்ல குடும்ப கதை

    ReplyDelete
  11. பெற்றோர்கள் அவர்களின் கடமையை நல்ல முறையில் செய்து இருக்கிறார்கள்.

    நல்ல பெற்றோர்கள் கிடக்கப் பெற்ற நீங்கள் மிகவும் அதிருஷ்டசாலின்னுதான்.
    சொல்லணும்.

    முழுவதும் படிச்சு ஒரு பேரு மூச்சு விட்ட பிறகே பின்னூட்டம் மிடுகிறேன்.

    அப்புறம் தாமாக வந்துட்டேன். மன்னிக்கவும். அலுவலகத்தில் அளவில்லா ஆணிகள்... அதான்.. :(

    நிறைய எழுதறீங்க.. நல்லாவும் இருக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  12. நான் அப்பாவை சாமி அவன் என்று எல்லாம் குறிப்பிட்டேன் ஆனால் ஒரு இடத்தில் கூட மாமா மைனரையே அல்லது பெரியவர்கள் அத்தையே நான் அவன், அவள் என்று குறிப்பிடவில்லை. காரணம் பெரியோர்கள் மீது உள்ள மரியாதை. எங்க மாமா வரதராஜன் கூட அவர் சிறு வயது வாழ்க்கையை கூறுவதால்தான் அவன் என்று குறிப்பிட்டேன். அவரின் மீதும் எனக்கு நல்ல அன்பும் மரியாதையும் உள்ளது. அவர்கள் கொடுமை செய்தார்கள் என்றுதான் கூறினேன். கொடுமைக்காரி என்று கூறவில்லை. ஒரு இடத்தில் மட்டும் விழுந்து செத்தாள் என்று கூறியுள்ளேன். நன்றி.

    எங்க வீட்டில் தெங்கலை. ஆனால் நான் வடகலை என்ன தென் கலை என்ன எல்லாம் ஒரே எச்சக்கலை என்று கூறுவபன்.

    ஒன்று சொல்ல விரும்புகின்றேன். எங்க அப்பா இறந்து கருமாதி நடக்கும் சமயம். பிரேத ஆத்மாவிற்கு பிண்டம் இடும் சடங்கு நடக்கும். அப்போது சாத உருண்டைகள் செய்து அந்த பிரேத ஆத்மாவை பெயர் சொல்லி அழைத்து பிண்டம் இறைப்பார்கள். அப்போது கூட என் தந்தையின் பெயர் சொல்வதற்குப் பதிலாக அய்யர் தவறுதலாக மாமாவின் பெயரை வெங்கடராமன் என்று அழைத்து விட்டார். என் அண்ணா அப்பாவின் பெயர் சொல்லி திருத்தினார். எள்ளும் தண்ணீரும் இறைக்கும் போதும் தவறுதலாக அவரின் பெயரைச் சொன்னார். எதோச்சையாக சொன்னாலும், நான் அவரின் சொத்துக்கள் எல்லாம்தான் பிடுங்கிக் கொண்டார், அவருக்கு இறைக்கும் பிண்டம் மற்றும் எள்ளு, தண்ணீர் கூடவா பிடுங்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். இப்போ சொல்லுங்க இது ஊழ்வினைதானே.

    நன்றி சுசி,மேனகா சத்தியா இப்ப ஒரு நல்ல தங்கையும், நிறைய பதிவுலக கிடைத்துள்ளார், ஆதலால் இறைவனுக்கு ஒரு ஸ்பெசல் நன்றிகள் சொல்ல வேண்டும் அல்லவா.

    அடுத்த அனுவப தொடர் என்னனு தெரிஞ்சா இதுதான் சரியான சமயம் என்று நினைப்பீர்கள்.

    நன்றி சுவையான சுவை அவர்களே.

    பரவாயில்லை ரம்யா, சமயம் கிடைக்கும் போது எல்லாம் தொடர்ந்து படித்து தவறு இருப்பின் கூறுங்கள் நன்றி.

    எனக்கு கூட தொடர்கள் பிடிக்காது, ஆனால் நம் கருத்துக்கள் அனைவருக்கும் செல்லும் அல்லவா,
    பில்டப் எல்லாம் கிடையாது. என்ன இருந்தாலும் நீங்க எங்க ஊரு, எங்களின் மருமகள் அல்லாவா.
    அதுதான் சிறப்பு. நன்றி தெய்வசுகந்தி.

    நன்றி திரு. பித்தன் அவர்களே.

    இத்தொடரைப் படித்து ஆதரவும் பின்னூட்டமும் இட்ட அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

    ReplyDelete
  13. நான் என் லவ்வர்கிட்ட பொண்ணாட்டி பேரையும், பொண்டாட்டிகிட்ட லவ்வர் பேரையும் அடிக்கடி சொல்லி வாங்கி கட்டிகுவேன், அது என்ன ஊழ்வினையா?

    கம்பியூட்டர்ல வேலை செஞ்சாலும் அதுக்கே சூடம் காட்டுற பயலுக தான நம்ம மனுசபயலுக!

    ReplyDelete
  14. // நான் என் லவ்வர்கிட்ட பொண்ணாட்டி பேரையும், பொண்டாட்டிகிட்ட லவ்வர் பேரையும் அடிக்கடி சொல்லி வாங்கி கட்டிகுவேன், அது என்ன ஊழ்வினையா?

    கம்பியூட்டர்ல வேலை செஞ்சாலும் அதுக்கே சூடம் காட்டுற பயலுக தான நம்ம மனுசபயலுக! //
    நல்ல நகைச் சுவையான கருத்து வால்ஸ். சிரிப்புத்தான் வருது. ஆனா இதுக்கு என் கிட்ட பதில் இல்லை என்பதை ஒத்துக் கொள்கின்றென். இது ஒரு ஆறுதலான நம்பிக்கைதான். நன்றி.

    ReplyDelete
  15. உங்கள் குடும்ப கதை நல்லா எழுதி இருக்கிங்க.

    ReplyDelete
  16. பாசமிக்க பெற்றோரை மறவாத பிள்ளையின் கதை. அருமை. அடுத்ததைத் தொடருங்கள்.

    ReplyDelete
  17. நன்றி புலவன் புலிகேசி அவர்களே.

    ReplyDelete
  18. குழந்தைகள் தின வாழ்த்துகள் என்றும் அன்புடன் வாழ்க வளமுடன்
    தமிழ்நெஞ்சம்

    ReplyDelete
  19. நன்றி தமிழ் நெஞ்சம், தங்களின் வருகைக்கும், முதல் பின்னூட்டத்திற்கும் எனது நன்றிகள்.

    ReplyDelete
  20. .பதிமூன்று வயதில் ஆரம்பித்து 73 மூன்று ஆண்டுகள் மணவாழ்வில் அவருடன் சில நாட்கள் கூட பிரியாமல் வாழ்ந்த என் அம்மா இப்போது பேரன், பேத்தி என்று எங்களுடன் இருந்தாலும் வருத்ததுடன் இருக்கின்றார். ஒரு நல்ல மனிதரைப் பத்தி உங்களுடன் பகிர்ந்து கொண்டது எனக்கு மிக்க சந்தோசம்.


    ....73 years ...... 73!!!!! What a great blessing!! Praise the Lord! I am happy for your wonderful family.

    ReplyDelete

என்னை வளர்க்க, கருத்துரையிடுக...

பதிவைப் படித்து கருத்து போடலைனா
உங்க கனவுல பூதம் வரும்,,, ஆமா சொல்லிட்டேன்.