ஒரு நல்ல மனிதரின் கதை இது, இந்த கதையில் வரும் அனைத்து சம்பங்களும் உண்மை என அடித்து ஆனித்தரமாக கூறுகின்றேன். அடுத்துக் கெடுப்பது, அடுத்தவர் சொத்தை திருடுவது போன்ற செயல்கள் முடிவில் தீமை தரும் என்பது இந்த கதையின் பாடம். கதையின் முடிவில் நான் பல உண்மைகளைக் கூற உள்ளேன். படியுங்கள். கதை நடக்கும் காலம் 1930.
அந்த அதிகாலை நேரம் ஆதவன் சேம்பலுடன் வரலமா,வேண்டாமா என யேசிக்கும் போது, அந்த ஜமின் வீட்டின் திண்ணையில் தூங்கிக் கொண்டுருந்த சாமி மெல்ல கண் விழித்தான். விடியப் போகின்றது,எழா விட்டால் மாமா அடிப்பார் என்று எழுந்தான். எழுந்தவன் பக்கத்தில் தூங்கிய தம்பி மணியையும் எழுப்பினான். தொழுவத்திற்க்குப் போய், மாட்டுக்காரனை எழுப்பி பால் கறக்கச் சொல்லனும்,தோட்டத்திற்க்குப் போய்த் தண்ணீர் பாய்ச்ச சொல்லனும். திரும்பி வந்து பள்ளிக்குப் போகனும் என்று சாமியின் வேலை முறைகள் நினைவுக்கு வந்தது. மெல்ல எழுந்து கினற்றடிக்குப் பல் தேய்க்கப் போனான். காலைக்கடன் முடிந்ததும் தொழுவத்திற்க்குப் போனான். பாலை கறந்து தங்கையிடம் கொடுத்தால்தான் காபி கிடைக்கும். தூங்கும் மாட்டுக்காரனை எழுப்பி பால் கறக்கச் சொன்னான்.
இத்தனைக்கும் சாமிக்கு வயது பத்துதான். இந்த சாமிதான் நம் கதையின் கதானாயகன்.
இந்த ஊர் குருப்பனாய்க்கன் பாளையம் என்ற குக்கிராமம், இந்த கிராமத்தின் ஜமின், மணியம், கர்ணம் என்று இருந்த வெங்கடராமன் என்னும் மைனர்தான் சாமியின் மாமா. சாமியின் தங்கையைத்தான் அவர் மணந்து இருந்தார். உண்மையில் சாமிதான் அந்த ஜமினின் வாரிசு. அத்தனை சொத்துக்களும் சாமிக்குத்தான் சொந்தம். சாமியின் தம்பி பிறந்த போது அவன் தாய் பிரசவத்தில் இறந்து விட, சாமியின் அப்பா துரைசாமி வாழ்க்கையை வெறுத்தவர் ஆனார்.உலக பிடிப்பு இல்லாமல் வாழ்ந்த அவர் தன் பெண்ணிற்க்கு எட்டு வயது ஆகும் போது அவளை தன் விதவை சகோதரியின் மகன் வெங்கடராமனுக்கு மணம் முடித்துக் கொடுத்து,சொத்துக்களுக்கு அவர்களை காப்பாளர்களாக வைத்துவிட்டு தேசாந்திரம் போய் விட்டார். சாமியின் தந்தையிடம் நல்லவர்களாக நடித்த அவர்கள் நாளடைவில் குழந்தைகளைக் கொடுமைப் படுத்த ஆரம்பித்தனர். நல்லா வேலை வாங்குவார்கள். இடையில் சாமியிடம் சொத்துக்களை எழுதிக் கேட்டு, சாமியையும், அவன் தம்பி தங்கைகளையும் அடிப்பார்கள். குதிரை சவுக்கு, புளிய விளார், பிரம்புக்குச்சி என்று கையில் கிடைப்பதில் அடிப்பார்கள். சாமியும் தனது தங்கைக்காக இத்தனையும் பொறுத்துக் கொண்டார்.
மாமா வெங்கடராமன் நல்ல உயரம்,சிவந்த நிறம், அழகாய் ஆடை அணிபவர். ஊர் மக்கள் அவரை மைனர் என்றுதான் அழைப்பார்கள். ஒரு குதிரை வண்டியும், இரண்டு சராட்டு வண்டியும் இருந்தது. குதிரை வண்டியில் சாமியின் அத்தையும், சராட்டு வண்டியில் மைனரும் பயணம் செய்வார்கள். இன்னேரு வண்டியில் தான் தினமும் சாமி பள்ளிக்குப் போய் படித்து வந்தான். சாமி தன் தங்கையின் மீது அளவு கடந்த பாசம் வைத்து இருந்தான். அவளுக்காக தான் படும் எல்லாக் கஷ்டங்களையும் பொறுத்துக் கொண்டான். சாமி நல்லவன், யாருக்கு கஷ்டம் என்றாலும் வலிந்து போய் உதவி செய்வான். எல்லாருடனும் அன்பாய் சிரித்துப் பேசிப் பழகுவான். அந்த ஊர் மக்களும் ஜமினின் வாரிசு என்பதாலும், நல்ல பையன் என்பதாலும், சாமியின் மீது உயிரை வைத்து இருந்தாலும் மைனருக்கு பயந்து எதும் பேசாமல் இருந்தனர். அப்போது ஒரு நாள்...... தொடரும்.
எனது முதல் கதை இது. அலேசனைகளை வரவேற்கின்றேன். ஆதரவும் கருத்துக்களையும் கூறவும். நன்றி.
கதையின் ஆராம்பம் அருமையாக இருக்கு , அடுத்த பதிவுக்கு எதிர்பார்க்கிறோம்
ReplyDeleteபதிவு போட்டு ஜந்து நிமிடத்திலா? மிக்க நன்றி. சாருஸ்ரீராஜ்.
ReplyDeleteதொடர்கதைன்னா இன்னும் கொஞ்சம் நீளமாக எழுதி தொடரும்னு போடனும். கன்னித்தீவு மாதிரி 2 பத்தி போட்டுவிட்டு தொடரும்னு போட்டால்.......அவ்வ்வ்வ்
ReplyDeleteவணக்கம் அண்ணா, ரொம்ப நீளமா இருந்தா படிக்கறவங்களுக்குப் பேர் அடிக்கும்னு நினைத்தேன். இனி அதிகம் எழுதுகின்றேன். நன்றி.
ReplyDeleteஅருமை, நல்லாயிருக்கு
ReplyDeleteஅப்புறம் என்னனு எனக்கு மட்டும் இப்பொவே சொல்லுங்களேன்!!!அப்பறமா ப்லாகிலே போட்டுக்கலாம்...
ReplyDeleteம்ம் கதை நல்லாருக்குங்க..தொடர்ந்து எழுதுங்க.
ReplyDeleteம்... அப்புறம்...
ReplyDeleteநல்லாருக்கு அண்ணா. கதை கேக்க ரெடியாயிட்டோம்ல. தொடருங்க...
சின்ன, தாழ்மையான, அன்பான வேண்டுகோள்... எழுத்துப்பிழை.... வாசிக்கும்போது சின்ன தடங்கல் வருது.... தப்பா எடுத்துக்காதீங்க சொன்னதுக்கு...
//இந்த கதையில் வரும் அனைத்து சம்பங்களும் உண்மை என அடித்து ஆனித்தரமாக கூறுகின்றேன். //
ReplyDeleteஇதெல்லாம் இப்ப யார் கேட்டா!?
//கதை நடக்கும் காலம் 1930.//
ReplyDeleteஅப்ப நீங்க அங்க என்ன பண்ணிகிட்டு இருந்திங்க!?
இதுல ஆணித்தரம் வேற!
//அந்த அதிகாலை நேரம் ஆதவன் சேம்பலுடன் வரலமா,வேண்டாமா என யேசிக்கும் போது,//
ReplyDeleteஅது தினமும் யோசிச்சிகிட்டு தான் வருதாக்கும்!
//எனது முதல் கதை இது.//
ReplyDeleteஉண்மை சம்பவம்னு சொன்னாமாதிரி இருந்துச்சு!
கதை சொல்லுங்க தப்பில்ல!
கதையை மட்டும் சொல்லுங்க!
நன்றி சுசி, தவறுகளை திருத்திக் கொள்கின்றேன்.
ReplyDeleteஆலேசனைகளுக்கு நன்றி வால்ஸ்.
தங்களின் முதல் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி. தியாவின் பேனா.
நன்றி தோழி கிருத்திகா தங்களின் வருகைக்கு, இது மாதிரி நிறைய திருப்பங்கள் இருக்கும், படிங்க.
நன்றி மேனகா சத்தியா.
அந்தகாலத்து காட்சிகள் கண்முன் விரிகின்றன...கதை நல்லா இருக்கு.தொடர்ந்து எழுதுங்கள்!
ReplyDeleteநன்றி சந்தன முல்லை. பழியும் பாவமும் தொடர்ந்து வரும் என்பதற்கு இந்த கதை ஓர் அத்தாட்சி. தொடர்ந்து படியுங்கள். நன்றி.
ReplyDeleteவால்பையன் தொடர்ந்து படியுங்கள் உங்கள் அத்தனை கேள்விகளுக்கும் பதில் பின்னால் சொல்லுகின்றேன். நன்றி.
ReplyDeleteகதை நன்றாகத் தான் போகிறது செத்து....சொத்தாக வேண்டும். அது போல சிறு பிழைகள் தான்.
ReplyDeleteதங்கை பிறந்ததும் அம்மா இறந்துவிட்டாள் என்றால், லக்ஷ்மிக்குத் தம்பி எப்படி வந்தான்??
பழைய காலம் என்றாலே தனிதான்.வாழ்த்துகள் .
இப்பத்தான் வாசிக்கிறேன்.ஆரம்பமே அசத்துது.
ReplyDeleteஇப்போதே அடுத்த பகுதிக்கும் போகிறேன்.
பழைய காலத்து கதை தனித்துவம் தான். நேரம் இல்லை இருந்தாலும் நேரம் கிடைக்கும் போது படித்து கருத்து + ஓட்டு போடுகீறேன்
ReplyDeleteஅடுத்துக் கெடுப்பது, அடுத்தவர் சொத்தை திருடுவது போன்ற செயல்கள் முடிவில் தீமை தரும் என்பது இந்த கதையின் பாடம்.
ReplyDelete..... much needed moral story