Friday, November 13, 2009

திருட்டுச் சோறு

எனது பள்ளி மற்றும் கல்லூரிக் காலங்களில் நான் எப்பவும் இரண்டாம் வரிசை பெஞ்சு மாணவன். என் கல்லூரி நாட்களில் நான் மூன்றாம் வகுப்புப் பிரிவின்(மூன்றாவது பீரியட்)போது தமிழ் அல்லது ஆங்கில வகுப்பில் இறுதி வரிசைக்குச் சென்று விடுவேன். ஏன் தெரியுமா அங்குதான் பெஞ்சுக்கு அடியில் வெளி ஊர்களில் இருந்து வரும் மாணவர்களின் சாப்பாட்டு பாக்ஸ் வைத்துருக்கும். நான் அந்த பாக்ஸை அவர்களுக்குத் தெரியாமல் எடுத்து(திருடி) கொஞ்சம் சாப்பிட்டு விடுவேன். சாப்பாடு நல்லா இருந்தா முக்கால்வாசி எடுத்துச் சாப்பிட்டு விடுவேன். நண்பர்களும் சாப்பாடு கம்மியாக இருந்தால், நான் தான் சாப்பிட்டேன் என்று விட்டு விடுவார்கள். இது பல நாள்கள் நடந்தது. என்னதான் வீட்டில் சாப்பிட்டாலும், திருட்டுச் சாப்பாடு தனி சுவைதாங்க. நான் வகுப்பில் அனைவரின் அன்புக்கும் உரியவன் என்பதால் ஒன்றும் சொல்ல மாட்டார்கள்.

ஒரு நாள் வெள்ளிக்கிழமை நான் மூலனூர் சி.கார்த்திகேயன் என்பவன் சாப்பாட்டை எடுத்துச் சாப்பிட்டேன். சாம்பார் சாதம் சுவையாக இருந்தது. நானும் முக்கால் வாசி சாப்பாட்டைச் சாப்பிட்டு ஏப்பம் விட்டேன். பின் என் வீட்டுக்குச் சென்று மதிய உணவை ஒரு கட்டுக் கட்டி விட்டு கல்லூரிக்கு வந்தேன். அப்ப நண்பர்கள் அனைவரும் மரத்தடியில் நின்றிருந்தார்கள். நான் அவர்கள் அருகில் சென்றதும், கார்த்தி என்னிடம் "சுதா என் சாப்பாட்டை நீயா சாப்பிட்டாய்" எனக் கேக்க, நான் ஆமா கார்த்தி இன்னைக்கு "உன் சாப்பாடு சூப்பர்" என்றேன். அவன் "அய்யோ! அய்யோ! அதையா சாப்பிட்டாய்? என சத்தமாகக் கேட்டான். நானும் புரியாமல் ஆமாம் என்று மகிழ்ச்சியாக கூற. அவன் "டேய் அது கறிக்குழம்புடா எனவும், போச்சு அய்யர்வாள் கறி சாப்பிட்டுட்டார்" எனக் கிண்டல் செய்தான். அவன் சொன்னதும், என் நண்பர்கள் கார்த்தி, செந்தில், கனகு, முகுந்தன், இராமச்சந்திரன், ஸ்ரீனிவாசன்,சக்திவேல், குப்புசாமி,வாசு மற்றும் மணி அனைவரும் என்னை நல்லா ஓட்ட ஆரம்பித்து விட்டார்கள். எல்லாரும் இதுதான் சமயம் என்று அவர்களுடன் தோழிகள் உமா மகேஷ்வரி,கண்மணி,பாரதி,பெஸிலியா,சுசிலா,மல்லிகாவும் சேர்ந்து கொண்டார்கள். சுதா வேணும்னா சொல்லு, நாங்க செய்து எடுத்து வர்றேம்ன்னு அவங்க ஒரு பக்கம். ஏறக்குறைய மொத்த வகுப்பும் நான் கறிக்குழம்பு சாப்பிட்ட விசயத்தை வைத்து என்னை நல்லா கும்மு,கும்முனு கும்மி எடுத்தார்கள். நான் அழாத குறை. கார்த்தியிடம் டேய் நிசமா சொல்லு அது கறிக்குழம்பா எனக் கேக்க அவனும் ஆமாம் என்றான்.

மதியம் ஆரம்பித்த இந்த ஓட்டுதல் மாலை மூன்று மணி வரை தொடர்ந்தது. பின் என் முகம் வாடியதைப் பார்த்த கார்த்தி, என்னிடம் கவலைப் படாத சுதா அது சாம்பார்தான் என்று கூறினான். பின் நான் நம்பாமல் பார்க்க, வகுப்பு இடைவேளையின் போது அவன் எல்லார் முன்னிலையிலும் எழுந்து நின்று, எங்கள் வீட்டில் வெள்ளிக்கிழமை கறி செய்ய மாட்டார்கள் என்றும், அதுவும் இது ஆடி மாதம் என்பதால் கண்டிப்பாகக் கறி சமைக்க மாட்டார்கள். எனவே சுதா சாப்பிட்டது சாம்பார் சாதம்தான் என்றும் கூறினான். நானும் ஒரு வழியாக சமாதானம் ஆனேன். அப்புறம் முகுந்தன் என்னிடம் மாலை கல்லூரி விட்டு திரும்பும் போது தனியாகச் சொன்னான். "டேய் அவங்க வெளியூரில் இருந்து காலை ஏழு மணிக்கே சாப்பிட்டு விட்டுக் கிளம்பி விடுவார்கள். மதியம் இந்த டப்பா சாப்பாடுதான். விட்டால் இரவு எட்டு மணிக்கு வீடு திரும்பித்தான் சாப்பிடுவார்கள். நீ எடுத்து சாப்பிட்டால் அவர்கள் பட்டினி தான் இருக்கனும், அல்லது மாலை அவர்களுக்கு பசி எடுக்கும் என்றான். அப்போதுதான் எனக்கு நான் விளையாட்டாகச் செய்த தவறு புரிந்தது. அது முதல் நான் சாப்பாட்டு டப்பாவை எடுத்து சாப்பிடும் பழக்கம் நின்றது.

ஒரு மூனு நாள் கூட ஆகியிருக்காது, செந்திலும், கார்த்தியும் என்னிடம் கவலையாக, "சுதா நாங்க விளையாட்டாதான் சொன்னேம். நீ எப்பவும் போல சாப்பிடு" என்று சொன்னார்கள். நான் கோவித்து சாப்பிடுவதை நிறுத்தியதாக நினைத்தார்கள். நான் அவர்களிடம் "இல்லைடா நீங்க பசியுடன் இருப்பீர்கள் என்று முகுந்தன் கூறினான்". ஆதலால் தான் சாப்பிடவில்லை என்றேன். அதற்கு அவர்கள் "சுதா நீ சாப்பிட்டாதான் எங்களுக்கு சந்தோசம், சாப்பிடு ஆனா கொஞ்சமா சாப்பிடு" என்றார்கள். நான் என் நண்பர்களின் அன்பில் உருகிப் போனேன். அது முதல் வாரத்தில் என்றாவது ஒரு நாள் நான் அவர்களில் ஒருவர் சாப்பாடை அல்லது எல்லார் சாப்பாட்டிலும் கொஞ்சம் எடுத்து சாப்பிடுவது வழக்கம். அவர்களும் என்னிடம் டேய் எங்க வீட்டுல கறி என்று கொணர்ந்தால், முன் கூட்டியே சொல்லுவது வழக்கம். அல்லது ஸ்பெசலாக(கம்பங்க களி மாதிரி) எதாவது கொணர்ந்தால் சுதா இது வைத்திருக்கேன் எடுத்துக் கொள் என்பார்கள்.

ஒரு நாள் சாப்பிடும் சமயம் நான் எங்க அம்மாவிடம் இந்த கதையைக் கூற, அவரும் எல்லாரும் நல்ல பசங்க ஒரு நாள் அவங்க எல்லாரையும் நம்ம வீட்டுக்குச் சாப்பிட கூப்பிடு என்றார். நானும் நண்பர்களை எங்க வீட்டுக்கு அழைத்துச் சென்று விருந்து அளித்தேன். அதில் கார்த்திக்கு மட்டும் என்னிடம் ரொம்ப கோவம். நானும் ஏண்டா என்று விசாரிக்க அவன் சிரித்துக் கொண்டு இவ்வளவு நல்லா, சுவையா உங்க வீட்டில் சமைக்க, நீ எப்பிடிடா எங்க சாப்பாட்டை சாப்பிடுற? என்றான். நண்பர்கள் அனைவரும் பாராட்டிச் சென்றனர். இந்த கார்த்தி தற்போது காவல் துறையில் பணி புரிகின்றான். அவன் கோவை டவுன் ஹால் காவல் நிலைய துணை ஆய்வாளராக பணி புரிந்த போது சந்தர்ப்ப சூழ்னிலை காரணமாக நான் அவனிடம் ஜம்பது ரூபாய் கடன் வாங்கினேன். மறுமுறை கோவை சென்றால் அவனிடம் கொடுக்கலாம் என்று நினைத்தேன்.ஆனால் விதி என்னைச் சென்னைக்கு மாற்றிப் பின் சிங்கப்பூருக்கும் மாற்றியது. இப்போ அவன் எங்கு உள்ளான் என்பது எதுவும் தெரியாது. நான் மட்டும் அவனுக்கும், அவன் போட்ட சாப்பாட்டுக்கும், கொடுத்த ஜம்பது ரூபாய்க்கும் கடங்காரனாய் உள்ளேன். அந்த நல்ல நண்பர்கள் தொடர்பும் இப்போது இல்லை. ஆனாலும் ஒரு நாள் கார்த்தியை சந்திப்பேன் என்ற நம்பிக்கை உள்ளது. நன்றி.

டிஸ்கி:
1.ஒரு பதிவரின் பின்னூட்டத்தில் மேனகா சத்தியா தன் தோழிகளுடன் கூட்டாஞ் சேறு சாப்பிட்டதாக போட்ட பின்னூட்டதைப் படித்ததின் விளைவுதான் இந்த பதிவு. இந்த பதிவைப் படித்து திட்டவும், ஆட்டோ அனுப்புவதாக இருந்தால் அவருக்கு அனுப்பவும் நன்றி.

2.சனி ஞாயிறுக்கும் சேர்த்து இரு பதிவுகள். அவியல் பதிவையும், இந்த பதிவையும் படித்துப் பின்னுட்டம் இடுங்கள் நன்றி. மகிழ்வான வார இறுதிக்கு வாழ்த்துக்கள்.

30 comments:

 1. கல்லூரி கலாட்டா மிகவும் சுகமானது தான் . இதே மாதிரி தான் நாங்க school படிக்கும் போது இருபாலரும் படிக்கும் பள்ளி அதனால் பெண்களுக்கு தனி கிளாஸ் சாப்பிடுவதற்கு , சுஜாதா என்ற மாணவி கறிகோலா உருண்டை செய்து கொண்டு வந்து லதா என்ற அய்யர் வீட்டு பெண்ணிற்கு வாழைப்பு வடை என்று சொல்லி கொடுத்து விட்டால் அவளும் ஒரு வாய் சாப்பிட்டுவிட்டால் அப்புறம் மற்ற மாணவிகள் எல்லோரும் சேர்ந்து சொல்லிவிட்டோம் உண்மையை , அந்த நினைவு வந்து விட்டது

  ReplyDelete
 2. உங்களுக்கும் மகிழ்வான வாரயிறுதிக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. நல்ல நிகழ்வுகள். அனேகமாக எல்லாருக்கும் இதுபோல ஒரு சம்பவம் இருக்கும், அவை இந்த பின்னூட்டத்தில் வரும் என்றும் நினைக்கின்றேன். நன்றி சாருஸ்ரீராஜ்.

  ReplyDelete
 4. உண்மைதான் வீட்டுச் சமையலைவிட அடுத்தவீட்டுச் சமையலில் ஒரு வித்தியாசமான சுவை.
  சிநேகிதர்களின் சாப்பாட்டை நாங்கள் பகிர்ந்து சாப்பிட்டுக் கொள்வோம்.என்றாலும் உங்கள் அட்டகாசம்...!

  ReplyDelete
 5. //அவர்களுக்குத் தெரியாமல் எடுத்து//
  கௌரவமான திருட்டு....

  //எடுத்துக் கொள் என்பார்கள். //
  குடுத்து வச்சவர் அண்ணா நீங்க.

  //நீ எப்பிடிடா எங்க சாப்பாட்டை சாப்பிடுற? //
  திருட்டு சோறு அவ்ளோ ருசியோ என்னமோ...
  இல்ல நானும் திருடிட்டேன்கிற த்ரில் காரணமோ???

  உங்களுக்கும் வார இறுதி வாழ்த்துக்கள் அண்ணா...

  ReplyDelete
 6. அது ஒரு கனாக்காலம் ம்...

  ReplyDelete
 7. பதிவுலகை சேர்ந்த வடகலை அய்யாங்கார் ஒருவர் லெக்பீஸ் இல்லாமல் பீர் சாப்பிடமாட்டார்!

  ReplyDelete
 8. ரொம்ப நல்ல பகிர்வு... பள்ளியில் இருக்கும்போது என்னுடைய சாப்பாட்டையும் ஹோஸ்டேல் புள்ளைங்க எடுத்து சாபிட்டுருவாங்க.. ஒருத்தி மட்டும் எனக்காக என் காலி டப்பாவை எடுத்துட்டு போயி மெஸ் சாப்பாடு எடுத்துட்டு வந்து தருவா.. :)

  ReplyDelete
 9. வார இறுதி வாழ்த்துக்கள் பித்தன்!!

  //ஒரு பதிவரின் பின்னூட்டத்தில் மேனகா சத்தியா தன் தோழிகளுடன் கூட்டாஞ் சேறு சாப்பிட்டதாக போட்ட பின்னூட்டதைப் படித்ததின் விளைவுதான் இந்த பதிவு. இந்த பதிவைப் படித்து திட்டவும், ஆட்டோ அனுப்புவதாக இருந்தால் அவருக்கு அனுப்பவும் நன்றி.//அடக்கடவுளே எவ்ளோ நல்ல எண்ணம் உங்களுக்கு...

  2 முறை படித்த பிறகு தான் புரிந்தது இந்த திட்டும்,ஆட்டோவும் நமக்குத்தான் என்று..இருங்க என் தோஸ்த் வால்பையனை கூப்பிடுகிறேன்.
  வாலு எங்கிருந்தாலும் வாங்க இந்த பித்தனை கொஞ்சம் கவனிங்க.பித்தன் உங்களுக்கு வாலு தான் சரியான ஆளு..

  வாலு என் சார்பாக பித்தன்கிட்ட நீங்க பேசுங்க..ஹி..ஹி...

  ReplyDelete
 10. பித்தன்,
  உங்களுக்கு வர்ற ஆட்டோவை இப்படி திருப்பி விடுவது தப்பு!
  அப்படியே அனுப்பினாலும் ஆட்டோவுக்கு காசு கொடுத்து அனுப்புங்க, முக்கியமா மீட்டருக்கு மேல!

  இப்படிக்கு
  முன்னாள் ஆட்டோ ஓட்டுனர்!

  ReplyDelete
 11. ///வால்பையன் said...
  பதிவுலகை சேர்ந்த வடகலை அய்யாங்கார் ஒருவர் லெக்பீஸ் இல்லாமல் பீர் சாப்பிடமாட்டார்///

  :-)))

  ReplyDelete
 12. அடுத்தவீட்டு கைமணம் நல்லாத்தான் இருக்கும் :)

  ReplyDelete
 13. ஆஹா பதிவு ரொம்ப ஸ்வாரஸ்யமா இருந்தது.

  இதுபோல் சாப்பிடுவது நீங்கல் மட்டும் இல்லை எல்லா தோழிகள் தோழர்களும் இப்படி தான்.

  அதன் ருசியே தனிதான்.

  நான் கொண்டு போகும் சாப்பாடு எல்லோருக்கும் பிடிக்கும்.அதே போல் ரொம்ப‌ நெருங்கிய சௌராஷ்டிர தோழி ஒரு ட‌புள் பீன்ஸ் புலாவ் கொண்டு வ‌ருவாள் ரொம்ப‌ சூப்ப‌ரா இருக்கும்.

  அதே போல் ரேவ‌தி என்ற ம‌ற்றொரு தோழி, டெயிலரிங் டிப்ள்மோ கிளாஸ் ப‌டிக்கும் போது ஒரு த‌க்காளி சாத‌ம் எடுத்து வ‌ந்து கொடுப்பாள் அப்பா அந்த‌ சுவை இன்றும் என் நாவில் நிற்கிற‌து.

  ReplyDelete
 14. எல்லோருக்கும் இது மாதிரி அனுபவம் இருக்கும். மலரும் நினைவுகளுக்கு நன்றி.

  ReplyDelete
 15. நல்ல பகிர்வு பகிர்வுக்கு நன்றிகள்

  ReplyDelete
 16. சூப்பர், எல்லோருடைய வாழ்கையிலும் இது போல ஒரு அனுபவம் கட்டாயம் இருக்கும்.

  ReplyDelete
 17. வால்பையன் said...

  பதிவுலகை சேர்ந்த வடகலை அய்யாங்கார் ஒருவர் லெக்பீஸ் இல்லாமல் பீர் சாப்பிடமாட்டார்!

  அப்படியென்றால் அவர் உள்ளம் கவர்ந்த வாலுக்கு, காலுக்கு மேல் உள்ளதெல்லாம் என்று அர்த்தமா? இல்லை, வேறு ஏதாவது உள்குத்து இருக்கிறதா?

  ReplyDelete
 18. நன்றி, ஹேமா,சுசி,தியாவின் பேனா,நாஸியா,மேனாகா சத்தியா, டி.வி.ஆர்,சின்ன அம்மினி,தெய்வ சுகந்தி, மற்றும் சிங்ககுட்டி.

  சந்துரு தங்களின் முதல் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி.

  வால்ஸ் அய்யர் கறி சாப்பிடக் கூடாது என்றும், புலால் உண்பது, மது அருந்துவது தவறு என்று வேதங்களில் கூறவில்லை.
  ஜப தவங்களில் ஈடுபடுவர் மட்டும் இவைகளையும் மனதையும் கட்டுப் படுத்த வேண்டும் என்று மட்டும் கூறியுள்ளது. பிற்காலத்தில் இது வழக்கமாக போய்விட்டது. அவங்க சாப்பிடாம இருக்கறது நல்லது. இல்லை என்றால் உங்களுக்கு கிடைப்பது சிரமம்.

  மேனகா அக்காவுக்கு அனுப்பற ஆட்டோக்கு மீட்டருக்கு மேல என்ன டபிள் சார்ஜ் கூட தரலாம்.

  நன்றி வால்ஸ். பின்னூட்டம் இட்ட அனைவருக்கும் எனது நன்றிகள்.

  ReplyDelete
 19. நமக்காக அன்போடு யாராவது கொண்டுவந்து தரும் உணவின் சுவைக்கு நிகர் ஏது?

  வேலைக்குப்போய்க் கொண்டிருந்த காலக் கட்டங்களில் (ஹாஸ்டல் வாசம்) நெருங்கிய தோழி வீட்டிலிருந்து ரெண்டு இட்லி நெய்ச் சக்கரையுடன் வாரம் நாலுமுறை வந்துரும். ஆஃபீஸ்க்கு வந்ததும் அவள் கண் ஜாடையைப் புரிந்துகொள்வேன். ஆஹா..... இன்னிக்கு இட்லி! அஞ்சு நிமிசம் சின்ன ப்ரேக். முடிஞ்சது:-)

  உங்க இடுகை கொசுவத்தியை ஏத்திருச்சு.

  ReplyDelete
 20. உங்க கொசுவத்தி நல்லா இருக்கு, அது என்னங்க கண் ஜாடை, சத்தமாச் சொன்னா யாராது பங்குக்கு வந்துருவாங்களா? நன்றி டீச்சர்.

  ReplyDelete
 21. யாரும் பார்க்கல என்றூ நினைத்து கொள்ள கூடாது நான் உடனே அவியல் தப்பை கண்டு பிடித்து விட்டேன், ஒரு வேலை நீஙக்ள் பச்ச மிளகாய் போடமால் அவியல் செய்வீர்கலோ என்று நினைத்து கொண்டேன்.
  அதில் பதில் போட்டு கொன்டிருக்கும் போது திருட்டு சோறு கண்ணில் பட்டதால் அப்படியே அங்கு ஓடியாச்சு சுவரஸ்யமா பதில் போட.

  நாங்க கண்ணில் விளக்கெண்ணைய ஊற்றி பார்ப்போமுல்லா...

  ReplyDelete
 22. ஆகா கண்டுபிச்சுட்டிங்களா. நான் வெள்ளியன்று மாலைதான் இந்த தவறைப் பற்றிய நினைவு வந்தது. ஆனால் உடன் சரி செய்ய கணினி இல்லாததால் இன்றுதான் சரி செய்தேன். நன்றி ஜலில்லா அவர்களே.

  ReplyDelete
 23. வாலு மிக்க நன்றி நான் கூப்பிட்டவுடனே வந்தீங்க பாரு அங்கத்தான் நிங்க நிக்கறீங்க.வாலுன்னா வாலு தான்.

  //மேனகா அக்காவுக்கு அனுப்பற ஆட்டோக்கு மீட்டருக்கு மேல என்ன டபிள் சார்ஜ் கூட தரலாம்.// அக்காவா இப்படி அநியாயத்துக்கு என் வயசை கூட்டிட்டீங்களே அண்ணா......

  ReplyDelete
 24. / வாலு மிக்க நன்றி நான் கூப்பிட்டவுடனே வந்தீங்க பாரு அங்கத்தான் நிங்க நிக்கறீங்க.வாலுன்னா வாலு தான்.//
  ஹலோ, வால்ஸ்ஸை நம்பாதிங்க, அவரு திடீர்னு ஸேம் சைடு கோல் போட்டுருவாரு. நீங்க சப்போட் பன்னுவாருன்னு நினைக்கறப்ப நைஸா கிண்டல் அடிப்பாரு. கொஞ்சம் நகைச்சுவையான ஆசாமி.

  ReplyDelete
 25. சென்னை மொழியில் பழமொழி சொல்லுவாங்க.

  "பாம்பு துன்ற ஊருக்கும் போனா நடுத்துண்டம் எனக்கு" ன்னு பந்தியில் குந்தனும்

  ReplyDelete
 26. /Your comment will be visible after approval.//

  அப்ரூவல் ?.........ஓ மாடுரேஷன் !

  :)

  ReplyDelete
 27. // "பாம்பு துன்ற ஊருக்கும் போனா நடுத்துண்டம் எனக்கு" ன்னு //
  நான் ரொம்ப நல்ல பையன் முழுத்துண்டும் எனக்கு திண்ணுடுவன், நன்றி கோ.வி. அண்ணா.

  ReplyDelete
 28. //வால்ஸ்ஸை நம்பாதிங்க, அவரு திடீர்னு ஸேம் சைடு கோல் போட்டுருவாரு. நீங்க சப்போட் பன்னுவாருன்னு நினைக்கறப்ப நைஸா கிண்டல் அடிப்பாரு.//

  இவரு என்னாப்பா, நம்ம பயோ-டேட்டாவை புட்டு புட்டு வைக்கிறாரு!

  ReplyDelete
 29. இஸ்லாமிய இல்ல சமையல் 300 வது பதிவில் தக்காளி ஹல்வா போடுரேன் வாக்கு கொடுதத்து விட்டதால் தேடி பிடித்து போட்டேன்.

  ஆனால் அதில் உள்ள மீன் தவிர (பகாறா கானா ‍ = கீ ரைஸ்) , பிளெயின் தால் = அது வெரும் துவரம் பருப்பு வேக வைத்து தாளிப்பது, அடுத்து தக்காளி ஹல்வா எல்லாமே உங்களுக்கு தான்.
  ஆனால் அவார்டு பகுதியில் கொடுத்த ஹல்வா பீட்ரூட், பெயரை மறந்து மாற்றி போட்டுட்டேன்.

  ReplyDelete
 30. படிக்கும் காலத்தில் சிநேகிதிகளுடன் பகிர்ந்து உண்பது எனக்கும் மிகுந்த சுவையைத் தந்திருக்கிறது்.

  ReplyDelete

என்னை வளர்க்க, கருத்துரையிடுக...

பதிவைப் படித்து கருத்து போடலைனா
உங்க கனவுல பூதம் வரும்,,, ஆமா சொல்லிட்டேன்.