Friday, November 20, 2009
அய்யப்பனின் அற்புதங்கள் - பாகம் 4
இரவு முழுக்க பயணம் முடித்துக் காலை சோட்டானிக்கரை வந்தேம். அங்கு வந்ததும் எனக்கு சிறிது தெம்பு வந்தாற்ப் போல ஒரு உற்சாகம். ஆனாலும் உடம்பில் ஒரு வித களைப்பு இருந்தது. அங்கு குளியலறை ஒன்றிக்குச் சென்ற போது குழாய் மட்டும் தான் இருந்தது. வாளியோ அல்லது மோந்து குளிக்க சொம்போ கிடையாது. நான் வருவது வரட்டும் எனக் காய்ச்சலுடன் குழாயைத் திறந்து விட்டு அதன் அடியில் உக்காந்து குளித்தேன். நல்லா சில்லென்ற தண்ணீர் குளீருட்டியது. இனி கோவிலுக்குப் போவேம்.
இந்த பகவதி கோவில் எனக்குப் பிடித்தமான கோவில்களில் ஒன்று. மிக அதிகமான,அழுத்தமான அதிர்வலைகளைக் கொண்டது. கோவிலினுள் ஒரு இனம் புரியாத சந்தோசமும், பயமும் இருக்கும். ஒரு மனதில் கும்மென்ற உணர்வு பரவக் காணலாம். இந்த கோவிலில் இராஜராஜேஸ்வரி தானாக வந்து குடியேறியதாக சொல்வார்கள். இங்கு அம்மன் சிலை என்று ஒரு உருவ அமைப்பு பாறையில் ஒழுங்கற்றுக் காணப்படும். இது சுயம்பு என்றும், யாரும் இதனை வடிக்கவில்லை என்றும் கூறுவார்கள். இந்த சிலையமைப்பு இருக்கும் பாறையின் மீது தங்க கவசம் சார்த்தி அலங்காரம் செய்யப் படுகின்றது. இந்த கோவிலின் கூரை தங்கத்தால் வேயப் பட்டுள்ளது. அம்மன் என்றாலும் தேவி நாராயணி என்று அழைக்கப் படுகின்றாள். இந்த அம்மனுக்குக் காலை சரஸ்வதி அலங்காரமும், நண்பகல் பத்தரகாளி அலங்காரமும், இரவு துர்க்கை அலங்காரமும் செய்யப்படும்.
அம்மே நாராயணி, தேவி நாராயணி
தேவீ நாராயணி, பத்ரி நாராயணி
என்ற துதிபாடல் கோவில் முழுக்க கேக்கலாம். நாமும் பாடப் பாட நம் மனது பூரண அமைதியடைகின்றது. ஆனா இந்தக் கோவிலில் கொஞ்சம் அக்கம், பக்கம் பார்த்து தான் நடக்கனும், ஆமாங்க கோவில் பூராவும் மன நிலை தவறியவர்கள் (பைத்தியம்) இருப்பார்கள். நம்மை சுற்றி நடந்து கொண்டும் பாடியும், தனக்குள் பேசியும் இருப்பார்கள். நாம கொஞ்சம் கவனித்துப் போனால் நல்லது. முதலில் கோவிலின் நுழைவு வாயில் பின் கொடிக்கம்பம் என்று ஆரம்பித்து கோரளக் கோவில்களுக்கே உரிய வீடு போன்ற அமைப்பில் நுழைந்தால் சிறிய சன்னிதியில் பெரிய அம்மன் சும்மா தக தக என ஜொலிப்பதைக் காணலாம். அம்மன் கொள்ளை அழகு என்றாலும் மனதில் கொள்ளை பயத்தையும், தெளிவையும் தருவாள். மனம் இலேசனவர்கள், மன அழுத்தம் உள்ளவர்கள் இங்கு பூஜையின் போதும், வழிபாட்டின் போதும் தானாக அழுவார்கள். அவர்கள் கண்ணில் அவர்கள் அறியாமல் தண்ணீர் தாரையாக கொட்டும்.
கோவிலின் மூல விமானம் தங்கத்தில் சூரிய ஒளியில் ஜொலிப்பதைக் காண்பதும் ஒரு அழகு. நான் இங்கு கொஞ்ச நேரம் அமர்ந்து தியானிப்பதும் உண்டு. நல்லா மனதை ஒருமுகப் படுத்தும், அதி தீவிர அதிர்வலைகள் கொண்ட கோவில்.
இந்தக் கோவிலின் கீழ் இறங்கி வந்தால் ஒரு அம்மன் சன்னதி உண்டு. பயப்படாதீர்கள் இந்த சன்னதி முன் தான் பேயோட்டுவார்கள். பெண்கள், அண்கள் எனப் பேய் பிடித்துருக்கும் அனைவரும் இந்த சன்னதி முன்னர் தலைவிரித்து கோலமாக நின்று சுழற்றி ஆடுவதைப் பார்க்க ஒரு கிலி வரும். இதற்க்கு முன்னர் ஒரு வீடு போன்ற தாழ்வாரத்தில் இருட்டடிச்சாப் போல ஒரு கோவில் கிணறு இருக்கும். இங்கு குளிக்க வைத்துதான் பேயோட்ட அழைத்துச் செல்வார்கள். இங்கு சாமி தரிசனம் செய்து நாங்கள் அய்யப்ப யாத்திரையின் தொடக்க இடமான எரிமேலிக்குப் பயணம் பயணம் செய்தேம். பஸ்ஸில் குளிரும் காய்ச்சலும் என்னுடன் வந்தன.
பேயோட்டும் அம்மன் கோவில்
நான் சபரி மலை சென்ற பத்து முறைகளில் எட்டு முறை குருவாயுரும், இந்தக் கோவிலும் சென்று உள்ளேன். எங்க வீட்டில் திருத்தல யாத்திரையாக இருமுறை இங்கு வந்துள்ளேம். ஒரு முறை நானும் என் நாலவது அண்ணா மற்றும் என் உறவினன் மற்றும் நண்பன் குட்டி மூவரும் சபரி மலை செல்கையில் இந்த கோவிலுக்கு வந்தோம். அப்போது மதியம் பத்திர காளி அலங்காரம் செய்வதற்க்காக கோவிலின் நடை சாத்தப் பட்டிருந்தது. நாங்கள் கருட கம்பத்தின் அருகில் நின்று கோவில் கதவுகள் திறப்பதற்க்காக காத்துக் கொண்டு இருந்தேம். நாங்கள் நின்று கொண்டு இருந்த இடத்தில் ஒரு கேரளா நடுத்தர வயது பெண்மனி அவர்களின் சம்பிரதாயப் படி தலை சீவி உடை உடுத்து கைகளை கூப்பியபடி நின்று பாடலைப் பாடிக் கொண்டுருந்தார். நல்ல லட்சனமான முகமும்,உடையும் பெரிய இடத்துப் பெண் போல இருந்தது. இவர் என் அண்ணா பக்கத்தில் நின்று பாடிக் கொண்டியிருந்தார். எனக்கு இந்த கோயிலில் கொஞ்சம் முன் அனுபவம் இருந்ததால் நான் குட்டியை கொஞ்சம் யாரும் சுற்றி இல்லாத இடமாக நிற்க்ச் சொன்னேன். அவனும் என் அருகில் நின்றான். என் அண்ணா கோவிலின் கதவுகளைப் பார்த்தவாறு நின்றான். நான் அவனிடன் கண்ணா இங்க கோவில் கதவு திறந்தவுடன் பலரும் ஆடுவார்கள், பார்த்து ஜாக்கிரதையாக இரு. பயப்படாதே என்றேன். அவன் என்னை அலட்சியமாக பார்த்து " கோயிலுக்கு வந்தா சாமி கும்பிடரதைப் பாரு. யாரு ஆடுன்னா என்ன" என்றான். நானும் சரி உன் இஷ்டம் என்றேன்.
மட்ட மத்தியானம், நண்பகல், மற்றும் உக்கிரமான பத்திரகாளி அலங்காரம் வேறு. நான் முன்னேச்சிரிக்கையாய் தள்ளி நின்றேன். கோவிலின் கதவுகள் திறந்தன. அவ்வளவுதான், மிகுந்த சத்தத்துடன் என அண்ணாவின் அருகில் பக்தியாய் நின்ற பெண் பயங்கரமாய் அலறி ஆட ஆரம்பித்தாள். பாடலுடன் குதித்தாள். தலைமுடியை பயங்கரமாய் சுற்றி ஆடினாள். என் அண்ணா பயந்து பின் வாங்கினான். என்னடா இப்படி என்றான். " நான் தான் சொன்னேன் அல்லவா? நீ என்னமே டயலாக் எல்லம் விட்டாய்" என்று சிரித்தேன். அவனுக்குப் பயத்தில் காய்ச்சல் வந்து விட்டது. இப்ப அவனுக்கு கல்யானம் ஆகி இரு குழந்தைகளும் பிறந்து விட்டன.இன்னமும் அவன் இந்தக் கோவில் உள்ளே வரமாட்டான். கேட்டால் அங்க போனா எனக்கு பயத்தில் காய்ச்சல் வந்து விடும் என்பான்.
சரி நாம் மீண்டும் அடுத்த பாகத்தில் எரிமேலியில் இருந்து யாத்திரையைத் தொடர்வேம்..... தொடரும். நன்றி.
Subscribe to:
Post Comments (Atom)
பயனுள்ள குறிப்புகள் தொடருங்கள் நன்றி
ReplyDeleteஉடன் படித்து பின்னூட்டம் இட்டமைக்கு நன்றிகள் தியாவின் பேனா.
ReplyDeleteசோட்டானிகரையில் வெடி போடுவது பற்றி எழுதலையே
ReplyDeleteஉங்களின் பதிவையும் படித்தேன். எனக்கே வியப்பு தந்தது என்று கூறியுள்ளீர்கள் அதுதான் அந்த அம்மனின் ஈர்ப்பு. உங்களின் பதிவும் புகைப் படங்களுடன் அருமை. நன்றி.
ReplyDelete// சோட்டானிகரையில் வெடி போடுவது பற்றி எழுதலையே//
எனக்கு யாருக்கும் வேட்டு வைக்கும் பழக்கம் கிடையாது. ஹி ஹி ஹி.
கோவி ஜி நான் கோவிலுக்குப் போனால் அங்க இருக்கும் சன்னியத்தியம், மற்றும் வழிபாடுகள் மட்டும் பார்ப்பேன். மற்ற நம்பிக்கைகளை ஒதுக்கி விடுவேன். எனக்கு இந்த வெடி வழிபாடு, கை ஜேஸ்யம் (குற்றாலக் குறவஞ்ச்சிகளிடமும்), சிறப்பு தரிசனம், போன்றவை எனக்குப் பிடிக்காது.
மற்றபடி பிரசாதம் வாங்கி மண்டபத்தில் வைத்து தின்று விட்டு வருவேன். நன்றி.
அருமை சுதாண்ணா... படங்களோட,
ReplyDeleteஎழுத்துப் பிழை கம்மியா (சொல்றதுக்கு சாரி) படிக்க அருமையா இருந்துது.
anna nalla irukku ungka sabari malai payanam!
ReplyDeleteinnum eluthungka!!
படங்களுடன் கட்டுரை நல்லாயிருக்கு,தொடருங்கள்!!
ReplyDeleteVery nice article. Please keep writing. I am also a devotee to Swami Iyeppan.
ReplyDeleteஅருமை சுதா.
ReplyDelete"கங்கா நதி போல பம்பா நதி, பாவங்களை தீர்க்கும் புண்ணிய நதி"
ஐந்து முறை சென்றிருக்கிறேன், மீண்டும் செல்ல மனம் ஏங்குகிறது :-).
படங்களுடன் கட்டுரை நல்லாயிருக்கு,தொடருங்கள்!!
ReplyDeleteநன்றி சுசி, இதில் என்ன வருத்தம், என்னிடம் குறைகள் கூறினால்தான் சந்தோசப் படுவேன். ஏன் என்றால் அப்போதுதான் வளருவேன். நிறைகளைக் கூறினால், திருப்தி ஏற்ப்பட்டு வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை ஆகிவிடும். நன்றி சுசி.
ReplyDeleteநன்றி சுவையான சுவை.
நன்றி மேனகா சத்தியா,
தங்களின் முதல் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி அழகன்.
நன்றி சிங்ககுட்டி,
நன்றி திரு. பித்தன்.