என் பதிவைப் படிக்கும் அனைத்து பதிவர்களும், சகோதர சகோதரிகளும் எல்லாரும் ரொம்ப நல்லவங்க. நான் என்ன தப்பு பண்ணாலும் கண்டுக்காம உட்டறாங்க. அல்லது என் மீது இருக்கும் நம்பிக்கையால் கவனிப்பது இல்லை என்று நினைக்கின்றேன். அல்லது என் இராசி நான் தப்பா சொன்னாக் கூட எல்லாரும் பாராட்டுவாங்க போல. அவியல் பதிவைப் படித்து பின்னூட்டம் இட்ட அனைவருக்கும் நன்றிகள். ஆனா நான் அந்த பதிவில் மூன்று தவறுகள் செய்து இருந்தேன்.
அந்த மூன்று தவறுகள் என்ன என்றால்,
1. அரைக்கும் போது காரத்திற்க்கு மூன்று பச்சை மிளகாய் போடனும். (காரத்திற்க்கு நான் ஒன்றும் சொல்லவில்லை என்ற சந்தோகம் யாருக்கும் வரவில்லையா?)
2. முதலில் காய்களின் மீது உப்பு. மஞ்சத்தூள் தூவும் போது வாசனைக்கு ஒரு ஸ்பூன் பெருங்காயத்தூள் தூவவேண்டும்,
3. கடைசியாக கொஞ்சம் கடுகை ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய்யில் தாளித்துக் கொட்டவேண்டும்.
இந்த மூன்றும் நான் அவியல் பதிவில் திருத்தி விட்டேன்,நீங்கள் இந்த முறையில் செய்யும் போது மீண்டும் படிக்கவும். (என்ன சுசி,சத்தியா இதுக்கு எல்லாம் தோப்புக் கரணம் போடச் சொன்னா அழுதுருவேன், ஆமாஆஅ.) தவறுகளுக்கு மன்னிக்கவும் நன்றி. இன்னிக்குப் பதிவுக்குப் போகலாம்.
நிறையப் பேருக்கு பாகற்காய்ன்னா பிடிக்காது, அதிலையும் சமைத்து விட்டால் குழந்தைகளையும், ரங்கமணிகளையும் சாப்பிடக் கெஞ்சனும். காரணம் கசப்புதாங்க.
கொஞ்சம் கசப்பு இல்லாமல் சுவையாக சமைத்தால் அவங்களே கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க. அதுக்கான பதிவுதான் இது. இந்த முறையில் அனைவரும் ஏற்கனவே சமைப்பார்கள். இரத்த அழுத்தம், இரத்த சுத்தி மற்றும் சாக்கரை வியாதிக்கு மருந்தான பாகற்காய் ரொம்ப நல்லது. அதை சாப்பிடாமல் விடலாமா?. ஆதலால் சுவையாக சமைத்து உண்பது எப்படி என்று பார்க்கலாம். இது எனக்கு ரொம்ப பிடித்த பொரியல், ஆதலால் தான் இந்த பதிவு.
தேவையான பொருட்கள் :
1.பாகற்காய் கால் கிலோ,
2. பெரிய வெங்காயம் மூன்று,
3. தக்காளி இரண்டு,
4. மிளகாய்தூள் ஒரு ஸ்பூன் அல்லது காரத்திற்க்கு ஏற்ப,
5. உப்பு தேவைக்கு ஏற்ப,
6.பெருங்காயத்தூள் ஒரு ஸ்பூன்,
7.மஞ்சத்தூள் ஒரு ஸ்பூன்,
8.புளித்தண்ணீர் அரை டம்ளர்,
9.வெல்லம் அல்லது அஸ்கா இரண்டு ஸ்பூன்.
10. எண்ணெய் நாலு ஸ்பூன்.
பாகற்காயை ஒன்று அல்லது ஒன்றை அங்குல நீளமூம், மெல்லியதாகவும் நறுக்கவும். வெங்காயத்தை நாலா நறுக்கிப் பின் சிறு சிறு துண்டுகளாக நறுக்கவும். தக்காளியை எட்டுத்துண்டுகளாக நறுக்கவும். இவைகளை நறுக்கி முடித்த பின், ஒரு வாணலியை அடுப்பில் இட்டு நாலு ஸ்பூன் எண்ணெய் விட்டு (எண்ணெய் அதிகமாக ஊற்றவும், வத்தக்குழம்பிக்கு ஊற்றுவது போல.) கடுகு, மஞ்சத்தூள், பெருங்காயத்தூள் விட்டு தாளித்துப் பின் நறுக்கிய வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவும். வெங்காயம் வதங்கும் போது தக்காளியும் இட்டு வதக்கவும். இவை சிறிது வதங்கியவுடன் நறுக்கிய பாவற்க்காயை போட்டு ஒரு களறுக் களறிப் பின் அதில் புளித்தண்ணீர் அரைடம்ளர் ஊற்றிப் பின் மிளகாய்த்தூள், உப்பு, சக்கரை அல்லது வெல்லம் போடவும்.(எலுமிச்சை அளவு வெல்லம் பொடித்துப் போட்டால் சுவையாக இருக்கும் இல்லாவிட்டால் அஸ்கா இரண்டு ஸ்பூன் போடவும்). இதில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி, ஒரு தட்டைப் போட்டு மூடிவிடவும். கவனிக்கவும் தண்ணீர் மீது எண்ணெய் மிதக்க வேண்டும்.
இருபது நிமிடங்கள் கழித்துத் தட்டை எடுத்து விட்டு தண்ணீர் ஆவியாகும் வரை விட்டுப் பின் பாகற்காயை இலேசாகக் கிளறவும். முக்கியமாகப் பாகற்காய் எண்ணெய்யில் சுருள வதங்கவேண்டும். எண்ணெய்யில் சுருள வதங்கினால் தான் அந்தக் கசப்பு குறையும். கொட்டியானவுடன் எண்ணெய் அதிகாமாக இருந்தால் கொஞ்சம் வடித்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் அல்லது ஹாட் பேக் டப்பாவில் போட்டு மூடிவையுங்கள். எண்ணெய்யுடன் இருந்தாலும் சாதத்தில் இந்த பொரியலை பிசைந்து சாப்பிடலாம்.
இந்த பொரியலை சாதத்திற்கு தொட்டும் சாப்பிடலாம் அல்லது சாதத்தில் பிசைந்தும் சாப்பிடலாம். எனக்கு சாதத்தில் பிசைந்து சாப்பிட மிகவும் பிடிக்கும். நன்றி.
டிஸ்கி : நாளை சுவாஸ்யமான அனுபவ பதிவு ஆரம்பம்( ரம்பம்). பதிவர்கள் தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டுகின்றேன்.
நானும் இதே மாதிரி தான் பாகற்காயினை சமைப்பேன்...பாகற்காயே சாப்பிடாத என் கணவர் இப்பொழுது பாகற்காய் பிரியர் ஆகிவிட்டர்..
ReplyDeleteஆஹா ...சொல்லும் பொழுதே இப்பொழுதே பாகற்காய் தொக்கு செய்து சாததுடன் கலந்து சாப்பிட ஆசையாக இருக்கின்றதே...
சரி..அது என்ன அஸ்கா...
ஒரு பாகற்காய் படத்துடன் போட்டு இருந்தால் இன்னும் சுவையாக இருக்கும்.
ஹிஹிஹி... நான் கவனிக்கலை. ஏன்னா காரம் நாங்க கம்மி, பெருங்காயம் பாவிக்கிறதில்லை, தேங்காய் எண்ணெய் கிடையவே கிடையாது.
ReplyDelete//என்ன சுசி,சத்தியா இதுக்கு எல்லாம் தோப்புக் கரணம் போடச் சொன்னா அழுதுருவேன், ஆமாஆஅ.) //
சேச்சே... நான் அப்டீல்லாம் சொல்ல மாட்டேன் அண்ணா... அதுக்குதான் ஆள் வரப்போதுல்ல :)))
பாகற்காய் சுவையாக இருக்கு...
ம்ம்ம்ம்ம்ம்ம்...ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்கு மீறி இருக்கிறது என்று தெரிந்த நாள் முதல், நான் இவ்வளவு கடுமையான சுவை விதிகளை எல்லாம் பார்க்காமல் "நான் அப்படியே சாப்பிடுவேனாக்கும்" ரகத்திற்கு மாறிப் பதினான்கு ஆண்டுகள் ஆகி விட்டன!
ReplyDeleteகடலைப்பருப்பு சேர்த்துக் கூட்டாகச் சமைத்தாலும், கசப்பு அவ்வளவு தெரியாது!
இப்பவே பொரியல் செய்து சாப்பிடனும்போல் இருக்கு.ஆசையை கிளப்பிட்டீங்க அண்ணா.
ReplyDelete//என்ன சுசி,சத்தியா இதுக்கு எல்லாம் தோப்புக் கரணம் போடச் சொன்னா அழுதுருவேன், ஆமாஆஅ.) //
சேச்சே... நான் அப்டீல்லாம் சொல்ல மாட்டேன் அண்ணா... அதுக்குதான் ஆள் வரப்போதுல்ல :)))//ரீப்பிட்ட்ட்ட்
நானும் இதே மாதிரி தான் பாகற்காயினை சமைப்பேன்!!!
ReplyDeleteநன்றி கீதா ஆச்சாள், அஸ்கா சக்கரை அல்லது வெல்லம் என்று குறிப்பிட்டேன். நன்றி.
ReplyDelete//என்ன சுசி,சத்தியா இதுக்கு எல்லாம் தோப்புக் கரணம் போடச் சொன்னா அழுதுருவேன், ஆமாஆஅ.) //
சேச்சே... நான் அப்டீல்லாம் சொல்ல மாட்டேன் அண்ணா... அதுக்குதான் ஆள் வரப்போதுல்ல :)))
ஆகா ஒரு முடிவோட தன் இருப்பீங்க போல, எத்தனை நாளா இப்படி மாட்டிவிட சதி? நன்றி சுசி.
கடலைப்பருப்பு சேர்த்துக் கூட்டாகச் சமைத்தாலும், கசப்பு அவ்வளவு தெரியாது!
ஆமாம் சார் அதுக்குப் பேரு பாகற்காய் பிட்டலை என்று சொல்வார்கள், விரைவில் அது குறித்து பதிவு இடுகின்றேன். நன்றி.
நான் அப்டீல்லாம் சொல்ல மாட்டேன் அண்ணா... அதுக்குதான் ஆள் வரப்போதுல்ல :)))//ரீப்பிட்ட்ட்ட்
ஹலோ என்னது இது சுசி கூட சதி அலோசனை எல்லாம் நடக்குதா, சரி சரி, நல்லது நடந்தால் சரி. நன்றி. மேனகா சத்தியா.
நன்றி சுவையான சுவை.
இது எங்க வீட்ல அடிக்கடி சமைப்போம்.பாகற்காய் கறியைவிட எனக்கு இது பிடிக்கும்.
ReplyDeleteஇவ்வளோ எண்ணையா!!!
ReplyDeleteபயமா இருக்கே
நன்றி ஹேமா. எண்ணெய்யில் நல்லா சுருள வதங்கினால்தான் அந்த கசப்பு குறையும். நன்ரி சின்ன அம்மினி.
ReplyDeleteஇந்த பாகற்காயை வதக்காமல் மஞ்சள் உப்பு தண்ணீரில் ஊறவைத்து இதே போல் வெஙகாயம், தக்காளி .வெல்லம் சேர்த்து தான் சமைப்பேன்,சுத்தமா கசப்பே தெரியாது இன்னொரு விதம் ஸ்வீட் அண்ட் சோர் பாகறகாய் இதை நீஙக்ள் சொல்வது வில்லைகளாக வெட்டி எண்ணையில் பொரித்து எடுத்து செய்வேன்
ReplyDeleteஇந்த இரண்டும் ரொம்ப நல்ல இருக்கும்.
அதே போல் சாம்பார் செய்யும் போதெல்லாம் 5 வில்லை பாகறகாயும் சேர்த்து தான் சமைப்பது. சுத்தமா கசப்பு இருக்காது.
ரொம்ப அருமையா விளகக்ததுடன் சொல்லி இருக்கீங்க.
ஆனால் பாகற்காய் பிட்லை என்று ஒன்று செய்வார்கள் அது தெரிந்தால் சொல்லுங்கள்.ஒரு படமாவது சேருங்களேன்.
நன்றி ஜலில்லா தாங்கள் கூறும் செய்முறைகளும் பிரமாதம். பாகற்க்காய் பிட்லை எங்கள் மன்னி அருமையாக செய்வார்கள். அது ஏறக்குறைய பாகற்காயை ரவுண்ட் ரவுண்டாக வெட்டி விதை நீக்கி பின்னர் கொட்டியாக சாம்பார் செய்வது போலத்தான். விரைவில் எங்கள் மன்னியிடம் கேட்டு பதிவு இடுகின்றேன். நான் இடும் பதிவு எல்லாம் பொரும்பாலும் எங்க மன்னியின் கைவண்ணமும், எங்க அம்மாவின் கைவண்ணமும்தான். நான் அவர்களுக்கு உதவும் வகையில் அடுப்படியில் நுழைந்து கற்றுக் கொண்டதும், மற்றும் அவர்களிடம் விளக்கம் கேட்டும் தான் சிங்கப்பூரில் இருந்து பதிவு எழுதுகின்றேன். ஆதலால்தான் படத்துடன் பதிவு இடுவதில்லை. நன்றி.
ReplyDeletepagarkayai vattavadivamagave melithana thundugalaga narukki newspaper ondril paravalaga veyilil oru 30 nimidangal vaithu pinbu athanai yeppadi vendumanaalum samayal seyungal kasappe irukkathu
ReplyDeleteதங்களின் வருகைக்கும், முதல் பின்னூட்டத்திற்க்கும் நன்றி. திரு.ஜாபர்.
ReplyDelete