Friday, November 6, 2009

அவன் தான் மனிதன் - பாகம் 2

சாமி தன் தங்கையின் மீது உயிரையே வைத்திருந்தது போன்று அவன் தங்கை லஷ்மியும் அண்ணனிடத்தில் அளவற்ற பாசம் வைத்திருந்தாள். தம்பி பிறந்தவுடன் தாயை இழந்த அபலையான அவள் இப்போது தந்தையும் உடன் இல்லாமல், கனவனின் அன்பும் இல்லாமல், தான் பிறந்த வீட்டிலேயே ஒரு வேலைக்காரி போல கஷ்டப்பட்டாள். அனாதரவாக மூன்று குழந்தைகளும் பரிதவித்தனர். விதவையாக, ஆதரவற்றவாளக,தன் மகனுடன் பிழைக்க வந்த துரைசாமியின் சகோதரி ஜமிந்தாரினியாக அனைவரையும் ஆட்டிப் படைத்து வந்தாள். பூப்பெய்தா சிறுமியான லஷ்மி இளம்வயது(எட்டு) திருமணம் காரணமாக வாழ்க்கையும் புரியாமல் துன்பத்தில் தத்தளித்தாள். அவளின் ஒரே ஆதரவு தன் அண்ணன் சாமிதான். ஆனாலும் சாமி பத்து வயது சிறுவன் என்ன செய்வான் பாவம். அத்தனை கொடுமைகளையும் தாங்கிக் கொள்வதை வீட.

இந்த இடத்தில் நான் லஷ்மியைப் பற்றிக் கூறவேண்டும். நல்ல மஞ்சள் அழகி. நல்ல களையான முகம். மஞ்சள் நிறத்தில் தங்க விக்கிரகம் போல இருப்பாள். எட்டு வயது என்றாலும் பொறுமை, புன்னகை இரண்டும்தான் அவள் அழகைக் கூட்டியது. லஷ்மியின் தலைமுடிதான் அந்த ஊரில் பிரசித்தம். அந்த கிராமத்தில் இருக்கும் அத்தனை பெண்களும் அவளின் முடியைத் தொட்டுப் பார்க்க ஆசைப்படுவார்கள். ஆம், அடர்த்தியாக, அவள் முழங்கால் வரை நீண்டு தொங்கும் ஜடை. லஷ்மிக்கு பேரழகைக் கொடுக்கும். குணத்திலும் அவள் அழகுதான். அனால் விதி அவள் வாழ்க்கையைத்தான் அழகில்லாமல் செய்து விட்டது. லஷ்மியின் மாமியார் கொடுமை நாளுக்கு நாள் அதிகமாகியது. அவள் கிட்டத்தட்ட ஒரு பணப் பேயாக மாறியிருந்தாள். அதிகாரமும் ஆணவமும் அவளை அரக்கியாய் மாற்றியது.

இத்தனைக்கும் சொந்த அத்தைதான், ஆனால் சொத்தும், ஜமின் அந்தஸ்த்தும் அவரின் மனதை மாற்றியிருந்தது. எந்த ஒரு நல்ல பெண்ணையும் கெடுக்கும் பகட்டும், பணமும் அவர் மனதையும் கெடுத்து வைத்திருந்தது. அவள் மனம் சொத்தின் மீது உள்ள ஆசை காரணமாய் இறுகி கல்லாய்ப் போனது. பொழுது விடிவதில் இருந்து இரவு வரை லஷ்மியிடம் அவள் அதிகாரம் கொடி கட்டிப் பறந்தது. தன் கடந்த கால வாழ்க்கையை நினைக்காமல், கிடைத்ததை உறுதி செய்வதில் மும்மரமாய் இருந்தாள். குழந்தைகளை பாடாய் படுத்தினாள். ஊரில் கிடைத்த மரியாதையும், ஜமின் அந்தஸ்த்தும் அவளை திமிராகவும், ஒரு பெரும் ஆணவக்காரியாயும் மாற்றித் தற்பெருமை கொள்ள வைத்துருந்தது. கால்கள் நிலை கொள்ளாமல் ஆலைந்து கொண்டிருந்தாள்.

லஷ்மியின் வேதனைகளும், சாமிக்கு நடக்கும் கொடுமைகளும் நாளுக்கு நாள் அதிகம் ஆகிக் கொண்டியிருந்தது. சாமி படும் கஸ்டங்களைப் பார்த்து அவள் அதிக வேதனைப் பட்டாள். நம்மால்தான் அண்ணன் இவ்வளவு கஷ்டப்படுகின்றார். நாம் இல்லாமல் இருந்தால் அவருக்கு இவ்வளவு கஷ்டம் இருக்காது என்று நினைக்கவும் ஆரம்பித்தாள். சாமி அவளுக்கு ஆறுதாலாய் பேசி அன்பாய் இருந்தான்.கடைசித் தம்பி மணி விவரம் புரியாத ஆறு வயது சிறுவனாய் இருந்தான். காலம் இப்படிப் போகையில் ஒரு நாள் காலையில் சாமியும், மணியும் பள்ளிக்குச் சென்று விட்டனர். லஷ்மி குளத்தில் குளிக்கப் போவதற்க்காக தன் மாமியாரிடம்(அத்தை) குளிப்பதற்காக மஞ்சள் கேட்டாள். ஏற்கனவே அவள் அழகில் பொறாமையும், எங்கே தன் பையனை அவள் சொல்படி கேட்க வைத்து விடுவாளோ என்ற பயத்தில் இருந்த அவளின் மாமியார். ஆமா நீ கெட்ட கேட்டுக்கு மஞ்சக்கிழங்குதான் வேணுமாக்கும் என்று கூறி அவள் கையில் வைத்துருந்த பித்தளை சொம்பால் நங்க் என்று லஷ்மியின் தலையில் அடித்தார். போடி போய் மண்ணைத் தோய்த்துக் குளி என்று கூறி அனுப்பி விட்டாள். அதுவும் பத்தாமல் துவைக்க ஒரு மூட்டை துணிகளையும் கொடுத்தாள்.

வலியுடன் வந்த லஷ்மி குளத்தின் கரையில் சிந்தைனையில் அமர்ந்தவள், தம்பி பிறந்தவுடன் இறந்த அம்மா, தன்னையும் கூட்டிப் போயிருக்க கூடாதா என்று கண்ணீர் சிந்தினாள். தன்னால்தான் அண்ணா, மற்றும் தம்பிக்கும் கஷ்டம்,தான் இல்லாவிட்டால் அவர்கள் இங்கிருந்து போய்ப் பிழைத்துக் கொள்வார்கள் அல்லது அப்பாவைத் தேடிப் போவார்கள் என்ற முடிவுடன் எழுந்தாள். அங்கு அவர்களின் தோட்டத்தில் உள்ள ஆழமான கிணற்றில் விழுந்து உயிரை விடுவது என்று முடிவு செய்தாள். அவள் தோட்டக் கிணற்றில் சென்று பார்க்கும் போது அது மிக ஆழமாக, பெரியதாக பயத்தை தந்தது. பச்சைப் பசேல் என்று அகன்று, விரிந்த அந்த கிணறு அவளை மிகவும் பயப்படுத்தியது.என்ன செய்வது, உயிரை விடுவதா வேண்டாமா என்று தயங்கி நின்றாள். கிணற்றைப் பார்த்தால் பயமகவும் உள்ளது என்ற குழப்பத்தில் பரிதவித்தாள். எட்டு வயது சிறுமி கொடுமைகள் துரத்தினாலும், பயம் அவள் உயிரைப் போக்கிக் கொள்ளத் தடையாய் இருந்தது. தயங்கிக் கிணற்றின் மேட்டில் நின்றாள். அப்போது அவள் ....... தொடரும் நன்றி.

டிஸ்கி: என் கண்களில் கண்ணிர் அரும்பியதால் தொடர்ந்து எழுத முடியவில்லை. மன்னிக்கவும், மீதி திங்கட்கிழமை எழுதுகின்றேன்.

19 comments:

  1. ம்ம்ம்..முக்கியமான இடத்தில் தொடரும் போட்டுவிட்டீர்கள். பசங்களை நினைத்தால் பாவமாக உள்ளது.

    ReplyDelete
  2. ரொம்ப சோகமா இருக்கு 'கதை'

    ரெண்டு பாகமும் இப்போதான் சேர்த்துப் படிச்சேன். பின்னூட்டத்தில் ஒரு பதிவர் சொன்னதை இங்கே ரிப்பீட்டிக்கறேன்.

    எழுத்துப்பிழைகளைக் களையணும். பாயசத்துக் கல்.

    சொத்தெல்லாம் செத்தாகக்கூடாது.

    ஆமாம்...லக்ஷ்மி பிறந்ததும்தான் தாய் இறந்துட்டாங்களே. அப்புறம் தம்பி மணி (ஆறே வயது) எப்படி வந்தான்!!!!!!

    அத்தையின் கொடுமைகளைச் சரியா விவரிக்கணும். தமிழ்நாட்டுச் சேனல்களில் டிவி சீரியல் பார்க்கறது இல்லையா? விவரமா இருக்குமே:-)

    ReplyDelete
  3. நன்றி திருமதி.வல்லிசிம்ஹன் , திருமதி, துளசி டீச்சர். தவறுகளை சுட்டிக் காட்டியமைக்கு நன்றி.

    நீங்கள் கூறிய பிறகுதான் எனக்கும் மணி எப்படி வந்தான் என கேள்வி வந்தது, உடனடியாக இந்த சம்பவங்களைக் கூறிய என் அம்மாவிற்க்கு போன் செய்து கேட்டேன். அவர்கள் லஷ்மி சிறு வயதில்தான் தாயை இழந்தாள், பிரசவத்தின் போது அல்ல என்றும், மணியின் பிரசவத்தின் போதுதான் எல்லம்மா என்ற அந்த தாய் இறந்தாள் என்றும் கூறினார்கள். நான் தான் தவறாக புரிந்து எழுதிவிட்டேன். மன்னிக்கவும். தங்களின் மற்றும் வல்லிசிம்ஹன் அவர்களுக்கு என் நன்றிகள்.

    ReplyDelete
  4. டீச்சர் இது டீ வி சீரியல் கதை அல்ல இது உண்மை சம்பவம், அன்று நடந்தை இன்று கதையாக எழுதுகின்றேன். நன்றி. ரொம்ப கொடுமையும் சேகமும் எழுதுனா படிக்கறவங்க டிரையல் ஆயிடுவாங்க. நான் அத்தையின் பாவமும், அவர்கள் தண்டிக்கப் பட்ட விதமும் தான் சொல்லப் போறேன். மற்றபடி அவர்களின் கொடுமைகளை விவரித்தால் கோலங்கள் சீரியல் மாதிரி நீளம் ஆகிவிடும். நன்றி.

    ReplyDelete
  5. டீச்சர்,

    தப்பெல்லாம் கண்டுபிடிச்சு சொன்னீங்க மார்க் எவ்வ்ளோன்னு சொல்லையே?

    அண்ணே, கதை நல்லா இருக்கு. ஆனா, இன்னும் மெனக்கெடணும். ஒன்னு வார்த்தைகளில். இல்லை, விளக்கங்களில்.

    குறிப்பாய் எழுத்துப்பிழைகளை களையணும். இல்லையானால் படிக்கிறவங்கள் ஒருவித சங்கடத்தோடே படிப்பார்கள்.

    ReplyDelete
  6. அச்சச்சோ... என் பாட்டிய ஞாபகப்படுத்திட்டீங்க அண்ணா.... அவங்க ஒரே பொண்ணு... சித்தி கொடுமை தாங்காம கிணத்தில குதிச்சே விட்டாங்க....

    இவங்க என்ன பண்ண போறாங்கன்னு படிக்க ஆவலுடன்.....

    ReplyDelete
  7. ம்...மனசைப் பதைக்கிற இடத்தில விட்டிட்டு வாரவிடுமுறை கொண்டாடப் போறீங்களா ?சீக்கிரமா திங்கட்கிழமை வந்துடணும்.

    ReplyDelete
  8. //பூப்பெய்தா சிறுமியான லஷ்மி இளம்வயது(எட்டு) திருமணம் காரணமாக வாழ்க்கையும் புரியாமல் துன்பத்தில் தத்தளித்தாள்.//

    எட்டு வயசுல திருமணமா!?
    விளங்குமா உலகம்!

    ReplyDelete
  9. சட்டு புட்டுன்னு முடிங்க சாமி,
    சோகம் தாங்க முடியல,

    கடைசியா என்ன சொல்ல போறிங்க,
    லட்சுமிக்கு செஞ்ச கொடுமைக்கு மாமியாருக்கு நோய் வந்தோ, விபத்திலயோ செத்து போயிட்டாங்கன்னு சொல்லப்போறிங்க,

    பொறந்தா செத்து தாங்க ஆகணும்!

    ReplyDelete
  10. வாலு உங்க கமெண்ட் படித்து சிரிப்புத் தாங்கல..

    இந்த கதை ரொம்ப சோகமா இருக்கு பித்தன்.திங்கட்கிழமை வரை காத்திருக்கனுமா?

    ReplyDelete
  11. ரொம்ப சோகமான கதை...

    குழந்தைகளை நினைத்தால் மிகவும் பாவமாக இருந்தது.

    ஐயோ! அந்த சிறுமியின் முடிவு மிகவும் கொடுமையாக இருக்குமோ???

    ReplyDelete
  12. Remba nalla irikku! Manasu paarama irkku:(

    ReplyDelete
  13. சொம்பால் நங்க் என்று லஷ்மியின் தலையில் அடித்தார்.


    ஆ படிக்கவே ரொம்ப மனசு கழ்டமா இருக்கு.

    இந்த கொடுமைகள் இன்னும் சில இடங்களில் நடந்து கொண்டு தான் இருக்கு

    ReplyDelete
  14. முழுதாய் படித்து விட்டு கருத்தை சொல்கிறேன்.

    ReplyDelete
  15. நன்றி, சாருஸ்ரீராஜ்,துளசிடீச்சர்,வல்லிசிம்ஹன்,ஹேமா,சுசி,ஜலில்லா,சுவையான சுவை,மேனகா சத்தியா, ரம்யா மற்றும் சிங்க குட்டி.

    நன்றி இளமுருகு நீங்கள் கூறிய ஆலேசனைகளை செயல்படுத்துகின்றேன்.


    // கடைசியா என்ன சொல்ல போறிங்க,
    லட்சுமிக்கு செஞ்ச கொடுமைக்கு மாமியாருக்கு நோய் வந்தோ, விபத்திலயோ செத்து போயிட்டாங்கன்னு சொல்லப்போறிங்க,

    பொறந்தா செத்து தாங்க ஆகணும்! //
    பிறக்கும் அனைவரும் செத்துதான் ஆகவேண்டும் ஆனால் மரணம் எப்படி வருகின்றது என்பதுதான் முக்கியம். வலியும் வேதனையும் அனுபவித்து படுத்த படுக்கையாக கிடந்து, தானும் தன்னை சார்ந்தவர்களை கஷ்டப்படுத்தி வேதனையில் சாவது ஒன்று. இது எதுவும் இல்லாமல் பூ போன்று சாவது ஒன்று.
    உங்களுக்கு தெரியுமா வால்ஸ் நம் முன்னேர்கள் சாவதற்க்கு கூட ஒரு ஸ்லோகம் வைத்துள்ளார்கள். அந்த ஸ்லோகத்தை தினெமும் சொன்னால் நல்ல முறையில் மரணம் கிடைக்கும் என்பார்கள். அந்த சுலோகம் எனக்கு தெரியாது. ஆனால் அதன் அர்த்தம் தெரியும். அது,
    ஒரு பழுத்த வெள்ளரிப்பழம் எப்படி தன் காம்பில் இருந்து விடுபடுகின்றதே அது போல என் ஆத்மா இந்த சட்டையான உடலில் இருந்து விடுபட வேண்டும் என்று வரும். நன்றி வால்பையன்.

    ReplyDelete
  16. 8 வயது பெண்ணுக்கு நீங்கள் சொல்லும் அங்க லக்ஷணங்கள் ரொம்ப ஓவராக தெரிகிறது. ஆனாலும் கதையில் சொல்லும் பால்ய விவாவகம் அல்லது குழந்தை திருமணம் எவ்வளவு கொடுமையானது என்பதை ஏன் சொன்னார்கள் என்பது விளங்குகிறது.

    திலகர் பால்யவிவாகத் தடைக்கு எதிர்ப்பு தெரிவித்தார் என்பது உங்களுக்கு தெரியுமா ?

    ReplyDelete
  17. // 8 வயது பெண்ணுக்கு நீங்கள் சொல்லும் அங்க லக்ஷணங்கள் ரொம்ப ஓவராக தெரிகிறது //
    இதுவும் உண்மைதான். சாமியும் சரி, அவர் தங்கை லஷ்மியும் சரி, நல்லா உயரமுடன், திடகாத்திரமாய் வளர்ந்தவர்கள். அந்த காலத்தில் பெண்கள் நல்ல ஆகாரம் மற்றும் சத்தான உணவை உண்டு செழிப்பாக வளர்ந்தார்கள். உணவு முறை மாறியதால் பதிமூன்று வயதிலும் சரியாக வளராமல் இருப்பது இப்போது.

    ReplyDelete
  18. //உங்களுக்கு தெரியுமா வால்ஸ் நம் முன்னேர்கள் சாவதற்க்கு கூட ஒரு ஸ்லோகம் வைத்துள்ளார்கள். அந்த ஸ்லோகத்தை தினெமும் சொன்னால் நல்ல முறையில் மரணம் கிடைக்கும் என்பார்கள்.//

    என்னைய பார்த்தா காதுல பூ வச்சிகிட்டு சுத்தற ஆள் மாதிரி தெரியுதா!?

    ReplyDelete
  19. டிஸ்கி: என் கண்களில் கண்ணிர் அரும்பியதால் தொடர்ந்து எழுத முடியவில்லை.



    ..... a tear-jerker story.... mmmm......

    ReplyDelete

என்னை வளர்க்க, கருத்துரையிடுக...

பதிவைப் படித்து கருத்து போடலைனா
உங்க கனவுல பூதம் வரும்,,, ஆமா சொல்லிட்டேன்.