

பின் பம்பா சக்தி, பம்



நீலி மலை ஏறி முடிந்தது சபரி பீடம் மற்றும் சரங்குத்தி ஆகியவற்றை கடந்து சபரி

நான் எங்க நாலவது அண்ணா மற்றும் குட்டியுடன் மூன்றாவது வருடயாத்திரைக்கு யாத்திரைக்கு மலைக்குச் சென்று இருந்தேம். அப்போது நாங்கள் 14.01.94 அன்று பெரியானை வட்டத்தில் தங்கி ஜோதி தரிசனம் செய்வது வழக்கம். அப்போது நாங்கள் மூவரும் இங்கிருந்து பம்பை ஆற்றைக் கடந்து குறுக்கு வழியில் நீலி மலை மேடான அப்பாச்சி மேட்டிற்க்கு வாட்டர் டாங்க் வழியில் பயணித்து ஜோதி தரிசனம் செய்தேம். அப்போது தரிசனம் முடிந்த அடுத்த நிமிடம் என் அண்ணா நீலி மலைப் பாதையின் ஒரு புறத்தில் இருந்து மறுபுறம் செல்ல முயற்ச்சித்தான். லட்சக்கனக்கான மக்கள் மலைக்கு மேலும், கீழும் நகர முற்ப்பட்டனர். இதில் ஒருபுறம் உள் சென்று மறுபுறம் நசுங்கி வெளிவர வேண்டும். நான் ஒரு அரைமணி நேரம் காத்துருந்தால் கூட்டம் குறைந்து விடும் பின் செல்லலாம் என்றேன். அவன் அப்ப கூட்டம் அதிகம் ஆகிவிடும் பேசாமல் கூட வா என்றான். நான் தான் சொல் பேச்சு கேட்டு பழக்கம் இல்லாத ஜாதி ஆச்சே. ஆதலால் "நீ வேணா போ, நான் கூட்டம் குறைந்தவுடன் வருகின்றேன்" என்றேன். அவனும் "நீ என்ன வேணா பண்ணு, உன்னை எல்லாம் சொல்லித்திருத்த முடியாதுன்னு" என் தமிழ் வாத்தியா

சிறிது நேரம் ஆக ஆகக், என் அண்ணா கூறிய மாதிரி ஜே ஜே எனக் கூட்டம் அதிகம் ஆனது, ஆனால் குறையவில்லை. நானும் இனி வேலைக்கு ஆவாது எனறு முடிவு செய்து கூட்டத்தில் நுழைந்து நசுங்கிப், பிதுங்கி மறுபக்கம் வந்தேன். வந்தவுடன் ஒரு பத்து நிமிடம் காட்டுக்குள் நடந்து இருப்பேன். அப்பத்தான் நான் செய்த தவறுகள் புரிந்தது. ஒன்று என் அண்ணாவின் பேச்சைக் கேட்டு அவருடன் செல்லாதது, இரண்டு நான் தனியாக டார்ச் லைட் எடுத்து வராதது. காட்டுக்குள் நல்ல கும் என்ற இருட்டில் மாட்டிக் கொண்டேன். மங்கலாக தெரிந்த பாதையும் இப்போது தெரியவில்லை. யாரும் நடக்காத குறுக்குத் தடம் வேறு. என்ன செய்வது என்று புரியவில்லை. நின்று சுற்றிலும் பார்க்கின்றேன். நான் கடந்து வந்த பாதை கூடத் தெரியவில்லை. அந்த இடத்தில் ஆகாயம் கூடத் தெரியாத அடர்ந்த காடு. நிலவு வெளிச்சமும் இல்லை. என் கண்களுக்கு மரங்களின் கருமையும், இருட்டும் தவிர வேறு எதுவும் தெரியவில்லை. யானை மற்றும் புலியின் பயம் வேறு வந்து கிலி அடிக்க ஆரம்பித்து விட்டது. என்ன செய்வது என்று அழாத குறை. கிரி வலம் வர்ற மாதிரி சுத்தி, சுத்திப் பார்த்தாலும் ஒரு அடிகூட வைக்க முடியாத இருட்டு. நான் கத்த ஆரம்பித்தேன். சாமி யாராவது இருக்கீங்களா? ஹலோ. ஹலோ. யாராவது இருக்கிங்களா என்று பல முறை காட்டுக் கத்து கத்தினேன். ஒன்றும் நடக்கவில்லை. இருட்டும், பயமும் என்னை மென்மேலும் மெர்சலாக்கின. நானும் பல முறை கத்திவிட்டு அமைதியானேன். என்ன செய்வது என்று புரியவில்லை. பின் நான் செய்த தவறு(மூத்தோர் சொல் கேளாமை) உணர்ந்து, பின் நான் "சாமியே சரணம் அய்யப்பா,சரணம் அய்யப்பா" என்று உரத்த குரலில் கத்த தொடங்கினேன். மூன்று முறை கத்தி இருப்பேன். அப்போது....... தொடரும். நாளைய பதிவில்.
நன்றி.
//நான் குறைந்தது அரை மணி நேரமாவது(எருமை மாடு மாதிரி) குளிப்பேன். //
ReplyDeleteநீங்க ரொம்ப நல்லவருங்கண்ணா... உண்மைய ஒத்துக்கறீங்க.
//வரும் 09.12.09 அன்று அதிகாலை ஜந்து மணியளவில் இங்கு குளிப்பேன் என்பதை நினைக்கையில் மிகவும் ஆனந்தமாக உள்ளது.//
ரொம்ப சந்தோஷம். அட்வான்ஸ் வாழ்த்துக்கள். எங்களுக்கும் சேத்து வேண்டிக்குங்க.
//என்னை மாதிரி அவரும் தனிக்கட்டையாக இருப்பார்.)//
இன்னும் கொஞ்ச நாளைக்குதான் நீங்க இத சொல்லலாம் :)))
//அதில் இரு கால்களையும் இழந்த ஒருவர் தன்னம்பிக்கையுடன் ஏறுவதைப் பாருங்கள்.//
ReplyDeleteஎன்ன ஒரு தன்னம்பிக்கை...
//அப்போது....... //
போட்டுட்டீங்களே தொடரும்.
அட்வான்ஸ் வாழ்த்துக்கள். எங்களுக்கும் சேத்து வேண்டிக்குங்க....
ReplyDeleteஉங்க பயணம் இனிதாய் அமைய வாழ்த்துக்கள்!!.
ReplyDeleteத்ரில்லிங்கா இருக்கு.
ReplyDeleteஎனது கட்டுரைகளைத் தொடர்ந்து படித்து ஆதரவு அளிக்கும் உங்கள் அனைவருக்கும் எனது நன்றி.
ReplyDeletesuperapu ......
ReplyDelete