நாங்கள் சோட்டானிக்கரை தரிசனம் செய்வதற்க்கு முன்பாக குருவாயுர் சென்று இருந்தேன். அந்த மாயக் கண்ணனை, குழந்தையை அனைவரும் தரிசனம் செய்து இருப்பீர்கள், ஆதலால் விவரிக்க வில்லை. சோட்டானிக்கரை தரிசனம் முடித்து, எரிமேலிப் பயணம் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரப் பயணம். அன்று குறுகலனான ரோடுகளாலும், மக்கள் கூட்டம், பயண பேருந்து நெருக்கம் என ஜந்து மணி நேரம் ஆனது. நான் களைப்பு மற்றும் காய்ச்சல் உடன் பயணம் செய்தேன். புதிய இடங்களை பார்ப்பதால் கொஞ்சம் அசதி தெரியவில்லை. என்னடா இவன் அற்புதம் அது இதுன்னு சொல்லிட்டு, இப்படி உடம்பு சரியில்லை, காய்ச்சக் குளிறுன்னு கடுப்படிக்கிறான்னு கடுப்பாகி விடாதீர்கள். நம் கட்டுரையில் இனிதான் சூடும் சுவையும் ஆரம்பம். எரிமேலி வரும் வரைதான் ஒரு பக்தனின் பொறுப்பு, எரிமேலியில் இருந்து சன்னிதானம் சென்று திரும்புவது அந்த அய்யனின் பொறுப்பு. ஆதலால் அந்த அய்யனின் திருவிளையாடல்கள் இனிதான் ஆரம்பம்.
நாங்கள் எரிமேலி செல்லும் போது இரவு ஏழு அங்கு சென்றவுடன், எரிமேலி பேட்டை துள்ளும் நிகழ்ச்சிக்காக உடல் முழுதும் கலர் பொடிகளை தூவிக்கொண்டும், இடுப்பில் வேப்பிலை, அசோகா இலைகளை கட்டிக் கொண்டும், ஆதிவாசிகள், மற்றும் வேடர்களைப் போல வேடமிட்டு தெருவில் தாள வாத்தியத்துடன், சாமி திந்தகத்தோம், அய்யப்ப திந்தக்த்தோம்
என ஆடிப்பாடி சரண கோசம் இட்டு ஆடிப் பேட்டை துள்ளினேம். இது எதற்காக என்று புரிய நாம் எரிமேலியின் வரலாற்றைப் பார்க்கவேண்டும்.
நாங்கள் எரிமேலி செல்லும் போது இரவு ஏழு அங்கு சென்றவுடன், எரிமேலி பேட்டை துள்ளும் நிகழ்ச்சிக்காக உடல் முழுதும் கலர் பொடிகளை தூவிக்கொண்டும், இடுப்பில் வேப்பிலை, அசோகா இலைகளை கட்டிக் கொண்டும், ஆதிவாசிகள், மற்றும் வேடர்களைப் போல வேடமிட்டு தெருவில் தாள வாத்தியத்துடன், சாமி திந்தகத்தோம், அய்யப்ப திந்தக்த்தோம்
என ஆடிப்பாடி சரண கோசம் இட்டு ஆடிப் பேட்டை துள்ளினேம். இது எதற்காக என்று புரிய நாம் எரிமேலியின் வரலாற்றைப் பார்க்கவேண்டும்.
இந்த எரிமேலியில் தலைப் பாறக்கோட்டை என்ற இடத்தில் ஒரு வேடவர் மூப்பன்(பெரியவர்,தலைவர்) இருந்தார். இவர் அய்யப்பன் குருகுல வாசம் செய்யும் போது அவரால் மிகவும் மதிக்கப் பட்டவர், இவர் இந்தப் பகுதியின் தலைவர். பேட்டை சாஸ்தா கோவிலின் எதிர்ப்புறம் இந்த தலைப்பாறை மூப்பனும், அய்யப்பனும் சந்தித்த போது அமர்ந்து பேசிய பாறை இன்னமும் உள்ளது. பக்கதர்கள் இந்த பாறையைத், தலைப் பாறைக்கோட்டை மூப்பனாக வணங்குகின்றார்கள். இந்த பேட்டை சாஸ்தா கோவிலில் சாயமிட்டு கிளம்பி ஆடிப்,பாடிக் கொண்டு கொண்டு நாம் பேட்டை துள்ளலாம். நாம் அடுத்து ஆடிக்கொண்டு போகுமிடம் அய்யப்பனின் நண்பரும், உயிர்த்தோழனுமான, முகமதியர் வாவரின் பள்ளிவாசல். இந்த வாவர் ஒரு பெரும் கடல் கொள்ளைக்காரன், சிறிய கப்பலில் வந்து அருகில் உள்ள நாடுகளை கொள்ளையடிப்பது வழக்கம். பந்தளத்தின் சிறப்பைக் கேள்விப் பட்டு, அங்கு கொள்ளையடிக்க வந்த வாவரை அய்யப்பன் எதிர்கொண்டு பேரில் தோற்கடித்தார், பின்னர் தன் அஷ்டமா சித்திகளைக் காட்டி, வாவரின் அன்புக்குப் பாத்திரமானார். வயதில் மூத்தவரான வாவர், அய்யனின் அழகு, வசிகரம், அமைதி, ஆற்றல் ஆகியவற்றைக் கண்டு வியந்து அவரின் தொண்டன் மற்றும் நண்பரானார். இந்த வாவரின் பள்ளிவாசல்தான் நாம் அடுத்து தொழும் இடம்,
அனைத்து கடவுளும் நம் கடவுளே. வாருங்கள் தொழுவேம் இங்கு,
பள்ளிவாசலில் தொழுது விட்டு நாம் அடுத்து செல்வது அய்யனின் எரிமேலி ஸ்ரீதர்மசாஸ்தா கோவில், இது அந்த அய்யனின் முன் அவதாரமான ஸ்ரீதர்ம சாஸ்தா, இங்கு பூரணா, புஷ்கலா என்னும் இரு மனைவியுடன் காட்சி அளிக்கின்றார். பாண்டிய தேசத்தின் பூரணா மற்றும் காசிராஜன் மகளான புஷ்கலை ஆகியோருடன் விளங்குகின்றார். இதனால்தான் நாம் அய்யப்பனை காசி, இராமேஷ்வரம்,மலையாளம், பாண்டி அடக்கியாள்வபர் என்று கூறுகின்றேம். இந்த எரிமேலி தர்ம சாஸ்தா கோவிலில் வந்து பேட்டை துள்ளும் நிகழ்வு இக்கோயிலுடன் முடிகின்றது. இனி பேட்டை துள்ளும் கதையைப் பார்ப்பேம். முன்பு ஒரு சமயம் உதயணன் என்னும் மிகவும் மேசமான கொள்ளைக்காரன் இங்கு கரிமலை, உச்சிப்பாறை, உடும்பாறை ஆகிய மலை இடங்களில் இருந்து கொண்டு, திடீர்த் திடீர் எனத் தாக்கி செல்வம், பெண்கள் ஆகியேரைக் கவர்ந்து சென்றான். இந்த உதயணன் ஸ்ரீதர்ம சாஸ்தா வழிபாட்டுக்கும் இடையூறாக இருந்தான். ஆகவே அய்யப்பனின் படைகள், வாவர், தலைப் பாறைக்கோட்டை மூப்பன், கரிமலைக் கோட்டை அதிபதி ஆகியேர் துணையுடன் காட்டுவாசிகளைப் போலவும், ஆதிவாசிகளைப் போலவும் மாறுவேடமிட்டு, ஆடிப்பாடி உதணயனன் இருக்கும் இடத்திற்க்கு சென்று, வாவர் உதயணனைக் கொன்றார். வாவர் உதயணனைக் கொன்று வெற்றியுடன் திரும்புகையில் அவனின் படைத்தளபதி ஒருவன் மறைந்து இருந்து கட்டாறி வீசிக் கொன்றான். வாவரின் ஆத்மாவை அய்யப்பன் தவத்தில் அமரப் போகும் சமயம், அய்யப்பன் வாபரையும் தம்முடன் மேட்சமடையுமாறு கூற வாபர் அதை (அனுமார் போல ) மறுத்து எரிமேலியில் வந்து பேட்டை துள்ளி ஆடி, தம்மை வணங்கும் பக்தரை நல்ல படியாக சபரி மலை சன்னிதானம் கொணர்ந்து விடும் பொறுப்பு தன்னுடையது என்றும், தான் அய்யப்ப பக்தருக்கு சேவை செய்ய விரும்பி எரிமேலியில் தொடர்ந்து இருக்க விரும்புதாகவும் கூறினார். பேட்டை துள்ளி முடிந்ததும், ஸ்ரீதர்ம சாஸ்தாவை வணங்கிப் பின், வாவரின் பள்ளிவாசல் வந்து வணங்கிப் பெருவழிப் பயணம் ஆரம்பிக்க வேண்டும். வாவரின் பள்ளிவாசலும், ஸ்ரீஎரிமேலி தர்மசாஸ்தா கோவிலும் எதிர் எதிரில் இருக்கும் படத்தைக் காணலாம். வாவருக்காக அய்யன் இங்கு தர்மசாஸ்தா கோலத்தில் உள்ளார்.
இந்த நிகழ்ச்சியை ஞாபகப் படுத்தும் முறையில் தான் இந்த பேட்டை துள்ளூம் நிகழ்வு பக்தர்களால் நடத்தப் படுகின்றது. பல தூர தேசங்களில் இருந்து வரும் அய்யப்ப பக்த்தர்களுக்கு இந்த பேட்டை துள்ளும் நிகழ்வு ஒரு வார்ம் அப் என்றால் அதில் சந்தோகம் இல்லை. நான் இந்த பேட்டை துள்ளும் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு குளிர் காய்ச்சலுடன் ஒரு கடையின் வாசலில் இரவு முழுக்க அமர்ந்து கழித்து அதிகாலை நாலு மணி அளவில் குளித்து கோவிலுக்கும், பள்ளிவாசலுக்கும் சென்று வழி பட்டு பேருர்த்தோடு நேக்கி நடந்தோம். நாமும் தொடரில் நடப்போம்....... தொடரும்.
டிஸ்கி: இந்த பேட்டை துள்ளும் நிகழ்வை முடித்துப் பின் ஸ்ரீதர்ம சாஸ்தா கோவிலின் முன் உள்ள வாய்க்காலில் குளிக்க வேண்டும். நான் முதன் முறை போனபோது அங்கு குளிக்கப் போன நான் அதிர்ந்து நின்று விட்டேன். காரணம் அது வறண்ட காலம், முங்கால் அளவு தண்ணீரைத் தோக்கி வைத்திருந்தார்கள். பல லட்சக்கணக்கான பக்தர்கள் சாயமிட்டு குளிப்பதால்,அந்த தண்ணீர் திருப்பூர் சாயப் பட்டறைக் கழிவு போல கலர் மாறி மிகவும் அசுத்தமாக இருந்தது. நான் இதில் குளிக்கனுமா என கேக்க, குருசாமியும் மற்றவரும், "ஆமா சும்மா குளி சாமி" என்று கூற நான் அந்த வாய்க்காலில் குளித்தேன். பின் கரையில் இருந்த ஒரு குடினீர் குழாய்யின் நீரில் துண்டை நனைத்து என் உடல் பூராவும் துடைத்து விட்டேன். ஆனாலும் உடல் பூராவும் சேறு நாற்றம் போல ஒரு அருவெறுப்பு ஒரு மணி நேரத்திற்க்கு இருந்தது. இப்போது அந்த வாய்க்காலில் ஒரு மடை அணை கட்டி தினமும் புதிய தண்ணீர் எப்போதும் இருப்பது போலச் செய்வதால், தண்ணீர் சுத்தமாகவும், பின்னர் எரிமேலியில் பல இடங்களில் தண்ணீர் குழாய் அமைத்து இருபத்தி நாலு மணி நேரமும் தண்ணீர் வருவதால், இப்ப இந்த பிரச்சனை இல்லை. நன்றி.
Ettippaarthufy...!
ReplyDeleteஆஹா... ஒரே ஆன்மீகமா இருக்கே..! அருமையான பகிர்வு... மீதி அப்பால படிச்சுக்கறேன்... அடிக்கடி வந்து கவனப்படுத்துங்க...=))
// இதனால்தான் நாம் அய்யப்பனை காசி, இராமேஷ்வரம்,மலையாளம், பாண்டி அடக்கியாள்வபர் என்று கூறுகின்றேம். //
ReplyDeleteஆசிய நாடுகளுக்கு எல்லையை நீட்டலாம் :)
நான் சொன்னதுக்கு மரியாதை கொடுத்து வந்த கலகலபிரியாவிற்க்கு நன்றி.
ReplyDeleteநன்றி கோவியார், ஆசியாவிற்கு விரிவு படுத்தலாம், ஆனா அங்க எல்லாம் கல்யானம் பண்ணவில்லையே, அடுத்த அவதாரத்தில் வேண்டுமானால் ஒரு சீனாவும், இரஷ்யாவும் கல்யாணம் பண்ணி வைச்சுரலாம். சரியா. ஹி ஹி சும்மா தமாசு.
ஆனா கோவி ஜி நீங்க சொல்ற மாதிரி அவரு ஆசியாக் கூட போயிருவார் போல, நான் மாலை போட்டு விரதம் இருக்கிறதைப் பார்ர்து என்னுடம் பணி புரியும் இரு சீனர்கள் போக வேண்டும் என்ற ஆசையில் உள்ளார்கள். நானும் அடுத்த வருடம் பார்க்கலாம் என்று சொல்லியுள்ளளேன். நன்றி.
சுவாமி தரிசனம் அறிந்துகொள்கிறேன்.
ReplyDeleteஅருமையா எழுதறீங்க.
ReplyDeleteஅழகான படம்...
ReplyDeleteஅருமையா எழுதி இருக்கீங்க அண்ணா....
நன்றி ஹேமா, சுசி மற்றும் மேனகா சத்தியா.
ReplyDelete