Wednesday, November 11, 2009

அவன் தான் மனிதன் - பாகம் 5

துரைசாமி தன் மகனுடன் வெளியேறிய பின்னர், ஜமினில் கேள்வி கேக்க யாருமில்லாமல் அத்தையின் அதிகாரம் தொடர்ந்தது. சொத்துக்கள் மற்றும் ஜமின் அவர் வசம் வந்தது. அவரும் தன் தம்பியை தன் இஷ்டப்படி ஆட்டிப் படைத்தார். இப்படியே சில வருடங்கள் கழிந்தன. எல்லாம் நல்ல படியாக போயிற்று. அப்போதுதான் மைனருக்கு ஒரு புது தொடர்பும், காதலும் அரும்பியது. சாதியக் கட்டுப்பாடுகள் நிறைந்த அந்நாளில் நல்ல அழகான உயரமான சிவந்த நிறமுடைய தனிமரமான மைனரின் விளையாட்டுக்களும் தொடந்தன. அப்போது அவரின் பார்வை ஒரு பாப்பா என்ற பெண்ணின் மீது விழுந்தது.

அந்த பெண்ணும் நல்ல உயரம், சிவந்த நிறம், அழகான குணவதி. ஆனாலும் இவரின் காதல் வலையில் விழுந்தார். காதல், உறவாய் மலர்ந்து மணக்கத் தொடங்கியது மணக்கும் மணமும், முத்திய கத்திரிக்காயும் கடைத்தெருவுக்கு வந்துதான் தீர வேண்டும் அல்லவா? அதுபோல ஊராருக்கும் தெரிய வந்தது. அந்த பெண் அந்தப் பகுதியின் ஆதிக்க சாதியைச் சார்ந்தவர். ஜமின் என்றாலும் மரியாதைக்குறிய பதவி என்றாலும் தங்களின் சாதியில் பெண்டாள வந்தவனை விடும் பழக்கம் அவர்களுக்கு இல்லை. எல்லாரும் ஒன்று கூடினார்கள். தடி அரிவாளுடன் ஜமினை முற்றுகையிட்டார்கள். மைனர் உள்ளே மாட்டிக் கொண்டார். வந்தால் வெட்டிவிடும் சூழ்னிலை. அத்தை அனைவரிடமும் கெஞ்சினாள், பரிதவித்தாள். அனைவரின் காலில் விழாத குறையாக மன்றாடினாள். தன் பையனை விட்டு விடுமாறு அழுதாள். ஊரார் " நீ என்னடி சொல்வது பஞ்சம் பொழைக்க வந்தவ. பெரிய அய்யரை வரச் சொல். அவரிடம் பேசுவேம் " என்றனர். தகவல் துரைசாமிக்குத் தெரியப் படுத்த துரைசாமி அவரின் மகன் சாமி மற்றும் தனது சகோதரகளுடன் போனார். மதியம் மூன்று மணிக்கு வீட்டுக்குள் மாட்டிய அவர்கள் ஆறு மணி வரை அஞ்சியும், கொஞ்சியும் வந்தனர். ஆறு மணிக்கு வந்தவர்களுடன் பஞ்சாயத்து இரவு ஏழு மணி வரை போனது. பின் பத்து மணி அளவில் ஏமாற்றிய பாப்பாவை மைனர் மணமுடித்து தன் வீட்டில் வைப்பது என்றும் தங்களின் பெண்ணுக்கு எதாவது என்றால் அதற்கு இவர்கள் தான் பொறுப்பு என்றும் முடிவு செய்து, வந்தவர்கள் கிளம்பிப் போனார்கள். இந்தக் கூத்துக்கள் அடங்க இரவு பதிணோரு மணி ஆனது.

இரவு படுத்த அத்தைக்கு உறக்கம் வரவில்லை, புரண்டு படுத்தாள், துடித்தாள், நேற்று வரை வணக்கம் போட்டவர்கள் எல்லாம் மாறி மாறித் திட்டினார்கள். எல்லாரின் காலில் விழாத குறையாக கெஞ்ச வைத்தார்கள். இனி அவளை யார் மதிப்பார்கள், எப்படி அழைப்பார்கள். கேலிப் பேசுவதும், கிண்டல் செய்வதுமாக மாறி விடும்.ஊராரின் மதிப்புப் போய் ஏளனம் மட்டும் மிஞ்சும். எப்படி நடமாடுவது, எப்படி வாழ்வது என்ற குழப்பம் அவளை வாட்டியது. யாருக்குத் துன்பம் செய்தேமே, யாரை விரட்டினமே இன்று அவர்களால் உயிர்ப் பிச்சை அடைந்தை அவளால் தங்கிக் கொள்ள இயலவில்லை. புழுங்கிச் செத்தாள். ஊராரின் பேச்சுக்களும், மிரட்டல்களும், இவரின் கெஞ்சல்களும் மாறி மாறி அவளை உறங்க விடாமல் செய்தது. இன்று வரை அவளின் கட்டுப் பாட்டில் இருந்த ஜமின் வீடு நாளை அந்தப் பெண்ணின் கட்டுப் பாட்டில், சொந்த ஊரில் தமது மக்களின் உதவியுடன் இருக்கும் அவள், தன்னை மதிப்பாளா? அவளுக்கு கட்டுப்பட்டு நான் நடக்க வேண்டுமா? என்று அவள் மனம் தணலில் வெந்த புழுவைப் போல துடித்தது. இறுதியாக ஒரு முடிவு செய்தாள். அது.

தான் யாரைக் கொடுமைப் படுத்தினாளே. எப்படி எல்லாம் சித்தர வதை செய்து லஷ்மியை கிணற்றில் தள்ளினளே. அந்தக் கிணற்றில் அதிகாலை ஜந்து மணிக்கு விழுந்து செத்தாள். அழுவதற்கும், பிணத்தை எடுக்க ஆளில்லாமல் பக்கத்து ஊரில் இருந்து அழைத்து வந்தனர். அவள் மரணத்திற்கு ஊரார் ஒத்துழைக்க மறுத்தனர். பின் ஒரு வழியாக அவளின் கதையும் முடிந்தது. அதன் பின் பாப்பாவைத் திருமணம் செய்த மைனர் பாப்பாவுடனும், தன் புதல்வனுடம் குடித்தனம் செய்தார். நாங்கள் எல்லாம் பாப்பா அத்தை என்று அன்புடன் அழைத்து ஏற்றுக் கொண்டேம். அவரும் எங்கள் வீட்டினருடன் அன்பாய் பழகி வந்தார். ஆனாலும் எப்ப அந்த கிராமம் போனாலும் இரத்த அழுத்தம் அதிகம் ஆகி மயங்கி விடுவதால், எங்க அப்பாவை அனுப்புவதை தவிர்த்தேம். வருடம் ஒரு முறை அங்கு சென்று எங்களின் கிராம கன்னிமார் சாமியை வழிபடுபது வழக்கம். அப்போது மட்டும் என் அப்பா அந்த தோட்ட கிணற்றடியில் சிறிது நேரம் அமர்வார். ஆனாலும் ஜமின் வீட்டுக்குள் போக மாட்டார். எனது நாற்பது அண்டு அகவையில் நான் இருமுறை மட்டும் இந்த ஜமினுக்கும், ஒரே ஒருமுறை மட்டும் பாப்பா அத்தையின் அழைப்பின், அன்பின் பேரில் அந்த வீட்டுக்குள் சென்றேன். இன்னமும் வரும் தொடரும் நன்றி.

14 comments:

  1. //அந்த பெண்ணும் நல்ல உயரம், சிவந்த நிறம், அழகான குணவதி. ஆனாலும் இவரின் காதல் வலையில் விழுந்தார்.//

    அடிப்படையில் நல்ல உயரம், சிவந்த நிறம், குணவதி இவையெல்லாம் காதல் வலையில் விழவைக்கும் தகுதிகள் இல்லையா!?

    எதற்கு அந்த ”ஆனாலும்”

    ReplyDelete
  2. //மணக்கும் மணமும், முத்திய கத்திரிக்காயும் கடைத்தெருவுக்கு வந்துதான் தீர வேண்டும் அல்லவா?//

    இதெல்லாம் எவன் கண்டுபிடிச்ச பழமொழி!
    எங்க தோட்டத்துல விளையுறத நாங்க அடுப்படிக்கு தான் கொண்டுபோவோம், கடைதெருவுக்கு அல்ல!

    ReplyDelete
  3. //அந்த பெண் அந்தப் பகுதியின் ஆதிக்க சாதியைச் சார்ந்தவர்.//

    தலையில் ரொண்டு கொம்பு இருக்குமோ!

    ReplyDelete
  4. //நீ என்னடி சொல்வது பஞ்சம் பொழைக்க வந்தவ. பெரிய அய்யரை வரச் சொல். அவரிடம் பேசுவேம் "//

    தப்பா சொல்றிங்க!
    அவுங்க சொன்னது பெரிய குடுமியை வரச்சொல் என்று தான்!

    ReplyDelete
  5. இதானா மேட்டர்!

    சரி வாங்க உரையாடலுக்கு!

    பலநாட்கள் கொடுமை அனுபவித்த லச்சுமி எங்கே!
    ஒரே நாள் அவமானத்தில் தற்கொலை செய்து கொண்ட மாமியார் எங்கே!?

    அதுவும் நல்லா வாழ்ந்து போகப்போற காலத்தில் தற்கொலை செய்து கொண்டால் என்ன, செய்யாட்டி என்ன!?

    ஆனா லச்சுமி அப்படியா!
    உங்க அத்தையை கிரி பட வடிவேலு மாதிரி நீங்களே வேற வர்ணிச்சிருந்திங்க, அந்த வயசுல அவுங்க செத்ததுக்கு பதில் என்ன!?

    நீங்க ஏற்கனவே ஒரு பதிவில் சொல்லியிருந்தா மாதிரி பேயா வந்து எல்லாரையும் பழி வாங்கியிருக்கலாம்ல!

    ReplyDelete
  6. நீங்க ஒரு ஜமின் பரம்பரையா!?
    பத்தாததுக்கு அய்யங்கார் வேற!

    ReplyDelete
  7. //அந்த பெண்ணும் நல்ல உயரம், சிவந்த நிறம், அழகான குணவதி. ஆனாலும் இவரின் காதல் வலையில் விழுந்தார். காதல், உறவாய் மலர்ந்து மணக்கத் தொடங்கியது மணக்கும் மணமும், முத்திய கத்திரிக்காயும் கடைத்தெருவுக்கு வந்துதான் தீர வேண்டும் அல்லவா? //

    :) சத்தியராஜ் இந்தக் கதையை கேள்வி பட்டுதான் ஒரு படத்தில் ரஞ்சிதாவுக்கு அல்வா கொடுத்தார் போல

    வால்பையனுக்கு ஏற்பட்ட சந்தேகம், மைனர் ஒரு பொறுக்கின்னு தெரிஞ்சும் குணவதியான பெண் எப்படி வலையில் விழுந்தார், மாய வலையா ?

    ReplyDelete
  8. வால் அண்ணா ஆதிக்க சாதி சொன்னது நம்ம ஊருல பெரும்பான்மை சாதியினர். தலையில கொம்பு இருக்கான்னு நீங்களே பார்த்துக்கங்க.

    எங்க இனத்தில் குடுமி வைக்கும் பழக்கம் இல்லை.

    பல நாட்கள் கொடுமை அனுபவித்த லஷ்மி ஊராரின் ஒட்டு மொத்த அன்பையும், இரக்கத்தையும், நல்ல பெயரையும் பெற்றாள். ஆனால் இவர் வெறுப்பையும், அவமானத்தையும் பெற்றாள்.

    அவர் அந்த வயதில் செத்தததும், என் அப்பா சிறு வயதில் கொடுமைகளை அனுபவித்ததும் அவர்களின் ஊழ்வினைப் பயன்.நன்றி வால்ஸ்.

    அந்த காலத்தில் ஜமின் இருந்தது. நான் ஜமின் பரம்பரையும் பார்ப்பானும் அல்ல. நான் ஒரு சராசரி மனிதன் அவ்வளவுதான்.

    கோவி அண்ணா சத்தியராஜ் அல்வா கொடுத்தது கஸ்தூரிக்கு, ரஞ்சிதா அல்ல.

    மைனர் அந்த பெண்ணை ஏமாற்றினார். அந்த பெண் காதல் என்று ஏமாந்தாள். அவர்கள் நல்லவர் ஆதலால் நான் அவர்களை ஏமாந்தாலும் குணவதி என்று குறிப்பிட்டேன். படிப்பவர்கள் தப்பாக ஒரு பெண்ணை நினைக்கக் கூடாது என்பதால். நன்றி.

    நன்றி சுவையான சுவை.

    ReplyDelete
  9. //வால் அண்ணா//

    எதாயிருந்தாலும் பேசி தீர்த்துக்கலாம்!
    இப்படி காமெடி பண்ணாதிங்க!

    ReplyDelete
  10. //அவர் அந்த வயதில் செத்தததும், என் அப்பா சிறு வயதில் கொடுமைகளை அனுபவித்ததும் அவர்களின் ஊழ்வினைப் பயன்.//

    அப்ப அடுத்த ஜென்மத்துல உங்க அத்தை மாமியாரா வந்து அவுங்க மாமியாரை கொடுமை படுத்துவாங்க சரியா!? அப்புறம் அதுக்கு அடுத்த ஜென்மம் இப்படியே மாறி மாறி கொடுமை படுத்துவாங்களாம், நீங்களும் ஒவ்வோரு ஜென்மத்திலும் இதே மாதிரி கதை எழுதி படுத்துவிங்களாம் சரியா!

    ReplyDelete
  11. //நான் ஜமின் பரம்பரையும் பார்ப்பானும் அல்ல. //

    அய்யங்கார்ன்னு சொன்னா மதிரி இருந்தது!

    வடகலையா, தென்கலையா!?

    ReplyDelete
  12. //படிப்பவர்கள் தப்பாக ஒரு பெண்ணை நினைக்கக் கூடாது என்பதால்.//

    உங்க அத்தை மாமியாரை பற்றி மட்டும் தப்பா நினைக்கலாமா!?

    ReplyDelete
  13. ஜாமீன் பரம்பரை........ அண்ணா, நீங்க பெரிய இடம்தான்....... !

    ReplyDelete

என்னை வளர்க்க, கருத்துரையிடுக...

பதிவைப் படித்து கருத்து போடலைனா
உங்க கனவுல பூதம் வரும்,,, ஆமா சொல்லிட்டேன்.