Wednesday, November 4, 2009

அந்த நாள் பயங்கரம் சுனாமி- நிறைவுப் பகுதி.

நான் கூறியது போல சுனாமியால் பாதிப்புகள் அதிகம் இருந்தாலும், நிறைய நல்ல பல விசயங்களை அறிய முடிந்தது. ஜாதி, மதம், அந்தஸ்த்து என நிறைய வித்தியாசங்களை வைத்து தங்களுக்குள் கூறு போடும் மனிதர்களை இயற்கை ஒன்றினைத்தது அன்றுதான். நல்லவேளையாக ஞாயிறுக்கிழமையாகப் போயிற்று இல்லை என்றால் பாதிப்புகள் இன்னமும் அதிகமாக இருக்கும். அலுவலகம் செல்பவர்கள், பள்ளிக்குழந்தைகள் எனப் பலரும் உயிர் இழக்கும் அபாயம் இருந்திருக்கும். நான் ஏன் சொல்லுகின்றேன் என்றால் நகரியத்தில் உள்ள பள்ளிகளில் பொரும்பாலும் நாலு பள்ளிகள் இந்த கடலை ஒட்டித்தான் அமைந்திருக்கும். பள்ளி நாள் என்றால் பள்ளி மாணவர்கள் பீதியில் அலைகளில் மாட்டியிருப்பர். அவர்களை தேடி பொற்றேரும் அலைந்துருப்பர். வேலைக்கு செல்லும் அனைவரும் அந்த சமயத்தில் அந்த சாலையில் தான் பேருந்துக்குக் காத்துருப்பார்கள். எனவே சேதம் அதிகம் ஆகியிருக்கும். அது தவிர்த்தது ஒரு சோதனையிலும் நன்மை. கடலை ஒட்டித்தான் மருத்துவமனை அமைந்துள்ளது ஆனால் அங்கு பெரும் பாதிப்புகள் இல்லாததும் ஒரு நன்மையே.

ஆனால் அன்று கிறிஸ்மஸ் தினம் ஆதலால் கடலை ஒட்டியுள்ள ஒரு சர்ச்சில் வழிபாடு செய்தவர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளானார்கள். தேவாலயத்தின் சுற்றிலும் புரட்டி எடுத்த அலைகள், அங்கு இருந்த பெண்கள்,குழந்தைகள் மற்றும் நிறுத்தி வைக்கப் பட்டியிருந்த வாகனங்கள் அனைத்தையும் எதிரில் உள்ள ஒரு குழியில் தள்ளி சேறும் சகதியுமாய் ஜலசமாதியாக்கியது. அந்த இடத்தைப் பார்க்கும் போதே கண்களில் நீரை வரவழைத்த ஒன்று.காலை பிரார்தனைகளில் இருந்த அவர்களை ஈவு இரக்கமற்ற அலைகள் அடித்து நெறுக்கியது.

சுனாமி அடித்து இரண்டு மணிணேரத்தில் இராமகிருஷ்னா மடமும், அம்மா அமிர்தானந்த மாயின் சேவா தளமும் இன்னம் பிற தொண்டு நிறுவனங்களும் அங்கு மக்களுக்கு வேன் நிறைய சாப்பாட்டு பொட்டலங்களை வழங்கியது மனிதாபிமானத்தின் எடுத்துக்காட்டு. தொடர்ந்து இரு நாளைக்கு இந்த சேவையைத் தொடர்ந்தார்கள். பலரும் துணிகள், அத்தியாவசிய பொருள்களை பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுத்த வண்ணம் இருந்தனர். உதவிகளும் ஆதரவுகளும் சுனாமிக்கு போட்டி சுனாமியாக செய்தனர்.
பாதிக்கப் பட்ட மீனவர்கள் பலரும் நிறைய உதவிகளை பணமாக எதிர்பார்த்துப் பொற்றனர்.நாகப்பட்டினத்தில் தொடங்கி கரையேர கிராமம் மற்றும் குப்பங்களில் நிறைய அறுவடை செய்து கிறிஸ்த்தவர்ளாக மாற்றியிருந்தனர். ஆனால் கிறிஸ்மஸ் அன்று சுனாமி அடித்ததால் அவர்களுக்குத்தான் இழப்பு அதிகம். ஆனால் அடுத்த ஆறுமாத காலத்திற்க்கு சேவை மற்றும் ஆறுதல்களால் மீண்டும் முன்னை வீட மதமாற்ற அறுவடை தொடர்ந்து நடந்தது.இன்னமும் நடக்கின்றது.

அடுத்த வந்த மாதங்களில் அவர்களில் ஜனூறு ரூபாய் தாள்கள் சர்வ சாதரனமாக புழங்கியது. ஆனாலும் இல்லை கோசமும் தொடர்ந்து இருந்தது. பானிபூரி கடையில் கூட ஜனூரூபாய் கொடுத்து சிலர் சாப்பிட்டனர். ஆண்களில் பலரும் இந்த பணத்தில் குடித்தது வேதனை. அவர்கள் வாழ்ந்து வந்த குடிசைகள் எல்லாம் போய் காங்கீரிட் கட்டிடங்கள் ஆனது. ஆனாலும் உயிர் இழப்புகளின் வேதனைகள் யாராலும் நிவர்த்தி செய்ய முடியாது. அநோகமாக எல்லார் வீட்டிலும் ஒரு குழந்தையின் படம் மாலையுடன் மாட்டியிருக்கும். அந்த சாலை முழுதும் புதுப்பிக்கப் பட்டு பராமரிக்கப் பட்டது.

சுனாமி அடித்த இரவு மக்கள் உயிருக்கு பயந்து தங்களின் வீடுகளை விட்டு ஓடியிருந்தார்கள். அப்போது சென்னைக் குப்பத்தை சேர்ந்த சிலர் போட்டில் கடல் வழியாக வந்து ஆளில்லா வீடுகளை கொள்ளயடித்த சம்பவமும் நடந்தது. நகரியத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், புதுப்பட்டினம் மற்றும் சதுரங்கப் பட்டினம் காவல்துறையும் தங்களின் உயிரையும் பொருட்படுத்தாமல் இரவு ரோந்து மற்றும் மீட்புப் பணியில் அயராது பாடுபட்டனர். மருத்துவர்கள் மற்றும் அங்கு உள்ள ஊழியர்கள் நல்ல சேவை செய்தனர். மத்தியபொதுப்பணித்துறை மின்சாரம், ரோடு, கேபிள் டீவி குடினீர் ஆகியன மின்னல் வேகத்தில் இரண்டு நாளில் சரி செய்தனர். சாலை பழுது பார்க்கும் பணியும்,அடித்துப் போன குடினீர் குழாய்களும் ஒரு வாரத்தில் சரி செய்யப் பட்டது. பூங்காக்கள், தோட்டங்கள் ஆகியன முன்னைவீட புதுப் பொழிவுடன் ஒரு மாதத்தில் செய்து அழித்த இயற்கைக்கு சவால் விட்டனர்.

ஒரு அழகான சுனாமி பார்க்கும், இறந்த அந்த குழந்தைகளின் நினைவாக கட்டப்பட்டது. கடல்கரை எங்கும் மதில் சுவர்கள் முன்னைவீட வலிமையாக காங்கிரிட் முறையில் கட்டப்பட்டு, அவற்றின் ஓரங்கள் பெரிய கருங்கற்களால் பலப்படுத்தப்பட்டுள்ளது.
இனி சுனாமி அடித்தாலும் இதுபோல பாதிப்பு நிகழா வண்ணம் அமைக்கப் பட்டுள்ளது. கரையை ஒட்டிய வீடுகளில் சுனாமி அபாய மணி ஒலிக்கருவிகளும் பொருத்தப்பட்டுள்ளன. இத்துடன் இந்த சுனாமி பதிவை முடிக்கின்றேன்.தங்களின் தொடந்த ஆதரவுக்கு நன்றி.

4 comments:

  1. //நல்லவேளையாக ஞாயிறுக்கிழமையாகப் போயிற்று//

    நிஜமாதான்னா. அன்னைக்கு என் oorla சர்ச்சுல இருந்ததால நிறைய பேர் காப்பாத்தப்பட்டிருக்காங்க. அதே சமயம் கடலோரத்து சர்ச்சுல இருந்தவங்க..... :(((((

    ReplyDelete
  2. //
    அப்போது சென்னைக் குப்பத்தை சேர்ந்த சிலர் போட்டில் கடல் வழியாக வந்து ஆளில்லா வீடுகளை கொள்ளயடித்த சம்பவமும் நடந்தது.
    //

    இது போல் நடந்து கொண்டால்தான் மிகவும் கோவமா வருது. எப்படிங்க இவங்களுக்கு இதுபோல் நடந்து கொள்ள மனது வருகிறது.

    உங்கள் சுனாமி இடுகை படிக்கையில் நேரே பார்த்தது போல் உணர்வு ஏற்பட்டது
    பகிர்விற்கு நன்றி!

    ReplyDelete
  3. என்ன செய்வது ரம்யா, இழவு வீட்டிலும் பிடுங்குவர்கள் இருக்கத்தானே செய்கின்றார்கள்.

    தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

    ReplyDelete
  4. ஆமாம் ரம்யா, கடல் ஓரத்தில் இருந்தவர்கள் சர்ச்க்கு போனாதால் பிழைத்தார்கள். வேறு இடங்களில் இருந்தவர்கள் கடல் ஓர சர்ச்க்கு போனாதால் இறந்தார்கள். இது எல்லாம் இயற்க்கையின் விளையாட்டு அல்லது தலைவிதி என்றுதான் சொல்லமுடியும். மூன்று நிமிடங்கள் முன்னால் வந்துருந்தால் என் கதியும் இதுதான். நன்றி சுசி.

    ReplyDelete

என்னை வளர்க்க, கருத்துரையிடுக...

பதிவைப் படித்து கருத்து போடலைனா
உங்க கனவுல பூதம் வரும்,,, ஆமா சொல்லிட்டேன்.