Tuesday, November 10, 2009

அவன் தான் மனிதன் - பாகம் 4

சாமியின் பெரியப்பா மிகவும் கண்டிப்பானவர், அவரின் உயரமும், கடினமான கட்டைக்குரலும் அதட்டும் தொனியும், அவரை மிரட்சியுடன் பார்க்க வைக்கும், படிப்பில் சாமி குறைந்தால் அவர் மிகவும் திட்டுவார். அதுபோல வரதராஜனுக்கும் நிறைய கண்டிப்புக்கள் அவர் தந்தையிடம். ஆகவே நண்பர்கள் இருவரும் கூடிப் பேசி, இதில் இருந்து விடுபட வீட்டை விட்டு ஓடுவது என்று முடிவு செய்தார்கள். அதன்படி பழனிக்கு ஓடிப் போய்விட்டார்கள். அங்கு ஒரு பொழுதைக் கழித்த அவர்கள் பசியில் என்ன செய்வது என்று தெரியாமல், ஒரு ஓட்டலில் சாப்பாடு மற்றும் வேலை கேட்டார்கள். அந்த கடையின் உரிமையாளர், உங்களைப் பார்த்தால் பெரிய இடத்து பசங்க மாதிரி தெரியறிங்க, ஆதலால் டேபிள் துடைப்பது மற்றும் தட்டு கழுவும் வேலை தராமல், சாமிக்கு சப்பளையர் வேலையும், வரதராஜனுக்கு கணக்கு மற்றும் நிர்வாகமும் தந்தார். நண்பர்கள் இருவரும் சந்தோசமாகச் சில நாள்கள் கழித்தனர். இதில் சாமிக்கு பெரியம்மாவும், வரதராஜனுக்கு அம்மாவின் நினைவும் வந்துவிட, திரும்பிப் போக முடியாமல் தவித்தனர். போனால் அடி விழுகும் என்ற பயம். அவர்களை அவர்களின் வீட்டுப் பெரியோர்களும் தேடி வந்தனர்.

இப்படி சில நாள் கழிகையில் ஒரு நாள் பழனிக்கு வந்த உறவினர் ஒருவர் இவர்களைப் பார்த்துவிட்டுச் சத்தமில்லாமல் தாராபுரத்திற்கு தகவல் கொடுத்தார். அவர்களும் வந்து அழைத்துச் சென்றனர். பசங்களுக்கு நல்லாப் பாடம் கொடுத்துப் பஞ்சாயத்து ஆரம்பம் ஆனது. அப்போது இருவரும் பத்தாவது முடித்ததால், அவர்கள் இருவரையும் பியுஸி படிக்க வைக்க காடையூர் ஸ்ரீனிவாசன் என்ற இவர்களின் மாமா அழைத்துச் சென்றார். காடையூர் ஸ்ரீனிவாசனும் கண்டிப்பானவர், ஆனால் அன்பாலும், நைச்சியமாகவும் பேசித் திருத்துவார். அவரின் வீட்டில் பல உறவினர்கள் தங்கி காங்கயத்தில் படித்தனர். இவர்கள் இருவருக்கும் சந்தோசமாக பொழுது போயிற்று. பியூஸி முடித்தவுடன் இவர்கள் இருவரும் தமிழ் நாடு தேர்வானையத் தேர்வும் எழுதி தகுதி பெற்றார்கள். சாமிக்கு கல்வித்துறையிலும், வரதராஜனுக்கு நெடுஞ்சாலைத்துறையிலும் வேலை கிடைத்தது.


இவர்களை இப்படியே விட்டால் சரிப்படாது என்று நினைத்த பெரியோர்கள் பதிமூன்று வயது சாமிக்கு லஷ்மி என்ற எட்டு வயது சிவந்த அழகான பெண்ணையும், வரதராஜனுக்கும் நண்பனைப் போலவே லஷ்மி என்ற மற்றேர் பெண்ணையும் திருமணம் செய்வித்தார்கள். முதலில் கொள்ளேகாலில் பணிபுரிந்த சாமி, பின் சொந்த ஊரான தாராபுரத்திற்கு பணிமாற்றி வந்தார். சாமியும், வரதராஜனும் இறுதி வரை ஒரே தெருவில் தங்களின் லஷ்மிகளுடன் குடியிருந்தார்கள். சாமி தன் தம்பியை ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் சேர்த்து, அவனுக்கு வாத்தியார் வேலையும் வாங்கிக் கொடுத்து, மணம் செய்வித்து, பின் தன் வீட்டின் பின்னால் அவருக்கு ஒரு சிறிய வீடும் கட்டிக் கொடுத்தார். சாமிக்கு அழகான மூன்று பெண்களும், நல்ல ஜந்து பசங்களும் பிறந்தார்கள். இப்படியாக சாமி வீடு நிறைய குழந்தைகளும், மனம் நிறைய அன்பும், மகிழ்ச்சியுமாக வாழ்வைக் கழித்தான். சாமியின் இளைய, கடைசி மகன் மட்டும் கொஞ்சம் பீலா பார்ட்டி, அவன் பித்தனின் வாக்கு என்ற பிளாக் எழுதி எல்லாரையும் இம்சை செய்வான். ஆம் தோழர் மற்றும் தோழிகளே! இந்த கதையின் நாயகன் சாமி என்பவர் எனது தந்தை திருமலைசாமி அய்யங்கார். இறந்த லஷ்மி எனது சொந்த அத்தை. எனது தாத்தா துரைசாமி என்னும் துரைசாமி அய்யங்கார். மணி எனது சித்தப்பா. வரதராஜன் என்பர் மாமா, அவர் சந்தன முல்லை மற்றும் மேனகா சத்தியாவின் பதிவுகளில் பின்னுட்டம் இடும் பத்து என்னும் பத்மஜா. எனது சகோதரி மகளும், எனது நல்ல நண்பியுமான அவளின் தாத்தா.

இது என் அப்பாவின் கதை. என் அப்பா என்னைப் பெறுத்தவரை ஒரு நல்ல மனிதர். தன்னால் இயன்ற உதவிகளை தன்னை நாடி வருவேர்க்கு செய்யும் மனப்பான்மையுடையர். காசு பணத்திற்க்கும்,சொத்துசுகங்களுக்கு ஆட்படாமல் இறுதி வரை வாழ்ந்தவர். அவரைப் பற்றியும், அவர் அடுத்தவர்க்கு செய்த உதவிகளையும், எங்களை அன்பாய் வளர்த்த விதமும் பல பதிவுகளில் போடலாம். ஆனால் அது சுய புராணம் ஆகிவிடும். எனக்கு இத்துடன் சுபம் என்றுதான் போட ஆசை. ஆனால் சில விசயங்களைப் பகிராமல் போனால் இந்த கட்டுரையின் நேக்கம் அடிபட்டு விடும். ஆதலால் நான் சிலவற்றைக் கூற ஆசைப் படுகின்றேன். ஆதலால் இனி வரும் சம்பவங்களையும் நீங்கள் படித்தால் தான் பாவமும், பழியும் என்ன செய்யும் என்பதை அறிய முடியும். தங்களின் ஆதரவுடன் மீண்டும் நாம் இனி குருப்பனாய்க்கன் பாளையம் போவேம். தொடரும்..... நன்றி.

டிஸ்கி : நான் என் அத்தையைப் பற்றி பத்மாஜாவுடன் பேச, அவள்தான் இதை கதையாக பதிவு இடுமாறு என்னிடம் கூறினாள். அவளுக்கும் எனது நன்றிகள்.

15 comments:

  1. //பதிமூன்று வயது சாமிக்கு லஷ்மி என்ற எட்டு வயது சிவந்த அழகான பெண்ணையும், வரதராஜனுக்கும் நண்பனைப் போலவே லஷ்மி என்ற மற்றேர் பெண்ணையும் திருமணம் செய்வித்தார்கள். முதலில் கொள்ளேகாலில் பணிபுரிந்த சாமி, பின் சொந்த ஊரான தாராபுரத்திற்கு பணிமாற்றி வந்தார்.//

    பதிமூன்று வயதான சானி கொள்ளகாலில் எந்த அலுவலகத்தில் பணிபுரிந்தார்! பின் எவ்வாறு அவருக்கு டிரான்ஸர் கிடைத்தது! வெறும் ட்ரான்ஸர் மட்டும் தானா!?
    இல்லை கூடவே புரமோஷனுமா!?

    இந்த தொடரை புரிஞ்சிகிறதுக்கு தனியா ஒரு மூளை வேணும் போலயே!

    ReplyDelete
  2. //சாமிக்கு அழகான மூன்று பெண்களும், நல்ல ஜந்து பசங்களும் பிறந்தார்கள்.//

    இந்தியா ஏன் இரண்டாவது இடத்தில இருக்குன்னு இப்ப தெரியுதா!?

    ReplyDelete
  3. //கடைசி மகன் மட்டும் கொஞ்சம் பீலா பார்ட்டி, அவன் பித்தனின் வாக்கு என்ற பிளாக் எழுதி எல்லாரையும் இம்சை செய்வான்.//

    அதுவும் சொந்த கதை எழுதி!

    ReplyDelete
  4. உங்க அத்தை சாக காரணமாக இருந்த அவுங்க மாமியார் எப்படி செத்தாங்கன்னு சொல்லத்தானே இந்த கதை!?
    அது எங்கே?

    சரி இந்த கதையினால் நீங்க சொல்ல விரும்பும் நீதி என்ன?

    இப்படி மொட்டராசா குட்டையில விழுந்த கணக்கா கதையை முடிச்சா எப்படி?

    அந்த ஐந்து பசங்கல்ல நீங்க மட்டும் சிங்கப்பூர்ல இருக்கிங்க சரி, மத்த நல்வரும் ஒழுங்கா வேலைக்கு போறாங்களா!? இல்ல பூசாரி வேலை பாக்குறாங்களா?

    எனக்கு ஃபுல் டீடெயில் கொடுங்க!

    ReplyDelete
  5. சானிக்கு அல்ல சாமிக்கு. அப்போது எல்லாம் பியுஸி முடித்தால் முடித்தவுடன் வேலை கிடைக்கும்.
    அதிக மக்கள் தொகை கொண்ட நாட்டில் படித்த இளைஞர்கள் கிடைப்பது சிரமான காலகட்டம்.
    எட்டு வயது சிறுமி என்றாலும் திருமணம் முடித்தாலும் அந்த பெண் புஷ்பவதியாகி ஒரு மாதம் கழித்துத் தான் இல்லறம் செய்ய தனிக்குடித்தனம் வைப்பார்கள். அதன்படி எங்க அம்மாவின் பதிமூன்றாம் வயதில் தான் அப்பாவிற்கு 18 கொள்ளேகாலில் குடித்தனம், அப்புறம் இராயவேலூரில் இரண்டு வருடம். பின்னர்தான் தாராபுரம் வந்தார். விளக்கமாகச் சொன்னால் பதிவு நீளமாகி விடும் என்பதால் சுருக்கி சொல்லுகின்றேன். நன்றி வால்ஸ்.

    ReplyDelete
  6. நான் கதையை முடிக்க வில்லை, தொடரும் என்று குறிப்பிட்டுள்ளேன்.

    முதல் அண்ணா நெடுஞ்சாலைத் துறையில் சாலை ஆய்வாளர்.
    இரண்டாவது அண்ணா அனுமின் நிலைய விஞ்ஞானி.
    மூன்றாவது அண்ணா தையாலடைத் துறையில் தரக் கட்டுப்பாட்டு மேலாளர்.
    நாலாவது அண்ணா ஸ்பிக் மருத்துவ துறையில் இளம் விஞ்ஞானி.
    நான் சிங்கையில் ஒரு நிறுவனத்தில் முதுனிலை பொருளாதார அதிகாரி மற்றும் ஒரு நிறுவனத்தின் பொருளாதார இயக்குனர்.

    போதுமா வால்ஸ், நாங்கள் பூசை புரியும் அந்தனர் அல்ல கர்ணம் என்னும் கிராம கணக்கு அந்தனர் வகையை சேர்ந்தவர்கள். நன்றி வால்ஸ்.

    ReplyDelete
  7. //விளக்கமாகச் சொன்னால் பதிவு நீளமாகி விடும் என்பதால் சுருக்கி சொல்லுகின்றேன்.//


    ! நீங்க சொல்ல வந்த மேட்டருக்கு இது தான் சுருக்கமா!?

    ReplyDelete
  8. //முதல் அண்ணா நெடுஞ்சாலைத் துறையில் சாலை ஆய்வாளர்.
    இரண்டாவது அண்ணா அனுமின் நிலைய விஞ்ஞானி.
    மூன்றாவது அண்ணா தையாலடைத் துறையில் தரக் கட்டுப்பாட்டு மேலாளர்.
    நாலாவது அண்ணா ஸ்பிக் மருத்துவ துறையில் இளம் விஞ்ஞானி.
    நான் சிங்கையில் ஒரு நிறுவனத்தில் முதுனிலை பொருளாதார அதிகாரி மற்றும் ஒரு நிறுவனத்தின் பொருளாதார இயக்குனர்.//

    மிக்க மகிழ்ச்சி!

    பூசாரி என்ற பிச்சை எடுக்கும் தொழிலுக்கு முழுக்கு போட்டது மேலும் மகிழ்ச்சி தரும் விடயம், உங்கள் குடும்பம் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  9. //நாங்கள் பூசை புரியும் அந்தனர் அல்ல கர்ணம் என்னும் கிராம கணக்கு அந்தனர் வகையை சேர்ந்தவர்கள். //

    கிராம கணக்குன்னா என்ன!

    சென்செக்ஸ் மாதிரியா!?
    அதை மற்றவர்கள் செய்ய முடியாதா, பின் ஏன் நாங்கள் கிராம கணக்கு அந்தனர்ன்னு சொல்லனும்!

    ReplyDelete
  10. இது உங்கள் சொந்த கதையா நல்லா எழுதி இருக்கிங்க

    ReplyDelete
  11. பித்தன் இது உங்க சொந்த கதையா?நல்லாயிருக்கு.

    //மேனகா சத்தியாவின் பதிவுகளில் பின்னுட்டம் இடும் பத்து என்னும் பத்மஜா. எனது சகோதரி மகளும், எனது நல்ல நண்பியுமான அவளின் தாத்தா. //பத்மஜா என்பவர் இதுவரை எனக்கு பின்னூட்டம் இடவில்லை பித்தன்.

    வாலு உங்க லொள்ளு தாங்க முடியல..

    ReplyDelete
  12. //சாமியின் இளைய, கடைசி மகன் மட்டும் கொஞ்சம் பீலா பார்ட்டி,//

    இது கொஞ்சம் ஓவரு...

    இந்த திருப்பத்தை நான் எதிர்பார்க்கல அண்ணா... மீதிய தொடருங்க...

    உங்க அத்தைய நினைக்க கஷ்டமா இருக்கு.... :((((

    ReplyDelete
  13. நன்றி சாருஸ்ரீராஜ், சுசி மற்றும் மேனகா சத்தியா.

    பத்து எனக்கு அனுப்பிய இமெயிலில் அவள் உங்களின் பதிவுகளையும், சந்தனமுல்லை பதிவுகளையும் படிப்பதாக கூறினாள். அவளின் பின்னூட்டத்தை நான் சந்தன முல்லை அவர்களின் பதிவுகளில் பார்த்துள்ளேன். ஆனால் உங்களின் பதிவுகளில் நானும் பார்க்கவில்லை. நன்றி.

    ReplyDelete
  14. //சாமியின் இளைய, கடைசி மகன் மட்டும் கொஞ்சம் பீலா பார்ட்டி, அவன் பித்தனின் வாக்கு என்ற பிளாக் எழுதி எல்லாரையும் இம்சை செய்வான்.//

    நல்ல வேளை அழகான பையன் என்று எழுதி இம்சிக்க வில்லை
    :)

    உங்கக்கிட்ட எதுவும் சொன்னால் கதையாக்கி பொதுவில் வைத்துவிடுவீர்கள் போல எதுக்கு எச்சரிக்கையாக இருக்கனும்

    ReplyDelete
  15. என் அப்பா என்னைப் பெறுத்தவரை ஒரு நல்ல மனிதர். தன்னால் இயன்ற உதவிகளை தன்னை நாடி வருவேர்க்கு செய்யும் மனப்பான்மையுடையர். காசு பணத்திற்க்கும்,சொத்துசுகங்களுக்கு ஆட்படாமல் இறுதி வரை வாழ்ந்தவர். அவரைப் பற்றியும், அவர் அடுத்தவர்க்கு செய்த உதவிகளையும், எங்களை அன்பாய் வளர்த்த விதமும் பல பதிவுகளில் போடலாம். ஆனால் அது சுய புராணம் ஆகிவிடும்

    ..... உங்கள் வீட்டில் நடந்த நெகிழ்வூட்டும் கதைகளை, நீங்கள் சொல்ல வேண்டும். சுய புராணம் நல்லதுதான். சுய தம்பட்டம் தான் ஒத்து கொள்ள கடினம். உங்கள் அப்பாவை பற்றி அருமையாக எழுதி இருக்கிறீர்கள்.

    ReplyDelete

என்னை வளர்க்க, கருத்துரையிடுக...

பதிவைப் படித்து கருத்து போடலைனா
உங்க கனவுல பூதம் வரும்,,, ஆமா சொல்லிட்டேன்.