Friday, November 13, 2009

சுவையான அவியல்

அவியல் அனைவரும் செய்வதுதான், ஆனால் நான் முன்னர் சொன்ன மாதிரி, நான் வித்தியாசமான வகைகளை, வித்தியாசமாக, சுவையாகச் செய்வதுதான் என் முறை. இந்த அவியலையும் வித்தியாசமான முறையில், வித்தியாசமான செய்முறையில் சொல்லுகின்றேன். செய்து பாருங்கள் கண்டிப்பாய் நல்ல பாரட்டுக்கள் கிடைக்கும். அவியலில் ரொம்ப முக்கியம் காய் நறுக்குவதுதான். காய்கள் ஒன்றை அங்குல(அல்லது இரண்டு) நீளமும், முக்கால் அங்குல அகலமும் கொண்ட நல்ல சைஸில் நறுக்கினால் காய் அழியாது, குழையாது. ஆதலால் நான் முதலில் காய் நறுக்குவதைத் தான் சொல்லப் போறன். ஒகே பதிவுக்குள்ள போலாம்மா.

தேவையான பொருட்கள் :
காய்கள் :
வெள்ளைப் பூசனி ஒரு பத்தை, மஞ்சப் பூசனி ஒரு பத்தை, பீன்ஸ் கொஞ்சம், கொத்தவரங்காய் கொஞ்சம், முருங்கைக்காய் இரண்டு, உருளைக் கிழங்கு மூன்று, சேனைக் கிழங்கு கால் கிலோ, சேப்பங்கிழங்கு நாலு. கத்திரிக்காய் கால் கிலோ, காரட் நாலு,தக்காளி மூன்று, இன்னமும் சோவ் சோவ்(பெங்களூர் கத்திரி) போன்ற காய்கறிகள், உங்களுக்கு பிடித்தமான காய்களைச் சேர்க்கலாம். முள்ளங்கி, பீட்ரூட், வெண்டைக்காய்,பாகற்காய் போட்டால் அவியலின் நிறம், சுவை கெட்டுவிடும் ஆதலால் இவை நாலு தவிர மீதம் கிடைக்கும் காய்களைச் சேர்க்கலாம். சரியா?

அரைக்க :
தேங்காய் ஒன்று அல்லது ஒரு மூடி,
சீரகம் மூன்று ஸ்பூன்,
சின்ன வெங்காயம் ஒன்று,
பூண்டு மூன்று பல்.
பச்சை மிளகாய் மூன்று.

தேங்காய் எண்ணெய் மூன்று ஸ்பூன்.

முதலில் கத்திரிக்காயை நாலா வெட்டி சிறு சிறு துண்டுகள் ஆக்கவும், நீரில் இடவும்.கிழங்கு வகைகளை உருளைக்கிழங்கை பெரியதாக இருந்தால் எட்டாகவும், சிறியதாக இருந்தால் நாலாகவும் வெட்டவும். சேனைக் கிழங்கை தோல் சீவி சிறு துண்டாக ஒன்றை அங்குல நீளமும், முக்கால் அங்குல அகலமும் கொண்ட துண்டுகளாக நறுக்கவும். காய்கள் எல்லாம் ஒரே அளவில் நறுக்கவும், சேப்பங் கிழங்கையும்,காரட்டையும்,பூசனிகளையும்(கொஞ்சம் பெரியாதாக) இது போல நறுக்கவும். பீன்ஸ், கொத்தரவங்காய் போன்றவற்றை ஒன்றை அங்குல நீளம் இருக்குமாறும், முருங்கைக் காய் இரண்டு கனுக்கள் நீளம் இருக்குமாறு நறுக்கவும். நறுக்கிய காய்களைத் தனித் தனியாக வைத்துக் கொள்ளவும்.

செய்முறை :
ஒரு அகலமான வாணலியில் முதலில் அடிப்பகுதியில் வேகக் கடினமான காய்கறிகளான கிழங்குகள், பீன்ஸ், காரட், முருங்கைக்காய் மற்றும் அதிக நேரம் வேகும் காய்களைப் போட்டு, அதன் மேல் சீக்கிரம் வேகும் காய்களான கத்தரிக்காய்,பூசணிகள், தக்காளி மற்ற காய்களும் இட்டு அதில் தேவையான அளவு உப்பு,பெருங்கயாத் தூள் ஒரு ஸ்பூன்,மஞ்சள்(கொஞ்சமாக தூவவும்,அவியல் கலர் மாறிவிடும்) தூவிப் பின்னர் முக்கால் டம்ளர் தண்ணீரைத் தெளித்த மாதிரி ஊற்றவும். (முக்கிய கவனம்: அடிப்பகுதியில் இருக்கும் காய்கள் மட்டும் தண்ணீரில் மூழ்கலாம். காய்கள் முழுதும் மூழ்கும் வண்ணம் தண்ணீர் ஊற்றக் கூடாது). இனி மிதமான(மீடியம்) சூட்டில் அடுப்பை வைத்து ஒரு தட்டைப் போட்டு வாணலியை மூடி வைக்கவும். ஒரு முப்பது நிமிடங்கள் சூடு ஆகட்டும். (கவனிக்கவும் காய்களைக் களறக் கூடாது, அப்படியே மூடிவிடுங்கள்). அதற்க்குள் அரைத்து விடுவேம்.

அரைக்கும் பொருள்களான தேங்காய், தேங்காய் அளவு காய்களைப் பொறுத்து, நிறைய காய்கள் இருந்தால் ஒரு காயும், அளவாய் இருந்தால் ஒரு மூடியும் போதும். தேங்காயை முதலில் துருவல் செய்து அதில் மூன்று ஸ்பூன் சீரகம், தோலுரித்த ஒரு சின்ன வெங்காயம், மூன்று பல் பூண்டு,பச்சை மிளகாய் ஆகியன சேர்த்து மைய அரைக்கவும். நீர் அதிகம் விடாமல் விழுது போல அரைக்கவும். இப்பத் தட்டை எடுத்துப் பார்த்து காய்கள் வெந்துருக்கும் அளவைச் சேதிக்கவும். பின் இந்த விழுதை அந்த காய்களின் மீது கொட்டிப் பின் விழுது அரைத்த மிக்ஸி ஜாரில் ஒரு அரைத் தம்ளர் நீர் விட்டு அலம்பி, அந்த நீரைக் காய்களின் மீது தெளிக்கவும். காய்கள் ஏற்கனவே வெந்துருந்தால் அரை டம்ளரும், இன்னமும் வேக வேண்டியிருந்தால் முக்கால் டம்ளர் தண்ணீரும் விடவும். இப்பவும் களறக் கூடாது. காய்கள் ஏற்கனவே வெந்து இருந்தால் விழுது இட்டு பத்து நிமிடமும், காய்கள் இன்னமும் வேகவேண்டியிருந்தால் இருபது நிமிடமும் சிம்மில் வைத்துத் தட்டை மூடி சூடு செய்யுங்கள். இருபது நிமிடங்கள் கழித்து தட்டை எடுத்துவிட்டு, மிகவும் மெதுவாகவும், பொறுமையாகவும், மேலும் கீழுமாய் விழுது நல்லா கலக்கும் வண்ணம் களறி விடவும், களறுவதற்கு அப்பளம் பெரிக்கும் சட்டுவதைப் பயன்படுத்தலாம்(ஓட்டைக் கரண்டி). காய்கள் சிதையா அல்லது உடையா வண்ணம் பக்குவமாக கிளறவும். பின் தண்ணீர் இஞ்சும் சமயம் மூன்று ஸ்பூன் தேங்காய் எண்ணெய் விட்டு, காய்கள் தேங்காய் எண்ணெய்யில் வதங்கும் வண்ணம் மெதுவாக கிளறி, கொட்டியாகி,வாசம் வந்ததும் இறக்கி வைக்கவும். இப்ப அவியல் ரெடீ.

இந்த அவியலை சாதம், அடைதோசை போன்றவற்றிக்குத் தொட்டுக் கொள்ளலாம். சாதத்தில் பிசைந்து சாப்பிட இந்த அவியல் நல்லா ஆறியதும், இந்த அவியலில், அப்ப சாப்பிடத் தேவையான அளவு மட்டும் எடுத்து, உறைந்த, அதிகம் புளிக்காத தயிரில் சிறிது தண்ணீர் விட்டு,(தயிர் கொட்டியாக இருந்தால் தண்ணீர் விடவும், இல்லை என்றால் வெறும் தயிரில்) காய்களைப்(அவியல்) போட்டு கலர்ந்து கொள்ளவும்.மிச்சம் இருக்கும் தயிர் சேர்க்காத அவியல் மீதியை பிரிஜ்ஜில் வைத்து விடவும்.பின் உபயேகப் படுத்தும் முன்னர் அரை ஸ்பூன் தேங்காய் எண்ணெய்யில் சூடு செய்யலாம்.உப்பு கம்மி என்றால் தயிரில் உப்பு சேர்க்கலாம். இறுதியாக கடுகு மட்டும் தேங்காய் எண்ணெய்யில் தாளித்துக் கொட்டவும்.

இதில் வித்தியாசம் என்ன என்றால் அவியலில் சின்ன வெங்காயமும் பூண்டும் சேர்ப்பதுதான். இவை சாப்பிடாதவர்கள் சேர்க்காமலும் செய்யலாம். செய்முறையில் காய்களைத் தனித்தனியாக வேக வைக்க அவசியம் இல்லை. காய் நறுக்குவதுதான் சிரமம். மற்றபடி இது போல செய்தால் அவியல் செய்வது சுலபம். செய்து பார்த்துவிட்டு சொல்லவும். தக்காளி போட்டால் நல்லா இருக்கும் போடாவிட்டாலும் சரி. நன்றி.

டிஸ்கி: அடுத்த திங்கள் பதிவில் நாம் வித்தியாசமான செய்முறையில் மிகவும் சாப்ட்டாகவும், சுவையாகவும் ஆப்பம் செய்வதைப் பார்ப்போம். நன்றி.

சகோதரியும், கவிதாயினியும் ஆன ஹேமா அவர்கள் நான் கல்யாணமாம் கல்யாணம் பதிவில் எனக்கு அவியல் பிடிக்கும் என்று நாலு முறை சாப்பிட்டுக் கூறியதால் அவியல் அவ்வளவு பிடிக்குமா? என்று கேட்டு பதிவிட சொல்லியிருந்தார். ஆகையால் இந்த பதிவு ஹேமா ஸ்பெசல்.

20 comments:

  1. இந்த முறைல வேலை கொஞ்சம் அதிகம்போல இருக்கே!!!

    ReplyDelete
  2. இல்லை சின்ன அம்மினி அவர்களே. காய் நறுக்குவதுதான் சிரமம். அவியல் செய்வது சுலபம். நான் அனைவருக்கும் புரிவதற்க்காக கொஞ்சம் நீளமா சொல்லியிருக்கேன். செய்வது சுலபம். உடன் பின்னூட்டம் இட்டமைக்கு நன்றி.

    ReplyDelete
  3. நன்னா பேஷா இருக்கே!

    என்னையும் கூப்புடுங்க சாமியோவ்!

    சாப்பிடத்தான்!

    ReplyDelete
  4. நல்லா விளக்கமா சொல்லி இருக்கிங்க அவியல் செய்முறை இந்த முறையில் ஒரு தடவை செய்து பார்கிறேன்

    ReplyDelete
  5. கண்டிப்பாய் கூப்பிடுகின்றேன் ஜோதி. அதுக்கு முன்னாடி இந்த சாமியேவ்வ் க்கு ஒரு மாமி வரட்டும்.

    ReplyDelete
  6. நன்றி செய்து பாருங்கள் திருமதி சாருஸ்ரீராஜ்.

    ReplyDelete
  7. ஆஹா..

    சமையல் ராஜா வாழ்க...

    ReplyDelete
  8. // ஆஹா..

    சமையல் ராஜா வாழ்க... //
    ஆஹா பட்டம் கொடுத்த பாவலன் வசந்து ஒரு ஜே ஒரு ஓஓஓஓஓ
    நன்றி வசந்து.

    ReplyDelete
  9. நிறைய நன்றி உங்களுக்கு.எங்கள் வீட்டில் முருங்கைக்காய் இதே முறையில் சமைப்பார்கள்.
    நீங்கள் வேறு நிறைய மரக்கறிகள் சொல்லியிருக்கிறீர்கள்.

    சீரகம்-பெருஞ்சீரகம்தானே ?

    அசைவ உண்வில் நண்டு சமைப்பார்கள் இதே முறையில்.

    ReplyDelete
  10. ஆஹா.. ஆபீஸ்ல வச்சு படிச்சிட்டேனே.... நல்ல வேளை லன்ச் பிரேக்....

    செய்து பாக்கிறேன் கண்டிப்பா....

    ReplyDelete
  11. நல்லா விளக்கமா சொல்லி இருக்கிங்க

    ReplyDelete
  12. அவியல் சாப்பிட மிகவும் பிடிக்கும்! :-))

    ReplyDelete
  13. நல்ல விளக்கம்,அடுத்தமுறை முயற்சிக்கிறேன்.எனக்கு ரொம்ப பிடிக்கும்,நல்லா ஒரு பிடி பிடிப்பேன்..

    ReplyDelete
  14. சின்ன வெங்காயம் சேர்க்கறது புதுசா இருக்குது. செஞ்சு பார்க்கிறேன்.

    ReplyDelete
  15. nalla cholli irukerreerkal .

    eni aapam chimurayai ethir paarpoom

    ReplyDelete
  16. சுதாகர் சார் ரொம்ப சூப்பரான விளக்கம். பெரிய விளக்கம் கொடுத்து இருக்கீங்க

    இத்தனை கறிகள் சேருவது , பூண்டு சின்னவெங்காயம் ரொம்ப சுவையாகவும் இருக்கும்.

    ReplyDelete
  17. நன்றி, ஹேமா, பெருஞ்சீரகம்தான் போடனும்.
    நன்றி சுசி ஓரு ஞாயிற்றுக்கிழமை செய்து பார்க்கவும். எனக்கும் அனுப்புங்க.
    நன்றி டி.வி.ஆர்.
    நன்றி சந்தனமுல்லை,
    நன்றி மேனகா சத்தியா, செய்து நீங்க மட்டும் ஒரு ஒரு பிடி பிடிக்காதிங்க எனக்கும் கொஞ்சம் தாங்க.
    நன்றி சுவையான சுவை.
    நன்றி மலர் தங்களின் வருகைக்கும் முதல் பின்னூட்டத்திற்க்கும் நன்றிகள்.
    நன்றி தெய்வ சுகந்தி,
    நன்றி ஜெலில்லா,
    பதிவைப் படித்த மற்றும் பின்னூட்டம் இட்ட அனைவருக்கும் நன்றிகள்.

    ReplyDelete

என்னை வளர்க்க, கருத்துரையிடுக...

பதிவைப் படித்து கருத்து போடலைனா
உங்க கனவுல பூதம் வரும்,,, ஆமா சொல்லிட்டேன்.