Thursday, February 11, 2010

மஞ்சள் கிழங்கு பச்சடி (அ) சப்ஜி

முன் குறிப்பு : சமையல் பதிவுகள் போட்டு மிக நீண்ட நாட்கள் ஆகின்றன, ஆதலால் மீண்டும் ஒரு வித்தியாசமான சமையல் பதிவு. இந்தப் பதிவைப் படிப்பவர்கள், படித்துப் பாருங்கள்,ஆனா சமைத்துப் பார்க்காதீர்கள், சமைத்தாலும் இரங்க மணிக்குக் கொடுக்காதீர்கள். அப்படிக் கொடுத்தால் முன்...பின் .... விளைவுகளுக்கு நான் கண்டிப்பாய்ப் பொறுப்பு அல்ல. (சும்மா ஒரு பில் டப்புதான் பயப்படாதீர்கள்.)

நான் திருப்போருரில் ஒரு நிறுவனத்தில் பணி புரிந்த சமயம், என்னுடன் பணி புரிந்த பல இராஜஸ்தான் பணியாளர்கள்,மிக விரும்பி சமைத்துக் கொடுத்தது இது. நிறைய நெய் தடவப்பட்ட அவர்களின் சுக்கா ரொட்டிக்கு இது சரியான சப்ஜியாக அமைந்தது. சுவையும் அருமை. அதை நான் உங்களுக்குச் சொல்கின்றேன். நானும் இதை முதலில் கேள்விப்பட்ட போது, இதையா என்று ஆச்சரியப் பட்டேன். ஆனால் நன்றாக இருந்தது.
















நாம் பொங்கல் பண்டிகையின் போது பொங்கல் பானையில் கட்டி விட்டுத் தூக்கிப் போடும் பச்சை(இளம்) மஞ்சள் கிழங்குதான் இதில் முக்கிய அயிட்டம். இந்த பச்சை மஞ்சள் கிழங்கைப் பலர் தூக்கிப் போடுவார்கள்.சிலர் காய வைத்து அல்லது அப்படியே தேய்த்துக் குளிக்கப் பயன்படுத்துவார்கள். இந்த மஞ்சளில் தயிர்ப் பச்சடி மாதிரி செய்யும் சப்ஜிதான் இந்த பதிவு.பச்சை என்றால் காய வைக்காத மஞ்சள் கிழங்கு(நிறம் அல்ல)

தேவையான பொருட்கள் :

1.பச்சை அல்லது காயவைக்கதாத புதிய மஞ்சள் கிழங்கு 150 அல்லது 200 கிராம்,
2.பெரிய வெங்காயம் மூன்று,
3.தக்காளி மூன்று,
4.எண்ணெய் 5(அ)4 ஸ்பூன்,
5,சீரகம் ஒரு கைப் பிடி,
6.தாளிக்கும் பொருட்கள்,கறிவேப்பிலை.
7.வரமிளகாய்(அ)மிளகாய்ப் பொடி மூன்று (காரத்திற்க்கு ஏற்ப),
8.உப்பு (தேவைக்கு ஏற்ப),
9.தயிர் ஒரு கப்.
இதில் ஸ்பிரிங் ஆனியன் லீவ்ஸ்,பேபீ கார்ன், போன்றவை, பிரியப் படுவர்கள் ஒரு ரிச்சனஸ் ஆக சேர்க்கலாம்.

செய்முறை : முதலில் பச்சை (இளம்) மஞ்சள் கிழங்கைத் தோலுரித்துப் பின்னர் சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளுங்கள்,பின்னர் வெங்காயத்தைப் பச்சடிக்கு ஏற்றார்ப் போல நீளமாகவே அல்லது சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளுங்கள்.பின்னர் தக்காளியை எட்டுத் துண்டங்கள் அல்லது பொடிப் பொடியாக வெட்டிக் கொள்ளுங்கள். வெங்காயமும்,தக்காளியும் உங்களுக்கு எப்படி பிடிக்குமே அப்படி வதங்கும் வண்ணம் சிறியதாக வெட்டிக் கொள்ளுங்கள்.

முதலில் வாணலியில் எண்ணெய் விட்டு,சூடானதும் சிறிது கடுகு,வெள்ளுத்தம் பருப்பு, பெருங்காயத்தூள்,கருவேப்பிலை,மிளகாய் அல்லது மிளகாய்த்தூள் போட்டுத் தாளித்து,அதில் வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்,வெங்காயம் பொன்னிறம் ஆனவுடன், மஞ்சள் கிழங்கு துண்டுகளை எண்ணெய்யில் சிறிது வதங்க விடுங்கள்,இதில் தக்காளி மற்றும் உப்பு தேவையான அளவு சேர்க்கவும். நல்லா வதக்கவும். எண்ணெய் மற்றும் தக்களி விடும் தண்ணீரில் மஞ்சள் கிழங்கை நல்லா வதக்க வேண்டும், இது நல்லா வதங்கி சுருண்டு வரும் போது அடுப்பை அணைத்துச் சூட்டில் சிறிது வேக விடுங்கள். தயிர் இல்லாமல் சப்ஜியாகச் சாப்பிடுவர்கள் இரண்டு ஸ்பூன் நெய் விட்டும் வதக்கலாம், சுவை,மணம் கிட்டும்.

இது அடுப்பின் சூட்டில் இருக்கும் போது, கப் தயிரில் சிறிது தண்ணீர் விட்டு தளர்க்கமாக செய்து கொள்ளுங்கள்.அதிக தண்ணீர் இல்லாமல் அதே சமயம் கெட்டியாக இல்லாமலும் இருக்கட்டும். கைப் பிடி சீரகத்தை இரு கைகளிலும் நல்லா திருகி அல்லது தேய்த்து அதன் மேல் நார் இருந்தால் ஊதி அப்புறப் படுத்தி விட்டு, தயிரில் போடவும். ஆறிய சப்ஜியை தயிரில் போட்டுக் கலந்தால் மஞ்சள் கிழங்கு பச்சடி ரெடீய்ய்ய்ய்ய்ய்.சுவைக்கு ஏற்றவாறு பச்சடியில் உப்புப் போட்டுக் கொள்ளுங்கள்.

இதை ரொட்டி, மற்றும் சப்பாத்திக்குத் தொட்டுக் கொள்ளலாம். ஒரு சாப்பாட்டுத் தட்டின் அளவு இருக்கும் இராஜஸ்தான் சுக்கா ரொட்டியின் மீது இரண்டு ஸ்பூன் நெய் தடவி, சூடாக இதனுடன் தொட்டு சாப்பிட்டால் ஆலாதியாக இருக்கும். எனது நண்பர்கள் நாலு அல்லது ஜந்து ரொட்டிகளை பிய்த்துப் போட்டு அதனில் பச்சடியை கொட்டிப் பிசைந்து உண்பார்கள். என்னால் இரண்டு அல்லது மூன்று ரொட்டி சாப்பிடுவது சிரமம்.

பின் குறிப்பு : இந்த மஞ்சள் கிழங்கு மிகவும் சூடாண அயிட்டம்.அதாவது உடலுக்கு உஷ்ணம் என்று சொல்வார்கள்.அந்த உஷ்ணம் தணிக்கத்தான் நாம் தயிர், மற்றும் சீரகத்தைச் சேர்க்கின்றேம். இந்த கிழங்கு சப்ஜி அல்லது பச்சடி உடலின் உஷ்ணத்தையும், இரங்க மணிகளின் மூடையும் கிளப்பி விட வல்ல வயாக்கிரா பச்சடி. இப்ப எதுக்கும் முன் குறிப்பில் உள்ள கடைசி வரிகளைப் படித்துப் பார்த்து விட்டு, சமைப்பதா? வேண்டாமா? என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள்.
நன்றி.

16 comments:

  1. I was about to ask turmeric root rceipe, being Erode cultivates a lot. We get fresh turmeric in Dubai and Gujaratis and Sindhis use this in their receipe. It is good antioxidant and checks liver problems, cancer etc. and excellent cleanser. If you know more receipe, kindly write pleas.

    Abdul Farook
    Dubai

    ReplyDelete
  2. அன்புடன் மலிக்காFebruary 11, 2010 at 1:42 PM

    ஆகா நல்லாதான் தெரியுது,

    அதுசரி முன்பின் விளைவுகள் வந்தால் திவாகர் சாரை எங்கே தேடுவது

    அதனால மணி [டிங் டிங் மணீயல்ல] /பைசா ஹ ஹா சும்மா/ அனுப்பிச்சா இதசெய்து சாப்பிடுவோம் என்ன சரிதானே

    ReplyDelete
  3. எனது நண்பர்கள் நாலு அல்லது ஜந்து ரொட்டிகளை பிய்த்துப் போட்டு அதனில் பச்சடியை கொட்டிப் பிசைந்து உண்பார்கள். என்னால் இரண்டு அல்லது மூன்று ரொட்டி சாப்பிடுவது சிரமம்.

    ............ அண்ணாச்சி, நண்பர்களை சாப்பிட வச்சு வேடிக்கை பாக்குரீகளே!

    இதுவரை நான் கேள்விப் படாத ரெசிபி. படிச்சு பாக்குறதுக்கு நல்லா இருந்துச்சி. சமைச்சு பாப்பேன்னு தோணலை. யாராவது, செஞ்சு பாத்துட்டு பின்னூட்டத்தில் சொல்லுங்க.

    ReplyDelete
  4. ரங்க மணிகளின் மூடையும் கிளப்பி விட வல்ல வயாக்கிரா பச்சடி. //அப்படியா.அப்ப உண்மையாகவே டெச்ட் பன்னிறலாம்

    ReplyDelete
  5. என்ன சார் என்ன கோவம் எங்க மேல....

    ReplyDelete
  6. வித்தியாசமாக இருக்கிறது.
    "மஞ்சள் கிழங்கு பச்சடி ய்ய்ய்ய்ய்ய்."

    ReplyDelete
  7. புது ரெசிபியா இருக்கே...

    ReplyDelete
  8. நல்ல வேளை அண்ணா.. இன்னைக்கு வீட்டுக்கு வந்து படிச்சேன்.

    நல்லா இருக்கும் போல இருக்கு..

    ReplyDelete
  9. நானும் ராஜஸ்தானி ,குஜராத்தி, பிஹாரி, மும்பை பயல்களுடன் இருந்திருக்கிறேன். ஆனால் யாரும் இதுப்போல செய்து பார்தது இல்லையே!!!

    ReplyDelete
  10. நேத்தைய பதிவுக்கும் படிச்சு கமண்ட் போட்டுட்டேன்..

    ReplyDelete
  11. புதுசா இருக்கே ?

    ReplyDelete
  12. உண்மைதான் அப்துல் இது உடல் நலத்திற்க்கும்,புத்துனேய்யைக் வராமல் காக்க மிகவும் நல்லது. நன்றி.
    நாங்க சாருஸ்ரீராஜ், நடுவில் கொஞ்சம் உங்களை காணமே. எப்படி இருக்கிங்க?. வருகைக்கு நன்றி.
    வாங்க மலிக்கா, பார்சல் அனுப்புவது எல்லாம் உங்க வேலை. எனக்கு வாங்கத்தான் தெரியும், கொடுக்கத் தெரியாது. இந்த விசயத்தில் நான் ஒன்வே ட்ராபிக் மாதிரி. நன்றி. திவாகர் அல்ல சுதாகர்.
    அவர்கள் கடும் உழைப்பாளிகள், நல்லா சாப்பிடுவார்கள். பொட்டி தட்டும் நான் அவர்கள் போல சாப்பிட்டால் இன்னும் ரொண்டு இஞ்சு தெப்பை அதிகம் தான் ஆகும்.
    வணக்கம் சதீஷ், முயற்ச்சி செய்து பாருங்கள் நன்றி,
    கோபம் எல்லாம் இல்லை, ஒரு ஜடியா கொடுத்தேன் அவ்வளவுதான்,நன்றி தமிழரசி,
    வாங்க மாதேவி வருகைக்கு நன்றி,
    நன்றி மேனகாசத்தியா,
    வாம்மாஆஆ சுசி, எல்லா பின்னூட்டங்களையும் படித்தேன், மிக்க நன்றீ,
    நன்றி ஜெய்லானி, அவர்களுக்கு மஞ்சள் கிழங்கு கிடைத்து இருக்காது, இது கூட இவர்கள் பொங்கலின் போது மஞ்சள் கிழங்கைப் பார்த்து ஆச்சரியப் பட்டு வாங்கி செய்தார்கள்.

    நன்றி நசரேயன்.

    பின்னூட்டம் மற்றும் வாக்களித்த அனைவருக்கும் நன்றி.

    ReplyDelete
  13. நன்றி சாருஸ்ரீராஜ்,இம்முறையும் முதல் பின்னூட்டம் இட்டமைக்கு நன்றி,
    நன்றி ஆர்.கே.சதீஷ்,நான் உண்மைகளைத்தான் கூறுகின்றேன். இதில் புகழ்ச்சியே அல்லது தாழ்வுவே இல்லை. கூடுமானவரை நான் என்ன நினைக்கின்றேனே.அல்லது எனது கருத்துக்கள் என்னவே அதை சொல்ல முற்ப்படுகின்றேன்.
    நன்றி ஜெய்லானி,
    நன்றி சித்ரா,எனக்கு பிடித்த விலங்கு சிங்கம்,எனது இராசியும் அதுதான்.ஆனால் புலியும் பிடிக்கும்.
    நன்றி சுவையான சுவை,
    நன்றி வால்பையன், ஆனால் பிள்ளையார் பால் குடிப்பது, சிலையில் வேர்ப்பது போன்ற விஷயங்களில் எனக்கு நம்பிக்கை இல்லை. அது அந்த சிலை செய்த கல்லின் தன்மையைப் பொறுத்தது.
    நன்றி சங்கர்,
    நன்றி திவ்யா,
    நன்றி இராஜேஷ்,உங்கள் பதிவில் பாலோயர் வசதியை ஏற்படுத்தவும்.
    வாம்மா சுசி, இதில் தப்பாய் எடுத்துக் கொள்ள ஒன்றும் இல்லை. பின்னும் நான் குறைகளைக் கூறினால் சந்தோசம் கொள்கின்றேன். கடுமையான பணிச்சுமையின் காரணமாக பதிவினை ஒரு முறைக்கு மூன்று முறை படித்து திருத்த முடிய வில்லை.அதுதான் மறுபடியும் பிழைகள் வர காரணம். இனி திருத்திக் கொள்கின்றேன். எனது கட்டுரைகளை மன மன அமைதியுடன் படிப்பதாக கூறி இருப்பதுக்கும் மிக்க சந்தோசம். (அப்ப நானும் எதோ எழுதுகின்றேன் என்னும் திருப்தி).

    மஞ்சள் கிழங்கு பச்சடி குறித்து பின்னூட்டம் இட்ட எங்க ஊரு மருமகள் தெய்வசுகந்தி மற்றும் ஜலில்லாவிற்கு நன்றிகள்.

    ReplyDelete

என்னை வளர்க்க, கருத்துரையிடுக...

பதிவைப் படித்து கருத்து போடலைனா
உங்க கனவுல பூதம் வரும்,,, ஆமா சொல்லிட்டேன்.