Thursday, February 4, 2010

பேயும் நானும்

மனம் பலவீனம் மற்றும் பேய்கள் குறித்த பயம் உள்ள பதிவர்கள் இதைப் படிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.

மாலை ஆறு மணியிருக்கும், நான் என் வீட்டினுள் நுழைந்தேன். என் மனதில் வித்தியாசமான எண்ணங்களும், இனம் புரியாத உணர்வுகளும் ஏற்ப்பட்டன. எதோ அமானுஷ்ய சக்தி ஒன்று என் வீட்டில் நுழைந்தது போல உணர்ந்தேன். என் எண்ணங்கள் பரபரப்பாக ஆரம்பித்தது. காது மடல்கள் உஷ்ணம் ஆகியது. எப்போதும் அன்பும்,சாந்தியும் நிறைந்து விளங்கும் என் வீடு, அன்று சவக்களையுடன், ஒரு மர்மமாகத் தோன்றியது. இந்த இனம் புரியாத உணர்வில் வீட்டுக்குள் சென்றேன்.

காட்சி -1
என் வீட்டில் துக்கமா,திருமணமா என்ன நிகழ்வு என்று தெரியவில்லை. பலரும் கூட்டமாக இருந்தார்கள். பார்ப்பதற்க்கு இழவு வீடு போல இருந்தாலும் யாரும் மரித்தற்க்கான அடையாளமே, யாரிடமும் துக்கமோ காணப்படவில்லை. திருமண வீடு போல கூட்டம் இருந்தாலும் எல்லாரும் ஒரு அமானுஷ்ய சக்திக்கு கட்டுப் பட்டவர்(பொம்மைகள்) போல இருந்தனர். நான் இனம் புரியாத உணர்வுடன் என் வீட்டை சுத்திச் சுத்தி வந்தேன். வாசலில் என் அப்பாவுடன்(இறந்து விட்டார்) பாஷ்யம் மாமா (இறந்து விட்டார்) பேசிக் கொண்டு இருந்தார். நான் உள்ளே சென்றவன் நேராக என் பெரிய அம்மான்(இறந்து விட்டார்) காலில் விழுந்து நமஸ்காரம் செய்தேன். அவரும் எழுந்து ஆசிர்வதித்தார். என் அப்பாவை சுற்றி மூன்று உறவினர்கள் இருந்தார்கள்(அனைவரும் இறந்தவர்கள்). என் அண்ணா இளைய அம்மான்னுடன் பேசிக்கொண்டு இருந்தார். நான் எப்போதும் அவருடன் பேசுவது வழமையாதலால், அவரிடம் நலம் விசாரித்தேன். அவரும் உறவினர்களும் எனது சிங்கைப் பயணத்தைப் பற்றி கேட்டனர். நான் விளக்கம் அளித்தேன்.காட்சி - 2
நான் முற்றிலும் குழப்பத்தில் இருந்தேன். என்ன நடக்கின்றது. எந்த அமான்ஷ்ய சக்தி என் வீட்டில் புகுந்தது என்ற யோசனையில் இருந்தேன். தண்ணீர் குடிப்பதற்க்காக சமையல் அறையில் நுழைந்தவன், அங்கு தீபாவைப் பார்த்தவுடன் அதிர்ந்தேன். அவள் உருவம் மாலாவைப் போலக் காட்சியளித்தது. மாலா சில மாதங்களுக்கு முன்னர் பருவ வயதில் இறந்தவள். நான் தண்ணீர் கேட்டவுடன் தீபாவாகத் தான் தோன்றியது. நான் குழப்பத்தில் ஆழ்ந்தேன். ஒருவேளை மாலாதான் ஆவியாக வந்து இருக்கின்றாளா? அல்லது தீபாவின் உடலில் புகுந்துள்ளாளா என்று நினைத்தேன். அல்லது இது எனது பிரம்மையா என்று யோசிக்கும் முன்னர் மீண்டும் ஒரு முறை தீபாவின் உடலில் மாலா தோன்றி எப்போதும் போல ஓர் பாச சிரிப்பு சிரித்தாள். நான் அதிர மீண்டும் தீபாவானள். நான் குழம்பினேன். இது எப்படி சாத்தியம். பலமான காவல் தெய்வங்களால் காவல் புரியும் என் வீட்டிற்க்குள் எப்படி மாலா வந்தாள். நல்லாண்டவன், போஜராஜன்,செல்லாண்டி, பொன்மாசடைச்சி, பட்டாணி பாராக்காரா, அங்காளம்மன் போன்ற காவல் தெய்வங்கள், காவல் புரியும் என் வீட்டில் எப்படி மாலா வரமுடியும்? தெய்வங்கள் போய் விட்டனவா. அல்லது அவர்களை வீட ஒரு அமானுஷ்ய சக்தி என் வீட்டில் புகுந்து மாலாவின் வடிவில் என்னைக் குழப்புதா எனப் புரியாமல் தவிர்த்தேன். அன்று மாலைப் பொழுது முழுதும் இந்த சிந்தனைகளால் போனது. இரவும் வந்தது.காட்சி - 3

இரவு பெண்கள் அனைவரும் என் பாட்டி வீட்டில் படுத்துக் கொள்ள,உறவினர்கள் மற்றும் தாய்மாமா (அம்மான்) இருவரும் என் பாட்டி வீட்டு முற்றத் திண்ணையில் படுத்து உறங்கினர். நான் என் வீட்டில் படுப்பதுக்கான ஆயத்தங்களை செய்தேன். இன்னமும் அமானுஷ்ய உணர்வுகள் இருந்து கொண்டேதான் இருந்தது. என் அண்ணாக்கள் அனைவரும் ஹாலில் படுத்துக் கொள்ள, நான் வழக்கம் போல என் தாய் அருகில் படுக்கையை விரித்துக் கொண்டு இருந்தேன். அப்போது என் அம்மா சுதா என்னமே தெரியவில்லை. என்னமே ஒரு மாதிரி இருக்கு வீடு என்றார்கள். நான் காட்டிக் கொள்ளாமல் அது எல்லாம் ஒன்னும் இல்லை என்றேன். என் அம்மா கொல்லைப் பக்கம் போய்விட்டு படுப்பதற்க்காகக் கொல்லைக் கதவைத் திறந்த்தவர்கள். அமைதியாய் என்னிடம் வந்தார். சுதா கொல்லையில் ஒரு பெண்ணின் உருவம் உக்காந்து இருக்கின்றது. நான் சிலிர்த்தேன். காரணம் புரிந்தது. இரவில் விளக்கு கூட போடவில்லை. நான் கொல்லைப் பக்கம் விரைந்து சென்றேன். அங்கு யாரும் இல்லை. வெட்ட வெளியில் கத்த ஆரம்பித்தேன். யாரு யாரு இருக்கீங்க?. வெளிய வாங்க என்று கத்தினேன்?. தொண்டை அடைத்துக் கொண்டு வார்த்தைகள் பலவீனமாய் வெளி வந்தன. இருந்தாலும் கத்தினேன். என் மீது ஒரு உருவம் உரசுவது போல ஒரு பிரமை. நான் கத்திக் கொண்டே ஓடி வந்து விளக்கைப் போட்டேன்.யாரும் இல்லை. நான் என்னை மறந்து பலவீனமாக கத்தினேன். "எவடி அவ? வெளியில வாடி" என்று கத்திக் கொண்டு, பக்கத்தில் இருக்கும் விறகுக் கட்டைகளை இரு கைகளிலும் எடுத்துக் கொண்டேன். "யாருடி நீ?. வாடி முன்னாலே" என்று சுற்றும் முற்றும் பார்த்துக் கத்தினேன். அப்போது கிணற்றில் தண்ணீர் மொண்டு கொட்டும் சத்தம் கேட்டது. புதிதாக தோண்டப் பட்ட கிணறு. படிகள் இல்லாத அம்பது ஆடி ஆழத்திற்க்கு தோண்டிப் பாதியில் நிற்கும் பெரிய கிணறு அது. அப்போது கொட்டப் பட்ட மண் மேட்டின் ஏறி உள்ளே பார்த்தவன் பிரமிப்பாய் சிலிர்த்து நின்றேன்.அங்கு படிகள் இல்லா ஆழக்கிண்ற்றில் ஒரு பெண் குளித்துக் கொண்டு இருந்தாள். கறுத்த நடுத்தர வயது,அளவான கட்டான உடல், பற்கள் பெரிதாய் எடுப்பாய் வெளியில் தெரிந்தது.ஒரு பாவாடையை மார்பு வரை ஏற்றிக் கொண்டு, கால்களை பகுதி நீட்டி உக்காந்து, குனிந்து கைகளால் தண்ணீரை மொண்டு மொண்டு மேலே ஊற்றிக் கொண்டு இருந்தாள். நான் அதிர்ந்தேன். அங்கு ஒரு பெண்ணால் செல்ல சாத்தியமே இல்லை. படி கிடையாது. அம்பது ஆடி ஆழம் கயிற்றில் இறங்கி, இரவு குளிக்க ஒரு பெண்ணுக்கு அவசியம் இல்லை. அது பேய்தான். சந்தோகம் இல்லை, அந்த அமானுஷ்ய சக்தி, பேய் இவள்தான் என முடிவு செய்தேன். கத்த ஆரம்பித்தேன்."ஏய் யாருடி நீ? உனக்கு இங்க என்ன வேலை? என்ன தைரியம் இருந்தால் என் வீட்டினுள் வருவாய்" எனக் கத்தினேன். "வாடி வெளியில. வாடி மேல வாடி" என்று கத்திக் கொண்டே, கையில் இருந்த ஒரு விறகுக் கட்டையை அவள் மேலே எறிந்தேன். பலவீனமாய் சக்தியற்ற நிலையில் நான் எறிந்த அந்த விறகுக்கட்டை ஒரு பேப்பர் துண்டு போல அவள் முன்னால் கிணற்றில் விழுந்தது. நான் கத்திக் கொண்டே இருந்தேன். அவள் என்னை நிமிர்ந்து பார்க்கவும் இல்லை. சட்டை செய்யவும் இல்லை. அவள் பாட்டுக்குக் குளித்துக் கொண்டுருந்தாள். தண்ணீரை கையால் மொண்டு ஊத்துவதையும் நிறுத்தவில்லை. நான் கத்த ஆரம்பித்தவன் கை கால்களை உதறிக் கொண்டு விழித்தேன். சில வினாடிகளுக்குப் பின்னர் தான் இது கனவு என உணர்ந்தேன்.


டிஸ்கி : இது 02.02.10 அன்று அதிகாலையில் நான் கண்ட கனவு. மணி 3.45 இருக்கும். பின்னர் நான் தூங்க 4.20 ஆயிற்று. பின்னர் ஒரு குட்டிப் பேய்க் கனவு வந்தது. அது பின்னர் சிறுகதையாக வரும்.
அகிலன் தன் பதிவு ஒன்றில் சாப்பாட்டுத் தட்டில் ஒரு பருக்கை இருந்தததுக்கு ஒரு மகாபாரதக்கதைப் பதிவு போட்டுச் சொன்னார். எங்களுக்குச் சாப்பிடும் போது கூட பதிவு ஞாபகம் என்றார். நான் தூங்கும் போது கனவை வைத்துக் கூட பதிவு போடுவேம் நன்றி.

21 comments:

 1. அண்ணாச்சி ஓட்டு போட்டுட்டேன். கமெண்ட் போட்டுட்டேன். பேய் ஒண்ணும் செய்யாதுல?

  ReplyDelete
 2. பட்டாணி பாராக்காரா?யாரிவர் ? இங்கு பார்க்க . இதில் குதிரை மேல் இருப்பதும் பட்டாணி சுவாமியே .

  http://mathar-itsallaboutmine.blogspot.com/2010/01/blog-post.html#comments

  ReplyDelete
 3. /நான் தூங்கும் போது கனவை வைத்துக் கூட பதிவு போடுவேம் நன்றி//

  அங்ககேயுமா??? முடில அண்ணாச்சி... :)

  ReplyDelete
 4. எனக்கு இதுவும் வேணும் இன்ன்மும் வேணும்..

  ReplyDelete
 5. தலைவரே கோச்சிக்காதிங்க தெரியாம முதலில்
  டிஸ்கியை படித்து விட்டேன் ......:))
  என்னா எனக்கு ஒரு டவுட்....

  ReplyDelete
 6. நீங்க கடவுள் ஆராய்ச்சி எழுதும் போதே நினைச்சேன். பேய் கனவுதான் வரும் என்று...

  கடவுள் ஆராய்ச்சி-3 வது பார்ட் வருமா?????வராதா !!!!

  ReplyDelete
 7. //பொய்களை அழகாய்ச் சொல்பவன் கவிஞன்! உண்மையை உரக்கச் சொல்பவன் பித்தன்!//

  நல்ல கவிங்கராக உருவாகி வருகிறீர்கள்.......

  ReplyDelete
 8. //ஒரு விறகுக் கட்டையை அவள் மேலே எறிந்தேன்//

  ஓ ....இதுதான் கட்டைய கட்டையால் அடிக்கிறதா

  ReplyDelete
 9. ஒரே கலாய்ப்பா இருக்கு ??

  ReplyDelete
 10. //இது 02.02.10 அன்று அதிகாலையில் நான் கண்ட கனவு. மணி 3.45 இருக்கும். பின்னர் நான் தூங்க 4.20 ஆயிற்று. பின்னர் ஒரு குட்டிப் பேய்க் கனவு வந்தது. அது பின்னர் சிறுகதையாக வரும்.//
  இதுக்கப்புறம் சிறுகதை வருமா...ம்ம்ம் எழுதுங்க..

  ReplyDelete
 11. eppadingka oddu podurathu sollungkale

  ReplyDelete
 12. //மனம் பலவீனம் மற்றும் பேய்கள் குறித்த பயம் உள்ள பதிவர்கள் இதைப் படிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்//

  நன்றி நண்பா.. போய்ட்டு அப்புறமா வரேன்.. ஹி.. ஹி.. ஹி..

  ReplyDelete
 13. சாமியாரே உங்ககிட்ட எப்பிடி பேய் வந்திச்சு !அதுவும் விறகுக் கட்டையால அடிக்கிற தூரத்தில !

  ReplyDelete
 14. என் வீட்டுக்கு பேய் எல்லாம் வர்றதில்லை. கனவுலகூட.
  எல்லாம் என்னைப்பாத்து பயந்து ஓடிருச்சுங்க :)

  ReplyDelete
 15. நன்றி சித்ரா,பேய் என்ன செய்யும்? நீங்கதான் நெல்லை பெண்ணு ஆச்சே.
  வணக்கம் மாதர், தங்களின் முதல் வருகைக்கும்,பின்னூட்டத்திற்க்கும் நன்றி. பட்டாணி பாராக்காரா என்னும் வடதேசத்துக் காவல் தெய்வம்,என் அம்மாவிற்க்கு அருள் ஆக வரும். இது குறித்து நான் எங்க அம்மாவும் கடவுள் அனுபவங்களும் என்று இரண்டு பதிவுகளை அனுபவம் தொகுப்பில் போட்டுள்ளேன்.படியுங்கள். நன்றி.
  வணக்கம் நாஞ்சிலாரே,தங்களின் முதல் வருகைக்கும்,பின்னூட்டத்திற்க்கும் நன்றி.எனது பெரும்பாலன பதிவுகளின் ஆக்கம் காலை குளிக்கும் போது முடிவு செய்வதுதான்.
  // எனக்கு இதுவும் வேணும் இன்ன்மும் வேணும்.. //
  ஆகா என்னங்க கொங்கு அம்மினி, பேய் வேணும் கேக்குற முத ஆளு நீங்கதான். ஹா ஹா எப்படி மடக்கிட்டேன்.
  ஜெட்லி எப்படி படித்தால் என்ன, பதிவைப் படிக்கின்றீர்களே அது போதும்.நன்றி.

  வாங்க ஜய்லானி, பாகம் -3 போட்டாச்சு, இன்று பாகம் - 4 போடப் போறேன். நன்றி.
  // ஓ ....இதுதான் கட்டைய கட்டையால் அடிக்கிறதா //
  வாங்க மகா, நல்ல சொல்லாடல். ஆகா மனுசன் என்னமா பீல் பண்ணி யோசிக்கிறார். இன்னூம் இன்னும் எதிர்பார்க்கின்றேன். நன்றி.
  நன்றி கேசவன்,
  நன்றி மேனகாசத்தியா,
  ஹா ஹா நன்றி சுவையான சுவை,
  வாங்க அனானி, படிச்சிங்களே அதுவே போதும்.நன்றி.
  நன்றி திவ்யாஹரி, அப்புறமா வரும்போது கம்மர் கட்டும்,கடலை முட்டாயும் வாங்கிட்டு வாங்க.ஹி ஹி
  நான் கொஞ்சம் வித்தியாசமான ஆசாமி இல்லையா, வழக்கமா சாமியாருன்னா பெண்ணுகதான் வருவாங்க, நமக்கு பெம்பளைப் பேய்,நன்றி ஹேமு.
  // எல்லாம் என்னைப்பாத்து பயந்து ஓடிருச்சுங்க :) //
  ஹா ஹா நல்ல நகைச்சுவை. "பேய்களைப் பயப்படுத்திய பெண்குல சிங்கம்" என்று ஒரு பட்டம் தரலாமான்னு யோசிக்கின்றேன்.
  என்னது இரண்டு அல்லது மூன்று பதிவுகளில் தங்கை சுசியைக் காணேம். ரொம்பக் குளிருதுன்னு பதிவுக்கு லீவு போட்டுட்டாங்களா?
  எனது பதிவுக்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி.

  ReplyDelete
 16. நல்ல கற்பனை...

  http://puthiyayukam.blogspot.com/

  ReplyDelete
 17. இங்கு பூதம்தான் வரும் என நினைத்தேன். பேயும்வந்துவிட்டதே. "குட்டிப் பேயும் வரும்" :)))

  ReplyDelete
 18. கனவா?
  //மனம் பலவீனம் மற்றும் பேய்கள் குறித்த பயம் உள்ள பதிவர்கள் இதைப் படிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்//

  இப்படி ஒரு build up கொடுத்து என்னை ஏமாத்திட்டீங்களே.. இன்னிக்கு தன ஹரிக்கு நகட் துடி இல்ல.. அதான் தைரியமா படிச்சேன்.. ஹி..ஹி..ஹி.. கமர்கட்டும் கடலை முட்டையும் வாங்கிட்டேன்.. எப்போ பார்குரோமோ அப்போ அத தருவேன்.. ஓகே வா அண்ணா.. ?

  ReplyDelete
 19. கனவா?
  //மனம் பலவீனம் மற்றும் பேய்கள் குறித்த பயம் உள்ள பதிவர்கள் இதைப் படிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்//

  இப்படி ஒரு build up கொடுத்து என்னை ஏமாத்திட்டீங்களே.. இன்னிக்கு தன ஹரிக்கு நகட் துடி இல்ல.. அதான் தைரியமா படிச்சேன்.. ஹி..ஹி..ஹி.. கமர்கட்டும் கடலை முட்டையும் வாங்கிட்டேன்.. எப்போ பார்க்கிறோமோ அப்போ அத தருவேன்.. ஓகே வா அண்ணா..

  ReplyDelete
 20. அய்யோ பேயா நான் படிக்க மாட்டேன்

  ReplyDelete

என்னை வளர்க்க, கருத்துரையிடுக...

பதிவைப் படித்து கருத்து போடலைனா
உங்க கனவுல பூதம் வரும்,,, ஆமா சொல்லிட்டேன்.