Friday, February 12, 2010

கடவுளும், கோவிலும் ஒரு ஆராய்ச்சி - 6

நான் ஆரம்பத்தில் இருந்து ஒரு விஷயத்தைக் கூறி வருகின்றேன். நமது கடவுள் நம்பிக்கை என்பது நம்பிக்கை மற்றும் பயம் காரணமாய்த் தோன்றும் ஒரு விசயம். இதை நீங்கள் ஒரு கோவிலில் முதன் முதலில் நுழையும் போது உணரலாம். முதலில் ஒரு பயம் கலர்ந்த திகைப்பு, பின் கடவுளிடம் நம்பிக்கை கொண்ட வணக்கம். பின்னர் தான் கோவில் மற்றும் அமைப்பு பற்றியும், மற்ற விசயங்களைக் கவனிக்கின்றேம். முதலில் வரும் இரண்டு உணர்வுகளும் காலம் காலமாய் நம் மரபு அனுக்களில் தீட்டப்பட்ட விசயம். இது நம்மையும் அறியாமல் வருவது. சில சமயம் பழக்கத்தால் வருவது, குழந்தையில் இருந்து நாம் பெரியோர்களைப் பார்த்துப் பழகிய பழக்கம் நம்மையும் அறியாமல் வரும். இந்த எனது கருத்துக்களுக்கு நான் இரண்டு உதாரனங்களைக் கொடுக்க விரும்புகின்றேன். ஒரு சமயம் நான் சென்னையில் இருந்து மூன்று மணி நேரப் பயணம் மேற்க் கொண்டேன். என்னுடன் கிறித்துவ நண்பன் டி.பி நாயகம் உடன் வந்தான். பேசிக் கொண்டு இருக்கும் போது, கடவுளைப் பத்தி பேச்சு வந்தது. நான் எனது கருத்துக்களைப் பற்றிக் கூறிக் கொண்டு இருந்தேன். ஊரும் வந்து இறங்கும் போது, எங்கள் அருகில் பக்கீர் போல இருந்த, முஸ்லிம் பெரியவர் ஒருவர் எனது தோளில் கைவத்து, இவ்வளவு சின்ன வயதில், எவ்வளவு யோசனை செய்கின்றாய் என்று சொல்லி, அல்லா உன்னைக் காப்பாற்றுவார் என்று கூறிச் சென்றார். அப்போது எனக்கு வயது 21.

எங்களின் பேச்சு கடவுள் பக்கம் வந்த போது கடவுள் என்பவர்,பயம் மற்றும் நம்பிக்கை அடிப்படையில் தான் வந்ததது என்று நான் விவாதிக்க, நாம் தவறு செய்தால் கடவுள் தண்டிப்பார் என்று நம்புவதும் ஒரு காரணம் ஆகும். அதற்கு ஒரு உதாரணம் சொன்னேன். அது என்ன என்றால், நம் நாட்டில் எல்லாரும் நாகப்பாம்பை, நல்ல பாம்பு எனவும், நாகம் தேவர்களில் ஒன்று எனவும். அம்மன் கையிலும், ஈசனின் தலையிலும், விஷ்னுவின் படுக்கையாகவும் இருக்கும். நிறையக் கடவுள்களுக்கு பாம்பு அருகாமையில் இருக்கும். இதில் கிறிஸ்த்தவர்களும் விதிவிலக்கு இல்லை. ஜரோப்பிய நாடுகளில் பெரும்பாலும் மக்களைக் கடிக்கும் வைப்பர் என்னும் விரியன் பாம்புகளை மேரி மாதா மற்றும் சூசையப்பரின் மீது போட்டு நடக்கும் ஊர்வலம் ஒன்று, இன்றும் நடக்கின்றது. ஆனால் பெரும்பாலும் அவர்கள் பாம்பை சாத்தானின் அம்சமாகப் பார்ப்பார்கள். இது ஆதாம், ஏவாளின் கதையால் விளைந்தது. இதுக்குக் காரணம் என்னவாக இருக்கும்? இது பற்றிய அலசல்தான் விவாதம். பாம்பு என்பது விஷம் கொண்ட பிராணி. கடித்தால் மரணம் நிச்சயம் என்பதும் உண்மை. ஆகவே பாம்பு அச்சத்தைக் கொடுக்கும் பிராணி என்பதில் சந்தோகம் இல்லை. ஆனால் கடவுளாக ஆக்கப் பட்டது எப்படி? சில சாத்தியக் கூறுகளை ஆராய்ந்தால் உண்மை புலப்படும்.

பாம்பு இரவு, பின் மாலைப் பொழுது, அதிகாலைப் பொழுது மட்டும் உலாவும் அல்லது இரை தேடும் பிராணி. பகலில் பெரும்பாலும் உறங்கும். மனிதர்கள் பெரும் பாலும் விளக்கு வசதி இல்லாத அந்தக் காலத்தில் பொழுது விடிந்தவுடன் வயல் மற்றும் வேலைக்குச் சென்று, பொழுது சாயும் சமயம் திரும்பி விடுவார்கள். பெரும்பாலும் மனிதர்கள் அந்தக் காலத்தில் இரவில் வெளி வரமாட்டார்கள். அனால் பாம்பு இரவில் நடமாடும். அப்போது மனிதர்களைக் கடிக்கின்றது என்றால் எப்படி?. அந்தக் காலத்தில் இரவில் நடமாடுவர்கள் பெரும்பாலும், திருடர்கள், தகாத உறவு கொள்வேர், குடிப்பழக்கம் உடையவர்கள் மற்றும் சூதடுவர்கள் தான் ஊருக்கு வெளியில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்க்கு செல்வார்கள். அப்போது அங்கு இரை தேடும் பாம்புகளின் கடிக்கு ஆளாகி உயிரை விடுவார்கள். இதனால் அவன் தவறு செய்தான் அதான் அவனைக் கடவுள் தண்டித்தார். தவறான பாதையில் செல்லும் ஒருவனைக் கடவுள் இப்படித் தண்டிப்பர் என்னும் நம்பிக்கை உருவாகி இருக்க வேண்டும். மனிதர்களில் ஒரு சிலரை அதிகாலையில் அது புத்தில் தஞ்சம் அடையும் சமயம் மக்களைக் கண்டால் ஓடி ஒளிந்து கொள்ளும். ஆக வயல் வேளைக்கு சென்ற நல்ல மனிதர்களை ஒன்றும் செய்ய வில்லை, ஆனால் இரவில் நடமாடும் தீயவர்களைக் கொன்று விட்டது. நல்ல ஒழுக்கங்களைக் கொண்டவர்கள் அல்லாது, தீய பாதையில் செல்வேரைத் தண்டித்ததால் அது நல்ல பாம்பு ஆயிற்று.ஆகவே இது கடவுளின் வடிவம் அல்லது தூதனாக்கப் பட்டது. புத்துக்கு அபிஷேகமும், நாகர் வடிவங்களும் கொடுக்கப் பட்டிருக்கலாம். இது ஒரு விதமான சிந்தனை.

ஆனால் இதுவே பின்னாளில் நம் முன்னேர்கள் இந்த பாம்புகள் பிண்ணிப் பிணைந்து காதல் செய்யும் வகையை உருவமாகச் செய்து, அதை அரச மரத்தின் அடியில் வைத்து வணங்கினால், பிள்ளைப் பேறு கிட்டும் என்றான். இது கொஞ்சம் திகைப்பு மற்றும் ஆச்சரியமான விசயம்தான். அவர்களின் அறிவுத்திறன் கட்டாயமாக நம்மை வீட மேம்பட்டதாகத்தான் இருக்கும். நம் முன்னேர்கள் நாம் நினைப்பதைப் போல முட்டாள் அல்லது பிற்ப்போக்கு வாதிகள் அல்ல.இந்த பிணைப்பு உருவத்திற்க்கு வணங்குதல் வேண்டும் என்று கூறி வணங்கச் சொன்னார்கள். இந்த விசயத்தில் தான் ஒரு ஆச்சரியம் என்ன என்றால் குழந்தை பிறப்பை ஏற்ப்படுத்தும் ஆர் எச் பேக்டர்கள், மற்றும் டி.என்.ஏ, ஆர்,என் ஏ மூலக்கூறுகள் யாவும் இந்த சிலை வடிவில் தான் பிண்ணிப் பினைந்துள்ளன.
இது மட்டும் அல்ல,முன்னேர்கள் தொலைநேக்கி போன்றவை இல்லாக் காலத்தில், குரு பெரிய கிரகம் என்றனர்,சனி நீல நிறமுடையவன் என்றனர், புதனுக்கு பச்சையும்,சூரியனுக்கும்,செவ்வாய்க்கும் சிவப்பையும் கொடுத்தனர். இராகுவும், கேதுவும் நிழல் கிரகங்கள் என்றனர். எதிர்புற இயக்கம் என்றனர். ஆனால் விஞ்ஞானம் இதை இப்போது உண்மை என்று கண்டுபிடித்தனர். சனி மந்தன் என்றும் மந்தமான கிரகம் என்றனர். ஆதுபோல ஆய்வாளர்களும் சனி ஒரு மந்த வாயுக்கள்,தூசுக்களால் சுற்றப் பட்டு நீல நிறமாக காட்சியளிக்கும் என்று அதன் படத்தையும் கொடுத்தனர். ஜீபிடர் பெரியது என்றும், செவ்வாய் சிவப்பு,சூரியன் நெருப்பு, புதன் கரும் பச்சை என படம் காட்டினர்.நெப்டீயூனும்,புளூட்டேவும் மற்ற கோள்களுக்கு எதிர் திசையில் சுற்றும் மறைவுக் கோள்கள் என்றார்கள். இது போன்ற ஒத்துமைகளைப் பார்க்கும் போது அவர்களின் அறிவு வியக்க வைக்கும். இல்லை நாம் நமது முன்னேர்கள் சொன்னதை இதனுடன் சம்பந்தப் படுத்தி ஒப்புமை கொள்கின்றேமா என்ற சந்தோகம் வரும். ஆனால் முன்னேர்கள் பல காலத்த்துக்கு முன்னரே இதை சொல்லி விட்டதால் இதை ஒப்புமை என்று சொல்ல முடியாது. பின்னர் எப்படிச் சாத்தியம் ஆகும்?, சிந்திப்போம், பின்னர் தீர்வும் காண்போம். தொடரும், நன்றி.

டிஸ்கி : வரும் ஞாயிறன்று சீனர்களின் புலிப் புத்தாண்டு பிறக்கின்றது. ஆதலால் எனக்கு அலுவலகம் வரும் செவ்வாய் வரை விடுமுறை. மீண்டும் உங்கள் அனைவரையும் புதன் அன்று சந்திக்கின்றேன். இனிய சீனப் புத்தாண்டு வாழ்த்துக்கள். நன்றி.

13 comments:

 1. இந்த விசயத்தில் தான் ஒரு ஆச்சரியம் என்ன என்றால் குழந்தை பிறப்பை ஏற்ப்படுத்தும் ஆர் எச் பேக்டர்கள், மற்றும் டி.என்.ஏ, ஆர்,என் ஏ மூலக்கூறுகள் யாவும் இந்த சிலை வடிவில் தான் பிண்ணிப் பினைந்துள்ளன.//
  அருமை.இது பற்றி இன்னும் நிறைய எழுதுங்கள்..முன்னோர்கள் முட்டாள்கள் அல்ல.என்பதை ஆதாரபூர்வமாக்கும் விததில் உங்கள் கட்டுரை செல்கிறது.வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. தெளிவான ஆராய்சிதான்!!

  ReplyDelete
 3. HAPPY CHINESE NEW YEAR!

  - Tiger year - your favorite animal.

  ReplyDelete
 4. தெளிவான ஆராய்சி!!

  ReplyDelete
 5. //குழந்தை பிறப்பை ஏற்ப்படுத்தும் ஆர் எச் பேக்டர்கள், மற்றும் டி.என்.ஏ, ஆர்,என் ஏ மூலக்கூறுகள் யாவும் இந்த சிலை வடிவில் தான் பிண்ணிப் பினைந்துள்ளன.//

  சான்சே இல்லை! இனி உண்மையிலேயே பிள்ளையார் பால் குடிப்பார்!

  ReplyDelete
 6. அருமையான பதிவு . வாழ்த்துக்கள் நண்பரே

  ReplyDelete
 7. நல்ல ஆராய்ச்சி அண்ணா..

  ReplyDelete
 8. 16.01.2010 அன்று
  கும்பகோணம் சிவன் கோவிலில் நல்ல பாம்பு வில்வ
  அர்ச்சனை செய்து .. வழிபட்டதாம்.
  PDF படத்துடன் மேலும் விவரங்கள்.

  http://hindutradition.blogspot.com

  Om nama shivaya!
  -----------------------------------------------

  ReplyDelete
 9. உங்களுக்கும் வாழ்த்துக்கள் அண்ணா..

  தங்கையாய் ஒண்ணு சொல்றேன்.. தப்பா எடுத்துக்காதீங்க..

  கோவில் சம்பந்தமா நீங்க எழுதுற எதுவா இருந்தாலும் இப்போ வீட்டுக்கு வந்து அமைதியா, ஆறுதலா படிப்பேன். நிறைய புது விஷயங்களோட மன ஆறுதலும் கிடைக்கும். மறுபடி எழுத்துப் பிழைகள் எட்டிப் பாக்குது அண்ணா.. கொஞ்சம் கஷ்டமா இருக்கு. படிக்க..

  ReplyDelete
 10. மிகவும் பிரமாதமான இடுகை, ஆன்மிகம் அறிவியலோடு இணைந்துவிடும்போது அழியாத்தன்மை பெற்றுவிடும் என ஆன்மிகம் இப்போதெல்லாம் அறிவியல் பேசுகின்றது. ஆன்மிக கோட்பாடுகளுக்கு எவ்வித விளக்கமும் அவசியமுமில்லை எனும் நிலை தகர்ப்பட்டு வருகிறது.

  ReplyDelete
 11. நல்ல பதிவு பிரமாதம்... ஆனால்,

  //நெப்டீயூனும்,புளூட்டேவும் மற்ற கோள்களுக்கு எதிர் திசையில் சுற்றும் மறைவுக் கோள்கள் என்றார்கள்.//

  ராகு, கேது என்பவை நெப்டியூன் புளூட்டோ அல்ல. அவை சந்திர மற்றும் சூரிய கிரகணங்கள் தான்...

  ReplyDelete

என்னை வளர்க்க, கருத்துரையிடுக...

பதிவைப் படித்து கருத்து போடலைனா
உங்க கனவுல பூதம் வரும்,,, ஆமா சொல்லிட்டேன்.