Monday, February 1, 2010

கடவுளும்,கோவிலும் ஒரு ஆராய்ச்சி - 2

கடவுள் தோன்ற காரணிகள் வேண்டும், பயம்,ஆசை,அமைதி என்ற இந்தக் காரணிகள் தான் கடவுளை மனிதன் தோற்றுவிக்கவும்,வணங்கவும் வைத்தது. மனிதனைப் பொறுத்தவரை அவன் ஒரு சார்ந்து வாழும் விலங்கு, தனிமை அல்லது நிசப்பதம் வெற்றான இடம் மனிதனுக்கு பயமும், வெறுப்பையும் தரும்.ஆதலால் அவனுக்கு சார்ந்து வாழ உதவி செய்ய ஒரு துணை தேவைப்பட்டது.அவனுக்கு நம்பிக்கை அளிக்க ஒரு புறம்சார ஒரு மூலம் தேவைப்பட்டது. நிலையானதும்,மாறாததும்,எப்போதும் அருகில் இருக்கும் துணையாக அவன் கடவுளைப் படைத்தான். அதன் மூலம் அவனுக்கு ஒரு நம்பிக்கை ஏற்ப்பட்டது. இந்த நம்பிக்கை அவனை வழினடத்தியது. இந்த நம்பிக்கைதான் கடவுள். இராமன்,கிருஷ்னர்,அல்லா,யேசு,கர்த்தர், நெருப்பு என்னும் இவைகள் கடவுள் அல்ல. இவர்கள் எல்லாம் கடவுள் இல்லை. பின்னர் கடவுள் என்பது யார் தெரியுமா?. இவர்கள் எல்லாம் கடவுள்கள்,இவர்கள் எந்நேரமும் நம்மைக் காத்து வழி நடத்துவார்கள் என்று நாம் நம்புகின்றேமே அந்த நம்பிக்கைதான் கடவுள். சித்ராவின் நம்பிக்கை யேசு,ஜலில்லாவின் நம்பிக்கை அல்லா, துளசி டீச்சரின்,சுசியின் நம்பிக்கை பிள்ளையார்,எனது நம்பிக்கை இராமர். என கடவுள்களில் நாம் வைக்கும் நம்பிக்கையும்,எண்ணங்களும் தான் கடவுள். இது எப்படி சாத்தியம்? அப்படி என்றால் கடவுள் என்ற ஒன்று தனியாகக் கிடையாதா? கடவுள் இருக்கின்றாரா? இல்லையா? என்றால் கடவுள் கண்டிப்பாய் இருக்கின்றார், அவர் சக்தி வடிவில் எல்லாவற்றுளும் நிறைந்துள்ளார். நாம் அவரைப் பார்க்கும், வணங்கும் ரூபங்கள்தான் இவை. இது அனைத்தும் நம் மனம் சார்ந்த விடயங்கள்.கடவுள் இல்லை என்று கூறும் வால் பையனுக்கும்,கோவி அண்ணாவிற்க்கும் அவர்களது தனிப்பட்ட தன்னம்பிக்கைதான் கடவுள். அதுக்கு அவர்கள் பெயர் இடுவதில்லை.வணங்குவது இல்லை. ஆனால் நல்லது நடக்கும் என்று நம்புவார்களே அந்த நம்பிக்கைதான் கடவுள். இதைச் சரியாக புரிந்து கொள்ள நாம் கடவுள்களின் தேற்றத்தைப் பார்த்தால் நமக்கு புரியும்.

ஆதிமனிதன் தான் உருவான காலத்தில் முதலில் கடவுள் என்பது இல்லை. அவன் முதலில் பயந்தது இடி மற்றும் மின்னல்தான். அவைகள் கடவுள்கள். நாம் தவறு செய்தால் அவை நம்மை தண்டிக்கும் என்று நம்பினார்கள்,பயந்தார்கள். இந்த இடி மற்றும் மின்னல் பின்னர் அவை உண்டாக்கும் காட்டுத்தீயைப் பார்த்த போது, தீயில் அனைத்தும் சாம்பல் ஆன போது, அதுதான் கடவுள் என்று நம்ப ஆரம்பித்தான். இன்றளவும் இந்த தீயை வழிபடும் பழக்கம் உள்ளது. இவற்றில் இருந்து தன்னைக் காத்துக் கொள்ள குகை மற்றும் மலைகளில் தஞ்சம் அடைந்தான். மலைகளில் கவர்ச்சியும் அழகும் அதைக் கடவுள் ஆக்கிற்று. பின்னர் மனிதன் குழுவாக வாழ ஆரம்பித்தவுடன் அவன் தஞ்சம் அடைந்தது மரம் மற்றும் மரக்குடில்கள். பின்னர் அவனைக் காக்கும் மரம் கடவுளாயிற்று. மரங்களில் அடர்ந்து இருக்கும் அரச மரமும்,ஆலமரமும் அவனது தெய்வங்கள் ஆயின. பின்னர் முன்னேர்களில் தேர்வு அரச மரம் ஆயிற்று. கீதையில் கண்ணன் நாம் மரங்களில் அரசு என்று கூறியுள்ளார்.இப்ப மக்கள் அரச மரம் வணங்குவதுடன் ஒரு பிள்ளையாரையும் வைத்து டூ இன் ஒன் ஆக்கிவிட்டார்கள். அரச மரம் கடவுளா என எனக்கு தெரியாது?. ஆனால் அரச மரத்தில் ஒரு சக்தியுள்ளது. விஞ்ஞானிகள் அரச மரத்தை ஆராய்ச்சி செய்து ஒரு கட்டுரை வெளியிட்டுள்ளார்கள். அதாவது அரச மரத்தில் காலையிலும் மாலையிலும் செபோனின் என்னும் ஒரு வாயு வெளிப்படுகின்றது. இந்த செபோனின் வாயு நம் மூளையில் உள்ள செரட்டின் என்னும்,சிந்திக்கும்,ஞாபக சக்தியை அதிகரிக்கும், சுறுசுறுப்பைக் கொடுக்கும் பகுதியைக் தூண்டுவதாக அமைகின்றது. அந்தக் கட்டுரையில் தினமும் மாலை ஒரு அரைமணி நேரம் உக்காந்து இருந்தால் நம் ஞாபக சக்தி,சிந்தனை, மன அமைதி கிட்டும் என்று கூறுகின்றது.இதை சொல்லி உட்கார் என்றால் நம்ம ஆளுக உட்கார மாட்டார்கள்.(நான் எங்கள் ஊர் ஆத்து மேட்டில் உள்ள அரச மரத்தின் அடியில் மாலை அமருவது வழக்கம்.நிறைய பெரிய கருனாகங்கள் நாணல் புதரில் இருந்து மாலையில் வெளிப்பட்டு ஆற்றில் தண்ணீர் குடிக்க வரும்,நான் அமைதியாய் வேடிக்கை பார்ப்பது வழக்கம்) எனவே ஒரு கடவுளை வைத்துப் போய் கும்பிடு, தண்ணீர் ஊத்து என்றால் போய் ஊற்றுவான் அவன் நம்பிக்கை அது. இது போல பல விடயங்கள் நம் முன்னோர்கள் மறைத்து வைத்து இலைமறை காயகச் சொன்னார்கள். ஆனால் இதிலும் நம்ம ஆளுக சாரத்தை மட்டும் பிடித்துக் கொண்டார்கள். அரசும் மருத்துவ குணம் மிக்க வேம்பும் வைத்து அதில் சக்தியாக அம்மனை வைத்தார்கள். வெறும் மரத்தைச் சுற்று என்றால் சுற்றாத பெண்கள், அம்மனை சுற்றும் போதாவது மரத்தின் பயனை அனுபவிக்கட்டுமே என்றுதான் அமைத்தார்கள். இதுக்கு ஒரு குட்டிக்கதை சொல்ல விரும்புகின்றேன்.

பழைய காலத்தில் ஒரு தாயின் ஒரே மகன் பொருள் தேடுவதற்காக வெளியூருக்குச் செல்ல விரும்பினான்,அனுப்புவதற்கு தாயின் மனம் இடம் கொடுக்கவில்லை.ஆனாலும் மகன் பிடிவாதமாக இருந்தான். தாய் ஒரு தந்திரம் செய்தாள். அவள் மகனிடம் சொன்னால் சரி மகனே பொருள் தேடப் போய்வா, ஆனால் நான் சொல்லும் விதம் செய்தால் தான் அனுப்புவேன் என்றாள். மகனும் சம்மதிக்க, தாய் அவனிடம் இரண்டு மூட்டைகளைக் கொடுத்துச் சொன்னாள், இதில் ஒரு மூட்டையில் நிறைய புளி சாதம் உள்ளது.இதை நீ போகும் வழியில் புளிய மரத்தின் அடியில் அமர்ந்து சாப்பிடு, இரவு தூங்கும் போதும் புளிய மரத்தின் அடியில் தூங்கு. ஒருவேளை உனக்கு திரும்பி வரவேண்டும் என்று தோன்றினால், நீ இன்னேரு மூட்டையில் அவல் இருக்கின்றது,நனைத்துச் சாப்பிடு,ஆனால் திரும்பி வரும்போது வேப்ப மரத்தின் அடியில் உட்காந்து சாப்பிடு,தூங்கு என்றாள். மகனும் சம்மதித்துக் கிளம்பினான். மூன்று இரவு,மூன்று பகல் கழிந்தது. தொடர்ந்து உண்ட புளி சாதம் வயிற்றைக் கெடுத்தது, இரவு புளிய மரத்துக் கார்பன் டை ஆக்ஸைடு காற்று தலை நேயையும்,மன அமைதியையும் கெடுத்தது. உடல் முடியாமல் வீடு திரும்ப நினைத்தான். தன் தாய் கூறிய படி அவலை நனைத்து உண்டு, வேப்ப மரத்தின் அடியில் படுத்து வீட்டிற்க்கு வந்தான். வீடு திரும்பிய போது அவன் பூரண குணமடைந்து இருந்தான். அவலின் கார்போஹைடிரேட் சக்தியும் மருத்துவ குணம் மிக்க வேப்ப மரக்காற்றும் அவனைக் குணப்படுத்தியது.தாயும் தன் திட்டம் பலித்தது குறித்து மகிழ்ந்தாள். இது கதை என்றாலும் கருத்து மிக்கது. ஆனால் பொதுவாக இரவில் அனைத்து மரமும் கார்பன் டை ஆக்சைடு வாயுவைத்தான் வெளிப்படுத்தும்,ஆகவே இரவில் மரத்தின் அடியில் தூங்குவது தவறு. பகலில் வேப்ப மரம் அல்லது அரச மரத்தின் அடியில் கயித்துக் கட்டிலில் படுத்து தூங்கினால் தனி சுகம்.(என்னது காலைப் பிடிக்க ஆள் வேணுமா,ரொம்பத்தான் கற்பனை வழியுது).சரி சரி மரத்தின் கதையை நான் பதிவர்களுக்கு ஒரு தகவலுக்காதான் சொன்னேன்.இனி நாம் கடவுளைப் பார்ப்போம்.

இப்படி ஆதிமனிதன் பயம் காரணமாய் இடி,மின்னல்,நெருப்பு,மழை,பூகம்பம்,எரிமலை காரணமாய் நிலம்,மலை என வணங்கிப் பின்னர் மரத்தையும் வணங்க ஆரம்பித்தான். நிழல்,காய்,கனி என அனைத்து நண்மைகளையும் அளிக்கும் மரம் உண்மையில் கடவுளே.(அதுனாலதான் வெட்டுறாங்க).இனி பின்னர் அவன் குழுவாக வாழ ஆரம்பித்ததும். அவனுக்கு பேய்,பிசாசு நம்பிக்கையும் ஏற்ப்பட்டது. பின்னர் நாகரீங்கள் தோன்ற ஆரம்பித்தது. இந்த நாகரீகத் தோற்றம்தான் கடவுளின் தோற்றமும் ஆகும். இந்த நாகரீங்களில் ஆரிய,கிரேக்க,திராவிட,சுமேரிய நாகரீங்கள் தான் முக்கியமனாவை. இதில் ஆரிய மற்றும் கிரேக்க நாகரீகம் தான் அதிக கடவுள் கதைகளைத் தோற்றுவித்தன. அவை எப்படி என்பதை அடுத்த பதிவில் பார்ப்போம். நன்றி.

16 comments:

 1. //இது அனைத்தும் நம் மனம் சார்ந்த விடயங்கள்.கடவுள் இல்லை என்று கூறும் வால் பையனுக்கும்,கோவி அண்ணாவிற்க்கும் அவர்களது தனிப்பட்ட தன்னம்பிக்கைதான் கடவுள்.//

  வால்பையன் குறித்து சொல்லி இருப்பதை அவர் தான் உறுதிப்படுத்தனும், படுத்தி இருக்கிறார் என்று நினைக்கிறேன்.

  நான் எங்கும் 'இருக்கு' 'இல்லை' என்று சொன்னதாக நினைவு இல்லை. நீங்களாக நான் இப்படித்தான் சொல்கிறேன் என்று கிளப்பி விடாதிங்க.

  ReplyDelete
 2. அருமையான பதிவு .... பதிவுக்கு ஏற்ற சில படங்களை போட்டால் இன்னும் நன்றாக இருக்கும் ....

  ReplyDelete
 3. ஆங்காங்கே பத்தி பிரித்தால் படிக்க இன்னும் லகுவாக இருக்கும்.

  ReplyDelete
 4. \\ஆதிமனிதன் பயம் காரணமாய் இடி,மின்னல்,நெருப்பு,மழை,பூகம்பம்,எரிமலை காரணமாய் நிலம்,மலை என வணங்கிப் பின்னர் மரத்தையும் வணங்க ஆரம்பித்தான்.\\

  நண்பரே.. சுற்றுவழியில் போகிறீர்களோ என நினைக்கிறேன்..

  நம் போன்ற பாமரர்களுக்கு இது போலத்தான் தெரியும். இதை உருவாக்கிய நம் முன்னோர்கள் ஞானியர்கள் பஞ்சபூத தத்துவத்தை உணர்த்தவே சொன்னார்கள் என நான் நம்புகிறேன்.. :)))

  தொடருங்கள் வாழ்த்துகள்

  ReplyDelete
 5. //அவர் சக்தி வடிவில் எல்லாவற்றுளும் நிறைந்துள்ளார். //
  இதுதாண்ணா என் நம்பிக்கையும்..

  //வெறும் மரத்தைச் சுற்று என்றால் சுற்றாத பெண்கள், அம்மனை சுற்றும் போதாவது மரத்தின் பயனை அனுபவிக்கட்டுமே என்றுதான் அமைத்தார்கள். //
  எங்க பாட்டி சொல்வாங்க.. இப்டி எதோ ஒரு காரணத்துக்காகத்தான் முன்னோர்கள் சொல்லி இருக்காங்கன்னு. அது என்னன்னு தெரியாததால பல குழப்பங்கள்..

  நம்பிக்கை மூட நம்பிக்கை ஆகாத வரைக்கும் நல்லதுண்ணா..

  ReplyDelete
 6. அருமையான பதிவு ....


  //ஆங்காங்கே பத்தி பிரித்தால் படிக்க இன்னும் லகுவாக இருக்கும்.//Repeattt...

  ReplyDelete
 7. அண்ணாச்சி, தொடர் அருமையா இருக்கு. இதுக்கென்றே நிறைய ஆராய்ச்சி செய்துள்ளது தெரிகிறது.

  ReplyDelete
 8. அருமையான பதிவு .. திருக்கோவில் தரிசன முறை படித்தேன்.. தகவலுக்கு நன்றி அண்ணா.. இனி கொஞ்சம் கொஞ்சமாக முன்னரே எழுதிய உங்களின் அனைத்து பதிவையும் படிக்க போகிறேன்.. தொடருங்கள்..

  ReplyDelete
 9. அருமையான பதிவு!!

  ReplyDelete
 10. நல்லா இருக்கு!!

  ReplyDelete
 11. பல விசயங்களைத் தெளிவுபடுத்தும் எனும் நம்பிக்கையில் மேலும் தொடர்கிறேன்.

  நம்பிக்கை என வந்தபோதுதான் கடவுள் கேள்விக்குறியாக்கப்பட்டார்.

  புளியமரம், வேப்பமரம் கதை மிகவும் அருமை.

  ஒன்றைச் சொல்லி ஒன்றை புரிய வைப்பது என்பது கல்வி கற்றுத்தரும் கலைதான். ஏன் அவ்வாறு சொன்னார்கள் என ஆராய்வது நமது வேலையாகிப் போனது.

  இதையெல்லாம் ஆராய்ந்து அவர்கள் செய்தார்களா அல்லது அவர்கள் எப்படி அறிந்தார்கள் என்பது முன்னோர்களுக்கே வெளிச்சம்.

  தொடருங்கள்...

  ReplyDelete
 12. நல்லாத்தானிருக்கு.ஆனா இன்னும் கொஞ்ச நாளில உண்மையா சாமியாரா ஆயிடப்போறீங்க.
  அதான் பயமாருக்கு.

  ReplyDelete
 13. படித்தேன்.........ஆனால்
  பதிவிடமாட்டேன்!
  இன்றிரவு கனவில் பூதம் வந்தால்..!
  நாளை பதிவிடுவேன்.

  இதே ஒரு பதிவுதானே..என்று
  குண்டக்க..மண்டக்க பேசப்படாது
  ஆமா!!சொல்லிபுட்டேனப்பு..!

  ReplyDelete
 14. மன்னிக்கவும் கோவி அண்ணா, நான் தொடரில் ஒரு ரிலோட்டிவிட்டிக்காகத்தான் சில பதிவர்களின் பெயர்களையும் அவர்கள் விரும்பும் கடவுள்கள் பெயரையும் குறிப்பிட்டேன். உங்களையும் வால்பையன் அவர்களையும் பகுத்தறிவு வாதிகள் என்ற முறையில் தான் குறிப்பிட்டேன். தவறு என்றால் மன்னிக்கவும்.

  நன்றி மகா, படங்கள் போட முயற்ச்சிக்கின்றேன்.

  வணக்கம் மருத்துவர் ருத்ரன் அவர்களே! தங்களின் பின்னூட்டத்தை பார்த்ததும் நான் அளவில்லா ஆனந்தம் கொண்டேன். நான் விரும்பிப் படித்த சில கட்டுரைகள் எழுதிய பிரபல மன நல மருத்துவர் நீங்கள். தாங்கள் முன்னர் குமுதத்தில் எழுதிய தொடர் முழுதும் படித்துள்ளேன். தாங்கள் எனது பதிவினைப் படித்து பின்னூட்டம் இட்டது மிக்க மகிழ்வை அளிக்கின்றது. பத்தி பிரித்துப் போடுகின்றேன் நன்றி

  வணக்கம் நிகழ்காலத்தில், இது ஆரம்பத்தில் மனிதன் எப்படி வணங்க ஆரம்பித்தான் என்பது மட்டும். நீங்கள் கூறும் பஞ்ச பூத தத்துவங்கள் பின்னால் வரும்.
  நன்றி சுசி, இதுபோன்ற நம்பிக்கைகளை வீட மூட நம்பிக்கைகள் அதிகம் இருப்பதுதான் நம் பலவீனம்.
  நன்றி மேனகாசத்தியா, பத்தி பிரித்துப் போடுகின்றேன்.
  நன்றி சித்ரா, ஆராய்ச்சி எல்லாம் பண்ணவில்லை, சின்ன வயதில் இருந்து படிக்கும் ஆர்வம் காரணமாய் படித்த விசயங்கள் இது. கற்றது சிறிது,கல்லாதது அதிகம்.
  நன்றி திவ்யா, படியுங்கள் சிலவற்றில் நல்ல கருத்துக்களும், பலவற்றில் மொக்கைகளும் இருக்கும்.
  நன்றி நிவேதிதா,தங்களின் வரவுக்கும், முதல் பின்னூட்டத்திற்க்கும் நன்றி.
  நன்றி சுவையான சுவை,
  நன்றி அய்யா, நமது முன்னேர்கள் எப்படி அறிந்தார்கள் என்பது மிகவும் சிக்கலான விசயம், அனுபவ பயன்பாட்டின் மூலமாக, அல்லது இவற்றிக்கு எதாவது மூலம் உள்ளதா எனத் தெரியவில்லை. கடும் தவம்,ஜெபம் மூலம் இந்த உண்மைகளை அறிந்து இருக்கலாம் என்பது எனது யூகம்.
  வாம்மா ஹேமு, பயப்படாதிங்க, நான் கடவுள் பாதி, மிருகம் மீதி. அதுனால சாமியார் எல்லாம் ஆகமாட்டேன். நன்றி ஹேமா.
  நன்றி கலா, பூதமா கனவிலா, புரபைலில் என் போட்டேவைப் பார்க்காத வரைக்கும் வராது. புகைப்படத்தைப் பார்த்து பயந்தால் வரும் என்று நினைக்கின்றேன். தங்களின் வருகைக்கும், பின்னூட்டத்திற்க்கும் நன்றி.

  தங்கள் அனைவருக்கும் எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றேன்.

  ReplyDelete
 15. //பித்தனின் வாக்கு said...

  மன்னிக்கவும் கோவி அண்ணா, நான் தொடரில் ஒரு ரிலோட்டிவிட்டிக்காகத்தான் சில பதிவர்களின் பெயர்களையும் அவர்கள் விரும்பும் கடவுள்கள் பெயரையும் குறிப்பிட்டேன். உங்களையும் வால்பையன் அவர்களையும் பகுத்தறிவு வாதிகள் என்ற முறையில் தான் குறிப்பிட்டேன். தவறு என்றால் மன்னிக்கவும். //

  கடவுள் இருக்கு என்ற உங்கள் நம்பிக்கை வெறும் நம்பிக்கை தானே. அதுக்கு மேல அதில் என்றாவது தெளிவு அடைந்தது உண்டா ? நான் பகுத்தறிவு வாதி என்று என்னைப் பற்றி எங்கும் குறிப்பிட்டது இல்லை. என்னைப் பொருத்த அளவில் வள்ளலாருக்கு கொடுக்கும் அதே அளவு மதிப்பைத்தான் பெரியார் மீதும் வைத்திருக்கிறேன்.

  ReplyDelete
 16. நன்றாக இருக்கிறது தொடருங்கள்.

  ReplyDelete

என்னை வளர்க்க, கருத்துரையிடுக...

பதிவைப் படித்து கருத்து போடலைனா
உங்க கனவுல பூதம் வரும்,,, ஆமா சொல்லிட்டேன்.