Monday, February 22, 2010

கடவுளும், கோவில்களும் ஒரு ஆராய்ச்சி - 9

சென்ற பதிவில்(பாகம் -8) நான் கூறிய பிரபஞ்ச தத்துவத்தை, ஒரு ஆராய்ச்சிப் பார்வைக்காக மட்டும் கடவுளுடன் ஒப்பிட்டுப் பாருங்கள். மையத்தில் உள்ள கருப்பொருளை,சக்தியாக,அதாவது பரம்பொருளாகப் பாருங்கள். அல்லது ஆதிபராசக்தியாகப் பாருங்கள். எதிர்வினையுடைய எலட்க்ரான் களைப் சிவனாகவும்(அழித்தல்), ஆக்க வினையுள்ள புரோட்டான் களை விஷ்னுவாகவும்(காத்தல்), நடுனிலையுள்ள நியுட்ரான் களை பிரம்மாவாகவும்(படைத்தல்) கற்பனை செய்யுங்கள். இது சாத்தியமா என்ற கேள்வி வரலாம். கொஞ்சம் மாற்றி சிந்தியுங்கள். அனுக்கரு வினைகளான, அனுக்கரு பிளவு(ஃபிஸ்சன்) மற்றும் அனுக்கரு இணைவு(பியூஸன்) ஆகிய செயல்களை நாம் இதனுடன் ஒப்பிட்டால் எப்படி?. பிரபஞ்சத்தில் ஓயாமல் அனுக்கரு பிளவு அல்லது இணைவு நடைபெறுகின்றது. அதன் மூலம் சக்தி வெளிப்பட்டு, அனைத்து இயக்கங்களும் நடைபெறுகின்றது. அப்படி நடக்கும் போது அனுக்கருவைத் தாக்கி அழித்து, மீண்டும் நிறைய எலட்ரான் களைத் தோற்றுவிக்கும் போது அதிக வெப்பம், மற்றும் அபாயகரமான கதிர் வீச்சுக்கள் உருவாகின்றன. இந்த எலட்ரான் களின் சக்தி அழிக்கும் சிவம் என்றும், இதிலிருந்து எலட்ரான் களைச் சமன் செய்து கட்டுப்படுத்தும் புரோட்டான் கள், காக்கும் விஷ்னுவாகவும், ஒரு அனுவில் இருந்து தாக்கி, எலட்ரான் களைப் 2,4,8,16,32 என பெருக வைக்கும் நியுட்ரான் கள் படைக்கும் பிரம்மாவாகவும் இருந்தால். இதிலிருந்து வெளிப்படும் கதிர்கள்,உதிரிகள்,குட்டிக் கோள்கள் எல்லாம் தனித்தனி சக்தி மண்டலங்களாக உருவாகின்றன. இது குட்டிக் குட்டி கடவுளாக உருவகம் செய்தால் எப்படி?. இது சும்மா ஒரு சக்திமூலத்தை அறிய உதவும் ஒரு கற்பனைதான். ஆனாலும் பொருந்தும் விதமாக உள்ளது. இதுவும் நம் முன்னோர்கள் கடவுள்களைப் படைத்த விதத்திற்கு ஒரு சான்று ஆகும்.

இந்த பிரபஞ்ச உதாரணத்தை மற்றும் ஒரு மூலத்துடன் ஒப்பிடுவேம். அந்த மூலம், நாம் தான். நமது உடல் கோடிக்கணக்கான செல்களால் ஆனது. இந்த செல்கள் யாவும் இரத்தம் மற்றும் திசுக்களில் உள்ளது. இவை நரம்பு மண்டலத்தால் பிணைக்கப்பட்டு, நியூரான் கள் வழி தொடர்பில் உள்ளது. இந்த நியூரான் கள் செய்தி மட்டும் கட்டளைகளை மின் காந்த சக்தி மூலம் எடுத்துச் செல்கின்றது. இந்த சக்தி செல்களின் அனுக் கரு விளைவால் உருவாகின்றது. இதை கொஞ்சம் விரிவாக பார்ப்போம். தந்தை மற்றும் தாயின் செல்களில் இருந்து உயிர் சக்தி உருவாகி அது கருவில் ஒரு செல்லாக உருவெடுக்கின்றது. இது 2,4,8,16,32 எனப் பிரிந்து உயிர் உள்ள ஒரு கரு வளர்கின்றது. இந்த கருவின் செல்களின் எண்ணிக்கைப் பெருகப் பெருக அது உடலுடன் கூடிய உயிரினமாக, அதன் மரபணுவில் உள்ள மூலக்கூறுகள் படி வளர்கின்றது. இப்போது ஒரு சக்தி அனு விளைவால் பிரிந்து பலவாகி, அது சக்தி மூலம் ஆகின்றது. இந்த சக்தி நல்ல ஆரோக்கியமான செயல்கள் மூலம் நல்ல முறையில் உடல் முழுதும் பரவி, நல்ல நோயற்ற சுகத்தைக் கொடுக்கின்றது. தீய செயல்கள் மூலம் சக்தி விரயம் ஆகும் போது, சக்திக் குறைபாடு ஏற்ப்பட்டு, நோய் வருகின்றது. ஆக பிரபஞ்சம், கடவுள், நமது உடல் என்று எல்லா இடத்திலும் சக்திதான் கடவுள் என்று காணலாம். நமது உடல்,உலகம், அண்டம், பேராண்டம், பிரபஞ்சம் என எல்லா இடத்திலும் சக்தி நீக்கமற நிறைந்து இருப்பதை உணரலாம். நமது உடலில் இந்த சக்தி மிகும் போது அது சக்தி மூலங்களில் சேகரிக்கப் படுகின்றது. இதை உணர்ந்து எவன் ஒருவன் தன் சக்தியை அதிகரித்து, சக்தி மூலங்களில் சேகரித்து வைக்கின்றானோ,அவன் தன் சக்தி மூலத்தை பிரபஞ்சத்துடன் இணைக்க வல்ல சக்தியை பெறுகின்றான். அவனுக்கு முக்காலங்களும், சகல சித்துக்களும் கைவசம் ஆகின்றது. எங்கும் இருக்கும் சக்திதான் தன் உடம்பில் உள்ளது என்று அறிந்து அதை வளப்படுத்தி தன் சக்தி மூலங்களில் சேகரிக்கும் ஒருவன், அந்த சக்தியின் நிலையினை உணர்ந்து, சாந்தமைடைகின்றான். தான் வேறு, கடவுள் வேறு அல்ல என்று உணர்ந்தவுடன், அவன் முக்தன் ஆகின்றான். இப்படி நாம் சக்தி மூலத்தில் நமது ஆற்றலைச் சேமிக்கத் தொடங்கினால், அனைத்தும் நம் வசமாகும். பின்னர் நாமும் குதம்பைச் சித்தர் போல

மலையில் ஏறி மாங்காய் பால் உண்டவர்க்கு,
தேங்காய்ப் பால் எதுக்குடி குதம்பாய்.

என்று பாடத் தொடங்கி விடுவேம். இந்த சக்தி மூலங்கள் என்று அழைக்கப் படுவன நம் உடலில் பல்வேறு பாகங்களிலும் உள்ளன.

அவை யாவும் முறையான வழிகாட்டியுடன், நல்லா கற்றறிந்த குருவின் துணையுடன் மேம்படுத்துதல் வேண்டும்.தன்னிச்சையாக மேம்படுத்துதல் எதிர்வினைகளுக்கு ஆளாக்கும். நாம் முதலில் பிரபஞ்சத்தையும்,பின்னர் கடவுளிடமும் சக்தி மூலத்தை ஒப்பிட்டுப் பார்த்தோம். இனி இதனை தத்துவங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் அதுவும் சரியாக வரும். முதலில் உள்ள உயிர் சக்தியை நாம் பரமாத்மா அல்லது பரம்பொருள் எனலாம். நம் உடலில் உள்ள உயிர் சக்தியில் இருந்து பிரிந்து செயலாற்றும் சக்திகளை ஜீவாத்மா எனவும் கொள்ளலாம். சக்தி பெருகப் பெருக அதிகரிக்கும் சக்தி மூலங்கள் இறுதியில் பரமாத்மாவான உயிர் சக்தி மூலத்தில் இணைதல் முக்தி எனலாம். நல்ல செயல்கள் மூலம் தான் இந்த சக்தியை அதிகரிக்கின்றேம். ஆகவே செயல்களை கர்மா எனலாம். சக்தியின் மீள் பிறப்பை பிறவி எனலாம். ஆகவே நல்ல கர்மங்கள் நம்மை பரமாத்மாவிடமும், தீய கர்மங்கள் நம்மை நோய் என்ற மீள் பிறப்பில் ஆழ்த்தும் என்றும் கொள்ளலாம் அல்லவா. இப்படி நம்மைச் சுற்றியுள்ள எதனுடன் ஒப்பிட்டாலும் நாம் இறுதியில் வருவது பரம்பொருள் எண்ணும் சக்தி மூலம் தான். எல்லாம் இதனின் பிரிவுகள் தான் என்பது தெளிவு.இந்தப் பரம்பொருள்தான், பரமபிதா எனக் கிறித்துவர்களும், அல்லா என இஸ்லாமியர்களும்,பராசக்தி என இந்துக்களும்,ஜோதி என தியானிப்பவர்களும், பரமாத்மா என வேதாந்திகளும் அழைக்கின்றார்கள். இது எப்படி சாத்தியம். எப்படி ஒன்றாக முடியும் என நினைப்பவர்களும், ஏற்றத்தாழ்வு பார்ப்பவர்களும், ஒரு சிறு கற்பனை செய்யுங்கள். ஒரு சிறிய வெள்ளைத்தாளில் ஒரு பெரிய பூஜ்ஜியம் வரையுங்கள். அந்த பூஜ்ஜியத்துக்குள்ளும், வெளியிலும் நிறைய பூஜ்ஜியங்களை சிறியதும், பெரியதுமாக வரையுங்கள். இப்போது பெரிய பூஜ்ஜியம், பரம்பொருள் எனவும், கொஞ்சம் பெரிய பூஜ்ஜியங்களைக் கடவுளின் அவதாரங்கள் எனவும், சிறிய பூஜ்ஜியங்களைக் குட்டிக் கடவுள்கள் எனவும் கொள்ளுங்கள். இப்போது சொல்லுங்கள் அந்தத் தாளில் எந்த பூஜ்ஜியத்துக்கு மதிப்பு அதிகம் என்று. இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில். நன்றி.

டிஸ்கி: இந்தச் சக்தி மூலங்களின் படம் ஒரு பதிவரின் பதிவில் இருந்து சுட்டு விட்டேன். பதிவரின் பெயர் மறந்து விட்டது. அவருக்கும் எனது நன்றிகள். (பட உதவி என்று டைட்டில் போட்டு விடலாம்)

10 comments:

 1. நீங்கள் சொல்கின்ற கடவுள் ஆறாய்ச்சி எல்லாம் உண்மையாகவே இருக்கட்டும், அது பற்றிய கேள்வியை விட நாம் ஏன் படைக்கப்பட்டோம் என்ற கேள்வியே எனக்குள் திரும்பத் திரும்ப எழுகிறது. நாம் ஜீவாத்மாக்கள் பரமாத்மாவாவை தேடிக் கலக்கவே நாம் பூமியில் பிறந்தோம் என்ற கற்பனை கதை சொல்லாமல் தக்க ஆதாரங்களுடன் தந்து விளக்கினால் தெளிவு பெருவேன்.

  ReplyDelete
 2. இந்தச் சக்தி மூலங்களின் படம் ஒரு பதிவரின் பதிவில் இருந்து சுட்டு விட்டேன். பதிவரின் பெயர் மறந்து விட்டது. அவருக்கும் எனது நன்றிகள். (பட உதவி என்று டைட்டில் போட்டு விடலாம்)

  ................அண்ணாச்சி - சுட்ட பழம்னு தைரியமா சொல்லி இருக்கிற உங்கள் நேர்மை நல்லா இருக்கு. பதிவில் உள்ள ஆராய்ச்சியும் நல்லா இருக்குங்க.

  ReplyDelete
 3. சார் இதல்லாம் எனக்கு புரியாது. புரிசுக்கவும் ஆசையில்ல சாரி சார்

  //எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது
  எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது
  எது நடக்கனுமோ அதுவும் நன்றாகவே நடக்கும்//
  (எதுவும் மிஸ்டேக் இருந்தா சாரி)

  இந்த பாலிசி எனக்கு ரொம்ப புடிக்கும், பின் நாம ஏன் டென்சன் ஆகனும்.

  ReplyDelete
 4. கொஞ்சம் தலைய சுத்துற மாதிரி இருந்தாலும் படிக்கும் போது சுவாரசியமா இருக்கு

  ReplyDelete
 5. நல்ல பதிவு நண்பரே. உங்கள் புகழ் மென் மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  ReplyDelete
 6. நல்ல பதிவும் பகிர்வும் கூட அண்ணா..

  ReplyDelete
 7. சாரு அக்கா சொன்னதையே வழிமொழிகிறேன்..

  ReplyDelete
 8. நல்ல தகவல்கள் அண்ணா.

  உதாரணங்களோட தெளிவா விளக்கி இருக்கீங்க.

  ReplyDelete
 9. நன்றி வேடிக்கை மனிதன், தாங்கள் கேக்கும் தகவல்கள் கண்டிப்பாக இந்த தொடரில் வரும். தொடரின் நேக்கமே அதுதான்.
  நன்றி சித்ரா, நாங்க யாரு? திருடுனாக் கூட சொல்லிட்டுத்தான் திருடுவேம்.
  நன்றி மங்குனி,நீங்க சொல்றது உன்மைதான். ஆனா அதைபுரிந்து பின்பற்ற வேண்டும் அல்லவா. எதையும் தீர ஆலோசிக்காமல் ஏற்றுக் கொள்ளக் கூடாது அல்லவா?
  நன்றி சாருஸ்ரீராஜ், அப்பாடா நான் கஷ்டப்பட்டு எழுதியதுக்கு பலன் கிடைத்தது, குழம்பிட்டிங்களா? அதுதான் வேணும்.
  நன்றி சசிகுமார். எனக்கு புகழ் இருக்கா? இகழ் இல்லாமல் இருந்தால் அதுவே போதும்.
  நன்றி திவ்யாஹரி,
  நன்றி மேனகா சத்தியா, சாருஸ்ரீராஜ் சொன்னதுதான் உங்களுக்கும்,
  நன்றி சுசி, உங்களுக்கு புரிந்ததா, என்ன இருந்தாலும் தங்கை ஆயிற்றே.
  பின்னூட்டம் இட்ட அனைவருக்கும் எனது நன்றிகள்.

  ReplyDelete
 10. சார் மன்னிக்கனும் தீர ஆலோசிசாலும் ஆலோசிக்காவிட்டாலும் நடப்பது தானே நடக்கும் நமால அத மாதமுடியுமா? (அப்படி முடிந்தால் அந்த 3 lines -க்கு அர்த்தமே இல்லாமபோயிடுமே)

  ReplyDelete

என்னை வளர்க்க, கருத்துரையிடுக...

பதிவைப் படித்து கருத்து போடலைனா
உங்க கனவுல பூதம் வரும்,,, ஆமா சொல்லிட்டேன்.